முகிழ்மதி 53:

மயங்கி விழுந்த பெண்ணவளை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தது வேறு யாருமல்ல அதே திருநங்கை பெண்மணி தான்!
மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்கள் கண்விழிக்காமல் இருந்த சந்திரமதி மூன்றாம் நாள் மெதுவாக விழி திறந்தாள்.
தன்னருகே நின்றிருந்த அந்த பெண்மணியை அவள் குழப்பமாக ஏறிட “நீ ரோட்டிலே மயங்கி விழுந்திட்டே பாப்பா…நான் தான் ஆஸ்பத்திரியிலே உன்னை கொண்டு வந்து சேர்த்தேன்…கூட பார்த்துக்க யாருமில்லைனு வேறுவழியில்லாமல் உன்னோடவே இருந்தேன்…உன் சொந்தகாரங்க நம்பர் இருந்தா சொல்லு பாப்பா…நான் அவங்களுக்கு போன் போட்டு வரசொல்லறேன்” என மிருதுவான குரலில் கூறிய பெண்மணியை மனம் கலங்கி பார்த்தாள்.
உறவுகளே அவளை கைவிட்ட நிலையில் யாரோ ஒரு பெண்மணி தன்னை இரண்டு நாளாக கவனித்துக்கொண்டதை நினைக்கும் போது அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
இதற்கு முன்பு திருநங்கைகள் என்றாலே அவளின் பார்வை அலட்சியமாக தான் அவர்கள் மேல் பதியும்.
ஆனால் இன்றோ அந்த பெண்மணி தான் அவளின் உயிரை காத்திருக்கிறார்.
அவளிற்கே தன்னை நினைத்து அவமானமாக இருக்க,அவள் இதழ்கடித்து தலைக்குனிந்தாள்.
அவள் மௌனமாக இருப்பதை கண்ட அந்த பெண்மணிக்கு ஏதோ புரிப்பட்டன.
அதனால் “நீ எழுந்திரிச்சவுடனே ஏதாவது சாப்பிட கொடுக்க சொன்னாங்க பாப்பா…முதல்ல சாப்பிடு…மீதிய அப்புறம் பேசிக்கலாம்” என்று கனிவாக சொல்லிவிட்டு அவளிற்கான உணவை வாங்கி வந்து அளித்தார்.
அவளோ அவர் கொடுத்த உணவை வாங்காமல் மௌனமாக அமர்ந்திருப்பதை கண்ட பெண்மணி “பாப்பா என்னை பார்த்தால் உனக்கு அருவருப்பா இருக்குன்னு தெரியுது…ஆனால் அதுக்காக சாப்பாட்டு மேலே கோவத்தை காட்டாதே கண்ணு…கொஞ்சூண்டு சாப்பிடு..” என கழிவிரக்கத்துடன் கூற,
சட்டென தலையுயர்த்திய சந்திரமதி அவரின் முகத்தையே சில வினாடிகள் அசையாமல் பார்த்தாள்.
அவரின் முகத்தில் தென்பட்ட வேதனையான பாவனையை கண்டவளிற்கு நெஞ்சம் சுட்டது.
அவள் இதற்கு முன்பு பல மனிதர்களை அவமதித்து கடந்திருக்கிறாள்.
ஏனெனில்,தாய் அவளின் மனதில் ஏற்படுத்திய காயத்தால் அவளால் அவ்வளவு எளிதில் யாரையும் நம்ப முடியாது.
ஆனால் இன்றோ அந்த பெண்மணி அவளை தலைக்கீழாக புரட்டி போட்டிருந்தார்.
மனிதர்களின் தோற்றத்தை வைத்து எதையும் கணக்கிடக்கூடாது என்று!
அந்த பெண்மணி பார்ப்பதற்கு தான் ஆறடி உயரத்தில் முரட்டுத்தனமான தோற்றத்தில் இருந்தார்.
அவரின் மனமோ கறந்த பாலை விட தூய்மையானது.
தன்னை காத்தவரின் முகத்தில் படிந்திருந்த துக்கம் தாளாமல் “ப்ச் நான் உங்களை பார்த்து அருவருப்பா இருக்குன்னு சொன்னனா?நீங்களே ஏன் இப்படி நினைக்கிறீங்க?முதல்ல சாப்பாட்டை கொடுங்க…எனக்கு பசிக்குது” என படபடவென பேசி அவரிடமிருந்து உணவை வாங்கி மர கரண்டியில் அள்ளி சாப்பிட ஆரம்பித்தாள்.
ஆனால் அவளின் கை நரம்பில் ஊட்டச்சத்திற்காக திரவ உட்செலுத்தலின் வழியாக ஊசி சொருகப்பட்டிருந்ததால் அவளால் உணவை அள்ளி சாப்பிட முடியவில்லை.
நரம்பில் குத்தியிருந்த அந்த ஊசி கையில் விண்விண் என்று வலியை கொடுக்க அவளோ “ஸ்ஆஆ” என பல்லைக்கடித்து மெதுவாக அலறினாள்.
அவளின் கஷ்டத்தை கண்ட அந்த பெண்மணி பதறிப்போய் “பாப்பா என்னாச்சு வலிக்குதா?டாக்டர் வந்து செக் பண்ண பிறகு தான் அந்த டிரிப்பை எடுப்பாங்களாம்…என்கிட்ட கொடு நான் ஊட்டிவிடறேன்” என எவ்வித முகச்சுளிப்புமின்றி அவர் அந்த பொட்டலத்தை வாங்கி அவளிற்கு ஊட்டிவிட முனைந்தார்.
அவளோ “இல்லை நானே…” என சங்கடமாக அவரிடமிருந்து அதனை வாங்க முற்பட்டவள் “ஸ்ஆ” என வலியில் கையை உதறி கீழே இறக்கினாள்.
“ப்ச் பாப்பா…கையை கீழே போடு…ஊசி குத்தி வலிக்குது பாரு…நான் ஊட்டிவிடறேன் இரு” என மென்மையாக கடிந்து அவரே அவளிற்கு ஊட்டிவிட,அவளிற்கோ அடுத்த கணமே கண்கள் கலங்கிப்போயின.
விஜயலட்சுமி அவளிற்கு பல முறை ஊட்டியிருக்கிறார் தான்.ஆனால் ஒரு நாள் கூட இதுப்போலான ஒரு அன்பை அவள் உணர்ந்ததில்லை.
அவரின் பாசத்தில் எப்போதும் ஒரு போலித்தனம் மட்டுமே வெளிப்படும்.
இன்றோ இந்த முரட்டு பெண்மணிக்குள் இருந்த இளகிய இதயம் அவளின் கண்களை ஆனந்தத்தில் கசிய வைத்தன.
அவளின் விழிகள் கலங்குவதை கண்டு “என்னாச்சு பாப்பா?காரமா இருக்கா?” என பாவமாக கேட்க,
அவளோ அழுதுக்கொண்டே “இல்லை” என தலையாட்டினாள்.
‘அப்புறம் எதுக்கு?’ என கேட்க வந்த பெண்மணியின் வாய் சட்டென மூடிக்கொண்டது.
அவளிடம் எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கலாம் என்று அவளின் மனகாயம் அறிந்து நடந்துக்கொண்டார் அவர்.
