முகிழ்மதி 100,101

முகிழ்மதி 100:


 

 

தன்னவள் அவனை நிராகரித்த சோகத்தில் அமர்ந்திருந்த ஜித்துவிடம் குளம்பியை கொடுக்க வந்தாள் முகிழ்மதி.

அவனோ மடிக்கணினியை திறந்து வைத்துவிட்டு எங்கோ வெறித்தப்படி உட்கார்ந்திருப்பதை கண்டுவிட்டு அவனை எப்படி அழைப்பது என தெரியாமல் தத்தளித்தாள்‌.

பின்பு துணிச்சலாக பேச வேண்டும் என கணவன் எடுத்த பாடங்கள் சிந்தையில் தோன்றி மறைய ஒரு வழியாய் “ஏங்க ஜித்து…” என மெல்லியதான குரலில் அவனை அழைத்திருந்தாள்.

அவளின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய ஜித்தேந்திரனுக்கு ஒரு கணம் முகிழ்மதி சந்திரமதியாக உருமாறி மறைந்திட ‘மூன்’ என தன்னை மீறி முகம் பிரகாசமாக முணுமுணுத்திருந்தான்.

ஆனால் அவளின் தோற்றம் முகிழ்மதியாய் மாறியதும் குழம்பிய ஆடவன் ஒரு முறை தன் கண்ணை கசக்கி விழி உயர்த்தி அவளை நோக்க,அவ்விடத்தில் தனது அண்ணி நிற்பதை கண்டு “என்ன அண்ணி?” என முகம் வாட வினவினான்.

அவளோ “அத்தைம்மா உங்களுக்கு பால் கொடுத்து விட்டாங்க” என தயக்கமாய் உரைத்தப்படி அவனிடம் குவளையை நீட்டினாள்.

அவனும் ஒரு பெருமூச்சுடன் அவளிடமிருந்து குவளையை வாங்கிவிட்டு “அண்ணி இங்க வாங்களேன்…ஒரு நிமிஷம் உட்காருங்க” என தன்னருகே நீள் விரிக்கையில் இருந்த இடத்தை சுட்டிக்காட்டினான்.

அவளோ ‘இங்க எதுக்கு?’ என மிரட்சியுற்று விழிக்க,

அதற்குள் குவளையை வாங்கி முன்பிருந்த மேசையில் வைத்த ஜித்து “அட உட்காருங்க அண்ணி” என அவளின் கைப்பற்றி அசால்ட்டாக தன்னருகே அமர வைத்தான்‌.

அதில் ஒரு கணம் அவளின் விழிகள் விரிந்து பின்பு சகஜமாகின.

ஜித்துவோ ஒற்றை காலை நீள் விரிக்கையில் மடக்கி அமர்ந்தவாறே அவளின் புறம் திரும்பியவன் “அண்ணி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணறீங்களா?” என ஒரு வித எதிர்பார்ப்புடன் வினவினான்.

அவன் தன்னிடம் உதவி கேட்டதும் திருதிருவென விழித்தவள் “என்னங்க பண்ணனும்” என்றாள் திடுக்கிட்ட மனதுடன்…

அவனோ “அண்ணி இந்த என்னங்க நொன்னங்கயெல்லாம் வேணாம்…கால் மீ ஜித்து…அப்படி இல்லையா வாடா போடா கூட கூப்பிடுங்க…நான் எதுவும் ஃபீல் பண்ண மாட்டேன்…பட் இந்த வாங்க போங்க ரொம்ப அக்வோர்டா இருக்கு…தயவு செஞ்சு அப்படி கூப்பிடாதீங்க” என நிறுத்தி நிதானமாக தனது பிடித்தமின்மையை வெளிப்படுத்த,

அவளோ அவன் பேசியதை கேட்டு “அச்சோ வாடா போடா எல்லாம் சொல்லக்கூடாது…என்னயிருந்தாலும் என்னை விட வயசுலே பெரியவங்க நீங்க” என படபடப்புடன் உரைக்க,

அவனோ ‘ம்க்கும்…வயசிலே பெரியவனா இருந்து என்ன பிரயோஜனம்?ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண துப்பில்லை’ என நெற்றியை நீவி சலித்துக்கொண்டவனிற்கு திடீரென்று என்ன தோன்றியதோ முகிழ்மதியிடம் திரும்பியவன் 
“அண்ணி உங்க சிஸ்டரை எப்படி கரெக்ட் பண்ணறதுனு கொஞ்சம் சொல்லறீங்களா?” என கண்கள் மின்ன கேட்டிருக்க,

அவளோ “என்னது” என அதிர்ச்சியில் வாயில் கைவைத்துக்கொள்ள,

அவளின் அதிர்ச்சியை கண்டப்பிறகே தன் தவறு உரைக்க ‘அடேய் ஜித்து…இவங்க உன் ஆளு மாதிரி டெடர் பீஸு இல்லைடா…சாத்வீகமான பொண்ணு…கொஞ்சம் பார்த்து பதமா பேசு’ என பின்னந்தலையை வருடியப்படி யோசித்த ஜித்தேந்திரன் இதழில் சிரிப்பை புகுத்தி “அது ஒண்ணுமில்லை அண்ணி…நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்…அவளை எப்படி இம்பர்ஸ் பண்ணறதுனு எனக்கு தெரியலை…கிட்டதட்ட அந்த பொண்ணு உங்க அக்கா கேரக்டர்னு வைச்சுக்கோங்களேன்…அதுக்கு தான் உங்ககிட்ட கேட்டேன்” என அவளிற்கு ஏற்ற விதமாக பேசி சமாளித்தான்.

உடனே புருவம் சுருக்கிய முகிழ்மதி “ரோகிணியா?” என கேட்க,

அவளின் பெயரை கேட்டதும் அவன் முகம் மாறிட “ச்சை அவ கிடக்கிறாள் பிசாசு” என்றான் மிகுந்த கடுப்புடன்.

அவன் பேச்சை கேட்டு மீண்டும் அதிர்ந்தவள் “ஏதே பிசாசா?என்ன இப்படி சொல்லறீங்க?” என விழி விரித்து கேட்க,

அவனோ சற்றும் தாமதிக்காமல் “எனக்கு அவளை பிடிக்கலை அண்ணி” என்றதும் ஏனோ அவளையும் அறியாமல் ஒரு ஆசுவாசம் உண்டானது.

ஏனெனில்,அவளின் விழிகளுக்கு ரோகிணி விஜயலட்சுமியின் மற்றொரு ரூபம் போல் தான் தெரிந்தாள்.

அவரிடம் இருக்கும் அதே காழ்ப்புணர்ச்சியும் வஞ்சமும் அவளிடமும் உணர்ந்திருந்தாள்.

அதனால் ரோகிணியை பற்றி எண்ணியவுடனே அவளின் மேனியில் சிறு நடுக்கம் உண்டாகின.

ஆயினும் அவனை நோக்கி திரும்பிய முகிழ்மதி “ஏங்க அவங்களை பிடிக்கலையா?” என பதற்றமுற்ற நெஞ்சத்தை அடக்கி அவள் வினவ,

அவனோ “அட அதை ஏன் அண்ணி கேட்கறீங்க?அவளை பிடிக்காமல் போறதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கு…அவ ஆட்டியூட் தொடக்கம் எதுவுமே எனக்கு பிடிக்கலை…” என்று உரைத்தவனின் முகத்தில் அப்படியொரு வெறுப்பு!

அவனின் அந்த முகமாற்றத்தை முகிழ்மதியின் குட்டி மூளை கூட அவதானிக்கும் வகையில் வெளிப்படையாக காட்டியிருந்தான்‌ அந்த இளைஞன்.

ரோகிணியை பற்றி அவளிற்கும் ஓரளவு நன்றாகவே தெரியும்.

முதல் சந்திப்பில் மட்டுமில்லை…அடுத்தடுத்து நிகழ்ந்த சந்திப்பிலும் அவளிடம் ஏதோ சரியில்லை என அவளின் மனம் படபடத்து எடுத்துரைத்தது.

ஏனோ அவளிடம் ரோகிணி நன்றாக பேசுவது போல் வெளியில் வேடமிட்டாலும் அவர்களின் கண்களில் உண்மை தெரியுமல்லவா?

அதனால் தன்னை அவள் இளக்காரமாக நோக்குவதை பலமுறை அவளே கவனித்திருக்கிறாள்.

ஆனால் அதைப்பற்றி இதுவரை அவள் யாரிடமும் மூச்சுவிடவில்லை.

