முகிழ்மதி 102

முகிழ்மதி 102:


 

 

இருவரும் ஒன்றாக கூடி களைந்த நாட்களுக்கு பிறகு தினந்தோறும் எல்லாம் அவளுடன் அவன் கலவி புரியவில்லை.

அதேசமயம் அவ்வப்போது இருவருக்குமிடையே மென்மை கலந்த கூடல் நிகழ்ந்துக்கொண்டு தான் இருந்தன.

அதனால் முகிழ்மதி என்னும் பட்டாம்பூச்சி சந்தோஷ வானில் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒரு நாள் வேகமாக தன்னறைக்குள் நுழைந்த ரத்தினவேலோ தன் மனைவியை இறுக அணைத்துக்கொண்டான்.

அவனின் அணைப்பு அவளிற்கு பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டாலும் இன்றைய அவனின் அணைப்பு சிறிது வித்தியாசமாக இருந்தது.

அவளை எப்போதும் அணைக்கும் அளவு இறுக்கமில்லை…அவனது அணைப்பில் ஒரு தளர்வு இருந்தது.

ஆம்,அவளை அணைத்தவுடன் அவனின் கரங்கள் அவளின் மேனியை அளக்க ஆரம்பித்துவிடும்.

இன்று அவளை அணைத்த வாக்கிலே அவை மௌனமாக இருக்க,ஆடவனின் முகமோ அவளின் கழுத்து வளைவில் பொதிந்திருந்தது.

சிறு வயதிலிருந்து தன்னவளை துன்புறுத்திய அனைவரையும் வதைக்க வைக்கும் போராட்டத்தில் அவன் கிட்டத்தட்ட வெற்றியை அடைந்துவிட்டான்.

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்த ரஞ்சன் மற்றும் விஜயலட்சுமியின் நிலை அவன் நினைத்ததை விட கவலைக்கிடமாக முடிந்திருந்தது‌.

ரஞ்சனை அறைக்குள் அனுப்பிய இரண்டே நாளில் விஜயலட்சுமி அவனை கொன்றுவிடுவார் என அவன் எண்ணியிருக்க,

ஆனால் அவனே எதிர்பாராமல் மூன்று வாரத்திற்கு தாக்குப் பிடித்தது அவனிற்கே அதிசயமாய் இருந்தன.

இதற்கிடையில் வீருக்கும் விடயம் பகிரப்பட அவனோ வந்த ஆத்திரத்தில் இருவரையும் சுட்டுக்கொல்ல துணிந்துவிட்டான்.

“வீர் காம் டவுன்…எனக்கும் இவங்களை இப்போவே கொன்னு புதைக்கிற அளவு வெறி இருக்கு…ஆனால் அவ்வளவு ஈஸியா இவங்க சாகக்கூடாது…அணு அணுவா சித்திரவதை அனுபவிச்சு சாகணும்” என உயிரை ஊடுருவும் குரலில் சொல்லி தடுத்து நிறுத்தியிருந்தான்.

ஆனாலும் தங்கைக்கு ரஞ்சன் செய்த கொடுமைகளை கேட்டப்பிறகு அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

அதனால் எழுந்த சீற்றத்தில் அவனை தூக்கிப்போட்டு அடி வெளுத்துவிட்டான்.

அவனை அடிக்க அடிக்க வெறி கூடியதே தவிர சிறிதும் குறையவில்லை.

“எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சியை தொட்டிருப்பே பிளடி ஸ்கௌண்ட்ரல்” என கர்ஜித்தவன்,அவனது உயிர் பறிப்போகும் அளவு அடி பின்னியெடுத்திருந்தான்.

பெண்களை உயிராய் மதிக்கும் காவலன் அவனிற்கே விஜயலட்சுமியை பார்க்கும் போது அப்படியொரு சினம் உருவெடுத்தது.

அதிலும்,அவனிற்கு உயிரான மூன்று பெண்களின் வாழ்வை சிதைத்தவரை காண காண வெறி அடங்க மறுக்க,நண்பனின் கட்டளையையும் மீறி அவரை துப்பாக்கியால் துளைந்திருந்தான்.

நல்லவேளையாக ரத்தினவேல் அவன் செயல் அறிந்து துப்பாக்கியை தட்டிவிட்டதால் குண்டு வெறும் கையை மட்டும் உரசிவிட்டு சென்றிருந்தது.