அதனால் தனது முந்தானையால் அவளின் கண்ணை துடைத்துவிட்டவர்,மீண்டும் அவளிற்கு ஊட்டிவிட ஆரம்பித்தார்.
அவளோ நெஞ்சில் ஏறிய பாரத்துடன் உணவை உட்கொண்டாலும்,அவளிற்கு பாதிக்கு மேல் உணவு இறங்க மறுத்தது.
அவள் நன்றாக உணவருந்தி பல நாட்களாகிவிட்டதால் அவளால் சாப்பிட முடியவில்லை.
அத்துடன் ஐந்து நாட்களாக பட்டினி கிடந்தது எல்லாம் சேர்த்து அவளிற்கு குமுட்ட செய்ய,அதை பார்த்துவிட்டு “ஓ..உமட்டுதா?அப்போ போதும் பாப்பா…நீ ஓய்வெடு” என அவரே அவளின் வாயை துடைத்துவிட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தார்.
அவரின் செயல்களை எல்லாம் படுத்துக்கொண்டே விழி அகற்றாமல் பார்த்திருந்தாள்.
அந்த மருத்துவமனை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.
ஓரளவு வசதியான மருத்துவமனையில் தான் அவர் அவளை சேர்ப்பித்திருந்தார்.
ஆனால் அவரை பார்ப்பதற்கு அவ்வளவு வசதியானவர் போலில்லாமல் மிகவும் எளிமையாக இருந்தார்.
அவரின் உயரத்திற்கு தகுந்த மேனி,தலை முடியை தூக்கி கொண்டையிட்டு நெற்றியில் பெரிய சிவப்பு பொட்டை வைத்திருந்தார்.
கழுத்தில் ஒரு மூன்று பவுன் தங்க சங்கிலி,காதில் ஒரு பெரிய தோடு…கையில் கண்ணாடி வளையல்…
அவர் கட்டியிருந்ததோ ஒரு சாதாரண கசங்கிய புடவை தான்!
அதேப்போல் அவரின் கணீர் குரலுக்கு சற்றும் பொருந்தாத மென்மை அவரிடம்!
அதுவும் அவளிடம் மட்டுமே என்று கண்விழித்த ஒரே நாளிலே அவள் அறிந்துக்கொண்டாள்.
ஏனெனில்,அவளை தவிர மற்றவர் அனைவரிடமும் அவர் குரலின் ஸ்ருதி எகிறியே இருந்தது.
அவரை பார்ப்பதற்கு வசதியான போல தெரியவில்லை.
ஆனாலும் அவளை தன் வசதிக்கு மீறி தான் அங்கு வைத்து செலவு செய்கிறார் என்பது புரிந்திட,அவளின் மனம் தவித்தது.
இதுவரை அவருக்கு நன்றி கூட அவள் உரைக்க வில்லை.
அதனை அவர் எதிர்பார்ப்பது போலவும் தெரியவில்லை.
அவள் பெயர் தெரியாது…ஊர் தெரியாது…அவளை பற்றிய ஒரு தகவலும் அவருக்கு தெரியாது.
தான் ஈன்றெடுத்த ஒரு மகளை போல் அவளை தாங்கினார் அவர்.
அவளுமே அவரின் பெயரை கூட கேட்கவில்லை.
தனக்கு கழிவறை செல்வதற்கு உதவி செய்தவரிடம் “உங்க பேரு என்ன?” என நலிந்தக்குரலில் அவள் வினவ,
அவரோ அவளை மெத்தையில் கால் நீட்டி சாய்வாக அமர வைத்துவிட்டு “விஜயலட்சுமி பாப்பா” என மெல்லிதாக சிரித்துக்கொண்டே…
அதை கேட்டவளிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“எ…ன்ன சொன்னீங்க?” என அவள் திக்கி திணறி கேட்க,
அவரோ “விஜயலட்சுமினு சொன்னேன் பாப்பா…ஏன் என்னாச்சு பாப்பா?ஏதாவது பிரச்சனையா?” என புருவம் சுருக்கி வினவ,
அவளோ தலைகவிழ்ந்து “இல்லை எனக்கு அந்த பேரிலே ஒருத்தரை தெரியும்” என முணுமுணுத்தவாறு விழி மூடிக்கொண்டாள்.
ஒரே பெயர்…ஆனால் இரண்டு நபர்களுக்கு இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம்!
அவரிடம் தன் தாயை பற்றி குறிப்பிட கூட விருப்பமில்லை.
தற்சமயம் அளவிற்கு அதிகமாக அவள் வெறுக்கும் ஒரே நபர் அவர் தான்.
தந்தையை பற்றி சிந்திக்க அவள் தயாராகவே இல்லை.
எங்கு அவர் தன் தாயை பற்றி கேள்விக்கேட்டுவாரோ என்ற பயத்தில் விழி மூடிக்கொண்டாள் அவள்.
அதனை உணர்ந்த பெண்மணியும் “நீ கொஞ்ச நேரம் ஓய்வெடு பாப்பா…உன் உடம்பு இன்னும் நல்லாகலை…இன்னும் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருந்திட்டு தான் கிளம்பணும்னு டாக்டர் சொல்லிட்டாரு…நான் போய் உனக்கு மருந்து வாங்கிட்டு வர்றேன்” என அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதன்பிறகே சந்திரமதி கண்விழித்தாள்.
அவளிற்கு ஏனோ அன்று தங்கையின் நினைவு அதிகமாக வந்தது.
அவளை காண வேண்டும் போல் தோன்றின.
ஆனால் தன்னுடைய கையறு நிலையை எண்ணி துடித்துப்போனவளாய் மௌனம் காத்தாள்.
இப்படியே மருத்துமனையில் இருந்த ஒரு வாரமும் கழிந்தது.
அவரின் கவனிப்பிலும் அன்பிலும் அவளின் உடல் நன்றாகவே தேறிவிட்டன.
அவளின் மனகாயம் மட்டும் இன்னும் ரணமாய் வலித்துக்கொண்டிருந்தது.
அங்கிருக்கும் வரை அவளை எந்த குறையுமின்றி அவர் கவனித்திருந்தார்.
இப்போது மீண்டும் அந்த கொடூரமான உலகத்திற்குள் அவள் தனித்து செல்ல வேண்டும்.
அதே நிராதரவான நிலையில் அவள் நடுரோட்டில் நிற்க வேண்டிய இழிநிலை!
நாளை மருத்துவமனையிலிருந்து செல்லலாம் என்று கூறியதும் சந்திரமதியின் முகம் துயரத்தில் வெளிறிவிட்டது.
அவளின் முகம் பார்த்து காரணம் அறிந்த பெண்மணி “பாப்பா உன்னை என் கூட கையோடு கூட்டிட்டு போக தான் ஆசை…ஆனாக்க பாரு…என்னை சுத்தி ஒரே காவாலி கூட்டமிருக்கு…நான் இருக்கிற ஏரியாவிலே என்னையே என்ன சேதினு கேட்டுட்டு போயிடறானுங்க…உன்னை அங்க கூட்டிட்டு போய் வைச்சுக்கிறது எல்லாம் சரிவராது…உனக்கு வேற யாராவது இருக்காங்களா?சொல்லு கண்ணு…நான் கொண்டு போய் விடறேன்”
அவள் யாரென்று சொல்லுவாள்.
அவளிற்கென்று ஒருவருமில்லையே?
