முகிழ்மதி 120(1)


 

 

கூடல் முடிந்த களைப்பில் தன்னவனது நெஞ்சில் தலைசாய்த்து படுத்திருந்தாள் சந்திரமதி.

அவளின் நெற்றியில் முத்தமிட்ட ஜித்து “ரிசப்ஷனிலே நீ இன்னைக்கு செம்ம அழகா இருந்தேடி…அதுவும் நான் செலக்ட் பண்ண அந்த பர்பிள் லெஹன்காவிலே ஷப்பா…என்னாலே என்னை கன்ட்ரோல் பண்ணவே‌ முடியலை…எப்போடா உன்னை தனியா தள்ளிட்டு வரலாம்னு நினைச்சேன்டி” என தாபத்தில் உருகி கூறியவனின் பேச்சை கேட்டவளின் முகம் சிவந்தது.

“உஷ்…எப்போ பாரு உனக்கு அதே நினைப்பு தானா ஜித்து?” என அவள் அதட்ட,

“பின்ன பொண்டாட்டி நீ இவ்வளவு அழகா இருக்கும் போது எனக்கு வேற என்னடி நினைப்பு வரும்?அதுவும் என்னை உருக வைக்கிற இரண்டு…” என அவனது தணிக்கையில்லாத பேச்சிலே அவளின் மேனி குப்பென்று நெருப்பு மூண்டது என்றால்,அவளது நெஞ்சத்தில் பதிந்த அவன் இதழ்கள் அவளை பாகாய் உருகி கரைய வைத்திட “ஜித்து…” என விழிகள் சொருக அவனின் பிடரி மயிர்களை இறுக பற்றிக் கொண்டாள்.

அதில் உற்சாகம் கொண்டவனின் உணர்ச்சிகள் பீறிட்டு கிளம்ப,அவளின் மேனியை தன் இதழ்களாலும் கரங்களாலும் கனிய வைக்கும் பணியில் இறங்கினான்.

மீண்டும் ஒரு முறை தனது கலவி நாடகத்தை நடத்தி விலகிய மன்னவனின் நெஞ்சில் பட்டென ஒரு அடி வைத்த சந்திரமதி “எப்போ பாரு…ஏன்டா இப்படி கடிச்சு வைக்கிறே?எனக்கு வலிக்குது” என அவன் பற்தடம் பதிந்த இடமெல்லாம் அவளிற்கு வலியோடு சேர்த்து இன்பத்தையும் வாரி வழங்கியிருந்தாலும்,வெளியில் அவனை முறைத்துக்கொண்டாள் அவள்.

தன்னவளின் போலியான குற்றச்சாட்டை அறிந்து அந்த கள்ளன் புன்னகைக்க “சிரிக்காதேடா” என நாணத்தில் அவனின் நெஞ்சில் முகம் புதைத்த மனையாளின் பற்களும் அவ்விடத்தில் தன் அச்சாரத்தை பதித்திட,

அதில் அவனிற்கு வலித்தாலும் “ஆ” என மெல்லியதாக அலறி,அவள் கொடுத்த வலியை சுகமான வேதனையாய் தாங்கிக் கொண்டான்.

ஆனால் சில நிமிடங்களில் தன்னவனிற்கு வலியை கொடுத்த காரிகையவளோ அந்த காயத்தை ஆற்றும் விதமாக அவ்விடத்தில் முத்தங்களைப் பதித்தாள்.

“காட் மூன் யூ ஆர் கில்லிங் மீ டி” என மோகத்தில் பிதற்றி அவளின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அவன் அழுத்திக்கொள்ள,அவளும் விரும்பியே அவனிடம் அடைக்கலமானாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு,இருவரும் களைத்துப்போய் படுக்கையில் சயனித்திருக்க “மூன் இதை உன்கிட்ட கொடுக்கவே மறந்திட்டேன் பாரு…நம்ப கல்யாணத்துக்காக என்னோட கிஃப்ட்” என இதழ்கடித்து சிரித்தவாறே எட்டி தனது அலைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவனின் நெஞ்சத்தில் படுத்திருந்த சந்திரமதியோ “என்ன ஜித்து?” என நெற்றி சுருங்க வினவ,

“வாங்கி பாரு…உனக்கே தெரியும்” என புதிர் போட்டவனை குழப்பமாக பார்த்தவாறே அலைப்பேசியை வாங்கி அதிலிருந்த புகைப்படத்தை கண்டவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.

