முகிழ்மதி 125(2)

முகிழ்மதி 125(2)

உறங்குவதற்கு ஆயுத்தமாகி கொண்டிருந்த முகிழ்மதியோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுந்தாள்‌.

அதேநேரம் குளியலறையிலிருந்து தலையை துவட்டியப்படி வெளிவந்த ரத்தினவேலோ உறங்குவதாக கூறிய மனைவி எழுந்து அமர்ந்திருப்பதை கண்டு நெற்றி சுருக்கினான்.

“தூங்கலையா முகிழ்?” என விசாரித்தப்படியே அவளை நெருங்க,

அவளின் விழிகள் அலைப்புறுதலுடன் சுழன்றிட “இல்லைங்க…ஏதோ சத்தம் கேட்டுச்சு…அதான்” என்றாள் ஒரு வித படபடப்புடன்…

அதற்குள் அவளருகே வந்திருந்த ரத்தினவேல் ‌“என்ன சத்தம்?எனக்கு ஒண்ணும் கேட்கலையே?” என நெற்றிச் சுருக்கினான்.

“தெரியலைங்க…பக்கத்து ரூமிலே இருந்து வந்த மாதிரி இருக்கு..” என பக்கத்து அறையை நோக்கி கை காட்டினாள்.

“ஜித்து ரூம்லையா?” என கேட்டவன் பின்பு அவனாகவே “ஏதாவது பொருள் கீழே விழுந்திருக்கும்…அந்த சத்தம் தான் கேட்டிருக்கும்…விடுடி” என தன்னவளை சமாதானம் செய்தான்.

அதைக்கேட்டு “ம்” என தலையாட்டியவளின் விழிகள் கணவனது சிகையில் ஈரம் படர்ந்திருப்பதைக் கண்டிருக்க “இந்நேரத்துக்கு எதுக்கு மாமா தலைக்குளிச்சீங்க?சளிப்பிடிக்கப்போகுது” என அக்கறையாக கடிந்தப்படியே அவனிடமிருந்து பூந்துவாலையை வாங்கி தலையைத் துவட்ட ஆரம்பித்தாள்.

அவளாகவே அவனில் உரிமையெடுத்து நடந்துக்கொண்ட விதம் ஆடவனை கவர்ந்திழுக்க,தன்னவளை காதலுடன் நோக்கினான்.

அவனது சிகையைத் துடைப்பதற்கு உயரம் எட்டாததால் கணவனை கட்டிலில் அமர வைத்துவிட்டு அவள் எழுந்து நின்று துவட்டினாள்.

அவனோ நீல நிற இரவு உடையில் அங்கங்கள் அசைந்தாட தன் சிகை துவட்டிய மனையாளின் எழில் வளைவுகளை கண்ணாற ரசித்துக் கொண்டிருந்தான்.

உறங்க ஆயுத்தமாகி இருந்ததால் அவன் அணிவித்த தங்க தாலி அவளின் இரவு உடைக்கு மேலாக வீற்றிருந்தது.

அவள் அசைவுகளுக்கு ஏற்ப அவையும் அவனது முகத்தில் உரசிச்சென்று உஷ்ணத்தை அதிகரித்துக் கொண்டிருக்க,சட்டென அவளின் கரம் பற்றி தடுத்த ரத்தினவேல் “இப்போ உனக்கு தூக்கம் வருதா ஸ்டார்?” என மோகத்துடன் வினவினான்.

அவனது விழிகளில் தெரிந்த காமத்தை பார்த்தவளின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க “இல்லை மாமா…” என தயக்கத்துடன் தலையாட்டினாள்.

“எனக்கும் தூக்கம் வரலை…ஆர்ட் ரூம் போகலாமா?” என அவளின் முகத்தை உற்றுநோக்கியப்படி அவன் கேட்டதும்,அவளின் முகம் அன்றொரு நாள் நடந்த நிகழ்வை எண்ணி குப்பென்று சிவந்து விட்டது.

அதனால் இமைகள் படபடக்க பதில் கூற முடியாமல் தவித்து இதழ்கடித்த இல்லாளின் வெட்கத்தை கண்டு இதழ்ப்பிரித்து புன்னகைத்த ஆடவன் “என்னடி போகலாமா?” என்றவாறு அவளின் இடைப்பற்றி அவனை நோக்கி இழுக்க,

இப்போது அவளின் வயிற்றுப்பகுதி அவன் முகத்திற்கு நேரே வந்துவிட,அவனது தாடை ரோமம் அவளின் ஆடையை மீறி இடையை உரசியதில் அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

“எதுக்கு மாமா?” என இதழ்கள் இனிய குறுகுறுப்பில் துடிக்க கேட்டவளின் இடையை தன்னோடு சேர்த்து அழுத்தியப்படி எழுந்து நின்ற ரத்தினவேல் “நீ தானேடி சிலை செய்ய கத்து தர்ற சொன்னே?கத்துக்கொடுக்க நான் ரெடி…போகலாமா?” என விஷமத்துடன் புருவம் உயர்த்தி வினவ,

அவனது விழிகளில் தெரிந்த காதல் மொழியில் ‘வேணாம்’ என்பது போல் தலையாட்டியவளின் மனமோ அவனிற்கு உடன்படும்படி ரகசியமாய் வலியுறுத்தின…

அதனால் இமைகள் படபடக்க கையிலிருந்த துவாலையைப் பிடித்து கசக்கியவளை புன்சிரிப்புடன் நோக்கிய ரத்தினவேல் “வா” என அவளை அந்த கலைக்கூடத்திற்கு அழைத்து சென்றான்.

இல்லை…இல்லை…ஐம்பது கிலோ எடைக் கொண்ட அழகு சிற்பத்தை அலேக்காக தூக்கிச் சென்றான்.

