அறை முழுவதும் இருள்…
ஆழ்ந்த நிசப்தம்…
ஆனால் சல்லாபத்தில் ஈடுப்பட வேண்டிய தம்பதியினரோ விழிகள் மூடி படுக்கையில் ஆளுக்கொரு புறமாக சயனித்திருந்தனர்.
இருவரின் இமைகளும் மூடியிருந்ததே ஒழிய,இருவரும் நித்திரை கொள்ளவில்லை.
ஆம்,தமயந்தி எண்ணுவது போல் வீர் உறங்கியிருக்கவில்லை.
அவனிற்குள் நெஞ்சை முட்டும் அளவு தாபங்கள் முகிழ்ந்திருந்தாலும்,தன்னவளை அணுகும் வழி அறியாமல் திணறியிருந்தான்.
அவளின் மீதுள்ள நேசத்தை உணர்ந்து அதனை யாசிக்கவே அவனிற்கு பல யுகங்கள் கடந்திருந்தன.
இந்நிலையில் ‘வேண்டாம்’ என்று மறுப்பு தெரிவிப்பவளிடம் அவன் கட்டாய உறவுக்கொள்ள முயற்சி செய்வானா என்ன?
பெண்களின் உணர்வுகளை மதிப்பவன்,இப்போதும் தன்னுணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இமை மூடி படுத்திருந்தான்.
அவனது இமைகள் இரண்டும் மூடி கிடந்ததே ஒழிய,ஆடவனின் மனம் தன்னவளை தான் அவதானித்துக் கொண்டிருந்தது.
அச்சமயம் தன்னவளிடம் அசைவை அறிந்த வீரின் செவிகள் இரண்டும் கூர்த்தீட்டின…
அப்போது தான் அவளின் புலம்பலையும் அவனால் கேட்க முடிந்தது.
அதுவரை தன்னில் அவள் கோபம் கொண்டு விலகியிருக்கிறாள் என்று எண்ணியிருக்க,
ஆனால் அவளோ அவனாக அவளிடம் கலவியை யாசித்து பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதை அறிந்து மென்புன்னகை பூத்தான்.
மெதுவாக விழி திறந்து அவளை நோக்கி அவன் திரும்ப,அவளோ அவனிற்கு எதிராக முதுகுக்காட்டி படுத்திருந்தாள்.
அந்த இருளில் கூட
அவளுடைய அந்தச் செல்லக் கோபம் வீருக்குத் தெளிவா தெரிந்திட,அவனிதரங்கள் தாராளமாக விரிந்துக்கொண்டன.
அவளை அப்படியே பின்னிருந்து அணைத்துக்கொள்ள கரங்கள் இரண்டும் பரபரத்தப்போதிலும்,அவன் தன்னை கட்டுப்படுத்தினான்.
அவளும் உறங்கியிருக்கவில்லை என்பதை அறிந்த வீரின் விழிகள் இருளில் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்தன.
அக்கணம் அந்த அறையில் சூழ்ந்திருந்த அமைதியை கிழித்துக்கொண்டு “லட்டு…” என மென்மையாக…கிசுகிசுப்பாக…ஒரு வித தவிப்புடன் அவளை அழைத்தான்.
அவனது அந்த குரலை கேட்டதற்கே அவளின் மேனி சிலிர்த்தன.
‘அப்போ இவர் இன்னும் தூங்கலையா?’ என என்னும் போதே அவளின் நெஞ்சம் படபடத்தன.
ஆனாலும் அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை..
அவளின் தோள்கள் சிறியதாக அசைந்ததை வைத்தே அவள் விழித்து தான் இருக்கிறாள் என அறிந்தான் அவன்.
அதனால் “லட்டு…இன்னும் என் மேலே கோபம் குறையலையா?” என அவளருகே நெருங்கி வந்து அவன் கேட்க,
இப்போது அவனது மூச்சுக்காற்று அவளின் வெற்று முதுகில் பட,அவன் அண்மை உணர்ந்த காரிகையவளின் இதயம் படபடத்தது.
“குறைந்தா உங்களுக்கு என்ன? குறையலைன்னா உங்களுக்கு என்ன?நீங்க போய் தூங்குங்க”
என்று அவன் புறம் திரும்பாமலே
இதழைச் சுழித்துச் சிணுங்கினாள் அவள்.
