மலர்கள் 7

யாதிஷ் புது ஒப்பந்தம் ஒன்றை ஏற்று நடத்த வேண்டுமாறு சஞ்சுயுக்தாவிடம் கூறியவுடன்,சஞ்சுயுக்தா சற்றும் தளர்ந்துவிடாமல் அந்த ஒப்பந்தத்தை துணிச்சலுடன் ஏற்று கொண்டாள்.

யாதிஷ் ஒரு விஷமமான புன்னகையுடன் “ஓகே…ஒரு 1 வாரத்திற்கு தேவையான உங்க திங்க்ஸ் பேக் பண்ணி ரெடியா வச்சிக்கோங்க…!!டூடே ஈவின்ங் பிளைட்டில் நாம் கொச்சின் போகணும்…!!” என்று அதிரடியாக கூறியவுடன்,

அவள் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் தெரிய யாதிஷ் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “கொச்சினில் தான் அவங்களுடைய மெயின் பிரன்ச் இருக்கு…அங்கே போய் அவங்க ஜுவல்லரி ஷாப்பை அனலைஸ் பண்ணி…சீக்கிரம் ஒரு ஸ்கரிப்பட் ரெடி பண்ணி…டைரக்‌ஷன் பண்ணணும்…உங்க கூட நானும் நம் கம்பெனி மாடலும்…அன்ட் தென் உங்க ஃக்ரு எல்லாரும் வருவாங்க…மத்தவங்க எல்லோரும் அங்க இருக்கிற ஹோட்டலில் தாங்குவாங்க…!நானும் நீங்களும் மட்டும் என்னுடைய கெஸ்ட்ஹவுஸில் தங்கப்போகிறோம்…!!!” என்று யாதிஷ் நீளமாக கூறி முடித்தான்.

அவன் கடைசியாக கூறியதைக் கேட்டவுடன் சஞ்சுயுக்தாவிற்கு கோபம் பலமடங்கு எகிறியது…அதே கோபத்துடன் “எக்ஸ்கியூஸ் மீ…ஐ கான்ட் டூ திஸ் பிராஜக்ட்…ஃபைன்ட் சம் ஒன் இல்ஸ் டு டூ திஸ்…!!(excuse me…I can’t do this project…find someone else to do this)” என்று அழுத்தமாக கூறி எழுந்தவளின் அருகில் வந்த யாதிஷ்,

“இப் யூ குவிட் திஸ் பிராஜக்ட்…யூ ஹேவ் டு குவிட் திஸ் ஜாப் ஆல்சோ…!!விச் ஒன் இஸ் பெட்டர்…??(if u quit this project…you have to quit this project also…which one is better)” என்று புருவம் உயர்த்தி கேட்டவனிடம் எதுவும் சொல்லமுடியாமல்… அங்கேயே அமர்ந்தவாறு உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருந்தாள் சஞ்சுயுக்தா.

அங்கிருக்கும் அனைவரும் முதலாளி கூறினால்,எல்லாம் சரியாக தான் இருக்கும் என்பது போல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

யாதிஷ் அலட்சிய புன்னகையுடன் “மிஸ்.சஞ்சுயுக்தா…நவ் வாட் இஸ் யுவர் டிஸிஷன்…??” என்று ‘டிஸிஷனில்’ ஒரு அழுத்தம் கொடுத்தான்.

சஞ்சுயுக்தா தீர்க்கமான குரலில் “நான் இந்த பிராஜக்ட்டை ஏற்று கொள்கிறேன்…ஆனால் உங்ககூட தனியாக தங்க மாட்டேன்… மற்றவர்களாடு நானும் ஹோட்டலில் தங்கிக்கொள்கிறேன்…!!” என்று கூறினாள்.

யாதிஷ் மிதப்பாய் ஒரு பார்வைப் பார்த்து “அப்படி பண்ண முடியாது மிஸ்.சஞ்சுயுக்தா… உங்களோடு சில விசயங்கள் பிராஜக்ட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணணும்…அன்ட் தென் பைனல் டிஸிஷன் எடுக்க வேண்டும்… அதனால் நீங்க என் கூட இருந்தால் தான் சரியாக இருக்கும்…!!” என்று மற்றவர்கள் முன் கூறிவிட்டு…அவளுக்கு அருகில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவான குரலில்,

“என்ன டார்லிங்…என்கிட்ட உனக்கு பயமா…??நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு நினைச்சனே…??” என்று அவளை சீண்டினான்.

அதில் அவளது தன்மானம் தூண்டிவிடப்பட,சஞ்சுயுக்தாவும் அதே மெதுவான குரலில் “உனக்கு எதுக்குடா நான் பயப்படணும்…நீ தான் எனக்கு பயப்படணும்…அதனால் என்கிட்டயிருந்து உன்னை எப்படி காப்பாத்தறதுனு யோசிச்சிக்கோ…!!” என்று சீறிவிட்டு,வெளியில் சஞ்சுயுக்தா வேறுவழியில்லாமல் பாவமாக முகத்தை வைத்து ஒத்துக்கொண்டதுபோல் நடித்தாள்.

அவள் அப்படி கூறியவுடன்…யாதிஷின் முகத்தில் எதையோ சாதித்து விட்ட திருப்தி ஏற்பட்டது.அவனுக்கு வேண்டியது அதுதானே…!!அதைக்கண்டு கொண்ட சஞ்சுயுக்தா ‘இவன் இப்போது கோபமில்லைப் படணும்…ஆனால் அவன் முகத்தில் அப்படி ஒண்ணும் தெரியலையே…சம்திங் ராங்…!!’ என்று நினைத்து அவனின் முகத்தைப் புரியாமல் பார்த்தாள்.

அதே யாதிஷ் தன் மனதில் ‘வாடி வா…உனக்கு அங்க ஆப்பு காத்துக்கிட்டே இருக்கு…!நீ என்கிட்ட மாட்டி படும் அவஸ்தையை பார்க்க இந்த யாதிஷ் கிருஷ்ணகுமார் காத்துக்கிட்டு இருக்கேன்…!!!’ என்று நினைத்து அவளின் மீது திமிரான பார்வை ஒன்றை செலுத்திவிட்டு கூட்டம் முடிந்தது என்று கூறி அனைவரையும் அவர்வர் இடம் போகச் செய்தான்.

