“ஏன்மா இப்படி சொல்லறே?” என தகப்பன் ஆதங்கத்துடன் அவளிடம் வினவ,
அவளோ தந்தையை நேர்ப்பார்வையாக நோக்கி “நீங்க ஏன் முதல்ல இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறீங்க?அதுக்கான காரணம் சொல்லுங்க” என கூர்மையான குரலில் வினவினாள்.
இத்தனை நாட்களும் தன்னுடைய வறட்டுப்பிடிவாதத்தில் இருந்தவர் இறங்கி வந்ததற்கான காரணம் அறிய அவள் விரும்பினாள்.
அவரோ பெருமூச்சுடன் “கௌரவம்,அந்தஸ்து அது இதுனு உங்களை பிரிச்சு வைச்சது போதும்னு எனக்கு தோணுச்சும்மா…ஆனால் பணம் காசை விட என் பிள்ளைங்க மனசுக்கு பிடிச்சதை செஞ்சா தான் அவங்க சந்தோஷமா இருப்பாங்கனு பூபதி ஜித்து விஷயத்திலே பார்த்து புரிஞ்சுக்கிட்டேன்…ஆனாலும் வீரோட அம்மாவை நினைச்சு தான் இத்தனை நாளா அமைதியா இருந்தேன்…உன்னோட வாழ்க்கை அவங்களை பார்த்துக்கிறதிலே கடைசி வரை போயிடுமோனு ரொம்ப தயங்கினேன்…நாள் போனால் நீயும் எல்லாத்தையும் மறந்திட்டு கடக்க ஆரம்பிச்சிடுவேன்னு நினைச்சேன்…ஆனால் என் மக பிடிவாதக்காரியாச்சே…அவ ஒரு நிமிஷம் கூட அவனை மறக்கவே இல்லை…தினந்தோறும் அவ அழறதை பார்க்கும் போது என் நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்கும்மா…அதான் என் பொண்ணு உன்னோட சந்தோஷம் தான் என் சந்தோஷம்னு முடிவெடுத்தேன்…அதுவுமில்லாமல் என் பொண்ணு புத்திசாலி எல்லாத்தையும் சமாளிச்சு ஜெயிச்சுக்காட்டுவாள்னு தோணுச்சு…அதனாலே தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்” என அவர் தான் ஒப்புக்கொண்ட காரணத்தை தெள்ள தெளிவாக விளக்கினார்.
தந்தை தனக்காக தன் கர்வம் விட்டு இறங்கி வந்ததை அறிந்து அவளிற்குள் மகிழ்ச்சி தாண்டவமாட,
“எனக்காகவா?எனக்காகவாப்பா நீங்க மனசு மாறனீங்க” என நம்ப முடியாத திகைப்புடன் அவள் வினவ,
அதனை ஆமோதித்து தலையசைத்த விஜயேந்திரன் “ஆமாம்மா…என்னோட ஈகோவாலே உங்க இரண்டு பேரு வாழ்க்கையையும் அழிக்க பார்த்தேன்…நல்லவேளையா ஜித்துவும் சரி நீயும் சரி அதிலிருந்து தப்பிச்சிட்டிங்க…இனி நீங்க சந்தோஷமா இருந்தாலே எனக்கு அது போதும்மா..
எனக்கு வேற எதுவும் வேணாம்டா…வீரை முறையா வந்து நம்ப வீட்டுலே பேச சொல்லு தமி” என மகளுடைய மகிழ்ச்சியே முதன்மையானது என்று புரிந்துக்கொண்ட தந்தையின் அன்பில் உள்ளம் நெகிழ்ந்தாள் பாவையவள்.
ஆதலால் “என்னையும் என் காதலையும் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா…கடைசி வரை நீங்க புரிஞ்சுக்கவே மாட்டிங்கனு நினைச்சேன்…ஐ லவ் யூப்பா” என ஓடி வந்து அவரை உணர்ச்சி பெருக்குடன் அணைத்துக்கொள்ள,வெகு நாட்களுக்கு பிறகு மகளின் முகத்தில் மலர்ச்சியை கண்ட விஜயேந்திரனிற்கும் மனம் நிறைந்தது.