அவனது செயலில் ஒரு கணம் திகைத்த மனையாளோ பின்பு நாணத்துடன் அவனது கழுத்தை கட்டிக்கொண்டாள்.

ஆனால் அவளின் எண்ணத்திற்கு மாறாக அவளிற்கு சிலை வடிப்பது தொடர்பாக பாடம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான் ரத்தினவேல்.

அதில் முதலில் வியந்து புருவம் உயர்த்திய முகிழ்மதி,பின்பு சிறந்த மாணவியாய் தனது ஆசானுக்கு அடிப்பணிய ஆரம்பித்தாள்.

ஏற்கனவே அவளிற்கு சிற்பக்கலையின் மீது அலாதி விருப்பம் இருப்பதால்,தன்னவனது பாடத்தை ஆர்வமாக கற்றுக்கொண்டாள்.

ஒரு மணி நேரம் அவளிற்கான ஆசிரியராக பாடம் கற்பித்த ரத்தினவேல் திடீரென்று கணவனின் அவதாரம் எடுத்தான்.

அவளிற்கு பயிற்சிக்கொடுத்து தள்ள நின்று அவளின் செயலை கவனிக்க ஆரம்பித்தவனின் பார்வை சட்டென மாறின.

கண்கள் இரண்டும் பெரிதாக விரிய…
இதழ்களை அவ்வப்போது ஆர்வத்துடன் ஈரம் செய்தப்படி..
அவளின் பொற்கரங்கள் களிமண்ணில் நர்த்தனமாட சிலை வடிக்க தொடங்கிய மனையாளை அணுஅணுவாய் அவனது விழிகள் ரசித்து ருசித்தன.

அவள் அணிந்திருந்த இரவு உடை முழுவதும் களிமண்ணின் கோலங்களால் நிரம்பியிருக்க,அத்தோடு அவளின் கன்னம்,கை,கழுத்து,விரல்கள் அனைத்திலும் களிமண்ணின் அலங்காரங்கள்!

அதை யாவும் பொருட்படுத்தாமல் அதனோடு கலவி புரிந்த மனையாளோடு ஆடவனது தேகம் காதல் புரிந்திட துடிக்க,சட்டென அவள் எதிர்பாராத வேளை அவளின் மெல்லிய இடைப்பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

இப்போது மண்ணோடு உறவாடிய அவளின் அழகிய கரங்கள் மணாளனின் ஆடையில் அச்சாரம் பதிக்கத் தொடங்கின.

அதேப்போல் மண்ணால் நிறைந்த ஆடவனின் கரம் அவளது அங்க வளைவுகளின் ஆழத்தை அளக்க ஆரம்பித்திட,அவனது இதழென்னும் தூரிகையோ அவளின் இதழில் ஓவியம் தீட்டி சிவக்க வைத்தன.

முதலில் அவனது அதிரடியில் திகைத்து விழி விரித்த மங்கையவள் பின்பு சிறிது சிறிதாக அவனிற்கு உடன்பட ஆரம்பித்தாள்.

அவனின் கரங்கள் அவளின் ஆடையில் எல்லை மீற தொடங்கவும்,அவளோ விழிகள் சொருகிட “மா…மா கையெல்லாம் மண்ணு…குளிச்சிட்டு…” என திக்கி திணறி அவள் பேசியதை அவன் கேட்பதாகவே இல்லை.

அவனது கரங்களோ தனது அழகோவியத்திற்கு சிலையாக உயிர்கொடுக்கும் மோட்சப் பணியில் ஈடுப்பட்டிருந்தது.

சில நிமிடங்களில் இருவரது ஆடைகளும் விடைப்பெற்று,நிர்வாண சிற்பங்கள் இரண்டு உயிர்பெற்று அவ்வறையில் கலந்துறவாடின.

இறுதியில் மீண்டும் ஒரு முறை அவனது கலைக்கூடத்தில் காதல் கூடல் அரங்கேறியிருந்தன.

******

அடுத்த நாள் காலை…

காலையில் எழுந்ததும் முதல் பணியாய் தனது பாட்டியை சந்திக்க ஆவேசமாக சென்றான் ஜித்தேந்திரன்.

அவரின் அறைக்குள் நுழைந்ததும் “பாட்டி நீங்க ரொம்ப மோசம்?நான் உங்களை எவ்வளவு நம்பனேன்…எதுக்கு நீங்க மூன்கிட்ட எல்லாத்தையும் சொன்னீங்க?” என முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு படபடவென பொரிய,

அவரோ அப்போது தான் குளித்துவிட்டு தயாராகி வெளியே வந்திருந்தார்.

தன்னிடம் பொரிந்து தள்ளிய பேரனை ஒரு பெருமூச்சுடன் நோக்கியவர் “முதல்ல உட்காருடா சின்னவனே” என்று அவனை அழைக்க,

அவனோ “போங்க பாட்டி” என கோபமாக முறுக்கிக்கொள்ள,

“உட்காருனா உட்காருடா…வாடா” என அவர் சற்று குரல் உயர்த்தியதும் அதற்கு கட்டுப்பட்டு அவர் அருகே நீள்விரிக்கையில் அமர்ந்தான்.

அவன் அமர்ந்ததும் “உனக்கு என்னடா பிரச்சனை?உன் பொண்டாட்டிகிட்ட இந்த விஷயத்தை சொன்னதுக்கா மூஞ்சிய தூக்கி வைச்சிருக்கே” என எள்ளலாக அவர் கேட்டதும்,

சட்டென தலையுயர்த்தி அவரை முறைத்தான் சிறிய பேரன்.

