மலர்கள் 6

மாலையில் வீடு திரும்பிய யாதிஷ்,வீட்டின் முன் செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஒரு உயர்ரக கார் நிற்கவும்,அதைக்கண்டு ‘யாருடைய கார் இது…??’ என்று புருவத்தைச் சுருக்கி யோசித்துக் கொண்டே,கையில் பெட்டியோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டு வாசலில் பாதம் பதிக்கும் போதே,உள்ளிருந்து கேட்கும் பேச்சு குரலின் மூலம் ‘அது யார்…?’ என்று அறிந்து கொண்டவனுக்கு எரிச்சல் மூண்டது.

அதே எரிச்சலுடன் முகம் கடுகடுக்க வரவேற்பறைக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்தவுடன் “அத்தான்…!!” என்றவாறு ஒரு இளம்பெண் ஓடி வந்து அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.

உடனே யாதிஷ் “ஷர்மி…என்னை விடு…!!” என்று எரிச்சலுடன் மொழிந்தவாறு அவளை உதறி வெளிவந்து அவளை சற்றும் கண்டுக்கொள்ளாமல் முகத்தை சுழித்து மாடிப்படி ஏறினான்.

அதில் அவளின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிவிட,அதைக்கண்ட யாதிஷின் தாய் பரிமளம் அவள் அருகில் வந்து தாடையை நிமிர்த்தி “ஷர்மிம்மா…நீ ஒண்ணும் கவலைப்படாதே…!யாதிஷ் இப்போது தான் ஆபிஸிலிருந்து வந்தான்…அதனால் தான் கொஞ்சம் கடுகடுனு இருக்கான்…இப்போ பாரு ஃபிரஸ் ஆகிட்டு வந்து உன்கிட்ட நல்லபடியா பேசுவான்…!!” என்று கனிவுடன் கூறி அவளைச் சமாதானம் செய்தார்.

அதன்பிறகு தான் அந்த மங்கையவளின் முகம் சிறிது தெளிந்தது.அவள் யாதிஷின் அத்தை பெண் ஷர்மிளா,அதாவது அவனின் தந்தையுடன் ஒத்தையாய் உடன்பிறந்த சகோதரியின் மகள்…!!

இரண்டு வீட்டின் பெரியவர்களும் யாதிஷிற்கும் ஷர்மிளாவிற்கும் திருமணம் செய்ய பேசி முடிவு செய்து வைத்துள்ளனர்.ஆனால் யாதிஷிற்கு இந்த திருமணத்தில் சிறிதளவு கூட பிடித்தமில்லை.அதற்கு முக்கிய காரணம் ஷர்மிளாவின் தந்தை மோகன்.

அவரைப் பார்த்தாலே யாதிஷிற்கு பிடிக்காது.அதுமட்டுமில்லாமல் தன் தமையன் தீய வழியில் செல்வதற்கும் தன் தந்தை இறந்து போவதற்கும் முக்கிய காரணம் இவர் தான் என்று முழுமையாக நம்பினான்.

ஷர்மிளா அழகும் அறிவும் பண்பும் சேர்ந்த நல்ல குணவதி தான்.ஆனால் மோகனின் மகள் என்ற ஒரு காரணத்திற்காகவே அவளை வெறுத்தான் யாதிஷ்.அவரை பற்றி தன் தாயிடம் கூறினாலும்,யாதிஷ் ஷர்மிளாவை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதற்காக தான் இவ்வாறு பொய் கூறுகிறான் என்று நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை பானுமதி.ஆனால் யாதிஷ் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தான்.அது ஷர்மிளாவை மட்டும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது…!!

அதுவும் அவர் “சின்ன மாப்பிள்ளை” என்று தன்னை அழைத்து சொத்தை பல் தெரிய இளிக்கும் போது,யாதிஷிற்கு அவரை அப்படியே அறைந்தால் என்ன என்பது போல் அத்தனைக் கோபம் வரும்.

இருந்தாலும் தன் தாயின் முகத்திற்காக எதுவும் கூறாமல் அமைதியாக பல்லைகடித்து சென்றுவிடுவான்.அதற்காகவே ஷர்மிளாவிடம் பேசுவதையே தவிர்த்துவிடுவான் யாதிஷ்.

தேவையில்லாமல் அவள் மனதில் ஆசையை வளர்த்துக்கொள்ள கூடாது என்ற ஒரு காரணத்திற்காக தான், அவளை பெரிதாக தவிர்த்துவந்தான்.

அதுமட்டுமில்லாமல் இன்று சஞ்சுயுக்தாவிடம் சண்டையிட்டதினால் மனது சரியில்லாத காரணத்தினாலும்,அவளைப் பற்றி யோசிக்க வேண்டி,யாதிஷ் தனிமையை நாடினான்.

