சென்னையில் பணக்காரர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் மற்ற பல மாடி கட்டங்களை சிறியதாக்கியப்படி மிகப்பெரிய அளவில் கம்பீரமாய் உயர்ந்து நின்றது ஒரு வெள்ளை நிற பங்களா.அதை பங்களா என்று கூறுவதை விட குட்டி அரண்மணை என்று கூறவதே ஏற்றதாக இருக்கும்.அந்தஅளவு மிகுந்த பிரமாண்டமாக இருந்தது.
அந்த வெள்ளை பங்களாவினுள் உள்ள விசாலமான வரவேற்பறையின் நடுவே உயர்ரக நீள்விரிக்கைகள் போடப்பட்டு அதன் வலதுபக்கம் உணவுகூடங்கள் அமைக்கப்பட்டு இடதுபக்கம் சில அறைகள் இருந்தது.படிக்கட்டுகள் கீழிருந்து இருபக்கமாக வளைந்து வந்து மேலே இணைந்து இருக்க,அத்தோடு வீடு முழுவதும் ஏசியால் நிரப்பப்பட்டு இருந்தது.
அந்த படிகட்டுகளின் வழியே யாதிஷ் கிருஷ்ணகுமார் சாம்பல் நிற மேலங்கி(coat) மற்றும் அதே நிறத்தில் கால்சட்டையும் அணிந்து அதற்கு ஏற்றவாறு கருப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற டை அணிந்து ஜெல் தடவிய வாரிப்படிந்த கேசத்துடன் கையில் கருப்பு நிற பெட்டியுடன் கம்பீரமாக இராஜகுமாரனை போல் படிக்கட்டுகளில் இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.
படிக்கட்டுகளில் இருந்து இறங்கியவன் நேராக உணவருந்தும் அறையில் இருந்த தனது தாயிடம் சென்றான்.
அங்கே இருந்த தனது தாயிடம் யாதிஷ் “அம்மா…நான் ஆபிஸ் கிளம்புறேன்” என்று கம்பீரமான குரலில் கூறினான்.
அதற்கு பரிமளம் கனிவுடன் “சாப்பிடலையா கண்ணா…??” என்று கேட்டவரிடம்,
யாதிஷ் “இல்லைம்மா…இன்றைக்கு இன்டர்வியூ இருக்கு…அதனால் சீக்கிரம் ஆபிஸ் போகணும்மா…!!” என்றான்.
அவனது தாய் “ஓ…ஆமாம் நீ சொன்ன நான் மறந்திட்டேன் பாரு… பரவாயில்லை இரண்டு வாய் சாப்பிட்டு போ கண்ணா… இன்டர்வியூ முடிஞ்சிச் சாப்பிட மதியமாகிடும்… அதுவரைக்கும் சாப்பிடாமல் இருப்பியா…? வா வந்து சாப்பிடு…!!” என்று பாசத்தோடு அழைப்பு விடுத்தவரிடம் மறுப்பு கூறமுடியாமல் உட்கார்ந்து உணவருந்த ஆரம்பித்தான்.
ஏனெனில் சில நேரங்களில் அவனுடைய அண்ணன் அபிஷேக் உணவருந்தும் அறையில் இருந்தால் பரிமளம் சின்னவனைக் கண்டுக்கொள்ளமாட்டார். யாதிஷ் சொன்ன பதிலையே அபிஷேக் கூறியிருந்தால் இந்நேரம் அவனது தாய் பரிமளம் அவனை அமர வைத்து ஊட்டிவிட்டிருப்பார்.
உண்டு முடித்து எழலாம் என்று நினைக்கும் போது உற்சாகத்துடன் “ஹாய் சித்து…!!” என்றப்படியே அபிஷேக்கின் 6 வயது மகன் நிரஞ்சன் யாதிஷிடம் ஓடி வந்தான்.
நிரஞ்சனுக்கு தனது தந்தையை விட தனது சிறிய தந்தை யாதிஷிடம் தான் ஒட்டுதல் அதிகம்.விடுமுறை நாள்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் நேரத்தைக் கழிப்பார்கள்.
நிரஞ்சனின் தாய் பார்கவிக்கு எப்பொழுதுமே தோழிகளுடன் ஊர் சுற்றுவது தான் தலையாயக் கடமை.எப்போதும் ஏதாவது ஒரு இடத்திற்கு தோழிகளுடன் வெளியூர் செல்வது இல்லையென்றால் அழகுநிலையம் செல்வது இது தான் அவருக்கு மிக முக்கியமான வேலை.வீட்டில் இருப்பதே அதிசயத்திலும் அதிசயம்.அதனால் வீட்டில் நிரஞ்சனை இங்கு வேலைச் செய்யும் ஆயா கவனித்துக் கொள்வார்.விடுமுறை நாட்களில் யாதிஷ் கவனித்துக் கொள்வான்.இரவில் மட்டும் அவன் பாட்டி பரிமளத்திடம் படுத்துக்கொள்வான்.
இப்போது சித்து என்று நிரஞ்சன் அழைத்தவுடன் யாதிஷ் புன்னகையுடன் “ஹாய் நிருக்குட்டி…எழுந்தாச்சா…??” என்றப்படி தூக்கி அவனை மடியில் அமர வைத்தான்.
உடனே குட்டிபையன் பதில் எதுவும் சொல்லாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான்.
