முகிழ்மதி 124(2)

முகிழ்மதி 124(2)

 

ரத்தினவேல் முகிழ்மதி
 

 


 

 

வீர் தமயந்தி 
 

 


 

 

ஜித்து மதி
 

 


 

 

 

 

சில நிமிடங்களுக்கு பிறகு,கீழிறங்கி வந்த தம்பதியினரை பூஜையறைக்கு அனுப்பி வைத்தார் வானதி.

இறைவனின் ஆசிப்பெற்று வந்தவர்கள் காஞ்சனா மாலாவின் பாதங்களையும் தொட்டு பணிந்தார்கள்.

“நல்லாயிரு என் தங்கம்” என பளீச்சென்று மின்னிய பேத்தியின் முகம் வழித்து திருஷ்டி கழித்தவர்,பேரனின் மனைவிகளுக்கு வழங்கியது போல் ஒரு சிறிய நகைப்பெட்டியை அவளிற்கும் பரிசளித்தார்.

அதில் சிவப்பு கல் பதித்த அவர்களது குடும்ப பரம்பரை நகை இருப்பதை கண்டு ஆர்ப்பரித்த பெண்ணவள் “தேங்க்ஸ் பாட்டி” என அவரை கட்டியணைத்துக்கொண்டாள்.

“பொம்பளை புள்ளைங்க மாதிரி உனக்கு எதுவும் நகைக்கொடுக்க முடியாதுடா வீர்…என் பேத்தியை கண்கலங்காமல் பார்த்துப்பேன்னு தெரியும்…ஆனாலும் உன்னை உயிரா நேசிக்கிறவளோட மனசை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்திடாதே…அவளும் உன்னை புரிஞ்சு நடந்துப்பாள்…இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியா வாழுங்க” என வீரிடம் உணர்ச்சிப் பெருக்குடன் கூறி இருவரையும் உச்சிமுகூர்ந்து ஆசிர்வதித்தார்.

இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருந்தார்கள்‌.

தேவகி மற்றும் விஜயலட்சுமிக்கு மட்டும் தங்கியிருக்கும் அறைக்கே உணவு பரிமாறிப்பட்டிருந்தது.

அனைவரின் பொதுவான நலம் விசாரிப்புகளுடன் வீரும் தமயந்தியும் உணவு மேசையில் அமர்ந்தார்கள்.

வானதி வழக்கம் போல் உணவு பரிமாறச் செல்ல,

ஜித்தேந்திரனோ “அம்மா இன்னைக்கு ஒரு நாள் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்க…பொன்னாம்மா பரிமாறுவாங்க” என அன்னையின் மீதுள்ள அன்புடன் சொல்ல,

அவனது சொல்லை ஆமோதிக்கும் விதமாய் அன்று அதிசயமாய் விஜயேந்திரன் தன் மனைவிக்காக பேசினார்.

“ஆமா வானதி…ஜித்து சொல்லறது சரி தான்…எப்போ பாரு நீ எங்களை கவனிக்க ஓடிட்டே இருக்கே…இன்னைக்கு ஒரு நாள் எங்க எல்லார் கூடவும் உட்கார்ந்து சாப்பிடு…உட்காரு” என அவருக்கு நாற்காலியை இழுத்துப்போட,அனைவரும் அவரை ஆச்சரியமாய் ஏறிட்டனர்.

அவரது மூன்று பிள்ளைகளோ ‘நம்ப அப்பா தானா இது?’ என வியந்தனர்.

வானதியோ வெகு நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சிப்பெருக்குடன் கணவருக்கு அருகே இருந்த இருக்கையில் உரிமையாய் சென்று அமர்ந்தார்.

மனைவி தன்னருகே அமர்ந்ததும் அவர் பெரிதாக எதையோ சாதித்தது போல் அவரை பார்த்து புன்னகைக்க,அவரும் பதிலுக்கு காதலோடு முறுவலித்தார்.

‘பாருடா…அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே இருந்த சண்டை சரியாகிடுச்சா?இது எப்போ?’ என பிள்ளைகள் மூவரும் தங்களுக்குள் பார்வையை பறிமாறிக்கொண்டனர்.

