தங்களது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ரோகிணியைப் பற்றி நினைக்கும் போதே அவனிற்கு ஆத்திரமாக வந்தது.
‘சேடிஸ்ட்’ என திட்டிய ஜித்தேந்திரன் ‘இத்தனை நாளா பொம்பளை புள்ளையாச்சேன்னு பாவம் பார்த்தேன்…இதுக்கு மேலையும் உன்னை விட்டு வைக்கக்கூடாதுடி’ என சூளுரைத்த ஜித்தேந்திரன் அக்கணமே அவளை அடியோடு ஒழிப்பதற்கான திட்டத்தை வகுக்க தொடங்கியிருந்தான்.
மற்றொரு புறம் தன் மனைவியை ஒருவர் வஞ்சித்ததற்கு பிறகு அவனை அவ்வளவு எளிதில் ரத்தினவேல் விட்டுவிடுவானா என்ன?
அவன் தன் பங்கிற்கு நடந்ததை பற்றிய விசாரணையில் இறங்கியிருந்தான்.
தன்னை சுற்றி பின்னப்படவிருக்கும் சூழ்ச்சி வலையை பற்றி அறியாமல் ரோகிணி சந்தோஷ வானில் சுதந்திரமாக சிறகடித்துப் பறந்துக்கொண்டிருந்தாள்.
மற்றொரு புறம் முகிழ்மதி பற்றிய விடயம் வெளியாகியதும் பதறிப்போய் வீரும் சந்திரமதியும் முகிழ்மதியை அழைத்து விசாரிக்க “நான் நல்லா தான் இருக்கேன்…நீங்க கவலைப்படாதீங்க…நியூஸ் வெளியிட்டவங்களை மாமா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு” என வெட்கச்சிரிப்புடன் அவள் கூறியதற்கு பிறகே நிம்மதியுற்றார்கள்.
அவளின் அந்த புன்னகை பின்பிருந்தது,அவளது கணவன் கொடுத்த காதலும் நம்பிக்கையும்!
அதனை உணர்ந்த தமையனும் சகோதரியும் ரத்தினவேல் முகிழ்மதி ஜோடியை எண்ணி பெருமிதம் கொண்டார்கள்.
காணொளி அழைப்பை வைத்ததற்கு பிறகு “அண்ணா நான் கூட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள்னு பயந்தேன் அண்ணா…பரவாயில்லை இந்த பொண்ணு கொஞ்சம் தைரியமா மாறிட்டாள்” என சந்திரமதி உவகையுடன் உரைக்க,
“ஆமா மதிம்மா” என ஆமோதிப்பாக தலையசைத்த வீர் “எல்லாம் ரத்தினவேல் டிரையினிங்…” என்றவனின் இதழ்கள் நண்பனை எண்ணி விரிந்தன.
அதைக்கேட்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிய சந்திரமதி “காதல் ரொம்ப பவர் ஃபுல் இல்லைண்ணா…நாம்ப சரியான ஆளை தேர்ந்தெடுத்தால் நம்ப வாழ்க்கை நொடியில் கலர் ஃபுல்லா மாறிடும்…இல்லையா நரகத்தை விட மோசமானதா இருக்கும்…அதுக்கெல்லாம் ஒரு லக் வேணும்” என நிராசை கலந்த குரலில் உரைத்தவளின் முகம் வாடியிருந்தது.
தங்கையின் உளச்சோர்வை அறிந்த வீருக்கும் அவளின் நிலை புரிந்தது.
ஏனெனில்,கல்லூரியில் நடந்தேறிய அவலங்கள் அனைத்தையும் அவன் விசாரித்து அறிந்துக்கொண்டான்.
ஆதலால் அவளது காதல் தோல்வியின் வலி அறிந்தவன் “கவலைப்படாதேடா…ஒரு விஷயம் நம்மை விட்டு போனால் அதை விட பல மடங்கு பெட்டரான ஒரு வாழ்க்கை நம்ப கைக்கு கிடைக்கும்…நீ மனசை மட்டும் தளரவிட்டறாதே…எல்லாம் நல்லதே நடக்கும்” என தங்கையின் தோளை தட்டி ஆறுதலாக உரைக்க,
“இனியொரு முறை என் வாழ்க்கையை வேற ஒருத்தர்கிட்ட நம்பி ஒப்படைக்க முடியுமானு தெரியலை அண்ணா…பார்ப்போம்” என நம்பிக்கையற்று உரைத்த பெண்ணவள் “பட் அண்ணா உங்களுக்கு அப்படியொரு பெட்டரான லைஃப் கண்ணு முன்னாடி இருக்கு…அதை எதுக்காகவும் இழந்திடாதீங்க” என சந்தர்ப்பம் கிடைத்ததும் அவனிற்கு அறிவுரை கூறவும் மறக்கவில்லை அவன் தங்கை.
அவனிற்கும் தமயந்தி வேண்டும்…அவளின் நேசம் வேண்டும்…அவளின் அனைத்தும் வேண்டும் என உள்ளம் தவிக்க தான் செய்தது.ஆனால் அவன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறையுண்டு இருக்கிறானே?
‘என்ன செய்வது?’ என தன்னவளிற்காக அவன் இங்கு தவித்துக்கொண்டிருக்க,
தமயந்தியோ குற்றவுணர்வோடு அங்கு தவித்திருந்தாள்.
அன்று பேசிய சொற்களின் வீரியம் உணர்ந்து ‘ப்ச் எப்படி என் வீரை போய் நான் பார்ப்பேன்?பல வருஷம் கழிச்சு கிடைச்ச அவரோட தங்கச்சியை கேவலமானவள்னு சொல்லிட்டனே’ என புலம்பிக்கொண்டிருந்தாள்.