அதனைப் பார்த்த யாதிஷ் விரிந்த புன்னகையுடன் “என்னச்சு குட்டிக்கு…கோபமாக இருக்காங்க போல…??” என்று கேட்டவனிடம் பதில் சொல்லாமல் இன்னும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டது அந்த குழந்தை.
அதற்குள் பரிமளம் சிரிப்புடன் “அவன் கூட நேத்து விளையாடலாம்னு சொல்லிட்டு…விளையாட வரலைனு கோபமாக இருக்கான்…!!” என்று கூறியதைக் கேட்டு விட்டு,
நிரஞ்சனின் காதில் யாதிஷ் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு “அப்படியா…நிருக்குட்டி அதுக்கு தான் சித்து மேலே கோபமா…??நேத்து ஆபிஸில் ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு… அதான் வர முடியலை குட்டி…இந்த வாரம் சித்து உன் கூட கண்டிப்பாக விளையாட வரேன் சரியா…??” என்று கெஞ்சி கேட்பதுபோல் கேட்க மனது இறங்கிவராமல் அப்படியே இருந்தான் அந்த குட்டிபையன்.
பரிமளம் இதனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்போது யாதிஷ் அழுவதுபோல் முகத்தை வைத்து “நிரு குட்டி…சித்து இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன்…சாரி…என்னை மன்னிக்கமாட்டீங்களா…??” என்று கண்களைக் கசக்கியவுடன்,
குழந்தை உடனே பதறி “சித்து…நோ கிரையிங்…நாம் இந்த வீக் கேம் விளையாடலாம்…!!” என்று அவன் கண்களைத் தன் பிஞ்சு கரங்களால் துடைத்துவிட்டது.
உடனே யாதிஷின் முகம் பிரகாசமாகி “குட் பாய்…இது தான் என் நிரு குட்டி…!!” அவனைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
அவன் பெறாத குழந்தை என்றாலும்,அவனை தன் குழந்தை போலவே பாவித்து பாசம் காட்டினான் யாதிஷ்.
அவனது முகம் சிறிது சுருங்கினாலும் மனம் தாங்காது யாதிஷிற்கு…!!
அதன்பிறகு வீட்டினரிடம் விடைப்பெற்று தனது அலுவலகத்திற்கு காரில் ஏறிச்சென்றான்.
சஞ்சுயுக்தா தான் தினந்தோறும் தொழும் ஆஞ்சிநேயரை பிரார்த்தனை செய்து நேர்முகத்தேர்வுக்கு நம்பிக்கையுடன் சென்றாள்.
10 மணி நேர்முகத் தேர்வுக்கு 9.30 மணிக்கு கே.கே.அட்வர்டைஸ்மென்ட் ஏஜென்சியின் முன் ஆட்டோவில் வந்து இறங்கினாள் சஞ்சுயுக்தா.
ஆட்டோகாரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கே உயர்ந்து நிற்கும் 10 மாடி கட்டிடத்தை நிமிர்ந்து நோக்கினாள் சஞ்சுயுக்தா.
அதை நோக்கி ஒரு பெருமூச்சினை வெளியிட்டு கையில் கோப்புடன் அலுவலகத்தினுள் நுழைந்தாள்.
உள்ளே நுழைந்து வரவேற்பறையில் விசாரித்துவிட்டு காத்திருப்போர் அறையில் தன்னை அழைப்பதற்காக காத்திருந்தாள்.அந்த அறையில் இருந்தவர்கள் அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தாள்.அங்கிருந்து அனைவரும் இவளை விட வயதில் பெரியவர்களாகவும் அனுபவமிக்கவர்களாகவும் தெரிந்தனர்.
இருந்தும் சஞ்சுயுக்தாவிற்கு அவர்களை நினைத்து பயமேதும் இல்லை.தன் திறமையின் மீதும் தன் இலட்சியத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை இருந்தது.அதன்படி நிமிர்ந்து கம்பீரத்துடன் அமர்ந்திருந்தாள்.
தன் பெயரை அழைத்தவுடன் சஞ்சுயுக்தா கம்பீரமாக எழுந்து உள்ளே சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ…!!” என்று கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளின் குரலைக் கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான் யாதிஷ்.
அவனுக்கு இந்த குரலை ஏற்கனவே கேட்டது போல் இருக்கவும் தான் இந்த அதிர்ச்சி.ஆனால் சஞ்சுயுக்தா ஏற்கனவே இதை எதிர் பார்த்து வந்ததால் அவளுக்கு அதிர்ச்சி என்பது துளியுமின்றி கம்பீரமாகவே அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு நடந்து வந்தாள்.அவள் கண்களில் ஒரு வித அலட்சியம் தெரிந்தது.
அதனைக் கண்ட யாதிஷ் தன்னை சமன்படுத்திக் கொண்டு அவளை நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தான்.அந்த பார்வைக்கான அர்த்தம் ‘ஏன்டி…என் கம்பெனிக்கே இன்டர்வியூ வந்துட்டு…நேத்து என்கிட்டயே மரியாதை இல்லாமல் நடந்ததுமில்லாமல்…இப்போ என்னை பார்த்தும் கொஞ்சம் கூட பயமில்லாமல் திமிரா வேறே நடந்து வாரே…உனக்கு ரொம்பவும் தைரியம் தான்…!!!’ இப்படி தான் யாதிஷ் நினைத்தான்.