அவர்கள் மூவருக்குமே இந்த செய்தி புதிது என்பதால் வீட்டின் தலைவியை விவரம் அறிய ஏறிட,அவருமே ‘எனக்கும் எதுவும் தெரியாது’ என்பது போல் இதழை பிதுக்கினார்.

யாவருக்கும் ஒன்றும் புரிப்படவில்லை என்றாலும் ‘பரவாயில்லை…இரண்டு பேரும் சேர்ந்திட்டாங்களே அதுவே போதும்’ என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஏனெனில்,சமீப காலமாக மகவுகளின் திருமண விடயத்தில் இருவருக்கும் இடையே தீவிர கருத்து வேறுப்பாடு உண்டானதால் விஜயேந்திரன் வானதியை அவமதித்து பேசியிருந்தார்.

அதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் அறிந்த பிள்ளைகள் மன வருத்தத்தில் இருந்தார்கள்.

இன்று இருவருக்குமிடையே அனைத்தும் சரியாகிப்போனது என்று தெரிந்ததும் பாரம் அகன்று தங்களது இணையை கவனிக்க ஆரம்பித்தனர்.

ஜித்து தன்னவளின் புறம் திரும்பி அவளை ஏறிட்டான்.

வெள்ளி நிறத்தில் அரக்கு நிற கரை வைத்த புடவை அணிந்து,அதற்கு ஏற்ற கையில்லாத மேல் சட்டை அணிந்து இருந்தவளின் அழகு அவனை எப்போதும் போல் கவர்ந்திழுந்தது.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவளின் இதழில் அதீத உதட்டுச்சாயம் இருப்பதை கண்ட ஜித்து “ஏன்டி சாப்பிடற நேரம் இவ்வளவு லிப்ஸ்டிக் போட்டிருக்கே?” என அவளின் காதோரம் குனிந்து கிசுகிசுக்க,

அவளோ சட்டென அவனை நோக்கி திரும்பி “ஹான் வேண்டுதல்” என்றாள் கடுப்புடன்…

“ஏன்டி சிடுசிடுக்கிறே?கொஞ்சம் ரொமென்டிக்கா பேசலாமில்லை” என பாவமாக அவன் வினவ,

அவனை நன்றாக முறைத்த சந்திரமதியோ “நீ செஞ்ச காரியத்துக்கு ரொமென்டிக் வேறயா?போடா…” என அடிக்குரலில் அவனை வசைப்பாட,அவனிற்கோ அவள் எதற்காக திட்டுக்கிறாள் என்றே தெரியவில்லை.

அதனால் தன்னவளை பரிதாபமாக பார்த்து விழிக்க “எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி மூஞ்சிய வைச்சிருக்கிற பார்த்தீயா?அதை பார்த்தா தான் எனக்கு கோபமா வருது” என பல்லைக்கடித்தாள்.

“ஹே என்னனு சொல்லிட்டு திட்டுடி” என அழாத குறையாக அவளிடம் கெஞ்ச,

அவனை தீயாய் உறுத்து விழித்தவள் “என் உதட்டை கடிச்சு வைக்காதீங்கனு உங்களுக்கு எத்தனை தடவை சொல்லறது?உங்களாலே என் உதடு தடிச்சு வீங்கிப்போயிருக்கு…அதை சமாளிக்க தான் இவ்வளவு லிப்ஸ்டிக் போட்டிருக்கேன்…இப்போ சொல்லுங்க…உங்களை இப்போ என்ன செய்யலாம்?” என நாசி விடைக்க பேசியவளை அசடு வழிய நோக்கினான் ஜித்து.

“சாரிடி என்னை கன்ட்ரோல் பண்ண தான் நினைக்கிறேன்…பட் …” என அவளின் உதட்டை பார்த்தப்படி இழுக்க,

“ஃபீலிங்க்ஸ் ஓவர் ஃப்லோ ஆகிடுது…அதானே…” என அவனை போலவே அவள் சொல்லிக் காட்டி அவனது தொடையில் நறுக்கென்று கிள்ளி வைக்க,

அவனிற்கு வலித்தாலும் “ஹிஹிஹி” என அவன் சிரித்து சமாளித்தான்.

