இரவு வெகு தாமதமாக உறங்கியதால் இரண்டு ஜோடிகளும் காலை ஏழு மணி வரை எழுந்துக்கொள்ளவில்லை.
முகிழ்மதிக்கு வழக்கம் போல் ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட, படுக்கையிலிருந்து எழ முயன்றவளிடம் “ஸ்டார் எதுக்கு இப்போ எழுந்திரிக்கிறே?உடம்பு சரியில்லாமல் போயிடும்…இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடி” என அதட்டி அவளை அப்படியே அணைத்து உறங்க வைத்திருந்தான்.
ஜித்து சந்திரமதி புதுமண தம்பதியினர் என்பதால் அதீத உடல் உழைப்பு காரணமாக அவர்களாலும் படுக்கையை விட்டு எழ முடியவில்லை.
அப்படியொரு அசதி அவர்களுக்குள்!
காலை எட்டரையை கடந்தும் இரண்டு ஜோடியும் கீழிறங்கி வரவில்லை என்றவுடன் வானதி அவர்களை எழுப்ப முற்பட “வேணாம் விடு வானதி…புதுசா கல்யாணமானவங்க தானே…பிள்ளைங்க நாலும் தூங்கட்டும்” என காஞ்சனா மாலா கூறிவிட,
வீட்டின் பெரியவரே கூறியதற்கு பிறகு அவருக்கும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.
மெதுவாக ஒன்பது மணிக்கு ரத்தினவேல் முகிழ்மதி ஜோடி கண் விழித்தனர்.
அவள் எப்போதும் போல் தலைக்கு குளித்து புடவை கட்டி வெளியே வந்துவிட,அவளை தொடர்ந்து அவளது கணவனும் குளித்துவிட்டு வந்தான்.
கண்ணாடி முன்பு நின்றிருந்த மனையாளை பின்னோடு அணைத்த ஆடவன் “நேத்து நீ ரொம்ப நல்லாவே பர்ஃபார்ம் பண்ண ஸ்டார்…ஐ லைக் இட்…இனி அடிக்கடி அதை பண்ணு” என காதோரம் ரகசியம் பேசியதும்,அவளிற்கோ முகம் குப்பென்று சிவந்துவிட்டன.
தன்னவளின் முகம் சிவந்ததும் ஆடவனின் உணர்ச்சிகள் தாறுமாறாக பொங்கி பெருகவும் அவளை அப்படியே அணைத்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.
இருவருக்கும் ஒரு சிறிய கூடல் கலந்த காதல் இங்கு அரங்கேறியதற்கு பிறகு அவளின் பிறைநெற்றியில் திலகமிட்டு மீண்டும் ஒருமுறை இதழ்பதித்து மனையாளை அழைத்துக்கொண்டு கீழிறங்கி வந்தான்.
முகிழ்மதிக்கு மட்டும் தாமதமாக எழுந்தது ஒரு மாதிரி இருக்க “சாரி அத்தம்மா” என மாமியாரிடம் மன்னிப்பு வேண்ட,
“ஒரு நாள் லேட்டா எழுந்திரிச்சா என்னாகப்போகுதுடா…ஒண்ணும் பிரச்சனையில்லை…திரும்பு…உனக்கு பூ வைச்சுவிடறேன்” என ஆறுதலாக உரைத்து அவளின் பின்னலிட்ட கூந்தலில் பூவை சூட்டினார்.
அவர் எதுவும் கண்டிக்கவில்லை என்றான பிறகே அவளின் மனம் சமாதானமடைந்தன.
தம்பதியினர் இருவரையும் ஜோடியாக அமரவைத்து வானதி உணவு பரிமாறிய சமயம் விஜயேந்திரன் தொலைக்காட்சியில் ஐக்கியமாகியிருந்தார்.
இன்னும் மூன்று நாட்கள் கழித்து தேர்தல் முடிவுகள் வெளிவரவிருப்பதால் நாட்டின் நிலவரம் பற்றி அறிந்துக்கொள்ள செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தார்.
விஜயேந்திரனிடம் நேற்றிலிருந்து நிறைய மாற்றங்கள்!
திருமண முடிந்த கையோடு அனைவரின் காலிலும் மகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதை கண்டதும் அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
‘தன் காலில் விழமாட்டனோ?மகன் தன்னை வெறுத்துவிட்டனோ?’ என நினைத்ததற்கு நேரெதிராக ‘எத்துணை கோபம் இருந்தாலும் நீங்க என் அப்பா’ என சொல்வது போல் அன்னையையும் தந்தையையும் சேர்த்து நிறுத்தி ஆசிர்வாதம் வாங்கினான்.