ஏனென்றால்,தனக்கு மட்டுமே இவ்வாறெல்லாம் தோன்றுகிறது போலும் என்று அவள் நினைத்திருந்தாள்.

இப்போது ஜித்தேந்திரனும் அதையே கூறவும் ‘நிஜமாவே அவங்க சரியில்லையோ?’ என்ற எண்ணம் அந்த சிறு பெண்ணின் மனதில் உருவானது‌.

மெதுவாக விழி உயர்த்தி அவனை ஏறிட்ட முகிழ்மதி “உங்களுக்கு அவங்களை பிடிக்கலைனா பேசாமல் வீட்டுலையே சொல்லிடலாமில்லை” என அவன் தவறாக எடுத்துக்கொள்வானோ என்ற தயக்கத்துடனே அவள் சொல்ல,

அவனோ விரக்தியாக புன்னகைத்து “நான் சொல்லலைனா நினைக்கிறீங்களா நீங்க?அதெல்லாம் பாட்டியிலிருந்து அப்பா வரை எல்லார்கிட்டயும் பேசி பார்த்தாச்சு அண்ணி…எல்லாரும் இந்த கல்யாணத்தை நடத்திறதில் அவ்வளவு உறுதியா இருக்காங்க” என்றவனின் முகம் சோகத்தில் மூழ்கிப்போனது.

அவனின் வருத்தம் இளகிய உள்ளம் கொண்டவளிற்கு ஒரு மாதிரிமாகிவிட “உங்க அண்ணாகிட்ட சொன்னீங்களா?” என பட்சாதாபத்துடன் கேட்க,

ஜித்தேந்திரனோ மறுப்பாக தலையசைத்து “இல்லை அண்ணி…அண்ணன்கிட்ட எதுவும் சொல்லலை…அண்ணனே பாவம்…அவருக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு…இதிலே என் பிரச்சனையும் எதுக்கு கொண்டு போகணும்னு விட்டுட்டேன்…அதுவுமில்லாமல் அன்னைக்கு பார்த்தீங்கயில்லை…வீர் அண்ணா வீட்டுக்கு போற விஷயத்திலே அம்மாவை அப்பா எப்படி பேசினாருன்னு…அதுக்கே அண்ணா டென்ஷனாகி எப்படி முறைச்சிட்டு நின்னாரு…என் விஷயத்திலையும் அது நடக்க நான் விரும்பலை அண்ணி…அம்மாகிட்ட சொன்னால் அம்மா என் பக்கம் நிப்பாங்க…ஆனால் எனக்காக அப்பாவும் அம்மாவும் சண்டைப்போட்டுட்டு நிக்கறதை நான் விரும்பலை…இதையெல்லாம் யோசிச்சு தான் நான் அமைதியா இருக்கேன்” என பால் குவளையின் விளம்பை விரலால் சுற்றி வருடியவாறே உரைத்தான்.

முதன்முறையாய் அவனை பிரம்மிப்புடன் நோக்கினாள் முகிழ்மதி.

திருமண சமயத்தில் அவளிற்காக அவன் துணை இருந்த விதம் அவள் அறிந்ததினால் அவனிடம் சிறிது நன்றியுணர்வு இருந்தது‌.

ஆனால் இன்று குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்காகவும் சிந்தித்து செயல்படும் ஜித்தேந்திரனின் மீது அவளிற்கு மரியாதையும் உருவானது.

ஆனால் அடுத்த கணமே அவளை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் “பேசாமல் எனக்காக நீங்க கல்யாணத்தை நிறுத்துங்களேன் அண்ணி” என படீரென்று அவன் கேட்டிருக்க,

அதைக்கேட்ட முகிழ்மதிக்கு பகீரென்றது.

அவளோ “ஏதே நானா?” என அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்து கேட்க,

அவளின் அதிர்ச்சியை கண்ட ஜித்தேந்திரன் 
“என்ன அண்ணி பயந்திட்டீங்களா?சும்மா சொன்னேன் அண்ணி…சும்மா…” என சத்தமாக சிரித்துக்கொண்டே சொல்லவும்,

அவன் சிரிப்பில் கவனம் களைந்த முகிழ்மதி அவனை பீதியுடன் நோக்க “அட அண்ணி நான் தான் சும்மானு சொல்லிட்டனே…நீங்களே ஒரு வாயில்லா பூச்சினு தெரியும்…என் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்…நீங்க ஃப்ரீயா விடுங்க” என புன்னகைத்தவாறு கூறிய பிறகே ‘ஹப்பாடா’ என மூச்சை இழுத்துவிட்டாள்.

இப்போது தான் அனைவரிடமும் வாயை திறந்தே பேச ஆரம்பித்திருக்கிறாள்.

இந்நிலையில் அவனிற்காக அவள் பேசவேண்டும் என்று கூறியதும் பயந்து விட்டாள்.

ஆயினும்,அவனது மனம் ஒப்பாமல் நடக்கும் திருமணத்தை எண்ணி கவலையுற்றவள் “கல்யாணம் பிடிக்கலைனா இப்போவே நிறுத்திடுங்க…பின்னாடி உங்களுக்கு தான் கஷ்டம்…பிடிக்காத கல்யாணம் பண்ணி வாழறது நரகத்தை விட கொடுமையா இருக்கும்” என்றாள் உள்ளார்ந்த அர்த்தத்துடன்…

எப்போதாவது தான் அவளையும் மீறி மனதில் இருக்கும் விடயங்களை அவள் வெளியில் கொட்டுவாள்.

இன்று அவனிற்கு கஷ்டம் என்று தெரிந்ததும் அவளையும் மீறி அறிவுரை கூறியிருக்க,அதை ஆமோப்பது போல் அவனின் முகம் தீவிரமாகிவிட “ஐ நோ அண்ணி…நானும் அதுக்காக தான் யோசிச்சிட்டு இருக்கேன்…ஒரு பொண்ணை பத்தி தப்பா சொல்லக்கூடாது தான்…ஆனால் ரோகிணி மாதிரி பொண்ணெல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தால் என் நிம்மதி மட்டுமில்லை‌…இந்த குடும்பத்தோடு ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிப்போயிடும்…அவ மனுஷங்களை மதிக்க தெரியாத ராட்சசி அண்ணி…என் கண்ணு முன்னாலே அவ என் வீட்டு ஆளுங்களை அவமதிக்கிறதை பார்த்திட்டு என்னாலே சும்மா இருக்க முடியாது…அப்படி நடக்கவும் நான் விடமாட்டேன் அண்ணி” என திடமான குரலில் இயம்பியவனை பாவமாக பார்த்தாள்.

ரோகிணி எந்த அளவு கடுமையாக நடந்திருந்தால் ஒரு ஆடவனின் வாயிலிருந்து இப்படியான சொற்கள் வெளிவரும் என்று அவளிற்கு தோன்றின.

அவளின் விழிகள் அவனையே பரிவுடன் வருடிய நேரம் “என்ன நடக்குது இங்கே?” என கேட்டப்படியே அங்கு வந்தான் ரத்தினவேல்.

அவன் குரல் கேட்டு அவள் அரக்கப்பறக்க எழுந்து நிற்க “அண்ணி ஈஸி” என ஜித்து கடிவதற்கு முன்பே “ப்ச் உட்காரு முகிழ்” என அதட்டி அவளை அமர வைத்திருந்தான் அவளின் கணவன்.

இருவரும் மேல் தளத்தில் இருந்த வரவேற்பறையில் அமர்ந்து தான் பேசிக்கொண்டிருந்தனர்.

அதனால் அவர்கள் இருவரும் ஒரே நீள் விரிக்கையில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்திருக்க,ரத்தினவேலோ அங்கு தனித்து போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.

“கொளுந்தனும் அண்ணியும் என்ன பேசிட்டு இருந்தீங்க?” என இருவரையும் கூர்மையாக பார்த்தவாறு விசாரிக்க,

அவனின் துளைத்தெடுக்கும் பார்வையில் பாவையவள் நடுநடுங்கிப்போனாள்.

அவனருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை மணாளன் தவறாக எடுத்துக்கொண்டானோ என நினைத்து அஞ்சினாள்.

ஜித்தேந்திரனிற்கு அந்த அச்சமெல்லாம் இல்லை.

அதனால் “சும்மா தேவகி ஆன்ட்டிய பத்தி விசாரிச்சிட்டு இருந்தேன் அண்ணா…இல்லையா அண்ணி” என அவளையும் தன் பேச்சில் இழுத்து அவளிடம் கண்ணை காட்ட,

அவளோ அவன் கண்சிமிக்கையை கவனித்தால் தானே?