அவனது சிரிப்பை கண்டு கடுப்பானவள் “சிரிக்காதேடா கடுப்பாகுது எனக்கு?” என முனகினாள்.

அவனால் தினந்தோறும் அவளிற்கு ஏதோ ஒரு தொல்லை…

ஒரு நாள் உதட்டை கடித்து வைத்தான் என்று உதட்டு சாயம் போட்டு சமாளித்தால்…

அடுத்த நாள் கழுத்தில் தனது பற்தடம் பதித்திருப்பான்…

மூன்றாம் நாள் அவள் கன்னம்…

இப்படி தினம் ஒரு பாகம் அவனால் அவளின் மேனி செல்ல காயம் கொண்டிருக்கும்..

சில நேரங்களில் வெளியில் சொல்லமுடியாத இடத்தில் அச்சாரம் பதித்திருப்பான்…

அவளிற்கு இதை யாரிடமும் பகிரமுடியாத ஒரு சங்கடமான நிலை…

வெளியே சங்கடம் கொண்டாலும் தன்னவனின் அச்சாரங்களை அவள் ரசிக்கவும் செய்தாள்.

அவளிற்கும் அவனது குறும்புத்தனமும் அவன் கொடுக்கும் காயமும் பிடித்திருந்தது.

அதனால் வலிகளை கூட சுகமான சுமையாய் வாங்கினாள்.

ஆயினும்,சில நேரங்களில் அவை கோபமாக வெளிப்பட்டாலும் அவனது மயக்கும் புன்னகையிலும் காதலிலும் மாயமாகிவிடும்.

இப்போதும் அவளிடம் “சாரிடி மூன்…உன் மேலே அவ்வளவு லவ் வைச்சிருக்கேன்…அது என்னை மீறி உன்னை காயப்படுத்திடுது…இனி முடிஞ்சவரை அதை மாத்தி முயற்சி பண்ணறேன்டி” என கொஞ்சலாய் மொழிந்து சிரித்தவனின் மீது அவளிற்கும் காதல் எக்கச்சக்கமாய் கூடின.

அதனால் “ம்” என அவள் தலையாட்ட,

“தேங்க்ஸ்டி மூன்” என பளீச்சென்று வசீகரமாய் புன்னகைத்தவன்,அவளிடம் தன் குறும்பை ஆரம்பித்துவிட்டான்.

இறுதியில் அவள் தான் அவனது சேட்டையில் அவஸ்தையுடன் நெளிந்துக்கொண்டிருந்தாள்.

இவர்கள் ஜோடி ஒரு புறம் செல்ல காதல் சண்டையில் திளைத்திருக்க,அவர்களுக்கு நேரெதிரே முகிழ்மதியும் ரத்தினவேலுவும் அமர்ந்திருந்தார்கள்.

தனது கணவனின் தட்டில் உணவை எடுத்து பரிமாறிய பெண்ணவள் அவனது தாடையில் வளர்ந்திருந்த தாடி மீசையை கவனித்து மந்தகாசமாய் புன்னகைத்துக்கொண்டாள்.

அவனது தாடி மீசை நேற்றிரவு அவளின் மேனியில் செய்த காயங்கள் நினைவில் எழ “மாமா மறுபடியும் உங்களுக்கு தாடி மீசை வளர்ந்திடுச்சு” என நாணத்துடன் அவனிடம் கிசுகிசுக்க,

தன்னவளின் அழகை ரசித்துக்கொண்டே “ஆமா ஸ்டார்…காலையிலே உன் பாடி சிவந்துப்போய் இருக்கிறதை பார்த்தப் பிறகு தான் எனக்கே தெரியுது…சீக்கிரம் ஷேவ் பண்ணிடறேன்” என ஒரு கையால் தாடையை நீவிக்கொண்டே அவளின் சிவந்த மேனியைப் பார்த்தவாறு உரைக்க,

அதில் நாணிய முகிழ்மதி “ம்…ஆனால் இரண்டு நாள் முன்னாடி தானே மாமா ஷேவ் பண்ணீங்க?” என சந்தேகம் கேட்க,

