முகிழ்மதி 88,89

முகிழ்மதி 88:


 

 

வீரோ வயிற்றில் இருக்கும் போது சொன்னது போலவே அவளை உயிராய் வைத்து தாங்க ஆரம்பித்தான்.

அவள் சிறிது சிணுங்கினாலே அவளை தன் தோளில் போட்டுக்கொண்டு சிரமம் பார்க்காமல் கால் வலிக்க நடப்பான்.

பெற்றெடுத்த தாயை காட்டிலும் அவன் தான் அவளிற்கு அன்னையாக இருந்தான்.

அவனின் இந்த தன்னலமற்ற அன்பில் தேவகியின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

அத்தோடு ரோஜா பூவின் நிறத்தில் பொம்மை போல் இருந்த குழந்தையை பார்த்த கணமே “டால்” என்று தான் அவளை அழைத்திருந்தான்.

ஆங்கில சொல்லின் அர்த்தம் புரியாமல் “அதென்னடா டால்” என சுசீலா வழக்கம் போல் சந்தேகம் கேட்க,

“அப்படியே பார்பி பொம்மை மாதிரி குட்டியா வெள்ளையா அழகா இருக்காளில்லை நம்ப பாப்பா…அதான் இவ பேரு டால்” என விளக்கம் கூறியவன்,குழந்தையின் நாசியோடு நாசி உரசி கொஞ்சிட,

அவளோ தமையனின் அந்த விளையாட்டில் கிளுக்கி சிரித்தாள்.

அவரோ “என்ன தாலோ…கீலோ‌…இப்படியெல்லாம் பேரு வைச்சா எப்படி கூப்பிடறது?பேரு நல்லா விளங்கிற மாதிரி வைய்யுங்க…அப்போ தானே கூப்பிட வசதியா இருக்கும்” என அலுத்துக்கொண்டே சொல்ல,

அச்சமயம் தேவகி குழந்தைக்கு வைத்த பெயர் தான் “நட்சத்திரா”.

அதேசமயம் அமுத வாணன் தூக்கி சென்ற குழந்தைக்கு ‘சந்திரமதி’ என பெயர் வைக்கப்பட்டது‌.

மற்றவர்களுக்கு அவள் ‘நட்சத்திரா’.ஆனால் வீருக்கு என்றும் அவள் ‘டால்’ மட்டும் தான்!

இங்கு ஒரு குழந்தை தாயின் அரவணைப்பிலும் தமையனின் பாசத்திலும் வளர,மற்றொரு குழந்தை தாய் தகப்பன் யாவரின் அன்பும் கதகதப்பும் இல்லாமல் பணியாளரின் கரத்தில் அநாதரவாக வளர்க்கப்பட்டது.

சந்திரமதியை வளர்ப்பதற்காக வீட்டிற்கு வரவழைக்கப்பட்டவர் தான் பட்டம்மாள்.

இரண்டு வயது வரை சந்திரமதிக்கு தேவையான அன்பை வழங்கியவர் அமுத வாணன் மட்டும் தான்!

தன்னுடைய மற்றொரு பேத்திக்கு ‘நட்சத்திரா’ என தேவகி பெயர் சூட்டியிருந்தாலும் அவளிற்கு அவர் சூட்டிய பெயர் தான் ‘முகிழ்மதி’.

இரு பேத்திகளுக்கும் ஒரே பெயர் வருவது போல் வைத்திருந்தார்.

ஆனால் அவர் சூட்டிய அந்த பெயர் தான் காலம் உள்ள வரை நிலைத்து நிற்கும் என்று அக்கணம் அவர் அறியவில்லை.

தேவகி இருக்கும் ஊரிலே தாங்களும் இருந்தால் சந்திரமதி பற்றி அறிந்துக்கொள்வாளோ என அஞ்சியவர்,வேறொரு ஊருக்கு குடிப்பெயர்ந்துவிட்டார்.

அதனால் தனக்கு இன்னொரு குழந்தை இருக்கும் விடயமே தெரியாமல் தேவகி தனது இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருந்தாள்‌.

சிவராமனோ மனைவி தன்னை பிரிந்ததிலே உயிர் மரித்துப்போயிருந்தவன்,விஜயலட்சுமியையும் வீட்டை விட்டு அமுத வாணன் அடித்து விரட்டிவிட்டதால் அவனிற்கு வாழ்க்கையே ஒரு பிடிப்பின்றி சென்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் விஜயலட்சுமி ஏற்படுத்திய போதை பழக்கம் வேறு அவனின் நரம்புகளை பாதித்து அவனை ஒரு பைத்தியக்காரன் போல் நடந்துக்கொள்ள வைத்தன.

போதை மருந்தின் பக்க விளைவாக அவனின் உணர்வுகள் எல்லாம் தாறுமாறாக பெருகி அவனின் உடல் தேவைக்கு ஒரு பெண் வேண்டும் என்ற நிலைக்கு அவனை தள்ளியிருந்தது.

அதனால் தினந்தோறும் ஒரு பெண்ணோடு தன் மனைவியின் ஞாபகத்தில் சல்லாபிக்க பழகியவனிற்கு காலப்போக்கில் அதுவே வழக்கமாகிப்போனது.

அவனே நினைத்தாலும் அவனால் அந்த பாலுணர்வின் தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை.

ஸ்ரீ ராமனாக வாழ வேண்டிய தன் பேரனின் வாழ்வு தடம் புரண்டுப்போனதை எண்ணி அமுத வாணன் கண்ணீர் சிந்தாத நாளே இல்லை.

அவனை பல முறை கண்டித்தும் தண்டித்தும் அவனுள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களிற்கான காரணத்தை அவரால் கண்டறிய முடியவில்லை.

அதைப்பற்றி ஆழ்ந்து யோசிக்கும் அளவு போதை பழக்கம் எல்லாம் புழக்கத்தில் இல்லாத காலக்கட்டம் அது!

அதனால் பேரனின் நடவடிக்கையை மனைவியை பிரிந்த துக்கத்தில் அவ்வாறு நடந்துக்கொள்கிறான் என்று எண்ணினாரே தவிர,விஜயலட்சுமி கொடுத்து பழக்கிய போதை வஸ்துவின் பக்கவிளைவு என அவர் சிறிதும் சிந்திக்கவில்லை.

இப்படியே நாட்கள் உருண்டோடி,அவர் ஒரு நாள் சந்திரமதியை தூக்கிக்கொண்டு வந்ததை கண்டு அவன் கோபமுற்றான்.