ரத்தினவேல் ‘அப்படியா?’ என்பது போல் புருவம் உயர்த்தி மனைவியை பார்த்து கேட்டதும் அவளிற்கு வேறு அவசரத்திற்கு பொய் கூற வரவில்லை.

அவள் கைகளை பிசைந்தவாறு அமர்ந்திருக்க ‘இந்த அண்ணி வேற காட்டிக்கொடுத்திடுவாங்க போலே..காட்’ என தமையன் அறியாமல் பெருமூச்சு விட்ட ஜித்தேந்திரன் “அண்ணி அண்ணாவுக்கு பால் எடுத்திட்டு வர மறந்திட்டேன்னு சொன்னீங்களே…நீங்க வேணா போய் எடுத்திட்டு வாங்களேன்” என வலுக்கட்டாயமாக சிரித்தவாறே அவளை அங்கிருந்து அனுப்பி முயல,

பாவையவளோ அப்பாவியாய் அவனை நோக்கி ‘நான் எப்போ சொன்னேன்’ என்பது போல் பார்த்து வைக்க,

அவளின் கொளுந்தனோ ‘ம்க்கும் விளங்கிடும்’ என உள்ளுக்குள் நொடித்துக்கொண்டு “அண்ணி நீங்க சொன்னீங்க மறந்திட்டிங்க போலே…அம்மா வேற கீழிருந்து கூப்பிடற மாதிரி இருக்கு…போய் என்னானு கேட்டுட்டு வாங்களேன்” என மீண்டும் கண்ணை காட்ட,

முகிழ்மதிக்கு அப்போதும் அவனது சங்கேத மொழி புரியவில்லை.

அதனால் அவள் அவ்விடத்திலே சட்டமாய் அமர்ந்திருக்க,

ஜித்துவோ ‘சுத்தம்’ என தலையிலடித்துக்கொள்ளாத குறையாக அவளை பார்க்க,

அந்நேரம் “உன் கண்சமிக்கைய புரிஞ்சுக்கிற அளவு உன் அண்ணி புத்திசாலி இல்லைடா” என நக்கலாக சகோதரனை பார்த்து உரைத்த ரத்தினவேல் “முகிழ் ரூமுக்கு போய் நான் குளிக்க டிரஸ் எடுத்து வை” என அவளிடம் திரும்பி ஆணைப் பிறப்பித்ததும்,அதற்காகவே காத்திருந்தாற் போன்று “சரி” என தலையாட்டியப்படி அங்கிருந்து வேகமாக சென்றாள்.

‘ஆனாலும் அண்ணி இவ்வளவு மக்கா இருக்க வேணாம்’ என தமையனிடம் மாட்டிக்கொண்டதை எண்ணி சிறியவன் விழிக்க,

அவள் அங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருந்த ரத்தினவேல் சகோதரனை விழிகளால் துளைத்தெடுத்தான்.

‘இவர் எதுக்கு இப்படி பார்க்கிறாரு’ என உமிழ்நீரை விழுங்கிவிட்டு அவனை ஏறிட “வர வர உன் காத்து ஹோட்டல் ரெஸிடன்சியிலே அதிகமா வீசற மாதிரி இருக்கு…என்ன விஷயம்?” என்று அழுத்தமான குரலில் புருவம் உயர்த்தி கேட்க,அவனிற்கோ நெஞ்சில் நீர் வற்றிப்போனது.

ஆயினும் தன்னை சமாளித்து “அது ஒண்ணுமில்லைண்ணா…க்ளையண்ட் ஒரு ரிலாக்ஸ்டான ஆம்பியன்ஸ் விரும்பறாங்க…அதனாலே தான் அங்க…” என அவன் பொய்களை கோர்வையாக அடுக்க தொடங்கியதும்,

“க்ளையண்ட் விரும்பறாங்களா?இல்லை நீ விரும்பறீயா?” என கூர்மையாக கேட்டவனின் குரலில் என்னயிருந்தது என்று ஜித்துவிற்கு தெரியவில்லை.

அவனோ ‘என்ன சொல்வது?’ என தெரியாமல் மௌனம் காக்க,

“ஜித்து யூ நோ யுவர் லிமிட்ஸ்…அதை தாண்டமாட்டேன்னு நினைக்கிறேன்” என மறைமுகமாக அவனை எச்சரித்தப்படி எழுந்தவன் “பார்த்து நடந்துக்கோ” என இப்போது வெளிப்படையாகவே அவனை மிரட்டிவிட்டு சென்றான்.

‘ஓ காட் போச்சு போ…என் மேலே அண்ணாவுக்கு சந்தேகம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்…இப்போ என்ன நான் செய்யறது?’ என பதட்டத்துடன் அமர்ந்திருந்த ஆடவனிற்கு ஒரு கணம் தன் விருப்பத்தை அவனிடம் தெரிவித்துவிடலாமா என்று தோன்றியது‌.

அடுத்த கணமே ‘ப்ச் வேணாம்…முதல்ல இந்த ரோகிணி பிரச்சனைய முடிப்போம்…அதுக்கு பிறகு மூன்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வருவோம்’ என தனக்குள்ளே உறுதிமொழி எடுத்துக்கொண்டான்.

ஆனால் அவளிடம் நிதானமாக பேசும் அளவு அவகாசமெல்லாம் கிடைக்காது என அவன் அக்கணம் அறியவில்லை.

இங்கு அறையில் முகிழ்மதியோ தன்னவன் அணிவதற்கான உடைகளை எடுத்து வைத்துவிட்டு பதட்டத்துடன் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

கணவன் தன்னை தவறாக எண்ணிவிட்டனோ என அவள் கலங்கி நிற்க,மெதுவாக தன் அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்த ரத்தினவேலின் இமைகள் இடுங்கின.

கதவு திறக்கும் சப்தம் கேட்டு விழி உயர்த்திய மங்கை படபடப்புடன் அவனை பார்க்க “முகிழ் இங்க வா” என அவளை தன்னருகே அழைத்தான்.

அவளோ சிறிது பயத்துடனே அவனருகே வந்து தலைக்குனிந்து நிற்க “எதுக்கு இப்போ நீ ரெஸ்ட்லெஸா இருக்கே?” என அவளின் தாடையை பற்றி நிமிர்த்தி கேட்க,

அவனின் விழிகள் மனையாளின் முகத்தை கூர்ந்தப்படி இருந்தன.

அவனின் விழி வீச்சு ஒரு வித தடுமாற்றத்தை கொடுத்திட,இருப்பினும் அதனை சமாளித்து “வெளியே நீங்க கோபமா இருந்தீங்களே” என எச்சிலை கூட்டி விழுங்கியப்படி வினவ,

ரத்தினவேலோ குழப்பமாய் “நானா கோபமா எப்போ இருந்தேன்?” என புருவம் சுருக்கி பதில் கேள்வி எழுப்பினான்.

அவனிற்கு எந்த வித கோபமும் இல்லை.அதனால் அவனிற்கு அவளது கேள்வியின் பொருள் புரியவில்லை.

அவளோ “இல்லை அவர் கூட தனியா பேசினதை பார்த்து நீங்க…” என அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறியவளை கண்டு கோபமுற்றான் ரத்தினவேல்.

அதனால் அவளின் இடைப்பற்றி தன்னை நோக்கி இழுத்து இறுக்கியவன் “லிசன் முகிழ்…ஜித்துவுக்கு நான் அண்ணா…அவன் என்னை அண்ணாவா மட்டும் பார்க்கிறதில்லை…ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து தான் பார்க்கறேன்…அப்போ நீ அவனுக்கு என்ன வேணும்?கிட்டதட்ட நீ அவனுக்கு அம்மா மாதிரி தான்…அவனும் அப்படியொரு ஸ்தானத்தில் வைச்சு தான் உன்னை பார்க்கிறான்…அப்படி இருக்கும் போது நீங்க இரண்டு பேரும் பேசினதை பார்த்து நான் ஏன் கோபப்படணும்?” என குரல் உயர்த்தி கேட்டவனிற்கு மனைவியின் இந்த பேச்சு சிறிதும் பிடிக்கவில்லை.

அவனது பேச்சிலிருந்த பொருளை அவளும் ஒப்புக்கொள்வாள்.ஆனால் அந்தவொரு சமயத்தில் அவன் கோபமாக இருந்ததை அவள் தவறாக புரிந்துக்கொண்டிருந்தாள்.