“ஆமாடி…மனுஷங்களுக்கு முடி வளர வேண்டிய இடத்திலே வளர மாட்டிக்குது…இங்க பாரு யூரியா போட்டு வளர்க்காத குறையா வளருது” என்றவன் விஷமத்துடன் அவளை நோக்கி “உனக்கும் அதே பிரச்சனை தான்” என விஷமத்துடன் சேர்த்துச் சொல்ல,

அவனது பேச்சின் அர்த்தம் உணர்ந்த முகிழ்மதிக்கோ குப்பென்று முகம் சிவந்துவிட “ஐய்யோ மாமா…என்ன பேச்சு இது?எல்லாரும் பார்க்கறாங்க” என அவனை அதட்டி சிணுங்கியவளிற்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.

தன்னவளின் நாணத்தை ரசித்துக்கொண்டே அவன் உணவருந்த,அவளோ அவனது பார்வையில் செங்கொழுந்தாகி இமைகள் படபடக்க ஒரு வித அவஸ்தையுடனே உணவை உட்கொள்ள சிரமப்பட்டாள்.

வீர் தமயந்தியின் தட்டில் அவளிற்கு விருப்பமான உணவுகளைப் பார்த்து பார்த்து பரிமாறினான்‌.

“ஆர் யூ ஓகே லட்டு?பார்க்கவே ரொம்ப டையர்டா இருக்கே நீ?” என வீர் கவலையாக கேட்க,

அவளோ “அதெல்லாம் ஒண்ணுமில்லை…முதல் தடவை அப்படி தான் இருக்குமாம்…போக போக சரியாகிடும்” என இதழ்பிரித்து சிரித்துக்கொண்டே தன்னவனிற்கு ஆறுதல் கூற,அதைக்கேட்டு வீரும் மலர்ந்து சிரித்தான்.

தனக்காகவே அவள் அவ்வாறு கூறுவது அறிந்து “சரிடி சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு…ஈவினிங் போலே நம்ப வீட்டுக்கு போகலாம்…சரியா?” என அவளின் கரத்தை பற்றி கனிவாக உரைக்க,அவனது அக்கறை அவளின் நெஞ்சத்தை இனிக்க வைத்தன.

ஆனால் அவளிற்கே உரிய குறும்புக்குணம் தலைத்தூக்க,அவனருகே நெருங்கி வந்த தமயந்தியோ “அப்போ ரூமுக்கு போனப் பிறகு உங்களுக்கு இன்னொரு ரவுண்டு வேணாமா?” என மெல்லிய குரலில் கிசுகிசுக்க,

அவள் கேட்ட தொனியில் அவனிற்கு சிரிப்பு வந்துவிட,அதை அடக்கி “நீ வேணும்னு உடம்பு சொல்லுது…ஆனால் உன் சோர்வை பார்த்து மனசு வேணாம்னு சொல்லுதுடி…எனக்கு உன்னோட ஆரோக்கியம் தான்டி முக்கியம்” என காதலாக பதில் உரைத்தான்.

அவனை ஒற்றை புருவம் உயர்த்தி நோக்கிய தமயந்தி “டையர்ட் எல்லாம் ஒண்ணுமில்லை…இப்போ சாப்பிட்டவுடனே தெம்பாகிடுவேன்…என் வீரை தாங்கறதை விட எனக்கு வேற சந்தோஷம் என்னயிருக்கு?” என காமத்தை கூட காதலாய் யாசித்த மனையாளின் ஆசையறிந்து “சரிடி நீ முதல்ல சாப்பிட்டு உடம்புக்கு தேத்து…ரூமுக்கு போய் என்னை தாங்கணுமில்லை” என இதழ்கடித்து சிரித்தவாறு அவளிற்கு கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்க,

அவனது பேச்சை கேட்டு முகம் சிவந்த பாவையவளும் “எப்படி சாப்பிடறேன்னு மட்டும் பாருங்க” என கண்சிமிட்டி கூறிவிட்டு உணவருந்த ஆரம்பித்தவளை கண்டு தலையாட்டி சிரித்துக்கொண்டான் வீர்.