“தாத்தா ஏற்கனவே நான் அவளுக்கு கொடுத்த வலி போதாதா?இந்த குழந்தையையும் பிரிச்சு எதுக்கு பாவத்தை சேர்க்கறீங்க?” என அவன் கத்த,

“நீ இப்போ செய்யற பாவத்தை விட இது கம்மி தான்டா…நீ எப்படியோ நாசமா போ…இந்த குடும்பத்துக்குன்னு ஒரு வாரிசு வேணும்…இந்த குழந்தை தான் நாளைக்கு ஒண்ணையும் தேவகியையும் சேர்த்து வைக்கக்கூடிய கடைசி துருப்புச்சீட்டு…நீ அமைதியா இரு” என அவனை அப்படியே அடக்கிவிட்டார்‌.

ஆயினும்,தன்னவளிற்கு நிஜம் தெரியும் வேளையில் அவள் எவ்வாறு துடித்துப்போவாள் என எண்ணி வருத்தம் கொண்டான்.

தன்னுடைய செயல் மிகப்பெரிய கொடூம்பாவம் என்றதோடு,தன்னவளின் குணத்தை நன்றாக அறிந்ததினாலே அவளை அவன் நெருங்க முற்படவில்லை.

சுரேந்திரனின் வன்முறையை பொறுத்துக்கொள்ளாத பெண் அவள்.

அப்படியானவள் அவனுடைய ஒழுக்கத் தவறை மன்னிப்பாள் என்ற நம்பிக்கையே அவனிற்கு இல்லை

அதன்பொருட்டே,தன்னிலிருந்து விலகி நின்றவளிடம் ஒன்று சேர எந்த முயற்சியும் செய்யவில்லை சிவராமன்.

இப்படியான சூழ்நிலையில் பாட்டானாரின் வேலையை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல,அவனது உயிரணுவில் ஜனித்த மதலையின் சிரிப்பையும் அதன் முகத்தையும் பார்க்கும் நேரமெல்லாம் அவனையும் அறியாமல் மனதில் ஒரு இதம் சேர ஆரம்பித்தது‌‌.

சந்திரமதிக்கு இரண்டு வயதாக இருந்த சமயமே குழந்தையின் மீது அவனிற்கு இருந்த அன்பு அதிகமாக,அவன் குழந்தையோடு ஒன்றிப்போக தொடங்கினான்.

அவனிற்குள் இருந்த போதையின் வீரியம் முழுமையாக முறிந்து தற்போது அவன் எந்தவொரு பெண்ணையும் நாடிச் செல்லாமல் தனது குழந்தைக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்த தருணம் அது!

ஆனால் சந்திரமதியின் மீதான அவனின் பாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை மீண்டும் அவனின் வாழ்வில் புயல் போல் வந்தாள் விஜயலட்சுமி.

ஒரு நாள் ஏதேச்சையாக சாலையில் விஜயலட்சுமியை அவன் காண நேர்ந்தது.

பிச்சையெடுக்கும் நிலையில் ஆடைகள் கிழிந்து உடல் நலுங்கிப்போயிருந்த பெண்ணவளை கண்டு துடித்துவிட்டான் அவன்.

தன்னால் தான் அவளிற்கு இத்தகைய அவலநிலையோ என்றெண்ணிய சிவராமன் வேறுவழியின்றி அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

சில நாட்களாக பேரன் மனம் மாறி வருகின்றானே என சந்தோஷம் கொண்ட பெரியவரின் தலையில் அவனது செயல் இடியை இறக்கியது‌.

“ஏய் எதுக்குடா மறுபடியும் அந்த பீடையை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே?” என அவர் கர்ஜிக்க,

அவனோ “இல்லை தாத்தா…என்னாலே தான் அவளுக்கு இந்த நிலைமை…அவ இப்படி இருக்கிறதை பார்த்தாலே என் மனசு தாங்கலை” என உச்சக்கட்ட வருத்தத்துடன் பேசிய பேரனை வெறுப்புடன் நோக்கினார் அவர்.

“கட்டின பொண்டாட்டி அங்க கஷ்டப்பட்டுட்டு இருக்காள்…அவகிட்ட மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ வக்கில்லை…உனக்கு எவளோ ஒருத்தி அதுவும் த்தூ…இவளோட கஷ்டம் தான் உனக்கு பெருசா இருக்காடா‌?முதல்ல அவளை வீட்டை விட்டு வெளிய அடிச்சு துரத்து” என இரத்தம் கொதிக்க உடல் அருவருக்க பேசியவரிடம் அவன் “முடியாது” என உறுதியாக தெரிவித்துவிட,

அன்று பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்தவர் தான் அதன் பிறகு எழவே இல்லை.

வேண்டுமென்று திட்டமிட்டே அவனின் கண்ணில் விழுந்திருந்தாள் அவள்.

அவனின் இளகிய மனதை தனக்கு சாதகமாக்க பயன்படுத்த எண்ணி,அவனை இரண்டு வருடங்களாக கண்காணித்து அன்று அவன் கண்ணில் பரிதாபமான நிலையில் இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

நினைத்தது போலவே அவள் எண்ணியது யாவும் ஈடேறியிருந்தது.

வழக்கம் போல் சிவராமனை தன்னுடைய கைப்பாவையாக்கி விஜயலட்சுமி தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டாள்.

சிவராமனிற்கு தாத்தாவை எண்ணி கவலையாக இருந்தாலும்,விஜயலட்சுமிக்கு அவன் இழைத்தது மகாபாவம் என்று கருதியதால் அதற்கு பிரயாசித்தம் செய்ய உத்தேசித்து அவளை வீட்டை விட்டு அனுப்பவில்லை.

ஆனால் அவன் அழைத்து வந்தது அப்பாவி அல்ல…அவன் குழந்தைகளுக்கு நரகத்தை காட்ட வந்திருக்கும் படுபாவி என்று அக்கணம் அறியவில்லை.

சந்திரமதியை பார்த்தாலே அவளிற்கு அடிவயிறு பற்றி எரியும்.

அவளின் ஒரே எதிரியான தேவகியின் குழந்தையாயிற்றே அவள்.

அதனால் சிவராமனின் முன்பு குழந்தையிடம் நன்றாக நடந்துக்கொள்பவள் அவன் இல்லாத சமயத்தில் எல்லாம் ‘சனியன்…சனியன்’ என அவளை அடித்து துன்புறுத்துவாள்.

அவளின் இந்த கொடூர செயலை எல்லாம் பார்த்துவிட்டு பட்டம்மா அவளிடம் குழந்தையை கொடுக்கவே மாட்டாள்.

ஆனால் சிவராமனிற்கு விஜயலட்சுமி சொல்வதே வேதவாக்காக மாறிவிட்டது.

