முகிழ்மதி 106


 

 

ரோகிணி பரப்பிய செய்தி பூதங்கரமாக வெடித்ததும் “நான் அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்…சிவராமன் வீட்டு பொண்ணு வேணாம்னு…நான் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த வீட்டுலே போய் கல்யாணம் பண்ணீங்க?இப்போ பாருங்க எல்லாரும் எப்படி அவமானப்பட்டு நிக்கிறோம்…எல்லாம் போச்சு…இத்தனை நாள் நாம்ப சம்பாதிச்சு வைச்ச பெயரெல்லாம் போச்சு..” என விஜயேந்திரன் குதி குதியென குதிக்க,குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் சற்று நிதானமாகவே இருந்தனர்.

சிவராமன் பற்றி அறிந்து தானே அங்கு பெண் பார்க்க சென்றார்கள்.

அதனால் அவர்களுக்கு இந்த விடயம் புல்லிற்கு இறைத்த நீர் போல் தான்!

அவர்கள் அனைவரும் ரத்தினவேலின் புறம் தான் நின்றிருந்தனர்.

“இன்னும் ஒரு நாள் விட்டு எலெக்ஷன் வேற…என் மானம் மரியாதை எல்லாமே போச்சு…ரிஷப்ஷனாவது வைக்கலாம்னு சொன்னேன்…அதையும் யாரும் கேட்கலை…இப்போ அந்த கேவலமானவன் பொண்ணை கட்டிட்டு வந்ததுக்கு எல்லா கட்சியிலிருந்தும் கிழிகிழினு கிழிச்சு தொங்கவிடறாங்க…மக்கள் அதுக்கும் மேலே…இப்போ யாரு நமக்கு ஓட்டுப்போடுவாங்க…எப்படி ஜெயிக்கிறது?இந்த பொண்ணாலே எல்லாம் போச்சு” என தலையில் அடிக்காத குறையாக புலம்பியவர் இறுதியில் நேரடியாகவே முகிழ்மதியை குற்றஞ்சாட்டியதும் வெகுண்டுவிட்டான் ரத்தினவேல்.

அதிலும்,முகிழ்மதியின் முகமோ பயத்தில் வெளிறிப்போய் அழ தயாராகியதை பார்த்ததும் அவளின் கணவனால் தாளவே முடியவில்லை.

“அப்பா போதும் நிறுத்திறீங்களா?இப்போ என்ன நடந்துச்சுனு இப்படி கத்திட்டு இருக்கீங்க?ஜஸ்ட் என் பொண்டாட்டி யாருனு தானே நியூஸ் வெளியாகியிருக்கு…என்னைக்கா இருந்தாலும் வெளிய வரப்போறது தானே…இதுக்கு ஏதோ கொலைக்குத்தம் நடந்த மாதிரி கத்திட்டு இருக்கீங்க…அதுவும் என் முன்னாடியே அவளை பாய்ண்ட் அவுட் பண்ணி திட்டறீங்க?ஹவ் கேன் ஐ அக்சப்ட் திஸ்” என அவன் தனக்கே உரிய அழுத்தத்துடன் கோபமாக பேசியதும் விஜயேந்திரன் சற்று மிரண்டுவிட்டார்.

ஆயினும் “பூபதி நான் அந்த அர்த்தத்திலே சொல்லலைப்பா…நமக்கு எதிரா எந்தவொரு எதிர்ப்பு குரலும் வராதுன்னு நீ சொன்னே…இப்போ பாரு எப்படி இந்த நியூஸ் வெளிய வந்துச்சு…அந்த துரோகி சிவராமன் பொண்ணா இருக்கிறதே நமக்கு பெரிய மைனஸ் தான்‌…அதிலும் பச்சை துரோகியோடு சம்மந்தினு சொல்லவே எனக்கு நாக்கு கூசுது…இதிலே சிலரு அவனோட நிலைமைக்கு நாம்ப தான் காரணம்னு வேற பேசறாங்க…இதனாலே நடக்கப் போற எலெக்ஷனிலே நமக்கு இது பெரிய நெகட்டிவா அமைஞ்சிடும்…அப்புறம் எப்படிப்பா நான் அமைதியா இருக்கிறது‌” என இப்போதும் தாம் பேசியது தவறே இல்லை என்பது போல் வியாக்கியானம் பேசி நின்றார்.

ரத்தினவேலோ தந்தையை உறுத்து விழித்து “ஐ நோ ஆல் தட்…சதாசிவம் மூலமா இந்த நியூஸ் வெளியாகலை…வேற யாரோ மூலமா தான் வெளியாகியிருக்கு…அது யாரு என்னானு கண்டுப்பிடிச்சு இந்த விஷயத்தை முடிச்சு வைக்க வேண்டியது என் பொறுப்பு‌…சோ உங்க அரசியல் வாழ்க்கை என் பொண்டாட்டியாலே எந்த விதத்திலையும் பாதிக்காது” என தீட்சண்ய குரலில் உரைத்தவன்,

அழ தயாரான தன் மனையாளை தன்னருகே இழுத்து நிற்க வைத்த கையோடு “பட் இந்த ரத்தினவேல் ரகுநாத பூபதி பொண்டாட்டியை மரியாதை இல்லாமல் பேசினதுக்கு நீங்க அவகிட்ட மன்னிப்பு கேட்டாகணும்…அதுவும் ரைட் நவ்” என்றான் அழுத்தம் திருத்தமாக…

அவனது பேச்சை கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஸ்தம்பித்துவிட்டனர்

விஜயேந்திரனோ மகனின் பேச்சை நம்ப முடியாத திகைப்போடு பார்த்து “எது நானா அதுவும் அந்த பொண்ணுகிட்டயா?” என முகிழ்மதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடுப்பாக வினவ,அதில் ரத்தினவேலுவிற்கு சுறுசுறுவென கோபம் பொங்கி வந்தது.

