“ஹே பூபதி என்ன இதெல்லாம்?” என நண்பனை பார்த்து சலிப்பாக வினவ,
அவனோ வீரை ஆழ்ந்து நோக்கி “அன்னைக்கே நான் சொன்னேனில்லை…நான் எல்லாத்தையும் சரியா ஞாபகம் வைச்சுப்பேன்னு” என மீசையை முறுக்கிவிட்டு சொல்ல,அப்போது தான் அன்றைய தினத்தின் உரையாடலுக்கான அர்த்தம் அவனிற்கு தெளிவாக விளங்கியது.
உடனே திகைப்பில் விழி விரித்த வீர் “அன்னைக்கு நீ சொன்னதுக்கு இது தான் அர்த்தமா?” என ஆயாசத்துடன் நெற்றியை நீவியப்படி கேட்க,
ரத்தினவேல் பதில் எதுவும் கூறாமல் அவனை அழுத்தமாக மட்டுமே பார்த்திருந்தான்.
அவனது மௌனமே ‘அது தான் உண்மை’ என்பதை அவனிற்கு புலப்பட வைத்தது.
அவன் ‘ஷப்பா’ என மானசீகமாக தலையில் கைவைத்துக்கொள்ள,
“வாரே வா…அண்ணா கலக்கல்” என தமையனை கைதட்டி பாராட்டிய ஜித்து “நான் கூட அன்னைக்கு அண்ணா என்னடா சும்மா இருக்காரேன்னு பார்த்தேன்…இப்போ தான் புரியுது…பின்னாடி பலமா மச்சானை வைச்சு செய்யலாம்னு தான் அன்னைக்கு அமைதியா இருந்தீங்களா சூப்பர்ண்ணா சூப்பர்” என வாய்விட்டு சிரித்து ஆர்ப்பாட்டமாக அண்ணனை புகழ்ந்துத் தள்ள,
வீரோ ‘அடப்பாவிகளா?’ என்பது போல் தோழன் மற்றும் அவனது குடும்பத்தை மாறி மாறி பார்த்தவன் ”ஆனால் நான் பண்ணதை விட இது பல மடங்கு இருக்கேடா…இதெல்லாம் எப்படி என்னாலே ஏத்துக்க முடியும்…எனக்கு இந்த சீர் வரிசை எதுவும் வேணாம்…தமி மட்டும் போதும்” என முடிவாக மனைவியைப் பார்த்தப் படி உரைக்க,
தமயந்தியோ ஒற்றை புருவத்தை மேலேற்றி கீழிறக்கினாள்.
‘அவள் மட்டுமே போதும்’ என்ற அவனது வெளிப்படையான பேச்சில் அவளின் உள்ளம் நேசத்தில் தகித்தது.
‘நம்ப வீர் தானா இது?’ என ஆச்சரியமாக கூட இருந்தது அவளிற்கு!
முகிழ்மதி மற்றும் சந்திரமதி இருவரும் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
அவர்களுக்கும் தங்கள் புகுந்த வீட்டினரது செயல்கள் ஏற்புடையதாகவே இருந்தன.
ஆனால் வீரோ ‘என்ன செய்வது?’ என தெரியாமல் சங்கடத்துடன் நின்றிருக்க,அதுவரை மௌனம் காத்த அவனது மாமனார் பேச ஆரம்பித்தார்.