அறைக்குள் சென்ற யாதிஷ் உடலை சுத்தம் செய்து விட்டு வீட்டில் அணியும் சாதாரண உடையை உடுத்திவிட்டு கட்டிலின் மேல் படுத்து தலையை கைக்கு கொடுத்து விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான்.

அவனின் மனதில் சஞ்சுயுக்தாவைப் பற்றிய சிந்தனையுடன் கோபத்தில் இருந்தான்.எந்தவொரு பெண்ணிடமும் இது போல் நடக்காத தன்னை இந்த மாதிரி ஒரு பெண்ணிடம் நடக்க வைத்த சஞ்சுயுக்தாவின் மீது தான் கோபம் கொப்பளித்தது.

‘என்ன பெண் இவள்…என்னை பார்த்து பொம்பளைப் பொறுக்கினு சொல்லறா ராட்சஸி…நான் இதுவரை யாரிடமும் தேவையில்லாமல் பேசியது கூட கிடையாது…நான் முதல் முதலாக தானாக சென்று பேசிய அந்நிய பெண் இவள் தான்…!!என்னை கவர்ந்து இழுத்தவளும் இவள் தான்…என்னை வெறுக்க வைத்தவளும் இவள் தான்…!!இவளுக்கு கண்டிப்பாக ஒரு பாடம் கற்று கொடுக்காமல் விட கூடாது…!!’ என்று மனதில் ஒரு உறுதியான முடிவெடுத்தான்.

அதேநேரம் சஞ்சுயுக்தா அவள் வளர்ந்த இல்லத்தின் தலைவி கோசலையிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

அவர் “சஞ்சு…எதுக்கு தேவையில்லாமல் போய் பிரச்சனையில் மாட்டிக்கிறே…நீ இந்த மாதிரி செய்தால்,உன்னுடைய இத்தனை நாள் உழைப்பும் வீணாகப் போய்விடும்…அதைக் கொஞ்சம் யோசித்துப் பாரு…அதனால் கொஞ்சம் பொறுமையாக இரு சஞ்சு…!!” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார்.

சிறுவயதிலிருந்தே சஞ்சுயுக்தாவின் கோபத்தினால்,அவளே வழிய சென்று நிறைய பிரச்சினைகளை இழுத்து வந்துவிடுவாள்.அவளுக்காக வேண்டி எல்லோரிடமும் பேசி மன்னிப்பு வேண்டி,அவர்களை சமாதானம் செய்வது தான் கோசலையின் ஓரே வேலை.இல்லத்தை விட்டு வெளியே சென்றாலும் தன் மகளைப் போல் பாசமாய் வளர்த்த சஞ்சுயுக்தாவை நினைத்து,அவர் கவலைக் கொள்ளாத நாளேயில்லை என்று கூறினால் மிகையாகாது.

இன்றும் அதேபோல் கோபத்தினால் அவள் செய்த ஒரு காரியத்தைப் பற்றி அறிந்தவர் அவளிடம் எப்போதும் போல் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சஞ்சுயுக்தா சற்றும் தன்னுடைய வீம்பை விட்டுக்கொடுக்காமல் “அம்மா…அவன் தான் என்னிடம் வந்து தேவையில்லாமல் பேசி பிரச்சனையை இழுத்துவிட்டான்… அதுமட்டுமில்லாமல் அவன்…” என்று மூச்சு வாங்க நிறுத்தியவள்,

அவன் கொடுத்த முத்தத்தைப் பற்றி யோசித்து அவளின் மனதில் இப்பொழுதும் ஆத்திர தீ கொளுந்துவிட்டு எரிந்தது.அதை எவ்வாறு இவரிடம் கூறமுடியும் என்று நினைத்தவள் அதைவிடுத்து,

“அவன் என்னை கைநீட்டி அடித்ததுமில்லாமல்…எவ்வளவு தைரியம் இருந்தால்…என்னை அவன் பொண்டாட்டினு சொல்லுறான்… அதையெல்லாம் கேட்டுவிட்டு நான் சும்மா இருக்கணும்…நெவர் அவனை ஏதாவது கண்டிப்பாக செய்வேன்…!!” என்று கோபத்தோடு பேசினாள்.