விடைப்பெற்று கிளம்பும் சஞ்சுயுக்தாவின் பார்வையும்…அங்கே சுழல் நாற்காலியின் நுனியில் கை ஊன்றி நின்று கொண்டிருந்த யாதிஷின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது.ஆனால் இதில் ஒரு வேறுபாடு என்னவென்றால் இருவரும் காதல் கொண்டு பார்க்காமல்… ஒரு வித திமிருடன் ‘நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா…யாருனு பார்க்கலாம்…??’ என்பதை போல் நேருக்கு நேர் போர் தொடுக்கும் வீரர்களை போல் முறைப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.

அன்று மாலையில் சஞ்சுயுக்தா தனக்கு தேவையான பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு சென்றாள்.

அங்கே சென்று பார்த்தால் அவளை தவிர அந்த கம்பெனி சம்பந்தப்பட்டவர்கள் யாருமில்லை.அவளும் சிறிதுநேரம் பொறுத்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தவளின் பார்வை சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் அளவெடுத்துக் கொண்டிருந்தது.

அங்கங்கே ஓரிருவர் தங்களது குழந்தைகளுக்கு விளையாட்டி காட்டியவாறும் உணவை புகட்டியவாறும் இருக்க,சிலர் தனது கைப்பேசியில் யாருடனோ கடலைப் போட்டுக்கொண்டிருக்க,சிலர் அங்குமிங்கும் நடந்தவாறு விமான நிலையத்தை அளந்துக்கொண்டும் இருக்க,கொச்சின் விமானம் புறப்படுவதற்கு 
அரைமணி நேரம் மட்டுமே இருக்க சஞ்சுயுக்தா எரிச்சலுடன் ‘எங்கே யாரையும் காணோம்…??’ என்று வாயிற்பகுதியையே பார்த்து கொண்டிருந்தாள்.

கைகடிகாரத்தைப் பார்ப்பதும் அதன்பிறகு வாசலைப் பார்ப்பதுமாக இருந்தவளின் பொறுமையைச் சோதிக்கவென மேலும் இரண்டு நிமிடங்களாகியும் ஒருவரையும் காணாமல்…இதற்கு மேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது போல்…சஞ்சுயுக்தா தன் தோள் பையை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாரானாள்.

அப்போது பார்த்து “ஹாய் யுகி டார்லிங்…!!” என்று யாதிஷின் குரல் கேட்கவும்…சஞ்சுயுக்தா வெடுக்கென்று திரும்பி முறைத்தாள்.

யாதிஷ் கடல் நீல நிறத்தில் ஒரு டீசர்ட்டும்…கீழே கருநீல நிறத்தில் ஜீன்ஸும் கண்ணில் கூலர்ஸ் அணிந்து…சாதாரண உடையில் இருந்தாலும்…பார்க்கவே அம்சமாக இருந்தான்…அங்கிருந்த இளம்பெண்கள் அனைவரும் அவனின் மீது வைத்த கண்ணை எடுக்காமல்…அப்படியே ஆவென்று வாயைப் பிளந்தவாறு பார்த்து கொண்டிருந்தனர்.

அதைக்கண்ட சஞ்சுயுக்தாவிற்கு அப்படி எதுவும் தோன்றாமல்…அவன் டார்லிங் என்று அழைத்தினால் எரிச்சலுடன்…அவனையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் அவளை நெருங்கிய யாதிஷ் “யுகி டார்லிங்…முன்னாடியே வந்திட்டு…எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கியா…??சாரி டார்லிங்…லேட் ஆகிடுச்சு…!!” என்று குழைந்தவனை,

அனல் தெறிக்கும் பார்வை ஒன்றை அவன் மீது வீசி “டேய்…ஓவரா சீன் போடாதே…இனிமே என்ன டார்லிங் கூப்பிட்டே…கன்னம் பழுத்திரும்…!!” என்று கை துறுதுறுக்க எரிச்சலுடன் மொழிந்தாள்.

யாதிஷ் நமுட்டு சிரிப்புடன் “யார் கன்னம் டார்லிங்…உன்னுடையதா இல்லை என்னுடையதா…??” என்று கேட்டவனிடம் எதுவும் கூறாமல் முறைத்துவிட்டு மட்டும் திரும்பிக்கொண்டாள் சஞ்யுக்தா.

இப்போது யாதிஷ் “டார்லிங் வா…நம் பிளைட் நேம் அனவௌன்ஸ்(announce) பண்ணிட்டாங்க….நாம் கிளம்பலாம்…” என்று கூறி,அவளின் கையோடு கைக்கோர்க்க,

சஞ்சுயுக்தா ஆத்திரத்துடன் அவனின் கையைத் தட்டிவிட்டு “டேய் எத்தனை தடவை உன்கிட்ட சொல்லுறது டார்லிங்னு கூப்பிடாதானு…ஆமாம் மத்தவங்களாம் எங்கே…யாரையும் காணோம்…!!” என்று பல்லை கடித்து கேட்டவளைப் பார்த்து,

யாதிஷ் குறும்புடன் “டார்லிங்…நாம் ஹனிமூன் போகறதுக்கு அவங்க எதுக்கு…??” என்று கூறிவனின் மீது சூடான பார்வை ஒன்றை செலுத்த,அதில் கடுப்பான எதுவும் கூறாமல் வாசலை நோக்கி நடக்கவும்,யாதிஷிடம் இவ்வளவு நேரம் இருந்த குறும்புத்தனம் போய் இறுகிய முகத்துடன்,

அவளின் கையை வேகமாக இறுக்கி பிடித்து இழுத்து,பயணச்சீட்டு சரிப்பார்க்கும் பகுதியை நோக்கி நடந்தான்.அவனின் கையின் அழுத்தத்திலே அவனின் கோபம் தெரிந்தது.

இருந்தும் யுக்தா பெயருக்கு ஏற்றாற்போல் “கையை விடுடா பொறுக்கி ராஸ்கல்…இல்லைனா என்ன நடக்கும்னே தெரியாது…!!” தைரியமாக அவனிடம் சீறினாள்.

யாதிஷூம் அதற்கு சரியாக “என்னடி…வாய் ரொம்ப நீளுது…இதுக்கு மேலே ஏதாவது பேசின என்ன செய்வேன்னு எனக்கும் தெரியாது…!!” என்று அவனும் பதிலுக்கு சீறினான்.

