ஆதித்யா அரங்கத்தை விட்டு வெளியேறியவுடன் தனது கைப்பேசி மணி அடித்ததும் அதை எடுத்து பார்த்தான்.
அதில் தன் தாயின் எண் ஒளிரவும் உதட்டில் சிறு புன்னகையுடன் எடுத்து காதில் வைத்தான்.
அந்தப்பக்கம் மகிழா எடுத்தவுடனே தவிப்புடன் “ஆதி மேட்ச் முடிஞ்சாதா…??உனக்கு ஒண்ணும் அடிப்படலையே…??நல்லா இருக்க தானே…??கிளம்பிட்டியா…??எப்போ இங்க வர…??சாப்பிட்டியா…??சாப்பிட்டு கிளம்புப்பா…??” என படபடவென அனைத்து கேள்விகளும் சரமாரியாக வந்து விழுந்தன.
ஆதித்யாவிற்கு பொறுமை என்பது துளியும் கிடையாது.எப்போதும் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கும் ரகம்.ஆனால் இன்று தன்னை பேசவிடாமல் தன் தாயே பேசிக்கொண்டிருப்பதை கேட்டு,கோபத்திற்கு மாறாக ஒரு கனிவே வந்தது.ஏனெனில் இவையனைத்தும் தாய் தன் மேல் வைத்திருக்கும் அபரீவிதமான அன்பிற்கு இலக்கணமல்லவா…??
அதை நினைத்து புன்னகைத்தவாறு அமைதியாக இருந்தவுடன் அந்தப்பக்கம் மகிழா பதட்டத்துடன் “ஆதி என்னாச்சுப்பா…அடி எதாவது பட்டுடுச்சா…??” என்று அழுகுரலில் வினவியவுடன்,
விட்டால் அழுதுவிடுவார் என்று தோன்ற “மாம்…மாம்…ஐயம் ஆல் ரைட்…ஏதோ யோசனையிலிருந்தேன்…அதனால் ஐ டிடின்ட் ஆன்சர் ஃபார் யூவர் குவைஸ்டின்…அதுக்குள்ள எதுக்கு இந்த அழுகை…??” என்று செல்லமாக கடிந்தான்.
அவனுக்கு ஒன்றுமில்லை என்று கூறிய பிறகு தான் கொஞ்சம் நிம்மதியடைந்தவர் மெதுவான குரலில் “ஓகேப்பா மேட்ச் முடிஞ்சுதா…??” என்று வினவினார்.
அதே மென்மையை தத்தெடுத்தவன் “எஸ் மாம்” என்றான்.
மகிழா “ஓகே ஆதி…எப்போ வர இங்கே…??” என்று தனது கேள்விகணையைத் தொடுத்தார்.
ஆதித்யா அதற்கும் பொறுமையாக “மாம் இதோ கிளம்பிட்டேன்… டூமாரோ மார்னிங் ஐ வில் பி தேர் ஃபார் யூ…ஆன்ட் ஆல்சோ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு…??” என்றவுடன்,
மகிழா கனிவுடன் “ஆதி ஏன்ப்பா அவசரம்…இன்னைக்கு நைட் மட்டும் அங்கிருந்திட்டு வா…ஓரே அலைச்சலா இருக்குமில்லை” என்றார்.
ஆதி கம்பீரமான குரலில் “மாம் லைப் இஸ் தி ரேஸ்…இங்க ஓடிட்டே இருக்கணும்…இல்லைனா வி வில் பி கோ டவுன்…அதுமட்டுமில்லாமல் ஒரு நல்ல பிஸினஸ் மேனுக்கு கம்மிட்மென்ட் அன்ட் டைம் மேனஜ் மேன்ட் இஸ் வெரி இம்பார்ட்டான்ட்…சோ நான் மீட்டிங் கமிட் பண்ணிட்டேன்…அதனால் ஐ வோண்ட் ஸ்டாப் திஸ் மாம்…!!” என்று தீர்மானமாக கூறினான்.