அதையெல்லாம் சட்டை செய்யாத பெரியவரோ “இன்னும் எத்தனை நாளைக்குடா அந்த பொண்ணுக்கிட்ட உண்மைய மறைக்கப்போறே நீ?இன்னைக்கு இல்லைனா கூட நாளைக்கு வேற யாரோ மூலமா அது தெரியவந்தால் அது உன் வாழ்க்கைக்கு தான் சிக்கலா வந்து முடியும்.அந்த மாதிரி பின்னாடி எதுவும் நடக்கக்கூடாதுனு தான் பக்குவமா அவகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்” என சந்திரமதியிடம் அவர் நிஜத்தை வெளிப்படுத்தியதற்கான காரணத்தை விளக்கினார்.

தன்னை வேண்டுமென்றே மாட்டிவிட்டாரோ என மனச்சுணக்கத்துடன் இருந்த ஜித்துவோ இப்போது அவர் கூறுவதில் இருந்த நியாயம் உணர்ந்து அமைதியாகிவிட்டான்.

அவன் நிம்மதியுற்றதை அறிந்த காஞ்சனா மாலாவோ அவனை
சீண்டும் விதமாக நமுட்டுச்சிரிப்புடன் “ஏன்டா பேராண்டி…அடி ரொம்ப பலமோ?அதான் என் மேலே காண்டுலே இருக்கியா என்ன?” என கேலியாக அவர் கேட்டதும்,

படீரென்று அவனது மனக்கண்ணில் நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்தில் வந்துச் செல்ல,அதில் அவனது முகம் நாணத்தில் சிவந்துவிட்டன.

அதனால் “அச்சோ போங்க பாட்டி…அதெல்லாம் சொல்லமாட்டேன்” என சலுகையாய் அவரின் தோளில் சாய்ந்து கொஞ்சி விட்டு “சாப்பிட வாங்க பாட்டி” என்றவன்,கனவில் நடப்பவன் போல் இதழ்கடித்து சிரித்தப்படி நடந்து சென்றவனை ஒரு மார்க்கமாக நோக்கினார் மூதாட்டி.

‘என்ன இது?வந்தவுடனே தாம் தூம்னு கத்தினான்…இப்போ என்னடானா வெட்கப்பட்டுட்டு ஓடறான்…அப்படி என்ன நடந்திருக்கும்?’ என சிந்தித்தவருக்கான விடை அன்று காலை உணவு அருந்தும் சமயம் அவருக்கு கிடைத்தது.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

வீரும் தமயந்தியும் கூட அங்கு தான் இருந்தார்கள்.

புதுமண தம்பதியினருக்கு நாளை வரப்போகும் தீபாவளி பண்டிக்கைக்காக சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அதனால் தமயந்தி அவளது புகுந்த வீட்டு உறவினரோடு நேற்று பிறந்தகத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

அனைவரும் ஒன்றாக கலகலப்பாக பேசிக்கொண்டே உணவருந்த,அச்சமயம் அங்கு வந்த பணியாள் ஒருவர் “சின்னய்யா கார்பெண்ட்ரை வர சொன்னிங்களாமே…வந்திருக்காங்கய்யா” என ஜித்தேந்திரனிடம் வந்து பணிவாக உரைக்க,

அவனோ உணவில் கவனமாக இருந்தப்படி “ஆமா நான் தான் வர சொன்னேன்…அவங்களை உள்ள வர சொல்லு” என ஏதோ ஒரு ஞாபகத்தில் கூறியிருந்தான்.

அதைக்கேட்டு புருவம் சுருக்கிய ரத்தினவேல் “கார்பெண்டர் எதுக்குடா?” என வினவ,

அதன்பிறகே அவரை வரவழைத்ததற்கான காரணமே நினைவில் எழ ‘ஐய்யையோ உண்மைய சொன்னால் என் மானமே போகுமே’ என மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு மனைவியை ஓரக்கண்ணால் பார்க்க,

அவளோ அவனிற்கு மீறிய சங்கடத்துடன் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.

ஆனால் தான் கொடுக்கப்போகும் விடைக்காக அனைவரும் ஆவலாக காத்திருப்பது அறிந்து வேறு வழியின்றி தொண்டையை செருமியப்படி “ரூம்லே இருக்கிற கட்டில் உடைஞ்சுருச்சு அண்ணா…புதுசு ஒண்ணு மாத்த தான் காலையிலே வர சொன்னேன்” என விளக்கம் கொடுத்தவன்,

மற்றவர் யாவரும் அவனை கேள்விக்கேட்பதற்கு முன்பாக “அவரை உள்ளே வர சொல்லுங்க” என பணியாளிடனிடம் திரும்பி கட்டளையிட்டான்.

அவர் அங்கிருந்து அகன்றதும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஒட்டுமொத்தமாக ஜித்து மற்றும் சந்திரமதியின் மீது ஒரு மார்க்கமாக பதிய,

சந்திரமதியால் தலையை நிமிர்த்து கூட முடியவில்லை.

அவளின் முகமும் செக்கச் செவ்வேலென சிவந்துவிட்டது.

அவளின் முகம் குங்குமமாய் சிவந்ததை விட ஜித்தேந்திரன் முகம் அதையும் விட அதிகமாக சிவந்துவிட்டது.