ஏனெனில்,அதில் முகமெல்லாம் இரத்தம் வழிய தரையில் விழுந்து கிடந்தது வேறு யாருமல்ல ஹிரிஷ் தான்!

அவனை அவ்வாறு அரை உயிர் சடலமாக பார்த்ததும் அவளின் முகம் வெளிறி மேனி நடுங்கிட,அதனை கவனித்த ஜித்து வெடுக்கென்று அவளின் கையிலிருந்த அலைப்பேசியை வாங்கி அணைத்து வைத்தான்.

அத்தோடு பயத்தில் நடுங்கிய மனையாளையும் அவன் ஆறுதலாக அணைத்து “ஈஸி…ஈஸி…” என அவளின் முதுகை வருடிக்கொடுக்க,தன்னவனது தேகத்தின் வழியே அவளிற்குள் கடத்தப்பட்ட கதகதப்பில் அவளின் படபடத்த இதயம் சிறிது ஆசுவாசமடைந்தது.

சில நிமிடங்களில் தன்னை சமாளித்து அவனிடமிருந்து விலகிய சந்திரமதி “என்ன இது ஜித்து?” என்று கேட்கும் போதே அவளின் குரல் இடறியது.

இப்போது ஆடவனின் முகம் ரௌத்திரத்தை தத்தெடுத்திட “அன்னைக்கு அவன் ஹோட்டல்ல பேசின பேச்சுக்கே மூஞ்சு முகரைய பேக்கணும்னு நினைச்சேன்…பையன் தப்பிச்சிட்டான்…ஆனால் என்னைக்கு அவனால் நீ காலேஜ் டேஸ்லே அனுபவிச்ச கஷ்டத்தை எல்லாம் சொன்னீயோ அப்போவே அவனை நான் ஒழிச்சு கட்டணும்னு முடிவே பண்ணிட்டேன்” என்றவனின் பேச்சில் அனல் தெறித்தது.

இதுவரை அவளுடன் சல்லாபம் புரிந்த ஜித்து அவனில்லை….

கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைக்க முகம் இறுகியிருந்தவனின் அவதாரத்தை காண அவளிற்கே அச்சமாக இருந்தது.

அதனால் எச்சிலை கூட்டி விழுங்கியப்படி “ஆனால் இதெல்லாம் தப்பில்லையா?” என அவனிடம் கேட்க,

“இங்க பாரு மூன்…ஒரு மனுஷன் எல்லா நேரத்திலும் நல்லவனாவே இருக்கமுடியாது…ஏதோ ஒரு நேரத்தில் கெட்டவனா மாறி தான் ஆகணும்…அப்படி அவன் நல்லவனாவே இருக்கான்னா அவன் தான் உலகத்திலே வடிக்கட்டின முட்டாளா இருப்பான்…இது தான் நிதர்சனம்…நான் ஒரு சராசரி மனுஷன்…என் மூனை கஷ்டப்படுத்தினது யாரா இருந்தாலும் அவங்களை நான் சும்மாவே விடமாட்டேன்” என அவளின் விழியோடு விழி நோக்கி அழுத்தமாக கூறினான்.

தன்னவனின் பதில் அவளிற்கு வேறொரு நினைவை கிளறிவிட “அப்போ ரோகிணிய ஜெயிலுக்கு அனுப்பினதும் நீங்க தானா?” என பரபரப்புடன் வினவ,

அவனோ இதழோரம் பூத்த கர்வப் புன்னகையுடன் “அஃப்கோர்ஸ் செல்லம்…அதுக்கு காரணமும் நான் தான்…அவ என்னை தொட்ட சமயம் கூட நான் அமைதியா தான் இருந்தேன்…ஆனால் என்னைக்கு அவ உன்னையே தொட துணிச்சிட்டாளோ இதுக்கு மேலே அமைதியா இருக்கக்கூடாதுனு தான் அவளுக்கு எதிரா எல்லா ஆதாரத்தையும் திரட்டினேன்…ஆனால் அவளை பத்தி ஆதாரம் தேட நான் ரொம்ப யெல்லாம் கஷ்டப்படவே இல்லை…ஏற்கனவே அவ ஒரு பக்கா கிரிமினல்…அவளாலே பாதிக்கப்பட்ட பலரும் அவ மேலே கடுப்புலே தான் இருந்தாங்க…அவளை ரிவென்ச் எடுக்க சந்தர்ப்பம் தேடி காத்திருந்தாங்க…அதை எனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டேன்…தட்ஸ் இட்” என சர்வ சாதாரணமாக ஒருவரின் வாழ்வை அழித்ததை பற்றி பெருமை பேசியவனின் வார்த்தைகளை கேட்டு அவளின் நெஞ்சில் குளிர் பரவியது‌.