இந்நிலையில் அவரிடம் பதில் பேச முடியாமல் தலைக்குனிந்த பெண்ணவள் “யாருமில்லை” என்பது போல் கண்ணீருடன் தலையாட்டியதும் அந்த திருநங்கை பெண்மணிக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அவர் முன்பே எதிர்பார்த்தது தான்!
ஆனால் அதனை அவளின் வாயால் சொல்லி கேட்கும் போது நெஞ்சம் வலித்தது.
“சரி பாப்பா…உன்னை ஒரு லேடிஸ் ஹாஸ்டெல்ல சேர்த்து விடறேன்…அங்கயே இரு…வயசு பொண்ணு தனியா இருக்கிறது தெரிஞ்சால் கொத்திட்டு போக தான் பார்ப்பாங்க…அங்க இருக்கிறது தான் உனக்கு பாதுகாப்பு” என அவளை ஒரு மகளிர் விடுதியில் சேர்த்துவிட்டார்.
அவளின் கையில் ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை கொடுத்தவர் “இதை செலவுக்கு வைச்சுக்க பாப்பா…அடுத்த முறை வரும் போது அதிகமா தர்றேன்…இப்போதைக்கு இவ்வளவு தான் கையிலே இருக்கு” என்றவரின் அன்பு அவளை அடியோடு சாய்த்தது.
அவரின் எதிர்பார்ப்பில்லாத அன்பு அவளை மூச்சு முட்ட செய்தது.
அவர் நினைத்திருந்தால் அவள் மயங்கி விழுந்த அன்று மருத்துவமனையில் சேர்ப்பித்ததோடு கிளம்பியிருக்கலாம்.
ஆனால் தனக்காக தன்னுடைய நலனுக்காக உடனிருந்து இத்தனையும் செய்தவரை…இன்னும் செய்ய காத்திருந்தவரின் பாசத்தை அவளால் நிராகரிக்கவே முடியவில்லை.
அவரிடமிருந்து உதவியை மட்டுமே வாங்கிக்கொண்டிருப்பது அவளிற்கு ஒரு மாதிரி இருக்க,அவர் அளித்த பணத்தை அவரிடமே கொடுத்தவள் “நீங்க இதுவரை செஞ்ச உதவியே எனக்கு பெருசு தான்ம்மா…எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் என் மேலே அன்பு காட்டின உங்களுக்கு வெறும் நன்றி மட்டும் சொல்லி நான் கொச்சைப்படுத்த விரும்பலை…அதேசமயம் உங்களோட வசதிக்கு மீறி தான் இதெல்லாம் எனக்கு செய்திருக்கீங்கனு தெரியும்…என்கிட்ட இப்போதைக்கு இருக்கிறது இந்த தோடு மட்டும் தான்…இதை வைச்சுக்கோங்கம்மா” என அவரிடம் தன் தங்க காதணியை கழட்டி கொடுத்தாள்.
ஆனால் அவரோ காதணியை அவளின் கையோடு வைத்து அழுத்தியவர் “அட பாப்பா…முதல்ல தோட்டை போடு…இப்போ தானே நன்றி சொல்லி கொச்சைப்படுத்த விரும்பலைனு சொன்னே…ஆனால் அடுத்த நிமிஷமே என்னை அவமானப்படுத்தறே பார்த்தியா?” என சற்றே ஆதங்கத்துடன் அவர் பேச,
அவளோ “இல்லை என்னயிருந்தாலும்…” என தயக்கத்துடன் தொடங்கும் போதே,
“நீ எதுவும் சொல்ல வேணாம் பாப்பா…எனக்கு இந்த பணம் காசெல்லாம் முக்கியமில்லை..இதோ கொஞ்ச நேரம் முன்னாடி அம்மான்னு சொன்னீயே எனக்கு அது தான் இந்த உலகத்திலே பெருசு…எங்களை மனுஷங்களா பார்த்து மதிக்கிறவங்களே ரொம்ப குறைவு தான் பாப்பா…நீ என்னை அம்மான்ற ஸ்தானத்தில் வைச்சு கூப்பிட்ட பாரு…எனக்கு அது போதும்…” என்றவாறே கண்களில் கசிந்த நீரை சுண்டிவிட்டு பேசினார் அந்த முரட்டு பெண்மணி.
“அம்மா அழாதீங்க…எனக்குன்னு யாருமில்லைனு தவிச்ச சமயம் எனக்காக நீங்க இருந்தீங்க…இனி உங்களுக்காக நான் இருக்கேன்… அழாதீங்கம்மா…” என அவரின் கரம் பற்றி பேசியவளின் விழியிலும் கண்ணீரின் சாயல்கள்!
தாய் மகள் உறவு என்பது இரத்த பிணைப்பினால் உருவாவது இல்லை.
எந்த வித எதிர்பார்ப்புமின்றி தூய்மையான அன்பை காட்டி அரவணைக்கும் ஒவ்வொருவரும் நமக்கு தாய் தான்!
தனக்கு எந்த வகையிலும் சொந்த மில்லாத அவரின் இந்த அன்பு அவளின் மனதையும் நெகிழ வைத்தது.
அவளை எந்தவொரு சூழ்நிலையிலும் அவர் கைவிடாத நிலையில் தானும் இனி அவருக்கு உறவாக இருந்து அவரை கைவிடக்கூடாது என்று தனக்குள் உறுதிப்பூண்டாள் சந்திரமதி.
இதுநாள் வரை மனிதர்களிடம் தகுதி தராதரம் பார்த்து பழகிய சுயநல பெண்ணின் வாழ்வு அந்நொடி முடிவுற்று,இனி அன்பினால் சுயமரியாதை கொண்டு எழுச்சி பெறும் பெண்ணவளது அத்தியாயம் தொடங்கியது.
***************
ஜித்தேந்திரன் தன் அறையில் போடப்பட்டிருந்த நீள்விரிக்கையில் தலையில் கைவைத்தப்படி அமர்ந்திருந்தான்.
அவளை திருமணத்திற்கு பேசி முடித்ததிலிருந்து ஜித்தேந்திரனின் நிம்மதி பறிப்போனது தான் மிச்சம்!
ஒரு நேரம் அவனை மனதால் நோகடிப்பவள்.மற்றொரு நேரம் அவனை குளிர வைப்பாள்.
அவள் ‘நல்லவளா?கெட்டவளா?’ என அவனிற்கே பெரும் குழப்பமாக இருந்தது.
யாரிடமும் தன் மன குழப்பத்தை பற்றி பேச முடியாமல் தவித்துப்போனான் அந்த இளைஞன்.
அன்று முகிழ்மதியை அவள் அவதூறாக பேசியதற்கு பிறகு அவனிடம் அவள் நல்லவிதமாகவே நடந்துக்கொண்டாள்.
‘சரி அன்னைக்கு ஏதோ தெரியாமல் பேசிட்டாள் போலே…இனி அப்படி பேசமாட்டாள்’ என அவன் ஒரு முடிவிற்கு வருவதற்குள் அடுத்ததாக ஒரு காரியத்தை செய்து ‘அடச்சை’ என அவனை புலம்ப வைத்தாள்.
முகிழ்மதி 54:

அவனின் குழப்பம் நிறைந்த மனதிற்கு காரணம் ரோகிணி தான்!
அவள் இயல்பில் எப்படியான பெண் என்று அவனால் கணிக்கவே முடியவில்லை.