ஆரம்பத்தில் அந்தஸ்து கௌரவம் என முறுக்கிக்கொண்டு திரிந்தாலும் பிள்ளைகளின் சந்தோஷம் தான் முதன்மை என்று புரிந்துக்கொண்டு விஜயேந்திரன் மனம் திருந்தினார்.
அவரின் மார்பில் விழி மூடி சயனித்திருந்த காரிகையின் இமையோரம் பேருவகையில் கண்ணீர் வழிந்தன.
மகளது கண்ணீர் அவரது ஆடையை தாண்டி நெஞ்சை கிழித்துக்கொண்டு ஊடுருவ “ஏன்மா அழறே?நான் தான் ஒத்துக்கிட்டனே?” என தவிப்புடன் வினவ,
அவளோ “இது ஹேப்பி டியர்ஸ்ப்பா” என அவரின் சட்டையில் முகத்தை வைத்து தேய்த்துக்கொண்டே அவரிடமிருந்து விலகினாள்.
“இன்னும் நீ சின்னப்பொண்ணாவே இருக்கம்மா” என சிரித்துக்கொண்டே அவளின் தலையை வருடியவர் “என்னம்மா வீரை வந்து பேச சொல்லறீயா?” என பரிவுடன் அவளின் கண்ணீரை துடைத்தவாறு வினவினார்.
ஆனால் அவரது ஒட்டுமொத்த ஆணிவேரையும் அசைக்கும் விதமாக “இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம்ப்பா” என அதிரடியாய் ஒரு முடிவை அறிவித்தாள்.
முன்னாராவது ஏதோ விளையாட்டாய் கூறுகிறாள் என்று அவர் நினைத்திருக்க,இப்போது அவளின் முகத்தில் இருந்த தீர்க்கம் அவரை கதிகலங்க வைத்தன.
அதனால் “ஏன்மா?” என உச்சக்கட்ட அதிர்ச்சியோடு வினவ,
நிதானமாக அவரை ஏறிட்டு நோக்கிய தமயந்தி “காதல்ல ஈகோ பார்க்கக்கூடாது தான்பா…ஆனால் எனக்குனு ஒரு தன்மானம் இருக்கேப்பா…எல்லா முறையும் நானே இறங்கிப்போறதை நினைச்சா எனக்கு அவமானமா இருக்கு…நான் ஏதோ கட்டாயப்படுத்தி அவரை என்னோட வாழ்க்கைக்குள்ள இழுக்கிற மாதிரி…ஒரு மாதிரி எனக்கே அசிங்கமா இருக்கு…காதலன்றது ஒருத்தர் மேலே பரிதாபப்பட்டோ அவங்ககிட்ட பிச்சை கேட்டு வாங்கியோ வரக்கூடாது…அவங்க தானா அதை உணரணும்…நீயில்லாமல் நானில்லை…நானில்லாமல் நீயில்லைன்றதை முழுசா உணரணும்…அவரில்லாமல் எனக்கு வாழ்க்கையில்லைன்றதை நான் எப்பவோ உணர்ந்திட்டேன்…ஆனால் அவர் அப்படியில்லை…நானில்லாமல் கூட வாழ முடியும்னு நம்பி தானே விலகியிருக்காரு…அது அப்படியே இருக்கட்டும்…இதுக்கு மேலே அவருக்கா என்னைக்கு நான் வேணும்னு தோணுதோ வரட்டும்பா” என அவனால் உண்டாகிய காயங்கள் எல்லாம் சேர்த்து அவளை அவ்வாறு பேச வைத்தது.
காதலில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த ஞானி போல் பேசிய மகளின் பேச்சிலிருந்த நியாயம் புரிந்தாலும்,இருவரும் இறுதி வரை இப்படியே பிடிவாதமாக இருந்துவிட்டால் என நினைக்கும் போதே அவருக்குள் பயம் வந்துவிட்டது.