கூடவே அவனில் காதலும் பெருகின.

ஆதலால்,அவளை அடியோடு சாய்க்கும் வகையில் “நீ என்ன தான் சாதாரணமா இருக்கிற மாதிரி இருந்தாலும் அந்த ஹரிஷ் ஏற்படுத்தின வடு உன் மனசுலே இன்னைக்கு வரைக்கும் நீங்காமல் அப்படியே தான் இருக்கு…அந்த காயத்தை மொத்தமா ஆற்ற வைக்கணும்னா அவன் செஞ்ச தப்புக்கான தண்டனை கிடைக்கணும்…அதை தான் நான் அவனுக்கு கொடுத்தேன்…எனக்கு என் மூனோட மனநிம்மதி தான் முக்கியம்” என உயிரை உருக்கும் குரலில் கூறியப்படி அவளின் கூந்தலை வருடி காதோரம் சொருகிவிட்டான்.

அவன் கூறியது அனைத்தும் நிஜம் தான்…

ஜித்துவின் நேசத்தை ஏற்று அவனை அவள் திருமணம் புரிந்தப்போதிலும் ஹரிஷ் பற்றிய நெருடல் அவளிற்குள் இருந்துக்கொண்டே இருந்தது.

இன்று அதற்கொரு முடிவை கொடுக்கும் விதமாக கணவன் செய்து வந்த காரியம் அவளை மெய் மறக்க செய்தன.

இறுதியில் தனக்காக…தன்னுடைய மன அமைதிக்காக உயிரை பணயம் வைத்து இதையெல்லாம் செய்திருக்கிறான் என்று தெரிந்ததும் அவளின் இதயம் அப்படியே பாகாய் உருகிவிட்டன.

அவன் பல முறை “ஐ லவ் யூ மூன்” என்று கூறியிருந்தாலும் இன்று அவளாகவே “ஐ லவ் யூ ஜித்து” என மனமாற காதலை எல்லாம் ஒன்று திரட்டி அவனிடம் நேசத்தை வெளிப்படுத்தியவளின் இதழ்கள் அவனது இதழில் ஆழப்பதிந்தன.

தன்னவளின் முத்தத்தில் கண் மூடி நெகிழ்ந்தவனின் உணர்வுகள் மீண்டும் மறுவுருவம் பெற,பதிலுக்கு மனையாளின் இதழை ஆவேசமாக முற்றுகையிட தொடங்கியிருந்தான் அவன்.

இவ்வாறாக,அவளினுள் புதைந்திருந்த அந்த சிறு சஞ்சலத்தை கூட கண்டறிந்து அதனை தீர்க்கும் காதல் தீவிரவாதியானான் ஜித்தேந்திர பூபதி.

நாட்கள் வேகமாக உருண்டோடின.

விஜயேந்திர பூபதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று கொள்ள,அவரின் கீழ் ஒரு பலமான அமைச்சரவையும் அமைக்கப்பட்டது.

அதுவும் கூட,ரத்தினவேலின் ஆலோசனையின் பெயரில் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தினவேல் தந்தையிடம் உரைத்தது போல், தற்காலிகமாக அந்த கட்சியில் ஒரு தொண்டனாகவே தன் பணியை தொடர்ந்தான்.

ஆனால் இப்போது இளைஞர் அணி செயலாளராக அனைத்து பொறுப்பையும் ஏற்று வெகு சிறப்பாக அதில் சேவை செய்ய தொடங்கினான்.

அவர்களது தொழிலை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஜித்து ஏற்றுக்கொண்டான்.

ரத்தினவேல் அதற்கு உதவியாக இருந்தான்.

வீர் வழக்கம் போல் தனது விசுவாசத்திற்கு சிறிதும் பங்கம் வராத வகையில் காதலை நெஞ்சில் புதைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தான்.

