முகிழ்மதி 113

நண்பனிடம் சொல்லிக்கொண்டு தங்கையை தன் வீட்டிற்கு அழைத்து செல்ல உத்தேசித்து நடந்த வீரின் எதிர்ப்பக்கமாக தமயந்தி வந்துக்கொண்டிருந்தாள்.

முதலில் வீர் தான் அவளை கவனித்தான்.

பார்ப்பதற்கு அவள் சாதாரணமாக இருப்பது போல் தெரிந்தாலும் அவளின் விழியில் வழக்கமாக இருக்கும் துள்ளல் இல்லை.

ஜீவனின்றி வற்றி இருந்தது அவளின் கூரிய விழிகள்!

அவளது அத்தகைய நிலைக்கு தாம் தான் காரணம் என்று தெரிந்ததும் வீரின் ஆவி அவனையும் மீறி துடித்தன.

அவளிடமிருந்து எத்துணை தொலைவு விலக நினைக்கிறனோ?அதையும் விட அதிகமாக அவளை அவன் நெருங்கிக்கொண்டிருக்கிறான்?

சில சமயங்களில் விசுவாசம்,நட்பு என அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அவளை எங்கும் கடத்தி சென்றுவிடலாமா என்று கூட தோன்றின.

ஆனால் அவனால் அதனை செய்ய முடியவில்லை.

முன்பாவது,நட்பு மட்டுமே அவளை நெருங்க விடாமல் தடுத்தன.

இப்போதோ அவனது தங்கையின் வாழ்வும் இதில் சிறையுண்டு இருக்கிறதே?

தற்சமயம் அதைவிட மோசம்…

இன்னொரு தங்கையின் வாழ்வும் இந்த வீட்டினுள் என்று முடிவான பிறகு அவன் எவ்வித விபரீத முயற்சியும் மேற்கொள்ள துணிய முடியாது.

நட்பா?காதலா என்று வரும் போதே நட்பு அவனிற்கு என்றும் முதன்மையாக இருக்கும்.இதில் பாசமும் சேர்ந்துக்கொள்ள அவன் மொத்தமாக பின்வாங்க முடிவு செய்துவிட்டான்.

ஆனால் அத்தகைய முடிவிற்கு வருவதற்குள் அவன் அனுபவித்த வேதனையை சொற்களால் வடிக்க முடியாது.

கண் முன்னே பல வகையான விருந்தை படைத்துவிட்டு ‘நீ காலம் முழுவதும் சாப்பிட கூடாது’ என்றால் எப்படியான பிணிகளால் ஒருவன் வதைப்படுவானோ அப்படியான வலியை அனுபவித்தான் வீர்.

வலி என்றால் சாதாரண வலி அல்ல…இதயத்தை சிறிது சிறிதாக குத்தியால் குத்தி வெளியே எடுப்பது போன்று மரண வலி அது!

அந்த ரண வலியை கூட தன் குடும்பத்திற்காக தாங்கிக்கொண்டு அவன் நடமாடினான்‌.

இன்று அவளின் உயிரற்ற விழிகளை கண்டதும் அவன் இதயத்தில் உதிரம் கொட்டிட,அவனால் என்ன முயன்றும் அவளை எளிதாக கடக்க முடியவில்லை.

‘போ’ என அவனது பாதங்களுக்கு இதயம் கட்டளையிட்டும் அவை அசைய மறுத்து அவ்விடத்திலே வேரூன்றி நின்றன.

அவன் சிலைப்போல் அசைய மறுத்து நின்ற சமயம் தான் அவள் அவனை கண்டாள்.

அவனை திரையரங்கில் சந்தித்த நாட்களுக்கு பிறகு இன்று தான் தன் வீட்டில் காண்கிறாள்.

அவனை பார்த்ததும் அவளிற்குள் இயங்க மறுத்த பாகங்கள் யாவும் மெதுவாக உயிர்த்தெழ தொடங்கின.

ஏனெனில்,அவளின் ஜீவனே அவன் தான்!

அதை அவன் அறிந்தும் அறிய மறுத்து இதயத்திற்கு கவசம் அணிந்துக்கொண்டிருக்கிறான்.

அவனையே விழிகள் மின்ன சில வினாடிகள் அசையாமல் நோக்கிய தமயந்திக்கு அதன்பிறகே அவன் தன் நேசத்தை அவமதித்த நினைவு எழ,அவளின் முகம் அப்படியே இறுகிவிட்டது.

அதனால் அவன் மீதிருந்த தன் விழிகளை விலக்கிக்கொண்டு வேகமாக அவனை கடந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவனை தாண்டி தான் அவனது புயல் கடந்து சென்றது…

அதுவும் ஒரு அடி தூரத்தில்…

எப்போதும் அவனை தாக்கி சுழன்றிடிக்கும் அந்த புயல் இன்று அவனில் மையம் கொள்ளவே இல்லை…

அவ்வளவு ஏன்?

அவனை ஒரு மனிதனாக கூட சீந்தவில்லை…அவனை உதாசீனம் செய்துவிட்டு கடந்து சென்றுவிட்டன‌.

நியாயமாக பார்த்தால் அவள் தன்னை கண்டுக்கொள்ளாததை எண்ணி அவன் அகமகிழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால் அவளின் நிராகரிப்பு அவனது ஒவ்வொரு அணுவிலும் ஊசியால் குத்தி குத்தி ரணமாக்கின.

அவனை கடந்து சென்ற புயல் அவள் அறையில் மையம் கொண்ட அடுத்த கணமே தன் வேகம் குறைந்து வாடிய சருகாய் தளர்ந்து தரையில் அமர்ந்துவிட்டது.

அவள் தான் அவனை ஒதுக்கிவிட்டு வந்தாள்…ஆனால் அவனை காயப்படுத்தியதை எண்ணி அவனிற்காக அவள் இங்கு கண்ணீர் சிந்தினாள்.

‘வீர் என்னை நீங்க கடைசி வரை புரிஞ்சுக்கவே மாட்டிங்களா?நான் உங்களுக்கு வேணாமா வீர்?நான் இல்லாமல் நீங்க வாழ்ந்திடுவீங்களா?எனக்கு பயமா இருக்கு வீர்…நான் இல்லாமல் உங்களாலே இருக்க முடியும்…ஆனால் என்னாலே நீங்க இல்லாமல் இருக்க முடியலையே…உங்க கூட பேசாமல் எனக்கு செத்திடலாம் போலே இருக்கு…பிளீஸ் என்னை தேடி வாங்களேன்…நான் உங்களுக்கு வேணாமா வீர்?என்னாலே முடியலை வீர்’ என வாய் விட்டு கதறி வெடித்து அழுதவளின் கண்ணீர் கண்டு அந்த பூமா தேவியே கண்ணீர் வடித்தாள்.

மகளின் அறையிலிருந்து வெளி வந்த அழுகை சத்தம் விஜயேந்திரன் செவிகளை வண்டாய் குடைந்தன.