அவளின் பேச்சை கேட்டு அவனிற்கு சிரிப்பு வந்தன.
‘நம்ப ஆளு ரொம்ப சூடா இருக்கா போலவே’ என்றெண்ணி “என் மேலே பயங்கர கோபத்தில் இருக்கிறீங்க போல மேடம்?” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,
அவளோ “நானா உங்க மேலையா?உங்க மேலே எனக்கு என்ன கோபம்?நான் கோபப்படற மாதிரி நீங்க என்னைக்கு நடந்துக்கிட்டீங்க?நீங்க என்னை ஒரு நாளும் காயப்படுத்தினதே இல்லை…எப்பவுமே உங்களால் நான் சந்தோஷம் மட்டும் தான் பட்டிருக்கேன் வீர்” என வலி நிறைந்த குரலில் குத்தலாக கூறியதும்,
வீரிடம் ஒரு ஆழ்ந்த மௌனம்…
அந்த மௌனத்தில் அவள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒத்துக்கொள்ளும் குற்ற உணர்ச்சி அவனிடம் ஒட்டிக்கிட்டு இருந்தது.
சில நொடிகள் அவ்விடத்தில் மயான அமைதி…
தன்னால் அவளின் மனதில் உண்டான காயம் தன் காதலால் மட்டுமே ஆற்ற முடியும் என்று அவனிற்கு புரிந்தது.
இன்றொரு நாளில் அனைத்தும் சரியாகிவிடாது…இனிவரும் ஒவ்வொரு நொடியும் அவள் அவனிற்கு கொடுத்த காதலை விட பல மடங்கு நேசத்தை அவளின் மீது அவன் கொட்டி தீர்க்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தான்.
அவன் எடுத்த முடிவின் முதல் படியாக தன் தயக்கங்களை தூக்கியெறிந்துவிட்டு அவள் எல்லைக்குள் அவன் நுழைந்தான்.
நூலளவு இடைவெளியில் அவளிடமிருந்து விலகியிருந்த வீர் இப்போது இன்னும் அதிகமாய் அவளுடன் ஒண்டினான்.
அவளிற்கும் அவனிற்கும் இடையே காற்று கூட புகமுடியாத அளவு நெருக்கம் அது!
அவனது தேகம் அவளின் ஸ்பரிசங்களோடு உறவாடியதும் அவளின் கோபங்கள் அனைத்தும் காற்றடித்த பஞ்சாய் பறக்க காத்திருந்தன.
ஆனால் அதை அவள் இழுத்து பிடிக்க முனைந்த நேரம் “நான் பண்ணது தப்பு தான்டி…நான் முன்னாடியே சொன்ன மாதிரி நீ எனக்கு என்ன தண்டனை வேணா கொடு…நான் ஏத்துக்கிறேன்”
என்றான் அவளின் காதோரம் குனிந்து சீறலான குரலில்…
அவனின் குரல் அவளின் காதோர மயிர்களை கூச்சரிய செய்திட,வெடுக்கென்று அவன் புறம் திரும்பினாள் அவள்.
அவளின் கண்களில் இன்னும் தணலாய் கோபம் இருந்தது…
ஆனால் அந்தத் தணலுக்குள்ளே அவனுக்கான காதலும்
உருகிப் போய்க் கிடந்தது.
அதை அவனும் நன்கு அறிந்தே இருந்தான்.
இருவரின் முகத்திற்கு ஓர் அடி இடைவெளி மட்டுமே இருந்தன.
ஆனால் அவள் கோபமென்னும் முகமூடி அணிந்து அதை மறைக்க,அவனோ தன்னவளின் காயமாற்றும் முனைப்புடன் உணர்வுகளை மறைத்தான்.
அவளோ “தண்டனை வேணுமா உங்களுக்கு?” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,
“வேணும்…” என அவனும் நேர்மையான குரலில் அதை ஆமோதித்தான்.
சட்டென எதையோ சிந்திப்பது போல் அவளின் நெற்றிச் சுருங்கி பின்பு விரிந்தன.
