முகிழ்மதி 95:

தன்னவனின் அருகாமைக்காக தவித்த பாவையவளின் தகிப்பு அவனது அணைப்பில் அடங்கிய நிலையில் அவன் “ஸ்டார்” என்றழைத்ததும் அவளையும் அறியாமல் அவளின் மேனி சிலிர்த்தது.
சட்டென சிந்தைக்குள் ஒரு உருவம் ‘ஸ்டார்’ என அவளை நோக்கி கைகளை நீட்டுவது போலவும்,அவள் அவனுள் ஓடிச்சென்று சரணடைவது போன்ற காட்சிகளும் கலங்கலாக சிந்தையில் தோன்றி மறைந்தன.
அதில் அவளின் மேனியில் ஒரு நடுக்கம் விரவி ஓடிவிட,அதை ஆடவனது கரங்களும் உணர்ந்தன.
உடனே காரிகையை தன்னை நோக்கி திருப்பிய ஆடவன் அவளின் அச்சமறிந்து “என்னாச்சு ஸ்டார்?” என அவளின் காதோரம் சுருண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டப்படி வினவினான்.
அதில் அவளின் காதோரம் மயிர்க்கூச்சரிந்து சிலிர்த்தாலும்,அவனது அந்த புது அழைப்பை கேட்டு குழம்பியவளாய் “ஸ்டார்?” என தன்னவனை கேள்வியாய் பார்த்தாள்.
அவனோ “எஸ்…நீ தான் ஸ்டார்…அதுவும் என்னுடைய ஸ்டார்” என இலேசாக சிரித்துக்கொண்டே சொல்ல,
அவளிற்கோ இம்மையும் புரியவில்லை…மறுமையும் புரியவில்லை.
குழப்பம் நீங்காமல் ஒரு வித தடுமாற்றத்துடன் அவனை அவள் ஏறிட,அவனின் நெஞ்சம் கனிந்தது.
அதனால் அவளின் விழிகளில் தெரிந்த அலைப்புறதலை கண்ட ரத்தினவேல் “உன்னை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே முகிழ்…உனக்கு பொறுமையா எல்லாம் ஞாபகம் வரட்டும்” என இதமாக சொன்னவனின் கரங்கள் அவளை இழுத்து தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டன.
நேற்றிலிருந்து அவளிற்காக அவன் பட்ட அவஸ்தை சொற்களால் வடிக்க முடியாது.
தன்னவளை இந்த அளவு உயிராய் நேசிக்கிறான் என அவன் உணர்ந்த தருணம் அது தான்!
அதுவும் முகிழ்மதி அவனது நட்சத்திரம் என்று அறிந்த கணத்திலிருந்து இன்னும் அதிகமாய் அவளை நேசிக்க தொடங்கிவிட்டான்.
அதனால் நேற்றிலிருந்து அவன் கொண்ட தவிப்பு அனைத்தையும் தன் அணைப்பின் இறுக்கத்தின் வழியாக அவளிடம் காட்டினான்.
எலும்புகள் நொறுங்கும் அளவு அணைத்திருக்கும் அவனது முரட்டுக்கரத்தின் வீரியத்தை அந்த மெல்லியவளால் தாங்க முடியுமா என்ன?
அதனால் அவள் “ஆ” என தன்னை மீறி மெல்லியதாக அலறியிருக்க,உடனே தன்னுடைய கடினமறிந்த அந்த மூர்க்கன் தனது வன்மையை சிறிது குறைத்தான்.
யாருக்காகவும் தன் கர்வத்தை விட்டு இறங்கிவராத வேந்தவனவன் அவளிடம் “சாரி” என மன்னிப்பை வேண்டினான்.
ஆனால் அவனது மன்னிப்பு அவளிற்கு நெகிழ்வை கொடுப்பதற்கு பதிலாக வெட்கத்தில் சிலிர்க்க வைத்தன.
ஏனெனில்,மன்னிப்பு வேண்டியவனின் உதடுகள் அவளின் செவிமடலை உரசியப்படி உரைத்திருக்க,அதில் பாவையவளின் மேனி மொத்தமும் மின்சாரம் பாய்ந்திட,அது தந்த உணர்வில் தன்னையும் மீறி அவனின் கழுத்தில் தன் மலர்க்கரங்களை கோர்த்துக்கொண்டாள்,அந்த கோமகள்.
காலையிலிருந்து அவன் தோள் சேர காத்துக்கொண்டிருந்த அந்த மாலை ஆடவனின் கழுத்தில் தஞ்சம் புகுந்ததும்,அவளிற்காக ஏங்கியவனின் நெஞ்சத்திலே பெரும் ஆர்ப்பரிப்பு!
தன் விழிகளில் நேசம் பொங்க தன்னவளின் விழிகளை உற்றுநோக்கிய கணவனின் விழி வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவள் படபடப்புடன் இமை மூடி அவனுள் உருகிட,
தன்னவளின் குழைவு அவனுள் உறங்கிக்கொண்டிருந்த உணர்வுகளை கிளர்ந்தெழ செய்ய,மெதுவாக குனிந்து “என்னமோ தெரியலை…இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி பொண்டாட்டி…” என கிறக்கத்துடன் மொழிந்தவனின் இதழ்கள் செவிமடலை ஈரம் செய்ய ஆரம்பித்திட,ஆடவனின் கரங்களோ அவள் அணிந்திருந்த புடவையினூடாக அவளின் இடையை வருடத் தொடங்கின.
அவளை நேற்றிலிருந்து காணாத ஏக்கம் இன்று தாபமாய் வெளிப்பட,தன்னவனின் தாகம் தீர்க்கும் அருமருந்தானாள் அவனின் மனையாள்.
அவனின் ஒற்றை அணைப்பிற்கே அவள் மொத்தமாக அவனில் சரணடைந்துவிடுவாள்.
இப்போது அவனது இதழ்களும் கரங்களும் செய்த மாயத்தில் அவளின் மேனி மெல்ல மெல்ல சூடேறி சிவக்க ஆரம்பித்தன.
ஆனால் ஆடவனோ நேற்று தன்னவள் தன்னை நிராகரித்ததற்கு தண்டனை கொடுக்கும் விதமாக “நேத்து உங்க அம்மாவை பார்த்தவுடனே என்னை மறந்திட்டயில்லைடி…” என கோபமாக முணுமுணுத்தவனின் பற்கள் செவிமடலில் ஒரு செல்ல கடியை பரிசாக வழங்கிட,
அவளோ “ஆ” என வலியில் அலறுவதற்கு பதிலாக “ஸ்ஆ” என இதழ்கடித்து சுக வலியில் முனகினாள்.
ஏனெனில்,அவனது இதழ்கள் மட்டும் அவளிற்கு தண்டனையை வழங்கவில்லை.
அவளின் வெற்றிடையில் பயணித்த ஆடவனது கரங்களும் அவளிற்கு தண்டனையை அளித்திருந்தன.
ஆனால் அவன் அளித்த தண்டனை அவளிற்கு பிணியை கொடுப்பதற்கு பதிலாக அவளின் உணர்வுகளை அல்லவா தூண்டி விட்டிருந்தன.
கணவன் மனைவி நேசத்திற்கு இடையில் கோபமெல்லாம் நிலைத்து நிற்குமா என்ன?
செவிமடலை ருசித்த அவனிதழ்கள் அத்துடன் நிறுத்தவில்லை…அவளின் கன்னத்தின் வழியே ஊர்வலம் செல்ல தொடங்கிட,இடையிலிருந்த அவன் கரமோ அவளின் நாபிக்குழிக்குள் நுழைந்து அதனை மலர வைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தன.
தன்னவனது வேட்கை கலந்த விளையாட்டின் வீரியம் ஏற்க முடியாமல் அவளின் பூ மேனி கூச்சத்தில் தகிக்க “ஏ…ங்க..” என்றவாறு உஷ்ணப் பெருமூச்சை இதழ்குவித்து வெளியேற்றிட,
ஆடவனோ தன்னவளது இன்ப கிளர்ச்சியாய் அறிந்தவனாய் விஷமத்துடன் புன்னகைத்து “ஏங்க இல்லை…மாமா சொல்லுடி” என்றவாறு அவளின் மெல்லிய கன்னத்தை இலேசாக கடிக்க,
‘ஏன்?’ என கேட்க வாயை திறந்தவளிற்கு வாயிலிருந்து சத்தமே வரவில்லை.
ஏனெனில்,அவளின் மேனியில் எல்லை மீறி பயணிக்க ஆரம்பித்த ஆடவனது கரங்கள் அவளை வாயடைக்க வைத்தன.
அவனோ அவளின் உணர்வுகளை மேலும் தூண்டு விதமாக அவளின் மென்மையை நோக்கி அவனது கரத்தை நகர்த்தியிருந்தான்.
அவன் கன்னத்தில் கொடுத்த செல்லக்கடியில் அவனின் கழுத்தை வளைத்திருந்தவளின் கரம் மெல்ல கீழிறங்கி அவனின் சட்டை காலரை இறுகப் பற்றி கொண்டன.
அவனின் இதழ்கள் அவளின் இதழோரம் உரசி தீப்பற்ற வைக்க,அவனின் கரமோ அவளது யௌவனங்களில் மென்மையை பரிசோதிக்க ஆயுத்தமாகியிருந்தன.
தன்னவனின் கரம் அவ்விடத்தை தீண்டிய மறுகணமே பாவையவள் விதிர் விதிர்த்துப்போய் அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.
அது அவனது தொடுகை பிடிக்காமல் இல்லை.. இதுவரை அவனது கரங்கள் அவளின் இடையை தாண்டி வேறெங்கும் பயணித்ததே இல்லை.
இன்றோ இடை தாண்டி அவளின் அந்தரங்க பாகத்தில் சஞ்சரித்ததும் அவளின் அடிவயிற்றில் ஏற்பட்ட தடதடப்பினால் உண்டான அச்சம் அது!