ஏனெனில்,ஒவ்வொரு முறை அவளை அவன் சந்திக்கும் போதும் அவள் ஒவ்வொரு விதமாக நடந்துக்கொள்கிறாள்.
அன்று முகிழ்மதியை அவமதித்த தினத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்க வந்த ரோகிணி “ஜித் ரியலி ஐயம் சாரி. என்னயிருந்தாலும் உங்க அண்ணியை அப்படி நான் பேசியிருக்கக்கூடாது…சோ,அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கிற விதமா அவங்களுக்காக இந்த கிஃப்ட் நான் வாங்கிட்டு வந்திருக்கேன்…பிளீஸ் வாங்கிக்கோங்க” என ஒரு விலையுயர்ந்த கைப்பையை அவனிடம் நீட்ட,
அவனோ நம்ப முடியாமல் அவளின் முகத்தையே அசையாமல் பார்த்தான்.
ஆனால் அவளின் முகமோ வருத்தத்தில் தொய்ந்திருந்தது.
அப்படி தான் அவள் தன் முகத்தை வைத்திருந்தாள்.
அவளிற்கு வெற்றி பெற்று தான் பழக்கம்!
அதனால் வெற்றி வாகை சூட அவள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தாள்.
அதன்பொருட்டே இந்த அடக்கமும் வருத்தமும்!
ஜித்தேந்திரனிற்கு அவளை நம்பவும் முடியவில்லை.அதேசமயம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ஆனால் அவனின் இளகிய குணம் அவளை நம்ப வைத்தது.
அதனால் எழுந்த ஒரு பெருமூச்சுடன் “சாரி கேட்கிறதெல்லாம் ஓகே…பட் பையை எதுக்கு என்கிட்ட கொண்டு வந்து கொடுக்கிறே அண்ணிக்கிட்ட நீயே கொடு…அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என அப்போதும் முகிழ்மதிக்காக அவன் சிந்தித்து பேசினான்.
அதை பார்த்தவளிற்கோ உள்ளுக்குள் திகுதிகுவென பற்றி எரிந்தது.
‘அந்த பிச்சைக்காரிக்கு நான் என் கையாலே கொடுக்கணுமா?பிளடி பி**’ என மனதிற்குள் முகிழ்மதியை வறுத்தெடுத்தவள் “சரி விடுங்க ஜித்…அடுத்த முறை பார்க்கும் போது நானே அவங்ககிட்ட கொடுத்திடறேன்” என அவனிற்கு சந்தேகம் வராத வகையில் நல்லவிதமாக நடித்தாள்.
ஜித்தேந்திரனிற்கு அவளை முழுமையாக நம்ப முடியவில்லை என்றாலும்,தற்சமயம் “சரி” என அவளிற்கு தலையாட்டி வைத்தான்.
மற்றொரு நாள் வீட்டிற்கே வந்து ரோகிணி முகிழ்மதியிடம் பையை நீட்ட,அவளிற்கு அவளை பார்த்தாலே இதயம் அதிவேகத்தில் படபடத்தன.
அதனால் அவள் மிரட்சியுடன் அவற்றினை வாங்காமல் பின்னடைய,அவளிற்கோ செருப்பால் அடித்த உணர்வு!
ஏற்கனவே அவளின் மீது அளவுக்கடந்த கோபத்தில் இருந்தவளிற்குள் இப்போது வன்மம் அதிகரித்தது.
‘உன்னை ஒரு நாள் வைச்சுக்கிறேன்டி’ என அவள் மனதிற்குள் வன்மத்துடன் எண்ணிக்கொள்ள,
அச்சமயம் அங்கு வந்த விஜயேந்திரன் “முகிழ் மருமக தான் அதை ரொம்ப நேரமா நீட்டிட்டு இருக்காளே…வாங்கிக்கோம்மா” என இடைப்புகுந்து கூறியதும்,
அவளோ அப்போதும் தயங்கினாள்.
ஏனோ அவளை பார்க்கும் போதெல்லாம் விஜயலட்சுமியின் மறு பிம்பத்தை பார்ப்பது போலிருந்தது.
அதனால் உள்ளுக்குள் எழுந்த பதைபதைப்புடன் மௌனம் காக்க “அட வாங்கிக்கோங்க முகிழ்மதி…இது ஜஸ்ட் ஹார்ட் வார்மிங் கிஃப்ட் தான்…வாங்கிக்கோங்க” என வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டே அவளின் கையில் பரிசை திணித்தாள்.
முகிழ்மதிக்கோ தன்னை பார்த்து சிரிக்கும் பெண்ணிடம் பதிலுக்கு புன்னகையை தருவதா இல்லை அமைதியாகி இருப்பதா என்று ஒன்றும் புரியவில்லை.
வேறுவழியின்றி இறுதியாக ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
அவளோ “சோ ஸ்வீட் ஆஃப் யூ” என வன்மத்தை அடக்கிய சிரிப்புடன் தமயந்தியிடம் திரும்பினாள்.
அவளிற்கோ இவளின் செயல்கள் அனைத்தும் போலித்தனமாகவே இருக்க,நீள்விரிக்கையில் கடுகடுவென அமர்ந்திருந்தாள்.
ரோகிணியோ முகத்தை உம்மென்று வைத்திருந்த தமயந்திடம் வந்தவள் “ஐயம் சாரி தமயந்தி…நான் கொஞ்சம் பொசசிவ்…அதான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன்…என்னை மன்னிச்சிடுங்க…இனி இப்படி நடந்துக்க மாட்டேன்” என அவளிடமும் இறைஞ்சதலாக கேட்டு நாடகமாட,
‘ஷப்பா…என்னம்மா நடிக்கிறா பாரு…இவ ஆக்ட்டிங்கிலே ஸ்ரீ தேவியே தோத்திடுவாங்க…பட் கண்ணிலே அப்பட்டம்மா பொய் தெரியுது…சரியான பொய்க்காரி’ என மனதிற்குள் திட்டிக்கொண்டே அவளை வெகுண்டு நோக்கினாள்.
ரோகிணியும் தமயந்தியின் பார்வையை கண்டுவிட்டு ‘இவ ரொம்ப டேன்ஜரஸ் இவகிட்ட பார்த்து தான் நடக்கணும்’ என தன்னை தானே எச்சரித்துக்கொண்டு அவளை பாவமாக நோக்கினாள்.
தமயந்தி அவளிடம் பரிசை வாங்காமல் இருப்பதை கண்ட விஜயேந்திரன் “லட்டு என்ன பழக்கம் இது?அண்ணி கொடுக்கிறதை வாங்கு” என அதட்டவும் வேறுவழியின்றி பையை வாங்கிக்கொண்டாள்.
ஆனால் மனதிற்குள் ‘அண்ணியாம் அண்ணி…போடி பன்னீ’ என சிடுசிடுப்புடன் அதை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ்” என வேண்டாவெறுப்பாக உரைத்தாள்.
“இட்ஸ் ஓகே தமயந்தி” என கனிவாக புன்னகைத்தவள் அடுத்தடுத்து அனைவருக்கும் ஒரு பரிசை எடுத்து கொடுத்திருந்தாள்.
விஜயேந்திரனிற்கு தலைகால் புரிப்படவில்லை.
அவருக்குள் அப்படியொரு சந்தோஷம்!