மகிழாவிற்கும் அவன் எப்படியும் தான் சொல்லப்போவதைக் கேட்கப்போவதில்லை என்று தெரிந்ததினால் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு “சரிப்பா ஆதி…உனக்கு என்ன தோணுதோ அதை செய்…!!” என்று அவன் இஷ்டத்திற்கு விட்டவர்,தீடிரென்று ஒரு முக்கியமான விசயம் ஞாபகத்திற்கு வர அதை எவ்வாறு அவனிடம் சொல்வது என்று யோசித்து தயங்கி தயங்கி “ஆதி…மாமா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்காங்க…அதுவும் நீ நாளைக்கு வந்தவுடனே பொண்ணு பார்க்க போறோம்னு உன்கிட்ட சொல்ல சொன்னாரு” என்று கூறியதிலே கண்டிப்பாக நாளைக்கு பெண் பார்க்க செல்கிறோம் என்ற அப்பாவின் கட்டளை இருந்ததை அறிந்த ஆதி முகம் சிவக்க சுறுசுறுவென எகிறிய கோபத்துடன்,
“யாரை கேட்டு முடிவுப்பண்ணீங்க…??” என்று கர்ஜித்தான்.
அவன் கர்ஜித்ததில் உதறலெடுத்தாலும் இந்த தடவை எப்படியாவது அவனை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் “ஆதி பிளீஸ்ப்பா…அப்பா உன்னோட நல்லதுக்காக தான் செய்வாங்க…இந்த ஓரே ஒரு தடவை மட்டும் வந்து பொண்ணை பாரு…நீ வந்து பார்த்திட்டு பிடிக்கலைனா…இதுக்கு மேலே உன்னை தொந்தரவு பண்ணமாட்டோம்ப்பா…பிளீஸ்ப்பா ஒரே ஒரு தடவை” என்று இரைஞ்சினார்.
தன் தாயின் கெஞ்சலைக் கேட்டபிறகும் சற்றும் மனமிறங்கிவராத ஆதித்யா அதே கோபத்துடன் “மாம் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என்று கத்தியவுடன் அந்தப்பக்கம் சென்று கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஆதியைத் திரும்பி ஒரு பார்வை பார்க்கவும்,அதை கண்டு பல்லை கடித்து கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.
மேலும் அடக்கப்பட்ட கோப குரலில் “மாம் பிளீஸ் ஐயம் நாட் இன்ட்ரஸ்டட்…அதனால் இந்த ஏற்பாட்டை நிறுத்திடுங்க…இதுக்கு மேலே ஏற்பாடு பண்ணா நமக்கு தான் அசிங்கம்…டாட் கிட்ட சொல்லிடுங்க…பை அம்மா…டேக் கேர்” என்றவன் இதற்கு மேல் கோபத்தில் கத்தி தனது தாயைக் கஷ்டப்படுத்திவிடுவினோ என்பது போல் அவசரமாக கூறிவிட்டு தனது கைப்பேசியை அணைத்து சட்டை பைக்குள் வைத்தவன் இதுவரைக்கும் அடக்கிய கோபம் முழுவதும் சீறிக்கொண்டு வெளியில் வர தனது காரை “ஷிட்” என்று கூறி ஓங்கி குத்தினான்.
அவன் குத்திய வேகத்தில் அவனின் கோயிங்செக் காரே ஒரு நொடி ஆட்டம் கண்டது.அங்கே மகிழா ஆதியின் திருமணத்தை எண்ணி கவலையில் ஆழ்ந்திருந்தார்.இங்கே அரங்கத்திலிருந்து ஆட்கள் சிறிது சிறிதாக வெளிவர தொடங்க சட்டென்று தனது காரில் ஏறி அமர்ந்தான்.கோபம் முழுவதையும் அதில் செலுத்தியவனின் கைவண்ணத்தில்,கார் காற்றைக் கிழித்துக் கொண்டு சீறி பாய்ந்தது.
அடுத்த நாள் மும்பையில் பிரபலமான கடற்கரை ஒன்றில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருக்கிறாள்.அவள்,
“பிறைநிலா நெற்றியாள் செவ்வானம் மேனியாள்
நட்சத்திர அணியாள்
மாங்கனி இதழாள்
பெண்ணே – நீ கார் கூந்தலை இடைவரை பெற்றவளோ!
இலவம் பஞ்செனும் மென்மையை மேனியில் கொண்டவளே!
காந்தமாய் கவரும் கயல்விழியாள்.முழுநிலவாய் ஒளிரும் முகத்தினாள்.
நீண்ட சங்கு கழுத்தாள்.நெகிழ்ச்சியான கரும்பு தோளாள்.உணர்வைத் தூண்டும் துடியிடையாள்.
மழலை கொஞ்சும் என்னை கெஞ்சச்செய்யும் குழல் மொழியாள்.
நளின உடல் அமைப்பால் என்னை வீழ்த்தும் பெண்மையுடையாள்.