ஆனால் அவனோ “ஸ்டார்” என மோகத்தின் உச்சத்தில் அவளின் இடைப்பற்றி தன்னை நோக்கி இழுத்தத்தோடு “மாமா சொல்லுடி” என தாபத்தோடு முணுமுணுக்க,
அவனது ‘மாமா’ என்ற பேச்சிலே அவளின் மேனிக்குள் சுறுசுறுவென ஏதோ ஒரு உணர்வுகள் பொங்கி பெருகுவது போல் இருக்க,அவளின் மேனி தாபத்தில் கிளுகிளுத்து தடுமாறின.
தன்னவளின் வாயிலிருந்து அந்த அழைப்பை வரவழைக்கும் நோக்கத்துடன்
அவனது இதழ்கள் இப்போது அவளிதழ்களின் மீதிருந்த மச்சத்தை இதழ்களால் ருசிக்க தொடங்கிய நிலையில் “மாமா சொல்லுடி” என செல்லமாய் மிரட்ட,
அவளோ அப்போதும் ‘மாமா’ என அழைக்காமல் அழுத்தமாய் தன் கீழுதட்டை கடிக்க,அதைக்கண்ட மன்னவனின் சரீரத்திலுள்ள நரம்புகள் எல்லாம் வேட்கையில் கிளர்ந்தெழ அடுத்த கணமே இதழால் ருசித்த அவளின் மச்சத்தை பற்களால் புசிக்க தொடங்கியிருந்தான்,அந்த காதல் அரசன்.
தன்னவனின் இந்த அதிரடியில் அவன் தந்த காதல் காயத்தினால் விளைந்த உணர்வுகளின் உச்சம் தாளாமல் “மா..மா” என விழிகள் சொருக கிறக்கத்துடன் முனகியிருந்தாள்.
தன்னுடைய முயற்சியில் வெற்றிக்கொண்ட வேந்தனின் இதழ்கள் கர்வமாய் புன்னகைத்திட,அவளின் முகத்தை பார்த்தவனிற்கு உணர்வுகள் பொங்கி எழ தொடங்கின.
அவன் கொடுத்த போகத்தில் அவளின் விழிகள் சொருகி…முகமெல்லாம் செந்நிறமாய் சிவந்து…படபடப்பில் துடித்த இதழ்களை கடித்தப்படி நின்றிருந்த அவனது நட்சத்திரத்தை அப்படியே தனக்குள் உள்வாங்கி கொள்ள அவனின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.
அதற்கு மேலும் அவளை தள்ளி நின்று ரசிக்க முடியாமல்,அவனுள் பொங்கிய உணர்வுகள் யாவும் கரையை உடைக்க காத்திருந்திட,தன்னவளை அலமாரி கதவின் மீது சாற்றி நிறுத்திய ஆடவன் அவளின் கீழ் அதரத்தை உள்வாங்கி சுவைக்க ஆரம்பித்திருந்தான்.
அவன் படீரென்று தன் அதரங்களை தீண்டியதும் அவளது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒரு திகைப்பு பரவி ஓடின.
அடுத்த கணமே தன்னவனின் தேவையறிந்த மனைவியாய் அவனிற்கு உடன்பட்டு அவள் மயங்கி நிற்க,தன்னுள் உருகிக்குழைந்த இல்லாளின் நேசத்தில் மகிழ்ச்சியுற்ற ஆடவனும் அவளுள் மேலும் முன்னேறினான்.
அவனின் ஒரு கரம் அவளின் கழுத்தை உயர்த்தி இறுகப் பற்றியிருக்க,அவனின் மற்றொரு கரம் அவளின் மேனியில் தன் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தன.
தன்னவனது இத்தகைய சுபபோக காம விளையாட்டில் பாவையவளின் ஒட்டுமொத்த தாப உணர்ச்சிகளும் பொங்கி எழ,புதிதாக தன்னுள் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் வீரியம் தாளாமல் அவளின் கரங்கள் அவனின் வெண்ணிற சட்டையை இறுக்கி பிடித்து கசக்கின.
அவளின் விழிகள் சொக்கியிருக்க,அவளின் கீழ் அதரத்தை மட்டும் முத்தமிட்டு ருசித்த அவனிதழ்கள் இப்போது அவளது மேல் அதரத்தை தனக்குள் உள்வாங்கின.
அவனிற்கும் அவளின் இதழ்கள் மொத்தத்தையும் தனக்குள் உள்வாங்கி சுவைக்கும் அளவு மோக தீப் பற்றி எரிந்தாலும்,தன்னவளின் நிலையறிந்து மெது மெதுவாக அவளின் இதழ்களுக்குள் முன்னேறினான்.
ஏனெனில்,அவனது வன்மையை தாங்கும் அளவு வலிமையும் உடல்பலமும் அவளிற்கு இல்லை என்று அறிந்து,தாப உணர்ச்சிகள் உச்சம் பெற்ற நிலையிலும் அவளிடம் சிறிது மென்மையையே கடைப்பிடித்தான்.
அவனது அந்த மென்மையான முத்தத்திற்கே காரிகையின் மெல்லிய மேனி துவள தொடங்கியிருந்தன.
அதனால் அவளின் உடல் சுமையை ஒரு கையால் தாங்கிக்கொண்டே அவளிடம் தன் மகிழ்ச்சியையும் நேசத்தையும் அவன் காட்டிக்கொண்டிருந்தான்.
பாவையவளோ தன்னவன் அறிமுகப்படுத்திய புணர்வின் வேகம் தாளாமல் உடல் தளர,தன்னவனுள் இன்னும் அதிகமாக புதைய ஆரம்பித்தாள்.
மானை வேட்டையாட காத்திருக்கும் வேடனிடமே அடைக்கலம் புகுவது போல் இருந்தது,அவளின் செயல்!
ஆனால் அவளின் அந்த செயல் கூட ஆடவனது உணர்ச்சிகளை தூண்டிவிடும் என அவள் அறியவே இல்லை.
அவன் தந்த மென் முத்தத்தில் சொர்க்கத்தில் பயணித்துக்கொண்டிருந்த பாவையவள்,திடீரென்று தன் அடி வயிறு உணர்ந்த ஆடவனது ஸ்பரிசத்தில் திடுக்கிட்டாள்.
அவள் அதிர்ச்சியில் விழி விரித்ததெல்லாம் ஒரே ஒரு கணம் தான்!
அடுத்த கணமே தன்னவனின் ஸ்பரிசத்தை இயல்பாய் ஏற்கும் விதமாக இதழ்கடித்து விழி மூடினாள்.
முன்பென்றால் அவனது உணர்ச்சிகளின் கிளர்ச்சி அறிந்து அவள் பயந்திருப்பாள்.
இப்போது அவனின் முன்பு நிற்பது முழுமையாக ரத்தினவேலுவின் மனைவியாக மாறி நிற்கும் முகழ்மதியாயிற்றே?
தன்னவன் கற்று தந்த கலவி பாடத்தை கற்று தேர்ந்த மாணவியாய் அவனது ஸ்பரிசத்தை ஆழ்ந்து உணரும் விதமாக அவனின் இடையில் கையிட்டு தன்னோடு சேர்த்து அணைத்திருந்தாள்.
தன்னவளின் இந்த மாற்றம் உணர்ந்த ஆடவனிற்கோ அப்படியொரு மகிழ்ச்சி…
‘பார்றா…என் பொண்டாட்டி முன்னேறிட்டாள்’ என தனக்குள்ளே அவளை சிலாகித்துக்கொண்டவனின் மனம் மயங்கின.
அதனால் அவளின் அணைப்பில் ஆடவனது முரட்டு உடல் உருகி குழைந்தன.
அவன் யாரிடமும் சட்டென தழைந்து செல்லக்கூடியவன் கிடையாது…ஆனால் தன்னவளிடம் உருகுவதை கூட கர்வமாகவே எண்ணினான்.
அவனது மென்மையும் குழைவையும் அறிந்தவள்…அறியக்கூடியவள் அவள் ஒருவள் மட்டும் தான் என்பது போல் பூவையவளின் கரங்களில் நெகிழ்ந்தான் அந்த மூர்க்கன்.
அவனவளின் கரங்களில் அவன் உருகினாலும் அவனின் ஆண்மை கலந்த உணர்ச்சிகள் மட்டும் தாறுமாக பொங்கி பெருகின.
அதனால் அவளின் இதழ்களில் மென்மையாக கையாண்டவனின் அதரங்கள் இப்போது அவளின் இதழ்களை முழுமையாக உள்வாங்கி ருசிக்க தொடங்கிவிட்டான்.
நீண்ட நெடிய ஆழ்ந்த முத்தம் அது!
அவளிற்கோ முதலில் திகைப்பு…பின்பு தடுமாற்றம்…அதற்கடுத்து நாணம்…இறுதியாக நெகிழ்ச்சி என பல கலவையான உணர்வுகள்!
அவனோ அவளின் தேனமுதம் மொத்தத்தையும் இன்றே அள்ளி பருகிவிடும் முனைப்புடன் அவளது உடலின் சக்தி முழுவதையும் உறிஞ்சி எடுக்க ஆரம்பித்திருந்தான்.
அவனது அதிரடி கலந்த முத்த யுத்தத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் அவள் திணறினாள்.
அதேசமயம் அவனது கரமென்னும் மந்திர கோல் வேறு அவளின் மேனியில் பல வித மாயங்கள் புரிந்து அவளை மயக்கிட,
அவளிற்கு இப்போது அவனில் மயங்குவதா அல்லது அவனின் முத்தத்திற்கு எதிர்வினை புரிவதா என்ற கேள்வியே முளைத்தன.
ஆயினும்,அவளிற்குள் அவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த புதுவிதமான உணர்வை அவளை என்னவெல்லாமோ செய்தன.
அவளிற்கு இப்போது ஒரே நேரத்தில் பனிக்கூழையும் சூடான குளம்பியையும் ஒரே நேரத்தில் பருகியது போல் தேகமெல்லாம் தித்தித்திப்பு!