இப்போது அவனை நேருக்கு நேராக பார்த்தவள் “சரி… நாளையிலிருந்து நான் உங்ககிட்ட பேசமாட்டேன்” என்றாள் அதிரடியாக…
“இது என்னடி தண்டனை?” என அவன் குழப்பமாக ஏறிட,
அவளோ “அதுதான் உங்களுக்கு பெரிய தண்டனை…முன்னாடி நான் பேச வந்தால் நீங்க மதிக்காமல் போயிட்டே இருப்பீங்கயில்லை…அது மாதிரி நான் உங்களை மதிக்காமல் போயிட்டே இருப்பேன்…ஆனால் நீங்க தான் ‘லட்டு.. லட்டு..’னு என் பின்னாடியே சுத்தி வந்து பேசி கெஞ்சணும்…புரியுதா?” என கெத்தாக தன் தண்டனையை விளக்க,அதைக்கேட்டு அவன் வாய்விட்டேச் சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பைப் பார்த்து அவள் முறைக்க “ஏய்…இது கொஞ்சம் இல்லை,ரொம்பவே கஷ்டம்டி…” என பாவமாக உரைக்க முயன்றாலும் அவனின் இதழோரம் சிரிப்பில் துடித்தன.
“என்ன சிரிப்பு?பீ சீரியஸ் வீர்…இது தான் உங்க தண்டனை…ஒழுங்கா ஃபாலோ பண்ணுங்க…இல்லைனா வாழ்க்கை முழுக்க ஃபர்ஸ்ட் நைட் கட்” என ரோஷத்துடன் சொல்லிட்டு பிடிவாதமாகத் திரும்பி படுத்துவிட்டாள்.
இம்முறை அவள் விலகியதும் அவன் விலகி விடவில்லை…
அவள் அவனிடம் கோபத்தை காட்டினாலும் அவளின் எதிர்பார்ப்புகள் அவனறிந்த பிறகு அவன் எதற்காக விலகியிருக்கப்போகிறான்?
சில வினாடிகள் தன்னிடம் கோபித்துக்கொண்டு திரும்பிப்படுத்தவளை கண்ட வீர் இப்போது சற்று துணிச்சலாகவே அவளை நெருங்கி அணைத்தான்.
அவன் தன்னை அணைத்ததும் அவளின் மேனி தூக்கிவாரிப்போட்டது என்றால்,அவளின் இதயம் அசுரவேகத்தில் துடிக்க ஆரம்பித்தன.
“வீர்” என அதட்டலாக அழைக்க முயன்றவளின் குரல் கரகரப்புடன் குழைந்து வர,
அவனோ அவளை இன்னும் அதிகமாக நெருங்கி அவளின் காதோரம் குனிந்த வீர் “லட்டு நாளையிலிருந்து தானே நான் தண்டனையை ஃபாலோ பண்ணனும்…இன்னைக்கு இல்லையே…” என நியாயம் பேசியவனின் சொற்களைக் கேட்ட தமயந்தியோ ‘அடப்பாவி’ என அதிர்ச்சியில் விழி விரித்தாள்.
ஆனாலும் அவனை அவள் விலக்கி தள்ளவில்லை…அதிலே அவளின் விருப்பத்தை அறிந்த வீரின் இதழ்கள் மந்தகாசத்துடன் விரிந்தன.
மெதுவாக தன்னவளை அவன் புறமாக திருப்ப,அவளும் அவனிற்கு ஏற்ப வளைந்துக் கொடுத்தாள்.
“லட்டு” என தாபங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த குரலில் அவன் அழைக்க,
‘என்ன?’ என்பது போல் அவள் மெல்ல விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள்.
அவனது விழியில் இதுவரை அவள் பார்த்திராத ஒரு உணர்வு…
அதைக்கண்டவுடன் அவளின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உள்ள மயிர்கள் அத்தனையும் கூச்சரிந்திட,அவளின் இமைகள் மெதுவாய் படபடத்தன.
கனிவை மட்டும் காட்டிய விழிகளில் இன்று நேசத்தை கடந்த ஒரு காமம்…
வீரின் கண்கள் அவள் மேனியெங்கும் படர்ந்திருந்த அந்த பச்சை நிற புடவையினுள் புதைந்திருந்த பெண்ணவளின் எழில் வளைவுகளில் நிலைக்கப்பெற்றன.
அவனது விழிகளில் தெரிந்த அந்தத் தாபம் தமயந்தியை ஒரு நொடி நிலைகுலையச் செய்தது.