அதனால் பட்டம்மா தன்னிடம் குழந்தையை தர மறுக்கிறாள் என அவள் நாடகமாடி ஒப்பாரி வைக்க “பட்டம்மாள் நீ மத்த வீட்டு வேலையெல்லாம் பார்த்தால் போதும்…மதியை இனி விஜி நல்லா கவனிச்சுக்குவாள்…அவகிட்ட குழந்தைய கொடு” என ஆணைப்பிறப்பித்துவிட,அவரால் வேறு எதையும் செய்யமுடியவில்லை.

அன்றைய நாட்களுக்கு பிறகு விஜயலட்சுமி வைத்தது தான் அந்த வீட்டில் சட்டம்!

அவள் என்னவோ முதலாளி போல் அனைவரையும் வேலை ஏவி அந்த வீட்டில் மகாராணி போல் வலம் வர ஆரம்பித்தாள்.

சந்திரமதியோ சிறு குழந்தையிலிருந்தே அவளிடம் ஒட்டமாட்டாள்.

அவள் தூக்கினாலே அழ ஆரம்பித்துவிட அதற்கும் தனிமையில் குழந்தை என்றும் பாராமல் அவளை வைத்து செய்துவிடுவாள்.

இந்த கொடுமைகள் அனைத்தையும் பற்றி தனது பெரிய முதலாளியான அமுத வாணனிடம் அவர் கண்ணீருடன் உரைக்க,அவருக்கு ஒரு விடயம் நன்றாக புரிந்துவிட்டது.

இனி பேரன் தனக்கு சொந்தமில்லை என்பது புரிந்திட,விஜயலட்சுமி சிவராமனிற்காகவும் சொத்திற்காகவும் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதறிந்து தன்னுடைய பேத்தியின் உயிரை காக்க வேண்டிய அவசியம் உணர்ந்தவராய் அவசரமாக உயில் ஒன்றை எழுத தனது சட்ட ஆலோசகரை அழைத்திருந்தார்.

அவரின் ஆலோசனையின் பெயரில் ஒரு உயில் தயாரிக்கப்பட்டது.

அந்த உயிலில் இருந்த சாராம்சம் இது தான்,

‘தனக்கு பின்பு இந்த சொத்துக்கள் அனைத்தும் தனது இரண்டு பேத்திகளான முகிழ்மதி மற்றும் சந்திரமதிக்கு மட்டுமே போய் சேர வேண்டும்.வேறு ஏதேனும் பேரப்பிள்ளைகள் பிறந்தாலும் அவர்களுக்கு இந்த சொத்தில் எந்த வித பங்குமில்லை.சிவராமன் சொத்தை அனுபவிக்க முடியுமே தவிர,பேத்திகளுக்கு இருபத்தியொரு வயது ஆகும் வரை இந்த சொத்துக்களை விற்கவோ அடகு வைக்கவோ முடியாது.அதே சமயம் மாதம் குறிப்பிட்ட தொகை மட்டும் வங்கி கணக்கில் வரும்.அந்த தொகையை மட்டுமே செலவு செய்ய முடியும்.அதையும் மீறி அடகு வைத்தாலோ அல்லது விற்றாலோ அவை செல்லுப்படியாகாது.இடையில் தன்னுடைய பேத்திகளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் சொத்துக்கள் அனைத்தும் அன்னம் மாள் டிரஸ்ட் வழியாக மற்ற அனாதை இல்லங்களுக்கு சென்றுவிடும்’ தன்னுடைய வழக்கறிஞரின் அறிவுரையின் பெயரில் இப்படியானதொரு உயிலை அவர் தயாரித்து அதில் கையெழுத்திட்டிருந்தார்.

அச்சமயம் அவரின் கால்கள் மட்டுமே வலுவிழந்திருந்தது‌.

ஆனால் அவரை மொத்தமாக செயலிழக்க வைக்கும் விதமாக அவருக்கு தினந்தோறும் கொடுக்கும் உணவில் உயிரை மெல்ல பறித்தெடுக்கும் நஞ்சை கலந்து கொடுக்க ஆரம்பித்தாள்.

தன் உயிர் சிறிது சிறிதாக பறிப்போக இருப்பது அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது.

அவருக்கு அச்சமயம் தான் சந்திரமதியை இங்கு கொண்டு வந்து பெரிய தவறு செய்துவிட்டமோ என கழிவிரக்கம் தோன்ற ஆரம்பித்திருந்தது.

அவர் பிழையை உணர்ந்த சமயம் அவரால் வாயை திறந்து பேச முடியாத ஒரு நிலையில் இருந்தார்.

சிவராமனோ முழுமையாக விஜயலட்சுமியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தான்.

அதனால் அவர் இறக்கும் தருவாய் வரையிலும் இந்த உயிலை பற்றி யாரிடமும் மூச்சுவிடவில்லை‌.

பெரியவரின் தலையீடு இல்லாததால் சிவராமனை கைக்குள் வைத்துக்கொண்டு விஜயலட்சுமி கொண்டாட்டமாக தனது ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்க,அவளது ஆட்டத்தில் சிவராமனும் விழுந்துவிட்டான்.

இறுதியாக,அவள் ஆசைக்கொண்டது போல் அவன் அவளை திருமணமும் செய்துக்கொண்டான்.

அவளை திருமணம் செய்திருந்தாலும் தேவகியை இன்று வரை அவன் மறக்கவில்லை‌.அதேசமயம் அவளிற்கு திருமண விலக்கும் கொடுக்கவில்லை.

அதற்கெல்லாம் மேலாக விஜயலட்சுமியோடு ஒன்றாக கூடி களையும் வேளையில் கூட ‘கண்ணம்மா’ என்றே உணர்ச்சி பெருக்கில் தன்னை மறந்து கூறுவான்.

அதைக்கேட்டு அவளின் வன்மமெல்லாம் தேவகியின் புறம் திரும்பும்.

தேவகி கண் முன் இல்லாததால் அவளின் வஞ்சமெல்லாம் அந்த சிறு குழந்தையின் மீது திரும்பிவிடும்.

குழந்தை என்றும் பாராமல் அவள் செய்த பல கொடூரங்களை தாங்கிக்கொண்டு அந்த சந்திரமதி வளர ஆரம்பிக்க,இவை யாவும் சிவராமனிற்கு தெரியவே இல்லை.

தெரியாத மாதிரி அவள் பார்த்துக்கொண்டாள்.

அவனை பொறுத்தவரை அவள் ஒரு பொறுப்பான மனைவி…அன்பான தாய்!