“இங்க பாரு மருமகனே…உன் சக்திக்கு மீறினதை நீ உன் தங்கச்சிக்கு செஞ்சே…அதை நாங்க யாரும் தடுக்கலை…அதே மாதிரி நாங்களும் எங்க பொண்ணுக்கு செய்யறோம்…அதை தடுக்காதே…நீ சங்கடப்படக்கூடாதுனு தான் நாங்க நினைச்சதை விட கொஞ்சம் குறைவா என் பொண்ணுக்கு செஞ்சிருக்கோம்…பூபதி மட்டும் போதும்னு சொல்லலைனா இன்னும் அதிகமா என் பொண்ணுக்கு செஞ்சிருப்பேன்…அதையும் கூட உனக்காக என் பையன் யோசிச்சு பேசினான்…அதே மாதிரி நீயும் எங்களை பத்தி யோசிக்கலாமில்லை” என விஜயேந்திர பூபதி வருத்தத்தோடு வலியுறுத்த,
‘ஏதே இதுவே கம்மியா?’ என அயர்ச்சியுடன் வரவேற்பறை முழுவதும் நிரம்பி வழிந்த பொருளை கண்டவனின் விழிகள் மனையாளை உதவிக்காக ஏறிட,அவளோ தனக்கும் இதற்கும் தொடர்பில்லாதது போல் நின்றிருந்தாள்.
அவர்கள் வீட்டுப் பெண்ணிற்கு அவர்கள் செய்கிறார்கள் என்ற நிலைப்பாடு தான் அவளிடம்!
அதனால் அவள் இந்த விடயத்தில் தலையிட விரும்பவில்லை.
அவள் ஏதேனும் மறுப்பு தெரிவித்தால் தந்தையின் மனம் காயப்பட்டுவிடும் என்று மௌனம் காத்தாள்.
வேறுவழியின்றி மனைவியின் புகுந்த வீட்டினர் செய்வதை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது.
அவன் ஏற்கவில்லை என்றாலும் ரத்தினவேல் அவனை ஏற்க வைத்திருப்பான்.
அதனால் அவ்வற்றினை ஏற்பதாக பெருமூச்சுடன் ஒப்புக்கொண்டான்.
ஜித்துவோ கேலிச்சிரிப்புடன் “வாங்க மச்சான்…இப்போ தான் நீங்க எங்க வழிக்கு வந்திருக்கீங்க” என அவனை பிடித்திழுத்து நீள்விரிக்கையில் அமர வைத்ததோடு முறையாக அவனிற்கு வைர மோதிரத்தை அணிவித்தான்.
அவனது அட்டகாசத்தை கண்டு நொந்துப்போன வீர் “ஜித்து நீயுமாடா?” என பின்னங்கழுத்தை வருடி சலிக்க,
“பின்ன நீங்க அன்னைக்கு என்ன அலப்பறையெல்லாம் பண்ணீங்க…நாங்க பொறுத்துக்கலை…அது மாதிரி தான் இதுவும்” என அலட்டலாக மொழிந்து அவனிற்கான முறை அனைத்தையும் ஒன்று விடாமல் செய்தான்.
அவனது நடவடிக்கைகளை கண்டு “அது சரி” என வீர் தலையாட்டி சிரித்துக் கொண்டான்.
அதன்பிறகு தம்பதியினர் இருவரும் விடைப்பெற்று வீரின் வீட்டிற்கு சென்றனர்.
நேற்று போல் இன்றும் உணர்ச்சிப்பெருக்குடன் கூடிய நிகழ்வு அங்கு அரங்கேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புகுந்த வீட்டிற்கு ஒரு வித தயக்கத்துடன் அடியெடுத்து வைத்தவளை வீர் தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான் என்றால் மிகையாகாது.
காதலித்து கரம் பற்றியவளாயிற்றே…
தன் கண்ணானவளை உயிருக்கும் மேலாக பார்த்துக்கொண்டான் ஆடவன்.
அவளை சிறு துரும்பு கூட அண்டவிடாமல் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தான்.
அவள் சமையலறைக்கு சென்றால் மட்டும் அவன் பீதியாகிவிடுவான்…
அவளின் சமையல் திறமை மட்டும் மாறவே இல்லை…
அவளாக முயற்சித்தும் கூட அவளை சமையல் கலை ஆதாரிக்கவில்லை.
அதனால் “லட்டு நீ எதுக்கு சமைச்சு கஷ்டப்படறே?விஜயலட்சுமி இருக்காங்க…அப்புறம் நான் இருக்கேன்…படிக்கிற பொண்ணு நீ படிக்கிற வேலைய மட்டும் பாருடி” என அவளின் கன்னம் வருடி பரிவுடன் கூறிய கணவனை காதலோடு அணைத்துக்கொண்டாள் தமயந்தி.