ஆனால் அவனே எதிர்பாராமல் அவன் எந்த அளவு ஆழமாக அவளை புதைக்க முயல்கிறனோ அதையும் விட அதிகமாக அவள் வளர்ந்து விருட்சமடைந்துக் கொண்டிருந்தாள்.

அவனிற்கும் அவை நன்றாகவே புரிந்திட ‘என்ன செய்வது?’ என கலங்கி நின்றான்‌.

இங்கு தமயந்தியோ அவனை போலவே அவனது ஞாபக சுழலுக்குள் சிக்கிய சிறை கைதியாய் தன் வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தாள்.

இப்போது பெண்கள் மூவரும் ஒரே கல்லூரியில் இணைந்து கல்வி பயில ஆரம்பித்துவிட்டனர்.

மனையார்களின் படிப்பு முடிந்தப் பிறகு தான் குழந்தை என்பதில் கணவன்மார்கள் உறுதியாக இருந்தார்கள்.

அதில் அவர்களது மனைவிகளுக்கும் உடன்பாடு இருந்ததால் ‘சரி’ என அவர்களின் எண்ணங்களை ஆமோதித்தார்கள்‌.

இளம் பெண்கள் மூவருக்குள்ளும் ஒரு இறுகிய பிணைப்பு உருவாகியிருந்தது.

மூவருக்கும் இடையே ஒரு தோழமையான உணர்வும் முகிழ்ந்திருந்தது.

ஆண்கள் இருவரில் யாருக்கு நேரம் கிடைக்கிறதோ அவர்களில் யாரேனும் ஒருவர் மூன்று பெண்களையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்துவிடுவார்கள்.

அதனால் வாழ்க்கை எவ்வித நெளிவு சுளிவுமின்றி சீராக சென்றுக்கொண்டிருந்தது,தமயந்தியின் வாழ்வை தவிர..

தமயந்தியின் நடவடிக்கை குடும்பத்திலுள்ள அனைவரின் சிந்தையிலும் சந்தேகத்தை வரவழைத்திருந்தது‌.

குறிப்பாக,காஞ்சனா மாலாவிற்குள்…

அவர் யோசிக்க ஆரம்பித்ததை கவனித்த ரத்தினவேல் ‘இதை வளரவிடக்கூடாது’ என விரைவாக அவரிடம் வந்து பேசினான்.

ம்ஹும்…கிட்டத்தட்ட அவரை வந்து எச்சரித்தான் என்பதே சரியான கூற்று!

ஏனெனில்,அவர் விஷயம் அறிந்து தனது ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக அதனை தடுத்து நிறுத்த முயன்றான்.

அவரை தனிமையில் வந்து சந்தித்த ரத்தினவேல் “பாட்டி உங்க பேரனுங்க இரண்டு பேருக்கும் குறுக்கு வழியிலே கல்யாணம் பண்ண வரை போதும்…தமி விஷயத்திலே நீங்க  எதுவும் தலையிடக்கூடாது…” என்றான் அழுத்தம் திருத்தமாக…

அவரோ “நான் என்ன கண்ணா பண்ணேன்?ஒண்ணுமே பண்ணலையே” என ஒன்றும் தெரியாதவர் போல் அப்பாவியாக வினவ,

அவரை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “பாட்டி உங்களை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்…எப்போ பாரு என் பிளானை ஃப்ளாப் பண்ணறது தான் உங்க வேலையா இருந்திருக்கு…இனி அது மாதிரி எதுவும் நடக்கக்கூடாதுனு தான் முன்னாடியே வந்து பேசறேன்” என நெற்றியை நீவிக்கொண்டே கூறியதும்,அவர் அவனை புரியாமல் நோக்கினார்.

அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி “என்ன பார்க்கிறீங்க?நீங்க என்ன சொதப்பி வைச்சீங்கனு தெரியணுமா உங்களுக்கு” என்றவன் ஒரு பெருமூச்சுடன் சுருக்கமாக கூற ஆரம்பித்தான்.