நீரோடை போல் அமைதியாக இருப்பவனின் இப்போதைய எரிமலை சீற்றம் கண்ட ரத்தினவேல் “ப்ச் வீர்…அவங்களை கொன்னுடுதே வாடா” என நண்பனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

ஆயினும்,ரத்தினவேலுவிற்கும் வீருக்கும் கோபம் அதிகமாகும் சமயெல்லாம் இருவரையும் வதைத்துவிட்டு செல்வார்கள்.

அவர்களிடமிருந்து இப்படியான சித்திரவதையை அனுபவிப்பதற்கு செத்து மடியலாம் என்றே விஜயலட்சுமிக்கு தோன்றிவிட்டது.

ஆனால் அவரின் மகனோ அந்த அடி உதையை கூட உணராமல் தன்னிலை இழந்து கிடந்தான்.

போதை மருந்தின் வீரியம் சிறிது குறைந்தாலும் அவனிற்கு வலி உயிர்ப்போனது.

வஸ்துவை அதிகமாக உபயோகித்தால் அவனின் பால் உணர்ச்சிகள் அதிகரிக்க,அவனிற்கு பெண்ணின் உடல் தேவைப்பட்டது.

அதனால் அந்த காம கொடூரனோ தாய் என்றும் பாராமல் அவரை கடுமையான வலிகளுக்கு உட்படுத்தி சிறிது சிறிதாக வதைக்க ஆரம்பித்தான்.

அதிலும்,தாம் இத்தகைய கொடும் வலியை அனுபவிப்பதற்கு காரணமே அன்னை என்று தெரிந்ததும்,அவன் குரூர மிருகமாகிவிட்டான்.

அவனின் ஆத்திரத்திற்கு மேலும் தூபம் போடுவது போல் அவன் கண் முன்னே தாயிற்கு உணவை வழங்க,அதைப் பார்த்தவனின் வெறி பல மடங்கு எகிறின.

மகனை பட்டினியிருக்க விட்டு தான் மட்டுமே உண்பது அவருக்கு வருத்தத்தை கொடுத்தாலும் தன்னுயிரை காக்க இவை மட்டுமே வழி என்பதால் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு உணவருந்தினார்.

தனக்கு உணவை பகிர்ந்தளிக்காமல் தாய் மட்டுமே உண்பதை கண்ட ரஞ்சனிற்கு மனிதம் சிறிது சிறிதாக மறைந்துப்போனது‌.

போதையில் இருக்கும் போது அவனால் பாலியல் தொல்லை என்றால்,நிதானமாக இருக்கும் தருவாயில் “ஏய் விஜி…நான் இங்க பட்டினி கிடக்க நீ மட்டும் என்னை விட்டு சாப்பிடுவியாடி…எனக்கும் கொஞ்சம் சாப்பாடு கொடுடி” என சகட்டுமேனிக்கு வார்த்தைகளை விடுவது மட்டுமின்றி அவனின் அடி உதைகளையும் அவர் தாங்க வேண்டி இருந்தது.

அவரோ “ஆ…அம்மா வலி தாங்க முடியலையே…நான் உன் அம்மாடா…என்னை விடுடா பாவி பயலே…யாராவது என்னை காப்பாத்தாங்களேன்” என அவ்வறையே அதிர கத்தியதை காதால் கேட்டும் அவருக்கு உதவ யாவரும் முன் வரவில்லை‌.

ரத்தினவேல் தான் உள்ளே என்ன நடந்தாலும் எதுவும் செய்யக்கூடாது என்று ஆணையிட்டிருந்தானே?

அதனால் அனைவரும் மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

அவனோ அரக்கனின் மொத்த விம்பாய் மாறி அன்னை என்றும் பாராமல் “நீயெல்லாம் ஒரு தாயா பேய்டி நீ…” என வெளியில் நிற்கும் ஆடவர்களின் காதுகளே கூசச் செய்யும் வகையில் இழிவான சொற்களால் அவரை வாட்டி வதைத்து,உடலளவிலும் வலியை கொடுத்தான்.

மகன் என்றாலும் அவன் கொடுக்கும் வலிகளை அவரால் தாங்கவே முடியவில்லை.

பெற்ற மகனிடமிருந்து ஒரு அன்னை அனுபவித்திராத அனைத்து கொடுமைகளையும் அவர் அனுபவித்தார்.

அப்படியானதொரு குரூரமான தண்டணையை தான் ரத்தினவேல் கொடுத்திருந்தான்.

