முகிழ்மதி 93,94

முகிழ்மதி 93:

 


 

 

விஜயலட்சுமியிடமிருந்து அனைத்து உண்மைகளையும் அவன் அவ்வளவு எளிதில் வாங்க முடியவில்லை.

அவரை அச்சுறுத்தி பல காயங்களையும் வலிகளையும் கொடுத்ததற்கு பிறகே ரத்தினவேலால் அனைத்தையும் பெற முடிந்தது.

அப்போதும் மகனை பற்றி அவர் மூச்சே விடவில்லை.

ஆயிரம் இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகனாயிற்றே?

உடனே அவனை காட்டிக்கொடுப்பாரா என்ன?

ஆனால் அவரது உயிருக்கு முன்பு வேறு யாரது உயிராக இருந்தாலும் அவருக்கு துச்சம் தான் போலும்!

அவரின் உள்ளங்கையில் கத்தியால் ஒரே ஒரு கீறல் தான் அவனது கட்டளையின் பெயரில் போடப்பட்டது…

அவ்வளவு தான்?

தன் இன்னுயிரை காப்பதற்காக மகன் செய்த அனைத்து இழிவான செயல்களையும் ஒன்று விடாமல் மடமடவென ஒப்பித்துவிட்டார்.

அவர் இத்தனை வருடங்களாய் செய்த ஒட்டுமொத்த குற்றங்களையும் அவனிடம் வெளிப்படுத்திருக்க ரத்தினவேல் சில கணங்கள் எதுவுமே பேசவில்லை.

அவரையே ஒரு சில வினாடிகள் அசையாமல் பார்த்திருந்த ரத்தினவேலின் மனது மட்டும் உச்சக்கட்ட சீற்றத்துடன் கொதித்துக்கொண்டிருந்தன‌.

‘ச்சீய் நிஜமாவே இவையெல்லாம் மனிதப்பிறவி தானா?’ என்று தான் அவனிற்கு முதலில் தோன்றியது.

தன்னை விட வயதில் மூத்தவர் என்ற எண்ணமெல்லாம் தொலைத்தூரம் போயிருந்தது.

அவனை பொறுத்தவரை மதிப்பும் மரியாதையும் அவரவர் செயல்களின் மூலம் கிடைக்க வேண்டும் என்று கருதுபவன் அவன்.

அதனால் அவருக்கு இது போதும் என்று எண்ணிவிட்டான்.

தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக குலைத்தத்தோடு எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாமல் அவர் வாழ்ந்திருப்பதை நினைக்கும் போதே அவனுள் அப்படியொரு வெறுப்பு!

பெற்ற மகனை தன் உயிருக்காக காட்டிக்கொடுக்கும் இவரையெல்லாம் புழு வகையில் சேர்ப்பது கூட பாவம் என்று தோன்றின.

தன்னவளை சாதாரணமாக வதைத்ததற்கே அவரை கடத்தி வந்து வைத்திருப்பவன் அவன்.

அதற்கே அவரை உயிரோடு குழித்தோண்டி புதைக்கும் அளவு ஆவேசம் கனன்றன.

இப்போது அவன் உயர்வாய் மதிக்கும் பெண்மணியின் வாழ்க்கையை அழித்ததோடு,அவனுடைய ஸ்டாருக்கு இப்படியொரு கொடுமைகளை கொடுத்திருக்கும் விஜயலட்சுமியை பார்க்க பார்க்க அவனிற்குள் இருக்கும் வஞ்சம் அதிகரித்தன.

அவனது கையில் கத்தி மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் அவரை உயிருடன் நூறு துண்டாக கூறுப்போட்டு இருப்பான்.

அப்படியொரு அருவருப்பு,வெறுப்பு,ஒவ்வாமை,கோபம்,ஆத்திரம்,ஆக்ரோஷம் என அனைத்து எதிர்மறை உணர்வுகளும் அவனை ஆக்கிரமித்தன.

அவரை வேரோடு கருவறுக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றிய மறுகணமே அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து ஆவேசமாக எழுந்த ரத்தினவேல் நாற்காலியை எட்டி உதைத்த உதையில் அது பத்து அடி தள்ளி சென்று அங்கிருந்த சுவற்றில் மோதி சில்லு சில்லாக உடைந்து சிதறியது.

பல வருடங்களாக அவனை அறிந்த அடியாட்கள் கூட அவனது இந்த ஆக்ரோஷத்தை கண்டு மிரண்டு விட்டார்கள் எனலாம்.

ஒரு சில வினாடிகளில் வெடித்து சிதறப்போகும் எரிமலையின் சீற்றத்துடன் இரத்தம் கொதிக்க கழுத்து நரம்புகள் புடைக்க நின்றிருந்தவனின் தோரணை வயிற்றில் கிலி பரவ செய்தது.

ஆஜாபாகுவான தோற்றம் கொண்ட ஆண்களின் கதியே இப்படி என்றால்,அத்தனை தவறுகளையும் அசாதாரணமாக செய்துவிட்டு குற்றக்குறுகுறுப்பு சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவருக்குள் எப்படியொரு பயம் உருவாகும்.

மீசையை முறுக்கி கைக்காப்பை பின்னுக்கு தள்ளி கண்கள் இரத்தமென சிவக்க ஐய்யனார் போல் அவன் நின்ற தோரணையே விஜயலட்சுமியின் உடலிலுள்ள ஆவியை தனியே பிரித்தெடுத்திருந்தது.

அவரின் சர்வ அங்கமும் நடுங்க ‘இன்னைக்கு நான் அவ்வளவு தான்’ என அவர் நினைத்ததற்கு ஏற்ற விதமாக தன் ஆட்களின் கைப்பிடியில் தடுமாற்றத்துடன் நின்றிருந்த அவரின் கன்னத்தில் ஓங்கி விட்டான் ஒரு அறை!

அவனது அந்த ஒரு அறைக்கே கனத்த சரீரம் கொண்ட பெண்மணி மயங்கி சுருண்டு கீழே விழுந்துவிட்டார்.

செவிப்பறை கிழியும் அளவு அவன் கொடுத்த அடியில் அந்த மிகப்பெரிய அறையே எதிரொலித்தது.

அவருக்கு கொடுத்த அடியில் அவனது கரம் கூட தீயாய் எரிந்தன…

அடித்த அவனிற்கே அவன் கரத்தில் பெரும் வலி என்றால்,அடிவாங்கிய அவரின் நிலை சொல்லவே தேவையில்லை.

அவன் வாழ்நாளில் தன் கரத்தால் பலரை கொன்றுயிருக்கிறான்.

அப்படி இருந்தும் அவன் தன் வாழ்நாளில் எந்தவொரு பெண்ணையும் கைநீட்டி அடித்ததில்லை..

பகையாளியாக இருந்தால் கூட அவர்களை தன் பழிவாங்குதல் வழியாக தீர்த்துக்கொள்வானே தவிர,அவனாக எந்தவொரு பெண்ணையும் தன் விரலால் கூட தீண்டியதில்லை.

அப்படியொரு கண்ணியவான் அவன்.

அவனே பெண் என்றும் பாராமல் ஒருவரை அடித்திருக்கிறான் என்றால்,அவனுள் எப்படியான ஒரு சீற்றம் மிகைந்து இருக்கும்.

மூர்ச்சையாகி சுருண்டு விழுந்திருந்த விஜயலட்சுமியின் மீது அவனிற்கு கொஞ்சமும் இரக்கம் வரவில்லை…மாறாக,தன் அடியாளின் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கி அவரை கொல்ல முடிவெடுத்துவிட்டான்‌.

அவன் கையிலிருந்த துப்பாக்கி அவரை குறிப்பார்த்த கணம் சட்டென நிதானித்தான்.