“சஞ்சு திஸ் இஸ் நாட் ஃபேர்…!!அவர் அப்படி பேசியதற்கு முன்னாடி நீ என்ன பண்ண அது யோசி…நீ அப்படி பேசியதால் தான் அவரும் அப்படி பேசினார்…!!பொம்பளை பொறுக்கினு சொல்லறது தப்பு தானே…நீ இருக்கும் வேலையில் பொறுமை ரொம்ப அவசியம் சஞ்சு…ஸ்லோ அன்ட் ஸ்டாடி வின் தி ரேஸ்(slow and steady wins the race) என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கியா இல்லையா…??கொஞ்சம் பொறுமையாக இருந்து சாதிக்கப் பாரு…!!அவரிடம் போய் நாளை மன்னிப்புக் கேட்டுவிடு…பிரச்சனை அத்தோடு முடிந்தது சரியா…??” என்று கூறியவரிடம் எதிர்த்து பேசமுடியாமல் “சரி” என்று வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டாள்.

இருந்தும் அவள் மனது சமாதானமடையவில்லை என்பது தான் உண்மை.

‘எவ்ளோ தைரியம் இருந்தால் என்னை கிஸ் பண்ணுவான்…அவனைக் கண்டிப்பாக சும்மாவிட கூடாது…அவனை ஏதாவது செய்யணும்…ஆனால் அம்மா சொன்ன மாதிரி கொஞ்சம் பொறுமையாக இருந்து தான் காரியத்தை சாதிக்கணும்…அதனால் முதல் வேலையாக நாளைக்கு அவனிடம் மன்னிப்பு கேட்கலாம்…அதன்பிறகு அவனைப் பார்த்துக்கலாம்…!!’ என்று முடிவினை எடுத்தப்பிறகு தான் அவளின் மனது சிறிது அமைதியடைந்தது.

அடுத்தநாள் சஞ்சுயுக்தா யாதிஷை சந்திக்க முடியாமல் வேலை இழுத்துக் கொண்டே இருந்தது.அன்று மதியம் ஒரு மணிக்கு அலுவலர்களுடன் ஒரு சந்திப்பு ஒன்றிற்கான ஏற்பாடு செய்திருந்தான் யாதிஷ்.

அதற்கான அழைப்பு சஞ்சுயுக்தாவிற்கு சென்றது.அதனால் அவளும் அவனின் சந்திப்பிற்கு சென்றாள்.அனைவரும் தன் கூட்டிய கூட்டத்திற்கு  வந்தவுடன்,யாதிஷ் சஞ்சுயுக்தாவை மிதப்பாய் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ‘இருடி உனக்கு முதல் ஆப்பு வைக்கிறேன்…!!’ என்று நினைத்து தொண்டை கமறி பேச ஆரம்பித்தான்.

சஞ்சுயுக்தாவிற்கு மனதில் மணியடிக்க ஆரம்பித்துவிட்டது.

இவன் எதுக்கு நம்மை ஒரு மாதிரி பார்க்கிறான்…அவன் நமக்கு எதுவும் ஆப்பு வைக்க போகிறானு நினைக்கிறேன்…யாதிஷ் நீ என்ன செய்தாலும்…என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடா…!!’ என்று எதிர் பார்வைப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

அவள் நினைத்தற்கு தகுந்த மாதிரியே “ஹலோ ஜென்டில் மேன் அன்ட் ஜென்டில் வுமென்…உங்களுக்கு “கே.கே ஜூவல்லர்ஸ்” பிராஜக்ட்ஸ் பத்தி எல்லாம் தெரியும்…அந்த பிராஜக்ட்ஸ் முடிப்பதில் ஒரு சிறு பிரச்சினை…அது என்னவென்றால் அந்த பிராஜகட் முடிப்பதற்கு இன்னும் மூன்று வார கால அவகாசம் இருந்தது…ஆனால் இப்போது அந்த பிராஜக்ட்டை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்…!!” என்று கூறியவுடன் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அப்பட்டமாக அதிர்ச்சியும் மறுப்பும் தெரிந்தது.

யாதிஷ் அதைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து “அதுவும் இப்போ சினியர் அசோஸியேட் டைரக்டர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியூர் போகிறார்…அதனால்…” என்றுவிட்டு சஞ்சுயுக்தாவை அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு,

“அதனால் அசோஸியேட் கிரேயேட்டிவ் ரைக்டர்டர் மிஸ்.சஞ்சுயுக்தா தான்…இந்த பிராஜக்ட்டை முடித்து தர வேண்டும்…!!அவருக்கு இதில் விருப்பம் இல்லையென்றால் கம்பெனியை விட்டு போயிட்டே இருக்கலாம்…இல்லை இந்த பிராஜக்ட்டை ஏற்றுக்கொண்டால்… அவங்களுக்கு இது சவாலாகவும் அவங்க திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்… அதேசமயம் அதற்கு தக்க ஊதிய உயர்வும் தரப்படும்…!!” என்று கூறி சஞ்சுயுக்தாவை ‘என்ன என் சவாலை ஏத்துகிறியா இல்லையா…?’ என்பதை போல் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

சஞ்சுயுக்தா இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என்பது போல் உதட்டை சுழித்து “ஸ்யூர் சார்…ஐ வில் டூ திஸ் பிராஜக்ட்…!!” என்று அதில் இருக்கும் சூட்சமம் தெரியாமல் ஒத்துக் கொண்டாள்.