அவள் சந்திரமதியை பேசியதற்காக வருந்தினாளே ஒழிய,அவள் இறுதியாக கூறிவிட்ட வந்த சபதத்தில் உறுதியாக இருந்தாள்.
‘அவனா தன்னை தேடி வரும் வரை நான் அவனை பார்க்க போகவே மாட்டேன்’ என்று!
அவனிற்கு அவளை காணாமல் எதுவும் ஓடவில்லை.
தன்னை துறுதுறுவென சுற்றி திரியும் பெண்ணின் நேசத்தை இழந்துவிட்டு அவனும் துடித்துப்போய் இருந்தான்.
இங்கு காதல் புரிந்தும் பேசப்படாத நெஞ்சங்கள் இரண்டும் தவித்தது என்றால்,சொல்லப்படாத காதலை கொண்ட உள்ளங்கள் இரண்டும் வேறு விதமாக குழம்பியிருந்தனர்.
தமையனிடம் பேசிவிட்டு உள்ளே சென்ற சந்திரமதியோ கட்டிலில் அமர்ந்து தன் மடியில் முகம் புதைத்தாள்.
அவள் இமைகளை மூடிய மறுகணமே அவளின் விழித்திரையினுள் வசீகரமாய் வந்து புன்னகைத்தான் அவன்.
அவன் வெறும் புன்னகையோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை…அவளை இழுத்து முத்தமிடுவது போன்ற காட்சி ஒன்று கண் முன் வந்து செல்ல விலுக்கென்று தலையுயர்த்தி நிமிர்ந்தாள் அவள்.
‘கண்ணை மூடினால் கனவிலையும் நீ தான்’ என்பது போல் அவள் விழி மூடினாலே அவன் வந்து அவளை இம்சை செய்துக்கொண்டிருந்தான்.
‘காட் என்னை இவன் நிம்மதியாவே விட மாட்டானா இடியட்’ என பல்லைக்கடித்து திட்டியவாறு தலையணையை எடுத்து தன் முகத்தை மூடி அதில் ஆழப் புதைந்தாள்.
அவனது நினைவை அடித்து விரட்டவதற்காக அவள் செய்த காரியம் அவளிற்கு பெரும் அவஸ்தையாய் மாறிப்போனது.
ஏனெனில்,தலையணையில் அவளின் முகம் ஆழப்பதிந்திருக்க,அந்நொடி எதிர்பாராமல் அவளின் இதழை உரசிய தலையணையின் பொத்தானால் அவளிற்கு மேனி தூக்கிவாரிப்போட்டது.
அவளிற்கு ஏனோ அவனே நேரிடையாக வந்து அவள் இதழை உரசியது போலிருக்க,அவளின் இதயம் படபடத்தது.
அடுத்த கணமே மேனி விதிர்விதிர்க்க தன் தலையணையை தூக்கியெறிந்துவிட்டு “கருமம் கருமம்” என ஆவேசமாக தன்னிதழை பரபரவென அழுந்த துடைத்தாள்.
‘ஏன்டா இப்படி என்னை இம்சை பண்ணறே?நீ மட்டும் என் கையிலே கிடை…அப்புறம் இருக்கு உனக்கு…’ என வெளிப்படையாக முணுமுணுத்தவளிற்கு ஜித்தேந்திரனின் மீது கடும்ஆத்திரம் உருவாகியது.
அவனளித்த அந்த ஒற்றை முத்தம் இன்று வரை அவளை பாடாய் படுத்தி கொண்டிருந்தது.
ஆம்,சந்திரமதியை ஜித்தேந்திரன் தான் முத்தமிட்டிருந்தான்.
எப்போது என்றால் ஜித்தேந்திரனிற்கு ரோகிணி மயக்க மருந்தை கொடுத்து நாள் அன்று தான்!
உண்மையில் அன்றைய நாள் ரோகிணிக்கும் ஜித்தேந்திரனிற்கும் இடையே எந்தவொரு அசம்பாவிதமும் நடந்தேறவில்லை.
ரோகிணி நிலை பிறழ்ந்த ஜித்தேந்திரனை எளிதாக ஆட்கொண்டு விட முடியும் என்று எக்களிப்புடன் எண்ணியிருந்தாள்.
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என அக்கணம் அவள் அறியவில்லை.
ஜித்தேந்திரன் போன்ற உறுதியான ஆண்மகனை அவ்வளவு எளிதில் சாய்த்து விட கூடுமா என்ன?
அதிலும்,நெஞ்சம் நிறைந்த நேசத்தை ஒரு பெண்ணின் மீது வைத்திருப்பவன் இந்த போதை மருந்தால் தடுமாற்றம் அடைவானா என்ன?
அவனது உணர்வுகள் அத்தனையும் கொந்தளித்த நிலையிலும் கூட அவனது கட்டுப்பாட்டை அவளால் சிறிதும் தகர்த்தெறிய முடியவில்லை.
அவன் மீது படர்ந்து அவனுடன் ஒன்றாக கலந்துவிட அவள் முயல,தன் மேல் இருப்பவள் தன்னுடையவள் அல்ல என்பதை அப்போதும் கணித்த ஆடவன் “ஹே போடி…” என ஆவேசமாக அவளை தள்ளியிருந்தான்.
அவன் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்து கிடக்க,ஒருவேளை அவனிற்கு போதை தெளிந்து விட்டதோ என்று பார்த்தாள்.