ஆத்திர மிகுதியில் அவரை சுட்டுவிட்டால் அவரின் உயிர் ஒரே கணத்தில் நிம்மதியாக உலகை விட்டு பறந்துவிடும்.

‘நோ அப்படியொரு சாவு இந்த பொம்பளைக்கு வரவே கூடாது’ என மறுப்பாக தலையசைத்த ரத்தினவேல் தன் கையிலிருந்த துப்பாக்கியை பணியாளின் கரத்தில் ஒப்படைத்தான்.

அவனது புருவங்கள் இடுங்கிட சிந்தைக்குள் பல வகையான திட்டங்கள் மடமடவென ஓடின.

தன்னவளையும் அவளின் குடும்பத்தையும் வேரோடு சிதைத்த ஒவ்வொருவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என தீட்சண்யத்துடன் முடிவெடுத்துவிட்டான் அந்த அசகாயசூரன்.

ஆனால் அவன் கொடுக்கும் அந்த தண்டனை அத்துணை எளிதில் அவர்களின் உயிரை பறித்துவிடக்கூடாது.

அவனவளை எப்படியெல்லாம் அவர்கள் வதைத்தார்களோ?

அதேப்போல் அவர்களை சிறிது சிறிதாக சித்திரவதை செய்து கொல்ல முடிவெடுத்துவிட்டான்.

மரணத்தை விட மிகவும் கொடூரமான ஒரு தண்டனையை கொடுக்க உத்தேசித்த ரத்தினவேல் “முதல்ல அந்த பொம்பளைய எழுப்பு” என தன் பணியாளிடம் கர்ஜனையுடன் கூறியவன் “இவளோட பையன் எங்கியிருக்கான்?அந்த பொறுக்கி நாய இழுத்திட்டு வா” என மற்றவனிடம் அதிகாரமாய் கட்டளையிட்டவனின் விரல்கள் மீசையை முறுக்கிவிட்டன.

அவன் அந்த அறைக்குள்ளே தனது வேட்டியின் நுனியை ஒற்றை கையால் தூக்கிப் பிடித்தப்படி அடிப்பட்ட வேங்கையின் சீற்றத்துடன் அங்குமிங்கும் நடந்துக்கொண்டிருக்க,அடுத்த ஐந்து நிமிடத்தில் ரஞ்சன் அந்த அறைக்குள் வரவழைக்கப்பட்டான்.

அவனை பார்த்ததுமே அவனின் நிதானம் மொத்தமும் பறந்துவிட,அவனோ “யாரு நீ?” என எகத்தாளமாக கேட்ட மறு நிமிடமே அவனிற்காக புதிதாக கொண்டு வரப்பட்ட நாற்காலியை எடுத்து அவனை ஒரே அடி தான்!

“அம்மாஆஆ…” என அவ்வறையே கிடுகிடுக்க அலறிய ரஞ்சனின் குரல் அந்த கானகமெங்கும் எதிரொலித்தது.

அதேநேரம் தான் விஜயைட்சுமியும் மயக்கத்திலிருந்து கண் விழித்திருக்க அவனது இந்த ருத்ர. தாண்டவம் கண்டு பதறிப்போனவர் “ஐய்யோ என் பையன்” என எழுந்துக்கொள்ள முடியாமல் தவழ்ந்து வர பார்க்க,

அவரை இகழ்ச்சியாக இதழை வளைத்து ஒரு பார்வை பார்த்த ரத்தினவேல் கையிலிருந்த நாற்காலி கொண்டு “எவ்வளவு தைரியம் இருந்தால் என் ஸ்டார் மேலையே கை வைச்சிருப்பே…அதுவும் சின்னப்பொண்ணுனு கூட பார்க்காமல்…” என உச்சஸ்தாயில் உறுமிய ஆடவன் தன் வெறி தீரும் வகையில் அவனை அந்த இரும்பு நாற்காலியால் அடி வெளுத்துவிட்டான்.

அவனை அவன் அடித்தது இரும்பு நாற்காலி என்பதால் அவனது உடலிலுள்ள அனைத்து எலும்புகளும் உடைந்து நொறுங்கியிருக்க அவனின் உடலிலுள்ள உதிரமெல்லாம் கசிந்தன.

அவன் வலியில் அலறிக்கொண்டே இருக்க,அவனின் அலறல் சத்தம் கேட்டு அவனிற்கு சிறிதும் கருணை தோன்றவில்லை‌.

இரண்டே நிமிடத்தில் அவனை குற்றுயிராக்கிவிட்டு விஜயலட்சுமியின் புறம் அவன் திரும்ப,அவரோ “ஐய்யோ…ஐய்யோ என் பையன்…” என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதவரை பார்த்த ரத்தினவேலிற்கு ஆத்திரமாக வந்தது.

அவனிற்கு மட்டுமல்ல…அங்கிருந்த அனைவருக்கும் அதே எண்ணம் தான்!

மகன் என்றும் பாராமல் தன் உயிரை காப்பாற்ற அவனை பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டு இப்போது அவர் துடிப்பதை பார்த்து முகத்தை சுழித்தார்கள்.

ரத்தினவேலிற்கு ஆத்திரம் தலைக்கேறிட அவரை மீண்டும் ஒரு அறைவிட அவனின் கரம் இரண்டும் பரபரத்தது.

அவன் இன்னுமொரு அறை அவருக்கு கொடுத்தால் அவரது உயிர் இவ்விடத்திலே அகன்றுவிடும் என்று அவன் அறிவான்.

அது நடக்கக்கூடாது என்று மறுப்பாக தலையசைத்த ரத்தினவேலிற்கு அப்போதும் வெறி தீரவில்லை.

அதனால் “ஆ…அம்மா..” என வதைகளின் பிணி பொறுக்க முடியாமல் தீனமாக முனகிக்கொண்டிருந்தவனை தன்னுடைய செருப்பு அணிந்த காலால் எட்டி ஒரு உதை உதைத்தான்.

அதிலும்,தன்னவளை வதைக்க தூண்டிய அவனின் உயிர்நாடியிலே மாறி மாறி உதைத்தான்‌.

“இது இருக்கிற திமிரிலே தான்டா நீ இந்த ஆட்டம் போட்டே…” என சொல்லி சொல்லியே அவனை உயிருடன் சிதைத்துவிட்டான்.

அவனின் உடலில் ஒரே ஒரு சதவீதம் மட்டும் உயிர் மிஞ்சியிருக்க “ஜான்” என விரல் சொடக்கிட்டு பணியாளனை ரத்தினவேல் அழைக்க,

“பாஸ்” என அவன் முன்னே வந்து கைகட்டி நின்றவனை அழுத்தமாக நோக்கி “இவன் அவ்வளவு ஈஸியா சாகக்கூடாது…சீக்கிரம் இவனுக்கு ட்ரீட்மெண்ட் பாருங்க…இவன் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்கணும்” என ஆணைப்பிறப்பித்தான்.