அப்படியொரு விம்பத்தை அவனுள் உருவாக்கியிருந்தாள்.

அத்துடன் குழந்தையையும் “அம்மா” என அழைக்கும் படி கட்டாயப்படுத்தியிருந்தாள்‌.

அந்த மூன்று வயது சிறுகுழந்தையும் அவளின் அரட்டலுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சி அவளை ‘அம்மா’ என்று ஏற்றுக்கொண்டது.

அதன்பிறகே அவளின் வக்கிரம் சிறிது குறைந்தது.

அனைத்தும் நன்றாக சென்றுக்கொண்டிருந்தது.

சிவராமன் மற்றும் விஜயலட்சுமிக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்தும் அவளிற்கு குழந்தை பிறக்கவில்லை.

அதனால் தன்னை ‘மம்மி’ என அழைக்கும் சந்திரமதியின் மீது சிறிது பாசம் உருவாகியிருந்தது.அவளை தன் குழந்தை போலவே பாவித்து வளர்க்க ஆரம்பித்துவிட்டாள்.

ஆயினும்,விஜயலட்சுமியின் பேச்சை மறுத்து அவள் பேசினால் குழந்தை என்றும் பாராமல் அவளை வாட்டி வதைத்து விடுவாள்.

சிறு குழந்தையாகினும் சந்திரமதிக்கு அவளின் வித்தியாசங்கள் புரிப்பட்டன.

அதனால் அவளிற்கு ஏற்ற விதமாக அனைத்தும் நல்லவிதமாக நடக்க,இனி தன்னுடைய மகன் ரஞ்சனை வீட்டிற்குள் வரவழைத்து அவனை இந்த சொத்திற்கு அதிபதியாக்கிவிடலாம் என கனவில் மிதந்தாள்.

அனைத்தும் சுமூகமாக சென்ற வேளையில் அமுத வாணன் சந்திரமதியின் ஐந்தாவது வயதில் இயற்கை எய்தியிருந்தார்.

அதன்பிறகு அமைதியாக சென்றுக்கொண்டிருந்தவர்களின் வாழ்வில் மீண்டும் ஒரு சூறாவளி வீசத்தொடங்கியது.

அந்த சூறாவளியில் அடித்து செல்லப்பட்டது ‘நட்சத்திரா’ என்ற ஆறு வயது சிறு குழந்தை!

ஆம்,அமுத வாணன் இறந்தவுடன் அவர் விட்டு சென்ற உயில் அனைவரின் முன்னிலையிலும் வாசிக்கப்பட,சிவராமனிற்கு அதில் பெரிதாக வருத்தம் எதுவுமில்லை.

ஆனால் விஜயலட்சுமியின் மனதிற்குள் மீண்டும் வஞ்சம் தலைவிரித்து ஆடத் தொடங்கின.

‘அந்த கிழவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படியொரு உயிலை எழுதி வைச்சிருந்திருப்பான்…சனியன் புடிச்சவன்..’ என இறந்தவர் என்றும் பாராமல் அவரை தகாத சொற்களால் திட்டினாள்.

குழந்தைகளை காக்க அவர் செய்து வைத்திருந்த ஏற்பாடு இறுதியாக அதுவே குழந்தைகளின் வாழ்க்கையை காவு வாங்கும் என்று அமுத வாணன் எதிர்பார்க்கவில்லை.

அதுவரை சந்திரமதியின் மீது துளிர்த்திருந்த பாசமெல்லாம் மீண்டும் வன்மமாக மாறிவிட ‘ஏன்?எதற்கு?’ என்று அந்த ஆறு வயது குழந்தைக்கு புரியாமலே அவள் செய்யும் சிறு தவறுக்கெல்லாம் கடுமையான தண்டனை வழங்குவாள்.

ஒரு நாள் உச்சி வெயிலில் வெறுந்தரையில் அவளை முட்டிப்போட வைத்ததினால் அவளின் மென் கால்கள் எல்லாம் கன்றி சிவந்துவிட்டன.

அந்த சிறு குழந்தை “மம்மி வலிக்குது” என கால்கள் நடுங்க கதறியதை அவள் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை.

அவள் வலியில் கண்ணீரோடு கதறிக்கொண்டிருக்கும் போதே ஏதேச்சையாக ஒரு கோப்பை எடுப்பதற்காக சிவராமன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

அச்சமயம் மகள் தரையில் முட்டிப்போட்டு கதறியழுவதை கண்டதும் அவனின் உள்ளம் துடிக்க “மதி” என வேகமாக ஓடி வந்து அவளை தாங்கிக்கொண்டான்.

“அப்பா” என அந்த பிள்ளை கட்டியணைத்து கதறியதும் அவனிற்கு மனம் தாளவே இல்லை.

உடனே விஜயலட்சுமியின் புறம் திரும்பிய சிவராமன் “விஜி என்ன இது?இப்படி தான் நான் இல்லாத சமயம் குழந்தையை நடத்துவியா?உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா?” என ஆத்திரம் கொண்டு கத்தியவன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.

ஆனால் அவன் அறைந்ததும் கண்ணிலிருந்து நீர் பொலபொலவென கொட்டின.

அனைத்தும் வேஷம் தான்.ஆயினும் தற்சமயம் அவனிற்கு மகளே முதன்மையாக இருக்க “அழாதேடா செல்லம்…நீ வா” என குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.

உடனே அவளின் முகம் விகாரமாய் மாறிட இரவின் தனிமையில் அறைக்கு வந்த சிவராமன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவன் வந்து எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டதும் அவள் உள்ளுக்குள் பொருமினாள்.

ஆயினும்,அவன் கவனத்தை தன்புறம் திசைத்திருப்பும் விதமாக வேண்டுமென்றே சத்தமாக அழ ஆரம்பிக்க,அவளின் அழுகை சத்தம் கேட்டு எழுந்த ஆடவனிற்கு அவளின் கண்ணீரை பார்த்ததும் மனம் பொறுக்கவில்லை.

“ஏய் எதுக்கு இப்போ அழறே நீ?தப்பு உன்மேலே தான்…அவ பச்சைக்குழந்தை…உன் குழந்தையா இருந்தால் நீ இப்படி பண்ணுவியா?” என அவளின் மீதிருந்த கோபம் அவனை அவ்வாறு பேச வைத்திருந்தது.