மகனின் அந்தவொரு செயல் அவருக்கு சாட்டையால் அறைந்தது போல் இருந்தது.
அதையும் விட சந்திரமதியும் முகச்சுளிப்பு சிறிதுமின்றி காலில் விழுந்து வணங்கியதும் ஒரு மாதிரியாகிவிட்டது.
வீட்டிற்கு திருமணம் செய்துக்கொண்டு வந்த முதல் நாளே அவளை அப்படியெல்லாம் பேசியும் கூட அவள் தன்னை மதித்து வணங்கிய விதம் அவருள் பெரும் மாற்றத்தை கொடுத்தன.
ஆயினும்,ஒரு பெண்ணின் திருமணத்தை கெடுத்துவிட்டு இன்னொரு பெண்ணிற்கு வாழ்வு கொடுத்திருப்பதினால் ஒரு குற்றவுணர்வு இருந்திட,அவர் விறைப்புடன் இருந்துக்கொண்டார்.
ரோகிணியின் வாழ்வை அழித்த குற்றவுணர்வு அவருக்குள் இருந்தது.
“விஜய் நியூஸ் பார்க்கறீயாப்பா?சவுண்டு அதிகமா வை” என சொல்லிக்கொண்டே காஞ்சனா மாலா அங்கு வந்து அமர்ந்தார்.
அவரை கைதாங்கலாக நடத்தி அழைத்து வந்தாள் தமயந்தி.
மகளை இரக்கத்துடன் அவர் ஒரு பார்வை பார்க்க,அவளோ அவரை ஏறெடுத்தும் பாரவில்லை.
அதனை ஒரு பெருமூச்சுடன் நோக்கினார் விஜயேந்திர பூபதி.
கீழே இத்தகைய நிகழ்வுகள் நடந்துக்கொண்டிருந்த சமயம் சந்திரமதி அவசர அவசரமாக குளித்து புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.
மஞ்சள் நிற ஷிபான் புடவை,அதில் இருந்த அடர் நீல நிற கரைக்கு ஒத்த சாதாரண கையில்லாத மேல் சட்டை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டிருந்தாள்.
அவளின் கழுத்தை தன்னவன் கட்டிய மஞ்சள் கயிறும் அவன் அணிவித்த பிறை நிலா வடிவ சங்கிலி மட்டுமே அலங்கரித்திருந்தது.
கையில் அதே அடர் நீல நிற வெல்வெட் வளையல் அணிந்திருந்தாள்.
விரித்து விட்டிருந்த ஈரமான கூந்தலை தட்டியப்படி நின்றிருந்த மனையாளின் முதுகு பகுதி படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த ஜித்துவின் கண்ணில் பளீச்சிட்டது.
அரை தூக்கத்தில் கண்விழித்த ஜித்து தன்னவளின் முதுகு பிரவேசத்தில் ஒட்டியிருந்த நீரை கண்டதும் எச்சிலை கூட்டி விழுங்கினான்.
அடுத்த கணமே அவனது பார்வை கணவனது தாபமாக மாறிவிட மெதுவாக பூனைப்போல் பதுங்கி சென்று அவளை பின்னிருந்து அணைத்தவனின் இதழ்கள் அவளது முதுகில் படர்ந்திருந்த நீர் துளிகளை பருக ஆரம்பித்தன.
தன்னவனின் இந்த அதிரடியான செயலை சற்றும் எதிர்பாராத சந்திரமதி ஒரு நொடி திகைத்து “ஜித்து காலையிலே என்ன இது?” என கூச்சத்தில் நெளிய,
“காலையிலே யாரு உன்னை இவ்வளவு அழகா முதுகை காட்டி நிக்க சொன்னது…வெண்ணெய் கட்டி மாதிரி இருக்குடி” என கிறக்கமாக மொழிந்தவனின் இதழ்கள் உணர்ச்சி பெருக்குடன் அவ்விடத்தில் ஒரு கடியை பரிசாக வழங்க,
அதில் கூசி சிலிர்த்த மங்கையவளோ “ஜித்து பிளீஸ்…” என்றவளின் மறுப்பு பலகீனமாக வர,
“செம்ம மூடேத்தேறடி நீ…” என சரசமாய் கூறிய ஆடவனின் இதழ்கள் அவளின் மேனியில் சஞ்சாரம் சென்றது என்றால்,அவனின் கரங்களோ அவளின் சேலைக்குள் புகுந்து அத்து மீற தொடங்கின.