உள்ளமெல்லாம் ஒரே படபடப்பு!
தன்னவளின் ஸ்பரிசம் ஆடவனை இன்னும் பித்தனாக்கிட அவளின் மென்மையை ஆடையினூடே ஸ்பரிசத்த ஆடவனின் கரம் அடுத்ததாக வஸ்திரங்களை களைந்து அவைகளை உணர துடித்தன.
ஒரே ஒரு கணம் அவனுள் புதைந்து கிடந்த முரடன் விழித்தெழ,
அவளின் மேனியை அத்து மீறி புணரும் வேட்கையோடு அவளின் மேல்சட்டையின் கொக்கிகளின் மீது அவனின் கரம் அழுந்த பதிந்தன.
ஆனால் மறுகணமே அவனது ஆழ் மனதில் புதைந்திருந்த முகிழ்மதியின் நேயமுறு காதலன் வெளிவந்திட தன் கரத்தை பின்னுக்கு இழுத்துவிட்டான்.
தன்னவளின் ஆரோக்கியம் அவனை நிகழ்விற்கு கொண்டு வந்துவிட,அவளின் சேலைக்குள் இருந்த கரத்தை வெளியே எடுத்து அவளின் கன்னம் பற்றி அவளின் இதழில் நீண்ட நெடிய முத்தம் பதித்து விலகினான்..
வழக்கம் போல் அவன் அவளை விட்டவுடன் காரிகையவள் மூச்சிறைக்க அவனது மார்ப்பின் மீதே தொய்ந்து விழ,அவன் இதழ்ப்பிரித்து சிரித்தவாறு அவளை அரவணைத்துக்கொண்டான்.
அவனிற்கு தேவை அவளின் முத்தமும் ஸ்பரிசமும்!
அதை அவன் உணர்ந்துவிட்டான்.
தற்சமயம் அதுவே அவனிற்கு போதுமாக இருந்தன.
அதனால் அவளை தன் கைவளைக்குள் வைத்து தனது ஸ்டாரின் இருப்பையும் அவளிற்கே உரிய பிரத்யேக வாசத்தையும் ஆழ்ந்த அனுபவித்த ரத்தினவேலின் மனமெல்லாம் நிறைந்துப்போயின.
நட்சத்திராவின் இறப்பு அவனை அவ்வப்போது உறுத்திக்கொண்டே இருந்தன.
இப்போது தன்னவள் தான் அவனுடைய ஸ்டாரும் கூட என்று தெரிந்ததிலிருந்தே அவனிற்குள் நிகரில்லாத ஒரு ஆத்ம சந்தோஷம்!
‘என் ஸ்டார் உயிரோடு தான் இருக்காள்’ என தனக்கு தானே உருப்போட்டு அவளை அணைத்துக்கொண்ட ரத்தினவேலின் இதழ்கள் அவளின் உச்சியில் பதிந்தன.
அதற்கே அவளின் மேனி சிலிர்த்திட அவனை இறுக்கி அணைத்தாள்.
அவளின் அந்த இறுகிய அணைப்பில் அவனின் உணர்ச்சிகள் மீண்டும் கட்டவிழ “ஊப்” என இதழை குவித்து ஊதிக்கொண்டான்.
“என்ன பைத்தியக்காரனாகறடி நீ” என ஏக்கமும் காதலுமாய் முணுமுணுத்தன அவன் இதழ்கள்!
சில நாட்களுக்கு முன்பு,யாராவது அவனிடம் வந்து ‘நீ ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டு பித்தனாகிப்போவான்’ என்று கூறியிருந்தால் அவனே அவனை கட்டையால் அடித்து விரட்டியிருப்பான்.
ஆனால் இப்போது அவனது கை வளைவில் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய பெண் அவனை சிந்தை மறக்க செய்திருக்கிறாள் என்று நினைக்கும் போது அவனிற்கு கோபம் வரவில்லை…
மாறாக,அவனிற்கு அவை நெஞ்சம் நிறைந்த உவகையையும் பெருமிதத்தையும் தான் கொடுத்தன.
அவனிற்குள் காதல்,மென்மை,பொறாமை,தன்னுடைமையுணர்வு இவையெல்லாம் இருக்கின்றது என முதன் முதலில் அவனிற்கே அவனை அறிமுகப்படுத்திய பெண் அவள் தான்!
அதை எண்ணி அவனிற்கு கர்வமே உண்டாக்கிட,அவளை இப்படியே தன் காலம் முழுமையும் தனக்குள்ளே பொத்தி வைத்துக்கொள்ள அவன் உள்ளமும் சரீரமும் தவித்தன.
இதற்கு மேலும் தன்னவளை விலக்கி வைத்து மட்டும் அவனால் பார்த்திருக்க முடியாது என்று அவனிற்கு திடமாக தோன்றின.
விரைவாக, அவளிற்குள் நிரம்பியிருக்கும் குழப்பங்கள் மற்றும் அவளின் கடந்த கால வலிகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து அவளுடன் ஒன்றிணைய வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டான்.
முகிழ்மதியின் மூர்க்கன் அந்தவொரு நொடியில் இருந்து தன்னவள் முழுமையாக அவனுடைய முகிழ்மதியாய் மாறக்கூடிய நாளை எதிர்பார்த்து தவமிருந்தான்.
முகிழ்மதி 96:

அன்றைய நாள் இரவு அவன் அவனின் மனையாளுடனே கட்டிலில் படுத்துக்கொண்டான்.
அவனிடம் அந்த கோரிக்கையை வைத்ததும் அவள் தான்!
வழக்கம் போல் அவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு செல்ல திரும்பிய தன்னவனின் கரம் பற்றி தடுத்த காரிகையவள் “ஏங்க எங்கப்போறீங்க?இங்கியே படுங்க” என இமைத்தாழ்த்தியப்படி கூறினாள்.
அவனோ “இல்லைடி…நான் அங்க சோபாவிலே படுத்துக்கிறேன்” என இதமான குரலில் சொல்ல,
சட்டென விழியுயர்த்திய மங்கை “ஏங்க பிளீஸ்..” என கெஞ்சலாய் விழிகள் சுருக்கி கேட்டதும்,அதற்கு மேலும் அவனால் மறுக்க முடியுமா என்ன?
அதனால் “சரி” என தலையசைத்து கட்டிலில் அவளருகே உள்ள இடத்தில் வந்துப்படுத்தான்.
அவனிற்கு அவளை அணைத்துக்கொண்டு உறங்க வேண்டும் என்று தோன்றினாலும் அவளின் நிலைக்கருதி அவன் விலகியிருக்க,
அவனே ஆச்சரியம் கொள்ளும் விதமாக தன்னவனை நெருங்கிப்படுத்து கொண்டாள் அவனின் மனையாள்.
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அவனை நெருங்கி அவள் படபடப்புடன் படுத்திருந்த விதமே தன்னை போலவே தன்னுடைய அருகாமையை அவள் விரும்புகிறாள் என தெரிவிக்க,அதற்கு மேலும் அவனிற்கு தடையிருக்குமா என்ன?
வேகமாக அவளை நெருங்கி தனக்குள் அவன் இழுத்துக்கொள்ள,அதற்காகவே காத்திருந்த மங்கையும் அவனது நெஞ்சுரம் படைத்த மார்பினில் முகம் புதைத்துக்கொண்டாள்.
‘நல்ல முன்னேற்றம் தான்’ என அவனது முரட்டு இதழ்கள் புன்னகை சிந்தின.
தன்னவளின் ஸ்பரிசம் அவனிற்குள் ஒரு ஆழமான மௌனத்தை கொடுக்க,அவன் அவளின் நெற்றியில் தலைவைத்து விழி மூடினான்.
அச்சமயம் அந்த அறையில் இருந்த மௌனத்தை களைக்கும் விதமாக முகிழ்மதி மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
அதுவும் அவளிற்கே உரிய தயக்கம் கலந்தக்குரலில்.
“ஏங்க நான் ஒண்ணு கேட்டால் கோபப்பட மாட்டிங்களே?” என மெதுவாக கேட்டவளின் இதழ்கள் அவனின் மார்பில் உரசி அவனுள் நெருப்பை பற்ற வைத்தன.
அதனால் படீரென்று விழி திறந்து “என்னடி?” என கேட்டவனின் குரலில் அப்படியொரு மென்மை!
அவளோ அவனிடம் பேச தடுமாறுவதை அறிந்து அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி ‘என்ன?’ என அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்கி வினவினான்.
அவனின் முகத்தை வெகு அருகே பார்த்தப் பிறகு அவளிற்கு எங்கிருந்து பேச்சு வரும்?
அவள் பேச முடியாமல் திணற “முகிழ் எதுவா இருந்தாலும் வாயை திறந்து பேசு” என அழுத்தமாக அவன் சொன்னதும்,
அவளோ சிறிது தயங்கியப்படியே “நான் நாளைக்கு அம்மாவை பார்க்கப்போகட்டுமா?” என ஒருவழியாய் திக்கிதிணறி கேட்டுவிட,அவளின் விழிகளை கூர்ந்து நோக்கினான் அவன்.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும்,தாம் அவ்வாறு கேட்டது அவனிற்கு கோபமோ என அவள் மிரட்சியுடன் அவனை பார்த்தாள்.
அவனோ அவளை செல்லமாக முறைத்து “உன்கிட்ட என்னடி சொல்லியிருக்கேன்…எதுவா இருந்தாலும் இப்படி பயந்துக்கிட்டே கேட்கக்கூடாது என்கிட்ட எல்லாத்தையும் தைரியமா தான் கேட்கணும்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா நீ?” என அவனிற்கே உரிய பாணியில் அதட்ட,
அவளோ பதட்டத்துடன் இமைத்தாழ்த்தி “இல்லை அது வந்து…” என இழுக்க,
“முகிழ் நீ எப்போ வந்து உரிமையா என்கிட்ட கேட்கறீயோ அப்போ தான் நான் உன் அம்மா வீட்டுக்கு அனுப்பவேன்” என அவன் திட்டவட்டமாக தெரிவித்துவிட,
உடனே பரிதவிப்புடன் விழிகளை உயர்த்தி அவனை அவள் பார்க்க,அவனது விழிகளில் தெரிந்த கூர்மை அவனது உறுதியை தெரியப்படுத்தின.