அவனது கழுத்து நரம்புகள் புடைக்க “அப்பா திஸ் இஸ் தி லிமிட்…நான் முன்னாடியே சொல்லிட்டேன்…ஷீ இஸ் மை வைஃப்…எனக்கு என்ன மரியாதையை இந்த வீட்டுலே கொடுக்கறீங்களோ அதே அளவு மரியாதை இவளுக்கு நீங்க கொடுத்தாகணும்…அதுவும் என் முன்னாடியே பல தடவை அவளை இன்செல்ட் பண்ணற மாதிரி பேசறீங்க?ஹவ் கேன் ஐ அக்சப்ட் தட்…அவளை அவமானப்படுத்தினால் அது நீங்க என்னையே அவமானப்படுத்தற மாதிரி தான்…ஆஸ்க் ஹெர் சாரி” என உடும்பு பிடியாக அவரின் தவறை சுட்டிக்காட்டி தந்தையை மன்னிப்பு கேட்கும்படி ஆணை பிறப்பித்தான்.

அவன் இப்படியொரு ரூபத்தை காட்டுவான் என அங்கிருந்த யாவரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதோடு சமுதாயத்தில் மதிப்பு மிக்க ஒரு மனிதரை சிறிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டினால் யாரால் அதனை ஏற்க முடியும்?

அதனால் காஞ்சனா மாலாவே “பூபதி என்னப்பா இது?” என பேரனை கண்டிக்க முற்பட,

வெடுக்கென்று தலைமுடி சிலும்ப அவரை நோக்கி திரும்பிய ரத்தினவேலோ “பாட்டி இது எனக்கும் என் அப்பாவுக்குமான விஷயம்‌…இதிலே நீங்க தலையிட வேண்டாம்” என்றவனின் முகமோ கடும்பாறையென இறுகியிருந்தது.

அவனருகே நின்றிருந்த முகிழ்மதியும் கூட “ஏங்க வேணாம்…” என பாவமாக சொல்லிப் பார்க்க,

“நீ வாயை மூடுடி” என புலியின் சீற்றத்துடன் அடிக்குரலில் சீற,அவளோ மிரட்சியில் கப்பென்று வாயை மூடியிருந்தாள்.

குடும்பத்தில் இருப்பவர்களோ இப்போதெல்லாம் அடிக்கடி மோதிக்கொள்ளும் தந்தை மகனை பார்த்து ஏதேனும் பெரிதாக பிரச்சனை நிகழ்ந்துவிடுமோ என அஞ்சினார்கள்.

தமயந்தியும் ஜித்தேந்திரனும் அங்கு தான் நின்றிருந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் தகப்பனை பார்த்து பரிதாபம் தோன்றவில்லை.

சமீப காலமாக அவரின் செயலில் மனத்தாங்கலுடன் இருந்தவர்களுக்கு இன்று அவர் செய்தது பெரும் பிழை என்பது தெரிந்ததால் யாவரும் அவருக்கு ஆதரவாக பேசவில்லை.

விஜயேந்திரனோ அடிப்பட்ட பார்வையுடன் மகனை வெறித்து பார்க்க,அவன் தனது பிடியில் உறுதியாக நின்றான்.

‘மன்னிப்பு கட்டாயம் கேட்க வேண்டும்’ என்ற தீர்க்கமான தோரணை அவனிடம்!

அவர் பிழைக்கான மன்னிப்பை யாசிக்கவில்லை என்றவுடன்,அதுவரை அமைதியாக நின்றிருந்த தமயந்தி வாயை திறந்தாள்.

“அப்பா உங்களுக்கு அப்படி என்ன ஈகோ?விஷயம் தெரிஞ்சவுடனே நீங்க நம்ப அண்ணா அண்ணிக்கு தானே ஆதரவா நின்றிருக்கணும்…இப்போவும் உங்க அரசியல்,கௌரவம் அது இதுனு அண்ணி மேலே தப்பு சொல்லறீங்க?அவங்க என்னப்பா தப்பு பண்ணாங்க?கல்யாணம் பண்ணி வந்த நாளிலிருந்து உங்ககிட்ட ஒரு நாள் தரக்குறைவாக பேசியிருக்காங்களா?இல்லை மரியாதையில்லாமல் நடந்திருக்காங்களா?இதுவே இந்த இடத்தில் உங்க பொண்ணு நான் இருந்தாலும் இப்படி தான் பேசுவீங்களா?ரியலி ஐயம் ஷேம் ஆன் யூ அப்பா” என வெறுப்பாக முகத்தை சுழித்து கூறியவளின் மனதில் ஏமாற்றத்தின் சாயல்!.

மகளின் பேச்சு அவரின் இதயத்தில் சுருக்கென்று தைத்தன.

அவரின் முகத்தில் வேதனையின் ரேகை படர்ந்திட,

தன் வாழ்விற்காக வாயை திறந்து பேசியிராத ஜித்தேந்திரன் கூட “அப்பா ஒரு விஷயத்தை நீங்க மறந்திட்டீங்கனு நினைக்கிறேன்…நாமளா தான் அவங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டுப்போனோம்…நாமளா தான் கடைசி நிமிஷத்திலே கல்யாணத்தை நிறுத்தாமல் முகிழ்மதி அண்ணிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தோம்…அப்படி இருக்கும் போது அண்ணி எப்படி எல்லாத்துக்கும் பொறுப்பாவாங்க…” என தனது அண்ணனின் மனைவிக்காக பரிந்து வந்தான்.