அவர் பார்த்து கொண்டு வந்த மருமகள் தவறை உணர்ந்து நடந்துக் கொண்ட விதம் பெருமிதமாக இருந்தது.
தன்னுடைய முடிவு சோடை போகவில்லை என்று கர்வமாக உணர்ந்தார்.
ரோகிணியின் செயலில் ஜித்தேந்திரனிற்கு ஓரளவு மனம் சமாதானமடைந்தது.
‘பரவாயில்லை…தப்புன்னு சொன்னவுடனே திருத்திக்கிட்டாளே…கொஞ்சம் நல்லப்பொண்ணு தான் போலே’ என நிம்மதியுற்றான்.
ஆனால் அவனின் ஆசுவாசத்திற்கு ஆயுள் குறைவு என்று அக்கணம் அவன் அறியவில்லை.
அவர்கள் இருவரையும் தவிர மற்ற அனைவருக்கும் அவளின் சுயரூபம் தெரிந்திருந்தது.
ஜித்தேந்திரனின் தாய் வானதிக்கு சொல்லவே தேவையில்லை.
ஜித்து என்றால் அவருக்கு கொள்ளை பிரியம்!
அவனுமே தாயிடம் பயங்கர செல்லம்..
சிறு வயதிலிருந்தே அவரின் முந்தானையை பற்றிக்கொண்டே திரியும் மகனின் மீது யாருக்கும் தான் பாசம் இருக்காது.
மற்றவரின் மீதும் அவருக்கு அதே அளவு அன்பு இருந்தது.
ஆனால் ஜித்துவின் மீது ஒரு நூல் அளவு அதிக அன்பு இருந்தது.
அவனிற்கும் தந்தையை விட தாயின் மீது அன்பு மிகையாக இருக்கும்.
அதனால் தனது செல்ல புதல்வனுக்கு இந்த பெண் அவசியம் தானா என அவருக்குள் ஒரு உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது.
கணவனிடம் அதைப்பற்றி பேசியதற்கு அவரோ “உன் திருவாயை மூடிட்டு இருடி…தேவையில்லாமல் எதையாவது சொல்லி கல்யாணத்தை கெடுத்துவிட்டராதே” என விஜயேந்திரன் அவரை அதட்டி அடக்கிவிட்டார்.
அதற்கு மேலும் அந்த பெண்மணியால் எதுவும் செய்ய முடியவில்லை.
கணவன்,மாமியார் மற்றும் பிள்ளைகள் என இவர்களையே உலகமாய் கருதி வாழ்ந்தவருக்கு அதற்கு மேல் எதையும் செய்ய துணிவில்லை.
இத்தனைக்கும் அவரும் கல்லூரி வரை சென்று படித்து பட்டம் பெற்ற பட்டதாரி தான்!
ஆயினும்,அவராலும் மகனது விஷயத்தில் துணிந்து முடிவெடுக்க முடியவில்லை.
அவரின் நெஞ்சம் சஞ்சலத்தில் தவித்தது.
அப்போதும் மனம் கேளாமல் மகனை தனிமையில் சந்தித்த வானதி “ஜித்து கண்ணா உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா?உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையேப்பா” என சாதாரணமாக கேட்பது போல் மெல்ல விசாரிக்க,
ரோகிணி இரண்டு நாட்கள் முன்பு தான் வீட்டினரிடம் மன்னிப்பு கேட்டு சென்றிருந்ததால் அவளின் மீது நல் அபிப்பிராயம் உருவாகியிருந்தது.
அதனால் அவனோ “அம்மா ஐயம் கூல்…எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை…அப்படியே ஏதாவது வந்தாலும் என் செல்ல அம்மா நீங்க இருக்கீங்களே…எல்லாத்தையும் நீங்க பார்த்துக்க மாட்டீங்க” என கண்சிமிட்டி சிரித்துக்கொண்டே சொன்னவன்,
தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு “அச்சோ நேரமாச்சு…பாய் அம்மா” என அவரின் கன்னத்தில் இதழ்பதித்துவிட்டு அவசரமாக விடைப்பெற்றிருந்தான்.
வேகமாக துறுதுறுவென ஓடிய மகனை கண்ட வானதியும் பெருமூச்சறிந்தார்.
தன்னுடைய புதல்வனே மகிழ்ச்சியாக இருக்கும் போது அவருக்கு என்ன கவலை?
அதனால் அவரும் திருமண வேலையை கவனிக்க ஆயுத்தமானார்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன.
அன்றைய நாட்களுக்கு பிறகு ஜித்தேந்திரனிற்கு அலைப்பேசியில் அழைத்த மங்கையவள் “ஜித் நீங்க ஈவினிங் ஃப்ரீயா?என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களை பார்க்கணும்னு சொல்லுறாங்க…நீங்க ஹோட்டல் லீ மெரிடியன் வரமுடியுமா?பிளீஸ்” என கெஞ்சலாக மன்றாடியவளை நிராகரிக்க அவனிற்கு மனமில்லை.
அதனால் “ஷ்யூர் வர்றேன்…எத்தனை மணிக்கு வரணும் ரோகிணி” என அவன் அவளிடம் நேரத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு அவளை காண அங்கு சென்றான்.
ஆனால் அங்கு சென்ற பிறகு ‘ஏன்டா சென்றோம்?’ என நொந்துக்கொண்டதோடு அவனது வாழ்வில் எடுத்த மிகப்பெரிய முடிவை மறுபரிசீலனை செய்யும் படி அவனை தூண்டியிருந்தது.
இந்நிலையில் ரத்தினவேல் ஒரு புறம் தேர்தலிலும் சந்திரமதியை தேடுவதிலும் மும்முரமாக இருந்ததால் அவனிற்கு மனைவியை கவனிக்க கூட நேரமில்லை.
அச்சமயம் தேர்தல் மாநாட்டிற்காக அவனும் அவனது தந்தையும் வேறொரு மாவட்டத்திற்கு செல்ல விருப்பதால் மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவானது.
அவளையும் தன்னோடு அழைத்து செல்லலாம் என்றால்,அவளிற்கு இன்னும் இரு தினங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு நடக்கவிருந்தது.
அதனால் வேறுவழியின்றி அவளை விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை!
அவனிற்கோ அரசியல் மற்றும் அலுவலக பணிகள் ஒரு புறம் கழுத்தை நெறிக்க,இன்னொரு புறம் அவனை வீழ்த்த சதிவலைகள் பின்னிய எதிரிகளின் திட்டத்தை முறியடிக்க,மற்றொரு புறம் மனைவிக்கு தீங்க இழைத்த நபர்களை பழிதீர்க்க,அதனை அடுத்து சகோதரனின் திருமண விவகாரம்,இறுதியாக அவனது மனைவியின் உடல்நிலை என இவையனைத்து பிரச்சனைகளும் அவனது உடலையும் மனதையும் கொழுகொம்பு போல் சுற்றி வளைத்திருந்தன.
அவனிற்கு மூச்சுவிட கூட நேரமில்லை.
அப்படியொரு நிலையில் தான் அவன் சுற்றிக்கொண்டிருந்தான்.
அவன் ஒரு முறை கூட ரோகிணியை நேரில் சந்தித்திருக்கவில்லை.அவனது நெருக்கடியான சூழ்நிலையால் அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை.