ஆதலால்,படபடத்த தனது இதயத்தை சமாளித்து “ஏங்க எனக்கு அம்மா கூடவே அவங்க கைவளைவிலே அவங்களை பார்த்திட்டே இருக்கணும் போலே இருக்கு…அவங்க கூட இருந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நானு…அதே சமயம் உங்களை பிரிஞ்சும் என்னால் இருக்க முடியாது…அதனாலே பகல் நேரத்திலே அம்மா கூட இருந்திட்டு நைட்டு நீங்க வீட்டுக்கு வரதுக்குள்ள நான் இங்கு வந்திடுவா?” என தன்னவன் கொடுத்த துணிச்சலில் கோர்வையாக அவளது மனதில் நினைத்ததை பேசிவிட்டாள்.
அதற்கே அவளிற்கு தொண்டை குழி பல முறை ஏறியிறங்கிருந்தது.
ஏனெனில்,சற்று முன்பு கூட ‘அம்மாவை பார்த்தவுடனே என்னை மறந்திட்டயில்லை’ என அவன் கூறிய வசனம் கபாளத்தில் பதிந்து இருந்தது.
அதன் பொருட்டே,அவள் அவனிடம் கேட்க தயங்கினாள்.
ஆனால் தன்னை பிரிந்து அவளால் இருக்கமுடியாது என்பதை வார்த்தையால் வெளிப்படுத்தியவளின் மீது அன்பு அதிகரித்தது.
அதனால் அவனின் இதழ்கள் தாராளமாக விரிந்துக்கொள்ள “கண்டிப்பா போயிட்டு வா ஸ்டார்…பட் ஒரு கண்டிஷன்…” என விஷமத்துடன் அவன் உரைக்க,
அவன் ஒத்துக்கொண்டதும் மலர்ந்த முகம் இறுதியாக அவன் கூறியதை கேட்டதும் சுருங்கிவிட “என்னங்க?” என பாவமாக கேட்டவளை குறும்புடன் நோக்கிய ஆடவன் “நீ என்னை மாமானு கூப்பிட்டால் உங்க அம்மா வீட்டுக்கு நான் போக அனுமதி தர்றேன்” என ஒற்றை புருவம் உயர்த்தி சொல்லியிருந்தான்.
அவனது பேச்சில் அவளின் முகம் குப்பென்று சிவந்துவிட, அவனை ‘மாமா’ என அழைக்க முடியாமல் அவளின் வெட்கம் தடுக்க,அவள் அவஸ்தையுடன் இதழ்கடித்தாள்.
அவளின் வெட்கத்தை ரசித்த ஆடவனோ குனிந்து அவனது தாடி மற்றும் மீசையின் முலமாக அவளிற்கு குறுகுறுப்பூட்டி “என்னடி கூப்பிடறீயா?” என சீறலான குரலில் கேட்டு அவளின் தவிப்பை மேலும் அதிகமாக்க,
அவளோ அவனின் ரோமம் ஏற்படுத்திய குறுகுறுப்பில் மேனி மொத்தமும் குறுகுறுத்திட “சட்டுனு அப்படி கூப்பிட வரமாட்டிக்குதுங்க” என தட்டுத்தடுமாறி சொல்ல,
அவளின் குணமறிந்தும் தாம் அவசரப்படுகிறோம் என்பது புரிய ஒரு பெருமூச்சுடன் அவளிடமிருந்து விலகிய மணாளன் “சரி உனக்கு எப்போ அப்படி கூப்பிட தோணுதோ…கூப்பிடு முகிழ்” என தன்னவளிற்காக விட்டுக்கொடுத்தான்.
சிறு வயதில் வாய் ஓயாமல் தன்னை ‘மாமா’ என அழைப்பவளின் வாயிலிருந்து அத்தகைய அழைப்பை மீண்டும் கேட்க அவன் துடித்தான்.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அவள் ‘மாமா’ என அவனை அழைத்திருந்தாலும், அதன்பிறகு இயல்பானதும் அது தானாக மறைந்துப்போயிருந்தது.
அதனால் அவளை கட்டாயப்படுத்தி பெற முடியாமல் தன் ஆசையை ஒதுக்கி தள்ளிவிட்டான் அவன்.
தான் அவ்வாறு மொழிந்தது கோபமோ என அவன் முகம் பார்க்க,
அவனோ இலேசாக முறுவலித்து “நத்திங் முகிழ்…ஐயம் ஓகே” என்றவனின் முகம் திடீரென்று தீவிரத்தை தத்தெடுக்க “அப்புறம் முகிழ் உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் பேசணும்” என இயம்ப,
‘என்ன’ என்பது போல் பார்த்த மனைவியின் களைந்த குங்குமத்தை சரி செய்த ஆடவன்
“உனக்கு எப்போலாம் உங்க அம்மாவை பார்க்கணும்னு தோணுதோ நீ தாராளமா போய் பார்த்திட்டு வா முகிழ்…என்கிட்ட பர்மிஷன் கேட்கணும்னு அவசியமில்லை…அதேசமயம் நீ போகணும்னு விருப்பப்பட்டால் என்கிட்ட முதல்ல இன்ஃபார்ம் பண்ணிடு…நானோ இல்லை என்னாலே முடியலைனா கூட வேற ஏற்பாடு பண்ணிடுவேன்…ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நீ தனியா அங்க போகவோ அங்கிருந்து கிளம்பவோ கூடாது முகிழ்…இட்ஸ் ஃபார் யுவர் ஃசேப்பிடி…காட் இட்” என தீர்மானமாக கூறியவனின் குரலில் இருந்த எச்சரிக்கை அவளிற்கு புரிந்தன.
அதனால் அவனின் கைவளைவில் இருந்த பெண்ணவள் “சரி” என தலையாட்ட,
“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.நீ தேவகி அம்மாவோட பொண்ணுனு இப்போதைக்கு இங்க இருக்க யாருக்கும் தெரிய வேணாம்…எலெக்ஷன் முடிஞ்சு ஒரு பங்கஷன் ஆர்கனைஸ் பண்ணி உன்னையும் உன் குடும்பத்தையும் இன்ட்ரீயூஸ் பண்ணலாம் முகிழ்” என அவன் சொல்ல,
அவளோ தனது கண்ணை விரித்து ‘சரி’ என தலையை உருட்ட,
“ஏன்டி எல்லாத்துக்கும் கண்ணை கண்ணை விரிச்சு தலையாட்டினால் போதுமா?வாயை திறந்து ஏன் எதுக்குனு கேட்க மாட்டியா?” என கேலியாக அவளை சீண்ட,
அவளோ “நீங்க எது பண்ணாலும் என்னோட நல்லதுக்கு தாங்க இருக்கும்…அப்புறம் நான் எதுக்கு கேள்விக்கேட்கணும்?” என்றவளின் சொற்கள் ஒரு வித உறுதியுடன் வெளிவர,
தன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து பூரித்த ரத்தினவேல் “நீ நல்லா தேறிட்டடி பொண்டாட்டி…” என சிரித்தவாறே அவளின் நெற்றியோடு நெற்றி மூட்டி விலகிய ஆடவன் “முகிழ் உனக்கு பிடிச்சவங்களாவே இருந்தாலும் ஏன் எதுக்குனு கேட்டு பழகு…எல்லார் சொல்லறதையும் அப்படியே நம்பணும்னு அவசியமில்லை…இன்க்ளூடிங் மீ…உன் பாஸ்ட் விஷயத்தை மட்டும் இப்போதைக்கு விடு…ஆனால் இனி நடக்கிற எந்தவொரு விஷயமா இருந்தாலும் யாரா இருந்தாலும் சரி நீ உன் மனசுலே தோன்றின விஷயத்தை வெளிய பேசி பழகு” என தன்னவளிற்கு பொறுமையாக அறிவுரை கூறினான்.
அவன் கூறியதை நிதானமாக கேட்டுக்கொண்ட அவனின் மனையாளோ மீண்டும் ‘சரி’ என தலையை ஆட்ட,
‘விளங்கிடும்’ என தனக்குள்ளே நெற்றியை வருடி முனகினான் ரத்தினவேல்.
அவனிற்கு இணையான கம்பீரத்துடன் கூடிய துணிச்சலான பெண்ணாக அவளை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என அவன் நன்கு அறிந்திருந்ததால் அவளிற்கு எப்போதும் போல் நேரம் வழங்கினான்.
தற்சமயம் தன்னவளின் அண்மை மட்டுமே அவனிற்கு போதுமாக இருக்க,அவளை அணைத்தவாக்கிலே அவன் கண்ணயர்ந்திருந்தான்.
நேற்று இரவு அவளின்றி அவன் உறங்கவில்லை என்பதால்,இன்று நேரமே அவன் நித்திரை கொண்டிருக்க,அவனின் மனையாளோ தன்னவனின் ஆண்மை ததும்பிய முகத்தை உறங்காமல் ரசித்தப் படியே வெகு நேரத்திற்கு பின்பு மெதுவாக உறங்கிப்போனாள்.
திருமணமாகிய சில நாட்களிலே அவளில் தான் எத்துணை எத்துணை மாற்றங்கள்?
முன்பு இரவு நேரத்தில் ஆடவனது தொடுகையை கூட ஏற்க முடியாமல் அச்சத்தில் தவித்த பேதை பெண் அவள்,இன்றோ தன்னவனின் கைச்சிறைக்குள் அடைப்பட்டு அவனோடு ஒட்டி உரசி உறங்கியிருக்கிறாள்.