அதனால் “என்னம்மா எல்லாம் கைக்கூடி வர நேரம் பிடிவாதம் பிடிக்கிறே?நான் வேணா வீர்கிட்ட பேசட்டுமா?” என ஆயாசமாக அவர் வினவ,
“இல்லைப்பா வேணாம்” என நிற்சிந்தையுடன் மறுப்பு தெரிவித்தவள்,
“நீங்க ஒதுங்கிப்போக சொன்னீங்கனு தனியா வாழ பழகிட்டாரு…இதே மாதிரி நாளைக்கு கல்யாணமான பிறகு வேற எதுக்காகவோ அல்லது அவங்க குடும்பத்துக்காகவோ அவர் என்னை விட்டுக்கொடுத்திட்டாருன்னா என்னாலே அது தாங்க முடியாதுப்பா…அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுனு சொல்லுவாங்க…என் காதல் அவருக்கு கழுத்தை சுத்தின பாம்பு மாதிரி தான்…அதனாலே அவர் ஃப்ரீயா சுதந்திரமா வாழட்டும்…வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதினா கூட பண்ணிக்கட்டும்…இல்லை, அவருக்கா நான் இல்லாமல் வாழ்க்கையே இல்லைனு என்னைக்கு தோணதோ அந்த சமயம் வரட்டும் பேசிக்கலாம்…அதுவரைக்கும் எதுவும் பேசவேணாம்ப்பா…நீங்களும் அவர்கிட்ட எதுவும் பேசிக்கூடாது…இது என் மேலே சத்தியம்” என அவரின் கரத்தை தன் தலை மீது வைத்து சத்தியம் பெற்றாள்.
வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழியை போட்டு உடைத்தது போல் இருந்தது,தனது புதல்வியின் செயல்!
ஆயினும்,வீரின் ஏதோ ஒரு செயல் அவளின் மனதை கடுமையாக பாதித்திருக்கிறது என்பது புரிய “சரிம்மா” என அவரும் மகளிற்கு கொடுத்த சத்தியத்திற்கு உடன்பட்டார்.
ஆனாலும் அவளின் தவிப்பை கண்கொண்டு காணமுடியாமல் “ஒரு பேச்சுக்கு நான் கேட்கிறேன்மா…அவன் தனக்குன்னு வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டால் அப்போ நீ என்ன செய்வே?” என மகளிடமிருந்து வரப்போகும் பதிலுக்காக அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு காத்திருந்தார்.
அவரின் முகத்தை அழுத்தமாக நோக்கியவள் “அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லைப்பா…என் நம்பிக்கையை மீறி அது நடந்தாலும் கண்ணனை நினைச்சிட்டு மீரா வாழ்ந்த மாதிரி என் வீரை நினைச்சிட்டு என்னாலே வாழ முடியும்ப்பா” என்றவளின் பதிலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.
அவளது குரலில் இருந்த தெளிவும் கடினமும் அவள் நிச்சயம் சொன்னதை செய்வாள் என திடமாக எடுத்துரைக்க அவர் உடைந்து நொறுங்கிப்போனார்.
‘ஐய்யோ என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்திட்டனே’ என தலையிலடித்துக்கொண்டு அழாத குறையாக அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
“என்னாலே தானேமா இதெல்லாம்…” என கண்ணீரோடு தவிக்க,
“அப்பா நிச்சயமா இது உங்களால் இல்லை…என் மேலே அவர் வைச்சிருக்கிற காதல் அவ்வளவு பலகீனமா இருக்குனு அர்த்தம்…அதனாலே தான் அவர் ஸ்டாராங்கா இல்லை…இதுவே ஜித்து அண்ணா பூபதி அண்ணாவை எடுத்துக்கோங்க…வீட்டுலே ஒத்துக்கலைனா கூட செம்மா ஸ்ட்ராங்கா அவங்க முடிவிலே இருந்தாங்க…அதனாலே ஜெயிக்கவும் செஞ்சாங்க…அந்த வலிமை இவர்கிட்ட இல்லைப்பா…என்னை ஈஸியா விட்டுக்கொடுத்திட்டாரு…அவ்வளவு தான் என் மேலே அவர் வைச்சுருக்கிற மதிப்பும் என் காதல் மேலே அவர் வைச்சுருக்கிற மரியாதையும்…போதும்ப்பா…இதுக்கு மேலேயாவது கொஞ்சமா நான் சுயகௌரவத்துடன் வாழ விரும்பறேன்…நீங்க எனக்கு சத்தியம் பண்ணியிருக்கீங்க…அதை ஃபாலோ பண்ணுங்க” என தீட்சண்ய குரலில் வேள்வியில் இருந்து எழுந்த வந்த ஆவேசத்துடன் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
விஜயேந்திரனோ தலையில் இடி இறங்கிய உணர்வுடன் அப்படியே அமர்ந்துவிட்டார்.