யாதிஷ் விஷம புன்னகையுடன் அடுத்து கூறியதைக் கேட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்றாள் சஞ்சுயுக்தா.

********************************************************************************************

மகிழா செழியனிடம் செந்தில் தான் இதற்கெல்லாம் காரணம் என்று கூறியவுடன் செழியன் கடுப்பாகி “மகிழா ஒன்று சொல்லுறேனு தப்பா நினைச்சுக்காதீங்க…இதற்கே இப்படி பயந்தீங்கனா எப்படி…??உங்க கல்யாணத்துக்கு பிறகு நீங்க இன்னும் நிறைய வலிகளை சந்திக்க வேண்டி இருக்கு…அதற்கெல்லாம் கொஞ்சம் தைரியமாக இருந்தால் தான்…எல்லாவற்றையும் கடந்து செல்ல முடியும்…அப்போது தான்…வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்.அத்தோடு கண்ட கண்ட நாய்களிடமிருந்து உங்களைக் நீங்களே காப்பாற்றி கொள்ள முடியும்.எல்லா நேரத்திலும் எல்லாரோட உதவியும் உங்களுக்கு கிடைக்காது அதை மட்டும் மனதில் வைச்சுகோங்க…!!” என்று கூறி விட்டு அவளிடமிருந்து பதிலை எதிர்ப்பார்க்காமல் செழியனின் ஜிப் காற்றை கிழித்து கொண்டு சீறிப்பாய்ந்தது.

மகிழா அவன் போகும் திசையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். செழியன் ஜிப் செல்லும் வேகத்தைப் பார்த்து செந்திலை ஏதாவது செய்து விடுவானோ என்று நினைத்தவளின் மனதில் ஒரு திகில் பரவியது.

அங்கே செந்தில் கள்ளச்சாராயக் கடையின் முன் உள்ள மேசையில் அமர்ந்து குடிபோதையில் தள்ளாடியப்படி தனது தோழனிடம் பேசிக்கொண்டிருந்தான்.

செந்தில் கர்வமாக “மச்சான்…இந்த மகிழா பொண்ணு இருக்கே… அந்த பொண்ணு இனிமே எனக்கு தான்…!!” என்று மதுபோதையில் குழறி உளறிக் கொண்டிருந்தான்.

“எப்படி டா மச்சான் சொல்லுறே…அவங்க அப்பன்ங்காரன் தான் பொண்ணை கட்டிக்கொடுக்கமாட்டேனு சொன்னானே…அப்புறம் எப்படி மச்சான்…??” என்று புரியாமல் கேட்ட தன் தோழனிடம்,

“மச்சான்…அவளை நான் ப்ரெகெட் பண்ணிட்டேன்டா…!!” என்று கூறி கோணல் சிரிப்பு சிரித்தான்.

“எப்படி மச்சான்…??” என்று அதிர்ச்சியுடன் விழி விரிய கேட்ட தன் தோழனைப் பார்த்து அதேகோணல் சிரிப்புடன் “அப்படி தான் மச்சான்…” என்று கூறி கண்சிமிட்டியவன் வாயில் மதுவை சரித்தான்.

இப்போது அவன் தோழனின் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது.அவன் “என்னடா சொல்லுறா…??” என்று அதிர்ச்சியில் கத்தினான்.

செந்தில் கேவலமாக ஒரு சிரிப்பு சிரித்து ஊறுகாயை தொட்டு நாக்கில் தடவி “ச்சூஊஊஊஊ” என ஊறுகாயின் சுவையை இழுத்து சுவைப்பது போல் மகிழாவை மனதினுள் இருத்தி போதையில் விழிகள் சொருக “எல்லாம் முடிஞ்சிருச்சு மச்சான்…அந்த அழகு தேவதை மொத்தமா இனி எனக்கு தான் சொந்தம்…அதுவும் அவளோட ***** இருக்கே…அப்பாப்பா…” என்று அவளின் ஒவ்வொரு உடலின் பாகத்தையும் விவரித்து இழிவாக கூறிக் கொண்டிருக்கும் போதே “ஆவென்று” அலறலோடு பத்தடி தள்ளி தரையில் விழுந்திருந்தான்.

ஏனெனில் செந்திலைத் தேடி வந்துக்கொண்டிருந்த செழியனின் காதில் அவன் மகிழாவைப் பற்றி கேவலமாக பேசியது அனைத்து காதில் விழந்து இரத்தம் கொதிக்க செய்தது.

