இசை 2

“மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்று ஹம்சானந்தி. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகத்தை பூரிசோகினி அல்லது சோகினி என்று அழைக்கின்றனர். செவ்விசை மரபில் மாலையில் பாடுவதற்கு உகந்த ராகமாக கருதப்படுகிறது.ஹம்சானந்தி ராகத்தை மக்கள் மத்தியில் மெல்லிசையில் பயிற்றுவிக்க தக்க,புதிய கிளர்ச்சியை உண்டாக்கும்”

தங்களுக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தனக்கான தனியறையில் உள்ள இருக்கையில் சாய்ந்து அமர்ந்து,கைகள் இரண்டையும் தலைக்கொடுத்து தனது கால்கள் இரண்டையும் மேசையின் மீது தூக்கி வைத்து இதழோரம் ரகசிய புன்னகையில் சுருங்க யோசனையில் இருந்தான் ஆதிரையன்.

அவனது ரகசிய புன்னகைக்கு முக்கியக்காரணம் காலையில் எதிர்ப்பாராமல் நடந்த சம்பவங்கள் தான்.

ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்ற பயத்தில் கண்மூடி அமர்ந்திருந்த ஆதிரையன்,தீடிரென்று வண்டி படீரென்று சத்தத்துடன் நிறுத்தப்பட்டதால் “அம்மாஆஆ” என்ற கூச்சலுடன் ஜீப்பின் முகப்பு பெட்டியில் தன் தலையை பலமாக மோதினான்.

நெற்றியில் வலி உயிர்ப்போக தலையை இரத்தம் கட்டாத வகையில் அழுந்த தேய்த்துவிட்டப்படி,தன் தமையனை திட்டுவதற்காக திரும்பிய ஆதிரையன்,அப்போது தான் தங்களது ஜீப்பிற்கு முன் இருச்சக்கர வண்டியோடு விழுந்து கிடந்த பெண்ணை கண்டான்.

அவனது தமையனோ அப்பெண்ணை காக்கும் எண்ணம் துளியுமின்றி மரம் போல் கட்டையாய் அமர்ந்திருக்க,அவனை முறைத்துக்கொண்டே கீழே விழுந்த அப்பெண்ணின் மீது பரிதாபம் கொண்டு வேகமாக ஜீப்பிலிருந்து இறங்கி அப்பெண் எழுவதற்கு உதவிச்செய்தான்.

ஆரூரனிற்கு அவனை தடுக்கும் எண்ணம் துளியும் இல்லை என்றாலும், அவளுக்கு உதவிச்செய்ய தனது சகோதரன் வண்டியிலிருந்து இறங்கியது சற்றும் பிடிக்கவில்லை என்பதை முகத்தில் எரிச்சலாக காட்டினான்.

பார்ப்பதற்கு நற்குணம் கொண்ட பெண் போல் காட்சியளித்த அம்முகமறியா பெண்ணானவள்,தாம் கீழே விழுவதற்கு காரணமானவனின் மீது ஒரு சிறு கோபப்பார்வை கூட வீசாமல் ஆரூரனை கண்டு சிநேகமாக புன்னகைக்க,அவனின் விழிகளில் கனல் கூடிக்கொண்டே செல்ல,அவள் முகத்தை பார்க்க விருப்பமின்றி வேண்டா வெறுப்பாக வேறுப்புறம் திரும்பியதால்,அவளின் பூ மகம் சற்று வாடியது.

‘என்ன மனுஷன்டா இவன்’ என மனதில் தன் தமையனைத் திட்டிக்கொண்டு கையில் இலேசாக சிராய்த்திருந்த அப்பெண்ணிடம் “ஆர் யூ ஓகே…??கையை தவிர எங்கேயாவது அடிப்பட்டிருக்கா…??” என அக்கறையாக விசாரிக்க,

ஆதிரையனிடம் தன் பார்வையைத் திருப்பியவள் மீண்டும் அதே சிநேக புன்னகையுடன் “யா ஐயம் பைன்…தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப்” என்று கூறி,வேறு எதுவும் கூறாமல் தனது வண்டியை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்துவிட்டாள்.