ம்ஹும்…அவன் சுய உணர்வை இழந்த நிலையிலும் கூட அவளின் இச்சைக்கு அவனது தேகம் உடன்பாடில்லை.
அவனோ உணர்வுகள் கொந்தளித்த நிலையில் அரைக்கண் திறந்திருக்க,இன்னும் போதையில் இருப்பது நன்றாகவே தெரிந்தது.
‘ஓ…போதையிலே இருக்கும் போது ஸ்டெடியா இருக்கானா…இப்போ தான்டா உன் மேலே இன்னும் வெறி வருது…’ என வெஞ்சினத்துடன் எண்ணியவள் தன் முயற்சியை விடவில்லை.
மீண்டும் அவன் மீது படர்ந்து அவனது சட்டையின் பொத்தான்களை அவிழ்க்க தொடங்கிவிட “ஹே எத்தை விடு…” என வலுவிழந்த கரங்களிற்கு எல்லாம் பலத்தை கொடுத்து ஆக்ரோஷமாக தள்ளியிருந்தான்.
கீழே தள்ளிய கையோடு அவளை பார்த்து ஒற்றை விரல் நீட்டி “கி…ட்ட வராதே…” என எச்சரித்தவனின் விழிகள் இரண்டும் செக்க செவ்வேலென சிவந்திருந்தது.
அரைக்குறையாக திறக்கப்பட்ட விழிகள்,களைந்த கேசம்,பாதி திறக்கப்பட்ட சட்டையின் வழியே பளீச்சிட்ட அவனது படிக்கட்டு தேகம் இதையெல்லாம் பார்க்க பார்க்க அவளின் உணர்வுகள் மொத்தமும் கொந்தளிக்க ஆரம்பித்தன.
அத்தோடு ‘இன்னைக்கு உன்னை அடைஞ்சே தீருவேன்டா’ என்ற வெறியோடு அவனை நெருங்க முயல,அவனோ தன்னை சுற்றி நெருப்பு வளையத்தை போட்டிருந்தான் போலும்!
பிறந்ததிலிருந்து எந்தவொரு தவறும் செய்யாமல் ஒழுக்க சீலனாய் வளர்ந்தவன் அவன்!
அப்படியானவன் சந்தர்ப்பம் கிடைத்ததும் மற்ற பெண்களின் மீது விழுந்து புரளும் காமுகன் போல் நடப்பானா என்ன?
ஆதலால் அவளால் என்ன முயன்றும் அவனை நெருங்கவே முடியவில்லை.
‘ச்சை இன்னும் கொஞ்சம் டிரக் சேர்த்து கொடுத்திருக்கணும் போலே’ என ஆத்திரத்துடன் எண்ணிய ரோகிணி தன் அலைப்பேசியின் வழியே ஒருவனிற்கு தொடர்பு கொண்டாள்.
“பிளடி ப****…என்னடா டிரக் கொடுத்திருக்கே? அவனுக்கு போதையே ஏறலை…” என எடுத்த எடுப்பிலே அவனை கண்டப்படி அவள் திட்ட தொடங்கிவிட,
“மேடம் நான் உங்களுக்கு கொடுத்தது உலகத்திலே ரொம்ப பவர் ஃபுல்லான டிரக்…நான் கொடுத்த அளவை விட ஒரு பின்ச் சேர்த்து எடுத்தால் கூட உயிரே போயிடும்…அவ்வளவு பவர் ஃபுல்” என சிறிது மிரட்சியுடனே அவன் சொல்ல,
“போடா ***…நீயெல்லாம் ***” என கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவனை அர்ச்சித்தவள் “செத்திடுவானாம்…காரணம் சொல்லறான் பாரு…அவனுக்கு போதையும் ஏறலை…ஒரு ஆனியனும் ஏறலை…உன்னாலே என் பிளான் எல்லாம் பிளாப்பாகிடுச்சு…ச்சை வைடா ஃபோனை” என உச்சக்கட்ட ஆத்திரத்தோடு அழைப்பை துண்டித்தவளின் விழிகள் மெத்தையில் உருண்டுக்கொண்டிருந்த ஆடவனின் மீது பதிந்தது.
எதிரில் இருப்பவன் கூறியது போல் அவனிற்கு கொடுத்த போதை வஸ்து அதிகப்படியான ஆற்றல் மிக்கது தான்!
அத்தோடு அதீத பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலான மருந்தும் அதில் கலக்கப்பட்டிருந்தது.
அப்படியான மருந்துகளை உட்கொண்டும் கூட அவன் தன் கட்டுப்பாட்டை இழக்கவே இல்லை.
ஆடவனது கட்டுப்பாடு அத்தகைய பலம் வாய்ந்ததாக இருந்தது.
கட்டிலில் உருண்டவனை எரிச்சலாக நோக்கிய ரோகிணி அவனையும் காதுகள் கூசச் செய்யும் வகையில் வஞ்சனையின்றி திட்டினாள்.
அதைக்கூட உணராத நிலையில் சிந்தை மயங்கி இருந்தான் ஜித்தேந்திரன்.
அவனது செவி அவளின் பேச்சை கிரகிக்க முயன்று தோற்றன.
இறுதியாக வேறுவழியின்றி அவனுடன் அவள் நெருக்கமாக இருப்பது மேலும் சில அந்தரங்க காணொளியை உருவாக்கிக்கொண்டு,அங்கு மறைத்து வைத்திருந்த புகைப்பட கருவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவள் நுழைந்த சில நிமிட துளிகளில் வெளியேறியதும் அந்த அறைக்குள் சந்திரமதி பதிவிசாக நுழைந்தாள்.