தமயந்தியோ அவரின் மீது உள்ள வருத்தத்தை எல்லாம் இந்த சந்தர்ப்பத்தில் கொட்டி விடுவது போல் “அவங்க அப்பா,அவங்க குடும்பம் யாரு வேணா தப்பானவங்களா இருக்கலாம்…இத்தனை நாளா அவங்களை பார்க்கறீங்கயில்லை…முகிழ்மதி அண்ணிக்கிட்ட நீங்க ஒரு குறைய கண்டுப்பிடிச்சு சொல்லமுடியுமாப்பா?அது சரி பெத்த பிள்ளைங்க எங்க மனசையே உங்களாலே புரிஞ்சுக்க முடியலை…நீங்க எப்படி அண்ணி மனசை புரிஞ்சுப்பீங்க” என ஆற்றாமையும் கோபமும் கலந்த உணர்வுடன் பேசியவளின் முகத்தில் மிகுந்த வலி தென்பட்டது.

தன் மகவுகள் மூவரும் பேச பேச விஜயேந்திரனிற்கு சாட்டையால் அடித்தது போல் ஒரு உணர்வு!

அன்றொரு நாளிலே அவருக்கு எதிராக உலகம் மொத்தமும் மாறியது போல் இருக்க,அந்த பெரிய மனிதர் தொய்ந்துப்போனார்.

அதுவரை பிள்ளைகள் மூவரும் பேசியதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த காஞ்சனா மாலாவால் மகன் கவலையில் கூனி குறுகியதும் அதற்கும் மேல் தாள முடியவில்லை.

“ஏய் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?அவன் உங்களுக்கு அப்பா…அந்த மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் என்ன பேசறீங்க?அவன் பேசினது தப்பு தான்…அதுக்கு இது தான் சாக்குனு மாத்தி மாத்தி பேசுவீங்களா?உங்களோட நல்லதுக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யறவனை இப்படி அநியாயமா குற்றஞ்சாட்டறது நல்லா இல்லை…விஜய் நீ உள்ளப்போப்பா” என புதல்வன் செய்வது தவறு என்றாலும் மகனை யாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாமல் அவருக்கு ஆதரவாக பேசினார்.

ஆனால் மூதாட்டி அவ்வாறு பேசி முடித்ததும் ரத்தினவேலின் குரல் அவருக்கு எதிராக அவ்விடத்தில் ஓங்கி ஒலித்தன.

“அவர் இப்போ முகிழ்மதிக்கிட்ட மன்னிப்பு கேட்டாகணும்…அப்படி கேட்கலைனா நான் அரசியலில் இருந்து மொத்தமா விலகிக்கிறேன்” என்றான் அதிரடியாக.

அவன் பேசியதை கேட்டு மீண்டும் ஒரு முறை அனைவரும் ஸ்தம்பித்துவிட்டனர்.

அதில் முதலில் தெளிந்த காஞ்சனா மாலா “பூபதி என்னப்பா இது?” என ஆதங்கத்துடன் வினவ,அவனோ சிறிதும் வளைந்துக்கொடுக்கவில்லை.

அவனது முடிவில் உறுதியாக அவன் நின்றிருந்தான்.

தந்தையிடத்தில் வேறு யாரேனும் அவனது மனையாளை பேசியிருந்தால் இந்நேரம் அவரின்‌ தலையைத் துண்டித்திருப்பான்.

அவனை பெற்ற தகப்பன் என்பதால் வெறும் மன்னிப்போடு நிறுத்தியிருந்தான்.

அதை கேட்க மறக்கும் தந்தையின் அமைதி அவனிற்குள் புதைந்து கிடந்த அகந்தையை சீறி எழ வைத்தது.

அவளை இழிவுப்படுத்தியவரின் மூலமாகவே தன் மனைவிக்கான அங்கீகாரத்தை வாங்கிக் கொடுக்க முனைந்தான்,முகிழ்மதியின் கண்ணாளன்!

தற்சமயம் அரசியலின் ஆணிவேர் மட்டுமில்லை…எதிர்கால அரசியல் வாரிசே அவன் தான்!

அவ்வாறு இருக்கும் போது அவனது இந்த அதிரடியான அறிவிப்பை யாரால் ஏற்க முடியும்?

‘சரிதான் போடா’ என்று யாராலும் எதுவும் சொல்லமுடியாத ஒரு நிலை!

அவனது தர்க்கம் பூபதி குடும்பத்தின் அரசியல் ஆணிவேரை ஆட்டம் காண வைத்தது‌.

முகிழ்மதியினுள் ‘தன்னால் தானோ?’ என்ற குற்றவுணர்வு முகிழ்ந்த அதே வேளை தனக்கான மரியாதையை நிலைநாட்ட அவன் மேற்கொண்ட இந்த பிடிவாதம் அவளை ஆகர்ஷிக்கவும் செய்தன.

வானதிக்கும் கூட கணவனது பேச்சும் செய்கையும் பிடிக்கவில்லை தான்.

ஆனால் எப்போதும் மீசையை முறுக்கிக்கொண்டு திரியும் கணவரின் சுண்டி சுருங்கிய முகத்தை பார்க்கும் போது அவருக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

“பூபதி…” என அவனது தாய் மகனிடம் பேச முயல,அவன் திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான்.

அவர் கப்பென்று வாயை மூடிக்கொண்டுவிட்டார்.

இறுதியாக வேறு வழியின்றி விஜயேந்திரன் தனது உச்சாணி கொம்பிலிருந்து இறங்கி வந்தார்.

“என்னை மன்னிச்சிடும்மா…நீ எப்போ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தியோ நீயும் இந்த வீட்டுப்பொண்ணு தான்…நீயும் என் பொண்ணு தமயந்தி மாதிரின்றதை மறந்திட்டேன்…உன் அப்பா மேலே இருந்த கோபத்திலே உன்கிட்ட அப்படி பேசியிருக்கக்கூடாது…எல்லாம் என் தப்பு தான்…மன்னிச்சிடும்மா” என இருகரம் குவித்து அவர் மன்னிப்பு வேண்ட,

அவரின் செயல் கண்டு பதறிப்போன முகிழ்மதி “ஐய்யோ மாமா…அதெல்லாம் வேணாம்…அவர் ஏதோ கோபத்திலே…” என பேசிக்கொண்டிருந்தவளின் சொற்கள் கணவன் பார்த்த பார்வையில் மெதுவாக உள்வாங்கிக் கொண்டன.