அவனது கண்கள் கோவ்வைப்பழம் போல் சிவந்திருக்க உடம்பின் நாடி நரம்புகள் புடைத்திட தன் முழு பலத்தையும் திரட்டி கோபத்துடன் அவனின் முதுகில் ஓங்கி ஒரு உதைவிட்டிருந்தான்.

அவன் அலறல் சத்தம் கேட்டு அங்கு குடித்துக் கொண்டிருந்த அனைவரும் செழியனைத் திரும்பி பார்த்தனர்.

செழியன் விழியில் கொலைவெறி தாண்டவமாட,கைகால் நரம்பு புடைக்க ருத்ரனாய் நின்றிருந்தான்.கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால்,செழியன் பார்ப்பதற்கு உண்மையில் அந்த ஐய்யனாரே தான்…!!

அவனின் தோரணையே மனதில் ஒரு வித குளிர் பரவ,அங்கிருந்த அனைவரும் பயந்து நடுங்கி,அங்கிருந்து தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். இவ்வளவு நேரம் செந்திலிடம் பேசிக் கொண்டிருந்த அவன் நெருங்கிய தோழன் உட்பட…!!

செழியன் அவர்களையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவனின் ஓரே இலக்கு செந்தில் தான் என்பதைப் போல்,கீழே வலியால் துடித்துக்கொண்டிருந்த செந்திலின் அருகில் சென்று அவனின் சட்டை காலரைப் பிடித்து தூக்கி “ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்ததுமில்லாமல்…அவளை பத்தி தப்பு தப்பா வேற பேசிறீயா…??” என்று கர்ஜித்து கைமூட்டியை இறுக்கி அவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு… வயிற்றிலும் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.

அவன் குத்துவிட்டதில் அவனின் மூக்கில் இரத்தம் வழிய…போதையில் நிற்கமுடியாமல் தள்ளாடி கீழே விழுந்தான்.

செழியன் அவன் போதையில் இருப்பதால் தான் யாரென்றே தெரியவில்லை.அவனுக்கு அடித்தது யார் என்று தெரிந்தேயாக வேண்டும் என்று நினைத்து பக்கத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் மொந்து அவனின் முகத்தில் அடித்தான்.அப்போதும் தெளியாமல் இருக்க…அங்கே இருந்த குடத்தை எடுத்து தண்ணீர் மொந்து.அவன் மேல் மொத்தமாக சரித்தான்.

தண்ணீரை சரித்ததில் செந்திலின் உடம்பில் செழியனால் ஏற்படுத்தப்பட்ட காயங்களில் இருந்த இரத்ததில் பட்டு சுருக்கென்று வலியெடுக்க ஆவென்று வலியில் கத்தினான்.

அதன்பிறகு தான் செந்திலுக்கு முழுமையான சுய உணர்வு வந்தது.அதைக் கண்டு கொண்ட செழியன் தோளில் ஒரு உதை விட்டு “எழுந்திரிடா பொறுக்கி” என்று கத்தி அவனின் கைகளை முறித்து தூக்கியவன் “ஏன்டா…ஒரு குழந்தை தனமான பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்க உனக்கு எப்படிடா மனசு வந்தது…??” என்று கர்ஜித்தவன் தொடர்ந்து “நீயெல்லாம் ஒரு தெரு நாய்டா…உன்னை என்னை பண்ணலாம்…நீயே சொல்லு…??” என்று வார்த்தையில் கடுமைத்தெறிக்க அவனிடமே கேள்வி எழுப்பினான்.

செந்திலுக்கு இப்போது தான் முழுமையான உண்மை புரிய பயத்துடன் “ச…சார் என்னை மன்னி…ச்சிடுங்க…!!நான் தெரியாமல் பண்ணிட்டேன்…!!” என்று திக்கி திணறி கெஞ்சிக் கேட்டவனின் கழுத்தை பிடித்து நெறித்த செழியன்,

“தப்பு செய்ய முடிவெடுத்த போது…இது தப்புனு உனக்கு தெரியலையாடா…இப்போ தான் உனக்கு இது தப்புனு தெரியுதா…??நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுடா…உனக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்…அதை சொல்லுறியா இல்லை…”
என்று கூறிக் கொண்டே துப்பாக்கியை எடுத்து அவனின் வாயினுள் வைத்து அழுத்தி,

“உன்னை சுடவா…??” என்று கேட்டவுடன் செந்திலுக்கு முகம் முழுவதும் பயத்தில் வெளிறியிருக்க… ஹம்…ஹம்…ம்…ம் என்று முனங்கி வேண்டாம் என்பது போல் தலையாட்டினான்.