அவனது தொடுகையில் உருகி குழைந்த மங்கையவளோ “மணி இப்போ ஒன்பதாகப்போகுது…கீழே எல்லாரும் என்ன நினைப்பாங்க…” என அதட்ட முயன்று தோற்றவளின் குரல் குழைவாகவே வந்தன.
“என்ன நினைப்பாங்க? புருஷனும் பொண்டாட்டியும் ஆஜால் குஜாலா இருப்பாங்கனு நினைப்பாங்க” என கண்சிமிட்டி அவன் சொல்ல,
“ஜித்து” என அவனின் வெற்று உடம்பிலே கைமுட்டியால் அவள் இடிக்க,
“பின்ன என்னடி அவங்களும் இதெல்லாம் கடந்து தானேடி வந்திருப்பாங்க…அவங்களுக்கு இங்க என்ன நடக்கும்னு தெரியாதா?ஃப்ரீயா விடு” என்று உரைத்தவனின் விரல்களோ நேற்றை போல ஒரே இழுப்பில் அவளின் ரவிக்கையை கையோடு கழட்டியிருந்தன.
அதில் திகைத்து விழி விரித்தாள் மங்கை…
அவனோ கண்ணாடி வழியே அதிர்ச்சியுற்ற மனையாளை பார்த்து விஷமத்துடன் சிரித்தவாறே மேல் சட்டையை தரையில் போட,
அவளின் அடி வயிறு சூடேறி தடதடக்க ஆரம்பித்தன.
அதிலும் அவனது கள்வெறி பார்வை மொத்தமும் அவள் முன்னழகின் மேல் இருப்பதை கண்டதும் நாணத்தில் சட்டென விழிகளை தாழ்த்தினாள் அவள்.
அவனின் முன்பு இடையிற்கு மேலே எதுவுமில்லாமல் நிற்பதை கண்டு வெட்கம் பிடுங்கி தின்ன,அவசரமாக அவள் தன் கைக்கொண்டு அழகை மறைக்க முயல,
அந்த கள்ளனோ கண்ணாடி வழி தெரிந்த தன்னவளின் அழகு மொத்தத்தையும் விழியாலே பருகியவாறே அவளை தன்னை நோக்கி திருப்பினான்.
அவள் வெட்கம் கொண்டு தன்னவனின் முகம் நோக்க தடுமாற, அவனோ அப்படியே அவளை தூக்கி சென்று கட்டிலில் கிடத்தி அவளின் மேனியில் மீண்டும் ஒரு முறை முத்தெடுக்க தொடங்கினான்.
அவளது பலகீனமான மறுப்புகள் அத்தனையும் அவனது முத்தத்தில் தொலைந்து காணாமல் போயிருந்தது.
ஒரு மணி நேர கூடலுக்கு பிறகு இருவரும் குளித்துவிட்டு கீழே வந்த நேரம் மணி பத்தை தொடவிருந்தது.
அப்போது தான் முகிழ்மதியும் ரத்தினவேலும் கூட உணவருந்திக்கொண்டிருக்க,அவர்களுக்கு எதிர்புறமாக இவர்கள் இருவரும் நடந்து வந்தனர்.
சந்திரமதியோ சங்கடமாக “சாரி அத்தை” என வானதியிடம் மன்னிப்பு வேண்ட,
அவரோ மருமகள் இருவரையும் நோக்கி ஒரு புன்சிரிப்பை உதிர்த்தவர் “இதிலே மட்டும் இரட்டை பிள்ளைங்க ஒரே மாதிரி இருக்கீங்க…ஒண்ணும் பிரச்சனையில்லை…நீயும் ஜித்துவும் போய் பூஜையறையிலே விளக்கேத்தி சாமி கும்பிட்டு வந்திடுங்க…சாப்பிடலாம்” என்றார் பெருந்தன்மையாக…
அவரின் பேச்சை கேட்ட சந்திரமதியின் முகம் மலர்ந்திட “சரிங்க அத்தை” என்று கூறி,புதுமண தம்பதியினர் இருவரும் பூஜையறையில் கடவுளை வணங்கிவிட்டு வந்தார்கள்.
அங்கும் தனது சில்மிஷ சேட்டைகளை தொடங்கியவனை “ஜித்து பூஜையறையிலே என்ன இது?” என கண்டித்து அடக்கியிருந்தாள்.