“சரிங்க ஐயா” என அவன் சொல்ல,

உடனே விஜயலட்சுமியின் மீது அவனின் விழிகள் வன்மத்துடன் படிந்து மீள “அன்ட் தென் இவங்க இரண்டு பேரையும் ஒரே ரூமிலே போட்டு அடைச்சு வைங்க…இந்த பொம்பளைக்கு மட்டும் ஒரு வேளை சாப்பாடு கொடு…தண்ணீய கூட அந்த சாப்பிடற ஒரு வேளை மட்டும் தான் கொடுக்கணும்…அதுவும் அவன் கண் முன்னாடி தரணும்…அவனுக்கு ஒரு பருக்கை சோறு கூட கொடுக்காதே…அதே மாதிரி அவனுக்கு ஹை டோசேஜ் டிரக் கொடு…அதுவும் பாலுணர்ச்சிய தூண்டற டிரக்ஸ் வேணும்…அவனுக்கு அம்மாவுக்கும் மத்த பொம்பளைங்களுக்கும் வித்தியாசமே தெரியாத அளவு வீரியமா இருக்கணும்…அவனை தெளிய வைச்சு தெளிய வைச்சு கொடுங்க…அவன் செய்யற எல்லாமே அவனுக்கு தெரியணும்…நைட்டெல்லாம் இந்த பொம்பளை ஒரு பொட்டு கூட தூங்கக் கூடாது…கண் அசந்தால் ஸ்பீக்கரிலே சத்தமா பாட்டு போட்டு எழுப்பி விடுங்க…எந்த அளவுனா போதையிலே இருக்கிற இவன் இரிட்டேட்டாகற அளவு இருக்கணும்…ஒரு கத்தியையும் சேர்த்து உள்ள வைச்சு கதவை சாத்திடுங்க…உள்ள எந்த சத்தம் கேட்டாலும் யாரும் எதையும் கண்டுக்காதீங்க…என்னைக்கு இரண்டு பேரிலே ஒருத்தரோட சத்தம் அடங்குதோ அன்னைக்கு எனக்கு சொல்லுங்க” என கண்கள் இரண்டும் வஞ்சத்தில் மின்ன,அவன் கூறிய குரூர தண்டனையை கேட்டு அங்கிருந்த மற்றவர்களுக்கே இரத்தம் உறைந்துப்போனது‌.

விஜயலட்சுமியை பற்றி கூறவே வேண்டாம்.

ரஞ்சனுடன் அவரால் ஒரு நாள் கூட வாழ முடியாது.மது போதையிலே தாய் என்றும் பாராமல் அவரை நெருங்கும் காமூகன் அவன்.

அப்படியானவனை வெறியேற்றும் விதமாக போதை மருந்து கொடுத்து அவரோடு தனிமையில் அடைத்து வைத்தால்,அவன் நிச்சயமாக தன் உயிரை பறித்தெடுத்துவிடுவான் என்ற அறிந்தவருக்கு இதயத்துடிப்பே ஒரு கணம் நின்றுவிட்டது‌.

அதனால் உச்சக்கட்ட பீதியுடன் “ஐய்யோ தம்பி…எல்லாத்தையும் சொன்னால் என்னை உயிரோடு விடறேன்னு சொன்னீங்களே?என்னை இவனோட மட்டும் போடாதீங்க…நான் ஜெயிலுக்கு கூட போறேன்…ஆனால் இவனோட மட்டும் விடாதீங்க…” என கண்ணீர் விட்டு கெஞ்சியவரை இளக்காரமாக நோக்கிய ஆடவன் “உன்னை உயிரோட விடுவேன்னு சொன்னேன்…சொன்ன மாதிரியே விட்டுட்டேன்…இதுக்கு மேலே உன் உயிரை காப்பாத்திக்கிறது உன் சாமர்த்தியம்…இல்லை உன் பையனாலே சிரழிஞ்சுப்போய் உயிரை விட்டாலும் நல்லது தான்…அதையும் மீறி நீ உயிரோட இருந்தால் வேணா நான் உன்னை வெளிய விடறதை பத்தி யோசிக்கிறேன்…சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என இரக்கமற்ற குரலில் உரைத்தவன்,தன் பணியாளனிடமிருந்து கத்தியை வாங்கி அவரது காலடியில் வீசியெறிந்தான்.

அவன் வீசிய கத்தியை அவர் பீதியுடன் உறைந்துப்பார்த்திருக்க,அதனை வன்மத்துடன் நோக்கிய ரத்தினவேல் வெளியே வந்தான்.

வெளியே வந்த ஆடவன் அவனது பணியாளனிடம் “ஜான் அவனை ட்ரீட் பண்ணி இரண்டு நாள் கழிச்சு அவளோட சேர்த்து அடைச்சிடு…இரண்டு பேரும் அடிச்சுக்கிட்டு யாராவது ஒருத்தர் சாகட்டும்…உள்ளே சத்தம் அடங்கினால் எனக்கு சொல்லு…மிச்சம் இருக்கிற அந்த ஒருத்தருக்கான தண்டனைய நான் முடிவுப்பண்ணறேன்” என கோபத்தில் இறுகிய முகத்துடன் கூறிய முதலாளியிடம் எச்சிலை கூட்டி விழுங்கியப்படி “சரிங்க பாஸ்” என தலையாட்டினான்.

ரத்தினவேலோ அங்கிருந்து செல்லும் போது “நான் சொன்னதிலே ஒரு பிளான் கூட சொதப்பக்கூடாது…மைண்ட் இட்” என அவனை எச்சரித்துவிட்டே அங்கிருந்து வந்திருந்தான்.

அவன் அங்கிருந்து சென்றதும் விஜயலட்சுமிக்கு ஒரு விடயம் நன்கு புரிந்துவிட்டது…

அது அவரின் இறப்பு தான்!

ஒன்று,இத்தனை வருடங்களாய் யாருக்காக இதையெல்லாம் செய்தாரோ அவனது கையால் அசிங்கப்பட்டு அவர் கொல்லப்பட வேண்டும் அல்லது பெற்றெடுத்த அவரின் கையால் அவன் சாக வேண்டும்?

இரண்டுமில்லாமல் அவராகவும் தன் உயிரை பறித்துக்கொள்ளலாம்.

விஜயலட்சுமி அதனை செய்ய மாட்டார் என்பது அவனிற்கு சர்வ நிச்சயம்!

பெற்றெடுத்த மகனை கொன்றாவது தான் உயிர் வாழ ஆசைப்படுவாரே ஒழிய,அவனிற்கு விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அறிந்தே இறுதியாக அவரிடம் அப்படி சொல்லிவிட்டு வந்தான்.

அவர் உயிருடன் எஞ்சியிருந்தால் அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என தீர்ப்பை அவன் நீதிமன்றத்தில் எழுதியிருந்தான்.

அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அவன் வழங்கியப்பிறகும் கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தன்னவளும் அவளது குடும்பமும் அந்த விஜயலட்சுமியால் அனுபவித்த வேதனைகள் அவனை உறங்க விடவில்லை.

ஆறு வயது குழந்தையாக அவரின் கையில் சிக்கி தினந்தோறும் அவள் எப்படியான கொடுமைகள் எல்லாம் அனுபவித்து கதறியிருப்பாள் என்று நினைக்க நினைக்க அவனின் இதயம் சுரீரென்று வலித்தன.

அவனின் மனம் தாளவில்லை…அவள் கொண்ட வலிகளை எண்ணி எண்ணி அவன் துடித்துப்போனான்.

அந்த வலியோடு சேர்த்து அவனின் நெஞ்சமும் கனத்துப்போயின.

அதனால் அவள் அனுபவித்த துயரங்கள் அனைத்தையும் மீறி ஒரு மகிழ்ச்சி நிறைந்த வளமான வாழ்வை அவளிற்கு கொடுக்க வேண்டும் என அவனுள்ளம் விரும்பின.

அதிலும்,அவனது ஸ்டார் தான் முகிழ்மதி என தெரிந்துக்கொண்டதில் அவனிற்குள் எல்லையில்லா ஆனந்தம்!

அவனிற்கு நட்சத்திராவை பிடிக்கும்..
அதற்காக அவளை நேசிக்கிறான் என்றால் அது அபத்தமாக இருக்கும்.

ஏனெனில் அவளிற்கு அப்போது வயது வெறும் ஆறு தான்!

அவனிற்கு பதினெழு…காரணமின்றி ஒரு சிலரை அளவுக்கு அதிகமாக பிடிக்குமே?

அதுப்போல் ஏனோ அவளை அதிகமாக பிடிக்கும்…அவளை தூக்கி கொஞ்சுவதற்காகவே தேவகியின் வீட்டிற்கு அடிக்கடி செல்வான்.