சஞ்சுயுக்தாவும் அவனுக்கு சலிக்காமல் ‘உனக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்டா…’ என்பதைப் போல் எதிர் பார்வைப் பார்த்தாள்.
அதற்குள் அவர்களை நெருங்கிய சஞ்சு அனைவருக்கும் தனது காலை வணக்கத்தைத் தெரிவித்தாள்.யாதிஷ் அவளின் கோப்பை வாங்கி சஞ்சுயுக்தாவை இருக்கையில் அமரச் செய்தான்.
அந்த கோப்பையை வாங்கிப் பார்த்த யாதிஷ் திகைத்தான்.ஏனெனில் குறைந்த காலத்தில் அவள் நிறைய நிறுவனங்கள் மாறியிருக்கிறாள். ஆனால் ஒரு நிறுவனமும் அவளின் வேலையைப் பற்றி குறைக்கூறி இருக்கவில்லை.குறைந்த காலத்தில் மிகப்பெரிய பதவிக்கு வந்திருக்கிறாள்.அப்படியென்றால் இவள் மிகவும் திறமைசாலி என்பதை யாதிஷ் அறிந்துக் கொண்டான்.
அவளது கோப்பை மூடிவைத்துவிட்டு சஞ்சுயுக்தாவை நிமிர்ந்து ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து மற்ற யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்றுவிட்டு அவனே தன் கேள்வியைக் கணையைத் தொடுத்தான்.
அவனின் முதல் கேள்வி “என்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீங்களா…??” என்று அவளின் கண்களை கூர்ந்தவாறு வினவினான்.
அவன் உடனடியாக இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று எதிர்பார்க்காததால் சஞ்சுயுக்தா ஒரு நொடி தடுமாறினாள்.ஆனால் சடுதியில் தன்னை சமன்செய்து “எஸ் சார்…!!” என்று தோரணையாக கூறினாள்.
இப்போது அவனுக்கு சுவாரசியமாகியது.ஏனெனில் அவள் இல்லை என்று பதில் கூறுவாள் என்று எதிர்ப்பார்த்தான்.அவள் ஆமாம் எனவும் அவளிடம் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.அதன்படி “எங்கே என்று தெரிந்துக்கொள்ளலாமா…??” என்று புருவம் உயர்த்தி கேட்டவனை முறைக்க முடியாமல் “டீவியில் நீங்க விருது வாங்கும் போது பார்த்தேன்…!!” என்றவுடன் சப்பென்றானது யாதிஷிற்கு.
ஆனால் அங்கிருந்த மற்ற அனைவரும் ‘இவனுக்கு என்னச்சு’ என்பதை போல் யாதிஷைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஏனெனில் யாதிஷ் வேலை விசயத்தை தவிர மற்ற எதைப் பற்றியும் யாரிடமும் பேசமாட்டான்.ஆனால் இன்று அவளிடம் இப்படி கேட்டதினால் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.
அவர்களின் வித்தியாசமான பார்வை தன் மீது விழுந்தவுடன் சுதாரித்த யாதிஷ் தன் தவறை உணர்ந்து தன்னை தெளிவுப்படுத்தி அவளிடம் கம்பெனி சம்பந்தமான சில கேள்விகளைக் கேட்டான்.
அதற்கு அவள் அசராமல் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை சரளமாக கொடுத்தவுடன் அனைவருக்கும் திருப்தியாக இருந்தது,ஒருத்தனுக்கு தவிர.இந்த திமிரு பிடித்தவளை எப்படியாவது வெளியேற்ற வேண்டுமே என்று தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.
“இவ்வளவு திறமையான உங்களை ஏன் சீக்கிரமாக வேலையிலிருந்து வெளியேற்றனாங்கனு தெரிஞ்சிக்கலாமா…??” என்ற கேள்விக் எழுப்பினான்.
இப்போது சஞ்சுயுக்தா யாதிஷை நன்றாகவே முறைத்தாள்.இருந்தும் “சாரி அவங்க ஒன்றும் என்னை வேலையை விட்டு அனுப்பவில்லை… நான் தான் எனக்கு பிடிக்கலை என்று வந்துவிட்டேன்…இது போதுமா…இல்லை வேற ஏதாவது என் சொந்த விசயத்தைப் பற்றி தெரிந்துக்கணுமா சார்…??” என்று புருவம் உயர்த்தி நக்கலாக திருப்பிக் கேட்டாள்.
தொடர்ந்து அவளே “நான் ஏன் வேலையைவிட்டு வந்தேனு தெரிஞ்சிக்கணுமா…அதையும் நானே சொல்லிடறேன்…நான் என்னுடைய ஃபில்டில் ரொம்ப வேகமாக வளர்ந்தவுடன்,என்னை நேரடியாக எதிர்க்கமுடியாமல் குறுக்கு வழியைப் பின்பற்றி என்னிடம் தவறாக நடந்து கொண்ட என் மேலதிகாரிகளின் மீது சிறிதும் இரக்கம் காட்டாமல் அடித்து வீழ்த்தினேன்…அவர்கள் சென்று என்னை பற்றி தப்பு தப்பாக மற்ற வேலையாட்களிடம் கூறினார்கள்…அதைக் கேட்ட அனைவரும் என்னை ஒரு மாதிரி தவறாக பார்த்தார்கள்…அவர்களின் பார்வையும் பேச்சும் என்னை ஒன்று செய்யமுடியாது…ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் இதையெல்லாம் சந்தித்து தானாக வேண்டும்…ஆனால் என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு ஒரு முன்னேற்றம் வேண்டும் என்று முடிவு செய்து,இந்த வேலைக்கு என் விண்ணப்பத்தை அனுப்பினேன்…!!” என்று முழுநீளமாக பேசி முடித்தாள்.
