செழியன் அன்றைய இரவு முழுவதும் மகிழாவைப் பற்றிய சிந்தனையிலே கழித்தான்.
‘யாரது இந்த மாதிரி செய்தது…??குழந்தை தனமான பொண்ணை இப்படி செய்ய நினைக்க எப்படி மனசு வந்தது…அவனெல்லாம் மனசுனா இல்லை மிருக ஜாதியா…??இந்த மாதிரி செய்பவனையெல்லாம் நடுரோட்டில் நிற்க வைச்சு சுடணும்…பொறுக்கி ராஸ்கல்…இருடா…உன்னை கண்டுப்பிடிச்சு வந்து என்ன செய்யப்போறேனு பாரு…என்கிட்ட கூடிய சீக்கிரம் மாட்டுவே… மாட்டுனே கிழிச்சி நாறு நாறா தொங்கவிடறேனா இல்லையானு பாரு…!!!’ என்று வன்மத்துடன் முகம் தெரியாதவனை வஞ்சித்து விட்டு விடியும் வேளையில் தான் கண்ணயர்ந்தான்.
மகிழாவிற்கு இப்போது உடல்நிலை சற்று தேறி இருப்பதால் மருத்துவர் அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல கூறியதால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.
ஆனால் இரவு முழுவதும் அவளின் அருகிலே அமர்ந்து அவளை நினைத்து தூங்காமல் கவலைப்பட்டு கொண்டிருந்தனர் மகிழாவின் பெற்றோர்.அதற்கு காரணம் மகிழா பயத்தில் அவர்களை எங்கேயும் நகரவிடாமல் பெற்றோரை அருகிலே இருக்க வைத்துக்கொண்டாள்.
வேறுவழியில்லாமல் அவர்களும் உறங்காமல் கட்டிலின் கால்மாட்டிலே உட்கார்ந்திருந்தனர்.அவர்களும் யார் இப்படி செய்ய நினைத்தது என்ற யோசனையில் இருந்தனர்.
அப்போது பார்த்து பிரபாகரனின் காலில் ஏதோ தட்டுப்பட அது என்ன என்று கையில் எடுத்துப் பார்த்தார்.
அது ஒரு ஆண்மகனின் கைச்சங்கிலி.ஏனெனில் அதன் வேலைப்பாடுகள் மற்றும் அளவு சற்று பெரியதாக இருந்தது.
‘யாருடையது இது…நான் இந்த மாதிரி போடுவதேயில்லை…அப்புறம் எப்படி இங்கே வந்தது…’ என்று யோசினையில் அவரின் முகம் சுருங்கியது.
அவர் கையில் இருந்த கைச்சங்கிலியைப் பார்த்த பானுமதியின் முகமும் யோசனையில் சுருங்கியது.உடனே அதை தன் கையில் வாங்கிப் பார்த்து மெதுவான குரலில் “என்னங்க இது உங்க தம்பி சுந்தரமுடையது…அது எப்படி இங்க வந்துச்சு…??” என்று கூறிவிட்டு குழம்பினார்.
பிரபாகரன் திகைத்து “என்னது சுந்தரமுடையதா…??அது எப்படி இங்கே வந்திச்சு…??” என்று யோசித்து அவரும் குழம்பினார்.
அதன்பிறகு பிரபாகரே “சரி நானே நாளைக்கு ஒரு எட்டு போய் அவனை விசாரிச்சுட்டு வரேன்…அவனுக்கு இதிலே மட்டும் சம்பந்தம் இருந்துச்சு…அவனை உயிரோடு வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு யோயிடுவேன்…!!” என்று கூறி கர்ஜித்தவரை பார்த்து பயந்த பானுமதி பதட்டத்துடன்,
“என்னங்க இப்படி பேசுறீங்க…உங்களுக்கு மட்டும் ஏதாவது ஆனால் எங்களுக்கு யாருங்க இருக்கா…??” என்று கண்ணில் கண்ணீர் குளம் காட்ட ஆரம்பித்தது.
அதைக்கண்ட பிரபாகரன் “சரி சரி கண்ணை துடை…நான் அவனிடம் பொறுமையாக பேசிக்கிறேன்…என் தம்பி இந்த காரியத்திற்கு துணைப் போகமாட்டான்…ஆனால் ஒரு வேளை இதில் சம்பந்தப்பட்டு இருந்தால்…அவனை சும்மா விடமாட்டேன்…!!” என்று சூளுரைத்தவுடன் பானுமதி,
“என்னங்க அவசரப்படாதீங்க…பொறுமையாக யோசிச்சு பண்ணுங்க…ஏனால் இந்த விசயம் ஊர்க்காரங்களுக்கு தெரிஞ்சா… அப்புறம் நாலு பேரு நாலு விதமாக பேசுவாங்க… நாளைக்கு நம்முடைய பொண்ணு வாழ்க்கை பாழாப் போகிடுங்க…அவளை யாரும் கல்யாணம் பண்ணிக்க வரமாட்டாங்க…” பெற்ற தாயாக அவரது பயத்தை கண்ணீரோடு கூறினார்.