தந்தையிடம் வீராப்பாக பேசிவிட்டு வந்துவிட்டாளே ஒழிய அவளால் வீரின்றி ஒரு வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அதனால் அவனிற்காக ஏங்கினாள் தவித்தாள்…துடித்தாள்…கதறினாள்…தத்தளித்தாள்…
ஆனால் அவனில் மட்டும் அவள் சரணடையவில்லை.
விஜயேந்திரனோ இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தார்.
மகளின் விடயத்தில் அவரால் யாரிடமும் உதவிக்கோர முடியாது…
வீரிடம் பேசலாம் என்றால் அதுவும் இயலாத காரியம்…
அதேசமயம் மகளின் வேதனையை கண்கொண்டு காணவும் முடியவில்லை…
மகளின் சத்தியத்திற்கு உட்பட்டு அந்த தந்தை தவியாய் தவித்துப் போனார்.
ஒரு கட்டத்தில் அவர் சுமந்த பாரங்களை கொட்ட ஒரு வடிகால் தேவைப்பட,அவரின் மனம் மனையாரிடம் சரணாகதியடைந்தது.
பல நாட்கள் இல்லாளிடம் பேசாமல் விலகியே இருந்த மனிதர் தன் மனைவி அறைக்குள் நுழைந்ததும்,அவரை அணைத்து கதறியழ ஆரம்பித்துவிட்டார்.
கணவரின் மீது ஆயிரம் வருத்தங்கள் இருப்பினும் தாயின் மடி சாய்ந்து அழும் கன்று போல் தன்னில் அவர் சேயாய் அடைக்கலம் புகுந்தவுடன்,அவரின் மனதை அழுத்திய பாரமெல்லாம் விலகி ஓடியேவிட்டன.
அதனால் அவர் அழுவதை கண்டு மனம் பொறுக்காமல் “ஏங்க என்னாச்சு?ஏன் இப்படி அழறீங்க?” என துடித்துப்போய் வினவ,அவரிடம் தன் கண்ணீருக்கான காரணத்தை வெளிப்படுத்தமுடியாமல் “நான் ரொம்ப பெரிய தப்புப் பண்ணிட்டேன்…என்னாலே தான் இதெல்லாம்…உன்னையும் நிறைய காயப்படுத்திற மாதிரி பேசிட்டேன்…என்னை மன்னிச்சிடு வானு…” என செய்த தவறுக்கெல்லாம் குழந்தைப் போல் மன்னிப்பு யாசிக்கும் கணவரை அவரால் மன்னிக்காமல் இருக்க முடியுமா என்ன?
மனம் வருந்தி தனக்குள் சிறையுண்டவரை அவரும் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டார்.
மனைவியார் தன்னை மன்னித்ததும் அவரின் நெஞ்சிலிருந்த பெரும் பாரம் கீழிறங்கினாலும் வெறுமையாக இருந்த மகளின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவரின் நெஞ்சம் இரும்பு குண்டை தொங்கவிட்டது போல் கனத்தது.
அலுவலகத்தில் தன் கண்ணெதிரே நடமாடும் வீரை பார்க்கும் போது மீண்டும் குற்றவுணர்வு கிளர்ந்தெழும்.
அவனிடம் தன் புதல்விக்காக பேசிவிட நாவு துறுதுறுக்கும்.ஆனால் அடக்கிக்கொள்வார்.
வீரும் அவளை பிரிந்து மகிழ்ச்சியாக இல்லை.அவனது முகத்திருந்த பல நாள் மழிக்கப்படாத தாடியும் மீசையும் உயிர்ப்பில்லாத முகமுமே அவனது உள்ளத்தை பளீச்சிட்டு காட்டியது.