நின் தேனுறும் இதழால் என் இதழ் ஊறுதடி உன் இதழ் வரிகளை படிக்க நினைத்தால் இலக்கியம் படித்த இன்பம் தோன்றுதடி” என்ற கவிதையின் இலக்கணமாய் திகழும் இருப்பத்தைந்து வயது நிரம்பிய பாவையவள்.
பேருக்கு தான் இருபத்தைந்து வயது பாவை.ஆனால் அவளின் கையில் இருப்பதோ சிறுபிள்ளைகள் விரும்பி உண்ணும் குச்சி ஐஸ்.
அவள் தலையாட்டியவாறு கண்களை மூடி,தனது தேனுறும் இதழில் அந்த பனிகூழ் உருகி வழிய தனது நாக்கினால் சுவைத்தப்படி ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தவளின் அழகை அங்கிருந்த அனைவரும் என்னவோ அவர்களே சாப்பிடுவது போல் நாக்கில் உமிழ்நீர் ஊற ஆவென்று வாயைப் பிளந்து பார்த்து கொண்டிருந்தனர்.
அதைக்கண்டு எரிச்சலடைந்த அவளின் பக்கத்திலிருந்து தோழி லீனா “தேனு…அடியேய் தேனு…!!” என்று கத்தி அவளை ஒரு அடி வைத்து சுயநினைவிற்கு கொண்டு வந்தாள்.
தான் ரசித்து சாப்பிடவதை பாதியில் தடுத்தவளை முறைத்த தேன்மொழி “லீனா ஏன்டி நான் சாப்பிடறதை டிஸ்ட்ர்ப் பண்ணுறே…??” என்று எரிச்சலுடன் வினவினாள்.
அவளுக்கு மேல் இடுப்பில் கை வைத்து முறைத்த லீனா “நீ இப்போ அப்படியே வீட்டில் உட்கார்ந்து வடை பாயாசத்தோடு சாப்பிட்டுட்டு இருக்கே…உன்னை நான் சாப்பிட விடாமல் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கேன்…!!” என்றவள் தொடர்ந்து,
“உனக்கு இது பொது இடம் என்ற எண்ணம் இருக்கா இல்லையா…?அங்க பாரு எல்லாரும் உன்னை தான் பார்த்திட்டு இருக்காங்க..??” என்று எரிச்சலுடன் மொழிந்துவிட்டு சுற்றி இருப்பவர்களை கண்களால் காண்பித்தாள்.
அப்போது தான் அங்கிருக்கும் அனைவரும் தன்னையே வைத்து கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து புருவத்தை சுருக்கி அருகில் இருந்தவளிடம் “ஏன்டி என் வாய்…என் ஐஸ்கிரீம் நான் சாப்பிடறேன்…இவங்க எல்லாரும் எதுக்கு என்னை இப்படி பார்க்கறாங்க…??” என்று கிசுகிசுத்து தனது அதிமுக்கியமான சந்தேகத்தைக் கேட்டாள்.அப்போதும் விடாமல் தன் கையில் வழிந்த பனிகூழை நாக்கினால் நக்கினாள்.
அதைக் கண்டு இன்னும் கடுப்பாகிய லீனா அவளை ‘வெட்டவா குத்தவா’ என்பது போல் பார்த்து “ஏன்டி கிறுக்கி…நீ இப்படி வெட்டவெளியிலே ஐஸ்கிரீமை,அதுவும் சின்ன பிள்ளை மாதிரி நக்கி நக்கி சாப்பிட்டு இருந்தால்…யாரு தான் பார்க்காமல் இருப்பாங்க…அதுவும் எல்லாரும் யாரு இந்த பைத்தியம்னு பார்க்கிறாங்க” என்று நக்கலாக கூறினாள்.
அவள் கூறியதை கேட்டு அவளை முறைத்த தேன்மொழி “நீ தான்டி லூசு…அவங்க எல்லாரும் என்னை சைட் அடிக்கறாங்கனு உனக்கு பொறாமை…அதான் இப்படியெல்லாம் பேசுறே…??” என்று நொடித்துக்கொண்டு பழிப்பு காட்டியவாறு தனது வேலையை தொடர்ந்தாள்.
கடைசியில் லீனா தான் தலையில் அடித்து கொண்டு “கருமம் என்னமோ பண்ணி தொலைடி…உன் நல்லதுக்கு சொன்னேன் பாரு…என்னை சொல்லணும்” என்று கடுப்புடன் மொழிந்துவிட்டு சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
சிறிதுநேரம் கழித்து தேன்மொழி பனிகூழை சுவைத்தவாறு தலை நிமிர்த்தி சுற்றும் முற்றும் பார்த்து அங்கு தன்னையே பார்த்துக்கொண்டிருப்பவர்களிடம் “வேணுமா…??” என்பது போல் பனிகூழை முன்னால் நீட்டி சைகையால் வினவினாள்.