மெதுவாக அவளருகே குனிந்தவன், அவளது நெற்றியில் தன் முதல் முத்தத்தைப் பதித்தான்.
அதில் அவளின் மேனி மொத்தமும் சிலிர்க்க “வீர்” என முனகலாய் அவனது சட்டை காலரை இறுக பற்றிக் கொண்டாள்.
எப்போதும் வாய் ஓயாமல் பேசுவளின் இதழ்கள் அன்று தானாக பூட்டிக்கொண்டன.
நெற்றியில் பதிந்த அவனது முரட்டு அதரம் மெதுவாக கீழிறங்கி அவளது இமை ஓரம்,கன்னம் என மெல்ல நகர்ந்து இதழ் வரை வந்து நின்றது.
தமயந்தி தன் கண்களை மூடி அந்த சுகமான தீண்டலில் உருகத் தொடங்கினாள்.
பல வருட காத்திருப்பு அவனது காதல் கடந்த முத்தம்…அவன் அவளின் இதழை அடைய நூலளவு இடைவெளி மட்டுமே இருந்தன.
அவளின் இதழை முத்தமிடுவதற்கு முன்பு அவனின் விழிகள் அவளிடம் சம்மதம் வேண்டி தாமதிக்க,
ஆனால் அவனது அந்த ஒரு நொடி காத்திருப்பு கூட அவளின் மேனியில் அனலை கூட்டிட “வீர்” என தாபம் நிறைந்த குரலில் உருகியவளின் கரங்கள் அவனது கழுத்தை வளைத்து தன் முகத்தோடு சேர்த்து அழுத்திக்கொண்டன.
அவளின் இழுப்பில் ஆடவனின் அதரங்கள் காரிகையின் அதரத்தில் புதைந்துப்போயின.
எதிர்பாராத அந்த தொடுகையில் இருவரின் மேனியிலும் சட்டென மின்சாரம் பாய்ந்த ஓர் உணர்வு!
அதில் ஒரு முறை தேகம் தூக்கிவாரிப்போட வீர் விழி விரித்தாலும் தன்னவளின் சம்மதம் கிடைக்கப்பெற்றதால் உவகையுள்றவன்,அவளின் இதழில் ஆழ்ந்து முத்தமிட ஆரம்பித்தான்.
அத்துணை நாட்களாய் சேர்த்து வைத்த காதலை எல்லாம் ஒன்று திரட்டி தன் முத்தத்தின் வழியே அவளின் உயிர் வரை சென்று தாக்கியவனின் அதிரடியில் பாவையவளின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது.
இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி அந்த அறையின் வெப்பத்தை ஏற்றிட,
இருவரின் இதழ்கள் வழியே பரிமாறப்பட்ட உமிழ்நீர் அவர்களது மேனியினுள் மோக தீயை மூட்டின.
இதழோடு இதழ் பரிமாறப்பட்ட தன்னவனின் முத்தம் பெண்ணவளை பித்தம் கொள்ள செய்திட,அவனது கழுத்தை வளைத்திருந்தவளின் கரங்கள் அவனது பிடரிமயிர்களை இறுக்கின.
அவனது அத்துமீறிய முத்தத்திற்கு தமயந்தியும் உடன்படும் விதமாக இதழ்விரித்து வரவேற்பு கொடுத்தது மட்டுமின்றி அவனிற்கு இணையாக முத்தயுத்தம் புரிய தொடங்கவும் செய்தாள்.
வெறும் முத்தங்களோட முடிந்துவிடக்கூடியதா அவர்களது காதல்?
பல போராட்டங்களை கடந்து வென்ற காதலர்களின் புனிதப்போர் அல்லவா…அவர்களுடையது…
அதனால் இருவரிடமும் வன்மை கலந்த ஆலோபனை குடிக்கொண்டிருந்தன.
சமரில் வாகை சூடிய இருவரின் உணர்வுகளும் தீவிரத்தை அடைய,அவை அவர்களது படுக்கையிலும் வெளிப்பட்டது.
அவள் வஸ்திரங்களுக்கு அவனால் விடுதலை கொடுக்கப்பட்டது என்றால்,அவன் வஸ்திரங்களுக்கு அவளால் விடுதலை கொடுக்கப்பட்டன.