மகனின் இந்த வெறித்தனத்தை எல்லாம் தாங்கியும் இறக்காமல் அவரை உயிருடன் வைத்திருந்தது அந்த ஒரு வேளை உணவு மட்டும் தான்!

அவருக்காவது ஒரு வேளை உணவு கிடைத்தது.அவனிற்கோ அதுவும் கிடையாது.

ஆதலால்,போதை மருந்தின் வீரியத்தால் சிறிது சிறிதாக பலவீனமாகிக்கொண்டு இருந்த ரஞ்சன் நாட்கள் செல்ல செல்ல பசியிலும் துவள ஆரம்பித்தான்.

இத்துடன் திடக்காத்திரமான இரு ஆண்கள் கொடுக்கும் வலியும் சேர்ந்துக்கொண்டன.

அவனது உடல் மொத்தமாக பலவீனமாகிய சமயம் அவனின் கண் முன் ஒரு விருந்து சாப்பாட்டை விஜயலட்சுமிக்கு கொடுத்தால் அவனிற்கு எப்படி இருக்கும்?

அதனால் ஒரு கட்டத்தில் இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாத ரஞ்சன் அவரை கொல்லவே துணிந்துவிட்டான்.

“செத்து போடி நீ..எல்லாம் உன்னாலே தான்” என ஆவேசமாக தாயின் தலையை சுவற்றில் முட்டி அவரை சாகடிக்க முயல,அவரின் தலையிலிருந்து கடகடவென உதிரம் கொட்டத் தொடங்கின.

அதுவரை மகன் என்ற பாசத்தில் அடங்கயிருந்த விஜயலட்சுமியால் அதற்கு மேல் முடியவில்லை.

ரத்தினவேல் அன்று அவரிடம் ஒப்படைத்த கத்தி இப்போதும் அவரிடம் தான் பத்திரமாக இருந்தது.

அவருக்கு வந்ததே ஆத்திரம்…அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவன் வயிற்றில் ஒரே ஒரு சொருகு தான்!

ஏற்கனவே உடல் பலவீனமாகயிருந்தவனால் அவரை எதிர்த்து போராட முடியவில்லை.

அவன் வலியில் அலற அவரோ அத்துணை நாட்களும் அவன் தன்னை செய்த கொடுமைகளுக்கும் சேர்த்து தண்டனை அளிக்கும் விதமாக அவனின் உடலெல்லாம் ஆவேசமாக கத்தியால் குத்தி உடலை கூறுப்போட்டார்.

அவன் இறந்தப்பிறகும் அவருள் இருந்த வஞ்சம் சிறிதும் குறையாமல்,அவனின் உயிர்நாடியை கூட விட்டு வைக்காமல் சிதைத்திருந்தார்.

அவருள் இருந்த ஆவேசம் முழுமையாக அடங்கிய பிறகே நடந்த வீபரிதம் புரிய கத்தியை தூக்கியெறிந்துவிட்டு “ஓ” வென்று கதறியழ ஆரம்பித்தார்‌.

யாருக்காக …யாருடைய நலனிற்காக அனைத்து இழிவான செயல்களையும் செய்தாரோ?

இன்று அவனை அவரின் கையாலே கொன்றதை எண்ணி அவர் துடித்துப்போனார்.

அவர் கொடுத்த பால் எல்லாம் உதிரமாய் வெளியேறியதை பார்த்து தலையிலடித்து அவர் அழும் காட்சியை திரையின் வழியாக பார்த்த ரத்தினவேலிற்கு பரிதாபம் தோன்றவில்லை.

தவறான பாதையில் மகனை வழி நடத்திய தாயிற்கும்,பெண்களை போக பொருளாக பார்க்கும் காமக்கொடூரனிற்கும் ஏற்ற தண்டனை இது தான் என வெஞ்சினத்துடன் அவனின் நெஞ்சம் விம்மி தணிந்தது.

அவன் நினைத்தது நடந்தேறிய பிறகும் விஜயலட்சுமியை அத்துடன் அவன் விட தயாராகயில்லை.

பணம்,சொத்து என பேராசையோடு அலைந்து திரிந்து பல குற்றங்களை செய்தவருக்கு இதையும் விட குரூரமான நரகத்தை காட்டிட எண்ணிய ரத்தினவேல் அவருக்கான தீர்ப்பை எழுதிவிட்டான்.

சிவராமனையும் அவன் விட்டு வைக்க நினைக்கவில்லை.