போகும் முன் ஆரூரனை ஒரு வெற்றிப்பார்வை பார்த்து விட்டு செல்ல,அது மேலும் அவனது சினத்தை விசிறி விட “ஷிட்” என்று தனது உந்துகல இயக்காழியை பலமாக குத்தினான்.

அதுவரை வண்டியில் செல்லும் அத்தேவதையை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆதிரையன் ‘இவன் ஒருத்தன்…எப்போ பாரு மேஜர் சுந்தராஜன் மாதிரி டென்ஷாகிட்டே இருக்கான்’ என திட்டிக்கொண்டு வண்டியில் ஏறி அமர,ஆரூரன் அவனிடம் எதுவும் பேசாமல் முந்தைய வேகத்திற்கு குறையாத அதே வேகத்துடன் காரை செலுத்தினான்.

ஆனால் முன்பு இருந்த பீதி இப்போது இல்லாமல் ஒரு சில்லென்ற வானில் பறக்கும் பறவையை ஒத்த நிலையில்,அதை இன்பமாய் அனுபவித்தான் ஆதிரையன்.

‘தன்னை வலி நோக செய்தவனையும்,சிநேகமாக நினைத்து புன்னகை செய்யும் குணம் கொண்டவள் கண்டிப்பாக ஒரு தேவதையாக தான் இருப்பாள்…இந்த தேவதை என் வாழ்க்கை முழுவதும் வந்தால் எப்படி இருக்கும்…??’ அந்நொடி அவளின் மீது காதல் வயப்பட்டான் ஆதிரையன்.

அந்த தேவதையைக் கண்டது முதல் இப்போது வரை வேறு எந்த ஞாபகமும் இன்றி,அவள் ஒருத்தியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த ஆதிரையன் ஒன்றை மட்டும் கவனியாமல் விட்டுவிட்டான்.

ஒரு வருடத்திற்கு முன்பு,இதுப்போல் யாரோ ஒருவர் சாலையோரம் நடந்த விபத்தில் கீழே விழுந்துக்கிடந்ததை கண்டு பதறித்துடித்து,அவரை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து அறுவை சிகிச்சை நடந்து முடியும் வரை கூடவே இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்ட தனது தமையன் ஆரூரன்,இன்று ஏன் தன் வண்டியில் அடிப்பட்டு கீழே விழுந்துக்கிடந்த பெண்ணிற்கு எந்த வித உதவியும் செய்யவில்லை என்று யோசிக்க மறந்தான்.

காதல் அவன் கண்ணை மறைத்ததினால்,அவனால் வேறு எதைப்பற்றியும் யோசிக்கமுடியாமலானது என்பது தான் உண்மை.ஆனால் இன்றே கண்கொண்டு கவனித்திருந்தால்,பின்னால் மீளமுடியா பெரும்சுழலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்திருக்கலாம்.

காலை உணவை அலுவலகத்திற்கு வரவழைத்து உணவருந்துவதால்,மதிய உணவிற்கு வீட்டு ஆண்கள் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் தவிர மற்ற சமயங்களில் வீட்டிற்கு வரவேண்டும் என்பதும் அவ்வீட்டின் விதிகளில் ஒன்று.

காலையில் தனது மனைவி தன்னை செயற்கையான புன்னகையுடன் வழியனுப்பிவிட்டு,தனது சகோதரனுக்கு மட்டும் உண்மையான அன்புடன் சிரித்த முகமாக விடைக்கொடுத்ததை ஆரூரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அந்த பொறாமையின் வெளிப்பாடே வண்டியின் அசுரவேக ஓட்டம்.

அதனுடன் கூடவே காலையில் பார்த்த அப்பெண்ணால் ஏற்பட்ட கோபமும் சேர்ந்துக்கொள்ள,அனைத்தும் அவனை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றப்போதும், அலுவலகத்திற்கு வந்த பின் சகலமும் மறந்துப்போயிருக்க,இப்போது மீண்டும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றவுடன் விடுப்பட்டிருந்த பெருஞ்சினம் அழையா விருந்தாளியாய் மீண்டும் அவனுடன் ஒட்டிக்கொண்டது.

மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றால்,இருக்கும் கோபத்தில் தனது மனைவியை கடித்து குதறிவிடுவோமோ என்ற எண்ணத்தில் வீட்டிற்கு செல்லாமல் இங்கு உணவை வரவழைத்து உண்ணலாம் என முடிவு செய்தப்போதும்,தாயின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் பொருட்டு தனது ஜீப்பின் சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

கிளம்புவதற்கு முன் தன்னுடைய உதவியாளர் ஸ்டீபனை அழைத்து,தான் வருவதற்குள் பார்க்க வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு,தனது சகோதரன் இருந்த அறையின் கதவை ஒரு முறை பலமாக தட்டிவிட்டு ஜீப் நிறுத்துமிடம் சென்றுவிட்டான்.

கனவுலோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஆதிரையனுக்கு தனது தமையன் கதவு தட்டியது காதில் விழவில்லை.ஜீப்பை ஒளிரச்செய்துவிட்டு இரண்டொரு நொடிகள் சகோதரனுக்காக காத்திருந்த ஆரூரன்,அவன் வெளிவரவில்லை என்றவுடன் கோபத்தோடு வண்டியைக் கிளப்பிச்சென்றுவிட்டான்.

ஜீப்பின் உறுமல் ஒலியில் நிகழ்காலத்திற்கு வந்த ஆதிரையன் அரக்க பறக்க இருக்கையிலிருந்து எழ முயற்சிச்செய்ததில் நிலைத்தடுமாறி மீண்டும் சாய்வு நாற்காலியிலே தொப்பென விழ,அதில் இருக்கையும் சற்று தடுமாறி கீழே சாய்ந்தது.

அவன் மேசையைப் பிடித்து விழாமல் சமாளிக்க முயற்சி செய்வதற்கு முன் தொப்பென்று கீழே விழுந்திருந்தான் ஆதிரையன்.

உள்ளறையிலிருந்து சப்தம் வருவதைக் கேட்டு பதறியடித்து உள்ளே ஓடிவந்த ஆதிரையனின் காரியதரிசி நேகா.அவன் விழுந்துகிடந்த விதத்தை கண்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு “ஹாஹாஹா” என சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

ஏனெனில் ஒரு படத்தில் வடிவேலு நடிகர் விஜயின் வண்டியிலிருந்து கீழே விழுந்து,இரண்டு காலையும் கையையும் குரங்கு போல் தூக்கிவைத்து விழுந்துகிடப்பதைப் போல் ஆதிரையனும் விழுந்துக்கிடந்தான்.

அவள் சிரிப்பைக் கண்டு எரிச்சலான ஆதி “ஹே ஷட்அப்…இன்னொரு வாட்டி சிரிச்சே…உன்னை வேலை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவேன்…ஒழுங்கா எனக்கு வந்து ஹெல்ப் பண்ணு” என முதலாளியாய் மாறி கட்டளையிட,

“எஸ் சார்” என இராணுவப்படை வீராங்கனை போல் கணீர் குரலில் விறைப்புடன் கூறியவளுக்கு அப்போதும் சிரிப்பை அடக்கமுடியாமல் போக,ஆதிரையனின் முகத்தில் கடுமைக்கூடிக்கொண்டே போவதை கண்டு கையால் வாயைப் பொத்தி சிரிப்பை அடக்கி,அவனுக்கு கைக் கொடுத்து தூக்கிவிட முயற்சி செய்தாள்.

அவள் கைக்கொடுத்து தூக்க முயற்சி செய்யப்போதும் கீழே பதிக்கப்பட்ட மார்பில் தரையினால் கால் வழுக்கிவிட,எழுந்திருக்க முடியாமல் மீண்டும் கீழே விழுந்தான் ஆதிரையன்.அதில் சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வர,இப்போது எவ்வளவு தூரம் அடக்கமுடிந்தும் முடியாமல் மீண்டும் நேகா வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பிக்க,ஆதி கொலைவெறியானான்.

வேண்டுமென்றே சிரித்துக்கொண்டிருந்தவளின் கையைப்பிடித்து இழுக்க,நிலைத்தடுமாறி “ஆ” என்ற அலறலுடன் கீழே விழுந்தாள் நேகா.