அவளின் நினைவுகள் வரும் நேரமெல்லாம் அந்த மலை உச்சிக்கு சென்றுவிடுவான்.
வெயிலோ மழையோ எதுவென்றாலும் அவன் அதனை பொருட்படுத்தவே மாட்டான்.
உச்சி வெயில் மண்டையை பிளந்த சமயமும் சரி…மழை நீர் அவனை குளிப்பாட்டி நனைய செய்தப்போதும் சரி…அவன் அங்கிருந்து அசையவே மாட்டான்.
தன்னவளின் மனதை காயப்படுத்தியதற்கு தண்டனையாய் அதனை அவன் ஏற்றுக்கொள்வான்.
அதையெல்லாம் கவனித்த விஜயேந்திரன் ‘இவ்வளவு காதல் உள்ள வைச்சிட்டு இருக்கியே?போய் என் பொண்ணுக்கிட்ட பேசேன்டா பாவிப்பயலே…’ என மானசீகமாக அவனை மனதிற்குள் வறுத்தெடுத்தார்.
மனிதர் விட்டால் அவனை தரதரவென இழுத்துச்சென்று மகளின் முன்னால் நிறுத்திவிடுவார் போலும்…
அப்படியொரு கோபமும் ஆவேசமும் அவருள்!
அவனோ அவரது முறைப்பை வேறு விதமாக எடுத்துக்கொண்டான்.
‘நான் தான் அவர் சொன்னதுக்காக தமியை விட்டு விலகியிருக்கனே…அப்புறம் எதுக்கு இவர் என்னை முறைச்சிட்டே இருக்காரு?என்னை வேலைய விட்டு போகச்சொல்லறாரா?அவனால் அது முடியாதே’ என கண்ணில் வலியுடன் அவரை நோக்கினான்.
அவருக்கே ஒரு சந்தர்ப்பத்தில் ‘இந்த பெட்டர் மாஸ் லைட்டே தான் வேணுமா?’ என மகளிடம் கேள்விக்கேட்க தூண்டியது.
ஒரு தந்தையாக அவருக்கே மகள் படும் வேதனை புரியும் போது வீட்டுள்ள அனைவரையும் பகுத்தறிந்து வைத்திருக்கும் ரத்தினவேலிற்கு அவை புரியாதா என்ன?
அவனும் மௌனமாய் இந்த காதல் நாடகத்தை பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
ஆனால் எதில் தலையிடாமல் மௌனமாய் வேடிக்கை பார்த்திருந்தான்.
இந்நிலையில் முகிழ்மதிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வந்துவிட,குடும்பமே மகிழ்ச்சியில் முகிழ்ந்தன.
“அண்ணி வாழ்த்துக்கள் ஸ்கூல் சரியா போகாமலே நைட்டி பர்சென்ட் வாங்கியிருக்கீங்க?இன்னும் ரெகுலரா படிச்சிருந்தால் கண்டிப்பா ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கியிருப்பீங்க…ஐயம் சோ ஹேப்பி ஃபார் யூ அண்ணி” என தமயந்தி குதூகலித்து கட்டியணைத்து வாழ்த்த,
“தேங்க்ஸ் அண்ணி” என்றாள் உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன்.
அவளும் கூட இந்த அளவு மதிப்பெண்ணை எதிர்பார்த்திருக்கவில்லை.
வானதி ஒரு பக்கம் அவளிற்கு பிடித்தமான உணவை செய்துக்கொடுத்து அசத்திவிட்டார்.
அவளின் மாமனார்,பாட்டி, சந்திரமதி மற்றும் ஜித்து என அனைவரும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து அவளது படிப்பிற்கு தேவையான பரிசுப்பொருளையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.
வீரும் கூட அவனது பங்கிற்கு அவளிற்கு ஒரு சிறிய பரிசை வாங்கி தந்திருக்க “தேங்க்ஸ் அண்ணா” என அவனது நெஞ்சில் தலைசாய்த்து நன்றியுரைத்தாள்.
குடும்பத்திலுள்ள அனைவரும் அவளிற்கு பரிசுப் பொருட்களை அள்ளி கொடுத்தாலும் அவளின் மனம் எதிர்பார்த்தது என்னவோ மணாளனின் சிறிய பாராட்டை தான்!