செழியன் கண்கள் கோபத்தில் சிவக்க “அப்போ உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்…??” என்று கர்ஜித்தவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் செந்தில் தவித்தான்.

அதன்பிறகு செழியனே என்ன நினைத்தனோ “உன்னை சுட்டு கொன்றுவிட்டால்…உனக்கு அது ஒரு நிமிடம் வேதனை தான்…உன்னை துடிக்க துடிக்க வைச்சு கொல்லணும்டா…உன்னைப் பார்த்து இன்னொருத்தன் இந்த மாதிரி தப்பு செய்ய நினைக்கக்கூடாது… வாடா பிளடி ஸ்கௌண்ட்ரல்ஸ்…” என்று கூறி அவன் சட்டை காலரைப் பிடித்து,அவனை தரதரவென இழுத்து சென்று ஜீப்பின் பின்பக்கம் குப்பையை போல் தூக்கி எறிந்துவிட்டு வண்டியை எடுத்தான்.

செழியன் நேராக சென்று அவனை சிறையில் தள்ளி,அவனை லத்தியால் இரத்தம் வரும் வரை அடிஅடியென அடித்தான்.அந்த லத்தி நைந்து உடையும் அளவு அடித்தும் அவனின் ஆத்திரம் தீரவில்லை.

அதுவரை “ஐய்யோ அம்மா…!!” என்று கத்திக் கொண்டிருந்த செந்திலிடமிருந்து எந்த பதிலும் வராததால் கான்ஸ்டெபிளை அழைத்து அவனிற்கு மூச்சு இருக்கிறதா என்று பரிசோதிக்கக் கூறினான் செழியன்.

அவர் அவனின் மூக்கில் கைவைத்து பார்த்துவிட்டு “மூச்சு இருக்கு சார்…!!” என்று பதட்டத்துடனே கூறினார்.

“இவனுங்களுக்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் உயிர் போகாது… பிளடி ராஸ்கல்…!!” என்றவாறு கோபத்துடன் கீழே சுருண்டு விழுந்திருந்த செந்திலின் வயிற்றில் ஓங்கி ஒரு உதைவிட்டு “ச்சை” என்று உதறிவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறிய சில நொடிகளில் செந்திலின் அப்பா ராமசாமி வந்து,மகனின் நிலைமையைப் பார்த்து கொதிதெளுந்தவாறு “நான் யாருனு தெரியுமாடா…ம.கா கட்சியின் உறுப்பினர்…என் பையனை அடிக்க…உங்க ஏ.சி க்கு எவ்ளோ திமிரு இருக்கும்…!அவனை நான் சும்மாவிட மாட்டேன்…தலைவர்கிட்ட சொல்லி…அவனை உண்டு இல்லைனு பண்ணலை…என் பேரு ராமசாமியில்லைடா…அவனை மட்டுமில்லை…உங்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்…!!!” என்று சுற்றி நிற்கும் அங்கிருந்த அனைவரையும் பார்த்து கத்தினார்.

அங்கிருந்த இரண்டு காவலர்கள் தங்களுக்குள் “இவருக்கு செழியன் சாரைப் பத்தி தெரியலை…சார் இவர் கண்ணில் மட்டுமில்லாமல்…இவர் தலைவரின் கண்ணிலே விரலை விட்டு ஆட்டுவார்னு தெரியாமல் அப்பாவியே இருக்காரே…அய்யோ பாவம்…கண்டிப்பாக இவரு என்ன பெயரு மாத்தி வைச்சுப்பாரு…!!” என்று வித விதமான பெயரைக் கூறி,அந்த பெயரா இல்லை இந்த பெயரா என்று கூறி கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தனர்.

ராமசாமி அதை எரிச்சலோடு பார்த்துவிட்டு… ‘இருங்கடா… உங்களையெல்லாம் என்ன செய்யறேனு பாரு…!!’ என்று கறுவினார்.

இவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டவருக்கு தீடிரென்று தன் மகனின் ஞாபகம் வர…அவனிடம் ஓடி…கம்பிக்கு வெளியே நின்று கையை மட்டும் நீட்டி “ராஜா எழுந்திரிப்பா…ராஜா எழுந்திரி…!!” என்று இரண்டு முறை தட்டி எழுப்பியும் எழாமல் இருக்கவும் நெஞ்சில் குளிர்ப்பரவ பதட்டம் தொற்றிக்கொள்ள “ராஜா ஏன் எழுந்திருக்க மாட்டிக்கிறே…ராஜா…என்னச்சு உன்னை இவங்க அடிச்சே கொன்னுட்டாங்களா…?ஐயோ எனக்கு இருக்கிறது ஓரே ஆம்பிள பிள்ளையாச்சே…??சொத்துயில்லைனாலும் உன்னை ராஜா மாதிரி தானே வைச்சிருந்தேனே…இப்படி கூட்டிட்டு வந்து உன்னை அடிச்சே கொன்னுட்டாங்களே பாவிங்க…???” என்று வேதனையில் புலம்பிவிட்டு… அவனின் நாடியைப் பரிசோதித்தவர் அவன் உயிருடன் இருக்கிறான் என்று அறிந்து சிறிது நிம்மதியடைந்து ஆவேசத்துடன் வெளியில் சென்றார்.