அவர் கூறியதைக் கேட்ட பிரபாகர் சிறிது யோசனைச் செய்து ஒரு இறுதியான முடிவெடுத்தார்.
அதன்படி மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த செழியனிடம் அவர்கள் கையில் கிடைத்த கைச்சங்கிலியைப் பற்றி எதுவும் கூறவில்லை.
அத்தோடு “தம்பி தப்பா நினைச்சுக்காதீங்க…இது பொட்ட புள்ள விசயம்…விசயம் வெளியே தெரிந்தால்…நாக்கு மேலே பல்லைப் போட்டு பேசிடுவாங்க தம்பி…அதனால் இந்த விசயத்தை இத்தோடு விட்டுவிடலாம்…” என்று கூறிவிட்டு தலைக்கவிழ்ந்து,
“இனிமே இது விசயமா வீட்டிற்கு வராதீங்க தம்பி…எல்லாரும் தப்பா பேசுவாங்க…!!” என்று கூறியவரை தனது ஊடுருவும் பார்வையால் துளைத்தெடுத்து கொண்டிருந்தான் செழியன்.
செழயனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் பிரபாகரன் தலைநிமிர்த்து அவனைப் பார்த்தார்.அவனின் பார்வை வாள் வீச்சின் கூர்மையுடன் தன்னை துளைத்தெடுத்து கேள்விக்கேட்பதை அறிந்தவர் மெதுவான குரலில் “என்னை மன்னிச்சிடுங்க தம்பி…எனக்கு வேறவழியில்லை…எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு…அவளை நல்லப்படியா வாழ வைக்கணும்…அதுதான் எனக்கு வேணும்…அதனால் அவளின் பேருக்கு சிறு கலங்கம் வந்தால் கூட என்னால் தாங்கமுடியாது…!!” என்று வேதனையில் கசங்கிய முகத்துடன் கூறியவரைப் பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு,
“உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை…நாட்டிலே தப்புகள் நடந்துக்கிட்டு தான் இருக்கும்…இப்படி அடுத்தவங்க தப்பா பேசுவாங்க நினைப்பாங்கனு இப்படியே உண்மையை மறைச்சு வைச்சு வைச்சு…நாட்டிலே கற்பழிப்புகள் அதிகமாகிட்டே இருக்கு…அப்புறம் இந்த வெறிபிடித்த வேட்டை நாய்கள் காம வெறியில் சின்ன சின்ன பிள்ளைகளைக் கூட விடுவதில்லை…இன்றைக்கு இவனை விட்டால் நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துப்பான்… உங்களுக்கு அதைப்பத்தியெல்லாம் கவலையில்லை… உங்களுக்கு உங்க பொண்ணு நல்லா இருக்கணும்…அது தான் முக்கியம்… அடுத்தவன் பொண்ணு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை…இது என்ன ஒரு சுயநலம்…!!” என்று வார்த்தையில் அவரைக் குத்தி கிழித்தவன்,
தொடர்ந்து “நாளைக்கு மறுபடியும் அவன் வந்து உங்கள் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க மாட்டான்னு என்ன நிச்சியம்… அப்போ உங்க பொண்ணோட கற்பு போச்…” என்று கூறிமுடிப்பதற்குள், “போதும் நிறுத்து… முதல்ல வீட்டை விட்டு வெளியே போ…!!” என்று கர்ஜித்து வாசல் பக்கம் கைகாட்டினார்.
செழியன் ஒற்றை புருவத்தை எகத்தளமாக உயர்த்தி அலட்சியமான புன்னகையுடன் “என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டால் எல்லாம் முடிஞ்சிருமா…??நீங்க ஏதோ என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க…அதை நான் கண்டுப்பிடிச்சிருவேன்னு தான்…என்னை வெளியே போகச் சொல்லுறீங்க…அது உங்க கண்ணில் தெரியுது… அது என்னனு கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன்…அவனையும் கண்டுபிடித்து என்கவுண்டரில் போட்டு தள்ளறேன்…!!” என்று கர்ஜித்துவிட்டே அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டான்.
பிரபாகரனுக்கு அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சாவுக்கடி கொடுத்தாற்போல் இருந்தது.இருந்தும் தன் மகளின் வளமான வாழ்க்கை கண்ணுக்கு முன் தெரிய நாம் எடுத்த முடிவு தான் சரியென்று தன்னை தேற்றிக்கொண்டார்.இருந்தும் தன் தம்பியிடம் இதைப் பற்றி கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
பிரபாகரனைப் போல் நாட்டில் பல ஆயிரம் பெற்றோர்கள் பெண்ணின் வாழ்க்கையைக் காப்பதற்காக இதுப்போல் அயோக்கியர்களுக்கு தண்டனை கிடைக்காமல் செய்கின்றனர்.அவர்களின் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் செய்வது சரியே…ஆனால் உண்மையில் அவர்கள் நாட்டில் பல ஆயிரம் பெண்களின் வாழ்க்கை சீரழிவதற்கு வழிவகுக்கின்றனர் என்பதை அறியவில்லை.