அவள் தனது இலட்சியத்தின் முதல் படியில் காலடி எடுத்து வைத்திருக்கிறாள் என்றால்,அதற்கு முழு முதற் காரணமும் அவளது கணவான் தான்.
அப்படியானவனின் வாழ்த்தை எதிர்பார்த்து அவளின் மனம் ஏங்கின.
இரவு வரை கூட அவனிடமிருந்து எவ்வித பாராட்டும் கிடைக்கவில்லை என்றவுடன் அவளின் மனம் சோர்வுற்றது.
ஆனால் அந்த சோர்வெல்லாம் அன்றிரவு அவன் தந்த பரிசை கண்டவுடன் கரைந்து காணாமல் போனது.
ஏனெனில்,அவளிற்கு மிகவும் பிடித்த ஓவிய கலைஞன் மற்றும் கட்டிடக்கலை நிபுணன் அவளது ‘ஸ்டார்’ நாயகனிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிப்பகத்திலும் வெளிவராத கட்டிடக்கலை சார்ந்த புத்தகம் ஒன்றும்,அவன் கையெழுத்திட்டு அனுப்பிய அவளது உருவ ஓவியமும் பரிசாக கொடுத்திருந்தான்.
அவற்றினை கண்டவுடன் அவளின் விழிகள் விரித்து முகமெல்லாம் பரவசமடைந்திட “எப்படிங்க இதெல்லாம்?இந்த புக் நெக்ஸ்ட் வீக் தானே பப்பிளாஷாகுது?உங்களுக்கு எப்படி?” என மிதமிஞ்சிய மகிழ்ச்சி பெரு உள்ளத்துடன் வினவ,
அவனோ சிகையை அழுந்தக்கோதி “மூளைனு ஒண்ணு உனக்கு இருந்து என்ன பிரயோஜனம்? அதை யூஸ் பண்ணால் இந்நேரம் கண்டுப்பிடிச்சிருக்கலாம்” என முணுமுணுக்க,
அவனது சொற்கள் தெளிவாக அவளின் செவியில் விழாததால் “என்னங்க சொன்னீங்க?” என தலையுயர்த்தி கேட்க,
“நத்திங் நீ டிராயிங் மட்டும் பாரும்மா” என பொறாமை கலந்த சிடுசிடுப்புடன் கூற,
“மாமா நீங்க இன்னும் பதிலே சொல்லலையே…எப்படி இது கிடைச்சது?இதுவரை அவரை யாருமே பார்த்தில்லையாம்…உங்களுக்கு மட்டும் எப்படி?” என ஆர்வமும் பரவசமும் நிறைந்த குரலில் விழிகள் மின்ன வினவ,
அவனோ “உன் புருஷனாலே முடியாததுனு உலகத்திலே ஏதாவது இருக்கா என்ன?” என புருவம் உயர்த்தி கேட்க,
அவளோ “ஆமா மாமா…நீங்க தான் என்னோட சூப்பர் ஹீரோ…நான் இவ்வளவு சந்தோஷமா இருக்க காரணமே நீங்க தான்” என்றவள்,வேகமாக அவளின் கையிலிருந்த பொருட்களை எல்லாம் மேசை மேல் வைத்துவிட்டு அவனை வந்து அணைத்துக்கொள்ள,ஆடவனின் விழிகள் இரண்டும் பளீச்சிட்டன.
ஆயிரம் பேர் வந்தாலும் அவளிற்கு முதன்மையாக தாம் தான் இருக்கவேண்டும் என்ற அவனது எண்ணம் அன்று பூர்த்தியடைந்திருந்தது.
அதனால் உண்டாகிய மகிழ்ச்சியுடன் தன்னவளின் முகம் பற்றி அவளின் இதழில் முத்தமிட ஆரம்பித்திருந்தான் ரத்தினவேல்.