அவளை எப்படியாவது வெளியே அனுப்பியாக வேண்டும் என்று தான் யாதிஷ் இந்த கேள்வியைக் கேட்டான்.ஆனால் அவள் இந்த பதிலைக் கூறியவுடன் அவனின் முகம் கறுத்து சிறுத்தது.ஏனெனில் அவள் என்னிடம் தப்பாக நடந்து கொண்ட என்னுடைய மேல் அதிகாரிகளை அடித்தேன் என்று கூறும் போது யாதிஷைப் பார்த்து கூறினாள்.
அதில் ‘நீ வழியில் வந்தால் உன்னையும் விடமாட்டேன்’ என்ற மறைமுகச் செய்தி இருந்தது.
யாதிஷ் நினைத்திருந்தால் எழுந்து “வெளியே போ” என்று கூறும் அதிகாரம் அவன் இடத்தில் இருந்தது.ஆனால் இந்த நேர்முகதேர்வு தொடங்கும் போது சக நிர்வாகியிடம் “எல்லோரும் ஒரு மனதாக தான் ஒருத்தரை தேர்ந்தெடுக்க வேண்டும்…நான் எந்தவொரு இறுதி முடிவையும் தனியாக எடுக்க மாட்டேன்…!!” என்று உறுதியளித்திருந்தான்.அதனால் தான் அவன் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது.அவளை எதுவும் செய்ய முடியாமல் அவளைப் பார்த்து பற்களைக் கடித்தான்.
ஆனால் மற்றவர்கள் அவளது பதிலில் திருப்தியடைந்து “மிஸ் சஞ்சுயுக்தா நீங்க போங்க… இன்னும் இரண்டு நாளில் எங்களின் முடிவை கடிதம் மூலம் அனுப்புகிறோம்…!!” என்று கூறியவுடன் சஞ்சுயுக்தா மற்றவரிடம் சிரித்த முகமாகவே விடைப்பெற்று,யாதிஷை மட்டும் பார்த்து “எப்படி” என்பது போல் புருவம் உயர்த்தினாள்.
அதில் இன்னும் அவளின் மேல் ஆத்திரம் வர பெற மனதில் ‘போடி போ…நீ எப்படி இந்த வேலையில் சேரப் போறேன்னு பார்க்கிறேன்.நான் சொன்னால்தான் உனக்கு வேலை…அது நான் இருக்கும் வரை உனக்கு கண்டிப்பாக கிடைக்காது…!!!’ என்று கறுவினான்.
“நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாம்” அதுபோல் யாதிஷின் வார்த்தை பொய்யாய் போக இன்னும் இரண்டு நாள் கழித்து தன் முன்னால் வந்து திமிராக நிற்கும் சஞ்சுயுக்தாவைப் பார்த்து யாதிஷ் தான் தடுமாறி நிற்க போகிறான்.
—————————————————————————————
புயலை போல் மருத்துவரிடம் பேசிவிட்டு வெளிவந்த செழியன் நேராக மகிழாவின் பெற்றோரின் முன் சென்று நின்றான்.
செழியனின் கண்கள் கோபத்தில் இரத்தமென சிவந்திருக்க உள்ளமெல்லாம் தணல் போல் எரிந்துக்கொண்டிருந்தது.
கோபத்தின் நாயகனான ருத்ர மூர்த்தியாய் காட்சியளித்த செழியன்,தன் மனதில் எரியும் வெப்பத்தை அணைக்கும் வழி தெரியாமல் தனது கண்களை மூடியும் கைமூஷ்டிகளை இறுக்கியவாறு தன் கோபத்தைக் கட்டுபடுத்தினான்.அவன் இருக்கும் கோபத்தில் அதற்கு காரணமானவன் மட்டும் கையில் கிடைத்தால் கொலைச் செய்யும் வெறியில் இருந்தான் செழியன்.
செழியன் மகிழாவின் தந்தை பிரபாகரனின் முன்னால் வந்து நின்றவுடன் செழியனை “என்ன” என்பது போல் நிமிர்ந்து பார்த்தார்.
செழியன் கடும் கோபத்துடன் “நேற்று இரவு உங்க வீட்டில் உங்களைத் தவிர வெளியாட்கள் யாராவது வந்து தங்கினார்களா…??” என்று பொறுமையை இழுத்துப் பிடித்தவாறு வினவினான்.
‘இவன் என்ன பேசறான்’ என்று புரியாமல் பார்த்தார் பிரபாகர்.இதுவரை மகளைப் பற்றிய கவலையில் இருந்த மகிழாவின் தாயார் இப்போது தான்.ஒரு ஆடவன் தன் கணவனிடம் பேசுவதை கண்டு நிமிர்ந்து அவனை கவனித்தார்.
செழியனின் பொறுமை சிறிது சிறிதாக காற்றில் பறந்து கொண்டிருந்தவேளையில் பிரபாகரன் “எதுக்கு தம்பி…!!” என்று புரியாமல் வினவினார்.