அவனின் பேச்சிலும் இறுகிய பிடியிலும் அவனது கோபம் வெளிப்பட “சாரிங்க…நீங்க ஏதோ கோபமா இருந்த மாதிரி இருந்துச்சு…இந்த விஷயத்தினாலே தான் கோபமா இருக்கீங்களோனு தப்பா நினைச்சிட்டேன்” என அவள் நலிந்த குரலில் விளக்கம் கூற,

அவனோ அவளை எரிச்சலாக நோக்கி “நினைப்பேடி நினைப்பே…உனக்கு ஏன்டி இப்படியெல்லாம் நினைப்பு போகுது…அவனோட மட்டுமில்லை…என் பொண்டாட்டி யாரு கூட பேசினாலும் எனக்கு சந்தேகம் வராது…முதல்ல அதை உன் மரமண்டையிலே ஏத்தி வைச்சுக்கோ…ஆளை பாரு…பெருசா பேச வந்திட்டாள்” என கடுப்பாக அவளின் நெற்றில் ஒரு விரலால் தட்டிவிட்டு அவன் சினத்துடன் குளியலறைக்குள் சென்றான்‌.

அவன் அவளை உதறிவிட்டு அங்கிருந்து அகன்ற வேகத்திலே அவனிற்கு தன் மீது கோபம் என்று அறிந்த முகிழ்மதிக்கு அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை.

பிழை தன் மேல் உள்ளதால் அவனின் வருகைக்காக அவள் காத்திருந்தாள்.

ஆடவனோ ‘என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்காள்?பைத்தியக்காரி’ என திட்டுக்கொண்டே குளித்துவிட்டு வெளியே வர,

குளியலறைக்கு முன்பு பாவமாக நின்றிருந்த மனைவியை முறைத்துவிட்டு கண்ணாடி முன்பு சென்று நின்று தலை வார ஆரம்பித்தான்.

அவளோ அவனின் பின்னோடு சென்று “ஏங்க சாப்பிட்டிங்களா?” என பரிதாபமாக கேட்க,அவனிடமிருந்து கண்ணாடி வழியே ஒரு முறைப்பு மட்டும் தான் பரிசாக வந்தது.

அதில் மிரண்டு ஒரு அடி பின் வாங்கினாலும் “ஏங்க நான் போய் சாப்பாடு எடுத்திட்டு வரட்டுமா?” என விடாமல் கேட்க,அதற்கும் அவனிடமிருந்து முறைப்பு மட்டுமே கிடைத்தன.

அவனோ தலையை வாரிவிட்டு அவளை கடந்து சென்று நீள்விரிக்கையில் அமர,அவள் அப்போதும் விடாமல் நாய்க்குட்டி போல் அவனின் பின்னோடு சென்று அமர்ந்தாள்.

ஓரக்கண்ணால் அவளின் செயலை அவதானித்தாலும் அவன் எதுவும் பேசவில்லை.

தன்னை தவறாக கணித்து வைத்ததினால் உண்டான கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தன.

அதனால் அவளை கண்டுக் கொள்ளாமல் அலைப்பேசியை எடுத்து எதையோ அலச தொடங்கிவிட, அவளிற்கோ சப்பென்றானது.

ஆயினும் விடாமுயற்சியுடன் அவனது சினத்தை தடுக்க பல வகையில் போராடினாள்.

“டீபன் எல்லாம் ஆறிப்போயிருக்கும்…நான் போய் தோசை சுட்டு எடுத்திட்டு வரட்டுமாங்க?”

“தோசை வேணாம்னா வேற ஏதாவது செஞ்சு எடுத்திட்டு வரட்டுமாங்க?”

“சாப்பாடு வேணாம்னா பாலாவது கொஞ்சுண்டு குடிக்கிறீங்களா?”

“பாலும் பிடிக்கலைனா ஃப்ரூட் கட் பண்ணி எடுத்திட்டு வரட்டுமா?”

இவ்வாறு பல வகையில் சிறிது இடைவெளிவிட்டு அவள் மாற்றி மாற்றி கேட்டாலும் அவனிடமிருந்து முறைப்பு மட்டுமே விடையாக கிடைத்தது.

அத்தோடு அவனின் விழிகளும் அலைப்பேசியிலே கவனமாக இருக்க,அவளிற்கு இலேசாக சினம் முகிழத் தொடங்கின.

முன்பிருந்த முகிழ்மதியாக இருந்தால் அவனின் இந்த உதாசீனத்தில் கண்கள் கலங்கி தவித்திருப்பாள்.

இன்றோ அவனின் இந்த அலட்சியத்தினால் உண்டான கோபத்தோடு அவனிடமிருந்து வேகமாக அலைப்பேசியை பறித்தெடுத்திருந்தாள்.

அதனை சற்றும் எதிர்பாராத ஆடவன் ஒரு கணம் தன் புருவத்தை ஏற்றி இறக்கி அவளை நோக்கினான்.

“ஹே ஃபோனை கொடுடி” என அவன் அதட்ட,

அவளோ அலைப்பேசியை எடுத்து தன் பின்னால் மறைத்துக்கொண்டு “நான் தான் சாரி சொல்லிட்டேனில்லை…அப்புறம் எதுக்கு என்கூட பேசமாட்டிக்கிறாங்க?” என கோபத்துடன் சிணுங்கிக்கொண்டே கேட்க,

அவளின் சிணுங்கல் கலந்த கோபம் அவனிற்குள் இருந்த கோபத்தை கூட அடித்து விரட்டுவதாய் இருந்தன.

ஆயினும்,தன் கோபத்தை இழுத்து பிடித்து அவளை ஆழ்ந்து நோக்கியவன் “உன்கூட பேச முடியாதுடி…நீ முதல்ல ஃபோனை கொடு” என அவளிடமிருந்து அலைப்பேசியை வாங்க கையை நீட்ட,

அவளோ அலைப்பேசியை தனது இரவு உடைக்கு அடியில் வைத்து “தரமுடியாது…நீங்க என்கிட்ட நல்லா பேசுங்க…அப்போ தான் தருவேன்” என சிறுப்பிள்ளைப்போல் அடம்பிடிக்க,

தன்னவளின் அந்த பிடிவாதத்தை அவன் மனம் ரசிக்கவே செய்தன.

அவளின் மீதிருந்த மனத்தாங்கல் எல்லாம் எப்போதோ பறந்துப்போயிருந்தது.

ஆனாலும் அவனிற்குள் இருந்த தன்முனைப்பு அவனை இளகவிடாமல் விறைப்பாக வைத்திருந்தன.

“நீ என்னை இவ்வளவு கேவலமா நினைப்பே?நான் உன்கிட்ட பேசணுமாடி?முடியாது” என்றான் கறாரான குரலில்…

உடனே கண்கள் சுருக்கி “மாமா பிளீஸ் சாரி…இனி இப்படி பண்ணமாட்டேன்” என மெய்யான வருத்தத்துடன் மன்னிப்பை யாசித்திருக்க,அவனின் மனம் அப்படியே பாகாய் உருகிவிட்டது.

அதிலும் எதிர்பாராத அந்த சந்தர்ப்பத்தில் அவள் ‘மாமா’ என்று அழைத்ததும் அவனின் இதயம் பரபரக்க “வாட் கம் எகைன்?” என அவளை நெருங்கி அமர்ந்து வினவ,

அவன் தன்னை நோக்கி வந்த வேகத்திலே அவளிற்கு தான் செய்த காரியமே உரைக்க,சடுதியில் அவளின் முகம் சிவந்தது.

அவளின் வாயிலிருந்து வரும் அந்தவொரு அழைப்பிற்காக தவம் கிடைக்கும் யோகியாயிற்றே அவன்…

ஆதலால்,அவளின் வாயிலிருந்து மீண்டும் அதை கேட்டு விட எண்ணி “ஸ்டார் என்ன சொன்னே முதல்ல சொல்லுடி” என ஆவல் கலந்த தவிப்புடன் கேட்க,

அவளோ அந்நேரமும் இதழ்கடித்து மௌனம் காத்து அவனின் பொறுமையை நன்றாகவே சோதித்தாள்.

இப்போது அவனிற்குள் சிறு கோபம் எட்டிப்பார்க்க “ஏய் அழுத்தக்காரி…சொல்லுடி” என அவளின் தோளை பற்றி கேட்க,

அவளோ ‘ம்ஹும்’ என நாணத்துடன் தலையாட்டி மறுப்பு தெரிவித்தவாறே பின்னால் நகர்ந்தாள்.