இருவரும் உணவு மேசையில் அந்த ஜோடிக்கு எதிராக அமர்ந்ததும்,முகிழ்மதி இருவரையும் நோக்கி மென் புன்னகை சிந்தினாள்.
சந்திரமதி தங்கையின் முகத்தில் இருந்த பளீச்சிடலை கண்டதும் திருப்தியாய் முறுவலித்தாள்.
ஏனையோரிடத்தில் மௌனம் மட்டுமே நிலவின.
ஜித்து தான் வழக்கம் போல் அனைவருக்கும் புத்துணர்ச்சியுடன் காலை வாழ்த்தை தெரிவித்து,அந்த இனிய நாளை துவங்கி வைத்தான்.
அவனது இந்த துள்ளலை தான் கடந்த சில நாட்களாக அந்த குடும்பம் இழந்திருந்தது.
தற்போது அவனின் உற்சாகம் அவர்களையும் சேர்த்து மகிழ்ச்சிப்படுத்தியது.
உணவு மேசையில் இருந்த வாக்கிலே “அப்பா குட் மார்னிங்…லட்டு குட் மார்னிங்…பாட்டி குட் மார்னிங்” என வரிசையாக சொல்லிக்கொண்டே வந்த ஜித்து தாயை செல்லமாக அணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தான்.
அவனது அன்பில் மனம் நெகிழ்ந்திட “டேய் போதும்டா உட்கார்ந்து சாப்பிடு” என அவனை அதட்டி அமர வைத்தார்.
இருக்கையில் அமர்ந்ததும் “எல்லாரும் சாப்பிட்டாங்களா?நீங்க சாப்பிட்டீங்களாமா?” என அவன் விசாரிக்க,
“சாப்பிட்டாச்சு ஜித்து…நீ சாப்பிடு” என மகனின் அக்கறையை ஒரு பூரிப்போடு கண்டவாறே தட்டில் இட்லியை எடுத்து வைத்தார்.
சந்திரமதியோ பாட்டியும் அத்தையும் அவனை பற்றி கூறிய அத்தனையும் எத்தனை உண்மை என்பதை அந்நொடி புரிந்துக்கொண்டாள்.
அதுவரை மௌனமாக இருந்த இடம் அவன் வந்த ஒரு நொடியில் கலகலப்பாக்கியிருக்க,அதற்கு உரித்தான கணவனை காதல் பொங்க பார்த்தாள் அவள்.
ஜித்துவோ அதையறியாமல் தமையனிடம் காலை வணக்கம் தெரிவிக்க,
ரத்தினவேல் தன் தலையசைப்பை மட்டும் பதிலாக தர,முகிழ்மதியிடம் அவன் வாழ்த்து கூற,அவளோ “குட்மார்னிங் மாமா” என மெல்லிய சிரிப்புடன் உரைத்ததும்,ஆண்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் புறையேறின.
மற்றவருக்கும் அவள் அவ்வாறு அழைத்தது அதிர்ச்சி தான்!
‘என்ன’ என்பது போல் பார்க்க,
ஜித்துவோ “என்ன அண்ணி கூப்பிட்டீங்க?” என மீண்டும் ஒரு முறை அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வினவ,
அவளோ “மாமா” என நிதானமாக உச்சரித்தாள்.
அவள் ‘மாமா’ என்றதும் அவளது கணவனின் வயிற்றில் சுறுசுறுவென ஒரு உணர்வு கிளர்ந்தெழ “முகிழ் என்ன இது?” என பக்கவாட்டாக திரும்பி அதட்டினான்.
கணவனின் அதட்டலில் முகம் வாடிய மனையாளோ “இப்போ இவரு அக்காவோட ஹஸ்பெண்ட்…என்னை விட பெரியவரு…அப்போ இவரு மாமா தானே?” என அவனின் கேள்விக்கு அவள் விளக்கம் வேறு கொடுக்க,
அதைக்கேட்டு கடுப்பான ரத்தினவேல் “மாமாவும் இல்லை சோமாவும் இல்லை…நீ என்னை மட்டும் மாமானு கூப்பிட்டால் போதும்…புரியுதா” என அடிக்குரலில் சீற,
“அப்போ மாமா” என வரவேற்பறையில் அமர்ந்திருந்த மாமனாரை பாவமாக சுட்டிக்காட்ட,
‘நீ நிஜமாவே அப்பாவி தானா?இல்லை நடிக்கிறீயாடி?’ என்பது போல் அவளை பார்க்க,அவள் மெய்யாகவே பேதை பெண் போல் தான் விழித்திருந்தாள்.