அவனோ ‘ஹப்பாடா’ என நிம்மதி பெருமூச்சை அவளறியாமல் வெளியேற்றினான்.
பின்பு அவளின் சமையல் கொடுமையிலிருந்து தப்பிப்பதே அவனிற்கு பெரும்பாடு தான்!
மற்றப்படி அவனது தாயை அவள் கவனித்துக்கொள்ளும் விதத்தில் அவளை ஒரு குறை சொல்லமுடியாது.
அதில் இன்னும் அதிகமாக அவளின் மேல் நேசம் அதிகரிக்க,அவை அனைத்தையும் இரவின் தனிமையில் அவளிடம் கொட்டித் தீர்ப்பான்.
இவ்வாறு திருமணமாகிய புது தம்பதியினருக்கு வாழ்க்கை வண்ணமயமாய் சென்றுக்கொண்டிருந்தது.
இப்போது மாதங்கள் சில உருண்டோடின.
அன்று ஜித்தேந்திரன் அறைக்கு வந்த சமயம் சந்திரமதி வெடிக்க தயாராக இருக்கும் நெருப்பு குழம்பாய் அமர்ந்திருப்பதை கவனித்தவன் “என்ன மூன்?ஏன் ஒரு மாதிரியா இருக்கே?எனி திங்க் பிராப்ளம்?” என அவளின் அருகே வந்து அக்கறையாக விசாரிக்க,
அவளோ உச்சக்கட்ட கோபத்துடன் அவனை முறைத்தாள்.
அவளின் உஷ்ணம் கண்டு ‘இன்னைக்கு என்ன பிரச்சனைனு தெரியலையே?நம்ப ஆளு வேற செம்ம உக்கிரமா இருக்காள்?’ என எச்சிலை கூட்டி விழுங்கியப்படி “மூன்” என அவளின் கன்னம் பற்றி கொஞ்ச,
“மூனாம்…மூனாம்…முதல்ல கைய எடுடா” என வேகமாக அவனது கரத்தை தட்டிவிட்டவளின் முகம் ஆத்திரத்தில் சிவந்திருந்தது.
அவனோ அப்போதும் சளைக்காமல் “என்னடி பிரச்சனை?” என தணிவாக வினவ,அதற்காகவே காத்திருந்தாற் போன்று படபடவென வெடித்து சிதறினாள்.
“இன்னமும் என்னடா பிரச்சனை வரணும்?கல்யாணத்தன்னைக்கு என்னை கடத்தினது நீ தானாமே?அப்படியாடா?” என அவனிடம் நேரடியாக எகிறியவளின் பேச்சில் அவன் அதிர்ச்சியில் உறைந்துப்போனான்.
அவன் அவளை கடத்திய விஷயம் பாட்டியின் வாய்மொழியாகவே அவளிற்கு தெரிய வந்திருந்தது.
அந்த விடயம் தெரிந்ததிலிருந்து அவன் மேல் கொலைவெறியில் இருந்தாள்.