சந்திரமதிக்கும் அவனிற்கும் இடையேயான திருமண ஒப்பந்தத்தை எடுத்துரைத்தவன் சலிப்பாக அவரை நோக்கி “சந்திரமதிய பேசு சமாளிச்சு நேரடியா முகிழை கல்யாணம் பண்ண நினைச்சேன்…கடைசி நேரத்திலே அந்த பொண்ணை கடத்தி அதையும் கெடுத்து வைச்சீங்க…ஜித்து விஷயத்திலே அப்படி எதுவும் நடக்கக்கூடாதுனு தான் முன்னாடியே வீர் கேட்டு பேசி சந்திரமதிய ஜித்து கூட கல்யாணம் பண்ணறதுக்கு ஏற்பாடு பண்ணேன்…ஆனால் அதையும் கெடுத்து விட்டுட்டீங்க” என பேரன் கடுப்புடன் கூறியதை கேட்டு காஞ்சனா மாலா அதிர்ச்சியுற்றார்.

“என்னப்பா சொல்லறே?” என திகைப்புடன் அவர் கேட்க,இதைக்கேள்வியை தான் சந்திரமதியை திருமணம் செய்து வந்த அன்று ஜித்துவும் கேட்டிருந்தான்.

அவனிடம் கூறிய அதே பதிலை தான் பாட்டியிடம் பேரன் தெரிவித்தான்.

“என்னை என்ன நினைச்சீங்க பாட்டி…உங்களுக்கும் என் அம்மாவுக்கும் மட்டும் தான் உங்க பேரன் மேலே அக்கறை இருக்கா?அவன் என் தம்பி…அவன் வாழ்க்கை எப்படியோ போகட்டும்னு என்னாலே விட முடியுமா?இல்லை உங்க பேரன் ஏன் ஹோட்டல் ரெசிடென்சியிலே தவம் கிடக்கறான்னு எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா?” என இமைகள் இடுங்க கோபத்துடன் அவன் உறுமலாய் கேட்டான்.

அவரோ நம்ப முடியாத தவிப்புடன் “கண்ணா” என திகைத்து அழைக்க,

“அவனா என்கிட்ட வந்து பேசுவான்னு நினைச்சேன்…பட் என் தம்பி தான் ரொம்ப வளர்ந்திட்டானே…அவனுக்கு எதுக்கு என் உதவியெல்லாம்?” என நக்கலாய் கேட்டவனின் குரலில் ஆதங்கமே மிகைத்து இருந்தது.

அன்று தமையனின் பேச்சை கேட்ட ஜித்தேந்திரனிற்கும் தன் தவறு உரைத்திருந்தது.

“இல்லைண்ணா…உங்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு நினைச்சேன்” என அவன் தவிப்பாய் சொல்ல,

அவனை உறுத்து விழித்தப்படி “என்னடா கஷ்டம்?என் தம்பி தங்கச்சிய விட எனக்கு முக்கியம் என்னடா இருக்கப்போகுது…ஆனால் உங்களுக்கு தான் நான் முக்கியமா இல்லாமல் போயிட்டேன்…எல்லாம் ரொம்ப வளர்ந்திட்டிங்க…” என இதழை வளைத்து ஏளனமாக உரைத்தான்.

அவனோ “அது அப்படியில்லைண்ணா…” என தயக்கமாய் இழுக்கும் போதே,

அவனின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்திய ரத்தினவேல் “சரி விடு…இனி இதை பத்தி பேசி என்னவாகப்போகுது…திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்திட்டயில்லை அதை எப்படி சமாளிக்கிறதுனு பார்ப்போம்” என அந்த உரையாடலை முடித்துக்கொண்டான்.

இன்று அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலை அவரிடம் எடுத்துரைக்க,காஞ்சனா மாலா அவனை கலக்கத்துடன் ஏறிட்டார்.

“பாட்டி நீங்க என் குருவா இருக்கலாம்…ஆனால் நான் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்…ஐ நோ ஆல் அபவுட் யூ…என் தங்கச்சி கல்யாணமாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் நேர்வழியில் நடக்கணும்னு நினைக்கிறேன்…தயவுசெஞ்சு குட்டைய குழப்பி அதிலே மீன் பிடிக்கிற வேலையெல்லாம் இந்த விஷயத்திலே வேணாம்…உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என சற்று கடுமையாகவே அவரை எச்சரித்தான்.