செழியன் எரிச்சலுடன் “கேட்டால் பதில் சொல்லுங்க…உங்க வீட்டில் உங்களைத் தவிர வேற யார் யார் இருக்கா…??” என்று வார்த்தையில் கடுமை தெறிக்க வினவினான்.
அவன் கேட்ட தினுசில் பயந்து “நான்…என் மனைவி…அப்புறம் என் பொண்ணு மகிழா…அப்புறம் வீட்டு காவலுக்கு இரண்டு பேரு…வேற யாரும் இல்லை…?ஏன் தம்பி???” என்றவரை விடாமல்,
“உங்க வீட்டுக்கு…நேற்று யாராவது புதுசா வந்தாங்களா…??” என்று வினவினான்.அவரிடம் அமைதியாக தான் பேசிக் கொண்டிருந்தான் செழியன்.ஆனால் அவன் மனம் கொதித்து கொண்டிருந்தது.பானுமதி இது எதற்கு என்று புரியாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு நடப்பதை அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தார்.
அதற்குள் ஒரு நிமிடம் யோசித்து பார்த்தவர் “நான் வெளியூரிலிருந்து இரவு 1 மணிக்கு தான் தம்பி வீட்டிற்கு வந்தேன்…அப்படி யாரும் வீட்டிற்கு வந்த மாதிரி தெரியலை…ஏன் தம்பி கேட்கறீங்க…??” என்று புருவம் சுருக்கி சந்தேகத்துடன் வினவினார்.
அவரின் கேள்விக்கு பதில் கூறாமல் செழியன் இப்போது பானுமதியைப் பார்த்து “நேற்று இரவு வீட்டிற்கு யாராவது வந்தாங்களா…??” தன் விசாரணையை தொடர.
பானுமதி ‘இவன் எதற்கு இதெல்லாம் கேட்கிறான்’ என்று யோசித்தவர் இருந்தும் அவனின் தோரணையைப் பார்த்து அஞ்சி “இல்லை தம்பி…நான் என் பொண்ணு மட்டும் தான்…வேற யாருமில்லை…!!” என்று கூறினார்.
“நேத்து எத்தனை மணிக்கு தூங்கனீங்க…கதவுயெல்லாம் நல்ல மூடிட்டு தான் தூங்கனீங்களா…??” என்று துருவிதுருவி வினவியவனைப் பார்த்து இப்போது எரிச்சலடைந்தனர் மகிழாவின் பெற்றோர்.
“என்ன தம்பி…எதுக்கு இப்போ இதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க… நாங்களே எங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னு வருத்தத்தில் இருக்கோம்…நீங்க வேற வந்து…எங்க வேதனைப் புரியாமல்… எங்களைக் கேள்வி மேலே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க…!!” என்று ஆதங்கத்துடன் கேட்டுவிட்டு கணவரின் தோளில் சாய்ந்து அழுதார் பானுமதி.
இப்போது கோபத்துடன் செழியன் அருகில் இருந்த சுவற்றில் குத்தி “நிறுத்துங்க…உங்க வீட்டில் ஒருத்தன் வந்து உங்க பொண்ணை கெடுக்க முயற்சி செய்திருக்கான்…ஆனால் நீங்க அதுக்கூட தெரியாமல் நிம்மதியாக தூங்கிட்டு இருந்தருக்கீங்க…அவன் யார்னு கண்டுப்பிடிக்க வேண்டி கேள்வி கேட்டால் அதற்கு கொஞ்சம் பொறமையா கூட பதில் சொல்ல முடியலை இல்லை…!!” என்று அவர்களிடம் கர்ஜித்தான்.
இதைக்கேட்டவுடன் “என்ன சொல்லுறீங்க…??” என்றுவாறு உச்சக்கட்ட அதிர்ச்சியில் கண்கள் விரிய கத்தினார்கள் மகிழாவின் பெற்றோர்கள்.
“ஆமாம்…உங்க பொண்ணை யாரோ சீரழிக்க முயற்சி செய்திருக்காங்க…ஆனால் அது தெரியாமல் எப்படி நீங்க வீட்டில் இருந்தீங்க…இல்லை உங்களுக்கு தெரிஞ்சும்…” என்று சந்தேகப் பார்வைப் பார்த்தவனின் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பானுமதி வெடித்து அழுதார்.
பிரபாகரன் தன் மனைவியின் மீது செழியன் கூறிய குற்றச்சாட்டைப் பொறுத்து கொள்ளமுடியாமல் “தம்பி பெத்த பொண்ணுக்கு இப்படி நடக்க யாராவது அனுமதிப்பாங்களா…??நீங்க சொல்லறது உங்களுக்கே அபாண்டமா தெரியலை…??” என்று ஆதங்கத்துடன் வினவினார்.
செழியன் இப்போது “அது உங்க பொண்ணா இல்லைனா…” என்று கேட்டு முடிப்பதற்குள் பிரபாகர் இடைமறித்து “போதும் தம்பி…போதும் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துகிறேன்…என் பொண்ணுக்கு அநீதி செய்ய நினைச்சவங்களைக் கண்டுபிடிச்சு…தண்டனைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு என்னோடது…நீங்க கிளம்புங்க…!!!” என்று கையெடுத்து கும்பிட்டு அவனை கிளம்பச் செய்தார்.