கீழே விழுந்து இடுப்பில் அடிப்பட்டதால் “ஸ்ஆ…அம்மா” என இடுப்பைப் பிடித்துக்கொண்டு இலேசாக முனக,

ஆதிரையன் பழி வாங்கிய மகிழ்ச்சியில் அவளை போல் வாய் விட்டு சிரித்து “உனக்கு நல்லா வேணும்…வாட் யூ டூ…இஸ் வாட் யூ கெட் பேக் …இப்போ உனக்கு புரிஞ்சிருக்குமே…!!” என நக்கல் செய்ய,

நேகா மனதில் ‘டேய் பனங்கொட்டதலையா…இது ரொம்ப முக்கியமா…??போன போகுது அமுல் பேபி பாவம்னு ஹெல்ப் பண்ண வந்தால் என்னைய கீழ தள்ளி விடுறீயா…??இதுகெல்லாம் சேர்த்து…ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை வைச்சுச்செய்யறேனா இல்லையானு பாருடா…’ என கடுப்போடு நினைக்க,

அதற்குள் “ஹலோ என்ன மேடம்…உள்ளுக்குள்ளே மைண்ட் வாய்ஸ்ல திட்டறீங்களோ…??” என முகத்திற்கு முன் சொடக்கிட,

அதில் கலைந்தவள் சிரித்தாற் போன்று முகத்தை வைத்து “ச்சே…ச்சே இல்லை சார்…நீங்க எனக்கு சம்பளம் கொடுக்கற முதலாளி…உங்களைப் போய் மனசுக்குள்ளே திட்டமுடியுமா என்ன…??நீங்க எவ்ளோ பெரிய பரு…” என்னும் போதே ஆதியின் கண்கள் இடுங்க உடனே அதை மாற்றி “சாரி…சாரி சார் டங்க் ஸ்லிப்பாகிடுச்சு…நீங்க எவ்ளோ பெரிய பர்ஷனலிட்டி…எங்கெல்லாம் போய் படிச்சிட்டு வந்திருக்கீங்க…ஊரிலே பெரிய குடும்பத்தோடு கடைசி வாரிசு…அப்புறம்…” என அவனது புலமைகளைப் பாடி,உச்சக்குளிர வைத்தவளைக் கண்டு மனம் இறங்கினாலும் வெளியே விறைப்புடன் “சரி…சரி போதும்…முதல்ல எழுந்திரி” என,

“சார் நீங்க முதல்ல எழுந்திரிச்சு எனக்கு கைக்கொடுங்க சார்…” என,

அவளை நன்றாக முறைத்தவன் “என்ன லந்தா…?நீ முதல்ல எழுந்திரிச்சா தான்…நான் எழுந்திரிக்க முடியும்…!!” என்ற பிறகே,அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகள் வர ஆரம்பித்தது.

நாம் ஒரு ஆடவனின் மீது தேகம் உரசப்படுத்திருக்கிறோம் என்பதே தெரிந்தது.

தெரிந்த நொடியில் ‘ஐய்யோ கடவுளே…என்ன காரியம் செய்திருக்கிறேன்…?’ என்ற பதட்டத்தோடு தரையில் கை ஊன்றி எழ முயற்சி செய்ய,பதட்டத்தில் கைகால்கள் நடுங்கி மீண்டும் அவன் மேலே விழ “அம்மா தாயே…நீ பாட்டுக்கு என் மேலே கண்ட இடத்தில் விழுந்து வைக்காதே…அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு எனக்கு ப்யூச்சரே இல்லாமல் போயிடும்” என்றவன்,அவளது இடுப்பில் கைக்கொடுத்து தூக்கி தன்னிலிருந்து அவளைப் பிரித்து அருகில் படுக்க வைக்க,அதில் கூசி சிலிர்த்தவளின் தேகம் தடுமாறியதை பொருட்படுத்தாமல் மேசையைப் பிடித்து எழுந்து நின்று,அவளுக்கும் கைக்கொடுத்து தூக்கிவிட்டான்.