“ஊப்” என இதழ் குவித்து ஊதியவன்,அனைவரின் முன்பும் எதுவும் கூற முடியாமல் அமைதி காத்தான்.
அவளின் பேச்சை கேட்ட வானதிக்கு கூட சிரிப்பு தான்!
‘இவ்வளவு அப்பாவியா இருக்கே இந்த பொண்ணு’ என மருமகளை எண்ணி கவலையும் கொண்டார்.
அவளின் பேச்சை கேட்டதும் ஜித்துவிற்கு சிரிப்பு என்றால் அப்படியொரு சிரிப்பு!
“அண்ணி தயவுசெஞ்சு மாமானு எல்லாம் கூப்பிடாதீங்க…செம்ம காமெடியா இருக்கு…ஏற்கனவே என் பொண்டாட்டி அண்ணனை அத்தான் பொத்தான்னு கூப்பிடறதே எனக்கு செம்ம சிரிப்பா வருது…இதிலே நீங்க வேற பழைய பஞ்சாங்கம் மாதிரி…ஹாஹா” என வயிற்றை பிடித்துக்கொண்டு வாய்விட்டு சத்தமாக சிரிக்க,
ரத்தினவேலுவும் சந்திரமதியும் ஒரே நேரத்தில் திரும்பி அவனை முறைத்தார்கள்.
அவளோ சற்று எல்லை மீறி அவனது இடையில் நறுக்கென்று கிள்ளி “நீங்க மட்டும் வாயை மூடிட்டு சாப்பிடலை…நைட் ரூமுக்கு வெளிய படுக்க வைச்சிடுவேன்” என அவள் அடிக்குரலில் யாருக்கும் கேட்காதவாறு மிரட்டியதும் அவன் கப்பென்று வாயை மூடிக்கொண்டான்.
பின்பு அவளில்லாமல் அவனால் உறங்க முடியாது.. அப்படியிருக்கும் போது அவனை வெளியில் படுக்க வைத்துவிட்டால் அவனுக்கு தானே அவஸ்தை?
அதனால் அவன் அமைதியாகிவிட ரத்தினவேல் இப்போது சந்திரமதியை நோக்கி பேச ஆரம்பித்தான்.
“சந்திரமதி படிப்பு விஷயம் என்ன பண்ணலாம்னு இருக்கே? பெண்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்…காலம்பூராவும் வீட்டோட அடைஞ்சுக்கிடக்கிறது எல்லாம் எனக்கு பிடிக்காதுமா…அதெல்லாம் எங்க அம்மா பாட்டி காலத்தோட போயிடணும்…நீ என்ன முடிவு பண்ணியிருக்கே” என மனையாளின் சகோதரி என்ற அக்கறையுடன் அவளிடம் வினவ,
“இல்லை அத்தான் எனக்கும் வீட்டோட இருக்கிறது எல்லாம் பிடிக்காது…நானும் படிக்கணும்னு தான் நினைச்சிருக்கேன்…முகிழ் படிக்கப்போற காலேஜிலே நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் செகண்ட் இயர் சேர்ந்து படிக்கிறேன் அத்தான்” என தெளிவான குரலில் இயம்பியதும் “குட்… நீ படிக்கிறதுக்கான எல்லா ஏற்பாடும் நானே பண்ணறேன்…டோன்ட் வொர்ரி” என அவளின் திட்டத்தை மெச்சிக்கொண்டவன்,அவளை படிக்க வைப்பதற்கான ஏற்பாட்டை செய்ய ஆயுத்தமானான்.
அவனது புரிந்துணர்வுள்ள பேச்சை கேட்டு வீட்டினர் அனைவரும் பூரித்துப்போனார்கள்.
ஒவ்வொருவரின் எதிர்காலம் பற்றி முன்னரே சிந்திக்கும் அவனது செயலில் அவனின் மேல் மதிப்பும் மரியாதையும் உயர்ந்துக்கொண்டே சென்றன.
சகோதரனும் கூட தமையனை ஒரு பிரம்மிப்புடன் தான் நோக்கினான்.