உடனே ஓவென்று ஒப்பாரி வைத்தவள் “என்னங்க இப்படி சொல்லிட்டாங்க…அவ என் வயித்திலே பொறக்கலைனா கூட அவ என் குழந்தை தான்…முதல்ல அவ என்ன பண்ணானு தெரியுமா?பால் குடின்னு சொன்னதுக்கு நீ சொல்லறதெல்லாம் கேட்க முடியாது போடினு மரியாதையில்லாமல் பேசி செருப்பை தூக்கி மூஞ்சிலே எறிஞ்சிட்டாள்…அதுமட்டுமில்லை…நிறைய பொய் சொல்லறாள்…இதெல்லாம் கண்டிச்சா என்னையே திருப்பி கேவலமா பேசறாள்…என்கிட்ட இப்படி நடந்துக்கிறவாள் நாளைக்கு மத்தவங்ககிட்ட நடந்திக்கிட்டால் ஊரு என்னை தாங்க தப்பா பேசும்…அம்மா இருந்திருந்தால் புள்ளைய நல்லா வளர்த்திருப்பாள்…இவ யாரோ ஒருத்தி புள்ளை தானே…அதான் இப்படி வளர்த்திருக்காள்னு தப்பு பேசுவாங்க…நம்ப புள்ளையோட நல்லதுக்காக தான் இதெல்லாம் பண்ணேங்க…என்னை போய் இப்படி பேசிட்டீங்களே” என முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழவும்,அவனின் மனம் அப்படியே கரைந்துவிட்டது.

“சரி சரி பிள்ளை தப்பு பண்ணாலும் வாயிலே சொல்லி திருத்து…இனி மேல் இப்படி பண்ணாதே…புரியுதா?” என அவளை அணைத்து சமாதானம் செய்தவன்,அன்றிலிருந்து சந்திரமதி தாய் அறியாமல் குற்றப்பத்திரிகை வாசித்தாலும் “அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுவாள் மதி…அவ சொல்றதை கேளும்மா” என அவளை அன்பாக கடிந்து அனுப்பிவிட்டான்.

இனி தகப்பனிடம் கூறியும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்பது புரிந்து அனைத்தையும் மௌனமாய் ஏற்றுக்கொண்டது அந்த சிறு குழந்தை.

ஒரு தாய் இவ்வாறெல்லாம் தன் குழந்தையை நடத்தமாட்டாள் என்ற வித்தியாசம் புரிந்துக் கொள்ள தெரியாத அகவை அவளிற்கு!

ஆதலால்,அந்த குழந்தைக்கு தாய் என்றாலே இப்படி தானோ என்று விம்பமும் ஆழப்பதிந்துப்போனது.
 

முகிழ்மதி 89:

விஜயலட்சுமியின் கயமைத்தனம் இவ்வாறாக கணவன் அறியாமல் ஒரு புறம் நடந்துக்கொண்டே இருக்க, மற்றொரு புறம் அவனிடமிருந்து பணத்தை களவாடி மகனை செல்வச்செழிப்புடன் வாழ வைத்து கொண்டிருந்தாள்.

அவனோ பதினைந்து வயதிலிருந்தே அனைத்து கெட்ட பழக்கங்களையும் கற்றுத்தேர்ந்தான்.

அதைப்பற்றியெல்லாம் அவளிற்கு அக்கறையில்லை.அவளிற்கு தேவையானது எல்லாம் மொத்த சொத்தும் தன் கைக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆவேசம் மட்டும் தான்!

அதனால் சொத்து முழுவதும் அவளின் கைக்கு வருவதற்கு ஒரே வழி தேவகியின் மற்றொரு குழந்தையும் அவளின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வர வேண்டும்.

அதற்கு என்ன தீர்வு என்று சிந்திக்கும் சமயம் வீரின் தந்தையான சுரேந்திரன் சிறையிலிருந்து வெளி வந்திருந்தான்.

வெளியே வந்தவன் திருந்தி ஒன்றும் வரவில்லை.

தன்னை சிறைக்கு அனுப்பி அவன் வாழ்வை சிதைத்த தேவகியை பழித்தீர்க்கும் வெறியுடன் வந்தான் அசுரனவன்.

அவளை வஞ்சம் தீர்க்க தக்க சந்தர்ப்பம் வேண்டி காத்திருந்தவனுடன் விஜயலட்சுமி கைக்கோர்த்தாள்.

தேவகியை கண்காணிப்பதற்காக அவளின் மகனான ரஞ்சனை அனுப்பியிருந்தாள்.

அவனின் மூலமாக சுரேந்திரனின் வஞ்சமறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி சூழ்ச்சியை மேற்கொண்டாள்,அந்த சூர்ப்பனகை.

அதன்படி சுரேந்திரனை கொண்டு தாயும் மகளும் சென்றிருந்த மகிழுந்தை விபத்துக்கொள்ளாக்கி நட்சத்திராவை அவள் வசம் கொண்டு வந்திருந்தாள்.

வெளியூரில் கல்லூரியில் படிக்கும் வீரை காணும் ஆசையுடன் புறப்பட்ட தாய் மற்றும் மகள் இருவரின் நிலையும் படுமோசமாகியிருந்தது.

அரை மயக்க நிலையில் இருந்த நட்சத்திராவிற்கு வாகனத்தில் சிக்கியிருந்த இரத்தம் தொய்ந்த நிலையில் இருந்த அன்னையின் முகமும் அவளை வாகனத்திலிருந்து தூக்கிய அந்த உதிரம் படிந்த முரட்டுக்கரத்தின் நினைவு மட்டுமே இருந்தது.

அவளிற்கு தலையில் அடிப்பட்டதினால் அதற்கு முன்பான நிகழ்வுகள் எல்லாம் அவளின் நினைவிலிருந்து மொத்தமாய் அழிக்கப்பட்டிருந்தது‌.

இறுதியாக அவள் பார்த்த அந்த ஒரு காட்சி மட்டுமே அவளிற்கு அடிக்கடி கனவாக வந்து அவளை பயமுறுத்தியது.

தமையன்…தாய் என சந்தோஷமாக இருந்த அவளின் குருவிக்கூட்டை தன்னுடைய பேராசைக்காகவும் பழிவெறிக்காகவும் மொத்தமாக களைத்திருந்தாள் அந்த நயவஞ்சகி.

அந்த கோர விபத்தினால் பலமாக தாக்கப்பட்ட தேவகி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இத்தனை வருடங்கள் கடந்தும் குணமாகாமல் அப்படியே இருக்கிறார்.

நட்சத்திரா இருந்த இடத்தில் அதே வயதுள்ள வேறொரு அனாதை குழந்தையின் சடலத்தை மாற்றி வைத்துவிட்டார்கள் ரஞ்சனும் சுரேந்திரனும்!