வரவேற்பறையின் தரையை துடைத்துக்கொண்டிருந்த சந்திரமதி ஏதேச்சையாக ஜித்து இருந்த திசைப்பக்கம் திரும்ப,அவளின் புருவங்கள் இரண்டும் சுருங்கின.
இரண்டு வாட்டசாட்டமான ஆண்கள் சுய நினைவு இழந்த ஜித்தேந்திரனை அழைத்து செல்ல,அவளிற்கு ஏனோ அது தவறாக தோன்றின.
‘இவ்வளவு நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்தாரு…திடீர்னு என்னாச்சு அவருக்கு?’ என குழப்பமாக சிந்தித்தவளால் அதனை எளிதாக கடக்க முடியவில்லை.
ஏனோ அவளின் இதயம் படபடக்க வேறுவழியின்றி யாவருக்கும் சந்தேகம் தோன்றாத வகையில் அவர்களை பின்தொடர்ந்து சென்றாள்.
அவள் எண்ணியது போலவே நால்வரும் ஒரே அறையில் நுழைவதும் ஜித்தேந்திரனின் குழறலான குரலையும் கேட்டவளிற்கு இப்போது ஊர்ஜிதமானது.
அவனிற்கு மது பழக்கமே இல்லை என்பது அவளிற்கு உறுதியாக தெரியும்.
ஏனெனில்,இந்த விடுதிக்கு அவன் பல முறை வந்திருந்தாலும் ஒரு நாளும் அவன் மதுபான விடுதியினுள் நுழைந்ததில்லை.
அதை வைத்தே அவற்றினை கணித்தவளிற்கு நெஞ்சம் கருக்கென்று இருக்க ‘பேசாமல் அண்ணாவுக்கு கால் பண்ணிடலாமா?’ என்றெண்ணி அலைப்பேசியை வெளியே எடுத்தாள்.
அதற்குள் அந்த அறைக்குள் நுழைந்த இரு ஆண்களும் வெளியே வர,அவளோ அங்கிருக்கும் அறைக்குள் நுழைவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தாள்.
ஆனால் அவளின் செவிகள் இரண்டும் கூர்மையுற,அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள்.
அவள் எண்ணியது போலவே அவர்கள் உரையாடலை கேட்ட சந்திரமதி மொத்தமாய் அதிர்ந்துப்போனாள்.
அவர்களையும் அறியாமல் ரோகிணியின் குற்றங்களை வாக்குமூலம் கொடுத்திருக்க ‘அடப்பாவி’ என முனகியவளின் அடி வயிறு கலங்கிப்போனது.
திருமணம் செய்துக்கொள்ளவிருக்கும் ஆடவனை அவள் இவ்வாறு செய்ததை எண்ணும் போதே ரோகிணியின் மீது ஆத்திரமாக வந்தது.
ஒரே ஒரு கணம் இதில் நாம் தலையிட வேண்டுமா என்ற தயக்கம் அவளுள் தோன்றின.
ஆனால் இவர்கள் பேசியதை கேட்டப்பிறகு கண்ணிற்கு முன்பு நடக்கவிருக்கும் அநியாயத்தை தடுத்த நிறுத்தியாக வேண்டும் என முடிவே செய்துவிட்டாள்.
ரத்தினவேலின் தம்பி அவன் என்பதும் மற்றொரு காரணம்!
அதற்காக ஜான்சி ராணி போல் துணிச்சலாக அவளுடன் தனித்து நின்று போராட மடமைத்தனமாக சிந்திக்காமல் தனது உதவிக்காக தமையனை அழைத்தாள்.
அவளின் கெட்ட நேரம் வீர் அவளின் அழைப்பை ஏற்காததினால் அவள் அடுத்ததாக அவளின் தோழி மீனுவையும் தோழன் ஜஸ்வந்த்தையும் அழைத்து உதவிக்கோரினாள்.
ஆனால் அவர்கள் இருவரும் அங்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே ரோகிணி வெளியே வருவதை கண்டவள்,அவசரமாக ஒரு சுவற்றிற்கு பின்பு மறைந்து நின்றுக்கொண்டாள்.
அவளின் முகத்தை பார்க்கும் போதே நினைத்தது நடந்தேறவில்லை என்பது புரிய ‘சைக்கோ’ என அவளை கொலைவெறியோடு முறைத்தாள்.
ரோகிணியோ கோபத்தில் குதிகால் சப்தமிட அங்கிருந்து வெளியேறியதும் மெதுவாக யாருக்கும் சந்தேகம் தோன்றாத வகையில் ஜித்தேந்திரன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே கட்டிலில் தன்னுள் கிளர்ந்தெழுந்த உணர்வுகளை அடக்கும் வகையறியாமல் படுத்திருந்த ஆடவனின் மோசமான நிலை கண்டு பதறிப்போனாள்.
அவளிற்கு தான் அவனிற்கு போதை மருந்து கொடுக்கப்பட்ட விடயம் நன்கு தெரியும் என்பதால் அவனின் மேல் பரிதாபம் உருவாகின.
எப்போதும் நேர்த்தியான உடை மாறாமல் இருப்பவன்,மேல்சட்டையின்றி இருப்பதை கண்டவளிற்கு ஒரு மாதிரியாகிவிட,உடனே விழிகளை வேறுப்புறம் திருப்பி “காட்” என வெளிப்படையாக புலம்பிய சந்திரமதி வேகமாக அவனருகே ஓடி சென்றாள்.