விடுமுறை தினங்களில் அவளோடு அவன் இணைந்து செலவளித்த நாட்கள் ஏராளமானவை!

அவளிற்கு அவன் என்றால் கொள்ளை இஷ்டம்!

அவன் களிமண்ணால் சிலை செதுக்கும் சமயமெல்லாம் “த்தூ மாமா நானும்…நானும்…” என ஓடி வந்து அவனது மடியில் அமர்ந்துக்கொள்வாள்.

அவனோ அவளை வாகாக மடியில் அமர்த்தி “என்ன ஸ்டார் நீ இப்படி மடியில் உட்கார்ந்திட்டால் நான் எப்படி சிலை செய்யறது?” என போலியாய் சலித்துக்கொண்டே சொல்ல,

அந்த சிறுமியோ பின்னால் திரும்பி அவனை பார்த்து “மாமா பிளீஸ் பிளீஸ் எனக்கும் இது கத்துக்கொடுங்க…நான் பெரிய பொண்ணாகி உங்களை மாதிரியே நிறைய பொம்மை செய்வேன்” என விழிகளை சுருக்கி அவள் கொஞ்சிய மொழியில் யாவரும் மயங்கி தான் போவார்கள்.

ரத்தினவேலுவும் அவளின் மழலை பேச்சில் வசீகரிக்கப்பட்டான்.

அதனால் “ஏதே பொம்மையா?அது சரி” என தலையாட்டி இலேசாக முறுவலித்துக்கொண்டே “சரி வா ஸ்டார்” என அவளின் கைப்பிடித்து களிமண்ணில் சிலை செய்ய கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான்.

அவளின் பிஞ்சுக்கரங்களுக்கு ஏடாக்கூடமாக களிமண் வழக்கிக்கொண்டு போனாலும் அந்த கோணலான சிற்பம் கூட சிறியவளின் உற்சாகத்தை குலைக்கவில்லை.

அவளிற்கோ தனது மாமனுடன் இணைந்து சிலை செய்யும் குதூகலம்!

அதனால் நலுங்கிய உருவத்திலிருந்த சிலையை பார்த்து “ஐய் மாமா மாமா… ஸ்டார் பொம்மை செஞ்சிட்டேன்…” என கைதட்டி குதூகலிக்க, அதைக்கண்டு அவன் ரசிக்க,இவ்வாறு இருவரும் ஒன்றாக இருந்த அந்த பசுமையான நினைவுகள் இன்றும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருந்தன.

மீண்டும் ஒரு நாள் அவனிடம் வந்த சிறுமி “மாமா நீ எல்லா பொம்மையும் செய்யறயில்லை…என்னை மாதிரி பொம்மை செய்வீயா?” என சந்தேகம் கேட்க,

அவனோ சிரித்துக்கொண்டே அவளை தூக்கி அவனது மடியில் அமர வைத்தவன் “அதுக்கென்ன என் ஸ்டார் மாதிரி ஒரு பொம்மை செஞ்சிட்டால் போச்சு…பட் இப்போ இல்லை…பாப்பாவுக்கு இன்னும் ஆறு மாசத்திலே பர்த்டே வருதில்லை…அதுக்கு கிஃப்ட்டா ஸ்டார் மாதிரி ஒரு பொம்மை செஞ்சு தர்றேன்…கூடவே இன்னொரு சர்ப்பரைஸ் கிஃப்டும் இருக்கு” என கண்சிமிட்டி சொல்ல,

அதில் ஆர்வமான குழந்தை விழி விரித்து “என்ன அது மாமா…சொல்லுங்க…சொல்லுங்க…” என அவனின் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு சிணுங்க,

“ஆ…வலிக்குது ஸ்டார்” என கத்திய ரத்தினவேல் “அதெல்லாம் சொல்லமுடியாது‌…சஸ்பென்ஸ்” என நாசியோடு நாசி உரசி கொஞ்சியப்படி உரைக்க,

அவளோ “த்தூ மாமா பிளீச்‌…பிளீச்…” என அவனின் கன்னத்தை பிடித்துக்கொண்டு கொஞ்ச,

அவனோ செல்லமாக அவளின் நாசியை திருகி “ஸ்டார் ரத்தினவேல் ரகுநாத பூபதினு எவ்வளவு கம்பீரமான பேர் என்னோடது…அதை சுருக்கி ரத்துனு சொன்னால் கூட பரவாயில்லை…த்தூனு சுருக்கி வைச்சிருக்கே…என் மானமே போகுது…ஒழுங்கா மாமா மட்டும் கூப்பிடு” என போலியாக சிறியவளை மிரட்ட,

அவளோ அப்போதே அவனின் அந்த அரட்டலுக்கு அஞ்சி முகத்தை சுணுங்கிக்கொள்வாள்.

அவனிடம் பேசாமல் அமைதியாக இருப்பவளை பார்த்து இறுதியாக அவன் தான் அவளை சமாதானம் செய்வான்.

அதை இன்று எண்ணிய ரத்தினவேல் ‘சின்ன குழந்தையிலிருந்த அந்த அழுத்தம் இன்னும் உன்னை போட்டு போகலைடி’ என்றெண்ணியவனின் இதழ்கள் இலேசாக விரிந்தன.

உடனே தன்னவளை காண அவனின் மனம் ஏங்கின.

அவன் தலையுயர்த்தி கடிகாரத்தை பார்த்தான்.

அது அதிகாலை நான்கை காட்டிக் கொண்டிருந்தது.

அத்துணை நேரமாக உறங்காமல் அவனிற்கும் அவளிற்குமான சிறு வயது நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருந்தான்.

சிறு வயதில் அவர்கள் இழந்த அந்த அழகான நாட்களை ஈடு செய்யும் விதமாக அவனும் அவளுமாக இணைந்து மணித்துளிகளை செலவளிக்க அவனது அகமும் சரீரமும் பரபரத்தன.

ஆனால் தற்சமயம் அதற்கு வழியில்லை என்று கருதி ஒரு பெருமூச்சுடன் நித்திரா தேவியை அணைக்க போராடி கொண்டிருந்தான்‌.

இங்கு அவனின் மனையாளோ கணவனின் சிந்தனையற்றவளாய் தன் தாயின் அரவணைப்பில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
 

முகிழ்மதி 94:


 

 

முகிழ்மதியின் விழிகளுக்கு அன்றைய நாள் முழுவதும் தாயை தவிர வேறு யாரும் புலப்படவில்லை.

அவளிற்கு ஏனோ அனைத்தும் கனவில் நடப்பது போலவே இருந்தன.

அவளின் கடந்த காலம் முழுவதும் ஞாபகம் வரவில்லை என்றாலும்,அந்த வீட்டிற்குள் புதைந்துகிடந்த அன்னையுடனான அவளின் நினைவுகள் எல்லாம் மெது மெதுவாக கிளர்ந்தெழுந்து அவளின் சிந்தையை நிறைத்தன.

ஆறு வயது குழந்தையின் தோற்றத்தில் அங்குமிங்கும் ஓடியாடும் நட்சத்திராவின் இடத்தில் அவளையே பொருத்தி பார்த்தவளிற்கு ஓரளவு அனைத்தும் விளங்கின.

அதனால் தன் தாயான தேவகியை அடையாளம் கண்டுக்கொண்டவளிற்கு அச்சமயம் அவரின் அன்பும் அரவணைப்பும் வேண்டும் என உள்ளம் துடித்தன.

அதனால் தாம் யார் என்பதை கூட மறந்து தாயின் கரங்களுக்குள் சரணடைந்துவிட்டது,அந்த மதலை உள்ளம்!