தந்தை மனையாளிடம் மன்னிப்பு வேண்டியதற்கு பிறகே சிறிது இறங்கி வந்தான் ரத்தினவேல்.

ஆயினும் தொண்டையை செருமி “பாட்டி இந்த கல்யாணத்தை பண்ணிக்க விருப்பப்பட்டது நான்…அதனால் அவளை எப்போ எப்படி உலகத்துக்கு முன்னாடி அறிமுகப்படுத்தணும்னு எனக்கு தெரியும்…இனி இதை பத்தி யாரும் இந்த வீட்டில் பேச வேண்டாம்…அன்ட் தென் வந்த பிரச்சனையை எப்படி சால்வ் பண்ணறதுனும் எனக்கு நல்லாவே தெரியும்…ஐ வில் ஹேண்டில் இட்” என தந்தையை ஒரு பார்வை பார்த்தவாறே அதை எடுத்துரைத்தான்.

இனியொருவர் அந்த வீட்டில் தன்னவளை காயப்படுத்த துணியக்கூடாது என்பதற்காகவே கடுமையாக எச்சரித்துச் சென்றிருந்தான்.

முகிழ்மதிக்கே மாமனாரின் வாடிய முகம் மனதை பிசைந்தது‌.

ஆனால் பிள்ளைகள் மூவரும் அவரின் மீது கடும் கோபத்தில் இருந்ததால் ஆளுக்கொரு திசையில் சென்று மறைந்தனர்‌.

பிள்ளைகளின் இந்த நிராகரிப்பை அறிந்த விஜயேந்திரனிற்கு முதல் முறையாக தாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணம் உதிக்க ஆரம்பித்தது.

அதிலும்,அவரது மகளின் உதாசீனத்தை அவரால் ஏற்க முடியவில்லை.

மற்ற இரு ஆண் பிள்ளைகளை காட்டிலும் தமயந்தி அவருக்கு பயங்கர செல்லம்.

பெண் பிள்ளைகள் என்றாலே பெற்ற தகப்பனிற்கு ஒரு தனிப் பிரியம் இருக்குமல்லவா?

சிறிது வளர்ந்த பிறகு தந்தையிடமிருந்து ஆண்மகவுகள் ஒதுங்கிப்போய்விட,அவரின் தேவதை மகள் மட்டுமே ‘அப்பா…அப்பா’ என அவரையே சுற்றி வருவாள்.

அதனால் மகளிடம் கடுமையான சொற்களை அவர் ஒருபோதும் உதிர்க்கமாட்டார்.

வீர் தமயந்தி காதல் விவகாரத்தில் கூட வீரை அவளிடமிருந்து விலக்க எண்ணினாரே ஒழிய நேரடியாக அவரின் கோபத்தை அவளிடம் காட்ட விளையவில்லை.

அந்த அளவு அதீத பாசம் அவளின் மேல்…

அவளிற்கும் அப்படியே‌…தாயை காட்டிலும் தந்தையிடமே அவளின் சலுகை அன்பு எல்லாம் சற்று தூக்கலாகவே இருக்கும்.

இன்று அப்படியானவளே அவரை காயப்படுத்தி செல்வதற்கு காரணம் இருந்தது.

ஏனெனில்,வீர் அவளை நிராகரித்ததால் அந்தவொரு நாள் மட்டுமே சோகத்தில் மூழ்கிகிடந்தாள் தமயந்தி.

அடுத்த நாளே நேரே தந்தையிடம் வந்த பெண் “அப்பா என்னை கேட்காமல் இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணதிலே எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை…முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்துங்க” என நேருக்கு நேராக துணிச்சலாகவே பேசியிருந்தாள்.

அவள் திருமணம் மறுக்க காரணம் அவர் அறிவார் என்பதால் “ஏன்மா என்ன பிரச்சனை?மாப்பிள்ளை உனக்கு தெரிஞ்சவர் போலே தான் தெரியுது…அப்புறமும் ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லறே?” என பொறுமையாக மகளிடம் வினவ,

அவளோ ஒரு பெருமூச்சுடன் “தெரிஞ்சவர் தான்பா…பிடிக்கும்…அதுக்காக அவரை கல்யாணம் பண்ணிக்கிற அளவு எனக்கு இஷ்டமில்லை” என்றாள் தெள்ள தெளிவான குரலில்.

உள்ளுக்குள் அவருக்கு கோபம் எழுந்தாலும் மகளிடம் அதை வெளிக்காட்டாமல் “சரி அவரை பிடிக்கலைனா விடு…வேற மாப்பிள்ளையை பார்க்கறேன்” என அசால்ட்டாக மொழிந்தப்படி கையெழுத்திட்ட கோப்பை மூடி வைத்தார்.

அவளோ “எனக்கு நீங்க யாரை பார்த்தாலும் பிடிக்காதுப்பா” என்றாள் திடமான குரலில்.

சட்டென விழியுயர்த்தி அவளை ஏறிட்டவர் “ஏன்?” என புருவம் உயர்த்தி வினவினார்.

அதுவரை தனது நேசத்தை பற்றி வெளிப்படுத்தலாமா வேண்டாமா என ஊசலாடும் மனநிலையில் இருந்தவளிற்கு அந்நொடி ‘என்ன தோன்றியதோ?’ “எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருக்குப்பா…அவரை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டாள்.

விஜயேந்திரனோ அவளை சில கணங்கள் ஆழ்ந்து நோக்கினாரே தவிர ‘யார்’ என்று அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

அவளை சில கணங்கள் அழுத்தமாக பார்த்திருந்த விஜயேந்திரன் “சரி போம்மா” என்றிருந்தார்.