அவர் போன ஐந்து நிமிடத்திற்குள் தலைமை காவல் ஆணையரிடமிருந்து அழைப்பு வந்தது.

அவர் கோபமாக பேசி செந்திலை விட பணித்துவிட்டு,செழியன் வந்தவுடன் தன்னை வந்து பார்க்க சொல்லுமாறு கட்டளையிட்டுவிட்டு… அழைப்பைத் துண்டித்தார்.

அவர் வைத்த மறுநொடி…ராமசாமி கோணல் சிரிப்புடன்…அந்த காவலர் முன் நின்றிருந்தான்.அவனை எரிச்சலோடு பார்த்த காவலர்கள் செந்திலை விடுவித்து அவரவர் இடத்தில் அமைதியாக சென்று அமர்ந்து பணி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ராமசாமி மகனை கைதாங்கலாகப் பிடித்து நடத்தியபடி “அய்யோ ராஜா…உன்னை எப்படி பண்ணியிருக்கானுங்க இவனுங்க…” என்று மகனிடம் பரிவுடன் பேசிவிட்டு,

சுற்றி இருக்கும் அனைவரையும் பார்த்து “என் பவர் பத்தி இப்போ தெரியுதாடா…??என் பையனுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்…அப்புறம் இருக்கு உங்களுக்கு…!!உங்க யாரையும் சும்மாவிட மாட்டேன்…!!” என்ற ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார் ராமசாமி.

அவன் சென்றவுடன் ஒரு காவலர் செழியனின் கைப்பேசிக்கு அழைத்து “ஐயா…நீங்க ஜெயிலில் போட்டுயிருந்தீங்களே…அந்த செந்தில்… அவனை அவங்க அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டாறாருங்க…!!” என்று கூறியவுடன்,

இந்தப்பக்கம் செழியன் “யாரை கேட்டு அவனை அனுப்பனீங்க…??” என்று அவரிடம் எகிறினான்.

அதில் பயந்து காவலர் “ஐயா…நம்ப கமிஷ்னர் தான்…அவனை வெளியே விட சொன்னாருங்க…உங்களையும் அவரை வந்து பார்க்க சொன்னாருங்க…!!” என்றவுடன்,

‘ஓ’ என்று விட்டு “சரி…நான் கமிஷினரிடம் பேசிக்கிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

இங்கே மகிழா அனைத்து விசயங்களையும் தனது தாய் தந்தையிடம் கூறியவுடன்,பானுமதி கதறலுடன் “மகிம்மா…!!” என்று அழைத்து அவளை அணைத்துக் கொண்டு கதறினார்.

பிரபாகரனுக்கு கோபத்தில் நரம்புகள் புடைக்க…அவனை அடித்து நொறுக்கும் ஆவேசம் எழுந்தது.

அதே ஆவேசத்துடன் “அவனை என்ன செய்கிறேன் பார்…!!” என்றுக் கர்ஜித்து கிளம்பியவரிடம்,

“அப்பா…அவரை செழியன் சார்…இந்நேரம் புரட்டி எடுத்திருப்பார்… அதனால் நீங்க போய்…அவனை அடிக்க வேண்டிய அவசியமேயில்லை…!!” என்று கூறி மகிழா சோகமாய் புன்னகைத்தாள்.

பெற்றோர் இருவரும் நம்முடைய பொண்ணா இவ்வளவு பக்குவமாக பேசுவது என்று ஆச்சரியமாகப் பார்த்து கொண்டிருந்தனர்.

தீடிரென்று மகிழாவின் புன்னகை வாடி முகம் பயத்தில் வெளிறியது. அதைக்கண்ட இருவரும் “என்னச்சும்மா…??” என்று பதட்டத்துடன் வினவினார்கள்.