நாளை மறுநாள் அவன் வெளியூர் செல்ல விருப்பதால் மனையாளை பிரிந்து செல்வதை எண்ணி துடித்தான்.
திருமணத்திற்கு பிறகு நடக்கக்கூடிய முதல் பிரிவு!
உடல்நிலை சரியில்லாத மனைவியை தனிமையில் விட்டு செல்வதை எண்ணி தவித்தான்.
இதுவரை அவளிடம் அதைப்பற்றி அவன் உரைத்திருக்கவில்லை.
இந்த அரசியல் மாநாடு திருமணத்திற்கு முன்பே ஏற்பாடு செய்திருந்ததால் அவனால் தவிர்க்க முடியாது.
அதனால் அன்றைய இரவு அவளிடம் கூறிவிட எண்ணி அறைக்குள் நுழைந்த ரத்தினவேல் மனையாளை தேடி சென்றான்.
அவளோ உடைமாற்றும் அறைக்குள் இருந்த அலமாரிக்குள் தலையை விட்டு எதையோ தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
அவன் அறைக்குள் வந்ததை அவள் உணரவே இல்லை.
கதவோரம் சாய்ந்து நின்ற ரத்தினவேல் ஒரு நிமிடம் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் யோசிக்கும்போது லேசாக உதட்டைக் கடித்த விதம்… அவளது நீண்ட ஜடை தோளில் சரிந்து கிடந்த அழகு… அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.
‘என்ன செய்யறா இவ?’ என சத்தம் செய்யாமல் மெதுவாக அடியெடுத்து வைத்து அவளை நெருங்கிய ரத்தினவேல் “முகிழ்…” என சீறலான குரலில் அவளின் காதோரம் குனிந்து அழைத்ததும்,அவளோ அவனது திடீர் அழைப்பில் “அம்மாஆ” என மேனி தூக்கிவாரிப்போட துள்ளிக்குதித்தாள்.
“ஹே ஈஸி ஈஸி. நான் தான்” என ரத்தினவேல் அவளை பின்னாலிருந்து இடையோடு அணைத்துக்கொள்ள,
அவளிற்கு இப்போது தான் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.
அவளின் மேனி வெடவெடக்க மூச்சு வாங்க தொடங்கியப்போதும்,அவனோ தன் அணைப்பை விலக்காமலே “காம் டவுன் முகிழ்…நான் தான்” என மெல்லிய குரலில் மொழிந்தவாறே அவளை சமாதானப்படுத்தினான்.
அவனது மென்மையான அந்த அணுகுமுறை அவளிற்குள் பதற்றத்தை குறைத்து பெண்ணவளை இயல்புக்கு கொணர்ந்தது.
அவளிற்கு ஓரளவு மூச்சு திணறல் குறையத் தொடங்கின.
அவனது கரங்களின் வழியே அவள் உணர்ந்த வெப்பம் அவளிற்கு பெரும் ஆறுதலையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தன.
அதனால் அவனது அணைப்பில் அவள் வாகாக பொருந்தியப்படி அப்படியே சில கணங்கள் நின்றிருந்தாள்.
அவளின் படபடப்பு முற்றிலும் குறைந்ததும் ரத்தினவேல் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
முகிழ்மதி 55:

அவனிற்கு ஏற்றவள் அவளில்லை என்ற சஞ்சலத்தில் மிதந்த மங்கையவளிற்கு தற்போது அதை பற்றியே நினைப்பே இல்லை.
ஏனெனில்,அவனின் தீண்டல் அவளிற்கு சகலத்தையும் மறக்க வைத்திருந்தது.
தன்னையே மறந்துப்போனவளிற்கு மற்ற விடயங்கள் ஞாபகத்தில் இருந்தால் தான் அதிசயம்!
அவளின் மணாளனோ மெய் மறந்து நின்றிருந்தவளை மேலும் சிந்தை துகிக்க செய்யும் விதமாக “முகிழ்…” என மிருதுவாக அழைத்தவாறே அவனது இதழை அவளின் செவியில் பதித்தான்.
அவனின் உஷ்ண மூச்சுக்காற்றோடு ஆடவனின் உமிழ் நீரின் ஈரம் காரிகையை மெய் சிலிர்க்க செய்ய விழி மூடி “ம்” என்றாள் முனகலாக…
அவளிற்கோ சாந்தமுற்ற நெஞ்சம் படபடத்தாலும் அது வெட்கத்தினால் எழுந்த படபடப்பு மட்டுமே?
அவளின் அந்த முனகல் அவனிற்குள் உணர்வுகளை ஆர்ப்பரிக்க செய்திட “எக்ஸாமுக்கு எல்லாம் பிரிபேர் பண்ணிட்டீயா முகிழ்?” என கேட்டவனின் இதழ்களோ அவளின் செவிமடலை மெல்ல கடித்து ஈரம் செய்து கொண்டிருந்தன.
தன்னவனது ஈரம் பொருந்திய இதழ்கள் அவளின் இதயத்தை தாறுமாறாக துடிக்க வைக்க,அவளோ அவஸ்தையான உணர்வோடு தன் முன்னே இருந்த அலமாரியின் பலகையை இறுகப்பற்றினாள்.
கூதல் காற்றின் கூவலை போல் அவனது வெப்ப சுவாசம் அவளின் செவியினை நிறைத்து அவளை கூசி சிலிர்க்க வைக்க,அவளின் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை.
அவளிடமிருந்து பதில் வரவில்லை என்றவுடன் அவளின் முகத்தை அவன் எட்டி நோக்க,அவளோ மயக்கத்தில் விழிகளை இறுக்கி மூடி நின்றிருந்தாள்.
அதைக்கண்டு இதழ்பிரித்து புன்னகைத்தான்,முகிழ்மதியின் மணாளன்.
அதனால் அவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை ரசித்தவாறே “முகிழ் உன்கிட்ட தான் கேட்கிறேன்?எக்ஸாமுக்கு எல்லாம் பிரிபேர் பண்ணிட்டியா?” என அவளின் காதோரம் குனிந்து மெல்லிய குரலில் அவன் கேட்க,
அவனின் குரலுக்கே அவளின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்தும் சூடேறி சிவந்தது.
அவனின் அணைப்பிற்கு அவள் நன்றாக பழகிவிட்டதால் அவனது தொடுகை அவளிற்கு அந்நியமாய் தோன்றவில்லை.
அப்படி தான் அவளை பழக்கியிருந்தான் ரத்தினவேல்.
அதிலும்,அவனின் தீண்டல் அவளிற்கு ஏதேதோ உணர்வுகளை தோற்றுவித்து அவளை உலகம் மறக்க செய்திருந்தன.
அதன்பலனாய் அவள் சிந்தை மறந்து அவனில் மயங்கி நின்றாள்.
மனைவி தன்னுள் உருகி நின்ற விதம் ஆடவனிற்கு பெரும் உவகையை கொடுத்தன.
முன்பு அவன் அவளை தீண்டும்போது ஏற்க முடியாமல் பயந்து நிற்கும் பெண்ணவள் இப்போது அவனுள் அடங்கி நிற்கிறாள் என்பது அவனிற்கு அளவில்லாத மகிழ்ச்சியை அளித்தன.
அவனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை என்றவுடன்,ஆடவனின் இதழ்கள் தாராளமாக விரிந்துக்கொண்டன.