“அப்போ நீ சொல்ல மாட்டே…ரைட்?” என ஒரு மார்க்கமான குரலில் புருவம் உயர்த்தி வினவியப்படியே இருக்கையிலிருந்து எழுந்துக்கொள்ள,

அவளோ அவன் எழுந்து நின்றதும் அவனிற்கு கோபமோ என்றெண்ணி தவிப்புடன் எழ,அடுத்த கணமே படீரென்று அவளின் தோளைப் பற்றி நீள்விரிக்கையில் சரித்திருந்தான் ஆடவன்.

அவள் அதிர்ச்சியுடன் அவனை ஏறிட,அவனோ மீசையை திருகியப்படி வேட்டியை மடித்து கட்டியவன் “உன்னை எப்படி மாமா சொல்ல வைக்கணும்னு எனக்கு தெரியும்டி பொண்டாட்டி” என விஷமத்துடன் புன்னகைத்தவாறே அவளின் மீது அசுர வேகத்தில் படர்ந்திருந்தான்.
 

முகிழ்மதி 101:


 

 

நீள்விரிக்கையில் அவள் சயனித்திருக்க,அவளின் மெல்லுடலை மஞ்சமாக்கி அவளின் மீது அவன் சயனித்திருந்தான்.

திடீரென்று கணவன் தன் மீது படர்ந்ததும் மிரண்ட மங்கை “எ…என்ன செய்யறீங்க?” என திக்கி திணறி விழி விரித்து கேட்க,

அவனோ அவளின் மீது அதிக எடைப்போடாமல் அதே சமயம் மென்மையாக அவளின் மீது படர்ந்தப்படி “இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியும் ஸ்டார்” என இதழ் பிரித்து சிரித்துக்கொண்டே குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

அவனது நெற்றி முத்தத்திற்கே அவளின் மேனி சிலிர்த்திட,நெஞ்சம் படபடத்தது.

உடனே விழிகள் தடுமாற அவனை ஏறிட்டவளிற்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்தது.

என்றும் இல்லாத வகையில் புதிதாய் அவனது விழிகளில் தெரிந்த அந்த உணர்வு அவளிற்குள் அச்சத்தை விளைவித்தன.

அதிலும்,முகத்திற்கு நேரெதிரே தெரிந்த அவனது தாடிகள் அடர்ந்த கன்னத்தை பார்த்தவளின் இதயம் குறுகுறுத்தது.

அவனின் நெருக்கமும் அணைப்பும் அவளிற்கு புதிதல்ல…

ஆனால் அன்று ஏனோ அவனது பார்வையில் தெரிந்த மோகமும் விரக தாபமும் அவளின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க செய்தன.

அதன் தாக்கம் தாளாமல் அவள் எச்சிலை கூட்டி அவனை பார்த்த வேளை “ஸ்டார் மாமா சொல்லுடி” என குழைவான குரலில் உரைத்தவாறு அவனை ஈர்த்த விழிகளில் முத்தமிட,

அவனது சூடான இதழ்முத்தம் அவளின் இதழில் பதிந்த மறுகணமே இதழிலிருந்து உஷ்ண பெருமூச்சு ஒன்று வெளியேறியது.

அப்போதும் ‘மாமா’ என அழைக்காமல் அழுத்தமாக இருந்த மனையாளின் பிடிவாதம் ஆடவனை தூண்டிவிட “சொல்லமாட்டே இல்லையாடி” என கோபத்துடன் கேட்டவனின் அதரங்கள் அவளின் முகமெல்லாம் ஊர்வலம் செல்ல ஆரம்பித்தன‌.

அவனது அதரங்கள் உரசியதினால் பாவையவளின் முகமெல்லாம் சூடேறி சிவக்க ஆரம்பித்திட,அத்துடன் அவனின் முரட்டு தாடியும் மீசையும் வேறு அவளின் மென் சரீரத்தை குத்தி காயப்படுத்தின.

அவனால் ஏற்படுத்தப்பட்ட அந்த வலி கூட அவளிற்கு அவஸ்தையாய் மாறிட,அதன் வீரியம் தாங்க முடியாமல் அணிந்திருந்த பச்சை நிற இரவு உடையை இறுக பற்றிக்கொண்டாள்.

அவனோ தன்னவளின் தவிப்பை அறிந்தவனாய் அவளின் முகமெங்கும் எச்சில் கொண்டு ஈரம் செய்தவனின் இதழ்கள் இறுதியாக அவளின் மச்சத்தில் வந்து இளைப்பாறியது‌.

அதில் அவளின் மேனி தூக்கிவாரிப்போட அவளின் முதுகுத்தண்டு ஒரு முறை வில்லாய் வளைந்து,மீண்டும் நீள்விரிக்கையில் படிந்தன.

அவளின் இதழ்கள் எதையோ எதிர்பார்த்து ஏங்கி துடிக்க,அவளிற்குள் உண்டான அதிர்வை சமாளிப்பதற்காக உடையை இன்னும் அதிகமாய் இறுகப் பற்றினாள்.

தன்னவளின் இந்த இன்பான அவஸ்தை அறிந்த ஆடவனின் இதழ்கள் மந்தகாசத்துடன் விரிந்திட “ஸ்டார் ஹக் மீ” என சரசமாக கட்டளையிட்டவனின் நாவோ அவளின் மச்சத்தை ருசிக்க தொடங்கியிருக்க,

அவனின் விழிகள் மட்டும் இமை மூடி இருந்தவளின் வெண்ணிற மதி முகத்தில் தோன்றிய உணர்வுகளை படிக்க ஆரம்பித்தன.

அவனது ஈரம் பொருந்திய நாவு அவளை தீண்டதும் “ம்” என தன்னை மீறி முனகியவளின் கரங்களோ இப்போது நீள்விரிக்கையை அழுந்த பற்றின‌.

அப்போதும் அவளின் கரங்கள் அவனை அணைக்க முற்படாததை கவனித்தவனிற்குள் சிறு கோபம்…

அவளை எப்படியாவது அவனை அணைத்துக் கொள்ள வைக்கும் வேகம் அவனுள் உருவாகிட ‘உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்டி’ என தாப கோபத்துடன் எண்ணிய ரத்தினவேலின் தேகமோ மெல்லிய மேனியுடையாளின் மீது அழுந்தப்பதிந்தது.

அதுவரை உரசியும் உரசாத நிலையில் அவளின் மேனியில் தீ மூட்டியவன் இப்போது மெய்யோடு மெய் கலந்து பாவையவளை மொத்தமாய் மோகத் தீயில் எரிய வைத்தான்.

அவனது சரீரம் அவளை ஆழ ஸ்பரிசித்த கணமே ஒரு விதிர் விதிர்ப்பு அவளுள் உண்டாகியது.

கூடவே,அவனின் உடல் பாரம் இதுவரை இல்லாத வகையிலான ஒரு போக உணர்வை அவளுள் கொடுக்க “மா..மா…” என உஷ்ண பெருமூச்சுடன் மொழிந்தவளின் கரமோ இப்போது மேலெழுந்து அவனது முதுகை வளைத்துக்கொண்டன.

உடனே அவனின் இதழில் நினைத்ததை சாதித்த வெற்றிப்புன்னகை ஒன்று தவழ்ந்தன.

ஆனால் அவனிற்கு அவை மட்டும் போதுமாகயில்லை…

தன்னுடைய ஸ்டாரை அப்படியே தனக்குள் உள்வாங்கி கொள்ள அவனின் காதல் மனம் வேட்கை கொண்டன.

முதலில் அவளை ‘மாமா’ என அழைக்க வைக்கவே அவன் அவளை நீள்விரிக்கையில் சரித்து தீண்டலை தொடங்கியிருந்தான்.

ஆயினும்,தன் முரட்டு தேகத்திற்கு அடியில் சிறையுண்டு இருந்தவளின் மென் ஸ்பரிசமும் அவளின் சிவந்த மேனியும் அவனின் உணர்வுகளை தூண்டியிருந்தன.

அதனால் ஒரு முடிவுடன் அவளின் மீது நன்றாக படர்ந்த ஆடவன் அவளின் செவியோரம் குனிந்து “ஸ்டார் நான் உன்னை ஒரு புது உலகத்திற்கு கூட்டிட்டு போகப்போறேன்…பயப்படாமல் என்னோடு நீ வர்றீயா?” என மென்மையான குரலில் கேட்டான்.

தன்னவளின் பூ மனம் அறிந்து அவளை வன்மையாய் ஆக்கிரமிக்க இஷ்டமின்றி தாம்பாத்தியத்தை மென்மையாய் யாசித்து நின்றான் அந்த மூர்க்கன்.