அங்கிருந்த அனைவரும் ‘வேணாம்’ என்பது போல் தலையாட்டி தங்களது பணியை தொடர்ந்தனர்.அதைக்கண்டு குறும்புடன் புன்னகைத்த தேன்மொழி தனது வேலையைத் தொடர போகும் போது அவளின் காதருகில் “எனக்கு வேணும் இந்த ஐஸ்கிரீம்” என்ற சீண்டலான குரல் கேட்டு பதட்டத்தில் திரும்பிய தேன்மொழியின் இதழை சிறை செய்திருந்தான் அந்த முகம் அறியாதவன்.
தீடிரென்று ஏற்பட்ட இந்த முத்ததாக்குதலில் வெளிவர முடியாமல் திணறியவள்,‘விடு’ என்பது போல் அவனின் புஜத்தில் இரண்டு கைகளாலும் குத்தினாள்.
அவன் அப்போதும் விடுவது போல் இல்லை என்றவுடன் தனது முழுபலத்தையும் திரட்டி “விடுடா” என்று ஆவேசமாக அவனின் புஜத்தில் ஓங்கி குத்தினாள்.
அதில் வலி பொறுக்காமல் “அய்யோ அம்மா வலிக்குதுடி” என்ற அலறல் ஒலி கேட்டு கண் திறந்தவள் தனது விடுதி அறையில்,அதுவும் தனது மெத்தையில் படுத்திருப்பதை அறிந்தவள் இப்போது நடந்ததுயெல்லாம் கனவில் என்பதையும் முழுமையாக உணர்ந்தாள்.
‘கனவா இருந்தால் அப்புறம் எப்படி அலறல் சத்தம் கேட்டுச்சு’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு விடையாக “ஏய் லூசு…எதுக்குடி என்னை இப்படி அடிச்சே…??” என்று தனது தோழி லீனாவின் குரல் கேட்டு பக்கத்தில் திரும்பி பார்த்தாள்.
மெத்தையை விட்டு எழுந்த லீனா அவளை கண்களால் எரித்தவாறு “சொல்லுடி எதுக்கு என்னை அடிச்சே…??” என்று குனிந்து தனது காலை தேய்த்தவாறு வினவினாள்.
தேன்மொழி படுத்திருந்த வாக்கிலே “ஹிஹிஹிஹி அது தான்டி வழக்கம் போலே என் கனவிலே நரகாசூரன் வந்தானா…அவன்னு நினைச்சு உன்னை அடிச்சிட்டேன்” என்று அசடுவழிந்தவாறு கூறினாள்.
அவளை இன்னும் நன்றாக முறைத்த லீனா “மண்ணாங்கட்டி நீயும் உன் நரகாசூரனும்…உங்க இரண்டு பேர் போதைக்கும் நான் தான் ஊறுகாயா…??” என்று எரிச்சலுடன் வினவினாள்.
அதில் படக்கென்று எழுந்து அமர்ந்த தேன்மொழி “சீச்சி…அவன் யாருனே தெரியாது…அவன்கூட போய் என்னை சேர்த்து வைச்சு பேசிட்டு இருக்க…லூசு” என்று திட்டியவளைக் கண்டுக்கொள்ளாமல் “யாருனே தெரியாது…ஆனால் அவன் கூட கனவிலே குடும்பமே நடத்திட்டு இருக்காள்…கேட்டால் நரகாசூரன்னு சொல்லுவா ஃபிராடு” என்று முணுமுணுத்தாள்.
அவளின் முணுமுணுப்பு சத்தம் தேன்மொழியின் காதலும் விழுந்தது.அதேகேட்டு அவளின் உதடு இரகசியமாய் விரிந்தது.
இருந்தும் தனது கெத்தை விட்டுக்கொடுக்காமல் “போடி போடி ரொம்ப பேசாதே…போய் பொழைப்பை பாரு போ” என்று உதடு சுழித்தவாறு தெனாவாட்டாக கூறி தனது மெத்தையிலிருந்து கீழே இறங்கினாள்.