குழந்தையின் முகம் சிதைந்திருந்தாலும் உருவமும் உடையும் அவளை ஒத்து இருந்ததால் அனைவரும் அது நட்சத்திரா என்று நம்பிவிட்டார்கள்‌.

நேரிடையாக இதில் அவர்கள் இறங்கவில்லை என்பதால் இது விபத்து போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதனால் யாவருக்கும் சுரேந்திரன் மற்றும் விஜயலட்சுமியின் மீது எவ்வித சந்தேகமும் வரவில்லை.

ஒரே நாளில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து நின்ற வீருக்கோ உயிரே உடலை விட்டு மொத்தமாய் நீங்கிய உணர்வு!

“டால்…டால்” என அவளை எந்நேரமும் தரையில் விடாமல் தாங்குபவனால் அவளின் இழப்பை ஏற்கவே முடியவில்லை.

அன்று அவன் கதறிய கதறலை கேட்டு அந்த இயற்கையே மழையின் வழியாக கண்ணீர் வடித்தது.

சுசீலாவும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே உயிரை விட்டிருந்தார்.

தேவகி பிழைப்பாரா மாட்டாரா? என்கிற நிலை…

அவனின் உயிரான தங்கையோ உலகத்தை விட்டு சென்றிருந்தாள்.

அவனிற்கு தங்கையை எண்ணி அழுவதா?இல்லை தாய் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டுவதா? என கடும்சூழ்நிலையில் அவன் தவித்தப்போது அவனிற்கு தோள் கொடுத்தான் அவனது தோழன் ரத்தினவேல் ரகுநாத பூபதி.

அன்று அவனிற்கு ஆதரவாய் நின்றவன்,இன்று வரை அவனிற்கு பக்கப்பலமாய் துணை நிற்கிறான்.

அவனிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவனின் தாயை நல்லதொரு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து அவரை பார்த்துக்கொள்வது வரை எல்லாம் அவனும் அவன் குடும்பமும் தான்!

ரத்தினவேலிற்கும் அவனது ஸ்டாரின் இழப்பு அதீத வலியை கொடுத்தன.

ஏற்கனவே துக்கத்தில் துவண்டு இருப்பவனின் முன்பு எதையும் அவன் காட்டிக்கொள்ள முடியாமல்,தன் வேதனைகள் அனைத்தையும் தனக்குள்ளே புதைத்துக்கொண்டான்.

உதிரம் கசிந்து மூர்ச்சையாகிய நிலையில் நட்சத்திராவை கொண்டு வந்து விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தான் ரஞ்சன்.

சிவராமனிடம் தேவகி ஒரு விபத்தில் இறந்துவிட்டாள் என்பது போல் பொய்யுரைத்து நட்சத்திராவை உயிர் பிழைக்க வைத்து தங்களது வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டாள்.

தேவகி இறந்துவிட்டாள் என்பது தெரிந்ததும் அவனிற்கு உயிரே போய்விட்டது.

என்ன தான் விஜயலட்சுமியை அவன் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டாலும் தேவகியை அன்று வரை அவன் நேசித்துக் கொண்டிருந்தான்.

அதனால் அவளின் இழப்பை அறிந்து அவன் கண்ணீர் சிந்தி கதறியழுதான்.

அத்தோடு இது நாள் பார்த்தேயிராத மகள் குற்றுயிராய் கிடப்பதை கண்டு அவனின் உள்ளம் பரிதவித்தது.

அந்நேரமும் விஜயலட்சுமி கூறியதை நிஜம் என்று நம்பியது தான் சிவராமனது கோழைத்தனத்தின் உச்சக்கட்டம்!

அவளை இறுதி முறையாக பார்க்க புறப்பட்ட ஆடவனை வழக்கம் போல் விஜயலட்சுமி தனக்கே உரிய தந்திரத்தின் மூலமாக அவனது மூளையை மழங்கடித்து அவனை தன் பக்கமாக திசைத்திருப்பிவிட்டாள்.

இப்படியே அவனை வாழ்க்கை முழுவதும் தன் இச்சைக்கு பயன்படுத்தி அவளிற்கு ஏற்ப அவனை பொம்மலாட்ட பொம்மை போல் இசைந்து ஆட வைத்தாள்‌.

தனது ஒரு மகளை நரகத்தில் சிக்க வைத்தது போதாது என்று மற்றைய மகளையும் அந்த அரக்கியிடம் சிக்க வைத்திருந்தான் சிவராமன்.

அவளின் காயங்கள் எல்லாம் ஆறி கண்விழித்த நட்சத்திரா அனைவருக்கும் முகிழ்மதியாகவே அறிமுகப்படுத்தப்பட்டாள்.

அவளிற்கு பழைய நினைவுகள் எதுவும் ஞாபகத்தில் இல்லை என்பதோடு,தன்னை போலவே உருவம் கொண்டிருந்த சந்திரமதியுடன் ஒரு பிணைப்பு உருவாகிவிட்டன.

அவளை போலவே தன்னுடன் அவள் வளரவில்லை என்றாலும் முகிழ்மதியை கண்டவுடன் ஒரு விதமான உற்சாகம் உண்டாக அவளும் சகோதரியை ஏற்றுக்கொண்டாள்.

கருவறையில் ஒன்றாக பத்து மாதம் பயணித்தவர்களுக்குள் பாசம் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!

சந்திரமதியை போலவே முகிழ்மதிக்கு சிவராமன் மற்றும் விஜயலட்சுமி இருவரும் தாய் தந்தையாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இப்போது இங்கு இருந்தால் அவர்களை பற்றிய அனைத்து ரகசியங்களும் வெளியாகிவிடும் என்று அவர்களுக்கு சொந்தமான பழைய சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு புதிதாக வேறொரு ஊருக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

அந்த புதிய ஊரில் இருப்பவர்கள் அனைவருக்கும் அவர்கள் நால்வரும் ஒரு குடும்பம் என்ற மாயை உருவாக்கப்பட்டது.

மனையாளின் யோசனை கண்டு ‘ஏன்?’ என்பது போல் அவன் பார்க்க,

“இல்லீங்க…அங்கியே இருந்தால் நம்ப புள்ளைங்களுக்கு நான் அவங்க அம்மா இல்லைன்ற உண்மை தெரிஞ்சிடும்…கடைசி வரை நான் அவங்களுக்கு அம்மாவா இருக்க விரும்பறேன் அதான்” என அவள் சொன்னதும் அவன் அப்படியே உள்ளம் உருகிவிட்டான்.

தன் பிள்ளைகளுக்காக அவள் சிந்திப்பதை பார்த்த சிவராமனிற்கு அவளின் மேல் நேசம் தோன்ற ஆரம்பித்தது.