அவனருகே வந்த பெண் “ஜித்து ஆர் யூ ஓகே?” என பதட்டத்துடன் கேட்டவாறு போர்வையால் அவனது வெற்று தேகத்தை மூடிவிட்டாள்.
அவள் அவனை நெருங்கியது என்னவோ அவனின் மேல் உள்ள பரிதாபத்தினால் தான்!
ஆனால் அவளின் குரல் கேட்டதும் அவனது ஐம்புலன்களும் விழித்துக்கொள்ள,அவனது உணர்ச்சிகள் மொத்தமும் பேயாட்டம் ஆடத்தொடங்கின.
“மூன்…” என தடுமாற்றத்துடன் அவளை நோக்கி அவன் கரம் நீட்ட,
மூன் என்பது யாரென்று தெரியவில்லை என்றாலும்,அவனது விழிகளின் வழியே தேடலை உணர்ந்த பாவையவள் “நத்திங் டூ வொர்ரி ஜித்து…ஐயம் ஹியர் ஃபார் யூ” என அவன் நீட்டிய கரம் பற்றி ஆதுரத்துடன் உரைத்தாள்.
ஏற்கனவே,உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்தவனிற்கு அவளின் தீண்டல் அவனது உணர்வுகளை மொத்தமாய் வெடித்து சிதற வைத்தன.
அதனால் தன் கரத்தில் சிறையாகியிருந்த அவளின் கரம் பற்றி வெடுக்கென்று இழுத்திருந்தான்.
அவன் அவ்வாறு அதிரடியாக இழுப்பான் என்பதை அறியாத சந்திரமதியோ அவன் இழுத்த அடுத்த கணமே மெத்தையில் வந்து விழுந்திருந்தாள்.
“என்ன பண்ணறீங்க?” என அதிர்ச்சியில் அவள் சீறியதை சிறிதும் பொருட்படுத்தாத ஆடவன்,அவளின் மேல் படர்ந்து கிறங்கிய விழிகளுடன் அவளின் இதழை வன்மையாய் சிறை செய்திருந்தான்.
அவளிற்கு எப்படியோ அவனிற்கு அவளின் மேல் கொள்ளை கொள்ளையாய் காதல் இருந்தது.
அதனால் அவளின் அண்மையும் அவளது வாசனையும் ஆடவனது உடலை முறுக்கேற செய்து அவனை பித்தம் கொள்ள செய்தன.
ஆனால் இங்கு பாவையவளின் நிலை தான் படுமோசமாக இருந்தது.
அவனது இதழ்கள் அவளின் இதழை பற்றியதுமே பாவையவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.
அவளிற்கு ஒரு வினாடி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
அவள் சுதாரிப்பதற்குள் அவனது அதரங்கள் அவளுள் ஆழ்ந்து புதைந்துப்போக தொடங்கியிருந்தன.
அதுவொரு வன்மை கலந்த ஆழ்ந்த முத்தம்!
அவனது அசுரத்தனமான முத்தத்தில் திகைத்து விழித்த சந்திரமதி சடுதியில் சுய உணர்விற்கு வர,அவனது செயலை அறிந்து சினம் கூரையை பிய்த்துக்கொண்டு வந்தன.
அவளின் மேனியெங்கும் நெருப்பு கங்குகள் கொட்டியது போன்ற உணர்வு எழ “ம்…ம்” என அவளின் மெல்லிய கரம் கொண்டு அவனது வெற்று தேகத்தை பலமாக தாக்கினாள்.
ஆடவனோ தன்னை தாக்கிய கரங்களை ஒற்றை கையால் சிறைப்பிடித்து தலைக்கு மேல் தூக்கியவன் அவளின் இதழை முத்தமிடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.
அப்படியொரு அசுரத்தனமான வேகம் அந்த மென்மையானவனிடம்!
அனைத்தும் அவனுள் இருக்கும் போதை மருந்தின் வீரியம்!
அவள் படுத்திருந்த ஏடாக்கூடமான நிலை ஒரு புறம் அவளிற்கு உபாதையைக் கொடுக்க,இதில் அவனது உடலின் அழுத்தம் வேறு!
ஏனெனில்,அவளின் இடுப்பிற்கு கீழான பகுதி கட்டிலிற்கு வெளியிலும் பாதி உடம்பு மெத்தையிலும் இருக்க,அவளால் அவனை எதுவும் செய்ய முடியாத கையறு நிலை!
உச்சக்கட்ட போதையிலும் அவனது பிடி இரும்பாகியிருக்க,அவளை இப்போதே கபளீகரம் செய்யும் மோக வெறியில் அவன் இருந்தான்.
ரோகிணியிடமிருந்து அந்த போதையிலும் விலக நினைத்த ஆடவனால் தன் உயிரானவளிடமிருந்து விலக முடியவில்லை.
அவளின் மீதிருந்த ஒட்டுமொத்த உணர்வுகளும் அன்று போதையில் அவளிடம் வெளிப்பட ஆரம்பித்தன.
இதுவே சாதாரண நாட்களாக இருந்தால் தன்னவளை அவன் காயப்படுத்தவே விரும்பமாட்டான்.
இன்றோ முத்தமிட்டே அவளின் உதட்டை காயப்படுத்தியதோடு அவளை பலவந்தப்படுத்தி ஆட்கொள்ள முயன்றான்.
காரிகையவளிற்கு அவன் நிலை புரியவே செய்தது.