அவளின் ஆடைகள் மொத்தமும் விடைப்பெற்றதும் தன்னவளின் அழகு மொத்தத்தையும் அவன் விழிகள் ரசித்தன.
அவனது கண்கள் ரசித்த அவளின் அங்கங்களை அவனது கரங்களும் இதழ்களும் கூட ருசித்து புசிக்க தொடங்கின.
தன் அழகு அவனை ஈர்க்கவில்லையோ என அவள் நினைத்திருக்க,
ஆனால் ஆடவனது செயல்கள் அனைத்தும் அவளின் எண்ணங்களை தவிடுப்பிடியாக்கின.
ஏனெனில்,அவளின் மேனி வளைவுகளில் தொடங்கி அவளை தலைமுதல் கால் வரை முத்தத்தாலே அவன் ஆராதித்திருந்தான்.
அதனை கண்டப்பிறகு அவளின் சரீரம் பரவசத்தில் கிளுகிளுத்தது என்றால்,அவளின் தளிர் மேனி முழுவதும் அவனது இதழ் பட்டு சூடேறி சிவந்துப்போயின.
அவளின் உடல் சற்று பூசிய வாகு கொண்டதால் அவளின் சதைப்பற்றான அங்கங்களை தன் கரம் கொண்டு வருடிய வீர் “உன் பேரு மட்டுமில்லை…நீயும் லட்டு மாதிரி தான்டி இருக்கே…உன்னை அப்படியே முழுங்கிடணும் போலே இருக்கு” என கிறக்கத்துடன் மொழிந்தவனின் இதழ்கள் அவளின் மென் யௌவனங்களை வன்மையாய் முத்தமிட,
அவனது பேச்சிலும் தீண்டலிலும் அவளிற்கு அடிவயிறு தடதடத்திட “உஸ் வீர்…வலிக்குது” என வலியில் விழிகள் சொருக அவனின் தோளில் அவள் ஒரு அடி வைக்க,அவனோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் வாழ்நாள் பொக்கிஷத்தை அன்று இரவு முழுவதும் ரசித்து சுவைத்திருந்தான்.
அவளின் மேனியில் அத்துமீறிய அவனது இதழ்கள் அவளின் உணர்வுகளை உச்சம் பெற வைத்திட “வீர்… வேணாம்…” என அவள் பெயரளவில் கெஞ்ச,
அவனோ ஆக்ரோஷமான காதலோடு அவளது உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் இதழ்களால் அளக்கத் தொடங்க,
தமயந்தி “வீர்… வீர்…” என அவனது பெயரை மோக மந்திரமாய் ஜபிக்க,
அவனது கரங்கள் அவளது இடை வளைவுகளில் கோலமிட, அவள் வில்லாய் வளைந்து அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
அவளிற்கு வலியை விட இன்பமே மேலோங்கி நிற்க, அவன் அவளை முழுமையாய் ஆட்கொண்டான்.
அந்தத் தருணத்தில் இரு உயிர்களும் ஒன்றோடு ஒன்று கலந்து, காதலென்னும் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைத்தன.
அவன் மட்டுமின்றி அவளும் கூட தன் காதலனின் அழகை கொண்டாடி தீர்த்தாள்.
இதுவரை தூர இருந்தப்படியே அவனது படிக்கட்டு தேகத்தை ரசித்திருந்த பாவையவள் இத்துணை வருட வேட்கையை எல்லாம் ஒன்று திரட்டி அவனின் பச்சை குத்தல் தொடங்கி அவனையே மொத்தமாய் தன் கைகள் கொண்டு உணர்ந்து மகிழ்ச்சியுற்றாள்.
அவளின் கரங்கள் மட்டுமின்றி அவளின் இதழ்களும் கூட அவனது முரட்டு தேகத்தைப் பூஜித்தன.
அவனது மேனியெங்கும் அவளிட்ட முத்தங்கள் எண்ணிலடங்காதவை!
அவளது அந்த முத்தத்தில் ஆடவனவனும் உருகிக் குழைந்து தான் போனான்.
மனைவியின் மோகத்தவிப்பில் நெகிழ்ந்தவனோ அதற்கும் சேர்த்து அவளை முத்தங்களால் அர்ச்சித்துக்கொண்டே அவளின் பெண்மையை சிதற வைத்து அவளை தன் ஆண்மைக்கு அடிமையாக்கியிருந்தான்.