ஏனெனில்,அவள் ஒரு விடயம் கேட்டால் அவரால் அதனை மறுக்க முடியாது.

ஆதலால்,அவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

ஆனால் அவர் விடாக்கண்டன் என்றால் அவரது மகள் விடாக்கண்டனின் மகளாகியிற்றே?

அதனால் அவர் அகல சொல்லியும் நகராமல் அவ்விடத்தில் சட்டமாக நின்ற தமயந்தியோ “யாருனு கேட்க மாட்டிங்களாப்பா?” என அவரை ஆழ்ந்து நோக்க,

அவளிற்கு சளைக்காமல் பதில் பார்வை கொடுத்தவர் “தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லைம்மா…எப்படியும் நடக்காத காரியத்துக்கு எதுக்கு நான் விலாவரியா விசாரிக்கணும்” என தன்னையும் அறியாமல் மகளிடம் உளறியிருந்தார் விஜயேந்திரன்.

உடனே அவளின் இமைகள் இரண்டும் இடுங்கிட “நடக்காத ஒண்ணுனு நீங்க எப்படிப்பா சொல்லறீங்க?” என்று கேட்டவளின் விழிகளில் அனல் தெறித்து வெளி வந்தன.

அவரோ எந்த வித பதிலும் கூறாமல் அவளை அசராமல் கைகள் கட்டி பார்த்திருக்க,

அதில் கொதித்துப்போன தமயந்தி “சோ வீரை தான் நான் காதலிக்கிறேன்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு…ஃபைன்…வீர் நேத்து என்கிட்ட ஹார்ஷா நடந்ததுக்கான காரணம் இப்போ எனக்கு நல்லாவே புரியுதுப்பா” என காட்டமாக தந்தையை முறைத்தப்படி பேச,

அவரிடம் ஒரு ஆழ்ந்த மௌனம்!

அது தான் உண்மையும் என்பதால் தன் செயலை அவர் எந்த விதத்திலும் நியாயப்படுத்தவில்லை.

தன்னுடைய செயலில் நூறு சதவீதம் உறுதியாக இருந்தார் அவர்.

அவரின் அழுத்தம் அவளிற்குள் கோபத்தைக் கொடுக்க “நிச்சயம் உங்ககிட்டயிருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கலைப்பா…என் வாழ்க்கையோட சந்தோஷம் எதுன்னு தெரிஞ்சும் அதை என்கிட்டயிருந்து பறிச்சிட்டீங்கயில்லை…பரவாயில்லைப்பா ரொம்ப சந்தோஷமா இருங்க…ஆனால் ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்…வீர் இல்லாமல் எனக்கு வாழ்க்கையும் இல்லை…சந்தோஷமும் இல்லை…அதையும் மீறி கல்யாண ஏற்பாடு அது இதுனு ஏதாவது ஏற்பாடு பண்ணீங்க உங்க பொண்ணை அத்தோடு மறந்திடுங்க” என பெருஞ்சினத்தோடு தொடங்கியவளின் குரல் இறுதியில் ஏமாற்றத்தில் பிசறிடித்தன.

தந்தையிடமிருந்து அப்படியொரு செயலை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அதனால் உண்டான வலி அவளை தழுதழுக்க செய்தன.

மகளின் இறுதி பேச்சை கேட்டு அவர் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார்.

“லட்டு…” என அவர் படபடப்புடன் அதட்ட,

அவளோ கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவரை அசையாமல் பார்த்தவள்,பின்பு விறுவிறுவென அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.

அவர் மீண்டும் “லட்டு” என பதற்றத்தோடு அழைக்க,அவளோ அவரை நோக்கி திரும்பவே இல்லை.

அறையின் நுழைவாயில் வரை சென்ற பெண்,பின்பு அவளாகவே விழியோரம் வழிந்த நீரை சுண்டிவிட்டு அவரை நோக்கி திரும்பியவள் “நீங்களும் எல்லார் மாதிரியும் ஒரு சராசரி அப்பான்னு நிரம்பிச்சிட்டீங்கப்பா…நீங்க எனக்கு எந்த விதத்திலும் ஸ்பெஷல் இல்லை…யூ ஆர் அ ஸீரோ” என கசந்த முறுவலுடன் கூறிவிட்டு சென்ற மகளின் முகத்தில் இருந்த வேதனை அவரை வாட்டி வதைத்தது.

அதிலும்,அவளின் சொற்கள் ஒவ்வொன்றும் இதயத்தை கணைக்கொண்டு தாக்கின.

இருப்பினும்,அவர் தன்னுடைய சுய கௌரவத்திலிருந்து சிறிதும் இறங்கி வர விரும்பவில்லை.

தற்சமயம் அவளின் திருமணத்தை தடைச் செய்தாலும் வீரை அவர் ஒரு காலமும் ஏற்க தயாராகயில்லை‌.

தங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு ஆளை எந்தவொரு தந்தை தான் மகளிற்கு மணமுடிக்க ஒப்புக் கொள்வார்.

அதனால் தற்காலிகமாக மகளின் திருமண விடயத்தை ஒத்தி வைத்தாலும் ஜித்து விடயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார்.

அந்த அளவு ரோகிணியும் அவளின் குடும்பமும் அவரை பேசி மயக்கி வைத்திருந்தார்கள்.

பகட்டையும் அதிகாரத்தையும் காட்டி அவரை தங்களது மகுடிக்கு ஆடும் நாகமாய் படமெடுக்க வைத்தனர்.

அவருக்கும் சமீப காலமாக மகனின் முகத்தில் தொலைந்திருந்த மகிழ்ச்சி உறுத்த தான் செய்தது.