அவனோ “காட்” என சங்கடமாக இடதுக்கையால் கழுத்தை நீவிக்கொள்ள,

பாட்டியோ ‘அடப்பாவி…காலையிலே அந்த கத்து கத்தினான்.நான் கூட அடி விழுந்திருக்கும்னு நினைச்சேன்…அந்த அடி இது தானா?’ என பேரனை மனதிற்குள் நக்கல் செய்ய,

அச்சமயம் தமயந்தியோ நமுட்டு சிரிப்புடன் “ஓஹோ…நேத்து இந்த சத்தம் தான் நம்ப ரூமிலே கேட்டுச்சு போலே வீர்” என தனது கணவனிடம் திரும்பி சொல்ல,

அவனோ இருவரின் சங்கடம் உணர்ந்து “தமி சும்மா இரு” என அதட்ட,

அவளோ அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் கண்கள் மின்ன “டேய் அண்ணா கட்டில் உடையற அளவுக்கு என்னடா பண்ணே?” என இருவரையும் குறுகுறுவென பார்த்தாள்.

அவனோ “ஏய் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லடி” என பதறிப்போய் மொழிய,

அவளோ இதழ்கடித்து சிரித்தவாறு “நான் என்ன நினைக்கிறேன்? நான் ஒண்ணும் நினைக்கலையே?” என அவனை சீண்ட,

தம்பதியினர் இருவருக்கும் ‘ஐய்யோ’ என்றிருந்தது.

“நம்ப குடும்பத்து ஆம்பளைங்க இதுவரைக்கும் எதை எதையோ உடைச்சிருக்காங்க…ஆனால் யாரும் கட்டில் உடைச்சது இல்லைடா…இது தான் முதல் தடவை” என பாட்டி ஒரு புறம் பேரனை பரிகாசம் செய்து சிரிக்க,

அவனது தந்தை அதற்கும் மேலாக “டேய் அது தேக்கு மர கட்டில்டா…அதை எப்படிடா உடைச்சீங்க?” என சந்தேகம் வேறு கேட்க,ஜித்தேந்திரனால் அவர்கள் யாவருக்கும் பதிலே கூற முடியவில்லை.

இருவருக்கும் எங்காவது சென்று சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

அதனால் அவன் பதில் கூறாமல் மௌனமாக காக்க,

“அவ்வளவு வெறி அண்ணனுக்கு” என தமயந்தி நக்கலாக இழுத்துக் கூறியதும் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அப்படியொரு சிரிப்பு!

சந்திரமதியால் அதற்கு மேல் அவ்விடத்தில் அமரவே முடியவில்லை.

அவள் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பதை கண்டுவிட்டு “ப்ச் சாப்பிடற நேரத்திலே என்ன பேச்சு?எல்லாரும் சாப்பிடுங்க” என ரத்தினவேல் அழுத்தமாக கூறியதும் அனைவரும் அமைதியாகிவிட்டனர்.

சந்திரமதி சங்கடமாக அமர்ந்திருப்பதை கண்டுவிட்டு “நீ சாப்பிடுடா மதி” என மருமகளிற்கு ஆதரவாக வானதியும் நிற்க,

வீர் ஒரு புறம் “தமி சும்மா இரு” என தங்கையின் சிரமம் உணர்ந்து கண்டித்தான்.

முகிழ்மதிக்கும் நேற்று அவளறையில் இருக்கும்போது கேட்ட சத்தம் எங்கிருந்து வந்தது என்று இப்போது நன்றாக புரிந்தது.

முன்பிருந்த பெண்ணாக இருந்தால் கட்டில் உடைந்ததற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து இருப்பாள்.

இன்றோ தம்பதியினர் இருவரின் முக உணர்வுகளை அவதானித்தப்பின்பு கட்டில் எவ்வாறு உடைந்திருக்கும் என்று புரிப்பட “ஐய்யோ” என இதழ்கடித்து வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

உடனே தன் கணவனை அவள் நாணத்துடன் ஏறிட,அவனோ ‘என்ன?’ என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,

அதில் இன்னும் அதிகமாய் படபடத்தவள் ‘ஒண்ணுமில்லை’ என தலையசைத்து அவசரமாக திரும்பிக்கொண்டாள்.

அவளின் பதட்டத்தை அறிந்த ரத்தினவேல் மீசையை முறுக்கிவிட்டு நேற்றைய நினைவில் தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

இருவரும் உணவருந்திவிட்டு அறைக்குள் நுழைந்ததும் சந்திரமதியோ ஆக்ரோஷமாக “எல்லாம் உன்னால் தான்டா…என் மானமே போச்சு” என அவனை சரமாரியாக அடிக்க,

“ஹே விடுடி…இதெல்லாம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விஷயம்…யாருக்கும் இப்படியொரு ஞாபகம் சின்னம் கிடைச்சிருக்காது…நமக்கு கிடைச்சிருக்கு…அதை நினைச்சு சந்தோஷப்படுவியா?” என உடைந்த கட்டிலை சுட்டிக்காட்டி அவளை சமாதானம் செய்ய,

“ச்சை போடா…” என அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள,அந்த கள்வனிற்கா தனது மனைவியை சமாளிக்க தெரியாது?

தனது சித்து வேலை மூலம் அவளிடம் தன் வித்தை காட்டி மீண்டும் ஒரு முறை அவளை மயக்கி சரிச் செய்திருந்தான்.
 

 

அன்றைய நாள் காலையில் ஜித்து எழுந்த சமயம் சந்திரமதி சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு “என்னடி செல்லம்…ஏன் சோகமா இருக்கே?” என ஆர்ப்பாட்டமாக கேட்டுக்கொண்டே அவளின் கழுத்து வளைவில் முத்தம் பதிக்க ஆரம்பித்துவிட,

“ப்ச் ஜித்து மூளைக்கெட்டவனே…நானே இப்படி நடந்திடுச்சுனு கவலையில் இருக்கேன்…நீ மறுபடியும் உன் வேலைய காட்டறீயா?” என அவனின் தோளில் பட்டென்று ஒரு அடி வைத்தாள்.