அவளும் அவனது முத்தத்தில் மயங்கி சித்தம் கலங்கி நிற்க,அவளின் காதோரம் குனிந்த ஆடவன் “ஸ்டார் நான் உனக்கு கிஃப்ட் கொடுத்திட்டனில்லை…நீ எனக்கு என்ன கிஃப்ட் கொடுக்கப்போறே?” என தாபத்துடன் கூடிய காதலுடன் வினவ,
அவனது குரலில் பேதம் அறியாத மங்கையவளோ “என்ன வேணும் மாமா உங்களுக்கு?என்னாலே முடிஞ்சா கண்டிப்பா செய்வேன்” என வாக்குறுதியை அள்ளி வீச,
உடனே கண்கள் இரண்டும் பளபளக்க “உன்னாலே கண்டிப்பா முடியும் ஸ்டார்…” என மோகத்துடன் கூறியவனின் கரங்களோ அவளின் கரம் பற்றி அவனது நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டன.
அதில் அவளின் மேனியில் மின்சாரம் பாய்ந்திட சட்டென அவள் கரத்தை விலக்க முயல,அந்த முரடனா அதற்கு அனுமதிப்பான்?
அவளின் கரத்தை தன் தேகத்தோடு சேர்த்து அழுத்தி “உன் மாமாவை வந்து சந்தோஷப்படுத்து முகிழ்…அது தான் எனக்கான கிஃப்ட்” என்றவாறே அவளின் கரம் பற்றி தனது தேகத்தின் வலிமையை அவளை உணர வைக்க,
“மாமா…” என சிணுங்கியவளை அவன் விட்டால் தானே?
அவளின் இதயம் அசுரவேகத்தில் படபடத்தன.
அவளின் கரங்களை தன்னில் எல்லை மீற வைத்து அவளின் உணர்ச்சிகளை உச்சம் தொட வைத்து “கம்மான் ஸ்டார்” என அவளிற்கு தன்னை முழுமையாக உணர கொடுத்தான்.
ஆரம்பத்தில் வெட்கத்தில் தயங்கினாலும் தன்னவனின் ஆசை நிறைவேற்ற எண்ணி அவனில் தன் தேடலை துவங்க,அதில் உருகிக் குழைந்தன,அவனது ஆளுமை!
சடுதியில் அவனுடைய உணர்ச்சிகள் உச்சம் தொட்ட நிலையில் அவளை படுக்கையில் கிடத்தி ஆக்ரோஷமாக அவளின் பெண்மைக்குள் தன் ஆண்மையை முகிழ்த்தி, ஒரு அமோகமான மோக உற்சவத்தை நடத்திக்காட்டியிருந்தான் அந்த மூர்க்கன்.
பூவையவளின் மென்மையில் ஆடவன் மயங்கி நிற்பதை காட்டிலும்,ஆடவனது கம்பீரத்தில் பூவையவள் உருகி நிற்பது அந்த முரட்டு மனிதனிற்கு அதிகம் பிடித்திருந்தது.
“டே பை டே இம்ப்ரூவ் ஆகிட்டு வர்றே ஸ்டார்…ஐ லைக் யுவர் அப்ரோச்…ரியலி ஸ்டான்டு மீ…” என காதல் களியாட்டத்தின் முடிவில் அவளின் இதழில் முத்தமிட்டு அவன் உரைக்க,
அவளிற்கு கணவனது பாராட்டில் உச்சிக்குளிர்வதற்கு பதிலாக வெட்கம் பிடுங்கி தின்றது.
தன் வெட்கத்தை துடைத்தெறிய “ஐய்யோ” என சிணுங்கி அவனது நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தது அந்த பட்டாம்பூச்சி.
அதில் அவனது புன்னகை மேலும் விரிந்திட,தன்னில் சரண்புகுந்தவளை மீண்டும் ஒரு முறை ஆட்கொண்டு அவளின் பெண்மையை இரவெல்லாம் கொண்டாடி தீர்த்தான் அவன்.
இந்த ஜோடி இப்படியென்றால் சந்திரமதி ஜித்து ஜோடி கூறவே தேவையில்லை.
அவர்களோ மகிழ்ச்சி வானில் சிறகடித்துப் பறந்துக்கொண்டிருந்தனர்.
வீர் தமியின் வாழ்வு மட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் பிரிவோடும் வலியோடும் மட்டுமே கடந்துச்சென்றது.