விஜயேந்திரனோ தன்னருகே அமர்ந்திருந்த மனைவியிடம் “நீ இப்போல்லாம் ஒழுங்கா சாப்பிடறதே இல்லையா வானு?” என மெல்லியதான சரீரத்தை பார்த்து கவலையாக வினவ,

அவரோ “இல்லையேங்க…நல்லா தானே சாப்பிடறேன்” என்றார் யோசனையாக…

“எங்க நீ நல்லா சாப்பிடறே?பாரு எப்படி இளைச்சுப்போயிட்டே?எங்களை கவனிக்கிற சரி…உன்னையும் கொஞ்சம் கவனி வானு” என வெகு சில வருடங்களுக்கு பிறகு தன் நலனில் அக்கறை எடுத்து பேசிய அகமுடையாரின் அன்பில் வானதியின் விழிகள் பனித்தது.

அவரின் விலகல் மனையாரின் மீது வைத்திருக்கும் அன்பை விஜயேந்திரனிற்கே தெள்ள தெளிவாக புரிய வைத்திருந்தது.

சில காலம் தடம் புரண்டாலும் அவரது பிள்ளைகளும் அவரின் மனையாரும் அவருக்கு முறையான பாடம் கற்பித்து அவரை நேர்வழியில் செலுத்தியிருந்தார்கள்.

தற்போது பிள்ளைகளின் வாழ்வு சுபமாக மாறியதும் அவரின் கவனம் முழுவதும் தன் துணையாரின் புறம் திரும்பியிருந்தது.

காதல் இருபதில் மட்டும் வருவதல்ல…காதல் என்ற அறுபது வயதிலும் வரும்.

இருபது வயதில் வரும் காதல் உடல் கவர்ச்சியினால் உண்டாவது என்றால்,ஆறுபது வயதில் உண்டாகும் காதல் புரிதலாலும் அன்பாலும் உருவாகும் ஆழமான நேசமாகும்.

தன் பிள்ளைகள் அனைவரும் தத்தமது இணைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு காஞ்சனா மாலா ஆனந்தத்தில் கண் கலங்கிப்போனார்.

சில நாட்களாக கூச்சல்களாலும் குழப்பங்களாலும் சூழ்ந்திருந்த வீடு இப்போது மகிழ்ச்சி பொங்கும் பேராலயமாக உருவெடுத்ததில் அவருக்கு எல்லையில்லா உவகை!

அவருக்கு ஒரே ஒரு கவலை…தனது கொள்ளு பேரப்பிள்ளைகளை கண்ணால் பார்த்துவிட்டால் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவார்.

ஆனால் அனைத்திற்கும் தடை விதித்திருந்தான் ரத்தினவேல்.

பெண்கள் மூவருக்கும் மிகச்சிறிய வயதில் திருமணம் நடந்தேறியிருந்தாலும் அவர்களின் படிப்பு முடிவுற்றப்பிறகே குழந்தை என்று கறாராக கூறியிருந்தான்.

அவனது கட்டளையை ஆடவன் இருவரும் எப்போது மீறியிருக்கிறார்கள்?

இப்போதும் அவனது ஆணைக்கு உட்பட்டு சகோதரனும் நண்பனும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள்.

அதில் வீட்டு பெரியவர்களுக்கு ஏக வருத்தம் என்றாலும்,பெண்களின் எதிர்காலம் கருதியும் அவர்களது வாழ்வில் இலட்சியத்தை மதித்தும் அமைதிக்காத்தார்கள்.

வீரும் தமயந்தியும் அவர்களது இல்லம் புறப்பட வேண்டிய சமயம் வந்தது.

அனைவரிடமும் விடைப்பெற்று கிளம்ப ஆயுத்தமாகிய வீர் வரவேற்பையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை கண்டு விழி விரித்தான் வீர்.

‘என்ன?’ என்பது போல் அவன் கேட்க, அதற்கு அவர்கள் கூறிய பதிலை கேட்டு அவனிற்கு மயக்கம் வராத குறை தான்!

தங்கள் வீட்டு புதல்வியை புகுந்த வீடு அனுப்பும் போது அவளுடன் சேர்ந்து பிறந்த வீட்டு சீதனமாய் பல சீர் வரிசைகளும் உடன் புறப்பட,அதைப்பார்த்து வீர் பேரதிர்ச்சியுற்றான்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top