அவரது செவியை மட்டுமல்ல…அவரது ஆசை மகளின் கண்ணீர் இரும்பு இதயம் கொண்டவரின் உள்ளத்தை சம்மட்டியால் அடிக்க,அவருக்கு உயிர் போகும் வலியைக் கொடுத்தன.

சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அந்த காதல் ஓரங்க நாடகத்தை அவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.

மகளும் தன் பேச்சை மீறி அவனுடன் சென்றுவிடுவளோ என அவரின் இதயம் துடிக்க,அதற்கு மாறாக அவரது மகளோ வீரை விலக்கிவிட்டு வந்து அவரின் நெஞ்சை குளிர வைத்திருந்தாள்.

‘ஹப்பாடி…என் பொண்ணாச்சும் இந்த அப்பன் பேச்சை கேட்டு நடக்கிறாளே…’ என கர்வமாக மீசையை முறுக்கிக்கொண்டு மகளை காண வந்த மனிதர் கேட்டது என்னவோ அவளின் வேதனையையும் அழுகையையும் தான்!

அதுவரை அகந்தையுடன் நின்ற அந்த பெரிய மனிதர் மகள் கண்ணீர் விட்டு கதறியதை கேட்ட பிறகு நொறுங்கிப்போனார்.

அதிலும் அவளின் சொற்கள் ஒவ்வொன்றும் அவரை உயிரோடு கொன்று புதைத்தன.

வீரின் விலகலுக்கும் மகளின் அழுகைக்கும் தாம் தான் காரணம் என்று அறிந்ததும் அவர் தளர்ந்துப்போனார்.

ஏற்கனவே சிறிய மகனின் இந்த அதிரடி திருமணத்திற்கு தன்னுடைய பிடிவாதம் காரணமோ என அவர் சிந்தித்துக்கொண்டிருந்த நிலையில் புதல்வியின் அழுகை அவரின் குரூரத்தை ஊர்ஜிதப்படுத்தின.

அதனால் அங்கு வந்த தடயம் அறியாமல் அவர் மெதுவாக அங்கிருந்து அகன்றவிட்டார்.

வீரால் அவளின் இந்த விலகலை ஏற்க முடியவில்லை…அவனின் விழிகளும் கூட கலங்கி தான் இருந்தன.

காதல் என்றால் மகிழ்ச்சியை மட்டும் அள்ளிக்கொடுக்கும் என்று யார் கூறியது…

காதல் என்றால் வலியையும் துயரத்தையும் மட்டுமே தரக்கூடியது என அவன் உணர்ந்த தருணம் அது தான்!

அவன் இப்போது உடைந்து நொறுங்கிப்போனாலும் தங்கைக்காக பின்பற்ற வேண்டிய கடமைகள் கண் முன் நின்றிருந்தன.

அதனால் சந்திரமதியை அங்கிருந்து அழைத்து செல்வதற்கு முன்பு “என் தங்கச்சி பண்ணது மிகப்பெரிய தப்பு தான்…அதுக்காக அவளை யாரும் வெறுத்திடாதீங்க…அவ செஞ்ச தப்புக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என எவ்வித சங்கோஜமும் இல்லாமல் தங்கைக்காக அனைவரின் முன்பு தலைகுனிந்து மன்னிப்பு வேண்டினான் அந்த தாயுமானவன்.

அவன் இப்படியொரு காரியத்தை செய்வான் என அங்கிருந்த ஒருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தமயந்தி தவிர ஏனையோர் அனைவரும் அங்கு இருந்தார்கள்.

விஜயேந்திரனும் கூட அவ்விடத்தில் தான் இருந்தார்.

முன்பு அவரிடமிருந்த வீராப்பு,கோபம் எதுவுமில்லை.

அவர் மௌனமாக அமர்ந்து வீரின் செயலை அவதானித்தப்படி இருந்தார்.

சந்திரமதியோ தன்னால் தமையன் தலைகுனிந்து நின்றதை ஏற்க முடியாமல் “அண்ணா நீங்க ஏன் மன்னிப்பு கேட்கறீங்க?தப்பு செஞ்சது நான் தான்…நான் தான் மன்னிப்பு கேட்கணும்…ஏன் அண்ணா இப்படி?” என கலங்கிப்போய் உரைத்தவளின் விழியிலிருந்து கண்ணீர் வழியலாயிற்று!

தன்னவளின் கண்ணீர் கண்டால் அவளவனிற்கு தாங்குமா என்ன?

“பிளீஸ் நீங்க இரண்டு பேரும் மன்னிப்பு கேட்கிற அளவு எந்த தப்பும் இல்லை…என்னோட அவசரத்துக்காக இந்த கல்யாணத்தை பண்ணிக்க சொல்லி மூனை கட்டாயப்படுத்தினது நான் தான்…அப்படி பார்த்தால் நான் தான் அண்ணா உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்…சாரி” என வீரின் கரம் பற்றி மன்னிப்பு வேண்டினான் ஜித்தேந்திரன்.

இவ்வாறு மூவரும் மாறி மாறி மன்னிப்பு வேண்டியதும் “நடந்தது நடந்துப்போச்சு…இதை பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை…இனி நடக்கப்போறதை பார்ப்போம்…வீர் நீ எங்க வீட்டு பையன்…நீ மன்னிப்பு கேட்கறது எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கு…இங்க யாரும் வேணும்னு எந்த தப்பும் செய்யலை…சூழ்நிலை அப்படி அமைஞ்சிடுச்சு…அதை சரி பண்ணற வழியை தான் பேசி முடிவு பண்ணியாச்சில்லை…இனி எல்லாரும் சேர்ந்து கல்யாண விஷயத்தை பார்ப்போம்” என பல நாட்களுக்கு பிறகு காஞ்சனா மாலாவின் குரல் அந்த வீட்டில் ஓங்கி ஒலித்தன.

அதுவே அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தன.

ரத்தினவேலோ தனது பாட்டியை புருவம் சுருக்கி பார்த்திருந்தான்.

இருப்பினும்,வாயை திறந்து அவன் எதுவும் பேசவில்லை.

மற்றவர் அனைவருக்கும் ஆணைப்பிறப்பித்த காஞ்சனா மாலா முகிழ்மதியிடம் “முகிழ் நீயும் மதி கூட கிளம்பு…கல்யாணத்துக்கு தேவையான எல்லா விஷயத்தையும் நீ போய் பார்த்துக்கோ…அவளுக்கும் நீ கூட இருந்தால் ஒரு ஆறுதலா இருக்கும்மா” என்றதும் முகிழ்மதியின் முகம் பூவாய் மலர்ந்தது.

ஆனால் அவளது மணாளனின் முகமோ அஷ்டக்கோணலாய் மாறிப்போனது.

சட்டென திரும்பி அவன் பாட்டியை ஒரு பார்வை பார்க்க,அவரோ அவனை கண்டுக் கொண்டால் தானே?