“கண்ணா என் பேரப்பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்கணும்னு தான் இப்படி பண்ணேன்…எனக்கு அவங்க சந்தோஷத்தை தவிர வேற எதுவும் முக்கியமில்லைப்பா” என அவர் கலங்கிய குரலில் உரைக்க,

பாட்டியின் குரல் தழுதழுத்ததும் சற்று இறங்கி வந்த ரத்தினவேல் “ஐ நோ பாட்டி…எங்க இரண்டு பேரு கல்யாணத்திலே பெருசா யாரும் ஹார்ட்டாகலை…எல்லாமே சுபத்தில் முடிஞ்சிடுச்சு…ஆனால் இங்க அப்படியில்லை…வீர் பார்க்க தான் முரடனா இருப்பான்…பட் அவன் ரொம்ப சென்சிட்டிவ்…அவன் எந்த விதத்திலும் காயப்படறதை என்னால் பார்க்கமுடியாது…அதுக்கு தான் உங்களை எச்சரிக்கை பண்ணறேன்” என கறாராக மொழிந்தான்.

ஆனால் அவரோ ‘வீர்’ என்ற சொல்லில் அதிர்ந்து “என்னப்பா சொல்லறே?அப்போ நம்ப தமி வீரை…” என கம்மிய குரலில் இழுத்தார்.

அவருக்கு வீரை தமயந்தி விரும்புகிறாள் என்பது புது செய்தி!

அதனால் அவர் அதிர்ச்சியடைய,அவரின் அதிர்ச்சியை அவதானித்த ரத்தினவேல் “ஆமாம்” என தலையாட்டியவன் “அதனாலே தான் சொல்லறேன்…அவனை எப்படி என் வழிக்கு கொண்டு வர்றதுனு எனக்கு தெரியும்…நீங்க இந்த விஷயத்திலே தலையிடக்கூடாது” என கண்டிப்புடன் கூறவும்,

“சரிப்பா நான் எதுவும் செய்யலை…ஆனால் உங்க அப்பா…” என தயங்க,

“அவரை நான் பார்த்துக்கிறேன்…லெட் மீ ஹேண்டில் ஹிம்” என நம்பிக்கையுடன் அவன் கூறியதை கேட்டு பெருமூச்சறிந்தவர் “அப்போ சரிப்பா…நீ மட்டும் எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைச்சிடு…எனக்கு என் பேத்தி வாழ்க்கை நல்லாயிருந்தாலே போதும்” என எளிதாக அவனின் கோரிகையை ஏற்றுக்கொண்டார்.

அவருக்கும் வீர் தமயந்தி காதலில் எவ்வித ஆட்சேபணையுமில்லை.

அவர்களது திருமணம் நடப்பதில் அவருக்கும் நூறு சதவீதம் விருப்பம் தான் என்பது அவரின் ஒத்துழைப்பிலே அவனிற்கு புரிந்தது‌.

அதனால் அவர் அவனிடம் வாக்குறுதியை வழங்கியதும் ‘ஹப்பாடி’ என நிம்மதியுற்றான்..

இப்படியே மேலும் சில நாட்கள் ஓடியிருந்தன.

பெண்கள் மூவரும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தன.

அன்றைய நாள் ஆண்கள் இருவருக்கும் பணிச்சுமை அதிகமாக இருந்ததால் வீர் தான் பெண்கள் மூவரையும் அழைத்து வர பணித்திருந்தான் ரத்தினவேல்.

மூவரும் ஒரே நிறுவனம் சார்ந்த கல்லூரியில் பயின்றாலும் மூவரது கல்லூரியும் தனித்தனி கட்டிடங்களில் இருந்தன.

அதனால் முதலில் தங்கைகள் இருவரையும் அழைக்க வந்த தமையனை கண்டு முகம் மலர்ந்திட “அண்ணா” என ஓடி வந்து அவனது கரத்தை பிடித்துக்கொண்டார்கள் சகோதரிகள்.

வெகு நாட்களுக்கு பிறகு,அவனை பார்ப்பதால் அவர்களுக்குள் அப்படியொரு சந்தோஷம்!

“அண்ணா உங்களை பார்த்து எவ்வளவு நாளாச்சு?காலேஜ் போறதாலே எங்களாலையும் உங்களை பார்க்க வர முடியலை…நீங்களும் வீட்டுக்கு வர்றதே இல்லை” என முகிழ்மதி நாசிச்சுருக்கி குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“இல்லைடா…வேலை ரொம்ப ஜாஸ்தி…அதான்” என்றவன் இருவரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டான்.