ஆயினும்,ஒரு ஆடவனின் வெற்று தேகமும் அவனது முத்தமும் அவளிற்கு ஒவ்வாமையைக் கொடுக்க ‘ஏய் விடுடா…’ என ஆக்ரோஷமாக உதறி தள்ளிவிட்டு எழ முயன்றாள்.
அவனது உடும்புப் பிடிக்கு முன்பு பூவையவளின் மெல்லிய உடலால் தப்பி செல்லவே முடியவில்லை.
அவளின் இதழில் உதிரம் கசிந்துருகுவது தெரியாத வகையில் அவன் நிலைதடுமாறி இருந்தான்.
அவனால் இதழில் உண்டாகிய வலியிலும் அவன் நெருக்கத்தால் இதயத்தில் ஏற்பட்ட ரணவலியிலும் அவளின் விழியோரம் கண்ணீர் கசியத் தொடங்கின.
ஒரு கட்டத்தில் அவளிற்கு உண்டான மன உளைச்சலும் கோபமும் அவளை சீறி எழ வைக்க,அவளிற்கு எங்கிருந்து அப்படியொரு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை.
பெண்களுக்கே உரிய ஆத்ம சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி ஆவேசமாக தலையால் முட்டி அவனை தள்ளியிருந்தாள்.
அத்தோடு கண நேரத்தில் அவனிடமிருந்து கரத்தை பிரித்தெடுத்த சந்திரமதி பளாரென்று அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.
அவள் அறைந்த அதிர்ச்சியில் அவனது இதழ்கள் அவளிடமிருந்து பிரிந்திட அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாவை கண் மூடி திறக்கும் நேரத்தில் மெத்தையிலிருந்து எழுந்து நின்றிருந்தாள்.
அவனிடமிருந்து அவள் விலகிய பிறகே ஆடவனிற்குள் புகுந்திருந்த அந்த காம மிருகம் வெளியேறியிட அவனிற்கு தாம் செய்த தவறும் உறைத்தது.
அவனிற்கு தன்னை நினைத்து அவமானமாக இருந்தது.
‘என்ன காரியம் செய்துவிட்டேன் நான்?அதுவும் என்னவளை போய்’ என தன்னை தானே குற்றம் சாட்டிக்கொண்டவன், தன் செய்கையை அறவே வெறுத்தான்.
அதனால் அவளின் முகம் காண முடியாமல் “மூன் முதல்ல இங்கிருந்து வெளிய போ…” என தலையணையில் முகம் புதைத்து ஆக்ரோஷமாக கத்தினான்.
அவனை திட்டுவதற்காக வாயை திறக்கப்போன சந்திரமதி அவன் கசங்கிய முகத்தையும் அவனது பேச்சையும் கேட்டு வாயை மூடிக்கொண்டாள்.
‘சந்து அவன் அவனா இல்லை…ரிலாக்ஸ்’ என தன்னை தானே சமாதானம் செய்தவளிற்கு இதழில் வலி உயிர்ப்போனது.
தன் உதட்டை விரல் கொண்டு மெதுவாக தொட்டு பார்க்க அதற்கே இதழ் ரணமாய் வலிக்க “ஸ்ஆ” என தன்னை மீறி முனகியிருந்தாள்.
அவள் அங்கிருந்து நகராமல் இருப்பதை அவளின் அந்த சிறிய சப்தம் வைத்து அறிந்த ஜித்தேந்திரன் “பிளீஸ் மூன்…முதல்ல வெளியே போ…என்னாலே என்னை கட்டுப்படுத்த முடியலை…உன்னை ஏதாவது பண்ணிடுவேனோனு பயமா இருக்கு…வெளியே போ” என தவிப்பும் தடுமாற்றமும் கலந்த உணர்வோடு மெத்தை விரிப்பை இறுக்கிப்பிடித்தப்படி கூற,
அவளோ அவனது அவஸ்தையான உணர்வுகள் எதுவும் அறியாமல் “நீங்க ஓகே வா?” என அப்போதும் அவ்விடத்தில் நின்று அவன் நலன் விசாரிக்க,
அவனிற்குள் சிறிது சிறிதாக மீண்டும் புதைந்து கிடந்த மிருகம் ஆக்கிரமிக்க தொடங்கிட,தன்னை கட்டுப்படுத்த முடியாமல் “முதல்ல வெளிய போடி” என அவ்வறையே அதிர கத்தினான் அவன்.
அவனது கர்ஜனையை கேட்ட சந்திரமதிக்கு உடலில் பெரும் நடுக்கம் ஒன்று தோன்றிட, வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
அவளை தன்னை மீறி காயப்படுத்திவிடுவானோ என்ற தவிப்பு ஒரு புறம்,கூடவே அவனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத இயலாமை மறுபுறம் அனைத்தும் அவனை வாட்டி வதைக்க தலையணைக்குள் முகம் புதைத்த ஜித்தேந்திரன் அதனை கடித்தப்படியே “ஆ” வென வெறித்தனமாய் கத்தினான்.
அவனது வலி நிறைந்த கத்தலை கேட்டுக்கொண்டே வெளியில் வந்த சந்திரமதிக்கும் அவனிலை புரிய,செல்லும் போது கவனமாக அறையினை பூட்டும் மின்அட்டை கொண்டு அதனை பூட்டிவிட்டே சென்றாள்.