அவரது முடிவு அவனிற்கு சிறிதும் பிடிக்கவில்லை என்பது அவன் முகத்திலே தெரிந்தன.

அவன் மறுப்பு தெரிவிக்கலாம் என்றால்,அவனது மனையாளோ அவளது பிறந்தகத்திற்கு செல்வதற்கு குதூகலமாய் தயாராகிவிட்டாளே?

அவனிற்கு இணையாக ஜித்துவின் முகமும் விளக்கெண்ணெயை குடித்தது போல் மாறிப்போயின.

மொத்தத்தில்,ஆண்கள் இருவருக்கும் பாட்டியின் மீது கொலைவெறி தோன்றியது தான் மிச்சம்!

பின்பு அவர்களது இல்லப்பிராட்டிகளை பிரித்து அனுப்பிய வில்லியின் மீது கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்!

பெண்கள் இருவரும் எவ்வித கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே பிறந்தகத்திற்கு கிளம்பி சென்றுவிட்டனர்.

கணவனது முகம் கண்டு அவனிற்கு விருப்பமில்லை என்பது தெரிந்தாலும்,அவள் தமக்கையுடன் செல்லும் ஆசையில் ‘பிளீஸ்’ என இறைஞ்சலாய் விழியாலே கெஞ்ச,

வேறுவழியின்றி அவனும் அவளை அனுப்பி வைக்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டான்.

ரத்தினவேலிற்கு இரவில் அவளின்றி உறக்கம் வர மறுத்தது.

அவனது தனிமை முள் வேலி போல் இருக்க, வேறுவழியின்றி தன் தனிமையைப் போக்குவதற்காக வெகு நாட்களுக்கு பிறகு அவனது கலைக்கூடத்திற்குள் நுழைந்தான்.

அந்த அறை முழுவதும் அவன் செதுக்கிய சிற்பங்களும் வரைந்த ஓவியங்களும் இடம் பெற்று இருந்தன.

தற்போது தூரிகையை எடுத்து அந்த காலியான காகிதத்தில் சித்திரம் ஒன்றை தீட்ட ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் கழித்து,அவன் வரைந்த ஓவியத்தை பார்த்தவனின் விழிகள் இரண்டும் விரிந்தன.

காகிதத்தில் இருந்த அந்த விம்பங்கள் கூட அவனது ஆழ் மன தாபங்களை எடுத்துரைக்கும் விதமாக இருக்க ‘காட்’ என தூரிகையால் நெற்றியை தட்டிக்கொண்டான்.

அவன் வரைந்த சித்திரத்தை அந்த நிலா மகள் பார்த்தால் நாணம் கொண்டு விழிகளை மூடிக்கொள்வாள்.

அப்படியொரு அந்தரங்க காட்சியை தான் அவனது சிந்தை இயக்கி அவன் கரம் வரைந்திருந்தன.

அவனிற்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

ஒரு சிறு பெண்ணின் மீது இப்படியொரு மோகமும் காதலும் தோன்றும் என அவனே எதிர்பார்க்கவில்லை.

அந்த ஓவியத்தில் அவர்கள் இருவரும் பின்னி பிணைந்திருந்த காட்சியை பார்ப்பதற்கு வரைந்த அவனிற்கே ஒரு மாதிரியாக இருக்க முதன்முறையாய் அவன் இதழ்கள் வெட்கத்தில் விரிந்தன.

அதனால் சிகையை அழுந்தக்கோதி ‘யூ ஆர் கில்லிங் மீ ஸ்டார்’ என முணுமுணுத்தவாறே அந்த ஓவியத்தை எடுத்து வைத்துவிட்டு களிமண் கொண்டு சிலை செதுக்க ஆரம்பித்தான்.

அந்த களி மண் மட்டும் அவன் பேச்சை கேட்கவா போகிறது?

அதுவும் அவன் மனதின் விருப்பத்திற்கு ஏற்ப கைகளை செதுக்கியதின் விளைவால் மனையாளின் உருவமே சிற்பமாக உருவெடுத்திருந்தது.

தள்ளி நின்று அவன் வடித்த சிலையை கண்ட ரத்தினவேலோ ‘எனக்கு ஸ்டார் பைத்தியம் தான் பிடிச்சிருக்குனு நினைக்கிறேன்’ என பின்னந்தலையை களிமண் அடங்கிய கையால் தட்டிக்கொண்டான்.

இப்போது அவனது கையில் இருந்த களிமண் முழுவதும் அவனது சிகையை அலங்கரித்திருக்க,அவனிற்கே அவனை நினைத்து சிரிப்பு தான் வந்தது.

அனைவருக்கும் சிம்மச்சொப்பனமாய் இருக்கும் மூர்க்கனிற்குள் ஒரு சிறிய பட்டாம்பூச்சி காதல் பூவை மலர் செய்து, அவனை வேரோடு சாய்த்திருந்தது.

அவனது சகோதரன் தான் மனையாளின்றி தவித்துக்கொண்டிருந்தான் என்றால் ஜித்துவின் நிலை அதையும் விட கவலைக்கிடம்!

பல நாட்களாக அவளிற்காக காத்திருந்து இறுதியாக திருமணம் செய்து அழைத்து வந்த நிலையில்,முதல் நாளே அவனது மூனை ரசிக்க விடாமல் பிரித்து அனுப்பி விட்டால் அவன் சந்தோஷம் கொள்வானா என்ன?

அன்றைய இரவு அவர்கள் இருவருக்கும் முதலிரவு என்று எண்ணினாலே அவனையும் அறியாமல் தேகம் சூடேறி அவனது உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.

‘பாட்டி இப்படி அநியாயமா பிரிச்சுவிட்டுட்டிங்களே…உங்களை…’ என அவரை தன் வாயால் வறுத்தெடுத்தவனிற்குள் பொங்கிய உணர்வுகள் மட்டும் அடங்க மறுத்தன.

எப்போதும் தனிமையில் உறங்கும் அவனது பஞ்சு மெத்தை கூட கடும் பாறை போல் கரடு முரடாக கனக்க,அவனால் மெத்தையில் உறங்கவே முடியவில்லை.

வேறுவழியின்றி நேரத்தை கூட கவனிக்காமல் அவனது புது மனையாளிற்கு அலைப்பேசியின் வழியே அழைத்து விட்டான்.
 


 

 

ஜித்தேந்திரன் அழைக்கும் நேரம் சந்திரமதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் போலும்.

தூக்கத்தில் இருந்த சந்திரமதிக்கு அலைப்பேசியின் ஓசை சிறிதும் கேட்கவில்லை.

கடந்த சில நாட்களாக அவளை விலக்கியிருந்த நித்திரா தேவி இன்று தான் அவளை மனமுவந்து அணைத்திருந்தாள்.

அதனால் அப்படியொரு உறக்கம் அவளிற்கு!