தன் நெருக்கத்தின் மூலம் அவளின் நிலை மறக்க செய்த தன் மேல் அவனிற்கு ஒரு கர்வம் எழுந்தது.
அவனின் மனம் எல்லையில்லா ஆனந்தத்தில் தவித்த அதே வேளை அவனுள் மறைந்திருந்த உணர்வுகள் அனைத்தும் வெளிவர தொடங்கிட,
அதனால் அவளின் இடையை தழுவியிருந்த கரத்தில் இறுக்கத்தை கூட்டி தன்னவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான்.
அவனது முரட்டு கரம் தந்த அழுந்தத்தில் அவளிடமிருந்து “ஸ்ஆ” என்ற முனகல் ஒன்று தன்னை மீறி வெளி வந்திருந்தது.
அவனது இறுகிய பிடியை கூட அவளால் தங்க முடியவில்லை என்றால் அவனவள் எத்துணை மென்மையானவள் என்று அறிந்த ஆடவனின் பிடி இலேசாகத் தளர்ந்தது.
அவளிற்காக சிறிது விட்டுக்கொடுத்தானே தவிர அவளை முழுமையாக அவனிற்கு விட மனமில்லை.
ஏனெனில்,தன்னவளின் ஒத்துழைப்பு அவனிற்குள் புதைந்து கிடந்த தாப உணர்வுகளை தட்டியெழுப்பி அவனது தேகமெங்கும் பரவி ஆக்கிரமித்தன.
அந்த உணர்வுகளின் தாக்கத்தில் “முகிழ் வலிக்குதா?” என கிறக்கமான குரலில் கேட்டவனின் இதழ்கள் அவளின் நெற்றியில் பதிந்தன.
அவன் அளித்த முத்தத்தில் மோகத்தை விட அவனின் அக்கறையே அதிகமாக வெளிப்பட,அவளிடமிருந்து “ம்” என்ற சத்தம் மட்டுமே வெளிவந்தது.
உணர்வுகள் கொந்தளித்த அந்நிலையிலும் தன்னவளிற்காக யோசித்த ஆடவன் “ஓகே…ஐ வில் ஹேண்டில் யூ ஜென்ட்லி” என கூறிக்கொண்டே அவனது இதழ்கள் அவளின் கன்னத்தை நோக்கி பயணித்தன.
அவனின் சூடான இதழ்கள் அவளின் முகத்தில் சஞ்சாரம் செல்ல செல்ல,அவளின் மேனியோ அவனின் ஒவ்வொரு நகர்விலும் துவண்டுக்கொண்டே வந்தன.
அதிலும்,அவனது மீசை மற்றும் தாடி ஏற்படுத்திய குறுகுறுப்பிலும் அவை ஏற்படுத்திய காயத்திலும் அவளின் அழகிய மதி வதனம் குங்குமமாய் சிவந்து விட்டன.
அவனின் அண்மை அவளை மட்டுமல்ல…அவளின் அண்மை அவனையும் தன்னிலை இழக்க செய்தது.
அதை அவன் உணர்ந்த தருணமும் அது தான்!
தன்னையே மறந்தவனிற்கு பேச வந்த விடயமும் சிந்தைக்குள் தொலைந்துப்போயிருந்தன.
தற்சமயம் அவளின் மெல்லிய மேனிக்குள் புதைந்து தன் ஆண்மை தொலைந்து போக செய்யவே அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்தன.
அதனால் நீல நிற சுரிதார் அணிந்திருந்தவளின் இடையை தழுவியிருந்த ஆடவனின் கரம் மெல்ல அவளின் மேனியை உணரும் வேட்கையுடன் அவளின் இடையில் ஊர்வலம் சென்றன.
அவனின் இதழ்கள் ஒரு புறம் அவளை அவனுள் உருகி குழைய வைத்தது என்றால்,ஆடவனின் கரம் மற்றொரு புறம் அவனிற்குள் இன்னும் அதிகமாய் அவளை அடங்கிப் போக செய்தது.
ஆடவன் அவளின் மேனியில் ஏற்படுத்திய மாயத்தில் அவளின் உணர்வுகள் முதல் முறையாய் கொந்தளிக்க ஆரம்பித்தன.
இதுவரை ஆண்மகனின் எல்லை மீறிய தொடுகையை உணர்ந்திராத பெண் அவள்!
அதனால் அவனின் தீண்டல் ஒரு புதுவிதமான உலகத்தை இளையவளிற்கு அறிமுகப்படுத்தியது.
இதுநாள் வரை நேசம் என்ற உணர்வுகளை தாண்டி பயணித்திராத ஆடவனிற்குள்ளும் மோகம் ஆட்கொண்டிட,அவனின் மோக உணர்வுகளை அவளையும் உணர வைத்தான் அவன்.
ஆனால் அவனின் அந்த அதிரடி பதினெட்டு வயது பாவையவளிற்குள் பெரும் தடுமாற்றத்தை கொடுத்த அதே சமயம் அவளிற்குள் புது விதமான சுகத்தையும் அறிமுகப்படுத்தின.
வெட்கம்,படபடப்பு,தயக்கம்,தடுமாற்றம்,அச்சம் பல வகையான உணர்வுகள் அனைத்தும் ஒரு சேர அவளை தாக்கிட,அவளால் அவனின் தீண்டலை சமாளிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அவளின் கால்கள் மொத்தமாய் துவண்டுவிட,அவளோ தன்னிலையை முற்றிலுமாக இழந்து அலமாரியின் புறமாக சாய்ந்துவிட்டாள்.
இப்போது அவளின் முன்புற மேனி மொத்தமும் அலமாரியின் பலகையோடு சேர்ந்து ஓட்டிக்கொண்டன.
அவளோடு இணைந்து அவளை பின்புறமாக அணைத்திருந்த ஆடவனும் அலமாரியை நோக்கி இழுக்கப்பட்டிருந்தான்.
அவன் இழுப்பட்ட வேகத்தில் அவனின் கரங்கள் அவளின் மெல்லிடையை இறுக்கமாக பற்றியது என்றால்,அவளின் கன்னத்தை புசித்துக்கொண்டிருந்த அவனிதழ்கள் அவளின் இதழை உரசி சென்றிருந்தது.
எதிர்பாராத அந்த உரசல் இருவரின் மேனியிலிலும் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தது.
திடீரென்று தன் உடலில் பாய்ந்த அதிர்வில் ஆடவன் அவனே நிலை தடுமாறிப்போனான் என்றால்,பெண்ணவளை சொல்லவே தேவையில்லை.
அவளின் மேனி மொத்தமும் விதிர் விதிர்த்துப்போய் உதறல் எடுக்க தொடங்கிவிட்டன.
இப்படியொரு உரசலை அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.
இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே அவளின் இதழை தீண்டியிருக்கிறான்.
அந்த இதழ் முற்றுகை அவளின் உயிரை காக்க அவன் மேற்கொண்ட சிகிச்சையே தவிர,அதில் வேறு எந்த உணர்வுகளும் ஆட்கொண்டிருக்கவில்லை.
ஆனால் இன்றோ அனைத்தும் தலைகீழ்!
இருவரின் உணர்ச்சிகளும் ஒன்றோடு ஒன்று முட்டிய மோதிய நிலையில் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கிடைத்த அந்த முத்தத்தில் அவனே கிறங்கிப்போனான்.