முன்பே அவள் கூறுவது தான் அவனிற்கு வேதவாக்கு.இப்போது சொல்லவே தேவையில்லை.

வீட்டில் அவளின் ராஜ்ஜியம் மட்டும் தான்!

பட்டம்மாளிற்கு அனைத்து விடயங்களும் தெரியும் என்றாலும் அவரது குடும்பத்தை வேரோடு கருவுறுத்து விடுவேன் என்று அவரையும் மிரட்டி அடிப்பணிய வைத்திருந்தாள்.

அவளை பற்றி நன்கு அறிந்தவராயிற்றே அவர்?

ஆதலால்,தன் குடும்பத்து நபர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்திடுமோ என அஞ்சி,அவரும் இந்த ரகசியங்கள் யாவையும் தனக்குள்ளே போட்டு புதைத்துவிட்டார்.

சிவராமன் விஜயலட்சுமியின் அறிவரையின் பெயரில் அரசியலிலும் குதித்தான்.

அப்போது தான் புதிதாக அரசியலில் சேர்ந்திருந்ததால் அவன் அடிக்கடி சென்னை செல்ல வேண்டியிருந்தது.

அதனால் அங்கு ஒரு வீட்டை வாங்கி அவன் தங்கிக்கொண்டான்.அவ்வப்போது தனது ஊருக்கும் சென்னைக்கும் மாறி மாறி சென்று வந்த சிவராமனின் குடும்பம் பற்றி பெரிதாக யாராலும் அலசி ஆராயாமல் விடப்பட்டது.

அவன் அங்கிருக்கும் போதே குழந்தைகளை கொடூரமாக நடத்துபவள் அவள்…

அவன் இல்லையென்றவுடன் குழந்தைகளை இன்னும் அதிகமாக கொடுமைப்படுத்தினாள்‌.

முன்பே சந்திரமதி என்னும் பொம்மையை ஆட்டிவித்தவளிற்கு புதிதாக முகிழ்மதி என்ற பொம்மையும் சேர்ந்துவிட,தன் வசதிக்கு ஏற்ப ஆட்டிவித்தாள்.

இப்போது புதிதாக கிடைத்த பொம்மையில் அவளின் கவனம் முழுவதும் பதிந்ததால் சந்திரமதிக்கு அவளின் கொடுமையிலிருந்து சிறிது சலுகை தரப்பட்டன.

அத்தோடு சகோதரிகள் இருவரையும் ஒட்டவிடாமல் பிரித்து வைத்தே பார்த்துக்கொண்டாள்.

ஏனெனில்,அவர்களின் ஒற்றுமை பிற்காலத்தில் அவளது எதிர்கால திட்டத்திற்கு தடையாக வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்?

ஆதலால்,இருவரையும் ஒன்று சேர விடாமல் அவர்களை பலவீனப்படுத்தியே வைத்திருந்தாள்.

அவளின் இந்த வன்கொடுமைகள் அனைத்தும் புதிதாக அந்த குடும்பத்தில் இணைந்திருந்த முகிழ்மதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆறு வயது வரை அழகான கூட்டில் வளர்ந்த பெண்ணை கானகத்தில் தனித்து விட்டது போல் அவள் தவித்தாள்…துடித்தாள்.

முதலில் தவித்து துடித்தவளிற்கு காலப்போக்கில் அனைத்தும் பழகிப்போன ஒன்றாக மாறிற்று.

ஏற்கனவே,நடந்த விபத்தினாலும் புதிதாக விஜயலட்சுமியின் வக்கிரங்களை அனுபவிப்பதாலும் மனநிலை பாதிக்கப்படைந்திருந்த அந்த சின்னஞ்சிறிய பெண்ணிற்கு ரஞ்சனாலும் பாலியல் ரீதியாக தொல்லைகள் வர ஆரம்பித்தன.

உறவினன் என்ற பெயரில் வீட்டிற்குள் வந்த ரஞ்சன் அவனது பாலியல் வெறியை சந்திரமதியிடம் மட்டும் காட்டியிருக்கவில்லை.

இறுதி நேரத்தில் சந்திரமதியை காக்க விஜயலட்சுமி வந்துவிட,பெரிதாக எவ்வித அசம்பாவிதமும் நடந்து விடாமல் அவள் காப்பாற்றப்பட்டாள்.

ஆனால் முகிழ்மதி என்னும் எட்டு வயது பூவையை கசக்கி முகர அந்த மிருகம் போதையில் ஒரு நாள் அந்த குழந்தையின் அறைக்குள் நுழைந்துவிட்டது.

இரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் மேனியில் அவன் விரல்கள் அத்துமீறி பயணிக்க,அதில் உறக்கம் களைந்த குழந்தை உச்சக்கட்ட பயத்தில் கத்த விளைந்தது.

குழந்தையின் இதழை இறுக்கமாக பொத்திய அந்த காமூகனின் களியாட்டத்தில் அவள் உச்சக்கட்ட மிரட்சியில் தவித்து துடிக்க,அவளின் கண்ணில் நீர் ஆறாக பெருக,முகம் வெளுத்து அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் அவளிற்கு உடல் வியர்க்க மூச்சிறைக்க தொடங்கின.

இருபது அகவையின் தொடக்கத்தில் இருந்த இளைஞனின் பலத்திற்கு முன்பு அந்த குழந்தையால் வெற்றி பெற முடியுமா என்ன?

அந்த எட்டு வயது குழந்தையால் அவனோடு போராட முடியாத நிலையில் அவனிடம் சிறிது சிறிதாத தோற்க ஆரம்பித்திருந்த வேளை அது!

அவனின் கரங்கள் அவளின் மேனியில் பயணிக்கும் போது அவள் அனலில் இட்ட புழுவாய் துடித்தாள்.

அவளது உடம்பில் கத்தக்கூட தெம்பில்லை.

இன்னும் அந்த உயிர் பறவையை சிறைப்பிடிப்பது மட்டுமே அவனிற்கு மீதிமிருக்க,அதற்கு மேல் பூவையவளின் போராட்ட சக்தி முடிவடைந்தது போல் அவள் மூர்ச்சையாகியிருந்தாள்.

அவள் திடீரென்று மயங்கியதும் அதில் பயந்துப்போனவன் அவளை ஆட்கொள்ளாமலே ‘ஐய்யோ செத்தட்டாளோ?’ என அவளின் நாசியில் கைவைத்து பார்க்க, அவளிடமிருந்து மூச்சு வரவில்லை என்றவுடன்,

அதற்கு மேல் அவளை ஆட்கொள்ள முயலாமல் அவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.