“ஆ..ஏன்டி அடிக்கிறே?இப்போ என்னாச்சு?” என அவளின் இரு கரம் பற்றிக்கொண்டு அவன் வினவ,

அவனை கோபத்தில் உறுத்து விழித்த மங்கை “என்னாச்சா?நீ பண்ணி வைச்சிருக்கிற வேலைய பாருடா” என கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியை எடுத்து அவனிடம் காட்டினாள்.

அதை தன் கையில் வாங்கிப்பார்த்த ஜித்துவோ மகிழ்ச்சியில் விழி விரிக்க,அவளோ “இப்போ எப்படிங்க நான் அத்தான் முகத்திலே முழிக்கிறது?அவரு படிப்பு முடியற வரை இதைப் பத்தி யோசிக்கக்கூடாதுனு சொன்னாரு…இன்னும் ஆறு மாசம் படிப்பு வேற இருக்கு…ஆனால் நீங்க…” என ஆற்றாமையுடன் ஆரம்பத்து இறுதியில் அவனை கடுமையாக முறைக்க,

அவனோ பெரும் சிந்தனையுடன் “இது எப்படிடி?எனக்கும் தெரியலை…நான் கன்ட்ரோலா தானே இருந்தேன்” என நெற்றியை நீவியப்படி கேட்க,

அதைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாக அவனை முறைத்தாள்.

“ஏதே கன்ட்ரோலா இருந்தீங்களா?அன்னைக்கு கட்டில் உடைஞ்ச சமயம் ஞாபகம் இருக்கா சார்?” என எள்ளலாக அன்றைய நாளை அவள் நினைவுறுத்தினாள்.

“ஓ ஆமா?அன்னைக்கு நாம்ப இரண்டு பேரும் நிதானமாவே இல்லை…” என்றப்படி இதழ்குவித்து ஊத,

வெடுக்கென்று அவன் புறம் திரும்பியவள் “நீ நிதானமா இல்லைனு சொல்லுடா…நான் அப்போவே சொன்னேன்…நீ தான் ஒரு நாளிலே எதுவும் நடக்காதுனு என் மேலே பாஞ்சே” என கடுகாய் பொரிந்து தள்ளினாள்.

அவனோ அசடு வழிய “சரி விடு மூன்…உன்னை பார்த்தாலே என் ஃபீலிங்க்ஸ்…” என ஆரம்பிக்க,

“ஓவர் ஃப்லோ ஆகிடுது…அதானே” என உச்சக்கட்ட எரிச்சலுடன் அவள் முடித்து வைத்தாள்.

அதுவரை ஆத்திரத்துடன் கத்திக்கொண்டிருந்தவளின் முகம் சோகத்தில் தொய்ந்து விழுந்ததை கண்ட ஜித்தேந்திரன் தன் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு

“இப்போ எதுக்கு நீ மூஞ்சிய தூக்கி வைச்சிருக்கே மூன்…” என்றப்படி அவளின் கன்னம் பற்றிக்கொள்ள,

அவளின் முகம் இன்னும் அதிகமாக வாட,அதைப்பார்த்து கட்டை விரல் கொண்டு அவளின் கன்னம் வருடியவன் “இங்க பாரு மூன்…இது நாம்ப சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்…இந்த விஷயம் கேள்விப்பட்டவுடனே அண்ணா சந்தோஷம் தான் படுவாரு…அவர் எதுவும் சொல்ல மாட்டாரு…அப்படியே எதுவும் சொன்னாலும் நான் பார்த்துக்கிறேன்…நீ ஃப்ரீயா விடு தங்கம்” என அவளை பேசியே மயக்கிய அந்த கார்குழல் கண்ணனோ “லவ் யூ டி மூன்…என்னை இவ்வளவு சீக்கிரம் அப்பா ஆக்கினதுக்கு” என்று அவளை தன் முத்தத்தால் கொண்டாடித் தீர்த்தான்.

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் பெற காத்திருக்கும் வரம் என்பது அவளிற்கும் புரிந்திட,அதனால் அந்த அழகிய தருணத்தில் மகிழ்ச்சி கொள்வதே இயைபு என்று உணர்ந்து தன்னவனுடன் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டாள்.

திருமணமாகிய மூன்று ஜோடிகளில் முதலில் கருத்தரித்தது அவள் தான் என்பதால் குடும்பத்தின் முதல் வாரிசை பற்றி கேள்வியுற்றதும் அனைவரும் அவளை கொண்டாடித் தீர்த்தனர்.

ரத்தினவேல் மட்டும் ஜித்துவை ஒரு பார்வை பார்த்தானே ஒழிய வேறு எதுவும் பேசவில்லை.

அவனிற்கும் அந்த குழந்தை வந்ததில் பேரின்பம் தான்!

அதனால் சங்கடமுற்று நின்றிருந்த சந்திரமதியை நோக்கி “வாழ்த்துக்கள் சந்திரமதி…குழந்தை ஒரு பக்கம் இருக்கட்டும்…படிப்பையும் விடக்கூடாது…அன்டர்ஸ்டென்ட்” என மூத்தவருக்கு உரிய மாண்புடன் அவளை வாழ்த்தி அறிவுரை கூறிட,அதுவரை பயத்தில் இருந்தவளின் மனம் நிம்மதியுற்றது.

வீர் மற்றும் முகிழ்மதி இருவருக்கும் சொல்லவே தேவையில்லை.

சகோதரி கருவுற்றாள் என்று தெரிந்ததில் இருந்தே அவளை தரையில் கால் பதிக்க விடாமல் தாங்கினார்கள்.

முகிழ்மதியோ “அக்கா இனி உனக்கு எல்லாம் நான் தான் செய்வேன்…நீ எந்த வேலையும் செய்யக்கூடாது” என எவ்வித பொறாமையுமின்றி கூறிய தங்கையை விழிகள் பனிக்க நோக்கினாள் சந்திரமதி‌.