அப்படியே ஓரிருவர் முன் வந்தாலும் அவர்களுக்கு தேவையான நிதி கிடைக்கிறதா என்றால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். ஏனெனில் நம் நாட்டின் அமைப்பு அப்படி…!!
ஆனால் அதே ஒரு சில அரேபிய நாட்டில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட ஆண்களை மக்களின் முன் நிறுத்தி தலையைத் துண்டித்துவிட்டு புதைக்கும் முன் உடலையும் தலையையும் ஒன்றாக இணைத்து தைத்துவிட்டு அதன்பிறகு தான் உடம்பைப் புதைப்பார்களாம்.சாகடித்தப்பிறகும் அவர்களை வெறுமனே விடாமல் வலிக்க செய்த பிறகு தான் அவர்களை விடுவார்களாம்.அதைப் பார்க்கும் மற்ற ஆண்கள் இதுப்போல் ஒரு தவறைச் செய்ய பயப்படுவார்கள்.அதே தண்டனை தான் பெண்களுக்கும் நிறைவேற்றுவார்கள்.அந்த மாதிரியான ஒரு கடுமையான தண்டனை இந்திய நாட்டில் கொடுத்தால் மட்டும் தான் இதுப்போல் தவறுகள் நடக்காமல் தடுக்கமுடியும்.
செழியன் அவரிடம் அப்படி கூறிவிட்டு வந்தான் ஒழிய அவன் தேடலில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.அவர்களின் வீட்டு வேலையாட்களை விசாரித்தாலும் அவனால் ஒன்றும் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.
அதைக்கண்டு பிடிப்பதற்கு அவனுக்கு மகிழா அல்லது அவளின் பெற்றோரின் உதவி தேவைப்பட்டது.அவனால் மகிழாவை நெருங்க முடியவில்லை.மேலும் அவளின் பெற்றோரும் எதுவும் கூறப்போவதில்லை என்று தெரியும்.இருந்தும் அதை எப்படியாவது கண்டுப்படித்தேயாக வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தான்.
இப்படியாக இரண்டு வாரம் சென்றது.அப்போதும் அவனால் எதுவும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.அவன் ஒரு போலீஸ்காரன் என்பதால் அவனுக்கு மேலும் பல வழக்குகள் குவிந்தது.அதில் கொஞ்சம் கவனம் சென்றதினால் அவனால் மகிழாவின் விசயத்தில் தனியாக கவனத்தைச் செலுத்த முடியவில்லை.
ஒரு நாள் தற்செயலாக மகிழா அவளின் கல்லூரியின் முன்னால் நிற்பதைப் பார்த்த செழியன் அவளிடம் பேசுவதற்காக அவளின் அருகில் சென்றான்.
அதற்குள் அவனைப் பார்த்தவள் கண்களில் பயத்துடன் மனதில் எழுந்த திகிலுடன் நின்றிருந்தாள்.
அவளின் கண்களில் பயத்தைப் பார்த்தவன் மனசீகமாக தலையில் அடித்துக்கொண்டே அவளை நெருங்கி சிறு புன்னகையுடன் “உங்க பேரு மகிழா தானே…எப்படி இருக்கீங்க…இப்போ உடம்பு பரவாயில்லையா…??” என்று அவளை மென்மையாக வினவியவனைப் பார்த்தவள் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
அவள் மனதில் ‘இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்’ என்று யோசித்து கொண்டிருந்தாள்.
அதற்குள் செழியன் அவளின் முன் சொடக்குப் போட்டு அவளின் கவனத்தை தன்பக்கம் திருப்பினான்.
அதில் “ஹான் என்ன கேட்டீங்க சார்…??” என்று மெதுவான குரலில் பயத்துடனே வினவினாள்.
செழியன் “அது சரி…” என்று சிரித்துவிட்டு “உங்க பேரு மகிழா தானே…இப்போ உடம்பு பரவாயில்லையானு கேட்டேன்…??” என்று மறுபடியும் வினவியவுடன்,
இரண்டிற்குமே “ஆமாம்” என்றவாறு தலையை மட்டும் ஆட்டினாள்.
செழியன் “உங்ககிட்ட அன்றைக்கு தப்பா நடந்துகிட்டவங்க யாருனு சொல்லுங்க…அவனை நான் உண்டு இல்லைனு செய்யறேன்…” என்று என்ன தான் மென்மையாக முயன்றும் குரலில் கடுமைத்தெறிக்க நேரடியாக தனது அடுத்த கேள்வியைக் கேட்டு தனது மீசையை முறுக்கினான்.
அன்று செந்தில் கூறிய கடுமையான வார்த்தைகளையும் செய்கையையும் நினைவுகூர்ந்தவள் பயத்தினால் கைகால் நடுங்கியவாறு கண்களில் கண்ணீர் வேறு வழிய ஆரம்பித்தது.