நேரடியாக அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றாலும்,விஜயலட்சுமி விரித்த வலையில் சிக்கி தன் இச்சைக்காக மூன்று உயிர்களை பலிக்கொடுத்த அவரின் கோழைதனத்தை அவ்வளவு எளிதில் மன்னித்துவிட அவன் தயாராகயில்லை.

அதனால் அவரின் மனைவி விஜயலட்சுமி செய்த தகிடுதத்தம், பித்தலாட்டங்கள் மற்றும் இழிவான செயல்கள் என அனைத்தையும் சிவராமனிற்கு தெரிய வைத்தான்.

ஏற்கனவே,தன்னுடைய மகள்கள் மற்றும் மனைவியை இழந்து தவித்த சிவராமனிற்கு விஜயலட்சுமியின் நிஜ சுயரூபம் பற்றி தெரிய வர அவர் அப்படியே உடைந்து நொறுங்கிவிட்டார்.

அவரின் முதல் மனைவியான தேவகியை எந்த அளவு நேசித்தாரோ அதே அளவு விஜயலட்சுமியையும் உயிராய் நேசித்தவர் அவர்.

ஆனால் இவ்வாறு தன் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் சூழ்ச்சியால் பறித்தெடுத்து தன் வாழ்வில் விஜயலட்சுமி நுழைந்திருக்கிறார் என தெரிந்தவுடன் அவருக்கு நெஞ்சு வலி வந்திருந்தது.

அவரால் விஜயலட்சுமியின் செயல்களை கிரகிக்கவே முடியவில்லை.

அதிலும்,அவர் கூறிய அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பி தாம் பெற்ற செல்வங்களை வதைத்ததை நினைக்க நினைக்க அவரின் உடலெங்கும் கத்தியால் கீறுவது போன்ற வலியில் துவண்டுப்போனார்.

இப்போது அவரின் பெயரில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் இழந்துவிட்டு,தனக்கு சொந்தமான ஒரு அழகிய குருவிக்கூட்டையும் இழந்து மருத்துவமனையில் அனாதை போல் படுத்து கிடந்தார்.

அவரின் மனம் தன்னுடைய முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இழைத்த பாவத்திற்காக மானசீகமாக மன்னிப்பு வேண்டின.

காலம் கடந்து வருந்தி ஒரு பயனும் இல்லை.

அதிலும்,தேவகி உயிருடன் இருக்கும் விடயம் அவருக்கு இன்னும் தெரியவில்லை.அவரை பற்றி தெரிந்தால் அவரின் குற்றவுணர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

போதையில் வழி தவறிப்போனவருக்கு அவருக்குரிய தண்டனை கிடைத்திருந்தது.

அவரவர் விதித்த வினைக்கெல்லாம் உரிய பலன் கிடைத்தாக வேண்டும்.

இப்போது எஞ்சியிருந்தது வீர் உருவாகுவதற்கு காரணமான அரக்கன் சுரேந்திரன்.

சுரேந்திரனை பற்றி இன்னும் வீரிடம் அவன் எதையும் உரைக்கவில்லை.

அவனுடைய தந்தை தான் அந்த விபத்தை ஏற்படுத்தி அவன் குடும்பத்தின் சிதைவுக்கு காரணம் என்று தெரிந்தால் அவன் துடித்துப்போவான் என்று மறைத்துவிட்டான்.

அதனால் வீர் அறியாமல் சுரேந்திரனிற்கான தண்டனையை அவனே கொடுத்திருந்தான்.

அவன் எவ்வாறு போலியான விபத்தை ஏற்படுத்தி கொன்றானோ?

அதேப்போல் ரத்தினவேலுவும் போலியான விபத்து ஒன்றை ஏற்படுத்தி உயிரை பறித்திருந்தான்.

இப்போது தன்னவளின் குடும்பத்தை அழித்த அனைவருக்குமான தண்டனையை கொடுத்துவிட்டதால் ரத்தினவேலின் மனதில் தீயாய் எரிந்துக்கொண்டிருந்த பழிவெறி அணைவுற்றது.

அவனுடைய கோபமெல்லாம் தணிந்துவிட மனமும் இலேசாகியது.

ஆயினும்,தன்னவள் அனுபவித்த வேதனை இன்னும் நீர் பூத்த நெருப்பாய் அவனுள் தணல, மனைவியை ஆறுதலாக அணைத்துக்கொண்டான்.

அவனின் விழியோரம் ஒரே ஒரு சொட்டு நீர் வெளியேறின.