ஆயினும் ‘கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும்…அவன் நல்லா வாழுவான்’ என ரோகிணியின் தீய குணம் அறியாமல் மனதை தேற்றினார்.

இன்றோ பிள்ளைகளின் மீது அக்கறை இல்லாதது போல் மகள் பேசிய சொற்கள் அவரின் இதயத்தில் கத்தியால் சொருகிய வலியைக் கொடுத்தன.

விஜயேந்திரன் உடைந்துப்போயிருப்பதை கண்ட தாயின் உள்ளம் பரிதவிக்க “விஜய் பிள்ளைங்க ஏதோ கோபத்திலே அப்படி பேசிட்டாங்கப்பா…நீ எதையும் மனசுலே வைக்காமல் எலெக்ஷன் வேலைய மட்டும் பாரு…இப்படி உடைஞ்சுப்போகாதேப்பா” என தனது மகனது கரம் பற்றி ஆறுதலளித்தார் மூதாட்டி.

வானதிக்கு அவரின் நிலை கண்டு கஷ்டமாக இருந்தாலும் இத்தனை நாட்களாய் பிள்ளைகள் படும் வேதனையை கண் முன் கண்டவரால் சட்டென அவரை மன்னிக்க முடியவில்லை.

காஞ்சனா மாலாவிற்கு அவரது பிள்ளை உசத்தி என்றால்,அவருக்கு தனது மூன்று பிள்ளைகள் தான் முக்கியம்!

அதனால் அவர் விலகியே இருந்துக்கொண்டார்.

இந்நிலையில் தங்கள் அறைக்கு வந்தவுடன் முகிழ்மதி தனது கணவனிடம் பேச விரும்புவதை அறிந்த ரத்தினவேல் அவளிடம் எதுவும் பேசவில்லை.

அவளிடம் தற்போது பேசினால் அவனது இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறும் என்று அவன் அறிவான்.

ஏனெனில்,அவனது மனைவி பெரிய தியாக செம்மல் போல் ‘எல்லாம் என்னால் தான்’ என கண்ணீர் விட ஆரம்பித்துவிடுவாள் என்றே அவளின் பேச்சை தவிர்த்தான்.

ஆனால் அவளோ “மாமா மாமா உங்ககிட்ட பேசணும்” என உருப்போட்டப்படி அவனையே சுற்றி திரிய,

அவனோ அவளிடம் வளைந்து கொடுக்காமல் “இருக்கிற கோபத்திலே தயவு செஞ்சு என்கிட்ட எதையும் பேசி நீ வாங்கிக்கட்டாதே ஸ்டார்…போய் வேற வேலைய பாரு” என்றவாறு மடிக்கணிணியை திறந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தான்.

கணவன் அவளை விரட்ட முனைந்தாலும் அவள் அவனிடம் பேச வந்த விடயத்தை பேசும் முனைப்புடன் அவனருகே நீள்விரிக்கையில் அமர்ந்தாள்.

அவன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.

அவனால் இப்போதும் தந்தை பேசியதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

அதையும் விட பல மடங்கு ஆத்திரம் அதற்கு காரணமான நபரின் மீது இருந்தது.

‘யார்?’ என்பதை கண்டுப்பிடிப்பதற்காக அவன் தீவிர முயற்சியில் இறங்கியிருக்க,

அச்சமயம் அவனை நெருங்கி அமர்ந்த முகிழ்மதியோ “மாமா” என மெல்ல ஆரம்பித்தாள்.

அவள் அருகே வந்தாலே அவன் உருகிவிடுவான்.இதில் அவள் வேறு ‘மாமா’ என்று அழைத்ததும் அவன் மொத்தமாக குழைய ஆரம்பித்தான்.

ஆயினும் விறைப்புடன் தலையை திருப்பாமல் “என்னடி?” என கோபமாக இருப்பது போலவே வினவினான்.

அவளோ “மாமா என்னாலே தானே நீங்கயெல்லாம் இப்போ அவமானப்பட்டு நிற்கறீங்க?” என பரிதாபமாக அவனது கைக்குள் கைவிட்டு உரைக்க,

அவளின் அண்மையில் மனம் இறங்கியிருந்தவனிற்கு அவளின் பேச்சு மீண்டும் இறங்கிய சினத்தை ஏற்றிவிட “சரி அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்?” என வெடுக்கென்று அவளின் புறம் திரும்பி வினவினான்.

அதில் ஒரு கணம் மிரண்டு பின்வாங்கியவள் பின்பு எச்சிலை கூட்டி விழுங்கி “பேசாமல்…” என படபடப்புடன் இமைக்கொட்டி இழுக்க,

அவனும் “பேசாமல்” என புருவம் உயர்த்தி கேட்க,

அவளோ “பேசாமல் தேவகி அம்மாவை பத்தி மீடியாகிட்ட சொல்லிட்டு நம்ப கல்யாணம் பத்தியும் ஒரு ரிசப்ஷன் வைச்சு எல்லாருக்கும் அறிவிச்சிடலாமா மாமா?” என நலிந்த குரலில் மெதுவாக உரைத்தாள்.

அவனிற்கு ஒரு கணம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை‌.

இவ்வாறு நேர்மறையாக பேசியது தன் மனைவி தானா? என அவனிற்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளோ தாம் பேசுவது சரியா தவறா என்ற தயக்கத்துடனே பேசினாள்.