ஏனெனில்,திருமணம் முடிந்த கையோடு சகோதரனை தனிமையில் அழைத்தவன் “டேய் கல்யாணம் பண்ணம்மோ ஒரு குழந்தைக்கு அவளை அம்மாவாக்கி வீட்டுலே முடக்கிப்போட்டோமானு இருக்கக்கூடாதுடா…திங்க் அபவுட் ஹர் பியூச்சர் ஜித்து…அந்த பொண்ணை அவளோட சொந்த காலில் நிற்க வை…அது தான் உனக்கும் பெருமை” என அறிவுரை கூறியிருக்க,
தமையனது எண்ணமே அவனுடையதும் என்பதால் “சரி அண்ணா…நிச்சயமா நீங்க சொல்லற மாதிரியே செய்யறேன்” என தலையாட்டி ஒப்புதல் கூறியிருந்தான்.
அதனை நினைவுறுத்தி மென்மையாக தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் ஜித்து.
ஒரு வழியாக ரத்தினவேல் உணவருந்தி விட்டு கைகழுவ எழுந்து செல்ல அவனின் பின்னோடு முயல் குட்டி போல் முகிழ்மதியும் எழுந்து சென்றாள்.
கைகழுவும் குழாயின் அருகே இருவரும் வந்ததும் ரத்தினவேல் சட்டென திரும்பி அங்கு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு “ஏன்டி உனக்கு என்ன கொழுப்பா?எவ்வளவு தைரியம் இருந்தால் அவனை மாமானு கூப்பிடுவே நீ” என மீண்டும் அவளிடம் சீறினான்.
அவள் தன்னை தவிர வேறொரு ஆண்மகனை ‘மாமா’ என அழைப்பதை அவனால் ஏற்க முடியவில்லை.
அவனுள் பொறாமையும் ஆதங்கமும் போட்டிப்போட்டு முகிழ்ந்தன.
அவளோ கைகளை பிசைந்தவாறே “அது வந்து மாமா நீங்க தானே முறைய ஃபாலோ பண்ண சொல்லி அன்னைக்கு ஜித்துகிட்ட அட்வைஸ் பண்ணீங்க…அதான்” என தயக்கமாய் இழுக்க,
“அதுக்கு…அவனை மாமா சொல்லுவியாடி?” என இடதுக்கரத்தால் அவளின் கன்னம் பற்றி கிள்ளியவன்,
“என்னை விட்டு இனி யாரையாவது மாமானு கூப்பிட்டு பாரு…உனக்கு இருக்கு” என எச்சரித்தான்.
அத்தோடு அவளின் முகத்தருகே வந்து “என் அப்பாவை கூட வேற பேரு சொல்லி தான் நீ கூப்பிடணும்…மாமான்னு என்னை மட்டும் தான் கூப்பிடணும்…புரியுதாடி?” என அவளின் இதழை பிடித்து நசுக்கியப்படி கூற,
அவளோ வலியில் முகம் சுழிக்க,அதனை கண்டதும் சட்டென குனிந்து அவளின் இதழில் அவசரமாக தன் எச்சில் கொண்டு காயத்திற்கு உரிய மருந்திட்டு அவன் விலகியிருந்தான்.
கண நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வை அறிந்து அதிர்ச்சியில் அவள் விழி விரிக்க “கடைசியா பால்கோவா சாப்பிட்டியாடி?உதடு பயங்கர ஸ்வீட்டா இருக்கு” என நாவால் தன் இதழை வருடியப்படி கைகளை கழுவியவன் அவளது புடவையின் முந்தானையில் ஈரத்தை துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
காரிகையவளோ சிலை போல் சில வினாடி நின்றவள்,சடுதியில் சுய உணர்விற்கு வர அவளின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது.
அதனால் நாணத்தோடு சிரித்துக்கொண்டே கைகழுவிக்கொண்டு வரவேற்பறை சென்றாள்.
இப்போது குடும்பம் மொத்தமும் வரவேற்பறையில் தான் குழுமியிருந்தார்கள்.
தமயந்தியோ “அண்ணி இங்க வாங்க” என முகிழ்மதியை அழைத்து தன்னருகே அமர வைத்தவள்,பின்பு ‘என்ன நினைத்தாளோ?’ “நீங்களும் வாங்க அண்ணி” என சந்திரமதியையும் அழைத்து அருகே அமர்த்திக்கொண்டாள்.
அவளும் எவ்வித மனச்சுணக்கமும் இல்லாமல் அவள் அழைத்ததும் அருகே அமர்ந்து வந்தாள்.
ஏனெனில்,திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாக தனிமையில் சந்திரமதி இருந்த சமயம் தமயந்தி அவளிடம் பேச வந்தாள்.