பல வருடங்களாய் அவளுள் இருந்த வெற்றிடம் அன்றொரு நாளிலே அவரின் அன்பில் பூர்த்தியாகின.

அன்னை மட்டுமே அவளின் அகிலம்…அவர் மட்டுமே போதுமென்ற மனப்பான்மையில் சுற்றித்திரிந்த பெண்ணவளை பார்த்து வீரும் சந்திரமதியும் கூட பயந்துவிட்டனர்‌.

அவனது அன்னையைப் பார்த்துக்கொள்ளவதே வீர் தான்!

ஆனால் முகிழ்மதியோ தன்னையே மறந்து அவருடனே ஒட்டித்திரிய இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறிப்போனான் தாயுமானவன்.

இரவு வேளை வந்த சமயம் அவர்களின் வயிற்றின் பசியுணர்ந்து,அன்னை தங்கை இருவருக்கும் உணவை ஊட்டிவிட்டு படுக்க வைத்தவனும் அவன் தான்.

அதை கூட அறியாத நிலையில் இருவர் மட்டுமாய் ஓர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள் தாயும் மகளும்!

அவர்களை உறங்க வைத்துவிட்டு வெளியே வந்த வீர் சந்திரமதியிடம் “என்னம்மா இது?டால் இப்படி இருக்கா?அவளுக்கு சுத்தி என்ன நடக்குதுனே தெரியலை…யார் வராங்க…யாரு போறாங்க…எதுவுமே தெரியலை…அப்படியே ஏதோ பித்துப்பிடிச்ச மாதிரி இருக்காள்…இப்போ கூட பார்றேன்…நான் சாப்பாடு ஊட்டிவிட்டது கூட அவளுக்கு தெரியலை…எனக்கு வேற பயமா இருக்கு” என பதட்டமாக ஒற்றை விரலால் புருவத்தை நீவியப்படி சொல்ல,

“அண்ணா டோன்ட் வொர்ரி…அத்தான் தான் பயப்படவேண்டாம்னு சொன்னாரு இல்லை…ரொம்ப வருஷம் கழிச்சு அம்மாவை பார்த்த ஷாக்கிலே இருக்காள்…கொஞ்சம் அவ தூங்கி எழுந்திரிக்கட்டும்…அவளுக்கு டைம் கொடுப்போம்‌…சரி நீங்களும் சாப்பிட்டு தூங்குங்க அண்ணா…நான் கிளம்பறேன்” என அவனிற்கு ஆறுதல் கூறி புறப்பட ஆயுத்தமான தங்கையை திகைப்புடன் நோக்கினான் வீர்.

“இது உன் வீடு…அதை விட்டுட்டு நீ எங்கம்மா போறே?” என ஆற்றாமையுடன் அவன் வினவ,

அவளோ “அட அண்ணா முன்னாடி இங்க வரதுக்கு நான் யோசிச்சதுக்கு பல காரணம் இருந்துச்சு…இப்போ தான் இது என் வீடுனு தெரிஞ்சிடுச்சே…சோ உங்களை அம்மாவை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன்…பட் எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க…என்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி ஹாஸ்டெல்ல செட்டில் பண்ணிட்டு வந்திடறேன்” என படபடவென ஒரே மூச்சில் அனைத்தையும் கூறியவள்,திடீரென்று தயங்கியக்குரலில் “ஆனால் அண்ணா…” என அவள் ராகமாய் இழுக்க,

தங்கையின் முந்தைய பேச்சில் அவனின் வாடிய முகம் மீண்டும் மலர்ந்திட “நீ என்ன கேட்க வர்றேன்னு தெரியுதுடாம்மா…உன்னோட விஜிம்மா பத்தி தானே சொல்லறே?கண்டிப்பா கூட்டிட்டு வா…அவங்க கூடயிருந்தால் உனக்கும் அம்மாவுக்கும் ஒரு ஆதரவா இருக்கும்…அவங்க சங்கடப்பட்டால் அம்மாவை பார்த்துக்க ஒரு ஆள் தேவைப்படறாங்கனு சொல்லி கூட்டிட்டு வந்திடு…அவங்களாலே மறுக்க முடியாது” என அவளின் கூந்தலை வருடியப்படி உரைக்க,

அதில் அவளின் முகம் பிரகாசமாகிட “தேங்க்ஸ் அண்ணா” என அவனது உரமேறிய நெஞ்சில் சலுகையாக சாய்ந்து நன்றியுரைத்தவள் “சரி நான் கிளம்பறேண்ணா” என அங்கிருந்து புறப்பட ஆயுத்தமானாள்.

தங்கை கைப்பையுடன் தனித்து செல்வதை கண்டவனிற்கு ஏனோ மனம் கேளவில்லை.

ஆதலால் “நான் வந்து உன்னை ஹாஸ்டெல் வரை விட்டுட்டு வர்றனேம்மா…” என வீர் சொல்லிப்பார்க்க,

அவளோ காலணியை மாட்டிக்கொண்டே “அட வேணாம் அண்ணா…இப்போ முகிழும் அம்மாவும் இருக்கிற நிலையிலே அவங்களை நீங்க தனியா விட்டுட்டு எங்கியும் வர வேண்டாம்…நான் சேஃபா போயிடுவேன்…யூ டேக் கேர்…பை அண்ணா…குட் நைட்” என புன்னகையுடன் அவனிற்கு கையசைத்துவிட்டு விடைப்பெற்றாள்.

அவனிற்கு அப்போதும் நெஞ்சம் கறுக்கென்று இருக்க “அட்லீஸ்ட் நாளைக்கு காலையிலையாவது போகலாமே மதி” என அவன் சொல்ல,

அவளோ மறுப்பாக தலையசைத்து “இல்லைண்ணா…எங்க ஹாஸ்டெலுக்கு பக்கத்திலே ஒரு குழந்தைக்கு காலையிலே ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எடுத்திட்டு இருக்கேன்…எனக்காக அவங்க வீட்டுலே வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…அதனாலே இனிமேல் வேலைக்கு வரமுடியாதுனு நேரிலே விளக்கம் சொல்லிட்டு வந்திடறேன்” என பிடிவாதமாக உரைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஒரு பக்கம் அவளின் இந்த பொறுப்புணர்வை கண்டு பெருமிதமாக இருந்தாலும் மற்றொரு புறம் படிக்க வேண்டிய வயதில் தங்கை வேலைக்கு சென்று சிரமப்படுவதை எண்ணி கவலையும் கொண்டான்.

இனி அவள் செய்துக்கொண்டிருக்கும் வேலையை விட செய்து,அவளை படிக்க வைக்க வேண்டும் என திடமாக எண்ணினான்.

அவள் எங்கோ ஓரிடத்தில் பணிப்புரிகிறாள் என்று மட்டுமே அவனிற்கு தெரியும். விடுதியில் இதுப்போல் மது பரிமாறும் பணியை தொடர்கிறாள் என்று தெரிந்தால் அவன் அவளை முன்பே தடுத்து நிறுத்தியிருப்பான்.

ரத்தினவேலுவும் அவனது தாயின் நிலை மோசமாகியிருந்ததால் சந்திரமதியைப் பற்றி எதுவும் உரைத்திருக்கவில்லை.

இப்போது வீரும் பல வருடங்களுக்கு பிறகு நிறைவான மனதுடன் உணவை உண்டுவிட்டு படுக்கையில் விழுந்தான்.

உறங்க செல்வதற்கு முன்பு தங்கைக்கும் இரண்டு முறை அழைத்து அவளின் நலனையும் விசாரித்துவிட்டிருந்தான்.

அதேப்போல் தாயும் மகளும் இருந்த அறையை ஒரு முறை நோட்டமிட்டவனிற்கு இப்போது வரை நடந்தது எதையும் நம்பவே முடியவில்லை.