ஆறடி உயர ஆண்மகனிற்கே இந்நிலை என்றால்,வாழ்வில் எந்தவொரு உணர்வையும் சுகித்தறியாத பேதையவளிற்கு சொல்லவே தேவையில்லை.
அவளிற்கு அனைத்தும் புதிதாக இருந்தது.
அவனின் அக்கறை…அவனின் காதல்…அவனின் தீண்டல்…அவனின் அணைப்பு…அவனின் முத்தம்…அவனின் ஆண்மை…அவனின் மோகம் என அனைத்தும் புதிது!
அதனால் திடீரென்று அடிவயிற்றில் உருவாகிய மாற்றத்தில் அவள் நடுநடுங்கிவிட்டாள்.
அவளிற்கு உடனே மூச்சிறைக்க தொடங்கிவிட,சட்டென அவளிடமிருந்து விலகியிருந்தான் அவன்.
அவளோ தான் நின்ற நிலையிலே அலமாரியை ஆதரவாக பற்றி நின்றிருந்தாள்.
அவளது சுவாசத்தின் தாளம் தப்பியதை கண்டு ரத்தினவேல் பதறிப்போய் காரிகையவளை தன்னை நோக்கி திருப்பினான்.
அவளை திறந்திருந்த அந்த அலமாரியில் சாய்த்து நிறுத்திய ஆடவன் அவளின் முகத்தை வேகமாக ஆராய்ந்தான்.
அவளின் விழிகள் மருண்டிருந்தன.
அவளின் முகம் வெளிறி நெஞ்சம் வேகமாக ஏறி இறங்கியதை கண்டவன் “காம் டவுன் முகிழ்…ஒண்ணுமில்லை…” என அவளின் கன்னத்தை கட்டை விரலால் வருடி மனையாளை அமைதியுற செய்தான்.
எதிர்பாராமல் அவன் இதழ் தீண்டியதில் அவள் பயந்துவிட்டாள் என்று அவன் நினைத்திருக்க,ஆனால் நடந்ததே வேறு!
அவள் பயந்ததிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.
அதில் முதல் காரணம் முதன் முறையாய் அவளின் அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்ட தாப ஊற்றுகள்…
இரண்டாவது காரணம்,தன்னை பின்னோடு அணைத்திருந்த ஆடவனின் கிளர்ச்சியை அவள் உணர்ந்ததால் அவள் ஒரு மாதிரி பயந்துவிட்டாள்.
பாவம்,பதினெட்டு வயது பெண்ணவளிற்கு பள்ளியறை பாடத்தை பற்றிய ஞானம் இருக்கவில்லை.
அவள் வாழ்ந்த முறைக்கு அவற்றினை பற்றி தெரிந்திருக்க நியாயமும் இல்லை.
அதனால் முதல் முறை என்பதால் அவள் அஞ்சி விட்டாள்.
இதையறியாத ஆடவனோ “முகிழ் ஈஸி..ஈஸி..” என தன்னவளை சிறு குழந்தைப் போல் சமாதானம் செய்திருந்தான்.
ஒரு கட்டத்தில் இருவரின் உணர்வுகளும் மொத்தமாய் வடிந்த நிலையில் அவளின் இதயத்துடிப்பும் சீராகின.
அவள் சிறிது சகஜ நிலைக்கு வந்தாலும் அவளின் விழிகள் அவனை ஏறிடாமல் அலைப்பாய்ந்து கொண்டே இருந்தன.
இப்போதும் அவனது ஆண்மையின் வீரியம் அவளின் மேனியில் இருப்பது போன்ற உணர்வுகள் அவளுள் உருவாக,அவளோ பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டாள்.
முதல் முறை என்பதால் அச்சம் இருந்ததே ஒழிய,அவளிற்கு அருவருப்பு இல்லை.
அவளின் முகத்திலிருந்த பதற்றத்தை தவறாக கணித்த ரத்தினவேல் “முகிழ்” என மென்மையாக அழைத்தான்.
அவளிற்கோ அவனை பார்க்கவே முடியவில்லை.
சற்று முன்பு நடந்த நிகழ்வை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவளை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “முகிழ் இங்க பாரு” என அவளை இரண்டாம் முறையாக அவன் அழைத்து பார்த்தான்.
ம்ஹும்…அவளிடமிருந்து அப்போதும் பதில் வரவில்லை.
அவள் நடந்த நிகழ்வில் பேசாமடந்தையாகிப்போனாள்.
‘ஷப்பா சரியான அழுத்தம்’ என அவளை பற்றி அறிந்து சலித்துக்கொண்ட ரத்தினவேல் அவளின் தாடை பற்றி நிமிர்த்தினான்.
அவனோ அவளின் விழிகளை உற்று நோக்கி “முகிழ் சீ மீ” என அவளை குரலுயரத்தி அதட்டினான்.
அவனின் அதட்டலுக்கு மிரண்டு விழி உயர்த்திய பாவையவளிற்குள் சட்டென ஒரு மாற்றம்!
அவளின் அடிவயிற்றில் மீண்டும் உணர்வுகள் உருண்டோடுவது போலிருக்க,படீரென்று இமைத்தாழ்த்தி கொண்டாள் மங்கை.
அவளின் இதயம் மட்டும் அசுரவேகத்தில் தாறுமாறாக துடித்தன.
விட்டால் அவளின் இதயம் வெளியே வந்துவிடும் போலிருந்தது.
அவளின் அமைதி அவனை சுட,அதுவரை விலகியிருந்த ஆடவன் “முகிழ்…” என்றவாறு அவளை நோக்கி ஓரடி முன் வைத்தான்.
ஆனால் மூர்க்கனின் மனையாளோ “இ…ல்லை வே..ணாம்…கிட்ட வ…ராதீங்க…” என திக்கி திணறி படபடத்தாள்.
அவளின் பேச்சை கேட்ட ஆடவனின் மனம் அடிப்பட்டுப்போனது.
அதேசமயம் அவனின் முகம் இறுகிவிட “ஏன்?” என அழுத்தமாக அவனிடமிருந்து கேள்வி பறந்து வந்தது.
அவள் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க,அவனிற்கு சுறுசுறுவென கோபம் வந்தது.
அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும் அவனாக அறிந்துக்கொள்வதை காட்டிலும் அவளின் வாய் வழியாக அவன் அறிய விளைகிறான்.
ஆனால் அவள் வாயே திறக்க மாட்டேன் என அழுத்தமாக இருப்பது அவனுள் சினத்தை முகிழ வைத்தன.
அப்போதும் இதழ் குவித்து ஊதி தன் கோபத்தை அடக்கி ரத்தினவேல் “முகிழ் உனக்கு என்ன தான் பிரச்சனை?ஏதாவது சொன்னால் தானே தெரியும்?திடீர்னு கிஸ் பண்ணவும் பயந்திட்டியா?” என பொறுமையை இழுத்த குரலில் வினவினான்.
அவளிடமோ மீண்டும் அதே மௌனம்!
அவள் “ஆம்” என தலையசைந்திருந்தால் கூட அவனின் மனம் ஆறியிருக்கும்.அவளோ அப்படியே தலைக்குனிந்த நிலையிலே நிற்கவும் அவனிற்கு வெறுத்துப்போனது.