அதையறியாத மங்கையோ அவன் அணைத்ததும் “என்னாச்சு மாமா” என வாஞ்சையுடன் தன்னை அணைந்திருந்தவனின் கரம் பற்றி வினவ,

அவள் ‘மாமா’ என்று அழைத்ததும் அவனின் துக்கங்கள் எல்லாம் பறந்து ஓடிட “நத்திங்டி பொண்டாட்டி…உன் ஞாபகம் வந்துச்சு…உடனே கிளம்பி வந்திட்டேன்” என மெல்லியக்குரலில் உரைத்தவனின் நாசியோ அவளின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகை பூவின் நறுமணத்தை ஆழ்ந்து நுகர ஆரம்பித்தன.

அவளிற்கோ அவனின் நேசம் உள்ளத்தை நெகிழ்வித்தது என்றால்,அவனின் அணைப்பும் கழுத்தில் முகம் புதைந்திருந்தவனின் ரோமமும் அவளிற்குள் இனிய குறுகுறுப்பை உண்டாக்கின.

அவன் தீண்டலில் அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கின.

அதையறிந்த கள்வனின் இதழ்களோ இலேசாக விரிந்திட  “பார்க்க மட்டுமில்லை ஸ்டார்…உன்னை மொத்தமா களவாடிட்டு போகவும் தான் வந்தேன்…ஷால் வீ” என சரசத்துடன் வினவியவனின் கரமோ அவளின் புடவையினூடாக சரீரத்தில் அத்துமீற தொடங்கின.

அதில் அவளின் முகம் குப்பென்று சிவந்துவிட “மாமா இது பகல்…” என கிசுகிசுப்பாக கூறி அவனது கரம் பற்றி தடுத்தவளின் குரலில் இருந்த படபடப்பை அறிந்தவனிற்குள் மோகம் தொற்றிக்கொள்ள,

அடுத்த கணமே அவளை தன்னை நோக்கி திருப்பிய ஆடவன் அவளின் விழியோடு விழி கலந்து “பகலோ இரவோ ஐ நீட் யூ ரைட் நவ் ஸ்டார்” என தாபத்துடன் கூறி,அவளை அப்படியே தன் கைகளில் ஏந்திக்கொண்டான்.

அவளிற்கோ தன்னவனது இந்த செயலில் வெட்கம் பிடிங்கி தின்ன இமைகள் படபடக்க “மாமா” என முனகியவளின் கரங்களோ அவனின் கழுத்தை வளைத்தன.

அவள் சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்க,அவனின் இதழ்கள் தாராளமாக விரிந்தன.

அத்துடன் அவளின் அழைப்பும் அவளது மென் ஸ்பரிசமும் அவனது நாடி நரம்புகள் அனைத்தையும் முறுக்கேற செய்திட “ஸ்டார்” என கிறக்கமாக முனகியவனின் இதழ்கள் குனிந்து அவளின் அதரங்களை சிறைச் செய்தன.

அதில் ஒரு கணம் அவளின் விழிகள் சாசர் போல் விரிந்துக்கொள்ள,அவற்றிலும் கவரப்பட்ட ஆடவனோ பாவையவளை மெத்தையில் சரித்து “இப்படி கண்ணை விரிக்காதேனு எத்தனை தடவைடி சொல்லறது…” என காதலாய் கடிந்துக்கொண்டே அவளின் விழியில் முத்தமிட்டு அவளுடன் காதல் கலவி புரிய ஆரம்பித்தான்.

அவனது கரங்களும் இதழ்களும் அவளின் மேனியில் முன்னேற தொடங்கியதும் “மாமா வேணாம்” என முனகியவளின் இதழ்களை தனக்குள் உள்வாங்கியிருந்தான்.

அத்துடன் அவளது மேனி பரிமளத்துடன் இணைந்து வீசிய மல்லிகை பூவின் வாசம்,அவனை அப்படியே வசீகரிக்க “இந்த மல்லிகை பூ என்னை கிறங்கடிக்குதுடி” என மயக்கத்துடன் உரைத்தவாறே அவளின் தலையிலிருந்து பூவை உருவி எடுத்திருந்தான்.

உருவி எடுத்த சரத்திலிருந்த மல்லிகை பூவை அவளின் வெற்று சரீரமெங்கும் கொட்டியதோடு அதன் வாசம் நுகரும் சாக்கில் அவளின் பெண்மையெல்லாம் பூஜித்து ரசித்தான்.