ஆடவனோ ‘ஆத்தி இவளுக்கு எப்படி தெரிஞ்சது?’ என திருதிருவென விழித்தவன் “செல்லம் உன்கிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்கடா…உன்னையும் என்னையும் பிரிக்க நடந்த சதி அது” என அவளை சமாளிக்க முயல,
“சதியா?பாவிப்பயலே…சொன்னதே உன் பாட்டி தான்டா…” என்றதும் ‘ஏதே பாட்டியா?’ என அவன் பேரதிர்ச்சியுற,
அவளோ “அன்னைக்கு என் கல்யாணம் நின்னது கூட பிரச்சனையில்லைடா…ஆனால் என்னை கடத்தினவன் மேலே தான் நான் செம்ம காண்டுலே இருந்தேன்…ஆனால் நீ?என்னை கடத்தினது மட்டுமில்லாமல் கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாமல் என்னையே லவ் பண்ணி கல்யாணம் வேற பண்ணியிருக்கே…உனக்கெல்லாம் எவ்வளவு தைரியம்டா இருக்கும்?” என அவனது சட்டைக்காலரை கொத்தாக பற்றி சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்க,
ஜித்துவோ ‘பத்த வைச்சிட்டியே பாட்டி’ என பாட்டியை கண்டப்படி மனதிற்குள் திட்டியவன்,கொதித்துப் போய் இருந்த மனையாளை சமாளிக்கும் மார்க்கம் அறியாமல் “இல்லைடி…அது வந்து செல்லம்” என திக்கி திணறி பேச,
“செல்லம் வெல்லம்னு கூப்பிட்டே கொன்னுடுவேன் மவனே” என விரல் நீட்டி எச்சரித்தவள் “பாட்டியும் பேரனும் எப்படியெல்லாம் எனக்கு எதிரா திட்டம் போட்டு கடத்தியிருக்கீங்க…உன்னை யெல்லாம் சும்மாவே விடக்கூடாதுடா…” என பல்லை கடித்துக்கொண்டு அவனை அடிப்பதற்காக அக்கம்பக்கம் பொருள் தேட,
அதையறிந்து பீதியுற்ற ஜித்துவோ “ஹே மூன்…நான் சொல்லறதை கேளுடி முதல்ல…” என விளக்கம் கொடுக்க முன் வர,
அவளோ தலைமுடி சிலும்ப அவனை நோக்கி திரும்பி “கேட்க முடியாதுடா” என ஆவேசமாக கத்தியவள் அவனை அடிப்பதற்காக அருகிலிருந்த பூச்சாடியை கையில் எடுக்க,
‘ஆத்தி…இருக்கிற கோபத்திலே நம்மளை கொன்னாலும் கொன்னுடுவாள் போலவே’ என அவளின் பிடியிலிருந்து தப்பித்து ஓட ஆரம்பிக்க,
“ஹே எங்கடா போறே?ஒழுங்கா நில்லு…” என பூச்சாடியிலிருந்த பூக்கள் அனைத்தையும் அவன் மீது தூக்கிப்போட,
அதில் துள்ளி குதித்து விலகியவன் “மூன்…மூன்…வேண்டாம்டி…பழசை விடு…இப்போ நான் உன்னோட புருஷன்…அதுக்காகவாது என்னை மன்னிக்கலாமில்லை…” என அவன் கட்டிலின் மீது ஏறி ஓட,அவளும் “புருஷனா இருக்கிறதிலே தான் வெறும் மண்டைய மட்டும் உடைக்கலாம்னு நினைச்சேன்…இல்லை…குடலை உருவி மாலையா போட்டிருப்பேன்…ஒழுங்கா நில்லுடா” என அவளும் கோபத்தோடு இரைந்தவாறு கட்டிலின் மீது ஏறி அவனை துரத்தினாள்.
இருவரும் அறை முழுவதும் துரத்தியப்படி காதல் சண்டையிட,அவள் அவனை அடிக்கப் பாய,அவனோ ஓடி செல்ல அவர்களது அறை ஒரு மினி போர்க்களமாக இருந்தது.
அடிதடியில் ஆரம்பித்த சண்டை எப்போது கட்டிலறை யுத்தமாக மாறியது என்று அவர்களுக்கே தெரியவில்லை.
‘டமார்’ என்ற சத்தம் இடியாய் முழங்கின.
வேறு ஒன்றுமில்லை…இருவரும் கட்டிலின் மேல் ஓடிப்பிடித்து விளையாடியதில் கட்டிலின் கால்கள் உடைந்து நொறுங்கியிருந்தன.