வீரோ ஒரு படி மேலே சென்று “மதிம்மா உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுடா…அண்ணா உனக்கு என்ன வேணுமானாலும் செய்வேன்” என அன்னையின் ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் செய்ய தவம் கிடந்தான் அந்த தாயுமானவன்.

அவன் கூறியது படி நடந்துக் கொள்ளவும் செய்தான்.

சில நாட்கள்,பிறந்து வீட்டு சார்பாக  அவளிற்கு பிடித்தமானதை சமைத்து வந்து தந்தான்.

சில நேரம் எவ்வித சங்கோஜமும்  இல்லாமல் அவளின் காலை பிடித்து அமுக்கிவிட்டான்.

ஒரு சில நாட்கள் அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று தரையில் கால் பதிக்க விடாமல் சீராட்டினான்.

அதை காணும் தமயந்திக்கு தன் கணவனை நினைத்து பெருமையாக இருக்கும்.

ஆண் என்ற கர்வமின்றி ஒரு கணவன் மனைவிக்கு பணிவிடைகள் செய்வது வேறு…

ஆனால் ஒரு தமையனாக இருந்து தங்கையை ஒரு தாயாய் தாங்கியவனின் மீது அனைவருக்கும் பெரும் மரியாதையே எழுந்தது.

சந்திரமதியோ அண்ணனின் அன்பில் நெக்குருகிப்போனாள் என்றால் மிகையாகாது.

முகிழ்மதி ஒரு புறம் கல்லூரியில் அவளிற்கு இடைவெளி கிடைக்கும் நேரமெல்லாம் “அக்கா இந்தா ஜூஸ் குடி…டையர்டா இருக்கா?என் மடியிலே படுத்துக்கோ…என் தோளில் சாஞ்சுக்கோ…கொடுக்கா நான் ஊட்டி விடறேன்” என தன்னோடு ஒட்டிப்பிறந்த சகோதரியை தாங்கினாள்.

அவளது கணவனோ சொல்லவே தேவையில்லை….

முன்பே அவளின் மீது அதீத காதலை சுமப்பவன் இப்போது அவளையும் உயிராய் சுமந்து தாங்கினான்.

விஜயலட்சுமிக்கோ சந்திரமதி கருவுற்றதிலிருந்து தலைகால் புரியவில்லை.

அவர் ஒரு புறம் “பாப்பா…பாப்பா…” என அவளை தாங்கினார்.

இவ்வாறாக பிறந்த வீட்டின் தொடக்கம் புகுந்த வீடு வரை உள்ள அனைவரும் அவளையும் அவள் சுமக்கும் சிசுவையும் தாங்கினார்கள்.

சில நேரம் ரத்தினவேல் கூட அவளிற்கு தேவையானதை வாங்கி வந்து தருவான்…

குடும்பமாய் அவர்களது வீட்டு முதல் வாரிசை போற்றி வரவேற்றார்கள்.

இந்நிலையில் தனிமையில் ரத்தினவேல் தன் மனையாளிடம் “நமக்கு தான் முதல்ல கல்யாணமானது…இப்போ உனக்கு முன்னாடி சந்திரமதி பிரக்னென்ட் ஆகிட்டாள்…அதுக்கு உனக்கு ஏதாவது கவலையா இருக்கா ஸ்டார்?” என தன்னவளின் மனதை அறிவதற்காக அந்த கேள்வியை எழுப்பினான்.

ஆனால் அவளோ எவ்வித கல்மிஷமும் இல்லாமல் “சேச்சே இல்லீங்க மாமா…நீங்க தான் எனக்கு முன்னாடியே எல்லாம் தெளிவா சொல்லிட்டீங்களே…அதுக்கு பிறகு எனக்கு என்ன மாமா கவலை இருக்கப்போகுது” என மெல்லியக்குரலில் என்றாலும் உறுதியாக பேசிய மனையாளின் பேச்சை கேட்டு அவன் புருவம் மெச்சுதலாய் உயர்ந்தது.‌

“ஆர் யூ ஷ்யுர்?” என மீண்டும் ஒருமுறை அவன் கேட்க,

“உம்” என தலையாட்டியவள் “என் மாமா எது பண்ணாலும் என்னோட நல்லதுக்கு தான் இருக்கும்…எனக்கு புரியுது…இன்னும் இரண்டு வருஷம் தான் இருக்கு மாமா…அது முடிஞ்சப் பிறகு பொறுமையா நாம்ப குழந்தை பெத்துக்கலாம்” என தெளிவாக சிந்தித்து பேசிய மனையாளை காதலுடன் நோக்கினான் ரத்தினவேல்.

முதல் முறை அவன் சந்தித்த முகிழ்மதிக்கும் இப்போது அவனுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும் அவளிற்கும் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்?

அவனே தன் இல்லாளின் மாற்றம் அறிந்து வியந்தான்.

அவளின் இத்தகைய மாற்றத்தக்க முன்னேற்றத்திற்கு முழுமுதற் காரணம் அவன் தான் என்று அவனே அறியேன்.

தன்னவளின் இந்த மாற்றம் கூட அவனை கவர்ந்திழுக்க “ஸ்டார்” என உயிரை உருக்கும் குரலில் அழைத்த ரத்தினவேலோ அவளை இழுத்து அணைத்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.

அவளும் அவனுடன் எப்போதும் போல் ஒத்திசைத்தாள்.

சந்திரமதிக்கு இப்போது ஐந்தாம் மாதம் நடந்துக்கொண்டிருந்தது.

அச்சமயம் தமயந்தியும் தன் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் கருவுற்றாள்.