அவனின் தங்கை திரும்பி வந்துவிட்டாள்…அவனது டால் திரும்பி வந்துவிட்டாள் என ஊரெங்கும் டமாரம் அடித்து சொல்ல வேண்டும் போன்ற ஒரு ஆர்ப்பரிப்பு அவனுள்!

அதனால் இதயத்தில் பெருகிய மகிழ்ச்சியுடன் மெத்தையில் படுத்திருந்த வீருக்கு இந்த உவகையை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள வேண்டும் போன்ற ஒரு உணர்வு!

யாரிடமாவது என்ன?தன்னையே உயிராய் நேசித்து நிழல் போல் பின்தொடரும் தமயந்தியிடம் பகிர்ந்திட அவன் உள்ளம் பரபரத்தது‌.

ஆனால் இன்னும் சில நாட்களுக்கு யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என ரத்தினவேல் கண்டிப்புடன் உரைத்திருந்தான்.

அவனது வீட்டு ஆட்களுக்கும் தெரிய வேண்டாம் என சொல்லியிருக்க,

வீர் எப்போது நண்பனின் பேச்சை மீறியிருக்கிறான்?

அதனால் தன்னுள் உண்டாகிய சந்தோஷத்தை தனக்குள்ளே வைத்து அடக்கிக்கொண்டான்.

அதே உற்சாகத்தோடு பல வருடங்களுக்கு பிறகு எவ்வித இடர்களுமின்றி நிம்மதியான உறக்கத்தை நாடினான் வீர்‌.

வீரின் மனதில் மட்டுமல்ல…பல வருடங்களுக்கு பிறகு,களையின்றி கிடந்த அந்த வீட்டிற்கும் தெய்வ கடாட்சம் நுழைந்தது ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது.

வெய்யோனின் கதிர்கள் பூமியில் தன் ஆதிக்கத்தை செலுத்திய நேரத்தில் மெதுவாக கண்விழித்தாள் முகிழ்மதி.

அப்போது தான் அவள் தாயின் அரவணைப்பில் இருப்பதை உணர்ந்த காரிகைக்கு சிறிது சிறிதாக அன்னையின் மீதிருந்த பித்தம் தெளிந்தன.

அவளிற்கு சுற்றம் உறைத்தன.

‘தாம் யார்?இங்கு என்ன நடக்கிறது?நேற்று என்ன நடந்தது?இவர் யார்?’ என சிறிது சிறிதாக அச்சூழ்நிலையை கிரகிக்க தொடங்கியவளின் விழிகள் முதலில் தேடியது என்னவோ தன் கணவனை தான்!

அவளை சுற்றி பல மாய வலைகள் பின்னப்பட்டிருக்க,அவளுள் பல விதமான கேள்விகள் சிந்தைக்குள் வட்டமடிக்க ஆரம்பித்தன.

‘இது தான் என்னை பெத்த அம்மாவா?இவங்க என் அம்மானா அப்போ அவங்க யாரு?நானும் அக்காவும் எப்படி அங்கே போனோம்?’ என ஒன்றும் புரியாமல் அவள் குழம்பி தவிக்க,அச்சமயம் அவளை காக்கும் ஆபத்பாந்தவனாய் கதவை திறந்துக்கொண்டு வீர் வந்தான்.

கதவு திறக்கும் சத்தத்தில் தலையுயர்த்திய மங்கை வீரை கண்டுவிட்டு “அண்ணா” என இதழை பிதுக்கி அழ தயாராகினாள்.

முகிழ்மதியாக இருக்கும் போதே அவள் அழுதால் அவனால் ஏற்க முடியாது.

இப்போது அவள் தான் தன் உயிரான தங்கை என்று தெரிந்ததற்கு பிறகு அவனால் தாங்க முடியுமா என்ன?

“டால் என்னம்மா?” என பதறிப்போய் ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டான்.

அவளோ “அண்ணா…அண்ணா..” என விசும்பிக்கொண்டே “அ..ண்ணா எ..னக்கு குழப்பமா இருக்கு…நா..ன் யாரு?” என தவிப்புடன் கேட்டவளின் துக்கத்தை கண்டு நெஞ்சம் வலித்தன.

அவனோ அவளின் சிகையை வருடியப்படி “டால் உனக்குள்ள நிறைய கேள்விகள்,குழப்பங்கள் இருக்கும்னு எனக்கு தெரியுது…பட் ஒண்ணே ஒண்ணு மட்டும் மனசுலே வைச்சுக்கோ…நீயும் மதியும் இந்த வீட்டுப்பொண்ணுங்க…என்னோட தங்கச்சிங்க…அதை மட்டும் ஞாபகத்திலே வைம்மா…மீதியெல்லாம் பொறுமையா தெரிஞ்சுக்கலாம்?” என நிறுத்தி நிதானமாக பரிவுடன் எடுத்துரைக்க,

சட்டென தலையுயர்த்திய பாவை ஒரு வித எதிர்பார்ப்புடன் “அப்போ இவங்க தான் என் அம்மாவா அண்ணா?” என தேவகியை கையால் சுட்டிக்காட்டி கேட்க,

அவனோ “ஆமா டால்…இது தான் நம்ப அம்மா…உனக்கு ஏதாவது ஞாபகம் வந்துச்சா?” என ஒரு வித பரபரப்புடன் அவளின் தோளை பற்றி வினவ,

அவளோ ஆமோதிப்பாக தலையசைத்து “ஆமா அண்ணா…இவங்க என்னை நட்சத்திரானு கூப்பிட்டாங்க…சின்ன வயசிலே இவங்க என்னை தூக்கி கொஞ்சறே மாதிரி…அப்புறம் இவங்க கூட இன்னும் இரண்டு பேரு அவங்க முகம் சரியா தெரியலை…அவங்க கூட நான் விளையாடற மாதிரி ஏதோ சிலையெல்லாம் செய்யற மாதிரி டிராயிங் வரையற மாதிரி இப்படி ஏதேதோ வந்துச்சு அண்ணா…இதோ இந்த கட்டில்லே நான் இவங்க கழுத்தை கட்டிப்பிடிச்சு படுத்திருக்கிற மாதிரி…ஒரு ஒரு இடத்தை பார்க்கும் ஏதேதோ ஞாபகம் வருது அண்ணா…எனக்கு ஒண்ணுமே புரியலை” என கலக்கமும் பயமும் கலந்தக்குரலில் அவளின் உணர்வுகளை அவனிடம் அவள் வெளிப்படுத்தினாள்.

தங்கையின் உணர்வுகள் அறிந்த தமையனும் “அதெல்லாம் உன்னோட பழைய ஞாபகங்கள் டால்…நீ தான் எங்க நட்சத்திரா…அதான் இந்த வீட்டையும் அம்மாவையும் பார்த்தவுடனே பழசெல்லாம் உனக்கு ஞாபகம் வந்திருக்கு…ஒண்ணும் அவசரமில்லை மெதுவா நினைவு வரட்டும்…நான் சொன்ன மாதிரி நீ எதுவும் ஸ்ட்ரெயின் பண்ண வேணாம்டா செல்லம்” என கனிந்த குரலில் அவளிற்கு சமாதானம் உரைத்தவனிற்கு அப்படியொரு நிம்மதி!

சகோதரிக்கு சிறிது சிறிதாக அவளின் கடந்த கால நினைவுகள் வந்துக்கொண்டிருக்கிறது என்பதால் உண்டான ஆசுவாசம் அது!

கூடவே,தங்களுடைய நினைவுகளும் அவளிற்கு மீண்டு வருகிறது என்று தெரிந்து மகிழ்ச்சியுற்றான்.

அதனால் தாயை திரும்பி ஒரு பார்வை பார்த்த வீர் “டால் அம்மா நல்லா தூங்கறாங்க…சரி நீ வாம்மா…வந்து பிரஷப் ஆகிட்டு பால் குடி” என அவளை அழைத்து சென்றான்.