அதற்குள் நான்கு ஐந்து பேர் தங்களைத் திரும்பி பார்க்கவும்,யாதிஷ் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தான்.

சஞ்சுயுக்தாவிற்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.

அவனிடமிருந்து கையை விடுவிக்க போராடியவாறு “டேய்…கையை விடுடா பொறுக்கி…இல்லைனா எல்லாரையும் கத்தி கூப்பிடுவேன்…!!” என்று இறங்கிய குரலில் சீறியவளை கண்களால் உறுத்து விழித்தவன்,

கைகளில் இன்னும் அழுத்தத்தை கூட்டி “ஏய்…இங்க பாருடி…பப்ளிக்கில் ஓவரா சீன் கிரேயிட் பண்ணாதே… மற்ற ஸ்டாஃபஸ் எல்லாம் நாளைக்கு வருவாங்க வாடி…” என்று சீறி முடிக்கவும்,பயணச்சீட்டு சரிப்பார்க்கும் பகுதி வருவதற்கும் சரியாக இருந்தது.

அதனால் யாதிஷ் அமைதியாக தன் பையிலிருந்து பயணச்சீட்டை எடுத்து அங்கிருந்த பெண்மணியிடம் கொடுத்துவிட்டு,சஞ்சுயுக்தாவிடம் அவளுடைய பயணச்சீட்டிற்காக கையை நீட்டினான்.

மற்றவர்கள் எல்லாம் நாளை வருவார்கள் என்று கூறியதால் சிறிது கோபத்தை குறைத்த சஞ்சுயுக்தா…அவன் கேட்டப்படியே அமைதியாக பயணச்சீட்டை எடுத்து கொடுத்தாள்.

யாதிஷ் அவளை ஆச்சரியமாக பார்த்துவிட்டு பயணச்சீட்டை வாங்கி…அந்த கவுண்டரில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் கொடுத்தான்.

அவர் சரிப்பார்த்து யாதிஷிடம் இரண்டு பயணச்சீட்டையும் கொடுத்துவிட்டு “ஹாப்பி ஜெர்னி…!!” என்று புன்னகையோடு கூறியதைக் கேட்டு இருவரும் சிரித்த முகமாகவே அவருக்கு நன்றி செலுத்திவிட்டு இந்தப்பக்கம் நகர்ந்து மறுபடியும் எலியும் பூனையுமாய் அடித்துக் கொண்டிருந்தனர்.

யாதிஷ் மற்றவர்கள் இப்போது நம்மோடு வரவில்லை என்று கூறினால்…சஞ்சுயுக்தா தன்னிடம் சண்டையிட்டு தன்னோடு வரவில்லை என்று கூறுவாள் என்ற காரணத்திற்காக தான்.கடைசி அரைமணிநேரம் இருக்கும் போது…விமான நிலையத்தினுள் நுழைந்தான்.கடைசி நேரத்தில் அவள் மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கையில் இருந்தான் யாதிஷ்.

அதுவரை அவனுடைய காரில் பொறுமையாகக் காத்திருந்தான்.ஆனால் யாதிஷ் உண்மையில் அவர்களையெல்லாம் வர வேண்டாம் என்று நினைக்கவில்லை.பயணச்சீட்டு பதிவி செய்யும் போது மற்றவர்களுக்கெல்லாம் சீட்டு கிடைக்கவில்லை. இவர்கள் இருவருக்குமே வணிக வர்க்க பிரிவில் தான் பயணச்சீட்டு கிடைத்தது.அதனால் மற்றவர்களை நாளை வருமாறு பணித்துவிட்டு யாதிஷ் சஞ்சுயுக்தாவிடம் கிளம்பிவிட்டான்.

ஆனால் சஞ்சுயுக்தா இப்போதும் வரமாட்டேன் என்று கூறுவாள் என்று யாதிஷ் நினைக்கவில்லை.அதுமட்டுமில்லாமல் யாதிஷ் அவ்வளவு கூறியும் தன்னை புரிந்துக்கொள்ளாமல் பாம்பாய் சீறுவது இன்னும் எரிச்சலைக் கிளப்பியது யாதிஷிற்கு…!!

“ஏய்…போதும் நிறுத்துடி…எத்தனை தடவை சொல்லறது…அவங்க நாளைக்கு வருவாங்கனு…சொன்னால் கேட்காமல்…திரும்ப திரும்ப அதையே கேட்டுட்டு இருக்கே பைத்தியகாரி மாதிரி…தனியா வந்தால்…நான் உன்னை ஒண்ணும் கடிச்சித் திங்கமாட்டேன்… அந்தமாதிரி பையனும் நானில்லை… இப்போ நீ வரப்போறியா இல்லையா…??” என்று பொறுமையிழந்து கத்திவிட்டு ‘நீ வந்தால் வா…இல்லைனா போ’ என அலட்சியமாக நினைத்து கோபத்துடன்  திரும்பி நடந்துவிட்டான்.

சஞ்சுயுக்தா திருதிருவென்று முழித்துவிட்டு வேறுவழியின்றி எரிச்சலோடு அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.

விமானத்தின் உள்ளே சென்று தனது இருக்கையின் மேலே இருந்த அலமாரியில் தனது பையை வைத்துவிட்டு யாதிஷ் இருவர் அமரும் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்துவிட்டான்.

சஞ்சுயுக்தா தனது பையை மேலே வைக்கமுடியாமல் சற்று தடுமாறினாள்.அதில் அவள் அணிந்திருந்த டீசர்ட் விலகி…அவளுடைய வனப்பான இடுப்பு பகுதி பளிச்சென்று தெரிந்தது.அதைக் கண்டு கொண்ட யாதிஷின் மனம் அதைத் தொட வேண்டும் என்பதைப் போல் குறுகுறுத்தது.ஆனால் அவளின் கோபத்தை அறிந்து ‘அச்சோ வேணாம்…அப்புறம் பேயாட்டம் ஆடுவா’ என வலுக்கட்டாயமாக பார்வையை வேறுப்பக்கம் திருப்பிக்கொண்டான்.

ஐந்து நிமிடங்கள் கடந்த பின்பும் அவள் இப்போதும் அந்த பையை வைக்க சிரமப்படுவதை அறிந்த யாதிஷ்.அவளுக்கு உதவி செய்ய எழுவதற்கும்… சஞ்சுயுக்தா அவனிடம் உதவிக் கேட்பதற்காக கீழே குனிவதற்கும் சரியாக இருந்தது.