ஆனால் செழியன் அங்கிருந்து கிளம்பாமல் சட்டமாக அங்கே நின்று பானுமதியை அழுத்தமாக பார்த்தான்.அவர் இன்னும் அழுதுக்கொண்டிருக்கவும் ஒரு முடிவுடன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி அவரைப் பார்த்து “அம்மா…நான் பேசினதைத் தப்பா நினைச்சிக்காதீங்க…நான் ஒரு போலீஸ்காரன்…அதனால் பல விதங்களில் யோசிக்கணும்…அதனால் தான்…உங்களின் மீது ஏதாவது தப்பு இருக்கானு தெரிஞ்சிக்க தான்…அப்படி பேசினேன்…ஆனால் நீங்க அழுவதைப் பார்த்தால்…இது உங்களுக்கு தெரியாமல் தான் நடந்திருக்குனு புரிஞ்சிக்கிட்டேன்… ஏனெனில் உண்மையான அழுகைக்கும் பொய்யான அழுகைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்…!!” என்று கூறியவுடன் பிரபாகரனும் பானுமதியும் அவனை நம்பாமல் நிமிர்ந்து பார்த்தனர்.
இப்போது அவன் ஆமாம் என்பது போல் தலையாட்டி தீவரமான முகப்பாவனையுடன் “என் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க…நேத்து இரவில் மகிழா கத்துவது போல்…பிறகு காலையில் எழுந்திருக்கும் போது வித்தியாசமாக எதுவும் தெரியலையா…??” என்று பானுமதியிடம் கேள்விக் கேட்டான்.
இப்போது பானுமதி கொஞ்சம் யோசித்து அதற்கான பதிலைக் கூறியவுடன் செழியனுக்கு என்ன நடந்தது என்று புரிந்துவிட்டது.
அதன்பிறகு மகிழாவைப் பார்க்க அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளே சென்றான்.
அங்கே மகிழா பயங்கரமான காய்ச்சலில் முனங்கிக் கொண்டு இருந்தாள்.இப்போது அவளின் அருகில் நெருங்கி நின்று பார்த்தான் செழியன்.
அவனின் பின்னே மகிழாவின் பெற்றோரும் வந்தனர்.ஆனால் அவளை இந்த நிலையில் பார்க்க தைரியமின்றி வாசலிலே நின்றுவிட்டனர்.பானுமதி சேலை முந்தானையை வாயில் வைத்து சத்தம் வராமல் அழுதுக்கொண்டிருந்தார்.
முன்பு தெரியாமல் இருந்த அவளின் உடலில் இருந்த சிறு சிறு கீறல்கள் இப்போது தெள்ளதெளிவாக தெரிந்தது.உடம்பில் ஆங்காங்கே சில இடங்களில் நகத்தின் கீறல்கள் இருந்தன.அவள் முனங்களின் ஒலி மெல்லியதாக கேட்டதால் அவளின் அருகில் குனிந்து காதை வைத்து கேட்டான் செழியன்.
அவள் பயத்தில் “வேணாம்…என்னை விட்டுடுங்க…வேணாம்…என்னை விட்டுடுங்க…!!” என்று சொன்னதையே திரும்ப திரும்ப கூறி பிதற்றிக் கொண்டிருந்தாள்.
அதைக் கேட்டவுடன் செழியன் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அவளிடமிருந்து எழுந்து வெளியே செல்ல திரும்ப “அம்மா…என்னைவிட்டுட்டு போகாதீங்க…பயமாயிருக்கு…!!!” என்று அழுகையோடு கூறி தனது தாய் என்று நினைத்து அவனின் வலிய கரத்தை இறுகப் பற்றினாள்.
இப்போது செழியனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.அவளின் முகத்தைப் பார்த்தான்.பார்க்க குழந்தைப் போல் கண்களைத் திறக்காமல் அழுகையில் உதடு பிதுக்கியப்படி இருந்தவளின் தோற்றம் அவனின் கண்களுக்கு ஒரு வளர்ந்த குழந்தையாகவே தெரிந்தது.இந்த குழந்தையைப் போய் இப்படி செய்ய யாருக்கு மனசு வந்தது என்று நினைத்து பல்லைக் கடித்தான்.
ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து பார்த்தவன் மெதுவாக தனது கையை உறுவிக்கொண்டு அவளின் பெற்றோரிடம் விடைப்பெற்று நேரடியாக மகிழாவின் வீட்டிற்கு சென்றான்.அங்கு இரவு காவலுக்கு இருந்தவர்களிடம் சில விசாரணை செய்தான்.
விசாரித்து தெரிந்த விசயங்களை வைத்து கோர்வையாக தொகுத்து என்ன நடந்தது என்று ஊகித்து கண்டுப்பிடித்திருந்தான் செழியன்.ஆனால் யார் இதைச் செய்தார்கள் என்று அவனால் கண்டறியமுடியவில்லை…!!
அவன் யூகித்தவைகளை வைத்து இவ்வாறு நடந்திருக்கமுடியும் என்று மட்டுமே உறுதிச்செய்ய முடிந்தது.ஆனால் இது யார் செய்திருக்கக்கூடும் என்று விடை தெரியவில்லை.
அதேநேரம் செந்தில் தன் திட்டம் நிறைவேறாத எரிச்சலில் தனது வீட்டினுள் அங்கும் இங்கும் ஏமாற்றத்துடன் நடந்துக்கொண்டிருந்தான்.அதற்கு காரணம் மகிழாவைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று எண்ணத்தில் திட்டம் போட்டு அவளின் வீட்டிற்குள் நுழைந்தவன் கடைசியாக தன் திட்டத்தில் மண் விழுந்ததால் வந்த எரிச்சல் அது.