அவளுள் நிகழ்ந்த மாற்றங்களுக்கு எல்லாம் தலையாய காரணம் அவளின் மணாளன்!
சாத்தியமே இல்லாத ஒன்றை தன் நேசத்தின் மூலம் நடத்தி காட்டிய வித்தகன் அவன்!
அவனது அன்பில் பல வருடங்களாக வெறும் துயரத்தை மட்டுமே அனுபவித்த முகிழ்மதி இன்று வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல் அவளது ஆதவனிற்குள் நிம்மதியாய் அடைக்கலமாகிவிட்டாள்.
அடுத்த நாள் காலை,தன்னவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவளை வீரின் வீட்டில் இறக்கிவிட்ட ரத்தினவேல் அவளுடன் உள்ளே நுழைந்து அவனது குருவை பார்த்துவிட்டே புறப்பட்டான்.
செல்லும் முன்பு தனது நண்பன் வீரிடம் “நீ இங்க எல்லா பிரச்சனையும் செட்டில் பண்ணற வரை ஆபிஸ் வர வேண்டாம்…நான் அப்பாக்கிட்ட பேசிக்கிறேன்…நீ இங்கயே இரு” என அவனின் நிலையறிந்து இணக்கமாக உரைத்த நண்பனின் அன்பில் எப்போதும் போல் அவன் நெக்குருகிப்போனான்.
அதேப்போல் தனது மனைவியிடமும் “முகிழ் எனக்கு ஈவினிங் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு…நீ வீர் கூட வீட்டுக்கு போயிடு” என அவளின் கன்னம் தட்டி விடைப்பெற்றிருந்தான்.
அவளும் கணவனின் பேச்சிற்கு மறுபேச்சு பேசுவாளா என்ன?
தன் மனம் புரிந்து நடந்துக்கொள்ளும் கணவனது அன்பில் அவளும் நெகிழ்ந்துப்போனாள்.
தங்கை காலையிலே தாயை பார்க்க வந்ததும் வீருக்கு அப்படியொரு சந்தோஷம்!
அவனிற்கு மட்டுமில்ல…அவர்களின் தாயிற்கும்…
அவளை கண்ட இரண்டு நாளிலே அவரிடமும் நிறைய மாற்றங்கள்!
எப்போதும் ‘நட்சத்திரா…நட்சத்திரா’ என முரண்டுப்பிடித்து கொண்டு இருந்த தேவகி இப்போதோ அவள் இருக்கும் வரை அவளையே கண் இமைகள் பார்த்துக்கொண்டிருப்பார்.
இதில் வீரே அதிசயிக்கத்தக்க வகையில் அன்று மதியம் அண்ணன் தங்கை இருவருக்கும் அவரே தன் கையால் சாப்பாடு ஊட்டிவிட,அதைப்பார்த்த கவிதா “உங்க சிஸ்டரை பார்த்த பிறகு அவங்ககிட்ட நல்ல முன்னேற்றம் தெரியுது சார்…கண்டிப்பா கூடிய சீக்கிரம் குணமாகிடுவாங்கனு நினைக்கிறேன்” என மகிழ்ச்சியுடன் உரைத்தாள்.
“நீ சொன்னது மட்டும் நடந்தால் எனக்கு அதைவிட வேற சந்தோஷமே இல்லை கவிதா…தேங்க்ஸ்” என நெஞ்சம் உருகிப்பேசினான் அவன்.
அவனது உவகையை கண்டு அவளும் எவ்வித கல்மிஷமும் இல்லாமல் புன்னகைத்தாள்.
அவன் மீது நேசம் கொண்ட மனம் அல்லவா?
அதனால் அவனின் மகிழ்வை கண்டு அவளும் அகமகிழ்ந்துப்போனாள்.
இப்படியே அடுத்த ஒரு வாரமும் ஓடிப்போயின.
ரத்தினவேல் தனது வீட்டில் இருப்பவர்களிடம் தேவகி முகிழ்மதியை அவரின் மகள் நட்சத்திராவாக பாவிப்பதால் அவள் அடிக்கடி அங்கு சென்றால் அவரும் விரைவில் குணமடைந்துவிடுவார் என பொய்யும் மெய்யும் கலந்து ஒரு காரணத்தை கூறியிருந்தான்.
அவன் வீட்டினரிடம் நிஜத்தை மறைப்பதற்கு சில காரணங்கள் இருந்தது.
ஒன்று,முகிழ்மதியின் கடந்தக்காலம் அறிந்து வீட்டினர் ஏதேனும் அவமரியாதை செய்துவிடுவார்களோ என்பது ஒரு காரணம். இரண்டாவது,கடந்தகாலம் பற்றி கேட்டால் அவளிடம் கூறுவதற்கு பதிலளில்லை. மூன்றாவது,சுவற்றிற்கு கூட காதுகள் உண்டு. ஏதேச்சையாக இந்த விடயம் அவர்களை தாண்டி வெளியே சென்றால் தேவையின்றி அவர்கள் மனைவியை விமர்சிப்பார்கள்.அத்தோடு இது தேர்வு சமயம் என்பதால் அதில் வரும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் மனோப்பக்குவமும் அவளிடமில்லை.
அவற்றையெல்லாம் சிந்தித்தே அவன் அனைத்தையும் சில நாட்கள் மறைக்க முடிவுச் செய்தான்.
அவனது வீட்டினர் முகிழ்மதி யாராக இருந்தாலும் இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியும்.ஆனால் அவனது தந்தையை நம்பமுடியாது.
சட்டென ஏதேனும் வாய் விட்டுவிட்டால் அது தனது மனைவியின் மனதை பாதிக்கும் என்று தந்தையை நன்கு அறிந்தே குடும்பத்தினரிடமும் மறைத்தான்.
அவன் கூறிய காரணத்தை நம்பிய வீட்டினரும் வீரின் இல்லத்திற்கு அடிக்கடி விஜயமாகும் முகிழ்மதியிடம் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை.
இதில் அவன் நினைத்தது போலவே விஜயேந்திரனிற்கு துளியும் விருப்பமில்லை.
அதனால் அவரின் முகம் சுணங்கிவிட “அதுக்கு நம்ப வீட்டு மருமகளை அங்க அனுப்பணுமா பூபதி?” என அசூயையுடன் சொல்ல,
ரத்தினவேல் அதற்கு பதில் கொடுப்பதற்கு முன்பே “விஜய் என்ன பேசறே நீ?வீர் அம்மாவோட நிலையை நினைச்சு நாமயெல்லாம் எவ்வளவு வருத்தத்திலே இருந்தோம்…இப்போ அவங்க குணமாக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கும் போது அதை விட சொல்லறீயா?முகிழும் வீட்டுலே சும்மா தானே இருக்காள்…போயிட்டு வரட்டும் விடு” என காஞ்சனா மாலா கண்டிப்புடன் கூறியிருந்தார்.
விஜயேந்திரன் வேறு வழியின்றி கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
மூத்தவருக்கு வர வர தனது மகன் செய்யும் எந்தவொரு காரியமும் பிடிக்கவே இல்லை.
முக்கியமாக தனது இரண்டாவது பேரனின் விடயத்தில் அவர் பிடிவாதமாக இருப்பது!.
இப்போது ஜித்தேந்திரன் அவரிடம் சரியாக பேசுவது கூட இல்லை.அவரிடம் மட்டுமில்லை வீட்டில் யாரிடமும் அவன் பேசுவதில்லை.
“டான்…டான்” என தன்னையே செல்லமாக அழைத்துக்கொண்டு சுற்றி வரும் பேரனின் குறும்பை இழந்து தவித்துக் கொண்டிருந்தார்,அந்த மூதாட்டி.
முன்பிருந்த துறுதுறுப்பு அவனிடமில்லை.
அதற்காகவே அவரிடம் அவன் பேசவில்லை என்றும் கூறமுடியாது.ஆனால் ஏதோ ஒரு விலகல் அவனிடம் தென்பட்டது.
அதனால் அந்த பழைய காலம் மீண்டு வந்துவிடாதா என அந்த முதியவரின் மனம் படாதப்பாடுப்பட்டது.
தாயின் மனத்தாங்கலும் ஏக்கமும் அறியாமல் நடந்துக் கொண்டார் விஜயேந்திரன்.
‘என்னவோ பண்ணுங்க’ என முகிழ்மதியின் விடயத்தில் இருந்து அவர் கழண்டுக்கொண்டார்.
பெரிய மகனை மீறி அவன் மனைவி விடயத்தில் தலையிட அவருக்கு உரிமையில்லை என்பது மற்றொரு காரணம்!
ஆனால் அதற்கெல்லாம் அவர் சோர்ந்துவிடவில்லை.
ஏனெனில்,அவர் ஆட்டிவைக்க தான் ஒன்றிற்கு இரண்டு ஜீவன்கள் இருக்கிறார்களே?
அதனால் மகள் மற்றும் இரண்டாவது மகன் இருவரின் வாழ்வும் தன் பிடியில் இருக்க வேண்டும் என வறட்டுப்பிடிவாதத்துடன் இருந்தார்.
தன் மனைவிக்கு மெய் மறைத்து பேசி பழக்கம் இல்லாததால் அவள் திணறுவாள் என்று முன்னெச்சரிக்கையாக ரத்தினவேல் வீட்டினரிடம் பேசியிருந்தான்.
அதனால் மாமனாரின் பொருமல் தவிர பெரிதாக பிரச்சனைகள் ஏதுமில்லாததால் தினந்தோறும் சில மணி நேரங்கள் தன் பிறந்தவீட்டில் நேரம் செலவளித்து திரும்பி வந்தாள் முகிழ்மதி.
ஆனால் இதில் அவதியுற்ற ஒரே ஜீவன் தமயந்தி மட்டும் தான்!
இதுவரை வீரின் வீட்டிற்கு சுதந்திரமாக சென்று வந்த பெண்ணவளால் இப்போது அங்கு செல்ல முடியவில்லை.