அதற்கு மகிழா கண்ணில் கண்ணீருடன் “அம்மா…செழியன் சார் போகும் வேகத்தைப் பார்த்தால்…செந்தலை கொல்லாமல் விடமாட்டார் போலப்பா…!!” என்று அவனுக்காக பரிதாபப்பட்டு கூறியவுடன்,

பிரபாகரன் “அவன் செத்தால் சாகட்டும் பாப்பா…உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினானே…அதற்கு அந்த தண்டனை சரி தான்…” என்று கடுப்புடன் மொழிந்துவிட்டு,

“பாப்பா…அன்றைக்கு மட்டும்…நான் சரியான நேரத்தில் வராமல் இருந்தால்…அவ…ன்…அவன்” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறமுடியாமல் கண்களை மூடி தன்னைக் கட்டுப்படுத்திவிட்டு,

“அதனால் அவனுக்கு பரிதாபப்படாதே பாப்பா…செத்தால் சாகட்டும்…!!” என்று கூறி,அவளின் தலையைத் தடவி சமாதானம் செய்தார்.பானுமதியும் அது தந்த வலியில் கண்ணீர் சிந்தினார்…பிரபாகரன் தான் இருவரையும் பேசிச் சமாதானம் செய்தார்.

ஆனாலும் மகிழா மட்டும் சமாதானமாகாமல் “அப்பா…இதனால் செந்திலுக்கு ஏதாவதாகி… செழியன் சாருக்கு…ராமசாமி மாமாவினால் ஏதாவது ஆபத்து வந்திடப்போகுது…நம் பிரச்சனையினால் அவருக்கு வேலை போயி…ஆபத்து வந்தால்…இருவரின் பாவம் நமக்கு தான்ப்பா…!!” என்று இதுவரை சின்ன குழந்தைபோல் இருந்த,தன்னுடைய பொண்ணா இது என்று பெற்றோர் இருவரும் அவளை மறுபடியும் வித்தியாசமான பார்வைப் பார்த்தனர்.

அதன்பிறகு பிரபாகரனே பொறுப்பை தன் கையில் எடுத்து மகிழாவை சமாதானம் செய்து அவளின் அறைக்கு அனுப்பிவைத்து விட்டு திரும்பினால் வீட்டின் தொலைப்பேசி மணி அடித்தது.

எடுத்து பேசியவரின் முகத்தில் கலவையான உணர்ச்சிகள் ஆட்கொண்டது.உடனே தன் மனைவியிடமும் அழைத்து,அந்த விசயத்தைக் கூறியவுடன் அவரின் முகத்திலும் நிம்மதி… சந்தோஷம்… பரிதாபம்…கோபம்…பயம்…யோசனை என்று கலவையான உணர்ச்சி ஏற்பட்டது.

அவர்களுக்கு செந்தில் இப்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டுயிருக்கிறான் என்ற செய்தி தொலைப்பேசியின் மூலம் தெரிவிக்கப்பட்டது.அதற்கு தான் இத்தனை உணர்ச்சிகளும் அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.

இருவரின் முகமும் இப்போது மலர்ந்தது…முதலில் பானுமதி தான் “என்னங்க பேசாமல் நம் பொண்ணை…அந்த செழியனுக்கே கல்யாணம் செய்துக் கொடுத்திடலாம்.ஏனெனில் அவன் மகிழாவின் வாழ்க்கையில் வந்த பிறகு தான்…மகிழா கொஞ்சம் மாறியிருக்கா… இப்போ கூட பார்த்தீங்கயில்லை…அவருக்கு ஏதோ ஆகிவிடுமோனு பயந்ததை…!!அதேசமயம் அந்த பையனும்…மகிழாவிற்கு ஒன்று என்றவுடன்…ஒருத்தனை கொல்ல துணிஞ்சிருக்கான்… கண்டிப்பாக அவன் நம் பொண்ணை நல்லப்படியா பார்த்துப்பாங்க…!!நீங்க என்ன சொல்லுறீங்க…??” என்று கணவர் என்ன சொல்வரோ என்று சிறிது பயத்துடன் வினவினார்.

அதற்கு அவசியமே இல்லை என்பது போல் பிரபாகரன் மலர்ந்த முகத்துடன் “நானும் அதே தான் நினைத்தேன் பானு…நல்ல விசயத்தைத் தள்ளிப்போட கூடாது…நான் இப்பவே போய்…அவரிடம் பேசி…குடும்பத்தைப் பற்றி விசாரித்துவிட்டு வருகிறேன்…!!” என்று கூறி சந்தோஷத்துடன் கிளம்பினார்.

ஆனால் அவனிடம் கூறுவதற்கான சந்தர்ப்பம் ஒரு போதும் அமையாது என்பதையும் அவர் போகும் காரியம் நிறைவேற போவதில்லை என்பதையும் பாவம் அவர் அறியவில்லை.ஏனெனில் செழியன் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டியிருந்தான்.

“வாழ்க்கை விசித்தரமானது…நாம் நினைக்காதவைகளை நடத்தியும்…நினைத்தவைகளை நடத்தமாலும் செய்யும்…நினைக்கும் எதுவும் நடந்துவிட்டால் கடவுள் எதற்கு…??”

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top