அதை கண்டு இன்னும் கடுப்பாகிய லீனா “போடி போடியா…??இந்த திமிரு நேத்து நைட்டு பேய் படம் பார்த்திட்டு ‘அய்யோ அம்மா…எனக்கு பயமா இருக்கு லீனு…இன்னைக்கு ஒரு நாள் என் கூட படுத்துக்கிறயானு’ கெஞ்சினியே அப்போ இருந்திருக்கணும்…அப்போ விட்டுட்டு இப்போ லொள்ளு… வாடி வா இனிமே உனக்கு இருக்கு…எப்படி பார்த்துக்கணுமோ அப்படி பார்த்துகிறேன்டி” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
அதைகேட்டு தேன்மொழி முகத்தை சுருக்கி ‘ஹனி இவளை விட்ட வேறு பலியாடு உனக்கு இல்லை…ஹூம்…நல்ல யோசி ஹனி…யோசி…’ என்று பழைய நம்பியார் தோரணையில் மனதிற்குள்ளே கைகளை பிசைவது போல் கற்பனை செய்து யோசித்தவள் ‘சரி இப்போதைக்கு பிட்டு போட்டு வைப்போம்…!!’ என்று நினைத்து வெளியில் அசடுவழிந்தவாறு அவளின் அருகில் தாடையைப் பிடித்து,
“லீனு டார்லிங்…எதுக்குடா உனக்கு கோபம்…நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்…அதெல்லாமா சிரியசா எடுத்துக்கக்கூடாது” என்று முகத்தை சுருக்கி கொஞ்சினாள்.
லீனா அவளின் கையைத் தட்டவிட்டு “பக்கி ரொம்ப நடிக்காதே!இன்னொரு வாட்டி நரகாசூரன் அது இதுனு என்கிட்ட கதை அளந்திட்டு இருந்தே…கன்னம் பழுத்திடும்…ஜாக்கிரதை” என்று செல்லமாக மிரட்டினாள்.
நரகாசூரன் என்ற பெயரைக் கேட்டவுடன் தேன்மொழி பாவமாக “நான் என்னடி பண்ணறது…ஒரு நாள் தவறாமல் என் கனவில் வந்திடறான்…அதுவும் வேற வேற லோகேஷன்லே…அதுக்கூட பரவாயில்லைடி…எப்போ பார்த்தாலும் எனக்கே தெரியாமல் கிஸ் பண்ணிறான்டி…அப்படி இதிலே என்ன இருக்கு” என்று உதட்டை குவித்தவாறு தனது கண்களால் இதழை ஆராய முயற்சி செய்தாள்.
அவளின் சைகையைக் கண்டு பக்கென்று சிரித்துவிட்டாள் லீனா.தேன்மொழி அவளை நிமிர்ந்து பார்த்து “லீனு எதுக்கு சிரிக்கறடி…??” என்று பாவமாக புரியாமல் வினவினாள்.
லீனா சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தவாறே “இல்லை உன் நரகாசூரன் க…கனவிலே இவ்ளோ ஃபார்ஸ்டா இ…ருக்கானே நே…ரிலே பார்த்தால் உன்னோட நிலைமை…அதை நினைச்சானா எனக்கு சிரிப்பு வந்திடுச்சு” என்று நடு நடுவே சிரித்தவாறு முழுவதையும் கூறிவிட்டு,மறுபடியும் தனது சிரிப்பை தொடர்ந்தாள்.
அதைக்கேட்டு ஒரு பக்கம் தனது தோழியின் மேல் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் அவளது நரகாசூரனை நினைத்து வெட்கத்தில் முகம் சிவந்தது.
அதைக்கண்ட லீனா தனது தோழியின் அழகை ரசித்தவாறு “தேனு ஒண்ணு மட்டும் சொல்லு கனவிலே அவனோட முகத்தைப் பார்த்தீயா…??” என்று ஆர்வமாக வினவியவுடன்,
தேன்மொழி உதட்டைப் பிதுக்கியவாறு “எங்கே லீனு…அவன் முகம் எனக்கு சரியா தெரியலை…ஆனால் அவனோட குரல் மட்டும் எனக்கு நல்ல தெரியும்டி” என்று கூறியவளின் காதில் இப்போதும் அவனின் குரல் ஒலித்தது.