செழியனுக்கு அவளின் நிலைமைப் புரிய இந்த கேள்வியை அவளைப் பார்த்து கேட்ட தன்னையே நொந்துக்கொண்டு மகிழாவிடம் “சரி…சரி… கண்ணைத் துடைங்க…நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்…!!” என்று திரும்பவும் மென்மையாகவே பேசினான்.
அப்போது பார்த்து ஒரு வண்டியின் ஹார்ன் ஒலிக்கேட்க மகிழா மிரண்டு செழியனின் அருகில் வந்து அவனின் கையைப் பிடித்து கொண்டாள்.
அவனின் கையைப் பிடித்தவாறு சுற்றும் முற்றும் பயத்துடனே பார்த்தவளுக்கு,தீடிரென்று ஏதோ வித்தியாசமாக தோன்ற அப்போது தான் செழியனின் கையைப் பிடித்திருப்பதை அறிந்தாள்.அறிந்தவுடன் பட்டென்று அவனின் கையை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று கொண்டு அவன் கோபப்படுவனோ என்று எண்ணியவாறு அவனின் முகத்தை தயக்கத்துடன் நோக்கினாள்.
அவனின் இதழ்கள் வசீகர புன்னகையைப் பூசியிருக்க,அவனின் கை மீசையைத் தடவியது.அதைக் கண்டவளின் முகத்தில் வெட்கப்பூக்கள் பூக்க முகம் செந்நிறத்தைப் பூசியது.அதைக்கண்டவனின் புன்னகை மேலும் விரிந்தது.
மகிழாவும் அவனை நோக்குவதும் பின்பு வெட்கத்துடன் தலைகுனிவதுமாக இருந்தவளை ரசித்தவன் இது தான் சரியான சமயம் என்று யோசித்து “மகிழா…என் மேலே நம்பிக்கை வைச்சு…என்னிடம் என்ன நடந்ததுனு கொஞ்சம் சொல்லுங்க…??உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது…வரவும் விடமாட்டேன்…!!” என்று கூறியவுடன் அவளின் முகம் அத்தனை நேரம் இருந்த வெட்கரேகை மறைந்து பயத்தில் வெளுத்திருந்தது.
செழியனுக்கு இப்போது எரிச்சல் தான் வந்தது…இவளை என்ன செய்வது என்பது போல்…!!
இவளிடம் இப்படி பேசினால் வேலைக்காகாது என்று நினைத்து கோபத்துடன் கடுமையான குரலில் “மகிழா இங்க பாருங்க…எதற்கெடுத்தாலும் இப்படி பயந்திட்டே இருப்பீங்களா…??இன்றைக்கு உங்களுக்கு நடந்த மாதிரி நாளைக்கு வேறு யாருக்காவது நடக்கும்…இப்போ நீங்க அவனிடமிருந்து தப்பிச்சிட்டீங்க…ஆனால் மற்ற எல்லாரும் தப்பிக்க முடியாது இல்லையா…அதுமட்டுமில்லாமல் அவன் மறுபடியும் இந்த மாதிரி உங்ககிட்ட நடந்துக்க வருவான்…சோ அதனால் நீங்க உண்மையைச் சொன்னால் அதிலிருந்து தப்பிக்கலாம்…இல்லைனா என்ன நடக்கும்னு நான் சொல்ல தேவையில்லை…அப்புறம் உங்க இஷ்டம்…!!” எரிச்சலோடு கூறிவிட்டு திரும்பி நடக்க அவள் “சார்” என்று அழைத்தவுடன் திரும்பினான்.
“சார்…நான் எல்லாமே சொல்லுறேன்…” என்று கூறி அன்று நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.
அவள் கூறுவதை கேட்கும்போதே ஒரு பூவை கசக்க நினைத்த அவனின் மிருகத்தனத்தை நினைத்து இரத்தம் கொதித்தது.அதன்பிறகு அவளிடம் இதற்கு மேல் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி சில அறிவுரைகளைக் கூறி விடைப்பெற்று நேரடியாக செந்திலைத் தேடி தனது ஜிப்பை எடுத்து கொண்டு எரிமலையின் சீற்றத்துடன் கிளம்பினான் செழியன்.
—————————————————————————————
சஞ்சுயுக்தா சென்ற பிறகு யாதிஷ் அடுத்து வந்த கேண்டிடேட்டை இன்டர்வியூ செய்து முடித்துவிட்டு கடைசியாக எல்லோரின் முடிவையும் கேட்டான்.
அதற்கு எல்லாரும் ஒரு மனதாக சஞ்சுயுக்தாவின் பெயரைக் கூறினார்கள்.அதைக்கேட்டு யாதிஷ் மனதில் மூண்ட எரிச்சலுடன் “எக்ஸ்கியூஸ் மீ…மை ஒபினியன் இஸ்…ஷி டின்ட் ஹாவ் மச் எக்ஸ்பீரியன்ஸ்…சோ நாட் சூட்டபிள் பார் திஸ் போஷிசன்…அன்ட் தென் ஷி இஸ் லுக் லைக் அராகேன்ட் கேர்ள்…!!” என்று கூறினான்.