அவளிற்குள் தீர்க்கப்படாத குழப்பங்கள் நிறைந்திருந்தாலும் அவளின் அலைக்கழித்த மனம் அவனின் பேச்சில் சிறிது அமைதியுற்றன.

அதனால் தமையன் கொடுத்த பாலை வாங்கி பருகிய மங்கை “அண்ணா உங்களுக்கு நான் காஃபி போட்டு தரட்டுமா?” என மெல்ல கேட்க,

அவனோ “வேண்டாம்மா…நான் முன்னாடியே குடிச்சிட்டேன்…நீ குடி” என்றதும் பாலை அருந்தியவாறே வீட்டை சுற்றி விழிகளை சுழற்றினாள்‌.

அவளின் விழிகள் அலைப்பாய்வதை கண்ட வீர் “என்ன டால்?என்ன வேணும்?” என புருவம் சுருக்கி கேட்க,

அவளிற்கு இப்போது தேவையானது அவளின் மன்னவன்!

ஆனால் அதனை அவனிடம் கேட்க சங்கடமாக இருக்க “அது அக்கா எங்க அண்ணா காணும்?” என தமக்கையை பற்றி விசாரிக்க,

அவனோ ஒரு பெருமூச்சுடன் “அவளோட லக்கேஜ் எல்லாம் எடுத்திட்டு வர ஹாஸ்டெல் போயிருக்காள்…இரண்டு நாளிலே வந்திடுவாள்” என விபரம் உரைத்ததும்,அவள் திகைத்து விட்டாள்.

அவளிற்கு இது புதிய செய்தி!

“ஹாஸ்டெல்லா?ஏன் அண்ணா என்னாச்சு?” என பதறிப்போய் கேட்டவளின் குரல் நடுக்கத்துடன் வெளி வர,

“இங்க பாரு டால்…உன்கிட்ட சொல்ல நிறைய விஷயம் இருக்கு…பொறுமையா ஒண்ணு ஒண்ணா தெரிஞ்சுக்கலாம்…இப்போதைக்கு சந்திரமதி நல்லாயிருக்காள் நேத்து நீயே பார்த்தில்லை” அவளின் கையை தட்டிக்கொடுத்து பரிவாக சொல்ல,

அவளோ ‘ஏன் என்கிட்ட மட்டும் யாரும் எதுவுமே சொல்லமாட்டிக்கிறாங்க?ஹாஸ்டெல்ல இருக்கான்னா அப்படி என்ன தான் நடந்திருக்கும்?’ என பதைபதைப்புடன் எண்ணினாள்.

அதேசமயம் தமக்கை நேற்று பூடகமாக கூறிய பல விடயங்கள் அவளிற்கு இன்று தெள்ள தெளிவாக புரிந்தன.

‘நீ பார்க்கிற எதுவும் உண்மை கிடையாது அம்மு…அவங்க நம்ப அப்பா அம்மா இல்லை’ என அவள் திரும்ப திரும்ப வலியுறுத்திய காரணங்கள் இதைப் பற்றி தானோ?

‘தங்களை பெற்றெடுத்த தாய் தேவகி என்பதற்காக தான் அவன் அப்படி சொன்னாளோ?அப்படியானால் விஜயலட்சுமி மற்றும் சிவராமன்?’ என அவளின் சிந்தை மீண்டும் குழம்ப தொடங்கும் போது சட்டென சுதாரித்தாள் பெண்ணவள்.

‘என்கிட்ட இவங்க எல்லாம் சேர்ந்து ஒரு விஷயத்தை மறைக்கிறாங்கனா அதுக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்?அவங்களா சொல்லற வரை வெயிட் பண்ணுவோம்’ என நல்லவிதமாக அவளின் மூளை சிந்தித்தின.

நல்லவேளையாக,அவளின் மணாளன் கற்றுக்கொடுத்த பாடம் அவளை நல்வழியில் செலுத்தின.

முன்பு போல் இருந்திருந்தால் அவள் எதை எதையோ நினைத்து தன்னையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி வருத்தி எடுத்திருப்பாள்.

இப்போது அங்கு இருப்பது ரத்தினவேல் ரகுநாத பூபதியின் மனைவியாயிற்றே?

அதனால் அனைத்தையும் நன்மை பயக்கும் படியாக சிந்திக்க தொடங்கினாள்.

ஒரே நாளில் அவளின் வாழ்வில் எத்தனை எத்தனை மாற்றங்கள்..

இதுவரை அவள் ஒரு மாயோலகத்தில் வாழ்ந்திருப்பது அவளிற்கு நன்றாகவே புரிந்தது.

இவையெல்லாம் அவளிற்கு பேரதிர்ச்சி தான்!

அதையும் விட அவளிற்கு இந்த மாற்றம் பிடித்திருந்தது.

அவள் உறவாக மட்டுமே எண்ணிய நபர்கள் யாவரும் அவளிற்கு மட்டுமே உரித்தான சொந்தங்கள் என்று அறியும் போது அவளிற்குள் ஒரு ஆசுவாசுமும் நிம்மதியும் தோன்றின.

அதிலும் தாயின் பாசத்திற்காக ஏங்கியவளிற்கு கண் முன்னே அன்னையை பார்க்கும் போது ஆனந்தம் உண்டாகின‌.

அன்னையிற்கு இருக்கும் பிரச்சனை அவள் அறிந்தாலும் ‘சீக்கிரம் அவர் சரியாகிவிடுவார்’ என தன்னை தானே தேற்றியும் கொண்டாள்.

இப்போது கணவனின் நினைவு எழ,

உடனே அவளிற்கு கணவனை காண வேண்டும் என்ற பேரவல்!

நேற்று காலை அவனை இங்கு வரும் போது பார்த்தது.

அதனால் அவனை காண அவளின் விழிகள் ஏங்கி பூத்துப்போயின.

தன்னவனை தேடி அவளின் மனம் அலைப்பாய ஒரு வித தயக்கத்துடன் “அண்ணா நான் இங்கியே தூங்கிட்டேனில்லை…அவரு எதுவும் சொல்லலையா?” என மெதுவாக தன் அன்பனை பற்றி அவள் கேட்க,

முதலில் ‘எவரு’ என குழம்பிய வீர் பின்பு அவளின் வினா புரிந்தவனாய் “அட நீ வேற ஏன்மா?உன் புருஷனுக்கு உன்னை இங்க விட்டுட்டு போகவே மனசில்லை…எவ்வளவோ ட்ரை பண்ணியும் அம்மா உன்னை விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க…நீயும் உன் சுய நினைவிலே இல்லைம்மா…வேற வழியில்லாமல் தான் உன்னை இங்க விட்டுட்டுப்போனான் டால்” என நண்பனின் தவிப்பை அவன் கண்கூடாக பார்த்ததினால் அவனிற்கும் வருத்தமாக இருந்தது.

அத்துணை நேரமாக தன்னை தனியே கணவன் விட்டு சென்றுவிட்டானே என சிறிது மனச்சுணக்கத்தில் இருந்த மங்கை தன்னவன் வேறு வழியின்றி விட்டுச்சென்றதை அறிந்ததும் அவளின் மனம் பூவாய் மலர்ந்தன.

அடுத்த கணமே அவளின் உடலும் உள்ளமும் அவனை தேடித் தவித்தன.

இழந்த சொந்தங்கள் திரும்ப கிடைத்தது அவளிற்கு மகிழ்ச்சி தான்!

சிறு வயதில் தொலைத்த அவளது வாழ்வின் பொக்கிஷம் மீண்டும் கிடைத்ததை உணர்ந்தவளிற்கு மகிழ்ச்சி குமிழிட்டன.