இப்போது கட்டிலோடு மெத்தை தரையில் விழுந்துக் கிடக்க,அதன் மேல் அவள்…அவளின் மேல் அவன்…
கட்டில் உடைந்த அதிர்ச்சியில் அவனை இறுக்கியணைத்து விழி மூடியிருந்த மனையாளின் மீது இரக்கம் சுரக்க “மூன்” என உயிரை உருக்கும் குரலில் அழைக்க,
அதில் மேனி சிலிர்க்க “ம்” என விழி விரித்த மங்கையவளின் விழியோடு விழிநோக்கிய ஜித்து “மூன் சாரிடி…நிஜமா நீ இந்த அளவு கஷ்டப்படுவேன்னு எனக்கு தெரியாதுடி…அந்த நேரம் அண்ணாவும் அண்ணியும் சேரணும்னு மட்டும் நினைச்சனே தவிர உன்னை பத்தி நினைக்க தவறிட்டேன்…ஆனால் கல்யாணம் நடந்தப்பிறகு நீ தப்பிச்சு வந்தப் பார்த்தீயா?அப்போ நீ உடைஞ்சு அழுது வெளிய போனதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…அப்போலிருந்து தான் உன் மேலே எனக்கு ஏதோ ஃபீலாக ஆரம்பிச்சிருக்கு…அந்த எனக்கு அது தெரியலை…ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் உன்னை அந்த ஹோட்டல்ல அந்த நிலைமையிலே பார்க்கும் போது என் மனசு என்னையும் மீறி உன் காலடியில் வந்து விழுந்திடுச்சுடி…முன்னாடி நான் பார்த்த அந்த பொண்ணா இதுனு ஆச்சரியப்பட்டேன்…ஆனால் உன்னோட தோற்றம்,துணிச்சல்,நேர்மையான பேச்சு இப்படி எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது…அதுக்கு பிறகு தான் நான் உன்னை ஃபாலோ பண்ணி அது இப்போ கல்யாணத்திலே முடிஞ்சு நாம்ப இப்படி இருக்கோம்…இருந்தாலும் நான் செஞ்து தப்பு தான்…என்னை மன்னிச்சிடுடி மூன்” என மெய்யான வருத்தத்துடன் பேசியவனின் குரலில் தெரிந்த காதலும் உருக்கமும் அவளின் பிடிவாதத்தைக் கரைத்தன.
அத்தோடு பாட்டியும் அவளிடம் மன்னிப்பை யாசித்து சூழ்நிலையை பேரனிற்காக விளக்கியிருந்ததால் அவனின் மீது அவளிற்கு பெரிதாக கோபமில்லை.
அதனால் தன் கணவனது கழுத்தில் கைக்கோர்த்து அவனை தன்னருகே இழுத்தவள் “பாஸ்ட் இஸ் பாஸ்ட் சோ உங்க சாரி அக்சப்டெட்…ஆனால் இனி இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணால் நான் மன்னிக்கமாட்டேன்…புரியுதா?” என கறாராக பேசினாலும் அவளின் முகம் வைத்தே அவளின் கோபம் முழுவதும் மறைந்துவிட்டது என்று அறிந்த ஜித்து “தேங்க்ஸ்டி செல்லம்…இனி இப்படி பண்ணமாட்டேன்” என உற்சாகத்துடன் மொழிந்து குனிந்து அவளின் இதழை சிறைப்பிடித்து அதில் ஆழ்ந்துப்போனான்.
அவளும் அவனது நீண்ட நெடிய முத்தத்தில் திளைத்துப்போக,அக்கணம் ஆடவனது கரங்களோ அவளின் ஆடைகளை அகற்ற முற்பட்டன.
அதில் சட்டென விழிதிறந்த பெண்ணவளோ “ஜித்து நாம்ப எந்த நிலைமையிலே இருக்கோம்?இப்போ போய்?” என போலியாக அவனை தள்ளிவிட முயற்சிக்க,
அவனோ அவளின் கரம் பற்றி தடுத்து “மூன் எதுவா இருந்தாலும் காலையிலே பார்த்துக்கலாம்டி…இப்போ ஃப்ரீயா விடு” என சல்லாபத்துடன் மொழிந்தவாறு அவளின் சேலையை விலக்கி,அவளின் நெஞ்சத்தில் முகம் புதைத்தான்.