அவளிற்கு தன் உதட்டில் உண்டான வலியை காட்டிலும் அவனை பற்றிய கவலையே மிகுதியாக இருக்க,
தனது தோழன் ஜஸ்வந்த்திடம் “அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை பார்த்துக்கோ…வேற யாரையும் ரூமுக்குள்ள விடாதே…நீயும் எங்கியும் போகாதே…இந்த ஒரு உதவி மட்டும் எனக்காக செய்யு ஜஸ்” என மன்றாடி கேட்டுக்கொள்ள,
“சரி…நான் பார்த்துக்கிறேன்” என ஜஸ்வந்த் அவளிடம் அட்டையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
அவனிடம் ரோகிணி செய்த இழிவான செயலை பற்றி எதுவும் கூறாமல்,ஜித்துவின் விரோதி போதை மருந்தை கொடுத்து விட்டதாக மட்டும் தெரிவித்திருந்தாள்.
மீனுவிடமும் அதே பொய்யினையே கூறியிருந்தாள்.
அத்தோடு தன் உதட்டு காயத்தை மறைக்க முகக்கவசம் வேறு அணிந்திருந்தாள்.
ஜஸ்வந்த் அங்கிருந்து அகன்றதும் “ஏன்டி நீயே அவர் கூட இருக்கலாமில்லை…இல்லை உன் ஃபேமிலி மெம்பர் யாரையாவது வர சொல்லி பார்த்துக்கலாமில்லை” என மீனு சொல்ல,
சந்திரமதியோ ‘ம்க்கும்…இரண்டு நிமிஷம் இருந்ததுக்கே என் உதட்டை பூரி மாதிரி உப்ப வைச்சிட்டான்…இதிலே இன்னும் இரண்டு நிமிஷம் சேர்ந்து இருந்தால் அவ்வளவு தான்..ஊப்’ என மனதிற்குள் எண்ணியவளிற்கு அப்போதும் உதட்டில் சுறுசுறுவென வலி தெறித்தது.
அப்போது தான் தனது தோழி முகக்கவசம் அணிந்திருப்பதை கவனித்த மீனு “ஆமா அவருக்கு தானே உடம்பு சரியில்லை…நீ ஏன்டி மாஸ்க் போட்டிருக்கே?” என சந்தேகமாக கேட்க,
சந்திரமதியோ “எனக்கு கொரோனா வர மாதிரி இருக்கு…உனக்கு வேணுமா?” என இரண்டு முறை தும்மிக்கொண்டே முகக் கவசத்தை கழட்டப்போக,
“ஆத்தி ஆளை விடுடா சாமி…நீயாச்சு உன் ஆளாச்சு” என அங்கிருந்து மீனு ஓடியே விட்டாள்.
அவள் அங்கிருந்து அகன்றதும் ஒரு பெருமூச்சை வெளியேற்றிய சந்திரமதி மீண்டும் தனது பணியை தொடர ஆரம்பித்தாள்.
தமையனிடம் அதனை பற்றி கூறலாம் என சிந்தித்தவள் பின்பு ‘வேணாம்…அவர் எழுந்திரிச்சு அந்த ரோகிணியை என்ன பண்ணனுமோ பண்ணட்டும்…அவ தான் அவனோட ஏஞ்சலாச்சே?’ என இதழை சுழித்துக்கொண்டாள்.
சந்திரமதியின் வேண்டுக்கோளிற்கிணங்க ஜஸ்வந்த் ஜித்தேந்திரனை உடன் இருந்து பார்த்துக்கொண்டான்.
தாம் செய்த காரியத்தை எண்ணி ஜித்து தவித்துப்போயிருந்த வேளையிலே ஜஸ்வந்த் நுழைந்தான்.
அவன் நுழைந்ததை கூட அறியாத நிலையில் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான் ஜித்தேந்திரன்.
சில நிமிடங்களில் அவன் ஆழ்ந்த நித்திரை சென்றுவிட்டான்.
நான்கு மணி நேர உறக்கத்திற்கு பிறகு மெதுவாக கண்விழித்த ஜித்தேந்திரனிற்கு அப்போதும் போதை முழுமையாக தெளியவில்லை.
ஆனால் அறையில் புதிதாக இருந்த ஆடவனை ‘நீ யார்?’ என்பது போல் பார்க்க,
அவன் தன்னை அறிமுகப்படுத்தவும் “சரி” என தலையசைத்தான்.
அவனின் உதவியுடன் குளியலறைக்கு சென்று பீச்சுக்குழாயிற்கு அடியில் வெகு நேரம் நின்றான்.
முதலில் தண்ணீரில் தள்ளாட்டத்துடன் நின்றவனிற்கு சிறிது சிறிதாக நடந்த நிகழ்வுகள் யாவும் ஞாபகத்தில் எழ ஆரம்பித்தன.
அதில் ரோகிணியின் செயல்கள் மற்றும் சந்திரமதியை அவன் வலுக்கட்டாயமாக முத்தமிட்டது என ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் நினைவிற்கு வர ‘ஷிட்’ என தலையில் அடித்துக்கொண்டான்.
ரோகிணியுடன் எதுவும் நடக்கவில்லை என்பது அவனிற்கு ஆறுதலை கொடுத்த அதேவேளையில் ‘ஐய்யோ கடவுளே என்ன பண்ணி வைச்சிருக்கேன் நான்’ என தன்னவளை முத்தமிட்டதை எண்ணி நொந்துப்போனான்.
தண்ணீரில் நின்ற பிறகு அவனிற்கு ஓரளவு கிறக்கம் குறைந்தாலும் முழுதாக போதை இறங்கவில்லை.
அவனிற்கு தற்சமயம் மருத்துவரின் உதவி தேவையாய் இருக்க,வேறுவழியின்றி அவனுடைய மருத்துவ நண்பனை இங்கு வரவழைத்தான்.