தன்னவனது காதல் கடலில்…
அவள் தடுமாறி தவிக்க…
அவனது ஸ்பரிச தீண்டலில்…
இன்புற்று அவள் துடிக்க…
மோக பெருஞ்சுனாமியில்…
உன்மத்தம் கொண்டு கசிந்துருகி
காளையவனின் கரங்களில்
ஆழி பேரலையான அவள் அவனுள் சுருட்டிப்போக…
கண்ணாளனின் உயிரில்…
ஈரூயிர் ஓருயிராய் கலந்து…
அவன் உள்ளத்தில் தஞ்சம் கொண்டு…
காதலில் நித்தம் மலர்ந்தாள் பெண்மகள்.
கூடல் முடிந்த பிறகு, அவனது அகன்ற மார்பில் தலைசாய்த்து மூச்சிரைக்கக் கிடந்தவளைப் பார்த்து வீர் சிரித்தான்.
தன்னவன் சிரிப்பதை கண்டவள் “ப்ச் வீர் சிரிக்காதீங்க…பார்க்க தான் ஒண்ணும் தெரியாத பச்சைப்புள்ள மாதிரி இருக்கீங்க?ஆனால் நீங்க இவ்வளவு ஸ்டார்ங்னு எதிர்பார்க்கலை…எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது” என நாணத்தோடு அவள் உடலை முறுக்கிச் சிணுங்க,
அவனோ மென்மையாக இதழ்பிரித்து சிரித்தப்படி “இதுக்கு முன்னாடி நீ யாரோ?இப்போ நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்டி…என்னை பத்தின எல்லாமே உனக்கு தெரியணும்னு நான் விருப்பப்படறேன்…இதிலே இதுவும் ஒண்ணு…” என்று கூறி அவளின் கன்னத்தில் அழுந்த இதழ்பதிக்க,
அதில் அவளின் மேனி மயங்கினாலும் “அப்போ இதுவரை ரோபோவா இருந்த வீரை இனி ரொமென்டிக் ஹீரோவா பார்க்கப்போறேன்னு சொல்லுங்க” என அந்நேரமும் தன்னவனை அவள் கேலிச்செய்ய,
“என்னையே கிண்டல் பண்ணறீயாடி?இதுக்காகவே உன்னை ஏதாவது செய்யணுமே?” என ஒற்றை புருவம் உயர்த்திய வீரோ அவளை படுக்கையில் கிடத்தி மீண்டும் ஒரு முறை அவளை ஆக்கிரமிக்க தொடங்கிட,
தமயந்தியோ அவனது மார்பில் ஒரு குத்து விட்டு “ஹே வீர்…இது தான் சாக்குனு அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிட்டீங்களா?நீங்க சரியான திருடன்…” என பேசிக்கொண்டே இருந்தவளின் இதழை அவன் முற்றுகையிட்டு அடைத்திருந்தான்.
அத்தோடு அவளின் மேனியில் இதழ் கொண்டு முன்னேறியப்படி “திருடன் தான்டி… உன் இதயத்தைத் திருடினவன்” என்று சொன்னவன், அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு “லவ் யூ டி லட்டு… இனிமே எந்தப் புயலும் நம்மை பிரிக்க முடியாது” என அவளது காதோரம் கிசுகிசுத்தான்.
தமயந்தியும் அவனது சொல்லில் நெகிழ்ந்து அவனது அணைப்பிற்குள் இன்னும் ஆழமாகப் புதைந்து கொண்டாள்.
விடியும் வரை அவர்களது காதல் கவிதைகள் அந்த அறையில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
இரண்டு இதயங்கள்…
சண்டையுடன் ஆரம்பித்த அந்த இரவு…
மீண்டும் ஒரு இனிய சண்டையுடனே முடிவுற்றது.
ஆனால் அது கசப்பான சண்டை அல்ல…
ஊடல் கொண்டு கூடலுடன் முடிவுற்ற காதல் சண்டை…
கலவிச் சண்டையோடு
இன்னும் அதிகமாய் காதலிக்கக் கற்றுக்கொண்ட ஓர் அழகான சங்கமம் அது!