அவனது செயலில் அவள் கூச்சத்தில் இதழ்கடித்து படபடத்தாலும்,அவனது ஆடைகளை அவள் களைத்தாள்.
அவனோ தன் இன்பத்திற்கு தடையாய் இருந்த அவளின் ஆடைகளை பரபரவென கழட்டி அறையின் மூளையில் வீசியெறிந்தவன் “யூ லுக் செக்ஸி மூன்” என தாபப்பெருக்குடன் அவளின் அடிவயிற்றில் முத்தமிட்டு அவளில் முத்துக்குளிக்க ஆரம்பித்திட,
அவனிற்கு இணையான தேடலுடன் அவளும் அவனை அணுகிட,இருவரும் உச்சம் தொட்ட உணர்வுடன் ஒருவரை ஒருவர் மோகத்தோடு தேடி மஞ்சத்தில் முகிழ்ந்துப்போயினர்.
அவன் இறுதியாக முழுமையாய் அவளை நெருங்கி பெண்மையை ஆக்கிரமிக்க முயன்ற சமயம் மட்டும் சந்திரமதி “ஜித்து இன்னைக்கு வேணாமே?” என தயக்கத்துடன் மொழிந்தாள்.
அவனோ குழப்பமாக “ஏன்டி?” என புருவம் உயர்த்த,
அவளோ “இப்போ ஓவலேஷன் டைம்…அதான்…” என இழுக்க,
அவளுள் தன் ஆதிக்கத்தை செலுத்திவிடும் தீரத்துடன் இருந்த ஜித்துவோ “ஒரு நாளிலே ஒண்ணுமாகாதுடி…ஐ நீட் ஃபுல் எக்ஸைட்மெண்ட்” என வேட்கையுடன் கூறி,தன் ஆண்மை கொண்டு பெண்ணவளின் மென்மையாய் வன்மையாய் சூறையாட ஆரம்பித்தான்.
அவளிற்குமே அவன் மொத்தமாய் வேண்டும் என உடலும் உள்ளமும் நெருப்பாய் தகித்ததினால் தன்னவனது பேச்சில் மயங்கி,அவனது செயலில் கிறங்கி அவனது பெயரை பிதற்றி அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.
இதேநேரம் அவர்களது அறைக்கு பக்கத்தில் இருந்த தமயந்தி வீர் இருவருக்கும் ஏதோ சத்தம் கேட்டிருந்தது.
அதை முதலில் கவனித்த வீர் நெற்றி சுருங்க “பக்கத்து ரூமிலே ஏதோ சத்தம் கேட்டுச்சில்லை தமி…” என தன்னவளுடன் நெருக்கமாக இருந்தவாறு வினவ,
அவனது தீண்டலில் உருகிக்கொண்டிருந்த தமிக்கோ அச்சமயம் இடியே முழங்கினாலும் கூட தெரியாது.
அவ்வாறு இருக்கையில் எங்கனம் அந்த சத்தம் கேட்டிருக்கும்?
அதனால் “இப்போ இந்த நிலைமையிலே இது ரொம்ப முக்கியமா?வாங்க வீர்” என இருவரும் இருந்த நிலையை சுட்டிக்காட்டி தமயந்தி அவனது கழுத்தை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்திருந்தாள்.
கலவியின் உச்சக்கட்ட படியில் இருவரும் இருப்பதை அறிந்த ஆடவனும் மென்மையாக புன்னகைத்தான்.
அவனை செல்லமாக முறைத்த வீரின் புயலோ “என்ன சிரிப்பு?சீக்கிரம் ஆரம்பிங்க…ம்” என தன்னவனிற்கு ஆணைப்பிறப்பிக்க,அதை நிறைவேற்றும் சேவகனாய் மாறி அவனும் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.
தன்னவளின் முனகலிலும் முத்தத்திலும் மயங்கி,தாம் கேட்ட இறைச்சல் மொழியை மறந்தேவிட்டிருந்தான்,தமயந்தியின் காதலன்.