இதுவரை யாரிடமும் எதற்காகவும் அவன் தயங்கியதில்லை.

தாம் நினைப்பதை மட்டும் தங்கு தடையின்றி பேசுபவன் அவன்…அனைவரையும் தன் விரல் நுனியில் அடக்கியாளும் வலிமை கொண்ட தீரன்‌.

இன்று அவளை முழுமையாய் தனக்குள் சுருட்டிக்கொள்ளும் அதிகாரம் இருந்தும்,அவளின் மீதிருந்த நேசம் அவனை நிதானிக்க வைத்திருந்தது.

அத்தோடு முகிழ்மதிக்கு சிகிச்சையளித்த மனநல மருத்துவரும் கூட “அவங்க மனசுலே இருந்த அழுத்தமெல்லாம் வெளிய போனதாலே அவங்களோட மனநிலையில் நல்லாவே மாற்றம் தெரியுது மிஸ்டர் ரத்தினவேல்…உங்க அன்பு அவங்களை இந்த அளவு மாற்றியிருக்குன்னா நீங்க இதுக்கு மேலே தயங்க வேண்டிய அவசியமில்லை…நீங்க முதல்ல புரோசீட் பண்ணுங்க…அப்போ தான் கதவுக்கு பின்னாடி இருக்கிறது என்னனு நமக்கு தெரியும்…உடலுறவை பத்தின அவங்களோட எண்ணத்தை தெரிஞ்சு அதுக்கு தகுந்த மாதிரி ட்ரீட் பண்ண முடியும்” என்று சொல்லியிருந்தார்.

பல தடவை அவளுடன் சந்தித்து உரையாடியதற்கு பிறகே மருத்துவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்க,அவனிற்குள் உவகை ஊற்று பெருகின.

இது நாள் வரை அவளின் மனநிலையை கருத்தில் கொண்டே அவன் விலகியிருந்தான்.

மருத்துவரே அவனிற்கு அனுமதி வழங்கியதற்கு பிறகு அவளை அடக்கியாள அவனிற்கு தடைகள் ஏதும் இருக்கவில்லை.

அதற்காக அவளின் மீது ஒரேயடியாக பாய்ந்து அவளை பயமுறுத்த அவனிற்கு விருப்பமில்லை‌.

தாம்பாத்தியத்தின் ஒவ்வொரு சுவையையும் அவள் ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினான்.

பாவையவளிற்கு அவன் கேட்டதின் பொருள் புரியவில்லை என்றாலும் அவன் தன்னிடம் ஒன்றை கேட்டு அவளால் மறுக்க முடியுமா என்ன?

ஏனெனில்,அவன் அவளது வாழ்வின் தேவதை…அதனால் அவன் கேட்டதற்கு தன்னை மீறி “உம்” என கலவிப்பாடம் கற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தாள்.

உடனடியாக அவளின் சம்மதத்தில் அவன் ஆகாயத்தை தன் வசம் கொண்ட மகிழ்ச்சியெல்லாம் அடையவில்லை.

தன்னவளை பற்றி அவன் நன்கு அறிவான் என்பதால் மெது மெதுவாக அவளில் முன்னேற ஆரம்பித்தான்‌.

“தேங்க்ஸ்டி” என அவளின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தவனின் தாடியும் மீசையும் குத்தியதில் அவள் “ஸ்ஆ” என வலியில் முனகியிருந்தாள்.

உடனே தன் முகத்தை அவளிடமிருந்து அகற்றியவன் ‘உன் முரட்டுத்தனத்தை தாங்கற அளவு அவளுக்கு சக்தியில்லை…சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணு பூபதி’ என தனக்கு தானே வலியுறுத்திய ஆடவனின் அதரங்கள் அவளின் இதழில் கவி எழுத ஆயுத்தமாகின.

அவளின் இதழில் நீண்ட நெடிய முத்தமிட்டவனின் அதரங்கள் அவளிடமிருந்த தேனமுதம் மொத்தத்தையும் பருகத்தொடங்கியிருந்தான்.

ஆனால் அவனே அதிசயக்கதக்க வகையில் அவனது மிதமான இதழ் அசைவுகளுக்கு ஏற்ப அவளின் இதழ்களும் அசைய ஆரம்பித்திருந்தன.

முதல் எல்லாம் அவன் முத்தமிட்டாள்…அதை பெற்றுக்கொள்வாள்…அவ்வளவே?

இன்றோ அவனோடு இணைந்து அவளும் இயங்கத் தொடங்கியதும் அவனிற்குள் அப்படியொரு ஆச்சரியம்!

கற்றுக்கொடுத்த பாடம் வீண்போகவில்லை என மகிழ்ச்சியுற்றான்.

அவளின் ஒத்துழைப்பில் அவனின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தாலும் அவன் அவளிடம் மென்மையை மட்டுமே கையாண்டான்.

அவளின் இதழில் நிதானமாக முத்தமிட்டு முடித்த ஆடவனின் கரங்களோ அவளின் இரவு உடைக்கு மேலாக அலைப்பாய்ந்தன.

காரிகையின் உடலில் எல்லை மீறிய அவனது கரங்களின் அழுத்தத்தில் அவளின் மேனி மோகத்தில் துவண்டன.

அவனது சிறு தொடுகையிலே தன்னிலை இழக்கும் பெண்ணவளிற்கு இன்று காதலை மீறிய காமத்தை உணர்த்தியதும்,அவனை அணைத்திருந்தவளின் கரம் அவனின் முதுகில் அழுத்தத்தை கொடுத்தன.

இதழில் முத்தமிட்டவனின் இதழ்கள் மெதுவாக கீழிறங்கி அவளின் கழுத்து வளைவில் சஞ்சாரம் செல்ல,அவளிற்கோ உலகத்தையே மறந்த ஒரு உணர்வு!

கழுத்து வளைவில் தன் இதழ் கொண்டு ஈரம் செய்தவனின் கரமோ அவளிற்கு அடியில் தட்டுப்பட்ட தனது அலைப்பேசியை மெதுவாக உருவி எடுத்திருந்தன‌.

அதற்கும் அவளிடமிருந்து உஷ்ணத்துடன் கூடிய பெருமூச்சு ஒன்று வெளியேறிட,அவனோ சிரித்தவாறே அலைப்பேசியை எட்டி அருகிலிருந்த அலங்கார மேசையின் மீது வைத்துவிட்டு தனது பணியை தொடர்ந்தான்.

அவளின் கழுத்து வளைவில் முத்தங்களை வாரி வழங்கிய ஆடவனின் இதழ்கள் சிறிது சிறிதாக அவளின் நெஞ்சுக்குழியை அடைந்தன.

தனது நெஞ்சில் புதிதாய் உணர்ந்த வெப்ப மூச்சுக்காற்றில் அவளின் அடிவயிறு நெருப்பாய் தகிக்க,

அவளுள் பொங்கிய அந்த உணர்வினை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பற்கள் கொண்டு அவளது இரவு உடையின் பூட்டியை கீழிறக்கியிருந்தான்.

அதைக்கூட உணராத ஒரு நிலையில் சிந்தை மயங்கி வேறொரு உலகத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தவாறே அவளின் நெஞ்சத்தில் அவன் முத்தம் பதித்தான்‌.

முத்தம் மட்டுமில்லை அவளது பெண்மையின் மென்மையை பரிசோதிக்கும் வகையில் அவனது இதழ்கள் சற்றே அழுத்தமாக அவ்விடத்தில் பதிய,

அவனது உஷ்ணமேறிய அதரம் அவளின் வெற்று ஸ்பரிசத்தில் அழுத்தத்தை கொடுத்ததற்கு பிறகே அவளிற்கு சிறிது சிறிதாக நடப்பு புரிய ஆரம்பித்தன.

அதனால் படீரென்று விழி திறந்த மங்கை தன் நெஞ்சில் முகம் புதைந்திருந்த கணவனின் செயலை கண்டு அச்சத்தில் நடுங்க தொடங்கினாள்.

அவளிற்குள் பய உணர்வுகள் தோன்ற தொடங்கினாலே மூச்சிறைப்பும் பின்னோடு வந்துவிடுமோ?

அவளோ அச்சத்தோடு “நகருங்க” என தவிப்புடன் அவனை தன்னிலிருந்து விலக்க முயல,அவளின் எதிர்ப்பை அவன் முன்பே உணர்ந்திருந்தான்.