அதைக்கேட்டு லீனா “ப்ச்” என்று சலித்தவாறு “என்னமோ போடி…நீ சொல்லறதெல்லாம் புதுசா இருக்கு…அவன் மூஞ்சு தெரியலைன்னு சொல்லுறே…ஆனால் குரல் ஞாபகம் இருக்குனு சொல்லுறே…எனக்கு ஒண்ணுமே புரியலை…ஏதோ ஒண்ணு நெக்ஸ்ட் டைம் உன் கனவிலே வந்தால் அவன் உன்னை கிஸ் பண்ண வரும் போது…அவன் வாயில் கை வைச்சு தடுத்து உன் பேரு என்னனு கேட்டுடு…அதை வைச்சு நாம் கூகுள் பண்ணி கண்டுப்பிடிச்சிடலாம்” என்று குறும்புடன் கூறி கண்ணடித்தவளை முறைத்த தேன்மொழி,
“என்னடி கிண்டலா…??இவன் கனவிலே வந்ததிலிருந்து ஒவ்வொரு பையனையும் பார்க்கும் போது இவனா இருப்பானோ…அவனா இருப்பானோனு தோணிட்டே இருக்கு…என்னால் இயல்பா இருக்க முடியலை…தெரியுமா…?” என்று வருத்தத்துடன் கூறியவாறு தலைகுனிந்தாள்.
அதைக்கண்ட லீனா இரக்கம் கொண்டு அவளை மென்மையாக அணைத்து முதுகை நீவியவாறு “தேனு டோன்ட் வொர்ரிடா… சரியாகிடும்” என்று ஆறுதல் படுத்தினாள்.
தேன்மொழி அவள் அணைப்பிலிருந்தவாறே “ஏன்டி லீனு…என்னை கட்டிப்பிடிக்கணும்னு சொல்லியிருந்தால் நானே கட்டிப்படிச்சிருப்பனே…அதைவிட்டுட்டு எனக்கு ஆறுதல் சொல்லுற சாக்குலே என்னை கட்டிப்பிடிக்கிறாயா…??” என்று குறும்புடன் கூறி கலகலவென சிரித்தவாறு அவளிடமிருந்து தப்பித்து குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
தேன்மொழி சிறு வயதிலிருந்து தாய் தந்தையன்றி அனாதை இல்லத்தில் வளர்ந்தாள்.அவளை தனது பெற்ற பிள்ளையை போல் வளர்த்தவர்,அந்த இல்லத்தின் தலைவி கோசலை…!!
தேன்மொழி சிறுவயதிலிருந்து தனது துன்பத்தை யாரிடமும் கூறி பழக்கமில்லாதவள்…எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் ஒரு புன்னகையுடன் அந்த துன்பத்தைக் கடந்து வந்துவிடுவாள்.அதற்கு இயற்கையிலேயே அவளோடு கூட பிறந்த குழந்தை தனமான மனமும் அவளின் குறும்பும் உறுதுணையாக இருந்தது.
தேன்மொழி இயற்கையிலேயே அபரீவிதமான அழகைக் கொண்டவள்.பார்ப்பவர்களை முதல் பார்வையில் சுண்டியிழுக்கும் சிவந்த நிறம்.அதனால் அவளின் அழகை கண்டு மயங்காதவர் யாரும் இலர்.அதேபோல் அவளின் குறும்புத்தனமான பேச்சும் செயலும் மற்றவர்களை அவளின் பால் இழுக்கும்.அத்தோடு திறமையும் பொறுப்பும் அதிகம் கொண்டவள்.அவளின் திறமையின் பலனாய் அவளுக்கு இப்போது கே.கே.அட்வர்ட்டைஸ்மென்ட் ஏஜென்சியில் ஒரு மிகப்பெரிய பொறுப்பில் பணிப்புரிகிறாள்.
தேன்மொழி குறும்பு பேச்சை எதிர்ப்பாகாத லீனா முதலில் அதிர்ந்து சடுதியில் தன் சுய நினைவு அடைந்து,அவள் தன்னை கிண்டல் செய்த கோபத்தில் ‘ஏன்டி பாவம்னு ஆறுதல் சொன்னால் என்னையே கிண்டல் பண்ணுறியா…வாடி வா’ என்று கறுவியவாறு அவள் வெளியில் வருவதற்காக காத்திருந்தாள்.
தேன்மொழி ஆடி அசைந்துவாறு,
“இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதற்காக?
பேசுகின்றான், முத்தம் கொடுக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே புரியவில்லை உள் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை என்ன இது, என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிச்சிருக்கா, பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன், நான் யாரிடம் கேட்டு சொல்வேன்?”
என்று பாட்டு பாடியவாறே மெதுவாக குளித்துவிட்டு தனது உடலைத் துடைக்க துவாலை எடுக்க போகும் போது தான் ஒன்று உறைத்தது ‘எங்கு லீனா தன்னை அடித்துவிடுவாளோ’ என்று அவளிடமிருந்து தப்பித்து ஓடி வந்ததில் துவாலையும் உடுத்த துணியும் கொண்டு வரவில்லை என்று…!!