ஆனால் முகிழ்மதி சிறு சத்தம் கேட்டாலும் எழுந்துவிடும் பழக்கம் உள்ளவள்.

ஆதலால் “அக்கா ஃபோன் அடிக்குது பாரு…எடுத்து பேசு” என்று அவளின் தோள் பட்டையில் தட்டி எழுப்பி விட்டு போர்வையால் முகம் வரை மூடிக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள்.

“ப்ச் இந்த நேரத்திலே யாரு?” என அரை தூக்கத்திலே கண்ணை கூட திறவாமல் அழைப்பை ஏற்று “ஹலோ” என்றப்படி காதில் வைத்தாள் சந்திரமதி.

எதிர்புறமிருந்து “மூன்…” என்ற மோகம் கொப்பளிக்கும் கணவனின் குரல் கேட்டதும் படீரென்று விழி திறந்தாள் மங்கையவள்.

அதுவரை திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்திராத சந்திரமதி இப்போது காதிலிருந்து அலைப்பேசியை எடுத்து திரையை நோக்கியவள், திடுக்கிட்டுப்போனாள்.

‘ஜித்துவா?இவர் எதுக்கு இந்நேரத்துக்கு கால் பண்ணியிருக்காரு’ என அவசரமாக படுக்கையில் எழுந்து அமர்ந்தவளின் உறக்கமெல்லாம் தொலைத்தூரம் ஓடிப்போனது‌.

“ஹலோ ஜித்து…” என்றாள் படபடப்பாக..‌.

அவளின் குரல் வழியே அவள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததை அறிந்தவனின் விழிகள் நேரத்தை பார்வையிட ‘ஷிட் மணி 12 ஆகப்போகுதா?மணிய பார்க்காமல் ஃபோனை போட்டு தப்பு பண்ணிட்டனே ஜித்து’ என நெற்றியில் தட்டிக்கொண்டான்.

“சாரி மூன்…ஏதோ ஒரு ஞாபகத்திலே மணிய பார்க்காமல் கால் பண்ணிட்டேன்” என மெய்யான வருத்தத்துடன் அவன் மன்னிப்பு வேண்ட,

அவனது மன்னிப்பும் பாவையவளை உருகிட செய்ய “சரி பரவாயில்லை ஏதாவது விஷயமா ஜித்து?இல்லைனா இந்நேரத்துக்கு கூப்பிட மாட்டிங்களே” என மெல்லிய குரலில் விசாரித்தாள்.

ஏனெனில்,அவளருகே தான் அவளின் தங்கை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாளே?

அதனால் தாம் பேசுவது அவளின் செவிகளுக்கு விழாத அளவு மெல்ல பேசினாள்.

ஆனால் அவனிற்கோ அவளின் மெல்லிய குரல் கூட உணர்ச்சிகளை தூண்டி விடுவதாய் இருந்தன.

எனவே நெற்றியை அவஸ்தையுடன் நீவி “விஷயம் பெருசா ஒண்ணுமில்லை மூன்…எனக்கு தூக்கமே வரலை…நீ என்ன செய்யறே தூங்கிட்டு இருக்கியா?” என்று கிறக்கத்தில் அபத்தமாக கேட்டிருந்தான்.

அவளிற்கோ அவன் பேசியதை கேட்டு சிறு கோபம் துளிர்த்தது.

“ஏங்க உங்களுக்கு தூக்கம் வரலைன்றதுக்காக தூங்கறவளை எழுப்பிவிட்டு தூக்கம் வருதானு கேட்கறீங்க?என்னங்க இதெல்லாம்?” என அலுத்துக்கொண்டாள் அவள்.

அவனோ அவளின் மீதுள்ள மோகம் குறையாமல் “உனக்கு எப்படிடி தூக்கம் வருது?இன்னைக்கு நாள் பத்தி நினைச்சாலே எனக்கு தூக்கம் வர மாட்டிக்குது…உடம்பெல்லாம் என்னவோ பண்ணதுடி” என உஷ்ணப்பெருமூச்சுடன் இதழை குவித்து ஊத,

அவளிற்கு அவனது பேச்சு எதுவும் விளங்கவில்லை.

அதனால் நெற்றி சுருங்க “இன்னைக்கு என்ன நாள்?எப்பவும் வர்ற வெள்ளிக்கிழமை தானே…அதுக்கு ஏன் உங்களுக்கு தூக்கம் வரலை” என்றாள் கடுப்பாக..

அவனோ ‘ம்க்கும் விளங்கிடும்’ என திட்டிக்கொண்டே “மூன் நான் உன்னை பார்க்கணும்…இப்போ வீடியோ கால் வரமுடியுமா?” என சரசமாக கட்டிலில் புரண்டு படுத்தவாறு மொழிய,அவளிற்கோ அப்போது வரை அவனது உணர்வுகள் யாவும் புரியவில்லை.

அல்லது புரிந்தும் புரியாதது போல் நடந்துக்கொள்கிறாளா என்பது அவளிற்கு மட்டுமே வெளிச்சம்!

“ஏன்டா அநியாயமா இல்லையா உனக்கு?மதியம் வரை நான் உன்கூட தானே இருந்தேன்…அப்புறம் என்ன பல நாள் பார்க்காத மாதிரி பேசறே?” என பல்லிடுக்கில் அலைப்பேசியின் வழியே சீறினாள்.

அவளின் உறக்கத்தை அவன் கெடுத்ததினால் உண்டான‌ கடுப்பு அவளிற்கு!

“உனக்கு அது வெறும் பாதி நாள் மூன்…ஆனால் எனக்கு அது பல யுகம் மாதிரி இருக்கு…பிளீஸ்டி ஐ வான்ட் டூ சீ யூ?” என ஏக்கமும் தாபமும் மிதமிஞ்சிய குரலில் அவன் வினவ,அப்போது தான் அவனது உணர்வுகள் அவளிற்கு மெதுவாக புரியத் தொடங்கின.

அவளிற்கு வேண்டுமென்றால் அதுவொரு சாதாரண திருமணமாக இருக்கலாம்.ஆனால் அவனிற்கோ பல யுகங்கள் தவம் கிடந்து கிடைத்த வரம் அல்லவா அவள்?

அவனது தவத்திற்கான பலன் கிடைப்பது தானே தாத்பரியம்!

தற்சமயம் அவளால் அவனிற்கு எவ்வித வரனையும் அளிக்க முடியாத இக்கட்டான நிலை!

ஆதலால் “ப்ச் ஜித்து…இப்போ எப்படி?அதுவும் முகழ் என் பக்கத்திலே தான் தூங்கிட்டு இருக்காள்” என மெதுவாக உறங்கிக்கொண்டிருந்த தங்கையை திரும்பி பார்த்தவாறு கிசுகிசுக்க,

அவனோ “தனியா வந்து பேசுடி…பிளீஸ்…பிளீஸ்…எனக்கு உன்னை பார்க்கணும் போலே இருக்கு மூன்” என இறைஞ்சினான்,அவளின் காதல் பித்தன்.