இருவரும் ஒன்றோடு ஒன்று தேகம் உரச மோதிக்கொண்டனர்…அதில் சஞ்சுயுக்தா தடுமாறி கீழே விழப்போக அவளையும் தன்னையும் சேர்ந்தே தாங்கி அவளை நிறுத்தினான் யாதிஷ்.

அவனது கரங்கள் முன்பு செய்ய நினைத்த காரியத்தை இப்போது சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் செய்திருந்தது.

அவளை கீழே விழாமல் காக்க எண்ணி அவளின் வெண்ணிற இடையை அழுத்தமாக பற்றியிருந்தது.இப்போது இருவரின் பார்வையும் ஓரே நேர்க்கோட்டில் பயணத்தது.

முன்பு போல் இருவரின் பார்வையில் எரிச்சலின்றி ஒரு புதுவித உணர்வோடு ஒன்றை ஒன்று தழுவியிருந்தது.

தொடர்ந்து எத்தனை நொடிகள் அப்படியே நின்றிருந்தார்களோ ஒலிவாங்கியில் வந்த அறிவிப்பில் கலைந்த இருவரும் அவசரமாக பிரிந்தார்கள்.

சஞ்சுயுக்தா தன்னுணர்வு மீண்டு அவனிடமிருந்து அவசரமாக விலகி நின்று அவனை முறைத்து “பார்த்து எழுந்திருக்கக்கூடாது ஸ்டூபிட்…!!” என்று திட்டியவுடன்,

யாதிஷும் அதிலிருந்து வெளியே வந்து கடுப்புடன் “ஏன் நீ பார்த்து குனியக்கூடாது இடியட்…!!” என்று அவனும் பதிலுக்கு திட்டினான்.

சஞ்சுயுக்தா பெருஞ்சினத்துடன் “யாரை பார்த்து இடியட் சொன்னே…??உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும்…உன்னை கொல்லப்போறேன்டா…!!” என்று எகிறிக்கொண்மு அவனின் கழுத்தை நெரிக்கப் போனவளின் கையைப்பிடித்து தடுத்தவன்,

“நீ எவ்வளவு தைரியத்தோடு ஸ்டுபிட் சொன்னியோ…அதே தைரியத்தோடு தான் நானும் இடியட் சொன்னேன்…!!” என்று கூறி அவளை இருக்கையில் தள்ளிவிட்டு,இவன் அவளின் பையை எடுத்து மேலே வைத்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.  

அவன் அமர்ந்தவுடன் எரிச்சலோடு அவனை பார்த்தாள் சஞ்சுயுக்தா.

அதற்குள் விமானப் பணிப்பெண் வந்து விமானம் கிளம்ப இருப்பதால் இருவரை நோக்கி வந்து இருக்கைப் பட்டியை போடுமாறு பணித்து விட்டு சென்றார்.

ஜன்னலின் அருகில் சஞ்சுயுக்தாவும் அவளுக்கு பக்கத்தில் யாதிஷும் அமர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் சண்டைக்கோழி போல் முறைத்துக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு இப்போது அவளின் இல்ல தலைவி கூறிய “நிதானம் பிராதானம்” என்ற பழமொழி நினைவில் எழ அதை மனதில் இருத்தி ‘நீ எங்க போயிட போறே…எனக்கு நேரம் வரும்போது…உன்னை நான் பார்த்துக்கிறேன்டா…!!’ என்று மனதில் கறுவி அமைதியானாள்.

யாதிஷும் மனதில் ‘உன்னை தனியாக கூட்டிட்டு போய் உனக்கொரு பாடம் கற்பிக்காமல் விட மாட்டேன்டி…முடிந்தால் வரும்போது மிஸஸ்.யாதிஷ் கிருஷ்ணகுமாரா வர வைக்கிறேன்…இல்லைனா குறைந்தபட்சம் நீ என்னை திருமணம் செய்ய சம்மதம் சொல்ல வைக்கிறேன்…அப்படி இல்லைனா…என் பேரு யாதிஷ் கிருஷ்ணகுமாரே இல்லைடி…!!’ என்று கறுவிக்கொண்டான்.

—————————————————————————————

செழியன் தனது மேலதிகாரியைக் காண்பதற்காக,காவல் துணை ஆணையரின் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்து காலை அடித்து நிறுத்தி விறைப்புடன் ஒரு சல்யூட் அடித்து “எஸ் சார்…!!” என்று கம்பீரமாக கூறினான்.

ஆணையர் ஏதோ வேலையாக முக்கியமான கோப்பை பார்த்துக்கொண்டிருந்தவர் செழியனின் குரல் கேட்டு நிமிர்ந்து “சிட் டவுன் மிஸ்டர் நெடுஞ்செழியன்…!!” என்று கூறி அவனை அமரச்செய்த பிறகு,

“வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர் மிஸ்டர் செழியன்…??நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா…??” என்று நேரடியாக கேள்வி கேட்டவரிடம்,

செழியன் சற்றும் தயங்காமல் நேருக்கு நேர் பார்த்து “சார்…நீங்க எதை பத்தி கேட்கறீங்க சார்…!!” என்று கடினமாகவே கேட்டான்.

“என்ன செழியன் இது…ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் ஃபர்ம் யூ…தப்பு செய்யாதவனை ஜெயிலில் வைத்து கொல்ல பார்த்திருக்கீங்க… மினிஸ்டர் போன் பண்ணி என்கிட்ட அந்து கத்து கத்துகிறார்…அதுமட்டுமில்லாமல் ஒரு வாரம் முன்னாடி ஜெயிலில் இருந்து தப்பிச்சு போன மாரியை சுட்டிருக்கீங்க இதுமட்டும் பத்திரிக்கைகாரர்களுக்கு தெரிய வந்தால் உங்களுக்கு மட்டும் இல்லை…இந்த டிபார்ட்மெண்ட்டுக்கே பிராப்ளம் தான்…உங்களால் இனிமே இந்த போலீஸ் டிரஸே போடமுடியாதப்படி பண்ணியிருவாங்க…கூடவே உங்க மேலே ஆக்‌ஷன் எடுக்கலைனா…எனக்கும் பிரச்சனை தான்…இதுக்கு உங்களோட பதில் என்ன மிஸ்டர்.நெடுஞ்செழியன்…??” என்று கேட்டவுடன்,