அது உறைத்தவுடன் ‘அய்யையோ இப்போ அவகிட்ட மாட்டிக்கிட்டனா…??ஹனி உனக்கு செம்ம பல்புடி’ என்று தன்னையே திட்டி நெற்றியில் அடித்து கொண்டாள்.
குளியலறை கதவை பாதி வரை திறந்து வைத்து, தலையை மட்டும் வெளியில் நீட்டிய தேன்மொழி “லீனுஉஉ…லீனு டார்லிங்…எங்க இருக்கே…பாப்பா டவல் எடுத்துட்டு வர மறந்திட்டேன்னாம் நீ கொஞ்சம் எடுத்துட்டு வந்து தருவியாம்…உனக்கு நான் பானி பூரி…மசால் பூரி எல்லாம் வாங்கி தருவேனாம் சரியா…??” என்று குழந்தையிடம் பேசுவது போல் பேரம் பேசி கொஞ்சியவாறு வினவினாள்.
லீனா அங்கே கட்டிலில் அமர்ந்திருந்தும் அவளுக்கு பதில் அளிக்காமல் கால் மேல் கால் போட்டு கண்டுக்கொள்ளாமல் தனது தொலைப்பேசியில் கவனமாய் இருந்தாள்.
அதைக்கண்ட தேன்மொழிக்கு கோபம் வந்தாலும் ‘ஹனி…கூல் கூல்…இப்போ நீ பொறுமையா இருக்கணும்…நோ வைலன்ட்ஸ் ஓகே’ என்று தனக்குள் கூறி தன் கையை முகத்திற்கு முன் ஏற்றி இறக்கியவாறு ‘ச்சூ…ச்சூ…!!’ என்று சைகை செய்து சினத்தை அடக்கினாள்.
கோபத்தை அடக்கியப்படி “செல்லக்குட்டி…ஆபிஸுக்கு உனக்கும் லேட் ஆகிடுச்சு…எனக்கும் லேட் ஆகிடுச்சு…சோ சீக்கிரம் துண்டு எடுத்து கொடுத்தால் தான்…நாம் ஆபிஸுக்கு போக முடியுமாம்…சோ சீக்கிரம் எடுத்து தருவியாம்…ஓகேவா…??” என்று ஏற்றி இறக்கிப் பேசினாள்.
லீனா அப்போதும் தனது கைப்பேசியிலிருந்து பார்வையை நிமிர்த்தாமல் இருக்கவும் கடுப்பாகிய தேன்மொழி “லீனு கிறுக்கி…நீ இப்போ துண்டு எடுத்து தரலை…நான் அப்படியே வந்திடுவேன்டி…அப்புறம் உன் கண்ணு இரண்டும் அவிஞ்சு போனால் நான் பொறுப்பில்லை” என்று கத்தி கதவை முழுதாக திறந்து வெளியே வரப்போனவுடன் லீனா அவள் உண்மையில் வெளியே வந்து விடுவாளோ என்று அதிர்ந்து வேகமாக துண்டை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு மூச்சு வாங்கியப்படி “ராட்சஸி…உன்னை பயங்கொடுத்தலாம்னு பார்த்தால்…நீ என்னை பயங்கொடுத்துறீயா…பக்கி” என்று நன்றாக வசைப்பாடினாள்.
அதையெல்லாம் காதில் வாங்க அவள் அங்கு இருந்தால் தானே,அவள் தான் துவாலையைக் கொடுத்தவுடன்,அதை தன் பளிங்கு தேகத்தில் சுற்றிக்கொண்டு அங்கே அறையில் உடை மாற்றுவதற்கு இருக்கும் மரத்தடுப்பின் பின் சென்று அவசர அவசரமாக உடை மாற்றினாள்.
இங்கே லீனா தேன்மொழியை வறுத்து தாளித்துக் கொண்டிருந்தாள்.அதை சட்டை செய்யாமல் சிறு சிரிப்புடன் கண்ணாடி முன் நின்று தனது நீண்ட கூந்தலை வாரி பின்னலிட்டு கொண்டிருந்தாள் தேன்மொழி.
