பிழையில்லா இலக்கணம் நீயடி
பெண்கள் என்றால் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.அதற்கு இந்த கதையோட நாயகி சமந்தா சிறந்த உதாரணம்!
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்” என மகாகவி பாரதியின் கொள்கையை பின்பற்றும் புதுமை பெண்ணவள்!
தன்னை கணவன் ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சென்றுவிட்டான் என்று தெரிந்தும் சோர்ந்து விடாமல் துணிச்சலாய் நிமிர்ந்து நின்று,தன் உழைப்பின் மூலமாக சமுதாயத்தில் உயரிய அந்தஸ்தை பெறுகிறாள் அவள்!
முதல் திருமண காதல் தோல்வியால் காதலையும் திருமணத்தையும் அறவே வெறுக்கும் நாயகியை உருகி உருகி காதலிக்கும் நாயகன்,விஜய்!
விவாகரத்தான பெண்...அதிலும் நான்கு வயது குழந்தைக்கு தாய் என்றால் சமுதாயம் அந்த பெண்ணை அவ்வளவு எளிதில் வாழவிடுமா என்ன?
அவள் சந்திக்கும் அவமானங்கள்,கொடுமைகள் மிக ஏராளம்!
அவற்றையெல்லாம் எவ்வாறு நம் நாயகி முறியடிக்கிறாள்?தன்னை ஒரு தலையாய் நேசிக்கும் விஜய்யை கரம் பிடிக்கிறாளா?