செழியன் முகம் சிவக்க கடுப்புடன் “யார் சார் அப்பாவி…அந்த ராஸ்கல் ஒரு சின்ன பொண்ணை கற்பழிக்க முயற்சி பண்ணியிருக்கான்…அவனை சும்மா விட சொல்லுறீங்களா…?? எனக்கு இருக்க கோபத்திற்கு அவனை அப்படியே கொன்னாலும் தப்பில்லை…அப்புறம் இந்த மாரி… கள்ளச்சாராயம் காய்ச்சி பல குடும்பத்தை சீரழிச்சிருக்கான்… அவனையும் சும்மா விட சொல்லுறீங்களா சார்…??என்னைப் பொறுத்தவரை நான் செஞ்சது எல்லாமே சரி தான் சார்…ஆனால் இந்த செந்தில் மட்டும் எஸ்கேப் ஆகிட்டான்…!பிளடி ராஸ்கல்…!” என்று எரிச்சலுடன் மொழிந்து தனது தொடையில் குத்தினான்.

ஆணையர் “செழியன் இதெல்லாம் சரி தான்…ஆனால் அந்த பொண்ணு வீட்டில் கம்பிளைன்ட் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை…ஆனால் அதுவுமில்லை…அதன்பிறகு எதை வைச்சு…நீங்க இந்த மாதிரி ஆக்‌ஷன் எடுத்தீங்க…??” என்று கேட்டவரிடம்,

“சார் இது ஒரு சின்ன பொண்ணு சம்பந்தப்பட்டது…இது வெளியிலே தெரிய வந்தால்…பொண்ணு வாழ்க்கை கெட்டு போயிடும்னு பயப்படறாங்க பேரன்ட்ஸ்…இது சராசரி பெற்றோரின் மனநிலை தான்…அதனால் தான் நானே அவன் மேல் ஆக்‌ஷன் எடுத்தேன்…!!” என்று விளக்கினான்.

ஆணையர் “நீங்க என்ன காரணம் சொன்னாலும்…நீங்க செஞ்சது தப்பு மிஸ்டர்.நெடுஞ்செழியன்…அதுமட்டுமில்லாமல் மேலிடத்திலிருந்து பிரஸர் கொடுக்கறாங்க…அதனால் சாரி டூ சே திஸ் நெடுஞ்செழியன்… உங்களை ஒரு மாத காலம் சஸ்பென்ட் பண்ணறேன்…!நான் இடைநீக்கம் பண்ணிலைனா…உங்களை வேலையை விட்டு தூக்கிடுவாங்க…உங்களை மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி…இந்த டிபார்ட்மெண்ட்டுக்கு தேவை…அதனால் தான் இந்த முடிவு…!!!” என்று தீர்மானத்துடன் கூறினார்.

நெடுஞ்செழியன் ஒரு அலட்சிய புன்னகையுடன் “சார் தப்பு செய்யறவனுக்கு ஒரு நாளும் தண்டனை கொடுக்கக்கூடாது…அதே தப்பை தட்டிக்கேட்கறவனுக்கு உடனடியா தண்டனை கொடுக்கணும்…அதான் இந்த உலக நியதி…அதில் நீங்க மட்டும் விதி விலக்கா என்ன…??நம்மையெல்லாம் எத்தனை தலைவர்கள் வந்தாலும் திருத்தமுடியாது… எனிவே ரொம்ப நன்றி சார்…!!” வார்த்தையில் குத்துலுடன் பேசிவிட்டு கம்பீரமான நடையுடன் அங்கிருந்து விடைப்பெற்றான்.

காவல் ஆணையர் அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தார்… அவர் மனதில் ‘வேற வழியில்லை செழியன்…நீங்க இங்கிருந்தால் உங்களை அவங்க உயிரோடு விடமாட்டாங்க…அதை உங்ககிட்ட சொன்னால் கேட்கமாட்டீங்க…அதனால் தான் உங்களை இங்கிருந்து அனுப்பினேன்…!!’ என்று நினைத்து பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தனது கோப்பையில் கவனத்தைச் செலுத்தினார்.

செழியன் சினத்துடன் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அவனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.அதை எடுத்து பேசியவனின் முகத்தில்…வாழ்க்கையில் முதன்முறையாக பதட்டம் ஏற்பட்டது.பேசி முடித்தவன் உடனடியாக தனது பொருள்களை ஒரு பையில் திணித்துக் கொண்டு அங்கிருந்து அவசரமாக கிளம்பினான்.

அவன் சென்ற சிறிதுநேரத்தில் பிரபாகரன் அவனின் வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.கதவைத் திறக்கவில்லை என்றவுடன்…கிளம்ப தயாரானவர் முன் ஒரு காவலர் வந்து நின்று “செழியன் சாரைப் பார்க்க வந்தீங்களா…??” என்று கேட்டவுடன்,

“ஆமாம் தம்பி…அவர் இல்லையா…??” என்று குழப்பத்துடன் வினவியவரிடம்,

“ஓ…உங்களுக்கு விசயமே தெரியாதா…ஐயாவை ஒரு மாசம் சஸ்பென்ட் பண்ணியிருக்காங்க…அதனால் ஐயா…அவங்க சொந்த ஊருக்கு போயிட்டார்…!!” என்று கூறிவிட்டு வந்த வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து நகர்ந்தார் அந்த காவலர்.

பிரபாகரனுக்கு பலத்த அதிர்ச்சி இருந்தும் தன்னை சமாளித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று தன் மனைவியிடம் இதைப் பற்றி கூறினார்.

அவருக்கும் இது அதிர்ச்சியே என்றாலும் கூடவே ஒரு பயமும் எழ “என்னங்க இப்படி அபசகுனமா நடக்குது…இப்போ தான் நம் பொண்ணு கல்யாணம் பத்தி பேச போனீங்க…அதுக்குள்ள இப்படி ஒரு தடங்கல்…எனக்கு என்ன சொல்லறதுனே தெரியலைங்க…” என்று வருத்தத்துடன் கூறியவரிடம்,

“பானு அப்படியெல்லாம் இல்லை…இப்போ நம்ம பொண்ணுக்கு கல்யாண நேரம் கூடி வரலைப் போல…கொஞ்ச நாள் பொறுமையா இருப்போம்…அவர் எங்க போகப் போறார்…இங்க தான் திரும்பி வரணும் பார்த்துக்கலாம்…!!” என்று கூறி அவரை சமாதானம் செய்தார்.