சகோதரியையே உயிராய் தாங்குபவன் மனைவியை தாங்கமாட்டானா என்ன?

அவளை கண்ணின் இமைப் போல் காத்தான் வீர்.

ஏற்கனவே பெரும் மகிழ்ச்சியில் இருந்த பூபதி குடும்பம்,இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் திணறி திண்டாடிப்போயினார்கள்‌.

அவள் கருவுற்றதும் அவளின் தாய் வானதி “தமி குழந்தை பொறக்கிற வரை இங்க வந்து இருடா…அங்க உன்னை யாரு பார்த்துப்பாங்க” என மகளது நலன் பற்றிய கவலையில் அவர் எடுத்துரைக்க,

அவளோ “என்னம்மா யாரு பார்த்துப்பாங்கனு கேட்கறீங்க?என் வீர் இருக்கும் போது என்ன கவலை உங்களுக்கு?அவர் என்னை நல்லா பார்த்துக்கிறாரு…அதனாலே நீங்க எதை நினைச்சும் கவலைப்படாமல் நிம்மதியா இருங்கம்மா” என தாயிற்கு ஆறுதலாக மொழிந்தாலும்,அவளின் பேச்சில் கணவனை பற்றிய பெருமிதமே மிகைந்து இருந்தது.

ஏனெனில், அவளிற்கு மசக்கை படுத்தியெடுக்க,அந்த வேதனை அனைத்தையும் அவள் வீரிடம் தான் கோபமாகக் கொட்டுவாள்.

ஆனால் அவனோ எந்த வித முகச்சுளிப்புமின்றி அவளின் கோபத்தை தாங்கிக்கொண்டு அவளின் மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தினான்.

அன்று அவளிற்காக அவன் உணவு சமைத்து வைத்திருந்தான்.

அவள் கேட்டதற்கு இணங்கி மாங்காய் சாதமும் பூண்டு ஊறுகாயும் செய்து வைத்திருக்க,தட்டில் இருந்த உணவுகளைப் பார்த்த தமயந்திக்கோ உமட்டிக்கொண்டு வந்தது.

உடனே வாயை பொத்திக்கொண்டு அவள் குளியலறை நோக்கி ஓட “லட்டு என்னாச்சும்மா?” என பின்னோடு ஓடினான்.

அவளின் தலையை தாங்கிப்பிடிக்க ஓங்காரத்துடன் வாந்தியெடுத்தவள் சோர்ந்துப்போய் அவன் மீது சாய்ந்துவிட்டாள்.

அவனோ அசூயை சிறிதுமின்றி அவளிற்கு முகம் கழுவி வாயை துடைத்து வெளியே அழைத்து வந்தவன் “கொஞ்சமா சாப்பிடுடி…காலையிலிருந்து வெறும் ஜூஸ் மட்டும் தான் குடிச்சிருக்கே…உன்னோட எனர்ஜிக்காகவாது சாப்பிடுடி” என அக்கறையாக மொழிந்து அவளிற்கு உணவை ஊட்ட வர,

அவளிற்கு மீண்டும் உமட்டிக்கொண்டு வந்தது‌.

அந்த கோபத்தில் “ச்சை முதல்ல இதை எடுத்திட்டு போங்க…எனக்கு இதை பார்த்தாலே வாந்தி வருது…உங்களை யாரு இதை செய்ய சொன்னது?எனக்கு இது வேணாம் வெஜ் பிரியாணி தான் வேணும்” என சிடுசிடுத்து உணவை தட்டை தள்ளினாள்.

உள்ளிருக்கும் குழந்தை படுத்தி வைப்பதினால் நிமிடத்திற்கு நிமிடம் அவள் மாறிப்பேசினாள். 

ஆனால் அவளது உணர்வின் மாற்றத்திற்கான காரணம் அறிந்த வீரும் அவளிற்காக அக்கணமே பிரியாணி தயாரித்து எடுத்து வந்து கனிவாக ஊட்டிவிட்டான்.

வீர் அவளிடம் படும் அவஸ்தையை பார்த்து விஜயலட்சுமிக்கே பரிதாபம் தோன்றியது.

“நான் வேணா சமைக்கிறேன் தம்பி…நீ நகருப்பா” என அவர் சொல்ல,

“இல்லை விஜிம்மா…தமிக்கு நான் செய்யற சமையல் மட்டும் தான் பிடிக்குது…அவங்க அம்மா சமைச்சு எடுத்திட்டு வந்தது கூட அவளுக்கு பிடிக்கலைனு சொல்லறாள்…அதனாலே தான் நானே சமைக்கிறேன்…நீங்க அம்மாவை மட்டும் பார்த்துக்கோங்க…எனக்கு அது போதும்” என திடமாக அவரின் உதவியை மறுத்துவிட்டான்.

அவருக்கும் அவன் கூறுவது உண்மை என்று தெரியும் என்பதால் அவராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

வீரோ அவள் கேட்டது போல் காய்கறி பிரியாணியை செய்து ஊட்டிவிட,அதனை வாய் திறந்து வாங்கிக்கொண்ட தமயந்தியிற்கு சட்டென விழிகள் கலங்கிப்போயின.

அவளிற்கே அவள் செய்வது தவறு என்று புரிந்தது.

ஆனால் அவளின் குழந்தை அவளை போலவே சேட்டைப்பிடித்ததாக இருக்கும் போலும்.

அந்த சிசுவின் சேட்டையில் அவளும் தன்னை மீறி அவ்வாறு நடந்துக் கொள்கிறாள்.