இப்போது அவன் எவ்வித பதிலும் கூறாமல் அவளையே விழி அகற்றாமல் பார்த்திருக்கவும் “நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா மாமா?” என பாவமாக வினவ,

அவனோ தலையாட்டி இதழ்பிரித்து சிரித்தவாறு “நீ தப்பா சொல்லலை ஸ்டார்…இன்னைக்கு தான் வாழ்க்கையிலே முதல் முறையா சரியா பேசியிருக்கே” என்றதும்,

அந்த குழந்தையுள்ளம் கொண்டவளோ “அப்போ நான் சரியா பேசிட்டானா மாமா?” என விழி விரித்து குதூகலமாக வினவ,

அவனோ அவளின் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி “பரவாயில்லை பொண்டாட்டி நீ நல்லா தேறிட்டே…நான் கூட நீ பேச ஆரம்பிச்சதும் என்னாலே தான் எல்லாம் நடந்துச்சு மாமா…அதனாலே வேற யாராவது நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்லுவியோனு நினைச்சேன்…” என கேலியாக உரைக்க,

அவளோ ‘ஏதே வேற பொண்ணா?கல்யாணமா?’ என மிரட்சியோடு திருதிருவென விழிக்க,

அவளின் முகம் சென்ற போக்கை பார்த்த ரத்தினவேலிற்கு சிரிப்பு வெடித்து கிளம்பியது.

அதனால் வெகு நாட்களுக்கு பிறகு “ஹாஹாஹா” என வாய்விட்டு கடகடவென சிரித்த ஆடவன் “அடியே பொண்டாட்டி…சும்மா சொன்னேன்டி…உனக்கு நான் தான் எனக்கு நீ தான்னு எப்போவோ முடிச்சு போட்டாச்சு…அதனாலே தான் இவ்வளவு வருஷம் கழிச்சு என் கண்ணிலே நீ சிக்கியிருக்கே…ஒரு முறை தொலைச்ச என் ஸ்டாரை இனி யாருக்காகவும் என்னால் விட்டு கொடுக்க முடியாதுடி…இப்பவும் எப்பவும் என் மனசுலே நீ மட்டும் தான்டி” என நேசம் பொங்கும் குரலில் கூறியவனின் கரங்களோ தன்னவளை அப்படியே தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டது.

அதில் ஒரு வினாடி அதிர்ந்த பெண்ணவள் பின்பு அவனது பேச்சில் கசிந்துருகி “என்னாலையும் உங்களை விட்டுக்கொடுக்க முடியாது மாமா” என அவனது கழுத்தை கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

ஆடவனோ தலைதாழ்த்தி “பார்றா ஃபார் தி ஃபர்ஸ்ட் டைம் என் பொண்டாட்டி வாயிலிருந்து பாசிட்டிவான வார்த்தையெல்லாம் வெளிய வருது…இந்த தெளிவு என் ஸ்டார்கிட்ட இருந்திட்டாலே போதுமே…உலகமே எதிர்த்து வந்தாலும் ஒரு கை பார்த்திடலாம்” என கொஞ்சலான குரலில் கூறி,அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவளிற்கோ அச்சமயம் தான் மாமனாரின் ஞாபகம் வர,அதிலும் அவரின் வாடிப்போன முகம் கண் முன் வந்து செல்ல,

படீரென தலையுயர்த்தி “ஏங்க…” என மீண்டும் கவலையாக தொடங்க,

அவனோ அவளின் பேச்சை முன்பே அவதானித்தவனாய் “முகிழ் நான் நல்ல மூடில் இருக்கேன்…மாமா பாவம் சோமா பாவம்னு ஏதாவது ஆரம்பிச்சே கொன்னுடுவேன்டி…அவரு பண்ணிட்டு இருக்கிற வேலைக்கு இது அவசியம் தான்…கொஞ்சம் படட்டும் விடு…நீ அமைதியா நடக்கிறதை மட்டும் வேடிக்கை பாரு” என அதட்டி மனையாளை அடக்கியிருந்தான்.

அவளும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

அவளிற்கு தான் கணவன் எது கூறினாலும் வேதவாக்காயிற்றே?

அதனால் அவள் மௌனமாகிவிட,இப்போது அவனது இதழ்கள் அவளில் எல்லை மீற தொடங்கின.

அவனது மனம் இப்போது உற்சாகத்தில் மிதந்துக்கொண்டிருந்தன.

இது நாட்கள் வரை மனைவிக்காக மட்டுமே அனைத்தையும் ரகசியம் காக்க முனைந்தான்‌.

இன்று அவளாகவே அனைத்தையும் எதிர்கொள்ள தயாராகியதும் அவனிற்கு அப்படியொரு உவகை!

அதனால் தன்னவளின் இந்த துணிச்சலான முடிவை பாராட்டும் விதமாக அவளின் மேனியில் முத்த பரிசில்களை வாரியிறைக்க ஆரம்பித்திருந்தான்.

அவனது மீசை மற்றும் தாடி ரோமம் அவளின் மேனியில் குத்தி குறுகுறுப்பை கொடுத்ததும் அவள் கூச்சரிந்து நெளிய,அது கணவனின் உணர்வுகளை தூண்டிவிட போதுமானதாய் இருந்தது.

அவளும் வழக்கம் போல் அவனது கரங்களில் உருகிக் குழைய ஆரம்பித்ததும் அவள் அணிந்திருந்த ஆகாய நீல நிறம் மற்றும் அடர் நீல நிறம் கலந்த ஷிப்பான் புடவை விரிந்திருந்த மடிக்கணினிக்கு போர்வையாக மாறிப்போனது.

நீள்விரிக்கை அவர்களுக்கு மஞ்சமாகிட,அவளது நெஞ்சத்தில் அவன் ஊஞ்சல் கட்டி தஞ்சமடைந்தான்.

அவனது பற்தடங்கள் அவளின் மேனியில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்திட,அவளது நெற்றியிலிருந்த குங்குமம் அவனது தேகத்தில் ஆங்காங்கே தன் அச்சாரங்களை பதித்துவிட்டு சென்றன.

எப்போதும் மென்மையை அவளிடம் கையாளுபவன் அன்று இருந்த மகிழ்ச்சியில் வன்மை கலந்த ஆலிங்கனம் புரிந்து அவளின் சரீரத்தில் மோக உற்சவம் ஒன்றை நடந்தேற்றியிருந்தான்.