ஆனால் அவன் திரும்பி வரும்போது தாம் இந்த உலகத்திலே இருக்க போவதில்லை என்று பாவம் அவர்கள் அறியவில்லை…!!

செழியன் பேருந்தில் ஏறி தன் சொந்த ஊரான தஞ்சாவூரை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தான்.ஏனெனில் இரண்டு மணிநேரத்திற்கு முன் அவன் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.அதில் ‘உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…அதனால் உடனடியா வா’ என்று கூறி அழைப்பை துண்டித்தார். அதனால் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாக கிளம்பிவிட்டான் செழியன்.

செழியன் தமிழ்மணி மல்லிகாவின் ஒரே தவப்புதல்வன்…அவன் தான் அந்த வீட்டின் ஒரே வாரிசு…அவர்களுக்கும் ஏகப்பட்ட சொத்துகள் இருக்கிறது…அந்த சொத்துகளின் ஒரே வாரிசான செழியன்… அவர்களின் தொழிலை ஏற்று நடத்துவான் என்று பெற்றோர் ஆசைப்பட்டுயிருக்க,அவனோ நான் காவல் துறையில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யப்போகிறேன் என தனது ஆசையை வெளிப்படுத்த,அவனின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் பெற்றோரும் அவனுடைய வழியில் விட்டுவிட்டனர் செழியனின் பெற்றோர்கள்.

மல்லிகா தன் பிள்ளையின் மீது அலாதி பிரியம் கொண்டவர்.செழியனும் அம்மாவிடம் அதே அளவு பிரியம் கொண்டவன்.அதனால் அவனுக்கு காவல்துறை வேலையினால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்து மல்லிகா அவ்வப்போது பயந்துக் கொண்டிருப்பார்.அப்போதெல்லாம் செழியன் தான் அவருக்கு ஆறுதல் அளிப்பான்.இருந்தும் அவர் மனதில் ஒரு நெருடல் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று யோசித்து செழியனிடம் பேசினால்,அவன் அவருக்கு பிடிக்கொடுக்காமலே இருந்தான்…அதனால் அவர் ஒரு திட்டம் தீட்டி…தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி அவனை வரவழைத்திருந்தார்.அதைக்கேட்டு தான் செழியன் பதட்டத்துடன் வந்துக்கொண்டிருந்தான்.அரசியல் வாதிகளையே ஆட்டம் காண்பித்து கொண்டிருக்கும் தனது மகனிடம் மல்லிகா ஒரு போலியான நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் இவையெல்லாம் நாடகம் என்று தெரிந்தால் அவனின் நடவடிக்கை என்னவாக இருக்கும்…??

ஆனால் மல்லிகாவிற்கு பயமேதுமில்லாமல் தனது பையனைச் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.ஆனால் வந்தவுடன் அவனுடைய ஆட்டத்தைப் பார்த்து அவரே பயப்படுவார் என்று அறியவில்லை…!!

செழியன் செந்தில் மற்றும் ஆணையரின் மீது உள்ள கோபத்தோடு… அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்ற பதட்டமும் சேர்ந்து கொள்ள ஒரு புதுமாதிரியான உணர்வுடன் தனது வீட்டினுள் காலடி எடுத்து வைத்தவன் வீடு முழுவதும் சொந்தக்காரர்கள் நிரம்பி இருக்கவும் தனது தாயிற்கு ‘என்னமோ ஏதோ’ என்று பதறியடித்து தனது தாயின் அறைக்கு ஓடினான்.

அங்கு அவர் கண்ணாடி முன் நின்று தனது நகைகளைச் சரிப்பாரத்து கொண்டிருக்கவும் அவரை பார்த்து ஒரு நொடி நிம்மதியடைந்தவன்… அடுத்த நொடி தனது தந்தை கூறியது பொய் என்று அறிந்தவனின் கோபம் தலைகேறியது.

அப்போது தான் மகன் தன் அறையில் நிற்பதை பார்த்தவர் முகத்தில் புன்னகையுடன் “செழியா வந்திட்டியா…!!” என்று ஆசையாக கூறி அவனின் முகத்தைப் பார்த்தவர்…அவனின் கண்கள் கோபத்தில் சிவந்து இருப்பது தெரிய…அவருக்கு பயத்தில் அந்த ஏ.சி அறையிலும் வியர்க்க ஆரம்பித்தது.

அவர் உள்ளே சென்ற குரலில் “செழியா…!!” என்று பயத்துடன் மென்று முழுங்கியவரை வேட்டையாடும் புலியின் வெறியில் இருந்தவன்…அவரை நெருங்கி “அம்மாஆஆஆஆஆ…!!” என்று அந்த பெரிய வீடே அதிரும் அளவு கத்தியவன்,தொடர்ந்து “பொய் சொல்லி என்னை வர வைச்சிருக்கீங்களே உங்களுக்கு அறிவில்லை… உங்களுக்கு என்னமோ ஏதோ என்று பயந்து போய் உயிரை கையில் புடிச்சு ஓடி வந்தால்…நீங்க சீவி சிங்காரிச்சிக்கிட்டு இருக்கீங்க…உங்களுக்கு உங்க பையனின் அவஸ்தையை விட…நீங்கள் நினைத்ததை சாதிக்கணும்…அதுதான் பெருசுயில்லை…ச்சை உங்களைப் பார்க்கவே எரிச்சலா இருக்கு…!!” என்று கர்ஜித்து வெறுப்புடன் முகம் சுழித்தான்.

செந்திலின் மீது இருந்த சினத்தோடு நான்கு மணி நேரம் பட்ட வேதனையையும் சேர…பேசுவது சரியா தவறா என்று அவனிற்கே தெரியாமல்… வார்த்தையில் அவற்றை சூடாய் வெளிப்படுத்தினான்.ஆனால் இதைக் கேட்டு தனது தாய் எத்தனை வேதனைப்படுவாள் என்று யோசிக்காமல் பேசிவிட்டான்.