நிஜத்தில் அவள் இறக்கவில்லை…அவனது தீண்டலினால் உண்டான உளப்பாதிப்பு அவளை மூர்ச்சையாக செய்திருந்தது.

அன்று அந்த காம அரக்கனால் உண்டான பாதிப்பு தான் அவளிற்கு இருக்கும் சுவாச கோளாறு நோய்!

இயற்கையாக பிறக்கும் போது அவளின் உடல்நிலையில் எவ்வித பிரச்சனையும் இருக்கவில்லை.

அந்தவொரு நிகழ்விற்கு பிறகே இருட்டு அறை,ஆண்மகனின் தொடுகை அல்லது ஆடவனின் குரல் ஏதேனும் ஒன்று நடந்தேறினாலும் அவளிற்கு அச்சம் உண்டாகும்.

ஆதலால்,அவளும் தன் கட்டுப்பாட்டை மீறி ஆவேசமாக நடந்துக்கொள்வாள்.

அத்தோடு கனவில் விபத்து சம்பவம் வந்தாலும் ,அவளிற்கு மூச்சிறைக்க ஆரம்பித்துவிடும்.

அந்த எட்டு வயதில் உண்டான அந்த கொடூர பாதிப்பின் விளைவு பிற்காலத்தில் சாதாரணமாக தனது கணவனின் தொடுகையை கூட அவளை ஏற்க விடாமல் பயம் கொள்ள வைத்தது.

அந்தவொரு சம்பவம் அவளின் மனதை மிகவும் அதிகமாக சேதாரமாக்கியிருந்தன.

காலையில் அவளறையில் மயங்கியிருந்த பெண்ணை கண்டு கத்தியவர் பட்டம்மாள் தான்!

கெட்டத்திலும் நல்லாதாக அவளின் மயக்கம் தான் அவளின் கற்பை காப்பாற்றியிருந்தன.

மருத்துவரும் அவள் இருளில் எதையோ கண்டு பயந்து இருக்கிறாள் என்று எண்ணி அதற்குரிய சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.

இதில் ஒரு குரூரம் என்னவென்றால் அவளிற்கு நேர்ந்த கொடுமைகள் எதுவும் அவளின் ஞாபகத்தில் இல்லை.

ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த முகிழ்மதிக்கு இந்த சம்பவமும் ஒரு கனவு போலவே அவளின் நெஞ்சில் பதிந்துப்போனது.

அதனால் ரஞ்சன் அனைவரிடமும் சிக்காமல் தப்பித்திருந்தான்.

ஆனால் ஒரு கயவனை பற்றி மற்ற கயவனுக்கு தெரியாதா என்ன?

விஜயலட்சுமி சரியாக கணித்து மகனை கடுமையாக எச்சரித்திருந்தாள்.

“டேய் பரதேசி…தேவையில்லாமல் எதையாவது பண்ணி காரியத்தை கெடுத்திடாதே…அவளுங்க இரண்டு பேரும் இருப்பத்தியொரு வயசு வரைக்கும் உயிரோட வேணும்…அதுக்கு பிறகு என்னவோ பண்ணித்தொலை” என எரிச்சலாக திட்ட,

“சரி‌…சரி…” என தலையாட்டியவனிற்கு முகிழ்மதியின் மீதான காம எண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை.

சந்திரமதி அச்சமயம் அவனிற்கு அஞ்சி பள்ளி விடுதியில் சேர்த்துக்கொண்டாள்.

அதனால் அவனின் காம பசி முழுவதும் முகிழ்மதியின் மீது திரும்பின.

அவள் மிகவும் அமைதியான பெண் என்பதோடு இந்த விடயத்தை அவள் வெளியில் கூறாததினால் அவனிற்கு துணிச்சல் வந்திருந்தது‌.

அவள் எட்டு வயது குழந்தை என்பதெல்லாம் அவனிற்கு உறைக்கவே இல்லை.

அவளின் உடலை வெறும் சதைப்பிண்டமாகவே அவன் பார்த்தான்.

அதனால் மற்றொரு நாள் இரவு அவளின் அறைக்குள் அவன் பூனைப்போல் நுழைவதை நல்லவேளையாக சிவராமன் பார்த்திருந்தான்.

அவ்வளவு தான்?

தன்னுடைய பெண்ணிடமே தவறாக நடக்கமுயன்றவனை அடி வெளுத்து வாங்கிய கையோடு அவனை வீட்டை விட்டு வெளியே துரத்துவிட்டிருந்தான்.

“இனி என் வீட்டுக்கு வந்தால் போலீஸிலே புடிச்சு கொடுத்திருவேன்…வெளிய போடா பரதேசி பயலே” என எரிமலை குழம்பென கொதித்தவரை பார்ப்பதற்கு விஜயலட்சுமிக்கே சிறிது அச்சமாக இருந்தது.

தன் மனைவியிடம் அதே ஆவேசத்தோடு திரும்பியவன் “இனி அவன் இந்த வீட்டு படியிலே காலு வைச்சான்…அவன் உயிர் உடம்புலே இருக்காது…எவ்வளவு தைரியம் இருந்தால் என் பொண்ணு மேலே கை வைக்க துணிச்சிருப்பான் ராஸ்கல்…அவனோட நீ பேசறதை பார்த்தேன்…உன்னையும் வீட்டை விட்டு துரத்திடுவேன்…ஜாக்கிரதை” என ருத்ர மூர்த்தியாக மாறி கர்ஜித்தவனை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கி “சரி” என்றாள்.

அன்று தான் அவனின் கோபத்தை அவளால் முழுமையாக பார்த்திருந்தாள்.

அதனால் எக்காரணத்தை கொண்டும் தன்னை பற்றிய ரகசியத்தை அவனிடம் வெளிப்படுத்திக்கொள்ள கூடாது என கவனமாக இருந்தாள் அவள்.

அத்தோடு தன் மகன் வெளியே செல்வதற்கு முழுமுதற் காரணம் முகிழ்மதி என்று அவளின் சீற்றம் அனைத்தும் சிறியவளின் மீது திரும்பியது‌.

அன்று தொட்டு முகிழ்மதிக்கு தினம் தினம் நரகத்தை காட்ட ஆரம்பித்தாள் விஜயலட்சுமி.

அந்த அப்பாவி குழந்தையும் அவளின் வெஞ்சினத்தில் சிக்கிச்சின்னாப்பின்னமாகி,அத்தனை வருடங்களாய் அனைத்து குரூரங்களையும் அனுபவித்து‌ இப்போது ரத்தினவேல் என்னும் ரட்சகனால் காக்கப்பட்டிருந்தது.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top