அதைக்கேட்ட அனைவரும் “யாதிஷ் அந்த பொண்ணுக்கு எக்ஸ்பீரியன்ஸ் கொஞ்சம் குறைவா தான் இருக்கு…ஆனால் அந்த பொண்ணு மற்ற எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற கேன்டிடேட்ஸ் விட திறமைசாலி…இந்த பொண்ணு கண்டிப்பாக நம் கம்பெனிக்கு அவசியம்ப்பா…அதுமட்டுமில்லாமல் கொடுத்த பிராஜக்ட்ஸ் சீக்கிரம் முடிக்க இந்த மாதிரி அணுகுமுறை உள்ள பொண்ணு தான் அவசியம்…அதனால் இந்த பொண்ணு தான்…சரியாக இருப்பாள்…!!” என்று ஒரு மனதாக கூறியவுடன் யாதிஷ் தான் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது.
இருந்தும் அவளை எப்படியாவது வெளியேற்றியேயாக வேண்டும் என்று தன் எண்ணத்தில் உறுதியாய் இருந்தான் யாதிஷ்.இப்போதும் அவன் நினைத்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும் தான்.ஆனால் ஏதோ ஒன்று அப்படி செய்யவிடாமல் அவனைத் தடுத்தது.
அங்கே சஞ்சுயுக்தா தனது தோழி தேன்மொழியிடம் இன்று நடந்ததைப் பற்றி கைப்பேசியில் கூற “ஏன்டி சஞ்சு…உன்னோட திமிருக்கு ஒரு அளவேயில்லையா…??” என்று சலித்துக்கொண்டவளிடம் சஞ்சுயுக்தா “ஏன்டி யாரைப் பார்த்து திமிருனு சொல்லுறே…??” என்று பதிலுக்கு எகிறினாள்.
தேன்மொழி இந்த மனதில் ‘உன்னை தாண்டி சொல்லுறேன் லேடி ஹிட்லர்’ என்று திட்டிவிட்டு அவளிடம் “பின்ன என்னடி வேலைக்கொடுக்கற முதலாளிக்கிட்டயே திமிரா பேசயிருக்கே…??அப்புறம் எப்படி வேலைக்கொடுப்பாரு…??” என்று வினவினாள்.
அதற்கு சஞ்சுயுக்தா அலட்சியத்துடன் “அதெல்லாம் கொடுப்பான் கொடுப்பான்…கொடுக்காமல் எங்க போகப் போறான்…!!” என்று தெனாவட்டாக மொழிந்தவளின் பேச்சை கேட்டு இந்தப்பக்கம் தேன்மொழி ‘நீ தான் லேடி ஹிட்லராச்சே…அப்புறம் உனக்கு பயந்து தானேயாகணும்…உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணி கஷ்டப்பட போறவன் கண்டிப்பா போன ஜென்மத்தில் யாரோ ஒரு குழந்தைக்கிட்டயிருந்து ஐஸ்கீரிம் பிடுங்கி சாப்பிட்டிருப்பான்…!!’ என்று நினைத்தவள் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு ‘ஏன்டி ஹனி…உன்னை மாதிரியே அவனையும் அல்பத்தனமாவே யோசிக்கிறே…??’ என்று மனதிற்குள் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.
இந்தப்பக்கம் சஞ்சுயுக்தா தேன்மொழி ஏதாவது கூறுவாள் என்று காத்திருக்க அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும் சந்தேகம் எழ “என்னடி மைண்ட் வாய்ஸ்ஸா…??” என்று தன் தோழியைப் பற்றி அறிந்து வினவ,
தேன்மொழி பதறி ‘அய்யோ மாட்டிக்கிட்டனே…ஹனி உன் மைண்ட் வாய்ஸை கம்மி பண்ணுடி…இல்லைனா எட்டு ஊருக்கு சேர்த்து வைச்சு அட்வைஸ் பண்ணுவளே…அட்வைஸ் மன்னி…!!’ என்று மறுபடியும் மனதிற்குள் கூறிக்கொண்டிருக்கவும் சஞ்சுயுக்தா கடுப்பாகி “அப்போ ஏதோ மைண்ட் வாய்ஸ் பேசிட்டு இருக்கே…என்னனு சொல்லுடி…??” என்று வினவியவளிடம்,
தேன்மொழி அசடுவழிந்தவாறு “ஹிஹிஹி ஒண்ணுமில்லைடி சும்மா உன் வேலையைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்…!!” என்றவுடன்,
சஞ்சுயுக்தா மிடுக்குடன் “ரொம்ப நடிக்காதே…!உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்…அதேமாதிரி என் வேலையைப் பத்தி நீ கவலைப்படாதே…எனக்கு கண்டிப்பாக வேலைக் கிடைக்கும்…அதுமட்டும் 100 பெர்சன்ட் தெரியும்…!!” என்று உறுதியாக கூறினாள்.
அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த தேன்மொழி விழிகள் விரிய “அது எப்படிடி அவ்ளோ சரியா சொல்லுறே…??” என்று வினவினாள்.
சஞ்சுயுக்தா புன்னகையுடன் “அதெல்லாம் அப்படி தான்…என் கெஸ் க்ரெக்டா இருந்தால்…இன்னைக்குள்ள ஆஃபர் லெட்டர் வந்திடும்…!!” என்று கூறி முடிக்கையில் அவள் தங்கியிருந்த மகளிர் விடுதியில் வேலை செய்யும் அம்மா ஒருவர் “சஞ்சு உனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்கும்மா…!!” என்று கூறி அவளின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
அதைக்கேட்டு தேன்மொழி வியந்துப்போய் வாயை ஆவென பிளந்து அதிர்ந்து விழித்தாள்.
அவள் நேரில் இல்லையென்றாலும் அவளின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அறிந்த சஞ்சுயுக்தா “தேனு போதும் போதும் வாயை மூடு…வாய்க்குள்ள ஈ புகுந்திடப் போகுது…!!” என்று கூறியவுடன் சுயநினைவு அடைந்த தேன்மொழி “போடி பக்கி…!என்னை வம்பிழுக்கறதே வேலையா வைச்சுட்டு இருக்கே…??” என்று உதட்டை சுழித்தவாறு கூறினாள்.
சஞ்சுயுக்தா இந்தப்பக்கம் “சரிடி பாய்…குட்நைட்…!” என்று கூறி கைப்பேசியை அணைத்தாள்.
இங்கே நாளை வேலையில் வந்து சேருமாறு வந்த அழைப்பு கடிதத்தைப் பார்த்தவுடன்…சஞ்சுயுக்தாவின் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட திருப்தி உண்டாகியது.
‘நாளைக்கு வேலைக்கு சென்று யாதிஷின் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டும்’ என்று மனதில் நினைத்து புன்னகை ஒன்றைச் சிந்தி மெத்தையில் விழுந்தாள்.
சிறிது நேரத்திலே நித்திரை தேவி தன்னை அழைக்கக் கண்மூடி உறங்கினாள் சஞ்சுயுக்தா.ஆனால் இங்கே அந்த பங்களாவில் யாதிஷ் உறக்கம் தொலைந்து சஞ்சுயுக்தாவைப் பற்றிய சிந்தனையோடு புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான்.
அதன்பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து அமர்ந்தான்.அமர்ந்தவன் தன் தலையணையை எடுத்து கட்டிலின் மேல் நிமிர்த்தி வைத்துவிட்டு அதில் சாய்ந்து அமர்ந்தவாறு கண்களை மூடினான்.
‘எங்கிருந்தோ வந்தாள்…இதுவரை எந்த பெண்ணையும் பிடிக்காத தனக்கு பார்த்த முதல் பார்வையில் அவளைப் பிடிக்க செய்தாள்… ஆனால் அடுத்தநொடியே அவளைப் பிடிக்கவிடாத மாதிரி செய்கிறாள்…அத்தோடு என்னோட கம்பெனிக்கே வந்து என்கிட்டயே திமிரா பேசிறா… பார்க்கறா… ஆனாலும் ஒரு ஓரத்தில் அவளை எனக்கு பிடிச்சு தான் இருக்கு…அந்த உண்மையும் மறுக்கமுடியாது… அதேசமயம் என்கிட்ட திமிரா நடக்கிறா…அவளை அடக்கியேயாக வேண்டும் என்று வெறி ஏற்படுகிறது…இதெற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்…!!’ என்று ஒன்றும் புரியாமல் கண்களை மூடி யோசித்தவனுக்கு தூக்கம் கண்களைச் சுழற்ற அப்படியே படுத்தான்.
சிறிதுநேரத்தில் அவனின் அறையில் சிறு சத்தம் கேட்க படுத்திருந்த நிலையிலே என்ன நடக்கிறது என்றவாறு கவனித்தான்.இருட்டில் ஒரு கருமையான உருவம் அவனின் அலுவலக அறையில் எதையோ தேடிக் கொண்டிருப்பது போல் தோன்ற சிறிது நேரம் அதை மௌனமாக பார்த்து கொண்டிருந்தான்.இதற்கு மேல் அமைதியாக இருக்கு முடியாமல் யாதிஷ் மெதுவாக எழுந்து பூனை நடைப்போட்டு அந்த உருவத்தின் அருகில் நெருங்கினான்.