ஜஸ்வஸ்திடம் செய்த உதவிக்கு நன்றியுரைத்த கையோடு “மூன்கிட்ட சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க…” என்றான் மிதமிஞ்சிய வருத்தத்துடன்…
“மூன்…” என அவன் புருவம் சுருக்கி பார்க்க,
ஜித்துவோ நெற்றியை ஒற்றை விரலால் நீவி “சந்திரமதிகிட்ட சாரி சொன்னேனு சொல்லிடுங்க” என விளக்கம் கொடுத்து அவனை அனுப்பினான்.
அவனின் தடுமாற்றம் கண்டு அவனிற்கு ஏதோ புரிவது போல் இருக்க,அவன் சிரித்துக்கொண்டே வெளியேறினான்.
அதே சிரிப்புடன் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்த சந்திரமதியிடம் வந்த ஜஸ்வந்த் “மூன் உங்க ஆளு சாரி சொன்னாரு” என்றான் கேலியாக.
அதே இடத்தில் தான் மீனுவும் இருந்தாள்.
சந்திரமதியோ “என்னடா உளறிட்டு இருக்கே…மூன் யாரு…” என நடந்துக்கொண்டே கேட்க,
“எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதே…மூன் நீ தான்…சந்திரன்…மதி இரண்டுமே மூன் தான்னா அர்த்தம்…சோ அவர் உனக்கு செல்லப்பெயர் வைச்சிருக்காரு…இப்போ தான் புரியுது மேடம் ஏன் அப்படி பதறினீங்கனு” என கண்சிமிட்டி அவன் சிரிக்க,
“ஹே ஹே நான் சொன்னப்ப நீ நம்பலை இல்லை…இப்போ பாரு…அவர் மனசுலே நீ தான் இருக்கே” என மீனு ஒரு பக்கம் குதூகலிக்க,
“இரண்டு பேரும் வாயை மூடிட்டு கிளம்புங்க…அவர் ஃப்ரெண்ட் வந்திட்டாரில்லை…இனி அவங்க பார்த்துப்பாங்க…நாம்ப கிளம்பலாம் வாங்க…” என அதட்டி இருவரையும் விடுதியிலிருந்து தள்ளி சென்றாள்.
எப்போதும் வரும் நேரம் வீர் அவளிற்காக வந்து காத்திருந்தான்.
வந்தவுடனே அவன் அழைப்பை ஏற்காததிற்காக மன்னிப்பு வேண்ட ‘நீங்க எடுக்காததும் நல்லதுக்கு தான் அண்ணா’ என நினைத்தவள் “பரவாயில்லை விடுங்க அண்ணா” என பெருந்தன்மையாக கூறி ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.
அவனோ அவளின் முகத்தில் இருந்த கவசத்தை பார்த்து “என்ன முகத்திலே மாஸ்க்?” என விசாரிக்க,
அவளோ முகக்கவசத்தை தன் இதழோடு அழுத்தி “கிளின் பண்ணும் போது கொஞ்சம் அலர்ஜியாகிடுச்சு அண்ணா” என்று கூறி சமாளித்திருந்தாள்.
அவனோ “ப்ச் நீ எதுக்கும்மா இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யணும்…ராணி மாதிரி வீட்டுலே இருக்கலாமில்லை…” என மீண்டும் தனது ஆதங்க புலம்பலை தொடங்கிவிட,
அதில் கடுப்பாகி “அண்ணா…” என அயர்ச்சியுடன் அவள் அழைக்க,
அவனோ நெற்றியை நீவி “சரி எதுவும் பேசலைம்மா…வீட்டுக்கு போய் முதல்ல ரெஸ்ட் எடு” என அவளை அழைத்து சென்றுவிட்டான்.
நண்பர்களிடம் பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் “மூன்” என உயிர் உருக அவளை அழைத்து அவன் முத்தமிட்ட காட்சி இப்போதும் அவளின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
‘மூன் நான் தானா?அப்போ அவர் என்னை லவ் பண்ணறாரா?’ என நினைக்கும் போது அவளால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை.
மாறாக,அவளின் மனம் விரக்தியில் விம்மி தணிந்தது.
அதன்பொருட்டு ‘இனி அவனை ஒரு நாளும் சந்திக்கவே கூடாது’ என்று முடிவெடுத்துவிட்டாள்.
ஆனால் என்று அவனை சந்திக்கவே கூடாது என முடிவெடுத்தாளோ அன்றைய நாள் தொட்டு அவனது ஞாபகங்கள் மட்டுமே அவளின் சிந்தையெங்கும்!
குறிப்பாக,அவனது முத்தம் அவளை உறங்கி விடாமல் தினந்தோறும் இம்சை செய்தது.
அதற்கு காரணமும் இருந்தது.
அவன் காயப்படுத்திய இதழ்கள் மீண்டும் பழைய நிலைக்கு மாறுவதற்கு நான்கு நாட்கள் ஆகியது.
அதனால் உதட்டில் வலி வரும் நேரமெல்லாம் காரணமின்றி அவனும் ஞாபகத்தில் வந்துவிடுவான்.
‘ஓ காட்…எல்லாம் இவனால் வருது’ என அவனை மானசீகமாக கோபத்தோடு திட்டிக்கொள்வாள்.
காயத்தினால் மட்டுமே அவன் அவளின் சிந்தையில் இருக்கிறான் என்று எண்ணியதற்கு எதிராக காயம் அகன்றப் பிறகும் அவனது நினைவுகள் தான்!