வேகமாக தூக்கிவிட்டதில் தடுமாறியவள்,ஒரு முறை அவனது நெஞ்சில் வந்து பலமாக மோதி பதட்டத்தில் தள்ளிநின்றாள்.இதுநாள் வரை எந்த ஒரு ஆடவனின் கைகளும் தன் மேல் படவிடாமல் கற்பு நெறி காத்துவந்தவள்,இன்று ஒரு ஆடவனின் ஸ்பரிஷம் தன் மேல் பட்டதில் வியர்த்து விறுவிறுத்துப்போனாள்.

பதட்டத்தில் அவனிடம் சொல்லிக்கொள்ளாமலே அந்த அறையிலிருந்து வெளியேறி,வேகமாக தன்னிடத்தில் அமர்ந்து மேசையின் மீதுள்ள புட்டியில் இருந்த மொத்த தண்ணீரையும் தனது வாயில் சரித்தாள்.

அப்போது அவன் கடைசியாக கூறிய சொற்கள் ஞாபகத்தில் வர “கருமம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் எப்படியெல்லாம் பேசறான் பாரு கேபி…” என செல்லமாக திட்டி சிரித்தாள்.

அவள் தனியாக சிரிப்பதை இரண்டு ஜோடி விழிகள் வியப்புடன் பார்த்தது.

தன் சகோதரன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர இயலாத காரணத்தினால் ‘வர வர திமிரு அதிகமாகிடுச்சு…நடந்தே வரட்டும் இடியட்’ என திட்டிக்கொண்டே வண்டியை வீட்டை நோக்கிச் செலுத்தினான் ஆரூரன்.

தனது சுற்றுச்சூழலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்பும் ஆரூரன்,வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தில் குதிரை பண்ணை ஒன்றை வைத்து அதில் நான்கு குதிரைகளை வளர்த்து வந்தான்.

குதிரைகளுக்கு ஏற்றாற் போன்று உணவளித்து அவ்விடத்தை மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் குதிரைகளை கண்காணிக்கவும் மூன்று பணியாளை நியமித்திருந்தான்.

கார்களின் மீது அலாதிப்பிரியம் கொண்டுள்ள ஆரூரனுக்கு குதிரை சவாரி செய்வதிலும் பிரியம் அதிகம்.அதனால் இந்தியாவில் எந்த மூளையில் குதிரை ஓட்டப்பந்தயம் போட்டி அறிவித்தாலும், முதல் ஆளாய் கலந்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்று வருவான்.

அதனால் அவனது தொடர் வெற்றிக்கு ஏற்றார் போன்று இந்திய அரசாங்கம் “சாகச வீரன்” என்னும் பட்டத்தை வழங்கி சிறப்பத்தார்கள்.எப்போதும் வெற்றியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவனது குதிரைக்கு அலெக்ஸாண்டரின் குதிரைப்பெயரான “பூசிஃபலாஸ்” என்னும் பெயரை சூட்டியிருந்தான்.

பெயருக்கு ஏற்றது போல் பூசிஃபலாஸ் அவனுக்கு தொடர் வெற்றியைக் குவித்து தந்ததினால்,அதனுடன் ஒரு தோழமை உருவாகியிருந்தது.தொடர் வெற்றிகளை குவித்துப்போதும் அவனது நீண்ட நெடு நாளைய ஆசை,கனவு,லட்சியம் 2008ல் வின்னிங் ப்ரூ என்பவரின் குதிரை,ஓட்ட பந்தியத்தில் மணிக்கு எழுபது கி.மீ வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்திருந்த பதிவை முறியடிக்க வேண்டும் என்பதே.

அதற்கென தனது குதிரைக்கு தேவையான பயிற்சியை தினமும் வழங்குவதற்கென மதிய வேளையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.அதனால் உணவு அருந்த செல்வதற்கு முன்,தன் குதிரையை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு,அதை பயிற்சிக்கு தயார் படுத்தி வைக்குமாறு பணியாளரிடம் தெரிவித்துவிட்டு,குதிரையிடம் அவர் சொல்படி நடக்க வேண்டும் என கூறி செல்லமாக தடவிக்கொடுத்துவிட்டு உணவருந்த செல்வது வழக்கம்.