இதுவரை செழியன் வீட்டில் யாரிடமும் கோபத்தை காட்டியதில்லை… எத்தனை கோபம் தனது தாயின் மேல் வந்தாலும்…அதனை அடக்கியே பழக்கப்பட்ட செழியன்…தனது மனதை அழுத்திய சுமையை… தாங்கமுடியாமல்…தனது தாயிடம் இறக்கி வைத்துவிட்டான்…ஆனால் ஆதரவு தேடும் குழந்தையாய் இல்லாமல்…வேட்டையாடும் புலியாய்…!! அவரை வார்த்தையால் குத்தி கிழித்துவிட்டு…அவரிடம் ஆதரவைத் தேடினான்.

இப்போது அவன் மனதில் இருந்த கோபம் முற்றிலும் வடிந்தது.ஆனால் அவனின் தாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை தாங்க முடியாமல் அவரை அப்படி பேசிய தன்னையே நொந்து கொண்டு தாயிடம் மன்னிப்பை யாசினான்.

“அம்மா…என்னை மன்னிச்சிடுங்க…பிளீஸ்ம்மா…எனக்கு தெரியாமல் அப்படி பேசிவிட்டேன்…!!” என்று அவரின் அருகில் அமர்ந்து…அவரின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு கூறினான்.

அப்போதும் அவர் சமாதானமாகாமல் அழுது கொண்டே இருக்கவும் “பிளீஸ்ம்மா…நான் வேணும்னே அப்படி பண்ணலைம்மா…!!வேலையில் ஒரு டென்ஷன்…அத்தோடு சேர்த்து உங்களுக்கு உடம்பு சரியில்லை என்ற டென்ஷன் வேறே…நான் பயந்து போய் இங்க வந்து பார்த்தால்… நீங்க அலங்காரத்துடன் நிற்கவும்…எனக்கே தெரியாமல் கோபமாக பேசிட்டேன்ம்மா… சாரிம்மா…!!” என்று எப்போதும் கெஞ்சி பழகி இருக்காதவன்… இப்போது கெஞ்சியும் அவர் மனம் சமாதானமடையாமல் கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் வந்து கொண்டே இருந்தது.

செழியனுக்கு இதுவரை யாரிடமும் கெஞ்சி பழக்கமில்லை,தன் குடும்பத்திடம் உட்பட…!!

இன்று தன் மேல் தவறு இருக்கவும் தான்,அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.ஆனால் எவ்வளவு தூரம் கெஞ்சியும்…அவர் சமாதானமாகமல் இருக்கவும்…அவனுக்கு அதற்கு மேல் தன் தாயை என்ன செய்து சமாதானம் செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.

“அம்மா…நான் செஞ்ச தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் சரிம்மா…!!” என்றவுடன் அவனது தாயின் கண்களில் ஒரே ஒரு நொடி ஒளி வந்து சென்றது.ஆனாலும் அவர் அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருக்கவும்,

செழியன் “சரிம்மா…நான் இங்க வந்ததில் தானே பிரச்சனை நான் கிளம்பறேன்ம்மா…!!” என்று அவரின் கையைவிட்டு கிளம்ப தயாரானவனிடம்,

மல்லிகா அழுகையோடே “செழியா…நான் என்ன சொன்னாலும் செய்வியா…??” என்று கேள்வி எழுப்பியவரிடம்,

அவர் சமாதானமானால் போதும் என்று நினைத்து…அவர் கல்யாண பந்தத்தில் சிக்க வைக்கப்போவது அறிந்தும் “சரிம்மா…!!” என்று கூறினான்.

இப்போது அவரின் அழுகை நின்று…முகத்தில் மலர்ச்சியோடு “அப்போ சரி…இந்த டிரஸ் போட்டு ரெடியாகு…நாம் ஒரு இடத்திற்கு போகணும்…!!” என்றவுடன் அவனும் வேறவழியில்லாமல் அந்த புதுத்துணி அணிந்து தயாரானான்.

புதுத்துணி அணிந்து தயாராகி வந்த மகனைப் பார்த்த மல்லிகா தனது மகனின் கம்பீரத்தையும் அழகையும் நினைத்து பூரிக்காமல் இருக்கமுடியவில்லை.

செழியன் சிவப்பு நிற சட்டை கீழே கருப்பு நிற காலச்சட்டை மற்றும் கண்களில் கூலர்ஸ் அணிந்து நடந்தவனின் பாணி பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

அவனின் அருகில் வந்து அவனிற்கு திருஷ்டி கழித்துவிட்டு அதன்பிறகு சிறிய புன்னகையுடன் “செழியா இந்த கண்ணாடி மட்டும் கழட்டிடு தம்பி…நீ வெளியே எங்கேயாவது போகும்போது இதைப் போட்டுக்கோ…இது உனக்கு அழகா இருக்கு…ஆனால் அவங்க வீட்டில் எல்லாரும்…உன்னை நல்லா பார்க்கணும்…!!” என்று கூறியவரின் பேச்சை தட்டமுடியாமல் அதை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

குடும்பசகிதமாக ஒரு இருபது பேர் அடங்கிய குழுக்கள் அனைவரும் காரில் ஏறிச் சென்று பெண் வீட்டையடைந்தனர்.

வீட்டின் முன் இருந்த அலங்காரங்களைப் பார்த்தால் செழியனுக்கு பெண் பார்க்க வந்த இடம் போல் தெரியாமல் ஏதோ திருமணம் உறுதி செய்யும் இடம்போல் காட்சியளிக்க…செழியனுக்கு தனது தாயின் மீது சந்தேகம் எழ அவரைத் திரும்பி பார்த்தான்.ஆனால் அவர் அவனின் பார்வையை நேருக்கு நேர் சந்திக்காமல் தவிர்த்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து செழியனுக்கு சினம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.அவனுக்கு இப்படியே சென்றுவிடலாமா என்று கூட தோன்றியது.

இருந்தும் தன் தாயை அடுத்தவரின் முன் அவமாதிக்க விரும்பாமல் தன் தலையைக் கோதி கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.

அதற்குள் பெண்வீட்டினர் தங்களை அழைக்கவும் செழியன் சிரித்த முகமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.அங்கே அனைவரும் கூடியிருக்க பெண்ணை அழைத்து வந்து சபையில் உட்கார வைத்தனர்.