அவளை விட்டால் தாயின் கையணைப்பில் இன்னும் பல வருடங்கள் வாழ சொன்னாலும் வாழுவாள்.

ஆனால் அவளிற்கு யாரும் இல்லாத நேரத்தில் கூட தன்னை ஒதுக்காமல் உயிராய் நேசித்த கணவனை அவளால் விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா?

அதனால் இருக்கையிலிருந்து எழுந்த மங்கை “அண்ணா நான் அங்க வீட்டுக்கு போறேன்” என அவன் என்ன நினைப்பானோ என தயக்கத்துடனே சொல்ல,

வீருக்கு அதில் சிறிதும் சோகம் தீண்டினாலும் திருமணமான பெண்களுக்கு எப்போதும் கணவன் தானே எல்லாம் என எண்ணி “சரி இரும்மா…நர்ஸ் கவிதா வந்திடுவாங்க…அவங்க வந்தவுடனே உன்னை கொண்டு விட்டுட்டு வர்றேன்” என எழுந்துக்கொண்டான்.

அவனிற்கு வீணாக தொந்தரவு கொடுக்க வேண்டாம் என எண்ணி “இல்லை அண்ணா…நானே…” என அவள் ஆரம்பிக்கும் போதே “உன்னை தனியா அனுப்பிட்டு என்னால் நிம்மதியா இருக்க முடியாது…நான் வர்றேன் டால்” என அவன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டான்.

ஆனால் அவளை அங்கிருந்து அழைத்து செல்வது பெரும் சவாலாக இருக்கும் என அவனே எதிர்பார்க்கவில்லை.

ஏனெனில்,மகளை பிரிய முடியாமல் அவர்களின் தாய் தவித்தார்.

புரிந்துக் கொள்ளும் நிலையில் இருப்பவரிடம் பொறுமையாக சொல்லி புரிய வைக்கமுடியும்.ஆனால் நிலையான மனநிலை இல்லாதவரை சமாளிப்பது அத்துணை எளிதல்லவே?

அவரின் துயரத்தை கண்டு பிள்ளைகளும் கலங்கினார்கள்.

அதனால் அன்று மாலை வரை அவருடன் நேரம் செலவிட்ட முகிழ்மதியால் அதற்கு மேல் முடியவில்லை.

‘கணவனை காண வேண்டுமே?தனக்காக அவன் காத்திருப்பானே?’ என்ற எண்ணமே அவளை அலைக்கழித்தன.

தங்கையின் விழி வழியே அவளின் கவலையறிந்த வீர் தாயிடம் நிதானமாக பேசினான்‌.

“அம்மா இங்க பாருங்க…நம்ப நட்சத்திரா எங்கியும் போகலை…நம்ப பூபதி இருக்கானில்லை…அவன் வீட்டுக்கு தான் போறாள்…பூபதி தான் உங்களுக்கு பிடிக்குமே?நட்சத்திராவுக்கு பூபதி ஏதோ ஸ்பெஷலா வாங்கி வைச்சிருக்கானாம்…அதைப்போய் வாங்கிட்டு நாளைக்கே திரும்பி வந்திடுவாளாம்…” என அவரின் மனநிலைக்கு ஏற்ற விதமாக பேசி ஒரு வழியாய் அவரை சமாளித்து அவளை அழைத்து செல்வதற்குள் அவனிற்கு போதும் போதுமென்றானது.

முகிழ்மதிக்கு அவரையும் பிரியும் வேளையில் கண்ணீர் வந்தது.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு பிரியா விடைப் பெற்று செல்வது போலிருக்க அவள் வழி நெடுக கண்ணீரில் கரைந்துக் கொண்டே சென்றாள்.

“நட்சத்திரா அம்மா பார்க்க நாளைக்கு வா” என அவர் சிறுப்பிள்ளை போல் அழுதுக்கொண்டே சொல்லவும்,அவளிற்கு ஒரே ஒரு கணம் அங்கு இருந்துவிடலாமா என்று கூட தோன்றிவிட்டது.

ஆனால் அவளிற்கு சென்றாக வேண்டிய கட்டாயம்!

ஜீப்பில் செல்லும் போது “சாரி அண்ணா” என அழுகையோடு அவள் சொல்ல,

அவனோ கைக்குட்டையை அவளிடம் நீட்டி “டால் இதெல்லாம் இயல்பா எல்லார் வீட்டிலும் நடக்கிறது தான்மா‌…இதுவே அம்மா நல்ல நிலைமையில் இருந்திருந்தால் அம்மாவே உன்னை சந்தோஷமா வழியனுப்பியிருப்பாங்க…அப்போ அப்போ நேரம் கிடைக்கும் போது அம்மாவை வந்து பாரு…எனக்கு தெரிஞ்சு மதி வந்தால் அம்மா சரியாகிடுவாங்கனு நினைக்கிறேன்…அதனால் நீ இதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமா பூபதி கூட வாழு…அது தான் எங்களுக்கு சந்தோஷம்” என வீட்டின் மூத்தவனாக அவளிற்கு தேவையான அறிவுரை கூறி,தங்கையை புகுந்த வீட்டில் இறக்கிவிட்டு சென்றான்.

அவள் அவனை உள்ளே கூப்பிட்டதற்கு “இல்லைம்மா…கவிதா வெயிட் பண்ணுவாங்க…நான் போறேன்” என அவளிடமிருந்து விடைப்பெற்று கிளம்பிவிட்டான்.

தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் கணவனை தேடி வந்தவளின் விழிகள் ஏமாற்றத்தில் சுருங்கின‌.

ஏனெனில்,அவளின் மணாளன் கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்தான்.

அவள் இங்கு வந்திருக்கும் விடயம் அவனிற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

அதனால் தானே அவனிற்கு அழைத்து தெரிவிக்கலாமா என எண்ணி அலைப்பேசியை எடுத்துவிட்டாள்.

ஆனால் அடுத்த கணமே ‘வேணாம்…அவரே வந்து தெரிஞ்சுக்கட்டும்’ என பெருமூச்சுடன் உடைமாற்றும் அறைக்குள் சென்று அலமாரியை திறந்தாள்.

வீரின் இல்லத்தில் அவளின் உடை எதுவும் இல்லாததால் தாயின் கத்திரிப்பூ நிற புடவை ஒன்றை எடுத்து கட்டியிருந்தாள்.

அவரின் மேல்சட்டை அவளிற்கு சிறிது தளர்வாக இருக்க,அதன்பொருட்டே உடை மாற்ற எண்ணி அங்கு வந்தாள்.

அலமாரியில் சிறிது நேரம் தேடி ஒரு பச்சை நிற சுரிதாரை கையில் அவள் எடுத்த நேரம் யாரோ அவளை பின்னோடு வந்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டிருந்தார்கள்.

யாரோ என்ன?அவளது மணாளன் தான் மனைவி அங்கு வருவதை அறிந்துக்கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்திருந்தான்.

நேற்றிலிருந்து தன்னவளை தனிமையில் சந்திக்க காத்திருந்தவனிற்கு சந்தர்ப்பம் கிடைத்ததும் அவளை சட்டென அணைத்து அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டிருந்தான்.

முதலில் அவனின் அணைப்பில் அவளிற்கு தூக்கிவாரிப்போட அவளின் கையிலிருந்த சுரிதார் நழுவி தரையில் விழுந்தது.

அடுத்த கணமே அவன் தந்த முத்தத்தில் அவளின் மேனி உருகி அவனுள் உருகி குழைந்தன.

அவளின் ஸ்பரிசத்தில் மயங்கிய ஆடவனின் இதழ்கள் “ஸ்டார்” என கிறக்கத்துடன் முணுமுணுக்க,அவனின் கரங்களோ அவளின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து இறுக்கின.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top