அதைக்கண்ட லீனா கடுப்பாகி “ஏன்டி இங்கே ஒரு மனுசி காட்டு காத்தல் கத்திட்டு இருக்கனே…என்னானு கொஞ்சமாவது கண்டுக்கிறியா…இந்த ஆறு மாசமே உன்னை என்னால் சமாளிக்க முடியலை…ஆனால் எப்படிடி 25 வருஷம் ஒரு பொண்ணு உன் கூட பிரண்ட்டா இருந்திருக்கா…??” என்று தனது அதிமுக்கிய சந்தேகத்தை பற்றி வினவினாள்.
தேன்மொழி கண்ணாடியில் அவளை கண்டு குறும்புடன் “லீனு அவள் உன்னை மாதிரி லூசுயில்லை…செம்ம கோபக்காரி…அவ ஒரு பார்வை பார்த்தாலே…நானெல்லாம கப்சீப் ஆகிடுவேன்…லேடி ஹிட்லர் அவள்…!!” என்று விளையாட்டு போல் கூறினாலும்,அதில் தனது தோழியை நினைத்து பெருமை பொங்கி வழிந்தது.
லீனா நம்பாத பார்வை பார்த்தவுடன் தேன்மொழி “நம்ப மாட்டியாடி லீனு…ஆஸிடென்ட் கமிஷனர் சஞ்சுயுக்தா தெரியுமா…??” என்று கேட்டவுடன் லீனா வாயெல்லாம் பல்லாக “அவங்களை தெரியாமல் இருக்குமா…சிட்டியையே ஒரு கலக்கு கலக்கனாங்களே…அவங்களை தெரியாமல் இருக்குமா…அதுமட்டுமில்லாமல் அவங்களை ஒரு தடவை நேரில் பார்த்து ஆட்டோக்ராப் வாங்கியிருக்கேன்…அதை பாத்திரமா என் லாக்கரில் வைச்சிருக்கேன் தெரியுமா…??” என்று கூறி ஆர்ப்பரித்தவளை ‘அட லூசே…!!’ என்பது போல் பார்வைப் பார்த்தாள் தேன்மொழி.
அவள் பார்வையின் அர்த்தம் லீனாவிற்கு புரியவில்லை.தேன்மொழியின் முகத்தையே ஒரு மாதிரி பார்த்துக்கொண்டிருக்கவும்…தேன்மொழி குறும்புடன் “போதும் போதும் என்னை சைட் அடிச்சது…வேலைக்கு நேராமாச்சு…கிளம்பு கிளம்பு எம்.டி திட்டுவாரு” என்று அவளை அவசரப்படுத்தி கிளப்பிவிட்டவளின் முகத்தில் மர்மப்பூன்னகை பூத்தது.
ஏனெனில் இவ்வளவு நேரம் கூறிய சஞ்சுயுக்தா தேன்மொழியின் நெருங்கிய தோழி…அது தெரியாமல் ஒரு ஆட்டோகிராப்பை வைத்துக்கொண்டு ஆர்ப்பரித்தவளை ‘அட லூசே…!!’ என்று பார்த்து வைத்தாள்.ஒரு நாள் சஞ்சுயுக்தாவை இவளின் முன் நிற்க வைத்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டாள்.
அவள் மனதில் இன்னொரு எண்ணமும் இருந்தது.தன் தோழிக்கு கிடைத்த காதல் கணவனைப் போன்று தனக்கும் ஒரு காதல் கணவன் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.ஆனால் இப்போதெல்லாம் வருங்கால கணவனைப் பற்றி யாராவது பேசினால்,அவளின் மனக்கண் முன் நரகாசூரன் தான் வந்தான்.ஆனால் முகம் தெரியாத அவனை நினைப்பது சரியா தவறா என்று உள்ளுக்குள் ஒரு உணர்வு உறுத்திக் கொண்டிருந்தது.
மனதில் உள்ள சஞ்சலத்தை இறக்கி வைக்க அவளின் இஷ்ட தெய்வத்தை நாடினாள்.
“ஆஞ்சு அந்த நரகாசூரன் இனிமே என் கனவில் வராமல் நீ தான் பார்த்துக்கணும்…அப்படி வந்தான் நீ தொலைஞ்சே” என்று கூறி ஆஞ்சிநேயரை செல்லமாக மிரட்டினாள்.
ஆஞ்சிநேயர் அவள் மிரட்டியதில் கடுப்பாகி “மகளே…!!கனவில் தானே வரக்கூடாது…இரு நேரிலே வர வைக்கிறேன்…அப்போ என்ன பண்ணுவே” என்று கூறி பழிப்பு காட்டியது அவளுக்கு கேட்காமல் போனது அதிர்ஷ்டமா இல்லை துர்திர்ஷ்டாமா…??