முகிழ்மதியின் திடீர் பயணம் ஒரு காரணம் என்றால்,மற்றொரு காரணம் தானும் தனது அண்ணியுடன் செல்வதாக தெரிவித்ததற்கு “தமி என்ன பழக்கம் இது?நீ சீ.எம்மோட பொண்ணு…உனக்கு அது ஞாபகம் இருக்கா இல்லையா?நீ எதுக்கு அந்த சாதாரண வீட்டுக்கு போகணும்?உன் அண்ணி போறதே எனக்கு பிடிக்கலை…இதில் நீயும் அங்கு போறீயா?கட்சியிலே யாருக்காவது தெரிஞ்சால் என்ன நினைப்பாங்க?அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…வீட்டுலே இரு” என அடக்கி அமர வைத்தது வேறு யாருமல்ல விஜயேந்திரன் தான்!
அவளோ “அப்பா பிளீஸ்…பிளீஸ்…வீட்டுலே போர் அடிக்குது…ஒரே ஒரு முறை…” என தனது தந்தையின் நாடியை பிடித்து கொஞ்ச,
அவரோ “போகக்கூடாதுனு போகக்கூடாது தமயந்தி…சொன்ன பேச்சு கேளு போ” என வழக்கத்திற்கு மாறான சிடுசிடுப்புடன் மொழிந்தார்.
அதைக்கேட்டு பாவையவளின் முகம் சுருங்கிவிட்டது.
வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும்.தமயந்தி விஜயேந்திரனின் ஆசை மகள் என்று!
அவள் ஒரு விடயத்தை வாயை திறந்து கேட்பதற்கு முன்பே அதனை வாங்கி வந்து தரக்கூடிய அளவுக்கதிகமான அன்பு அவளின் மேல்!
இதுவரை அவள் கேட்டு எதையும் மறுத்ததேயில்லை.
ஆனால் இன்று அவளிடம் இது நாள் வரை இல்லாத ஒரு கடினத்துடன் அவர் பேசியிருந்தார்.
அதுவே வீட்டினர் அனைவருக்கும் பேரதிர்ச்சி!
‘என்னாச்சு இவருக்கு?’ என்று அனைவருக்கும் கவலையாக இருந்தது.
வானதியோ ‘சமீப காலமாக இந்த மனுஷன் சரியில்லை…என்ன பிரச்சனைனு கேட்டாலும் சொல்லமாட்டிக்கிறாரு’ என உள்ளுக்குள் சலித்துக்கொண்டார்.
ஆனால் மகளின் முகம் வாடியதை பார்த்து “விடு தமி…அப்பா ஏதோ டென்ஷனிலே இருக்காருனு நினைக்கிறேன்…நான் நாளைக்கு வீர் வீட்டுக்கு போய் தேவகி மேமை ஒரு தடவை பார்த்திட்டு வரலாம்னு இருக்கேன்.நான் போகும் போது நீயும் கூட வா” என தமயந்தியை சமாதானம் செய்ய,
உடனே அவளின் முகம் மலர்ந்திட “தேங்க்ஸ் மா” என அவரை அணைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
நாளை தன்னவனை பார்த்துவிடலாம் என கனவில் மிதந்தப்படி வலம் வந்தவளின் தலையில் இடியை இறக்கினார் விஜயேந்திரன்.
முகிழ்மதி 96:

வானதி வீரின் வீட்டிற்கு செல்வதை அறிந்து ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார் விஜயேந்திரன்.
“யாரை கேட்டு நீ அங்கப்போறே?வீர் நம்ப வீட்டுலே வேலை செய்யற ஒரு வேலைக்காரன்.அவன் வீட்டுக்கு போய் நீ அவங்க அம்மாவை பார்க்கணும்னு தலையெழுத்தா என்ன?” என எடுத்த எடுப்பிலே கத்த,
வானதியோ “என்னங்க பேசறீங்க?அந்த அம்மா தான் நம்ப பையனுக்கு கலையை கத்துக்கொடுத்த குரு…அவங்க இத்தனை வருஷமா ஹாஸ்பெட்டல்ல இருந்தாங்க போய் பார்க்கலை சரி..இப்போ வீட்டுக்கு வந்திருந்தவங்களை ஓரெட்டு போய் பார்க்கலைனா நல்லாவா இருக்கும்…அதுவும் வீர் நம்ப வீட்டு பையன்…அவனை போய் வேலைக்காரன் அது இதுனு சொல்லி பிரிச்சு வைக்கிறீங்க…உங்களுக்கு என்னங்க ஆச்சு?” என ஆற்றாமையும் கோபமும் கலந்தக்குரலில் கேட்க,
சட்டென திரும்பி மனைவியை உறுத்து விழித்த விஜயேந்திரன் “என்ன வானதி இதெல்லாம்?இதுவரை என் பேச்சுக்கு எதிர்த்து ஒரு வார்த்தை நீ பேசினதில்லை…இப்போ மட்டும் எதுக்கு பேசறே நீ?ஒழுங்கா வாயை மூடிட்டு நான் சொல்லறதை மட்டும் செய்…நீ எங்கியும் போகக்கூடாது” என அகங்காரத்துடன் ஆணையிட,வானதிக்கு சுருக்கென்றது.
அதுவும் அனைவரின் முன்னிலையிலும் அவர் அவ்வாறு பேசியது ஒரு மாதிரியாகிவிட்டது.
ஏனெனில், வீட்டின் ஒட்டுமொத்த குடும்ப நபர்களும் அங்கு தான் கூடியிருந்தார்கள்.
காஞ்சனா மாலாவே மகனின் பேச்சை கேட்டு வாயடைத்துப்போனார்.
தன் மகனிற்கு இவ்வாறெல்லாம் பேச தெரியுமா என்பது போல் இருந்தது,அவரது அதிர்ச்சி பார்வை.
அதுவரை அங்கு நடந்த அனைத்தையும் அமைதியாக கைகள் கட்டி வேடிக்கை பார்த்திருந்த ரத்தினவேல் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்று “அப்பா இதுவரை நீங்க பேசினது எல்லாத்தையும் நான் அமைதியா கேட்டிட்டு இருந்தேன்…அதுக்கு காரணம் உங்க மேலே நான் வைச்சிருந்த மரியாதை…ஆனால் அம்மாவை நீங்க இப்படி பேசறது ரொம்பவே தப்பு” என அதிரடியாக தந்தையின் தவறை சுட்டிக்காட்டினான்.
அந்த வீட்டில் சட்டென யாராலும் எழுந்து பேசமுடியாது.
காஞ்சனா மாலா மட்டுமே வீட்டின் இறுதி முடிவை எடுக்கும் வலிமை கொண்டவர்.
அவருக்கு அடுத்ததாக ரத்தினவேல் முதன்மையானவன் என்றாலும் தகப்பனிற்கு முன்னிலை கொடுத்து அவர் பேசுவதை அமைதியாக கேட்பான்.
ஆனால் இன்றோ தாயை அவர் பேசியதை கேட்டு அவன் மனம் பொறுக்காமல் எழுந்து விட்டான்.
அவன் முகம் சாதாரணமாக இருந்தாலும் அவனது பேச்சுகளில் இருந்த அழுத்தம் சினத்தை எடுத்துரைக்க,மொத்த குடும்பமும் பீதியுடன் எழுந்து நின்றுவிட்டது.
அவனோ தனக்கே உரிய கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்று “உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே காரணத்துக்காக அவங்க உங்க அடிமை கிடையாது…எது நல்லது எது கெட்டதுனு பகுத்தறிஞ்சு பேசக்கூடிய அளவு எங்க அம்மாவுக்கு பக்குவம் இருக்குனு நினைக்கிறேன்…இங்க தான் போகணும்…இங்க போகக்கூடாதுனு ஒருத்தரோட சுதந்திரத்திலே தலையிடறது அது அதிகாரம் இல்லை…அடக்குமுறை…எல்லாருக்கும் விருப்பு வெறுப்புன்னு இரண்டு பக்கமும் இருக்கு…அதில் தலையிட உங்களுக்கும் மட்டுமில்லை…எனக்கும் உரிமையில்லை” என சாட்டையால் அடித்தது போல் அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் கடுமையாக வந்து விழ,
விஜயேந்திரனிற்கு மகனின் பேச்சில் இருந்த நியாயம் புரிந்தாலும் எதுவும் பேசாமல் அவமானத்துடன் முகம் கறுத்து மௌனமாகியிருந்தார்.
அதனால் கலங்கிய முகத்துடன் நின்றிருந்த தாயை நோக்கிய ரத்தினவேல் “அம்மா யூ நோ வாட் இஸ் ரைட் வாட் இஸ் ராங்?யாருக்காகவும் உங்க சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதீங்க…சூஸ் வாட்’ஸ் ரைட் ஃபார் யூ” என அன்னையின் கலக்கம் பொறுக்காமல் அவனிற்கு உரிய பாணியில் அவரை தேற்றியிருந்தான்.
உடனே கைகள் பிசைய நின்றிருந்த மனைவியை கண்டுவிட்டு தன் சினத்தை அடக்கிய மணாளன் “அம்மா முகிழை கூட்டிட்டு அங்க தான் போறேன்…வர்றீங்கன்னா வாங்க…யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என தந்தையை ஒரு கணம் பார்த்துவிட்டு அன்னையிடம் உரைக்க,
அவரோ நிமிர்ந்து தனது கணவரை பதிலுக்காய் பார்க்க அவர் இப்போதும் கொதித்தப்படி நின்றிருந்தார்.
ஆனால் தனது மகன் பக்கப்பலமாய் இருப்பதினால் ஒரு பெருமூச்சுடன் “வா தமி” என மகளை அழைத்துக்கொண்டு அவனுடன் புறப்பட ஆயுத்தமானார்.
அவளும் ஒரு அடி தான் எடுத்து வைத்திருப்பாள்.