அவளிற்கு அவனது உணர்வுகள் புரியாமல் இல்லை..

அவனது வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றிட அவளின் அகமும் புறமும் பரபரத்தன தான்…

ஆனால் அவனது கோரிக்கையை நிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்கிறாளே?

அவளிற்கும் அது மிகுந்த கஷ்டத்தை தான் கொடுத்தன.

ஆயினும்,வேறு வழியில்லையே?

அத்தோடு தன்னுடைய சூழ்நிலை புரியாமல் சிறு பிள்ளை நடக்கும் கணவனின் மீது சிறு எரிச்சலும் உண்டாகின.

அதனால் விளைந்த கோபத்துடன் “டேய் விளையாடாதேடா…என்கிட்ட ஸ்மார்ட் ஃபோன் கூட இல்லை…அப்புறம் எப்படி பேச முடியும்?” என சிடுசிடுக்க,

“உஸ்…இது வேறய்யா…” என மிகுந்த ஏமாற்றத்துடன் புருவத்தை ஒற்றை விரலால் நீவியவன் “சரி விடுடி…உனக்கு என் கூட பேச விருப்பமில்லைனு நல்லாவே தெரியுது…நான் இங்க உன் ஞாபகத்தாலே தூக்காமல் முழிச்சிட்டே இருக்கேன்…நீ நல்லா ஜாலியா தூங்கு…பை குட் நைட்” என உம்மென்ற முகத்துடன் சொல்லிக்கொண்டே அழைப்பை துண்டிக்கப்போனான்.

அவனது ஏமாற்றம் நிறைந்த குரல் அவளை ஏதோ செய்ய “ஒரு இரண்டு நிமிஷம் ஜித்து…நானே முகிழ் ஃபோன் வாங்கி வீடியோ கால் பண்ணறேன்” என்றுவிட்டு அவசரமாக அழைப்பை துண்டித்தாள்.

அவளிற்கு ஏன் என்று தெரியவில்லை…
அவன் குரல் வாடினால் கூட அவளால் பொறுக்க முடியவில்லை…

அதனால் வேறுவழியின்றி அவனிடம் ஒப்புக்கொண்டு தங்கையை நோக்கி தயக்கத்துடன் திரும்பினாள்‌.

அவனிடம் கூறிவிட்டாளே தவிர,ஆனால் தங்கையிடம் எவ்வாறு அலைப்பேசியைக் கேட்பது என்று அவளிற்கு சங்கடமாக இருந்தது.

அதுவரை போர்வையை முகம் வரை போர்த்தியிருந்தாலும் உறங்காத முகிழ்மதிக்கு தமக்கையின் சொற்கள் தெளிவாகவே கேட்டிருந்தன.

கணவனுடன் ஈரூடல் ஓருயிராக வாழ்வதற்கு முன்பு இந்த உரையாடலை கேட்டிருந்தால் அவளிற்கு பெரிதாக ஒன்றும் தோன்றியிருக்காது.

இன்றோ ஜித்துவின் தவிப்பிற்கும் தமக்கையின் தடுமாற்றத்திற்கும் பின்பிருந்த உணர்வுகள் அறிந்த முகிழ்மதி போர்வையை அகற்றிவிட்டு மெல்ல எழுந்தாள்.

அவள் எழுந்து அமர்ந்ததை கண்டு திடுக்கிட்ட சந்திரமதி “நீ இன்னும் தூங்கலையா அம்மு?” என பதட்டத்துடன் வினவ,

அதற்கு மெல்லியதாக புன்னகைத்தவள் “இல்லை தூக்கம் வரலை அக்கா…எனக்கு ஏதோ அம்மா கூட படுக்கணும் போலே தோணுது…நான் போய் அம்மா கூட படுத்துக்கிறேன்…நீ இங்க தூங்கு” என்றவாறே தலையணை மற்றும் போர்வையை கையில் எடுத்துக்கொண்டவள் “அக்கா ஃபோனிலே ஜார்ஜ் கம்மியா தான் இருக்கு…நீயே ஜார்ஜ் போட்டு விடு” என நாசூக்காக அவளின் தயக்கம் அறிந்து அலைப்பேசியை தானாக கொடுத்துவிட்டு பக்கத்து அறைக்கு கிளம்பி சென்றாள் முகிழ்மதி.

ஒரு புறம் தங்களது உரையாடலை சகோதரி கேட்டுவிட்டது சங்கடத்தை கொடுத்தாலும்,

தான் கேட்காமலே அலைப்பேசியை தந்துவிட்டு சென்ற அவளின் புரிதலில் அகமகிழ்ந்த சந்திரமதி ‘அம்மு நீ நல்லாவே தேறிட்டடி’ என சிரித்துக்கொண்டே ஜித்துவின் எண்ணிற்கு காணொளி அழைப்பின் வழியாக அழைத்தாள்.

அவனின் வேண்டுதலை நிறைவேற்றிட வேண்டும் என்ற தீரத்துடன் அழைத்துவிட்டாள்.இப்போது அவளிற்குள் ஒரு பதட்டம் சூழ்ந்துக்கொண்டன.

அதனால் அவள் இதழ்கடித்து படுக்கையில் நேராக அமர்ந்தாள்.

ஆடவனோ தனது அண்ணியின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும் வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து களைந்த சிகையை கையால் அழுந்தக் கோதிக்கொண்டே அழைப்பை ஏற்றான்.

அவனை போலவே அவளும் விடி விளக்கை போட்டுக்கொண்டு படுக்கையில் அமர்ந்துக்கொண்டு அவனிடம் பேச தயாரானாள்‌.

ஏதோ ஒரு வேகத்தில் அவனிற்கு அழைத்துவிட்ட பெண்ணவள்,தான் அணிந்திருந்த இரவு உடையை கவனிக்க தவறியிருந்தாள்.

அவளின் மீதுள்ள தீராத வேட்கையுடன் அவளிற்கு அழைத்த ஜித்தேந்திரனின் விழிகளோ திரையில் தெரிந்த காட்சியில் நிலைக்குத்திப்போயின.

அவளின் ஆடையும் காரிகையின் தோற்றமும் ஆடவனை மூச்சடைக்க வைத்தன.

அவனின் விழிகள் அசையாமல் தன்னை வெறித்தப்பிறகே அவளிற்கும் தான் இருக்கும் நிலை உறைத்திட,அவசரமாக தன்னை குனிந்து பார்த்தவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.

ஏனெனில்,சந்தன நிற இரவு உடையில் சிறிய சிவப்பு நிற இதயங்கள் பூ போல் தெளிக்கப்பட்ட வடிவமைப்பிலான கையில்லாத முட்டி வரையிலான உடையை தான் அவள் அணிந்திருந்தாள்.