சிறு வயதில் அவளிற்கு உண்டான பாதிப்பு அத்தகைய ஆழமானது.

அதனால் அனைத்திற்கும் தயாராகியிருந்த ரத்தினவேல் அவளை சமாளிக்கும் வித்தையும் அறிந்து வைத்திருந்தான்.

தன்னை விலக்க போராடிய மனையாளின் கரத்தை மெதுவாக பற்றி விழி உயர்த்தி அவளை ஏறிட்டான்.

அவளின் முகம் வெளிறிப்போய் மூச்சிறைக்க விழிகளில் கண்ணீர் நிறைய பார்த்தவளின் முகத்தில் அப்படியொரு அச்சம்!

ஒரு கணவனின் தொடுகையை கூட இயல்பாக ஏற்கும் மறுக்கும் மனையாளின் செயலை அறிந்து அவனிற்கு மனம் வலித்தது.

இதற்கெல்லாம் காரணமான விஜயலட்சுமி மற்றும் ரஞ்சனை கொன்று புதைக்க வேண்டும் என்ற வெறி உருவாகியது.

தற்சமயம் அவனின் பழிவெறியை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

அவளின் சில்லிட்டு இருந்த கரத்தை ஒரு கரத்தால் பற்றிய ரத்தினவேல் மற்றொரு கரத்தால் அவளின் நெஞ்சை நீவியப்படி “ஸ்டார் ரிலாக்ஸ்…இங்க பாரு…என் முகத்தை பாரு” என பூவை விட மிருதுவான குரலில் அவளிடம் அவன் பேசியதும்,

சிறிது அச்சம் நீங்க அவனை மெல்ல ஏறிட்டவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் “எதுக்குடி பயப்படறே?நான் உனக்கு முன்னாடியே இதைப்பத்தியெல்லாம் சொல்லியிருக்கேனில்லை…அப்புறம் எதுக்கு பயம்?” என இதமாக கேட்டவாறே அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

அவளோ அவனையே கலக்கத்துடன் பார்த்திருக்கவும் “நான் பண்ணதை பார்த்து பயந்திட்டியா?” என சிறு பிள்ளையிடம் வினவுவது போல் பரிவுடன் வினவ,

அவளும் இதழ்கடித்து “ம்” என தலையாட்டினாள்.

அதில் மென்னகை பூத்த ஆடவன் “முதல் தடவையில்லை அதான்…பட் கவலைப்படாதே…உன் மாமா உன்னை எந்த வகையிலும் காயப்படுத்த மாட்டேன்?” என மயிலிறகால் வருடுவது போல் உரைக்க,

அதற்கும் அவளிடமிருந்து “ம்” என முனகலே பதிலாக வந்தது.

அவளின் முகம் சிறிது சிறிதாக சகஜமாகியதும் அவளின் மூச்சிறைப்பும் குறையத் தொடங்கின.

அதிலிருந்து அவளின் பயம் அகல தொடங்கியதை அறிந்து நிம்மதியுற்ற ரத்தினவேல் “ஸ்டார் முதல்ல கண்ணை மூடி நான் சொல்லறதை மட்டும் கேளு” என்றவன்,

தொண்டையை செருமி “ஸ்டார் உனக்கு முன்னாடியே இதைப்பத்தி எல்லாம் நான் சொல்லியிருக்கேனில்லை…நீ பயப்படாமல் நான் சொன்னதையெல்லாம் நினைவுப்படுத்தி பாரு…ஜஸ்ட் நீ என்னை மட்டும் ஃபீல் பண்ணு…வேற எதை பத்தியும் யோசிக்காதே…முதல்ல பயமா தான் இருக்கும்…போக போக யூ வில் லைக் இட்…” என வார்த்தைக்கு வலிக்குமோ என்னும் வகையில் வெளிவந்தவனின் வசீகர குரலுக்கு மயங்கி அவளின் விழிகள் தானாக மூடிக்கொள்ள,

“நான் பண்ணறது உனக்கு பிடிக்கலைனா…பயப்படாமல் மாமாகிட்ட சொல்லுடி…நான் அதுக்கு மேலே எதுவும் செய்யலை ஓகே” என கன்னம் வருடி சொல்ல,

அவளும் ‘சரி’ என தலையாட்ட,அவன் விட்ட இடத்திலிருந்து அவளின் மென்மையை உணரும் பணியை மேற்கொண்டான்.

அவளின் மேனியில் இதழ் பட்டதும் முதலில் அவளிற்குள் நடுக்கம் விரவினாலும்,அவனது மிருதுவான தொடுகையில் அவளின் மேனி சிறிது சிறிதாக குழைய ஆரம்பித்தன.

அவளிற்கு அவனின் தீண்டலோ செய்கையோ பிடிக்காமல் இல்லை.

முதல் தடவை என்பதால் அவள் சற்று மிரண்டு விட்டாள்.

அவளை முதல் முறை அணைக்கும் போது அப்படி தானே அஞ்சினாள்.

அதனால் தன்னவளின் அச்சமறிந்து அவன் தணிவாக செயல்பட்டான்.

நேரங்கள் கடக்கையில் அவனின் செய்கையை அறிந்தவளின் இதழ் வழியே மெல்லியதாக முனகல் வெளிவர,அவளின் கரங்களோ அவனின் பிடரி மயிர்களுக்குள் கைவிட்டு அவனை தன்னோடு சேர்த்து அணைத்தன.

தன்னுடைய ஸ்பரிசத்தை அவளும் ரசிக்க தொடங்கிவிட்டது புரிய,ஆடவனின் மனம் உற்சாகமடைந்தது.

தன் அருகாமையை அவள் ஏற்றுக்கொண்டது புரிய அவன் அவளை பூவை விட மென்மையாக கையாள தொடங்கினான்.

நிமிடத்திற்கு நிமிடம் அவளின் முகத்தில் மாற்றங்கள் தோன்றி மறைந்தன.

அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் அவளிற்கு அச்சமும் நாணமும் மாறி மாறி தோன்றிட,அவளின் பயத்தையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு அவளை ஆளும் வித்தையறிந்திருந்தான் மன்னவன்.

அவர்களது காதல் களியாட்டத்திற்கு நீள்விரிக்கை இடைஞ்சலாக இருக்க, அவர்களின் கலவி பாடம் கட்டிலிற்கு மாற்றப்பட்டது.

தாம்பாத்தியம் என்பது சுகமும் வலியும் நிறைந்தது என்பார்கள்.

வலியை கூட நேசமாய் மாற்றி அதனை சுகித்தால் மட்டுமே இனிக்கும்.

இல்லையென்றால்,கட்டில் ஒரு முள் படுக்கை போல் தான்!

இப்போது அவளை கையாளுவது கயிற்றை கட்டி அதன் மேல் நடப்பது போலே தான் அவனிற்கு!

பயத்திற்கும் விருப்பிற்கும் இடையே அவளின் மேனியில் அவன் முத்தெடுக்க,அவளிற்கோ அனைத்தும் புதிது!

சாதாரண பெண்களிற்கே முதல் முறை உடலறவில் அச்சங்கள் நிறைந்திருக்கும்.

முகிழ்மதியை போன்ற கசப்பான அனுபவங்களை சந்தித்து வளர்த்த பெண்களுக்கு சொல்லவே தேவையில்லை.

தன் ஆடைகளை துறந்து அவளின் ஆடைகளை அவன் முழுமையாக அகற்றியதும் அவளிற்குள் திகில் சூழ,முன்பு போலவே அவளிடம் தாம்பாத்தியத்தை பற்றி வகுப்பெடுத்து அவளிற்குள் புதைந்துப்போக ஆரம்பித்தான்.

அவளின் ஆடைகளை அகற்றியதும் வெளிப்பட்ட அழகில் காளையவனே சொக்கிப்போனான்.

இதுவரை எதை கண்டும் பிரம்மிக்காதவன்..
அவளின் மேனியில் கொட்டி கிடந்த அற்புதங்களை கண்டு பிரம்மித்தான்.

அட..அட எத்துணை எத்துணை அதிசயங்கள் அவளிடம் கொட்டி கிடக்கின்றன.

கண் முன் விரிந்த சொர்க்கத்திலிருந்து அவனால் வெளி வரவே முடியவில்லை…

வேறு வழியில்லை…இப்படியே அவளின் அங்கங்களில் தவமிருக்கவே அவன் ஆண்மை விரும்பின.

அதனால் தாபம் முழுவதையும் அவளுள் கொட்டி கவிழ்த்தான் அவன்.