அதனால் உணவு உண்டு வயிறு நிரம்பியதும் “சாரி வீர்…நான் தான் உங்ககிட்ட அந்த சாப்பாடு கேட்டேன்…இப்போ உங்களையே திட்டிட்டேன்…எனக்காக நீங்க கஷ்டப்படறதை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு…பேசாமல் என்னை கொண்டு போய் என் வீட்டுலே விட்டுடிறீங்களா?” என கண்ணீர் மல்க அவள் உரைத்தாள்‌.

அவனை பிரிய அவளிற்கு துளியும் விருப்பமில்லை.

ஆனால் தன்னால் அவன் அனுபவிக்கும் துயரங்களை பார்க்கும் போது அவளிற்கு வலித்தது.

அவள் அவளாகவே இல்லை என்னும் பட்சத்தில் அவளால் தன் நடத்தையைத் தடுக்கவும் முடியவில்லை.

வீரோ தன்னவளின் கண்ணீர் கண்டு துடித்துப்போனவனாய் “ப்ச் எதுக்கும்மா இதுக்கெல்லாம் அழறே?என்னைக்கு நீ என்னை நம்பி கல்யாணம் பண்ணிட்டு வந்திட்டியோ?அன்னையிலிருந்து நீ எனக்கு சொந்தமாகிட்டே…இப்போ இந்த குழந்தை” என அவளின் மேடிட்ட வயிற்றை தடவி உரைத்தவன்,

“உங்க இரண்டு பேரையும் பார்த்துக்கிறது‌ எனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்மா…அப்படியிருக்கும் போது என்னைக்கும் நான் உங்களை சிரமமா நினைக்க மாட்டேன்…நீ என்னை விட்டு பிரிஞ்சு அங்கப்போனால் தான் நான் கஷ்டப்படுவேன்…உங்களை பார்த்துக்கிறதில் எனக்கொரு கஷ்டமும் இல்லை…அதனாலே இந்த பேச்சை இத்தோடு விட்டுடும்மா” என அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு நெற்றியில் முத்தம் பதித்தான்.

தன்னவனின் இந்த அன்பில் கசிந்திருக்கிப்போன பெண்ணவளோ “லவ் யூ வீர்” என விம்மலுடன் அவனது இடையை கட்டி அதில் ஆழ முகம் புதைத்துக்கொண்டாள்.

தன்னில் முகம் புதைந்திருந்தவளின் சிகையைப் பரிவுடன் வருடிய வீரும் அவளை இதமாக அணைத்துக்கொண்டான்.

‘தன்னை பார்த்துக்கொள்ளவது அவனிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்’ என்று அவனே கூறியதற்கு பிறகு அவள் தாயின் வீட்டிற்கு செல்வதை பற்றி சிந்திப்பாளா என்ன?

அவனை பிரிந்து அவளாலும்…அவளை பிரிந்து அவனாலும் இருக்க முடியாது என்பதால் அவனிற்கு தன் இன்பமான தொல்லைகளை அவள் கொடுக்க,அவனோ அவையனைத்தையும் சுகமான சுமையாய் தாங்கிக்கொண்டு அவளைப் பாதுகாத்தான்.

இந்நிலையில் சந்திரமதியும் தமயந்தியும் படிப்பு முடித்துவிட,அடுத்து இருவரும் தங்களது வாழ்வின் இலட்சயத்தை நோக்கி பயணமாக ஆரம்பித்தனர்.

தமயந்திக்கு அரசியலில் விருப்பம் இருந்ததால்,அவள் தனது பணியை சமூக சேவையில் இருந்து தொடங்கினாள்.

சந்திரமதியோ குழந்தை பிறந்தப்பிறகு ஒரு விடுதியில் பணியை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தாள்.

சொந்தமாக ஒரு விடுதியை நிறுவி தருவதாகவும் அதனை நிர்வாகம் செய்யும் படியும் அவளின் கணவன் அறிவுறுத்த,அவளோ “இல்லை ஜித்து…நானே என் சொந்த காலில் முன்னேறணும்னு நினைக்கிறேன்…நான் ஸ்கரேட்ச்சிலிருந்து ஆரம்பிக்கிறேன்…தப்பா நினைச்சுக்காதீங்க சாரி” என உறுதியாக கணவனது உதவியை மறுத்துவிட்டாள்.

அதில் அவனிற்கு ஏக வருத்தம் இருந்தாலும் தன்னவளின் சுயமரியாதை அவனிற்கு நெகிழ்ச்சியையும் கொடுத்தன.

முகிழ்மதியோ இளங்கலை பட்டப் படிப்பை முடிப்பதற்கே இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தது.

அதனால் அவள் தன் படிப்பை கல்லூரியிலும்,அதேசமயம் தனது கணவனாகிய ஆசானிடமும் பயின்றாள்.

இந்நிலையில் பெண்கள் மூவரும் ஒன்றாக கல்லூரிக்கு சென்றனர்.

முகிழ்மதி வழக்கம் போல் கல்லூரி செல்ல,

சந்திரமதி மற்றும் தமயந்தி இருவரும் தங்களது தோழமைகளை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் அவர்களை காண கல்லூரி வந்திருந்தனர்.

அத்துடன் மிக முக்கியமாக கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு கையொப்பம் வாங்கி செல்வதற்காகவும் வந்திருந்தார்கள்.

அதனால் அவர்களை கல்லூரியில் இறக்கிவிட்ட கணவன்மார்களோ தங்களது மனைவிகளிடம் “பேசி முடிச்சிட்டு கால் பண்ணுங்க…நான் வந்து உன்னை கூட்டிட்டு போற வரைக்கும் நீ காலேஜ் விட்டு வெளிய எங்கியும் வரக்கூடாது” என கடுமையாக எச்சரித்துவிட்டே கிளம்பியிருந்தனர்.

அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள் மூவரும் கல்லூரியிலிருந்து ஒன்றாக கடத்தப்பட்டிருந்தனர்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top