அவளிற்கு இரவு உறங்கும் போது எப்போதும் கசகசவென்று உடை அணிவது பிடிக்காது.அதனால் அவளிடம் இருக்கும் இரவு உடைகள் யாவும் சற்று கவர்ச்சியாகவே இருக்கும்.

அதற்காக தான் முகிழ்மதி கூட திருமணத்திற்கு பின்பு அவளின் இரவு உடையை அணிய தயங்கியது.

தற்போது அவனிடம் பேசும் வேகத்தில் தன் உடையை அவள் கவனிக்க மறந்து,அவனின் முன்பு அதே கவர்ச்சியான உடையில் பிரசன்னமாகியிருந்தாள்.

அதிலும்,அவளின் ஆடையை மெல்லியதான இரண்டு கயிறு மட்டுமே மேனியோடு சேர்த்து பிடித்து வைத்திருக்க,அதனால் அவளின் வெற்று தோள்களோடு சேர்த்து அவளின் பெண்மையின் அங்க வளைவுகளும் ஆடவனின் விழிகளுக்கு விருந்தாக மாறிப்போனது.

இரவு உறங்க செல்வதினால் பின்னலின்றி சுதந்திரமாய் விரியவிட்ட களைந்த கூந்தல்,காதில் மெல்லியதான ஒரு காதணி,கழுத்தில் அன்று காலை அவன் கட்டிய தாலி இதை தவிர வேறு எந்த வித அலங்காரமும் இல்லை.

அதற்கே அவனின் விழிகளுக்கு அவள் பேரழகியாய் தெரிந்தாள்‌.

அத்தோடு அவளது கழுத்தில் உறவாடிய அந்த மஞ்சள் கயிறு நீண்டு சுருண்டிருந்த இடம் ஆண்மகனை கள்வெறி கொள்ள செய்திட,அவன் மெதுவாக எச்சிலை கூட்டி விழுங்கினான்.

அவனின் பார்வை கள் குடித்த வண்டாய் மாறிப்போனதும் அவளின் அடிவயிறு தடதடக்க ஆரம்பித்திட ‘ஷிட்’ என அவசரமாக அருகே இருந்த போர்வை கொண்டு தன்னை மறைத்தாள்.

கண் முன்னே விருந்து படைத்துவிட்டு அதை உண்ணும்  உரிமை பறிக்கப்பட்டதும் அவன் ஏமாற்றத்துடன் அவளின் முகம் நோக்கினான்.

“ஜித்து இதுக்கு தான் என்னை கூப்பிட்டிங்களா?உங்களை” என அவனை அவள் விரல் நீட்டி கண்டித்தாலும் அவளின் முகத்தில் மருந்திற்கும் கோபமில்லை.

மாறாக,அவளின் இதயம் அதிவேகத்தில் துடித்திட,அவளின் இமைகள் அதையும் விட வேகமாக படபடத்தன.

அவனோ பட்டாம்பூச்சியாய் படபடத்த அவளின் விழிகளை ரசித்தப்படியே “மூன் நீ அழகினு தெரியும்…பேரழகினு இன்னைக்கு தான் தெரியும்டி” என்றவனின் விழிகள் வஞ்சனையின்றி போர்வைக்குள் அடைப்பட்டிருந்த அவளின் அங்க வளைவுகளை பருகியப்படி உரைத்தன.

அவன் பேச பேச அவளின் முகம் வெட்கத்தில் சிவந்துக்கொண்டே சென்றது என்றால்,அவனின் பார்வை அவளின் மேனியை சூடேற்றி சிலிர்க்க வைத்தன.

தன்னுள் புதிதாக கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் தாக்கம் தாளாமல் “ஜித்து என்னை பார்க்கணும்னு சொன்னீங்க…பார்த்திட்டீங்கயில்லை…நான் ஃபோனை கட் பண்ணறேன்” என அவசரமாக அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் மொழிய,

அவனோ செல்ல கோபத்துடன் “எங்க முழுசா பார்க்கவிட்டே நீ?பாதி தான் தெரிஞ்சது…அதுக்குள்ள போர்வையை போர்த்தி மறைச்சுக்கிட்டயே…கீழயும் ஒண்ணும் தெரியலை” என்றான் இதழை குவித்து ஊதி ஒரு பெருமூச்சுடன்…

அவனின் பேச்சு அவளிற்குள் இன்னும் அதீத வெட்கத்தை கொடுக்க “ஜித்து நீ இப்படியே பேசினால் நான் ஃபோனை கட் பண்ணிடுவேன்டா” என மிரட்டினாளே தவிர,அவளிற்கு அதை துண்டிக்கும் எண்ணம் சிறிதுமில்லை.

அவள் தன்னை மிரட்டியதும் கடுப்பாகிய ஜித்து ‘ப்ச் இவளை பார்க்க கூப்பிட்டவனுக்கு ஷோ கமிச்சு உசுப்பேத்தி விட்டது இவ…காட்டினதை பார்த்த என்னை இவ திட்டறாள்…என்ன அநியாயம்டா சாமி’ என முணுமுணுத்தவனின் சொற்களை கேட்டு “என்ன?” என்றவளின் விழியில் கனல் ஏறியதும் “சரி சரி டென்ஷனாகாதேடி…கொஞ்ச நேரம் உன் முகத்தை மட்டும் பார்த்துக்கிறேன்…போதுமா?” என கன்னத்தில் கைவைத்து அவளின் முகத்தையே அவன் இமைக்காமல் பார்த்தான்.

அவனின் கடித்து தின்றும் பார்வை மீண்டும் அவளை தடுமாற வைக்க “என் முகத்திலே ஸ்பெஷலா ஏதாவது எழுதி வைச்சிருக்கா என்ன?” என வீம்பாக கேட்டவளின் துடித்த இதழ்களே அவளின் தவிப்பை அவனிற்கு எடுத்துரைத்திருந்தன.

அதனால் நேரடியாக அவளின் கேள்விக்கு பதில் கொடுப்பதற்கு பதிலாக பாடலின் வழியே அவளிற்கு தேவையான பதிலளித்தான்.

“பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ” என பாடியவனின் குரலில் காதலும் தாபமும் போட்டிப்போட,அதில் உருகிப்போனவளின் இதயம் மட்டும் மதிமயங்கியது‌.

அவனது குரல் அவளை காந்தமாய் கட்டியிழுத்தது என்றால்,அவனது மோகன புன்னகை அவளை அப்படியே ஆகர்ஷித்திட,அவனின் விழிகளில் தெரிந்த தாபம் அவளை உயிரோடு கொன்று புதைத்தன.

அவளின் மனதிற்குள் சலனத்தை விளைவித்த ஆடவன் முதல் முறையாய் காதலை தாண்டிய ஒரு உணர்வை அவளுள் விதைத்தான்.