அச்சமயம் “தமி” என தந்தையின் குரல் அழுத்தமாக வெளிவரவும்,
சட்டென திரும்பி அவரை அவள் பார்க்க,அவரின் முகத்திலோ கண்டிப்புடன் கூடவே ஏதோ ஒரு உணர்வு தாண்டவமாடின.
அந்தவொரு உணர்வு அவளின் மனதை இறுக பிசைய,அவளின் மனம் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தன.
அவளிற்கு வீரை பார்க்க வேண்டும் போலவும் தோன்றின.
அதேசமயம் தற்போது தந்தையை மீறி அவள் சென்றால்,அவள் உடைந்து நொறுங்கிவிடுவார் என்பது புரிய,தன் மனதை கல்லாக்கிக்கொண்டு “இல்லைம்மா நீங்க போயிட்டு வாங்க…எனக்கொரு முக்கியமான வேலையிருக்கு” என சொல்லிவிட்டு விறுவிறுவென தனது அறைக்கு சென்றுவிட்டாள்.
உடனே விஜயேந்திரனின் முகத்தில் ஒரு கர்வம் கலந்த புன்னகை உருவாகிட,அவர் ரத்தினவேலை திரும்பி ஒரு பார்வை பார்த்தார்.
பெற்ற மகனிடமே தன்னுடைய சுயகௌரவத்திற்காக போட்டியிட்டார் அவர்.
ஆனால் ரத்தினவேல் அவ்வாறு கிடையாது.வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரின் விருப்பமும் அவனிற்கு முக்கியம்!
அதனால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டே அவன் முடிவுகள் இருக்கும்.
அதனால் கலங்கிய விழிகளுடன் படியேறி செல்லும் தங்கையை அவன் யோசனையாக பார்த்திருந்தான்.
வானதியோ அவரது முப்பது வருட திருமண வாழ்வில் முதன்முறையாக தனது கணவரை முகத்தை சுளித்து ஏறிட்டார்.
சமீப காலமாக தாம் நினைப்பது மட்டுமே நடக்கவேண்டும் என தன் முனைப்புடன் செயல்படும் விதம் அவருக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
இப்போது கூட காரணமே இல்லாமல் குதிப்பதோடு,பெற்ற மகனை வெற்றிக் கொள்ள நினைக்கும் அவரின் அகந்தையை கண்டு அவருக்குள் ஒரு அச்சமும் உருவாகின.
முகிழ்மதியோ இங்கு நடப்பதை ஒரு வித மிரட்சியுடன் பார்த்திருக்க “வாங்க” என அவளின் கரத்தை ஆறுதலாக பற்றி அழைத்த ஆடவன் தாயையும் மறக்காமல் அங்கிருந்து அழைத்து சென்றிருந்தான்.
செல்லும் முன்பு விஜயேந்திரனை அவன் பார்த்த பார்வையில் அவரின் அடிவயிறு கலங்கின.
ஆயினும் தன் மகன் தன்னை என்ன செய்துவிடப்போகிறான் என்ற மிதப்பில் அதனை புறம் தள்ளிவிட்டார்.
அவனோ அலுப்பாக தலையசைத்தவாறே ஜித்தேந்திரனிடம் கண்ணால் தங்கையை பார்க்கும் படி கட்டளையிட்டுவிட்டு தாய் மற்றும் தாரத்தை அழைத்து சென்றுவிட்டான்.
அதனால் தந்தையின் மீது வெறுப்பாய் பார்வையை செலுத்திவிட்டு தங்கையை காண ஜித்தேந்திரன் படியேறி சென்றதும் காஞ்சனா மாலாவோ “விஜய் நீ வர வர செய்யறது எதுவும் சரியில்லைப்பா…இப்படியே போனால் உன்னை பெத்த பிள்ளைங்களே வெறுக்கிற நிலை வந்திடும்…பார்த்து நடந்துக்கோ” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஆனால் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை.
தன் இல்லாள் தன்னை மதிக்காமல் நடந்துக்கொண்டாலும் மகள் தன் சொல்லுக்கு அடிப்பணிந்து நடந்ததை பெருமிதமாக எண்ணி கர்வம் கொண்டார்.
ஆனால் பிள்ளைகளுக்கு அவர் கொடுக்கும் அழுத்தம் ஒரு நாள் எரிமலையாய் வெடித்து சிதறும் என்று அவர் அக்கணம் அறியவில்லை.
இப்படியே நாட்கள் விரைந்தோடிட,
சந்திரமதியும் விஜயலட்சுமியும் கூட வீரின் வீட்டிற்கு நிரந்திரமாக வந்துவிட்டிருந்தார்கள்.
முதலில் விஜயலட்சுமி அங்கு வருவதற்கு தயங்க,வீரே நேரடியாக அவரை சென்று அழைத்து வந்திருந்தான்.
அவரை போன்ற மனிதர்களை சகமனதியாக மதிப்பதே அபூர்வம்.
ஆனால் வீரோ அவருக்கு மிகவும் மதிப்பளித்து நேரில் வந்து இறைந்து அழைத்து வந்தது அவருக்குள் அவனின் மீது ஒரு மரியாதையை கொடுத்தன.
தேவகியோ சந்திரமதியை அன்று தான் முதல் முறையாய் பார்த்தார்.
தன் மகள் நட்சத்திராவை போலவே இருந்த மற்றொரு பெண்ணை கண்டு அவர் முதலில் அதிர்ச்சியுற்றாள்.
பின்பு ‘தான் ஆடா விட்டாலும் சதை ஆடும்’ என்பது போல் அவருக்கு ‘என்ன தோன்றியதோ?’ அவளையும் தன் மகளாகவே பாவித்து அவளையும் முகிழ்மதியை போலவே அரவணைத்துக்கொண்டார்.
சந்திரமதியை கண்டு அவளை அவர் நிராகரிப்பரோ என அனைவருக்கும் சிறிது அச்சம் ஒட்டியிருந்தது.
ஆனால் இப்போது அவளை அவர் எவ்வித ஆர்ப்பாட்டமின்றி இயல்பாக ஏற்றுக்கொள்ள அனைத்தும் சுபமாக முடிந்திருந்தது.
இத்தனை வருடங்களாய் தாயின் பாசமின்றி தவித்த சகோதரிகளுக்கு அன்னையின் பாசம் திரும்ப கிடைத்திருக்க,அவர்களின் வாழ்வு வண்ணமயமாய் மாறிப்போயின.
சந்திரமதி நட்சத்திர விடுதியில் செய்துக் கொண்டிருக்கும் வேலையை விடவில்லை.
வீரோ “அண்ணா நான் இருக்கும் போது நீ எதுக்கும்மா வேலைக்கு போய் கஷ்டப்படறே?நான் உன்னை காலேஜ் சேர்த்துவிடறேன்” என்றான் ஒரு வித ஆற்றாமையுடன்
அவளோ மறுப்பாக தலையசைத்து “இல்லைண்ணா…இந்த செமஸ்டர் இனி படிக்க முடியாது…இனி காலேஜ் போவதா இருந்தாலும் ஜூலை தான்…அதுவரைக்கும் வீட்டுலே சும்மா இருக்க முடியாது…நான் வேலைக்கு போயிக்கிறேன்…பிளீஸ் அண்ணா” என கெஞ்சலாய் விழிகள் சுருக்கி கேட்க,
“நீ அப்படியே வேலைக்கு போறதா இருந்தாலும் நம்ப கம்பெனியிலே ஏதாவது வேலைக்கு போகலாமேம்மா…இதுக்கு அங்க போய் ரூம் சர்வீஸ் வேலை எல்லாம் செய்யணும்” என்று சொன்னவனிற்கு மனம் தாளவே இல்லை.
அவள் அங்கு அறை சேவை செய்யும் ஊழிய பெண்ணாக பணி செய்கிறாள் என்று தெரிந்ததற்கே இவன் இவ்வாறு வருந்திகிறான்.
அங்கு அவள் மதுவை பரிமாறும் வேலை செய்தாள் என்று தெரிந்தால் தமையன் தாங்கமாட்டான் என பெருமூச்சுடன் எண்ணிய மங்கை “அண்ணா நான் படிச்சது ஹோட்டல் மேனேஜ்மென்ட்…அதுக்கும் உங்க கம்பெனிக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?அதுமட்டுமில்லாமல் எப்படியும் படிச்சு முடிச்சு ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலைக்கு தானே போகணும்…இப்போவே அதுக்கான ட்ரைனிங் எடுத்துக்கறேன்னு நீங்க நினைச்சுக்கோங்க” என்றாள் இலகுவான குரலில்.
ஆனால் வீரின் மனம் தான் சமாதானமடையவில்லை.
“இல்லைம்மா…உன்னாலே அந்த வேலையெல்லாம் செய்ய முடியாது…ரொம்ப கஷ்டமா இருக்கும்…” என அவன் சொல்லும் போதே வேகமாக இடைமறித்தாள் சந்திரமதி.
“அண்ணா வாழ்க்கையிலே இதை விட பெரிய பெரிய கஷ்டமெல்லாம் அனுபவிச்சாச்சு…இதுக்கு மேலையும் சொகுசா மட்டுமே நான் வாழ விரும்பலைண்ணா…அடி மட்டத்திலிருந்து மேலே வரணும்னு நான் நினைக்கிறேன்...முன்னாடி தான் யாருமில்லை…இப்போ தான் எனக்காக இவ்வளவு பேரு இருக்கீங்களே…சோ உங்க தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணுங்க…பிளீஸ் அண்ணா” என உறுதியான குரலில் ஆரம்பித்த பெண் இறுதியாக தமையனின் கரம் பற்றி விழி சுருக்கி கெஞ்ச,
சகோதரியின் கொஞ்சலான கெஞ்சலுக்கு பிறகு அவனால் மறுக்க முடியவில்லை.
அதிலும்,அவள் தனது முடிவில் தெளிவாக இருக்கும் போது அவனிற்கும் மறுக்க தோன்றவில்லை.