செந்தில் சுந்தரத்தின் சொந்த மச்சினன்.அதாவது சுந்தரத்தின் மனைவி கமலாவின் தம்பி தான் இந்த செந்தில்.அவனுக்கு இந்த ஜில்லாவிலே அழகான மற்றும் வசதி படைத்த மகிழாவின் மீது ஆசையிருந்தது. எப்படியாவது அவளை அடைந்தேயாக வேண்டும் என்று வெறியுடன் இருந்தான்.
சுந்தரம் சரியான நேரம் பார்த்து தன் அண்ணனிடம் அதைப்பற்றி பேசுகிறேன் அதுவரைக் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி அவனை அடக்கி வைத்திருந்தார்.
ஒரு நாள் சுந்தரம் அவர் அண்ணனிடம் தனது மச்சினனை பற்றி பேசினார்.ஆனால் அவர் செந்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் குணமும் சரியில்லை என்பதால் என் பொண்ணை அவனுக்கு கட்டி தரமாட்டேன் என்று உறுதியாக மறுத்து சுந்தரத்தைத் திட்டி அனுப்பிவிட்டார்.
அதைக்கேள்விப்பட்ட செந்தில் கொதித்து போய் மாமனின் பதிலில் நெஞ்சில் தீ மூட்ட பொறுக்கமுடியாமல் எப்படியாவது அவளை சீராழித்து விட்டால் அவளை தனக்கே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று தப்பு தவறுமாக திட்டம் தீட்டினான்.அதற்கு பிரபாகரன் ஊருக்கு சென்ற இந்த நாளைத் தேர்ந்தெடுத்தான்.
அதன்படி வீட்டில் உள்ளவர்களின் இரவு உணவில் அந்த வீட்டில் வேலைச் செய்யும் ஒரு வேலையாளின் உதவியுடன் மயக்கமருந்தைக் கலக்கச் சொன்னான்.அதனால் அதைச் சாப்பிட்ட பானுமதி மற்றும் வேலையாட்களும் மயக்கமடைந்தனர்.ஆனால் மகிழாவைத் தவிர…!!
இன்று முழுவதும் அழுதே கழித்தவள் இரவு உணவு வேண்டாம் என்று தனது தாயிடம் மறுத்துவிட்டு வெறும் பால் மட்டும் அருந்திவிட்டு அம்மாவின் அருகில் படுத்துவிட்டாள்.
இரவு 12 மணிக்கு வீட்டினுள் நுழைந்த செந்தில் அவளின் அறையைத் தேடிப்பிடித்து உறங்கிக்கொண்டிருக்கும் அவளின் அருகில் நெருங்கினான்.கட்டிலின் மேல் படுத்திருந்தவளின் மேனியைப் பார்வையால் மேய்ந்தான்.
தூக்கத்தில் புரண்டு படுத்திருந்தவளின் தாவணி சற்று விலகியிருக்க பெண் அவளின் அங்கங்களின் வளைவுகள் வெளிப்படையாகத் தெரிய அதற்கு மேல் தன்னைக் கட்டுபடுத்திக்க முடியாமல் கண்ணில் காம வெறியோடு அவளை அங்கிருந்து தூக்கினான்.
அதில் அடித்துபிடித்து எழுந்த மகிழா அவனைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.இப்போது செந்தில் ‘இவள் எப்படி விழித்தாள்’ என்று திகைத்தான்.
அதற்குள் அவள் தன்னுடைய தாயை எழுப்ப முயற்சி செய்தாள்.அதைப் பார்த்து எரிச்சலுடன் அவளின் வாயைப் பொத்தி அப்படியே அவளைத் தூக்கி கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் அறையில் உள்ள கட்டிலின் மேல் போட்டான்.
அவள் சத்தம் எழுப்பாமல் இருக்க அவள் அணிந்திருந்த தாவணியை உருவி அவளின் வாயில் இறுக்கி கட்டினான்.
அதற்கு மேல் தனது காமவெறியைத் தீர்த்துக்கொள்ள அவளின் மேல் வேட்டையாடும் ஓநாயாய் பாய்ந்தான்.
பூ போன்ற மென்மையானவளால் அந்த ஓநாயின் வலிமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவள் தன் முழுப்பலத்தையும் திரட்டி “ஹூம்…ஹூம்” என்றப்படி அவனை கீழே தள்ளிவிட முயற்சிச் செய்தாள்.
அவன் அவளின் எதிர்ப்பை சாதுர்யமாக தகர்த்து எறிந்து அவளின் உதட்டை நோக்கி குனிந்தான்.அதற்குள் மகிழா தன் முழு பலத்தையும் திரட்டி அவனை கீழே தள்ளிவிட்டு அவன் சுதாரித்து எழுவதற்குள் அந்த அறையிலிருந்து வெளியே ஓடினாள்.
அவனும் ‘ஏய்’ என்று கத்தி வேகமாக அவளின் பின்னால் ஓடினான்.
உடனே மகிழா ஒரு அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றுவதற்குள் அவளைத் தடுத்து தன் முழு பலத்தையும் உபயோகித்து உள்பக்கம் கதவைத் தள்ளினான்.வெளிப்பக்கமாக கதவைத் தள்ளி கொண்டிருந்த மகிழா பத்தடி தள்ளிப்போய் பின்னால் விழுந்தாள்.