செழியனுக்கு அந்த பெண் பார்ப்பதற்கு நன்றாக இருந்ததினால்… அவளைப் பிடித்திருந்தது.ஆனால் அவனிற்கு தேவை ஒரு தைரியசாலியான பெண்.ஏனெனில் திருமணத்திற்கு பிறகு…அவன் வீட்டில் இல்லாத சமயம் வரும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள துணிச்சல் மிகுந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.அதனால் நிச்சயதார்த்திற்கு முன் அவளிடம் தனியாக பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அதன்படி அனைவரின் முன்னிலையில் பெண்ணின் தந்தையிடம் “நான் உங்க பொண்ணுக்கிட்ட ஒரு 5 நிமிஷம் பேசணும்…அதன்பிறகு இந்த நிச்சயதார்த்ததை வைச்சுக்கிலாம்னு நினைக்கிறேன்…!!” என்று பளிச்சென்று கூறினான்.

அதைக்கேட்டவுடன் செழியனின் பெற்றோருக்கு மனதில் கலக்கம் சூழ்ந்தது.மற்றவர் அனைவரிடமும் ஒரு வித அமைதி நிலவியது.அதன்பிறகு அந்த திருமண பெண்ணே தைரியமாக “அப்பா…நான் அவரிடம் பேசிட்டு வந்த பிறகு நிச்சயதார்த்தம் வைச்சிக்கலாம்ப்பா…!!” என்று கூறியவுடன் இப்போது செழியனுக்கு அவளின் மேல் சுவாரசியம் கூடியது.ஏனெனில் அவனுக்கு தேவை இந்த தைரியம் தானே…!!

அதன்பிறகு இருவரும் தனித்து விடப்பட செழியன் “உங்க பெயர் என்ன…??” என்று அவளின் கண்களுக்குள் கூர்ந்து பார்த்து வினவினான்.

அவள் இவனை ஆச்சரியமாகப் பார்த்து “என் பெயர் கூட தெரியாமலா…இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டீங்க…??” என்று எதிர்கேள்வி கேட்டவளிடம் தனது தாயை விட்டு கொடுக்காமல்,

“இல்லை…அம்மா சொன்னாங்க…நான் தான் மறந்திட்டேன்…!!” என்று கூறியவுடன்,

அவள் புன்னகைத்துவிட்டு “மீனா என்கிற மீனலோச்சனி…!!” என்று கூறினாள்.

செழியன் சிறு புன்னகையுடன் “ஓகே…உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும்னு நினைக்கிறேன்.அதை சொல்லி முடிச்ச பிறகு உங்களுடைய அபிப்ராயத்தை சொல்லுங்க…!!” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான்.

“நான் இந்த போலீஸ் வேலையில் சேர்ந்த இத்தனை வருஷத்தில் நிறைய டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க…ஏனெனில் என்னுடைய நடவடிக்கை அப்படி இருக்கும்.தப்பு என்று எனக்கு தோன்றினால்… யார் என்றே பார்க்காமல்…அவர்களுக்கு தக்க தண்டணை கொடுத்திடுவேன்.அதனால் எனக்கு எதிரிகளும் அதிகம்…இப்போது கூட ஒரு பிரச்சனையின் காரணமாக என்னை ஒரு மாதம் சஸ்பெண்டு பண்ணியிருக்காங்க…சொல்லப் போனால் எனக்கு வேலையில்லை… இப்போது உங்களோட முடிவைச் சொல்லுங்க…!!” என்று பேசிக்கொண்டே அவளின் முகப்பாவனையைக் கவனித்து கொண்டிருந்தான்.அவளின் கண்களில் பயமும் அதிர்ச்சியும் எதுவும் இல்லாமல் இருக்கவும் அவனுக்கு திருப்தியாக இருந்தது.

மீனா அதற்கு புன்னகைத்துவிட்டு “நீங்க போலீஸ் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே…நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தேன்.மேலும் நேர்மையான அதிகாரிகளுக்கு மட்டும் தான்…இந்த மாதிரி அடிக்கடி டிரான்ஸ்பர் பண்ணுவாங்க…இதிலிருந்த தெரியுது…நீங்க ஒரு நேர்மையான அதிகாரினு…இப்போது கூட உங்கள் சஸ்பெண்டு பத்தி எனக்கு கவலையில்லை…நீங்க வேலையில் சேரும் வரை…நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்…!!” என்று மறைமுகமாக இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னவளை செழியனுக்கு மிகவும் பிடித்தது.

இருந்தும் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“என்னை சுத்தி நிறைய ஆபத்துகள் இருக்கு…என்னை கல்யாணம் செய்தால் உங்களின் உயிருக்கு கூட ஆபத்து நேரிட வாய்ப்பு இருக்கு.ஏன் என் உயிர் போகக் கூட வாய்ப்பு இருக்கு…இப்போதும் என்னைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கீறிங்களா…??” என்று கேட்டு அவளை பார்வையால் துளைத்தெடுத்தான்.

“நாட்டிற்காக என் உயிர் போனால் கூட கவலையில்லை.அதேசமயம் உங்க உயிருக்கு ஆபத்து வந்தாலும்…அதை ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவமும் மன தைரியமும் எனக்கு இருக்கிறது.எனக்கு உங்களின் போட்டாவைப் பார்த்து பிடித்த உடனே நான் இதெற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறேன்…!!” என்று கூறியவளை இப்போது செழியன் ஆச்சரியமாக பார்த்துவிட்டு,

“சரி வாங்க போகலாம்…!!” என்று அவளை உள்ளே அழைத்து சென்று இன்முகமாகவே நிச்சயத்தை நடத்தலாம் என்று கூறி மீனாவைப் பார்த்து புன்னகைத்தான்.

அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.அதைப் பார்த்த பிறகு தான் செழியனின் தாயிற்கு போன மூச்சு திரும்பி வந்தது.

அதன்பிறகு மளமளவென்று தட்டை மாற்றி இருவரும் மோதிரத்தை மாற்றிக்கொண்டனர்.

இரவு உறங்கும் போது தான் மகிழாவின் ஞாபகம் வர ‘மகிழாவின் அப்பாவிடம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி எச்சரிக்காமல் வந்திட்டுமே…சரி நாளைக்கு முதல் வேலையா… அவங்களுக்கு போன் செய்து பேசணும்…!!’ என்று நினைத்து கண்மூடினான்.ஆனால் அதற்குள் நிலைமை கை மீறி சென்றிருந்தது…!!

ஏனெனில் அங்கே மகிழா உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தாள்.

“பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் இடையில்
விதி எங்கே எப்போது எந்த உருவத்தில்
நுழைந்தது என்று யாருக்கு தெரியும்…??”

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top