அப்படியே அதைப் பிடிக்க போவதற்குள் அதற்குள் அந்த உருவம் சுதாரித்து அவனின் மூகத்திற்கு முன் கத்தியை நீட்டி அவனைக் குத்துவது போல் முன்னோக்கி வர,அதில் பயந்துவாறு ஒரு அடி பின்னால் வைத்தான் யாதிஷ்.அப்படியே அவனை நோக்கி கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து பின்னால் நகரச் செய்தவாறு ஜன்னலின் அருகில் வந்தவுடன் அவனைப் பிடித்து ஒரே தள்ளாக கீழே தள்ளிவிட்டு ஓடப்போன அந்த உருவம் அணிந்திருந்த ஒரு கருப்பு துணி யாதிஷின் கையோடு வந்துவிட்டது. அப்படியே அவனின் முகத்தைப் பார்ப்பதற்குள் அவன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான்.
அதற்குள் வீட்டு காவலாளி விசில் அடிக்கும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் எழுந்துவிட்டனர்.யாதிஷ் அவர்கள் தன் அறைக்குள் வருவதற்கு முன் அந்த துணியை தன் அலமாரியில் மறைத்து வைத்துவிட்டான்.
அதற்குள் வீட்டு ஆட்கள் அவனின் அறைக்குள் நுழைந்தனர். அவர்களின் மீது தன் பார்வையைத் திருப்பியவன் என்ன என்பது போல் பார்த்தான்.
அவனின் தாய் பரிமளம் “கண்ணா யாரோ உன் அறையிலிருந்து தான் ஓடின மாதிரி இருந்தது…யாரு கண்ணா அது…??” என்று குழப்பத்தோடு கேட்டவரிடம்,
யாதிஷ் இங்க நடந்ததை பற்றி கூறியவன் மறந்தும் அந்த கருப்பு துணியை பற்றி மட்டும் கூறவில்லை.அதைக்கேட்ட அவனின் தாய் பதறி அவனின் உடல் முழுவதையும் ஒரு ஆராய்ச்சி பார்வைப் பார்த்துக்கொண்டே “உனக்கு எதுவும் ஆகவில்லை தானே…சொல்லுப்பா…??” என்று பதட்டத்துடன் வினவினார்.
யாதிஷ் சின்ன சிரிப்புடன் “ஒண்ணுமில்லை அம்மா…!அவங்க தேடி வந்தது வேற எதுவோ ஒண்ணு…” என்று கூறி தன் தமையனைக் கூர்ந்து கவனித்தான்.
அவன் இவனை முறைத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டான்.
அதன்பிறகு தன் தாயிடம் தனக்கு ஒன்றுமில்லை என்று கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தவனின் புருவத்தின் மத்தியில் முடிச்சு விழுந்தது.இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து யார் அது என்று யோசித்துக் கொண்டிருந்தான் யாதிஷ்.
அதனால் அடுத்த நாள் காலை எரிச்சலுடன் அலுவலகத்திற்கு சென்றான்.அந்த நேரம் பார்த்து சஞ்சுயுக்தா அவன் கதவைத் தட்டிவிட்டு உள்ளே அகந்தையுடன் கூடிய பார்வையுடன் நுழைந்தாள்.
யாதிஷ் எரிச்சலுடன் மடிகணிணி ஒரு புறம் திறந்திருக்க இவன் ஒரு புறம் தன் தலையைத் தாங்கியவாறு சுழல் நாற்காலியில் அமர்ந்தவாறே வந்திருப்பது யார் என்றே பார்க்காமல் “சிட் டவுன்…!!” என்று அவளை அமரச் செய்தான்.
சஞ்சுயுக்தா “என்னச்சு இவனுக்கு…!!” என்று யோசித்துவிட்டு “நமக்கு எதுக்கு அது…நாம் வந்த வேலையைப் போர்ப்போம்…” என்று நிமிர்ந்து அமர்ந்தவாறு நக்கலாக அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
அந்தநொடி அவளை நிமிர்ந்து பார்த்தவன் அங்கே சஞ்சுயுக்தா தன்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கவும் அவளை முறைத்து “நீ எதுக்கு இங்கே வந்தே…பக்கத்து அறையில் சீனியர் டைரக்டர் இருப்பாரு…போ…போய் பாரு போ…!!” என்று கூறிவிட்டு தனது மடிக்கணினியில் வேலை செய்வதுபோல் முகத்தைத் திருப்பினான்.
சஞ்சுயுக்தா அதற்கெல்லாம் அசராமல் அங்கே அமர்ந்திருக்கவும் யாதிஷ் என்ன என்பது போல் அவளைப் பார்த்தான்.சஞ்சுயுக்தா ஒரு நக்கலான புன்னகையை உதிர்த்துவிட்டு புருவத்தை “எப்படி” என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டுவிட்டு நாற்காலியில் இருந்து எழுந்தாள்.
அதற்கு அர்த்தம் ‘பாரு உன் முன்னாடியே வேலையில் சேர்ந்து காண்பிச்சிட்டேன்…உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாதுடா…!!’ அதை உணர்ந்த யாதிஷ் வெளியே போகப் போனவளின் கைப்பிடித்து இழுத்தான்.