உள்ளே வந்தவன் கோபத்துடன் கதவைச் சாற்றிவிட்டு வந்து அங்கே பயந்து போய் மூலையில் கை காலைக் குறுக்கி முகம் வெளிற உட்கார்ந்திருந்தவளின் முடியைப் பிடித்து தூக்கியவன் “ஏன்டி என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு பார்க்கறியா…??அது ஒரு காலமும் நடக்காது…இந்த ஜென்மத்தில் நீ தான் என் பொண்டாட்டி…வாடி…!!” என்று அவளைப் பிடித்து மூர்க்கத்தனமாக கட்டிலில் தள்ள அவள் வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்ச கெஞ்ச அவளின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
இந்த நிலைமையில் யார் பார்த்தாலும் அவளின் மேல் பரிதாபம் கொள்வார்கள்.ஆனால் செந்தில் தான் சுயநினைவிலே இல்லையே கொடூரமாக அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் மகிழாவை நெருங்கிய வேளையில் யாரோ வெளிக்கேட்டை திறக்கும் ஒலி கேட்டு அவளை அப்படியே கட்டிலில் கிடத்திவிட்டு ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்தான்.
வெளியே பிரபாகரும் கூடவே ஒரு அடியாளை போன்று ஒருவனும் வர,அதைப்பார்த்த செந்தில் ‘இவர் நாளைக்கு தானே வரேனு சொன்னார்.இப்போது எப்படி வந்தார்’ என்று புருவம் சுருக்கி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அதன்பிறகு தான் மகிழாவின் ஞாபகம் வந்தது.
உடனே அவளை நெருங்கி முடியைப் பிடித்து தூக்கி “இன்னைக்கு நீ தப்பிச்சிட்டே… ஆனால் இன்னொரு நாள் கண்டிப்பா உன்னை நான் சொந்தமாக்குவேன்… இப்போ நான் வந்தது,இங்கு நடந்தது இதை பத்தியெல்லாம் யாருக்கிட்டயாவது சொன்னால்,உன்னை உயிரோடு எரிச்சு கொன்னுடுவேன்டி…!!” என்று எச்சரித்துவிட்டு அவளின் வாயிலிருந்து தாவணியை எடுத்து அவள் மேல் போட்டுவிட்டு அவள் அழுதுக்கொண்டே இருக்கவும் எரிச்சலுடன்…
“எதுக்கு இப்போ உன் உயிர் போனமாதிரி அழுதிட்டு இருக்கே… கண்ணை துடைச்சிட்டு படுடி…உங்க அப்பா எப்படியும் உன்னை தேடிக்கிட்டு இங்க தான் வருவான்…ஏதாவது என்னைக் காட்டி கொடுக்கலாம்னு நினைச்சே…அவ்வளவு தான்டி நீ…முன்னாடி சொன்னமாதிரி தொலைச்சிக்கட்டிடுவேன்…!!!” என்று மறுபடியும் ஒரு முறை எச்சரித்து அவளைப் படுக்கச் செய்து முகம்வரைப் போர்த்திவிட்டு அங்கிருந்து வந்த வழியே வெளியேறினான்.
மகிழா பயத்துடன் நடுங்கிக்கொண்டே போர்வையை இழுத்து மூடிவிட்டு சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்தாள்.அவன் குறிப்பிட்டதை போலவே அவளின் தந்தை இங்கே வந்து மகிழாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
இங்கே மகிழா இரவு முழுவதும் பயத்துடன் அழுதுக்கொண்டே கடுமையான காய்ச்சலுடன் உறங்காமல் விழித்து இருந்தாள்.
காலையில் எழுந்து பானுமதி பெருசாக எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.அவளின் தந்தைக்கு கதவைத் திறந்துவிட்டு அவளின் அறைக்குச் சென்று படுத்திருத்திருப்பாள் என்று நினைத்தார்.
இந்த பதிலை தான் செழியனிடம் கூறினார் பானுமதி.
அந்த பூ போன்று மென்தையானவளைச் சூரையாட துணிந்த அந்த வேட்டை நாயைச் சும்மா விடக்கூடாது என்று நினைத்த செழியன் கண்களில் கொலை வெறியோடு தன் தொடையை பலமாக்கொண்டு குத்தினான்.
அதேஅளவு வெறியோடு செந்தில் ‘ஏன்டி…இன்னைக்கு தப்பிச்சிட்டேனு நினைக்காதே…கண்டிப்பாக ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் உன்னை சொந்தமாக்கிக்கல…என் பேரு செந்தில் இல்லைடி…!!’ என்று கறுவினான்.
செந்திலுக்கு மகிழாவின் மேல் நம்பிக்கையிருந்தது.அவள் இந்த விசயத்தைப் பற்றி வெளியில் கூறமாட்டாள் என்று…!!!
ஆனால் இதில் செழியன் ஈடுப்பட்டுயிருப்பது அவனுக்கு தெரியாமல் போனது தான்,அந்தோ பரிதாபம்…!!
செழியன் செந்தில் தான் இதெல்லாம் செய்தான் என்று கண்டுப்பிடித்தால் அவனின் நிலை என்னவாகும்…!!
“செந்தில் மண்ணாசையும் பெண்ணாசையும் ஒருவனின் அழிவிற்கு வித்தாகும் என்பதை அறியாததேனோ…??”