தாம்பாத்திய உறவில் அவளிற்கும் வலிகள் இல்லாமல் இல்லை…

அவளின் வலிகளையும் அச்சங்களையும் தன் முத்தத்தின் வழியாகவும் இதமான வருடலின் மூலமாகவும் அவளை அவன் ஆட்கொள்ள,சிறிது சிறிதாக அவன் அன்பில் அடைக்கலமானாள்.

சில நேரங்களில் அவள் இதழ்கள் அவளையும் மீறி “மா..மா” என பிதற்றவும் தவறவில்லை.

அவள் அவ்வாறு அழைக்கும் போதெல்லாம் அவனின் உணர்ச்சிகள் கரையை அடித்துக்கொண்டு செல்ல பொங்கி எழும்.

இருப்பினும்,அவளை பயமுறுத்தக்கூடாது என அடக்கியிருந்தான்.

ஒவ்வொரு முறை முன்னேறும் போதும் அவனின் விழிகள் அவளின் முகத்தை மட்டுமே அவதானித்திருந்தன.

அவளின் விழியில் மிரட்சி இருந்ததே ஒழிய,அவனை நிச்சலனத்துடன் மறுக்கவில்லை.

முதலில் வலியை கொடுத்த அவனின் ஆண்மை நேரம் செல்ல செல்ல அவளையும் விழிகள் சொருக தாபக்கடலில் மூழ்கடித்தன.

இதில் அவனை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது அவள் அவனை அதன்பிறகு விலக்கவில்லை.

அவள் அவனை ஏற்றுக்கொண்ட போதும் அவன் அவளிடம் வன்மையை மேற்கொள்ள வில்லை.

ஏனெனில்,தன்னவளிற்கு தாம்பாத்தியம் என்றால் அவள் அனுபவித்த சுகங்களும் சந்தோஷங்களும் மட்டுமே நினைவில் எழ வேண்டும்…

அவளிற்கு எவ்வித கசப்பான உணர்வுகளையும் கொடுத்துவிட கூடாது என விரும்பியது,அவளை உயிராய் நேசிக்கும் மன்னவனின் மனது!

அவனிற்குள் கட்டுப்படுத்த முடியாத தாப உணர்வுகள் அலைமோதினாலும் அவளிற்காக விட்டுக்கொடுத்தான்.

அவளை தட்டிக்கொடுத்து…வருடி…நேசத்தைகொட்டி மென்மை கலந்த ஆலங்கனத்துடன் ஒரு அழகிய காதல் சங்கமத்தை அங்கு அரங்கேறியிருந்தான் ஆடவன்‌.

தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு தன்னவளிற்கு தாம்பாத்தியத்தில் உச்சத்தை கொடுத்து அவளிடமிருந்து மூச்சிறைக்க விலகிப்படுத்தான்.

ஒரு முறை உறவு கொண்டதற்கே அவளின் பூ உடல் வாடிய கொடியென வதங்கியிருந்தன‌.

கூடல் கொண்டு முடித்துவிட்டு அவளின் முகத்தை அவன் ஏறிட,அவளோ தாங்கள் இருக்கும் நிலை கண்டு ‘ஐய்யோ’ என வெட்கம் கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள்.

அவளின் சிறு பிள்ளை செயலை பார்த்து இதழ்பிரித்து புன்னகைத்த கண்ணாளன் “ஸ்டார் ஆர் யூ ஓகே?” என மிருதுவாக அவளின் களைந்த கூந்தலை வருடியப்படி கேட்க,

அவளோ முகம் சிவக்க வாயிலிருந்து வார்த்தை வராமல் “ம்” என தலையாட்ட,

அதன்பிறகே அவனின் தவித்த மனம் அமைதியுற “உனக்கு பிடிச்சிருக்கா?” என அடுத்த கேள்வியை எழுப்பினான்.

அவளின் முகம் வழியே அவளின் எண்ணங்கள் அறிந்தாலும் அவனிற்குள் ஒரு அச்சம் இருக்கவே செய்தன.

தாம் அவளிடம் வலுக்கட்டாயமாக நடந்துக்கொண்டமோ என தவிப்பு உள்ளூர இருக்கவே கேட்டிருந்தான்.

அவளிற்கோ அவனின் ஒவ்வொரு பேச்சும் பூமிக்குள் புதைந்து கொள்ளும் அளவு வெட்கத்தை கொடுத்தன.

அதிலும் வெற்று சரீரங்கள் உரசிய நிலையில் இருந்துக்கொண்டு அவன் அவ்வாறு கேட்டது அவளிற்கே அபத்தமாக இருக்க ‘அச்சோ எப்படி இருந்திட்டு இதை கேட்கிறாரு?’ என பேச முடியாமல் இதழ்கடிக்க,

கடித்த இதழ்களை அவனுள் உள்வாங்கிக்கொள்ள அவனின் வேட்கை துடித்தாலும் சிகையை அழுந்தக்கோதி “சொல்லுடி” என அவளின் சிவந்த கன்னம் கிள்ளினான்.

அவளிற்குள் படபடப்பு உண்டாகிட அவளின் இமைகளுக்குள் கருவிழிகள் அங்குமிங்கும் உருண்டோடின.

அதைப்பார்த்து “ஸ்டார் ஆன்சர் மீ?எனக்கு உன் பதில் வேணும்டி” என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை விழி திறக்க செய்தன.

அவனின் முகத்தில் மோகத்தை மீறிய ஏதோ ஒரு தவிப்பு இருப்பது போல் தோன்ற “ஹும்” என தன் வெட்கம் துறந்து பதில் கூறினாள்.

சில வினாடிகளுக்கு மேல் அவனின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவள் படீரென இமைத்தாழ்த்த “தேங்க்ஸ்” என மெல்லியதாய் புன்னகைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

அதில் அவளின் மேனி சிலிர்ப்பதை அறிந்து தங்களுக்கு இடையே நடந்த தாம்பாத்தியத்தில் எவ்வித வெறுப்பும் அச்சமும் இல்லை என்று நிம்மதியுற்றான்.

அதனால் அவளை இழுத்து தன் நெஞ்சின் மேல் போட்டுக்கொண்டு அவன் விழி மூடி படுக்க, அவளிற்கோ ஆடையின்றி இருவரும் அணைத்திருப்பது கூச்சத்தை கொடுக்க அவனிடமிருந்து விலக முயன்றாள்‌.

அவளின் செயல் அறிந்து பட்டென்று விழி திறந்த ரத்தினவேல் “என்ன முகிழ்?” என புருவம் உயர்த்தி கேட்க,

அவளோ படபடத்த இமைகளுடன் “டிரஸ் போடலையே” என இதழ்கடித்து கூற,

அவனோ அவளை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்து 
“இதுக்கு மேலே என்கிட்ட மறைக்க உன்கிட்டயும் ஒண்ணுமில்லை…உன்கிட்ட மறைக்க என்கிட்டயும் எதுவுமில்லை…வாடி வந்து படு” என அவளை அள்ளியெடுத்து தனக்குள் பொத்திக்கொண்டான்.

இருவரின் வெற்று தேகம் உரச உரச அவளிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

ஒரு வித அவஸ்தையுடனே அவனின் நெஞ்சில் படுத்திருந்த பாவையவளிற்கு ஒரு கட்டத்தில் உடலுறவினால் உண்டான களைப்பில் உறக்கம் வந்திருந்தது.

ஆனால் ஆடவனிற்கோ அவளின் ஸ்பரிசம்,ஆறி அமிழ்ந்த உணர்வுகளை கிளர்ந்தெழ செய்தன.

‘பேசாமல் டிரஸை போட்டுட்டே படுத்திருக்கலாமோ?’ என அவளின் ஆடைகளற்ற மேனியை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான் அவன்.

அவளின் மீது அவன் வைத்திருக்கும் ஆசை ஒரு முறை கூடலில் அடங்கிவிட கூடியதல்ல…

அவனது உணர்வு கட்டாற்று வெள்ளம் போன்றது…

ஆனால் தன்னவளின் உடல் நிலை கருதி அவளிற்காக தன் மோகத்தை தியாகம் செய்தான்‌.

எதிர்காலத்தில் தன் தேவைகள் மொத்தத்தையும் மனையாள் தீர்த்து வைப்பாள் என்ற நம்பிக்கை அவனிற்குள் இருக்க அவளின் நெற்றியில் ஒரு முறை முத்தமிட்டு இதழில் பூத்த புன்னகையுடன் நித்திரையைத் தழுவினான்.
 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top