அதை எதிர்ப்பார்க்காதவள் அவனின் மேல் விழுந்தாள்.ஒரு நொடி கீழே விழப்போனவர்கள் இருவரையும் சேர்த்து யாதிஷ் தாங்கினான்.இப்போது இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று உரசுவது போல் இருக்க,அவளின் முகத்தை அத்தனை அருகில் பார்த்தவனுக்கு இத்தனை நேரம் இருந்த எரிச்சல்,தலைவலி,கோபம் எல்லாம் மாயமாய் பறந்தோட அவளை மென்மையாகப் பார்த்தான்.
ஆனால் சஞ்சுயுக்தா கோபத்தில் முகம் சிவக்க ஆவேசத்துடன் அவனை அடிக்க தன் கையை ஓங்கினாள்.இப்போது யாதிஷூம் கோபத்துடன் அவளின் கையை முறுக்கி “என்னடி…நீ பெரிய ஜான்சிராணியா…??அடிக்கடி கையை நீட்டி…எல்லாரையும் அடிக்கிறே…இந்த வேலையெல்லாம் என்கிட்ட நடக்காதுனு ஏற்கனவே சொல்லியிருக்கேனா இல்லையா…??” என்று கூறியவன் அவளின் முகத்தில் சிவப்பு ஏறவும்,அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு,
அவள் எதிர்ப்பாராத நேரத்தில் “இதுக்கு நீ என்ன செய்யறனு பார்க்கறேன்…!!” என்று கூறி அவளின் கன்னத்தில் பளீச்சென்று முத்தம் ஒன்றை வைத்தான்.
அவ்வளவு தான் சஞ்சுயுக்தா எரிமலையைப் போல் வெடித்து அவனிடமிருந்து விடுப்பட்டு வெளிவந்து அவனை ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டாள். பதிலுக்கு அவனும் அசராமல் ஓங்கி ஒரு அறைவிட்டான் அவளின் கன்னத்தில்.
“ஏய்…!!” என்று கைநீட்டி கத்தியவளுக்கு மேலாக…அவனும் “ஏய்…ஓவரா சீன் போடாதா…வெளியே போடி…!!!” என்று பதிலுக்கு உறுமியவாறு வெளியே கைக்காட்டினான்.
சஞ்சுயுக்தா முகக்கன்றலோடு “டேய்…யாரை கேட்டு நீ டீ போட்டு பேசுறே…நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்லை…மைன்ட் யூவர் வெர்ட்ஸ்…!!” என்று கூறியவளை யாதிஷ் நக்கலாக பார்த்து,
“அதை நீ சொல்லாதே…முதலில் நீ மரியாதைக் கொடு…அதன்பிறகு நான் மரியாதைக் கொடுக்கிறேன்…!!” என்று கூறியவன்,
“அப்புறம் என்ன சொன்ன பொண்டாட்டியா…உனக்கு தான் அந்த ஆசை இருக்குது போலே…பரவாயில்லை நீயும் அழகா தான் இருக்கா…அதனால் நான் உன் புருஷனாக ரெடி…வா கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்று கூறி அவளின் கைப்பிடித்து இழுத்தவனின் கையை அருவருப்புடன் தட்டிவிட்டவள்,
காளி அவதாரம் எடுத்து “சீச்சி…உன்னை மாதிரி ஒரு பொம்பளைப் பொறுக்கியை யாராவது கல்யாணம் செய்வாங்களா…??” என்று வாய்விட்டவளை…
“என்னடி சொன்னே…??” என்றவாறு பளாரென்று ஓங்கி அறைந்தான்.ஆனால் முன்னர் போல் இல்லாமல் இப்போது அடித்த அடியில் சஞ்சுயுக்தா சுருண்டு நான்கு அடி தள்ளி விழுந்தாள்.
யாதிஷ் இப்போது வேட்டையாடும் புலியின் வேகத்தில் அவளை நெருங்கி அவள் கழுத்தில் அணிந்திருந்த துப்பாட்டாவை இறுக்கிப் பிடித்துவாறு தூக்கி அருகிலிருந்த சுவரோடு சேர்த்து நிறுத்தி “யாரை பார்த்து பொம்பளை பொறுக்கினு சொன்னே…தேவையில்லாமல் என்னை சீண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிற நீ…இதுக்கு மேல் நான் பொறுமையா இருக்கமாட்டேன்…இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ…இந்த ஜென்மத்தில் எனக்கு நீ தான் பொண்டாட்டி… இந்த பொம்பளை பொறுக்கி தான்…உன் புருஷன்…!!” “பொம்பளை பொறுக்கி” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து ஆவேசத்துடன் பேசிவிட்டு,அந்த அறையிலிருந்து புயல் போல் வெளியேறினான்.
சஞ்சுயுக்தா அவனின் கோபத்திற்கு மேலாக அவளும் நெருப்பில் பற்றி எரியும் பூவாய் கோபத்துடன் தீயாய் தகிக்க நின்றிருந்தாள்.
“எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துக்கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்”