சந்திரமதியோ முன்னால் ஏறச் சென்ற முகிழ்மதியின் கரம் பற்றி தடுத்து பின்னால் இழுத்து சென்றாள்.

‘ஏன்?’ என்பது போல் பார்த்தவளிடம் “உஷ் அப்புறம் சொல்லறேன்” என்றாள் மெல்லிய குரலில்…

முகிழ்மதிக்கு ‘என்ன நடக்கிறது?’ என்று புரியவில்லை என்றாலும்,தமக்கையின் ரகசிய குரல் ஏதோ ஒன்றை அவளிற்கு வலியுறுத்த மௌனமாகிவிட்டாள்.

“தமியோடு பிளாக் எங்கியிருக்கும்மா?” என கேட்கும் போதே அவனது இதயம் படபடத்தன.

வெகு நாட்களுக்கு பிறகு தன்னவளை காணப்போகும் பரிதவிப்பு அவனிடம்!

“நேரா போய் இடதுப்பக்கம் கட் பண்ணி அங்க வெயிட் பண்ணுங்க அண்ணா…அண்ணி வந்திடுவாங்க” என சந்திரமதி தான் வழிக்கூறினாள்.

ஆனால் அவள் ‘அண்ணி’ என்றது ஏனோ அவனது மனைவியை அவள் முறை வைத்து அழைத்தது போல் இருக்க,ஆடவனது நெஞ்சில் மெல்லிய மழைச்சாரல்!

அவள் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தியவனிற்குள் என்றும் இல்லாத ஒரு தவிப்பு…

அவன் முகத்தில் ஓர் பரவசம்…

நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் முகம் காணப்போகும் இனிய படபடப்பு…

இதயத்தில் மகிழ்ச்சி பெருவெள்ளம் என பல வகையான உணர்ச்சி குவியல்களுடன் அவன் காத்திருக்க தனது தோழமைகளோடு சிரித்துப் பேசியப்படி வெளியே வந்தாள்,வீரின் தேவதை.

தூரத்தில் வரும் நேரமே அவளின் விம்பத்தை தனக்குள் படம்பிடித்துக்கொண்ட வீருக்கோ அப்போதே அவளை ஓடி சென்று அணைத்துக்கொள்ளும் வேகம்!

தன்னை கண்டதும் அவளின் நெஞ்சமும் இவ்வாறு தான் படபடக்குமா?

தன்னுள் உண்டாகிய பரவசம் அவளுள்ளும் உண்டாகுமா?

அவனை கண்டதும் அவளின் விழிகள் விரிந்திட முன்பு போல் ஓடி வந்து தன்னை கட்டயணைத்துக்கொள்ளவாளா? என பல விதமான எதிர்பார்ப்புடன் அவளிற்காக அவன் காத்திருக்க,

அவளோ அவனது அத்துணை கற்பனைகளையும் தவிடுப்பொடியாக்குவது போல் அவனை கண்டு ஒரு கணம் புருவம் சுருக்கியவள் தோழிகளிடம் “பை கைஸ்…நாளைக்கு பார்க்கலாம்” என விடைப்பெற்று ஜீப்பை நெருங்கினாள்.

“அண்ணா வரலையா?” என மூவரை பார்த்து பொதுவாக அவள் கேட்க,வீரின் மனதில் பெருத்த ஏமாற்றம்!

அவன் முகம் வழியே அவனின் ஏமாற்றம் அறித்தாலும் அவள் கண்டுக்கொள்ளவே இல்லை.

அவள் கேள்வியாய் ஒற்றை புருவம் உயர்த்தி அவனை காண,அவனோ ஒரு பெருமூச்சுடன் “அவங்க இரண்டு பேருக்கும் ஏதோ வேலையிருக்கு…அதான் நான் வந்தேன்…நீ ஜீப்பிலே ஏறி உட்காரு தமி” என்றான் வெறுமையான குரலில்.

“ஓ…” என நெற்றியை நீவியவள் ஜீப்பில் ஏறாமல் அப்படியே நின்றாள்.

அவனருகே அமர அவளிற்கு துளியும் விருப்பமில்லை.

அவளின் அந்த தயக்கம் அவனது இதயத்தை அடியோடு நொறுக்கியது.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top