விழிகள் சொக்கி அவனையே அவள் பார்த்திருந்தாலும் அவளிதழ் மட்டும் “ஜித்து இந்த ராத்திரி வேளையிலே பாட்டு கச்சேரி நடத்த தான் எனக்கு கூப்பிட்டிங்களா?” என கோபமாக இருப்பது போல் அவள் கேட்க,

அவனோ இதழோரம் பூத்த வசீகர முறுவலுடன் “ஏன்?என் பாட்டு உனக்கு பிடிக்கலையாடி?” என்று கேட்டு புருவம் உயர்த்த,அவளால் சட்டென பதில் கூற முடியவில்லை.

அவளை அப்படியே உயிருக்குள் சுருட்டியிழுக்கும் படி மெட்டிசைத்தவனின் பாடலை பிடிக்கவில்லை என்று எப்படி பொய் கூறுவாள்?

ஆதலால் மெல்ல இமை உயர்த்தி “பிடிக்கலைனு சொல்ல முடியாது…பிடிச்சிருக்கும்னு சொல்லமுடியாது” என தயக்கத்துடன் அவள் இழுக்க,

“ஆஹான்…” என தலையாட்டியப்படியே தலையணையில் ஒற்றை கைகுற்றி அதில் தலைசாய்த்து படுத்த ஜித்தேந்திரன் “அப்போ இந்த பாட்டு பிடிச்சிருக்கானு பாருடி” என வேறொரு பாடலை தாபம் நிறைந்த குரலில் பாட ஆரம்பித்தான்.

“அன்பே அன்பே கொல்லாதே…கண்ணே கண்ணை கிள்ளாதே…பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே” என போர்வையின் இடைவெளியில் அவ்வப்போது பளீச்சிட்ட அவளின் யௌவனங்களை அணுஅணுவாய் விழிகளால் புசித்தப்படி அவன் பாட,

அவனின் பார்வை அவளை என்னவெல்லாமோ செய்ய “ஜித்து…” என கண்டிக்க முயன்றவளின் குரல் சிணுங்கலாகவே வெளிப்பட்டன.

அவனோ அவளின் சிணுங்கலை கூட ரசித்து “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி” என அவளின் மெல்லிடையை கண்டு பாடியவனின் விழிகள் இப்போது சற்றே மேலேறி அவளது இளமையின் எழில் வளைவுகளின் மீது ஆழப் பதிந்தன.

“சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி” என உணர்ச்சி பெருக்குடன் பாடியவனின் சொற்கள் அவளின் பெண்மையை வெடித்து சிதற வைத்திட,

போர்வையை நன்றாக இழுத்து உடலை மூடிக்கொண்டவளின் இதழ்கள் மட்டும் உணர்வுகளின் உச்சத்தில் துடிக்க ஆரம்பித்தன.

“மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஐந்தடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி” என திரையில் தெரிந்த அவளின் அங்க வளைவுகளை விரலால் வருடியப்படி அவன் பாட,

திரையில் வருடிய விரல்கள் ஏனோ அவளின் மேனியை நேரடியாக தீண்டியது போலிருக்க “ஜித்து பிளீஸ்…” என கெஞ்சியது எதையும் அவன் பொருட்படுத்தவே இல்லை.

“இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி” என திரையில் அவளை சுட்டிக்காட்டி பாடிட,ஒரு பெண்ணாக அவள் கர்வம் கொண்ட அதே வேளை அவளின் விழிகள் அவனை ஏறிட முடியாமல் அவஸ்தையில் தவிக்க,சட்டென அவை தழைந்துப்போயின.

“இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி…
அன்பே அன்பே கொல்லாதே…” என முழுபாடலையும் உயிர் உருகி பாடி அவளை மொத்தமாய் வேரோடு சாய்க்கும் வரை அவன் ஓயவே இல்லை.

அவன் பாடி முடித்த நேரம் அவளால் அவனை ஏறிடவே முடியவில்லை…

ஒரு உயிரை பறித்து எடுக்கும் அவஸ்தையான உணர்வில் அவள் இதழ்கடித்து மௌனம் காத்தாள்.

எப்போதும் பதிலுக்கு பதில் பேசும் மனையாள் இப்போது வாயடைத்துப்போயிருப்பதை அறிந்த மாயக்கண்ணனின் இதழ்கள் வசீகரமாய் முறுவலித்தன.

“மூன்…” என சரசமாய் அழைத்தவனின் குரல் கேட்கும் போதே அவளின் மேனி கிளுகிளுத்தன.

அதனால் இதயத்தில் உண்டாகிய படபடப்புடன் தலையுயர்த்தி அவனை ஏறிட்டவளின் பழுப்பு நிற விழியை ஆழ்ந்து நோக்கிய ஜித்தேந்திரன் “ஹேப்பி ஃபர்ஸ்ட் நைட் பொண்டாட்டி” என்றான் இதழ்கடித்து குறும்பாக சிரித்தவாறு…

அதை சற்றும் எதிர்பாராத பெண்ணவளோ “வாட்?” என திகைப்பாக வினவ,

“ஆமா டியர்…இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்…நேரிலே தான் கொண்டாட முடியலை…அட்லீஸ்ட் ஃபோனலையாவது செலிபிரேட் பண்ணலாம்னு தான் கூப்பிட்டேன்” என்றதும் அவளிற்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

“டூ யூ லைக் இட் பொண்டாட்டி” என அவன் விஷமமாக வேறு கேட்டு வைக்க,அவனை அவள் நன்றாக முறைத்தாள்.

அவனோ வழக்கம் போல் அவளின் முறைப்பை கிஞ்சித்தும் மதியாமல் “நேரிலே இருந்தால் இதை விட ஸ்பெஷலா கொண்டாடியிருக்கலாம்…பட் இந்த டான் சதி செஞ்சு பிரிச்சு விட்டிட்டுட்டாங்க” என சலித்துக்கொண்டவனின் விழிகள் மீண்டும் அவளின் உடலை பார்வையால் மேயத் தொடங்க,

அவளோ தன் நிஜ உணர்வை மறைத்து “ஜித்து…” என நாசி விடைக்க முறைக்க,

“சரி சரி கூல் டவுன் பேப்” என அவளை சாந்தமாக்கியவன் அடுத்த கணமே “ஆனால் மூன் எனக்கு ஏதோ ஃபுல் பில் ஆகாத மாதிரி இருக்கு…அந்த போர்வையை எடுத்திட்டனே…ஜஸ்ட் ஒரே ஒரு முறை என் செல்லங்களை பார்த்திட்டு நிம்மதியா தூங்கிடுவேன்…” என உஷ்ண பெருமூச்சுடன் அவளது நெஞ்சத்தின் மீது பார்வை பதித்தப்படி அவன் கூற,

அவனது பேச்சில் அவளிற்கு வெட்கம் பிடிங்கி தின்ன “ஜித்து நீங்க உதை வாங்கப்போறீங்க?நம்ப ரூல்ஸ் ஞாபகம் இருக்கில்லை” என அவள் எச்சரிக்க,

அவனோ வேண்டா வெறுப்பாக “அதெல்லாம் இருக்கு…இருக்கு” என கடுப்பாக சொன்னவன் 
‘இந்த பாட்டி இப்படியொரு திட்டம் போடும்னு தெரிஞ்சிருந்தால் அட்லீஸ்ட் கெஞ்சி கூத்தாடி ஒரு கிஸ்ஸாவது அவகிட்ட வாங்கியிருக்கலாம்…எல்லாம் போச்சு’ என முணுமுணுத்தவனின் பேச்சு அவளின் செவியில் தெள்ள தெளிவாக விழுந்திருந்தது.