தன்னவனது கடினமான அணுகுமுறையில் அவளிற்கு வலித்திட “ஆ…மாமா வலிக்குது” என மெல்லியதாக அலறினாலும் நேரங்கள் செல்ல செல்ல அவனது வல்லினம் கலந்த தாபக் கடலில் அவள் மூழ்கி முத்துக்குளிக்க ஆரம்பித்திருந்தாள்.

அந்த மூர்க்கனின் முரட்டுத்தனத்தை அவள் விழிகள் சொருக ரசிக்க தொடங்கியது தெரிந்ததும் ஒரு முழுமையான தாம்பாத்தியம் கொண்ட திருப்தியும் கர்வமும் அவனுள் உண்டாகின.

அவளிற்கு வலிக்கும் என்பதற்காக மென்மையை கையாளும் ஆடவன் அன்று தன் எல்லைகளை கடந்து பரவசம் கொண்டான்.

அதனால் உணர்வுகளின் உச்சத்தில் “ஸ்டார்” என சந்தோஷ கூச்சலிட்டவனின் இதழ்கள் அவளின் மென்னிதழ்களை வன்மையாய் சிறைச் செய்தன.

தன் இதழுக்குள் அடைக்கலமாகிய தன்னவனின் இதழ்களை காதலோடு அரவணைத்துக்கொண்டாள் ரத்தினவேலின் ஸ்டார்!

இது நாள் வரை வெறும் முகிழ்மதியாக மட்டுமே இருந்தவள் அன்று தான் முழுமையாக திருமதி.ரத்தினவேல் ரகுநாத பூபதி என்னும் அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள்.

தன் மனைவியே உலகத்தை எதிர்கொள்ள தயாராகிய பிறகு ரத்தினவேலிற்கு தடைகள் எதுவும் இருக்கவில்லை.

அடுத்த நாள் செய்தித்தாளில் அவர்களது திருமண அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதில் பிரபல ஓவிய கலைஞர் மற்றும் கட்டிடக்கலை பேராசிரியர் தேவகியின் இரண்டாவது மகள் முகிழ்மதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சிவராமன் என்ற பெயரையே அவர்களது குடும்ப உறுப்பினர் பெயரிலிருந்து அகற்றியிருந்தான்.

அத்தோடு அவனது மனைவியின் சொந்த பராமரிப்பிற்காகவே இத்தனை நாட்கள்‌ புகைப்படத்தை வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தான்.

இப்போதும் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட விருப்பமில்லை என தெள்ள தெளிவாக விளக்கியிருந்தான்.

அவனது கூற்றை ஒரு சிலர் சரியாக புரிந்துக் கொண்டாலும் வம்பு வளர்க்கும் அடாவடி பேர்வழிகள் அதை ஊதி பெருசாக்க முயன்றார்கள்.

ஆனால் பெரும்பாலான மக்கள் அவனது நிலையை புரிந்துக்கொண்டதால் அவனிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.

மேலும்,அன்று காலை வீட்டுலுள்ள அனைவரையும் ஒன்று திரட்டி முகிழ்மதியின் பிறப்பு ரகசியத்தை மேலோட்டமாக தனது குடும்பத்தினரிடம்‌ வெளிப்படுத்தியிருந்தான் ரத்தினவேல்.

அவனிற்கு மனைவியின் கௌரவம் முக்கியம் என்பதால் பல உண்மைகளை மறைத்திருந்தான்.

அவன் கூறிய இருபது சதவீத  கொடூர கதையைக் கேட்டே அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு விதத்தில் அதிர்ந்துப்போனார்கள்.

இதில் அதிகம் பாதிப்புற்ற இருவர் ஜித்தேந்திரனும் தமயந்தியும் தான்!

ஜித்தேந்திரன் கூட பெரிதாக அதிர்வுறவில்லை.

தமயந்தியிற்கோ குற்றவுணர்வில் மனம் தவித்தது.

‘கடவுளே…உண்மை தெரியாமல் ஏதேதோ பேசிட்டோமோ?’ என காலம் கடந்து வருந்தியவளிற்கு வீரின் அன்றைய நாட்களுக்கான கோபம் நன்றாகவே புரிந்தது.

ஒரு புறம் தந்தையின் மிரட்டல் மற்றொரு புறம் தங்கையின் மீதான பாசம் இரண்டும் தனது காதல் வாழ்வில் விளையாடியதை எண்ணி நெஞ்சம் நொந்துப்போனாள்.

வீட்டு பெரியவர்கள் மூவருக்கும் ‘இப்படியெல்லாம் கூட நடக்குமா?’ என விந்தையாக இருந்தது.

கூடவே,விஜயலட்சுமி ஒரு குடும்பத்தையே சிதைத்ததை எண்ணி அவரின் மீது கடும் ஆத்திரமும் உருவாகின.

இப்போது விஜயேந்திரனிற்கு ஒரு புது பயம் உருவாகின.

தன் புறம் இருக்கும் நியாய தராசு கீழிறங்கி செல்வது போல் ஒரு மாயை!

முன்பே வீர் அந்த வீட்டிற்கு இன்றியமையாதவன். இதில் மூத்த மருமகளின் தமையன் என்று தெரிந்ததும் அவருக்கு நெஞ்சு வலியே வரும் போல் இருந்தது.

மகளின் காதல் விவகாரம் மற்றவருக்கு தெரிந்தால் நொடியும் தாமதிக்காமல் அவர்களாகவே அவளை அவன் கையில் ஒப்படைத்துவிடுவார்கள் என்று தோன்றவும் அவருக்கு தலைகிறுகிறுத்தது.

மகளின் காதல் தெரிந்ததற்கே அவருக்கு தலைச்சுற்றியது என்றால்,இரண்டாவது மகனின் நேசம் தெரிய வந்தால்?
 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top