அதனால் மெல்லியதாக முறுவலித்து “சரி உனக்காக இந்த ஒரு முறை விட்டுக்கொடுக்கிறேன்மா…பட் நீ சொன்ன மாதிரி ஒன்றைரை மாசம் தான்…அதுக்கு மேலே நீ விட படிப்பை தொடரணும்” என செல்ல கண்டிப்புடன் கூற,அவளின் முகம் மலர்ந்தது.
ஆனால் அடுத்ததாக அவனிட்ட விதிமுறைகளை கேட்டவளிற்கு ‘முடியலைடா அண்ணா’ என போலியாக சலிக்க தான் முடிந்தது.
கூடவே,தமையனின் அன்பில் எப்போதும் போல் உள்ளம் நெகிழ்ந்தது.
ஏனெனில் ஆடவன் “மதிம்மா உன் இஷ்டப்படி வேலைக்கு போ…பட் வேலையிலே எந்த கஷ்டம் வந்தாலும் முதல்ல என்கிட்ட சொல்லணும்…உனக்குள்ளே எதையும் பூட்டி வைக்கக்கூடாது…அதுமட்டுமல்லாமல் பிடிக்கலைனா வேலையை விட்டுட்டு வந்திட்டே இருக்கணும்…யாராவது பசங்க உன்னை தொந்தரவு பண்ணால் சப்புன்னு நாலு அறை கொடுத்திட்டு வந்திடு…எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்…அப்புறம் வேலைக்கு போகும் போதும் சரி வரும் போதும் சரி…நான் உன்கூட வருவேன்…லேட்டாச்சன்னா உடனே எனக்கு ஃபோன் பண்ணிடனும்” என விதிமுறைகளை அடுக்கிக்கொண்டே போக,அவளிற்கு அனைத்தும் புதிதாக இருந்தன.
அவளிற்கு அவனது இந்த உரிமையுணர்வு பிடித்திருந்தாலும் வெளியே “அண்ணா போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு…இதுவே தாங்க முடியலை” என சலிக்க,
விஜயலட்சுமியே அவர்களின் உரையாடலை கேட்டு சிரித்துவிட்டார்.
அவரின் சிரிப்பு சத்தம் கேட்டு அவரின் புறம் வீர் திரும்ப “தம்பி உங்க தங்கச்சிய பத்தி உங்களுக்கு தான் சரியா தெரியலை…சும்மாவே பாப்பா எல்லாரையும் வாங்கு வாங்குனு தான் வாங்கும்…இதிலே நீங்க வேற இப்போ ஏத்திவிடறீங்க?எனக்கு தெரிஞ்சு வீட்டுக்கு நாலு போலீஸ் ஜீப் வந்து நிக்கப்போகுது பாருங்க” என சத்தமாக சிரித்தப்படி கூற,
அவர் கூறியதை கேட்டு கடுப்பாகிய சந்திரமதியோ “விஜிம்மா என்னை பார்த்தால் சண்டைக்கோழி மாதிரி இருக்கா?” என இடுப்பில் கைவைத்து முறைத்தவளிற்கு ஏனோ காரணமின்றி ‘மிஸ் சண்டைக்கோழி’ என அழைத்த ஜித்துவின் ஞாபகம் வந்தது.
ஆனால் அடுத்த கணமே அவன் நினைவை தலையை உலுக்கி விரட்டிவிட்டு தமையனிடம் திரும்ப,அவனுமே “விஜிம்மா நீங்க சொல்லறது சரி தான்…சரி பரவாயில்லை…தங்கச்சியா போயிட்டாளே அதனாலே எத்தனை பிரச்சனை வந்தாலும் சமாளிப்போம்” என இதழ்கடித்து சிரித்தப்படி கூற,
“அண்ணா யூ டூ…” என அவனின் தோளில் செல்லமாக அடிக்க,
முகத்தை உர்ரென்று தூக்கி வைத்த தங்கையை பார்த்தவன் “சும்மா சும்மாடா செல்லம்…நீ இப்படியே தைரியசாலியா இரு…எனக்கு உன்கிட்ட பிடிச்சதே அது தான்” என கையை விரித்து அவளை அணைத்துக்கொள்ள,
உடனே அவளின் முகம் மலர்ந்திட “தேங்க்ஸ் அண்ணா” என அவனை அவளும் அணைத்துக்கொண்டாள்.
அவர்கள் இருவரின் பிணைப்பு கண்டு கையை விரித்து தூரத்திலிருந்தப்படியே திருஷ்டி கழித்து நெற்றியில் வைத்து சொடக்கிட்ட விஜயலட்சுமியின் கரங்களில் பெரும் சப்தம் எழுந்தது.
இவர்களோடு முகிழ்மதியும் இணைந்து விட்டால் வீடே கலகலவென மாறிவிடும்.
முகிழ்மதி அமைதியான பெண் என்றாலும் மூவரும் ஒன்றாக இருக்கும் போது உலகத்தையே மறக்கும் அளவு தாயுடன் அளவளாவி கொண்டிருப்பார்கள்.
சிறு வயதில் அவர்கள் இழந்த தருணங்களுக்கெல்லாம் சேர்த்து புதிதாய் பல சந்தோஷ நினைவுகளை உருவாக்க ஆரம்பித்தன.
வீரிடம் பொய்யாக தான் சந்திரமதி நட்சத்திர விடுதியில் சிற்றுழியராக வேலை செய்வதாக தெரிவித்தாள்.
ஆனால் அவளே எதிர்பாராத நிகழ்வாக அவளின் பொய்யான வாக்கு பலித்திருந்தது.
ஆதலால்,அவளிற்கு நட்சத்திர விடுதியில் மற்ற ஊழியர்களை போல் பகல் நேர வேலை கிடைத்துவிட,அவளும் எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் தமையனுடன் வேலைக்கு சென்று வந்துக்கொண்டிருந்தாள்.
ஜித்தேந்திரன் தான் முன்பு போல் அவளை பார்க்க முடியாமல் திணறிப்போனான்.
ஏனெனில், சந்திரமதிக்கு முன்பை விட வேலை அதிகம் இருப்பதால் அவள் தளர்வாக அமர்ந்து பார்ப்பதே அதிசயமாக இருந்தது.
அவளிடம் வேலை முடிந்து உரையாடலாம் என அவன் நினைத்தால் வீர் அவளை அழைத்து செல்ல வந்துவிடுவான்.
வீருக்கும் அவளிற்கும் என்ன தொடர்பு என அவனிற்குள் குழப்பமாக இருந்தாலும்,அவன் அவர்களது உறவை தவறாக இணைக்க முற்படவில்லை.
ஏனெனில்,முகிழ்மதியை அவன் தங்கையாக எண்ணுகிறான் என்றால்,சந்திரமதியையும் சகோதரியாகவே எண்ணுவான் என்பது அவனிற்கு சர்வ நிச்சயம்!
ஆனால் அவனிற்குள் பெரும் குழப்பம்!
தன்னவளிடம் பேச முயன்று தோற்றவனின் முகமும் மனமும் வாடிப் போனது.
இதற்கிடையில் ஒரு நாள் ஏதேச்சையாக தந்தையின் அறையை அவன் கடந்து சொல்லும் போது தந்தையின் உரையாடல் ஒன்று அவன் செவியில் விழுந்தது.
ரோகிணியின் தந்தையிடம் தான் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசியதை கேட்டு அவரின் அறைக்கு முன்பு அப்படியே நின்றுவிட்ட ஜித்தேந்திரனின் முகம் இறுகிப்போனது.
“ஹான் சொல்லுங்க சம்மந்தி…கல்யாணத்தை நீங்க சொன்ன மாதிரி எலெக்ஷன் முடிஞ்சு ஒரு வாரத்திலே வைச்சுக்கலாம்”
“வீட்டுலே எல்லாம் கலந்துப்பேசணும்னு அவசியமில்லை…என் முடிவு தான் இங்க…ஹான் ஆமா ஆமா…என் பையன் நான் கிழிச்சக்கோட்டை தாண்ட மாட்டான்…மண்டபத்துக்கு அட்வான்ஸா?கொடுத்திடுங்க..கொடுத்திங்க” என உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தவரை எட்டி பார்த்தான் ஜித்து.
அவரின் முகத்தில் இருந்த விகசனத்தை கண்டவனிற்கு கடுப்பாக வந்தது.
அவனே அந்த அரக்கியிடமிருந்து எவ்வாறு தப்பி செல்வது என சிந்தித்துக் கொண்டிருக்க,இவரென்றால் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் இவருடைய விருப்பத்திற்கு திருமண தேதியை குறிப்பதை பார்த்து அவன் வெகுண்டுப்போனான்.
ஆனால் தமையனை போல் தந்தையிடம் எதிர்த்து பேசவும் அவனிற்கு மனம் வரவில்லை.
அண்ணனை போலவே அவரை எதிர்க்க அவனிற்கு துணிச்சல் இருந்தாலும்,எதிரில் உள்ளவரை சட்டென காயப்படுத்திட அவன் விரும்பமாட்டான்.
சிறிது மென்மையான உள்ளம் கொண்டவன்.ஆதலால் ‘எப்படி திருமணத்தை நிறுத்துவது?’ என நெற்றியைப் பிடித்தப்படி அங்கிருந்து நகர்ந்தான்.
ஒரு மனிதனிற்குள் சஞ்சலங்கள் தோன்றினால்,அதிலிருந்து தப்பிக்க அவன் தேடுவது சாய்ந்துக்கொள்ள ஒரு தோள்!
தற்சமயம் அவன் பக்கமாக யாவரும் இல்லை என்பதால் அவனது உள்ளம் தானாக நாடியது என்னவோ தன்னவளை தேடி தான்!
அவளை சந்திக்க வழக்கம் போல் நட்சத்திர விடுதிக்கு சென்றான்.
ஆனால் அவன் சந்தித்தது என்னவோ சந்திரமதியை அல்ல ரோகிணியை…