அவன் மெதுவாக ஒன்றும் முணுமுணுத்திருக்கவில்லை…அவளின் காதில் விழ வேண்டும் என்பதற்காக சத்தமாக பேசியிருந்தான் அந்த கள்வன்.

அவன் பேசியதை கேட்டு குப்பென்று மேனி சூடேறி சிவந்திட “நீங்க ரூல்ஸ் பிரேக் பண்ணீங்கனா கண்டிப்பா நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் ஜித்து…” என போலியாக அவள் மிரட்ட,

அவனோ “அப்போ பண்ணிக்காதே” என்றான் அசால்ட்டாக…

“வாட்…” என பெண்ணவள் அதிர,

அவனோ ஒரு கையை தலைக்கு அடியில் கொடுத்து “நமக்கு தான் ஆல்ரெடி கல்யாணமாகிடுச்சே…மறுபடியும் எதுக்கு கல்யாணம்?நீ வரலைனா நான் இங்க தூக்கிட்டு வந்திடுவேன்” என கிஞ்சத்தும் பயமின்றி சாவகாசமாக உரைக்க,

அதில் ஒரு கணம் அதிர்ந்து விழி விரித்த சந்திரமதி சடுதியில் தலையை உலுக்கி “ஜித்து இதெல்லாம் ரொம்ப ஓவர்…பீ சீரியஸ்” என விரல் நீட்டி கண்டிக்க,

‘இவ வேற ஒருத்தி ரூல்ஸ் சீரியஸ்னு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் மாதிரியே பேசிட்டு இருக்காள்’ என கடுப்பாக எண்ணிய ஜித்து “சரி டென்ஷாகதே…நீ தூங்கு…குட் நைட்” என்றான்.

‘இவன் ஒண்ணும் அம்புட்டு நல்லவனில்லையே’ என அவள் நினைத்துக்கொண்டே “ம் குட் நைட்…” என்றாள்.

அவள் அலைப்பேசியை வைக்க செல்லும் நேரம் “என் மேலே இரக்கம் காட்டினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டி பொண்டாட்டி” என விஷமத்துடன் அவன் கூறியதும் ‘என்ன சொல்லறாரு இவரு’ என புருவம் சுருக்கி அவனது முகத்தை திரையில் பார்க்க,அவனது விழிகள் பதிந்த இடம் கண்டு அவள் விதிர்விதிர்த்துப்போனாள்.

அலைப்பேசியை துண்டிப்பதற்காக கீழிறக்கிய அந்த கண நேரத்தில் முட்டிக்கு மேலாக சுருண்டிருந்த ஆடையின் வழியே வெளிப்பட்ட அவளின் கால் அழகு மொத்தத்தையும் அவன் விழிகள் படமெடுத்திருந்தன.

உடனே அவன் இதழ்கடித்து அவளை நோக்கி புன்னகைக்க “உங்களை அடி வெளுக்கப்போறேன்…வைங்க முதல்ல ஃபோனை…” என படபடப்பாக அதட்டிவிட்டு அழைப்பை துண்டித்தவளின் இதழ்கள் நாணத்தில் முறுவலித்தன.

அவள் அலைப்பேசியை துண்டிக்க இருந்த இறுதி நொடியிலும் கூட கடவுளை தரிசிக்க காத்திருக்கும் பக்தனின் பரவசத்தோடு அவனின் விழிகள் அவளில் அலைப்பாய்ந்ததை அறிந்தவளின் முகம் சிவந்திட “சரியான திருடன்” என சிரித்துக்கொண்டே தன் மேனியை போர்த்தியிருந்த போர்வையை விலக்கி தன்னை பார்த்தாள்.

வேகமாக கண்ணாடி முன்பு நின்று தன்னை பார்க்க,ஆடையின் வழியே வெளிப்பட்ட அவளின் மேனி அழகை காண்பதற்கு அவளிற்கே ஒரு மாதிரி இருக்க ‘கடவுளே மொத்தமா பார்த்துட்டாரு…போச்சு…ஃபோனிலே இவரை சமாளிக்க முடியலை…நேரிலே…’ என நினைக்கும் போது அவளின் இதயம் தடதடத்தன.

அவள் விதித்த விதிமுறைகளை அவளையே மறக்க செய்திருந்தான் அவளின் மணாளன்.

அதையும் மீறி இனி இதுப்போலான இரவு உடைகளை அவன் முன்பு அணிவதை தவிர்க்க வேண்டும் என்று அவள் எண்ணிக்கொண்டாள்.

அப்போது தான் அவனின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும் என்று அவளாக ஒரு தீட்டம் தீட்டினாள்.

ஆனால் நினைத்ததை சாதிக்கும் வித்தை அறிந்த வித்தைக்காரன் அவள் கணவன்.

அவ்வாறு இருக்கும் போது அவளின் இந்த முடிவு பலனளிக்குமா என்ன?

அவனின் பேச்சும் பார்வையும் அவளின் விழி முன் வந்து இம்சிக்க,அவனை பற்றிய நினைவில் அவளின் உறக்கம் தொலைந்துப்போக,இங்கு ஜித்தேந்திரனோ எண்ணியது ஈடேறிய திருப்தியுடன் தலையணையை தன்னவளாக வரித்து கட்டியணைத்தப்படி இதழில் உறைந்த புன்னகையுடன் உறக்கம் தழுவியிருந்தான்.

இப்படியே அடுத்து வந்த இரண்டு நாட்களும் கழிந்தன.

ரத்தினவேல் முகிழ்மதி நடந்த அதே கோவிலில் இவர்கள் இருவரின் திருமணமும் நடக்கவிருந்தது.

அதனால் இரண்டு குடும்பமும் மொத்தமாக மணமகனின் கிராமத்திற்கு சென்றிருந்தனர்‌.

இறுதி நேரத்தில் மணமகள் மாறியதை கண்டு உறவினர்கள் கிசுகிசுத்தாலும்,அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு அவர்களது அதிகாரம் தடுத்தன.

நாளை காலை திருமணம் என்ற நிலையில் முன்பு மணமகள் தங்கியிருந்த அதே பங்களாவை தான் இப்போதும் தந்திருந்தார்கள்.

நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் சந்திரமதி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க,அவளின் இதழை யாரோ ஒருவர் பொத்தி கடத்திச் சென்றிருந்தார்கள்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top