ஓவிய கலைஞன் தூரிகை கொண்டு ஓவியம் திட்டவது போல் பூவோடு இதழ் சேர்த்து அவளின் மேனியை முத்தத்தால் அர்ச்சித்து தன்னவளை புனிதமாக்கினான்.

அவனது இந்த புது விதமான கலவி பாடத்தை கண்டு பிரம்மித்த பெண்ணவளோ இறுதியில் அவனது ஆளுகைக்குள் அடைக்கலம் புகுந்தாள்.

அவனின் தொடுகையில் மயங்கி வேறொரு உலகத்திற்கு பயணிக்க அவள் தொடங்கிவிட,தன்னவளின் கிறக்கம் அறிந்து அவன் ஒரு கணவனாய் கர்வம் கொண்டான்.

அவளின் முனகலும் மேனியின் குழைவையும் பார்க்கும் போது அவனின் புதைந்த மோகம் காட்டாற்று வெள்ளம் போல் பாய காத்திருந்தாலும் தன்னவளை காயப்படுத்திவிடக்கூடாது என்று நிதானமாகவே செயல்பட்டான்‌.

அவன் என்ன தான் மிருதுவாக செயல்பட்ட போதும்…இருவரின் மேனிக்கும் இடையில் மல்லிகை பூ கசங்கிப்போய் கதறிக்கொண்டிருந்தது தனிக்கதை தான்!

இறுதியாக,அவளின் கூந்தலை அலங்கரித்த பூ இப்போது அவர்களின் மஞ்சத்தை அலங்கரித்திருந்தன.

இப்படியே நாட்கள் விரைந்தோடி,தேர்தலுக்கு சில நாட்களே இருக்க,ரத்தினவேல் அதன் வேலையாய் வெளியே சுற்றித் திரிந்தான்.

வீரும் அவனுடன் தனது பங்களிப்பை கொடுத்து கொண்டிருக்க,சந்திரமதியோ எந்நேரமும் ஒரு வித சிந்தனையில் ஆழ்ந்தப்படி இருந்தாள்.

வீர் மும்முரமாக அரசியல் பணியில் ஈடுப்பட்டிருந்ததால் அவன் தங்கையை கவனித்து பார்க்கவில்லை.

அத்தகைய சூழ்நிலையிலே தேர்தல் முடிந்து ஒரே வாரத்தில் திருமணத்தை வைப்பதை பற்றி தந்தை பேசியதை கேட்டு கடுப்பாகியிருந்தான் ஜித்தேந்திரன்.

இதற்கு மேலும் தாமதிப்பது சரியில்லை என்றெண்ணிய ஜித்து தன்னவளை காண புறப்பட்டிருந்தான்.

ஆனால் வாகனத்தில் அவன் சென்றுக்கொண்டிருந்த சமயம் ரோகிணியின் அலைப்பேசியிடமிருந்து அழைப்பு வந்தது.

‘இவ எதுக்கு கால் பண்ணறாள்?’ என எரிச்சலாக எண்ணினான்.

முதலில் அவளின் அழைப்பை நிராகரிக்க எண்ணிய ஆடவன் பின்பு ‘என்ன நினைத்தானோ?’ அழைப்பை ஏற்று பேசினான்.

“ஹலோ” என வேண்டாவெறுப்பாக அவன் பேச,

எதிரில் இருப்பவள் அதையெல்லாம் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.

“ஜித்து உங்களை நான் மீட் பண்ணனும்” என்றாள் எடுத்த எடுப்பிலே…

அவனும் அவளிடம் திருமணத்தை நிறுத்துவதை பற்றி பேசியாக வேண்டி இருப்பதால் “ஓகே ஃபைன்…நானும் உன்கிட்ட பேச தான் நினைச்சிட்டு இருந்தேன்…சரி எங்க மீட் பண்ணலாம்?” என கேட்டப்படியே வாகனத்தை செலுத்த,

அவளோ அடுத்த கணமே “ஹோட்டல் ரெஸிடன்சி” என்றாள் தயக்கமின்றி…

உடனே அவனின் புருவங்கள் இலேசாக இடுங்கினாலும் “ஃபைன்” என சந்திக்க சம்மதம் தெரிவித்து அழைப்பை துண்டித்திருந்தான்.

அவளின் முகத்திற்கு நேரே அவளை பிடிக்கவில்லை என்று கூறி அவளின் பக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினான்.

ஆனால் அத்துணை எளிதில் ரோகிணியின் பக்கத்திற்கு முடிவு எழுத முடியாது என்று அவன் அறியவில்லை.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top