ஏனெனில் பூசிஃபலாஸ் ஆரூரனின் பேச்சை தவிர வேறு யாரின் பேச்சையும் காது கொடுத்து கேட்காது.அதற்காகவே தன் தோழனிடம் பணியாளரின் பேச்சை கேட்கும் படி வேண்டுக்கோள் விடுத்துவிட்டு செல்வான் ஆரூரன்.

இன்றும் அதேப்போல் வீட்டிற்கு வந்தவுடன்,பின்கட்டில் இருந்த தன் குதிரையிடம் வழமையான வேண்டுக்கோளை முன் வைக்க,அதுவும் சரியென “பூம் பூம்” மாடு போல் தலையாட்ட,

“தட்ஸ் நைஸ் ஃபட்டி(buddy)” என இதழ்ப்பிரித்து சிரித்து,பூசிஃபலாஸின் தலையோடு தன் தலையை உரசி,செல்லம் கொஞ்சுவிட்டு சென்றான்.

ஆனால் அவனது நண்பனான பூசிஃபலாஸோ ‘டேய் ஹாரூ…என்ன கொ…ஞ்சறதுக்கு பதிலா உன் வைப்பை கொ…ஞ்சிருந்தா…உன் வைப் மம்பல்…சாரி தமில்நாட்ல தமில்ல தானே ஸ்பீக் பண்ணனும்…தமில்ல மம்பல்க்கு என்ன…வோ வருமே…ஹான் பு…லம்பல்ல இருந்து நான் எஸ் ஆகியிருப்பேன்…இப்படி உன் வைப் கிட்ட என்ன மாட்டி…விட்டுடீயேடா ஃபடு…பாவி…’ என தாராவை நினைத்து மைண்ட் வாய்ஸில் புலம்பிவிட்டு,தன்னை தானே சமாதானம் செய்வது போல் தனது காலை எடுத்து வயிற்றுப்பகுதியில் வைத்து தேய்த்து ‘விதி வலியது பூசி’ என கூறியது.

ஏனெனில் ஆரூரன் தினமும் அலுவலகத்திற்கு சென்றவுடன்,தாரா தன் மனக்குமறலை பூசிஃபலாஸிடம் தான் கொட்டுக்கிறாள்.அதன் விளைவு தான் பூசிஃபலாஸின் மைண்ட் வாய்ஸ்.

ஆரூரன் தனது தோழனிடம் பேசிவிட்டு அதே புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைய,தாராவோ வழக்கம் போல் பிரின்சீபாலான மாமியாரிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தாள்.

பள்ளி மாணவிப்போல் இரு கைகளையும் நெஞ்சிற்கு நேரே கட்டி,தப்பு செய்த குழந்தைப்போல் உதட்டை பிதுக்கி தலைக்குனிந்து நின்றிருக்க,மாமியாரோ வழக்கம் போல் பூசைப்போட்டு கொண்டிருந்தார்.

அவளை உற்றுநோக்கிய ஆரூரனுக்கு,வெளியில் மாமியாருக்கு கீழ்ப்படிந்த மருமகள் போல் நடந்துக்கொண்டாலும், அவள் விழிகளில் தெரிந்த குறும்பை கண்டுக்கொண்டான்.

அதனால் ஆரூரனின் முகத்திலிருந்த புன்னகை மறைந்துப்போய் முகத்தில் ஒரு வித கடுமை ஒட்டிக்கொள்ள ‘பவ்யமா இருக்கிற மாதிரி என்னமா நடிக்கிறா…??இவ நடிப்பு புரியாமல் அம்மா வேற எனர்ஜியை வேஸ்ட் பண்ணி கத்திட்டு இருக்காங்க…இவங்களை’ என தாயிற்காக பரிதாபப்பட்டாலும்,தன் மனைவியின் மீது எழுந்த எரிச்சலோடு பற்களை நறநறவென கடித்து “அம்மாஆஆஆ” என சீறலான குரலில் அழைத்தான்.

ஆறு அடி இரண்டு அங்குல உயரமுள்ள ஆரூரன்,அவன் குரல் கேட்டு அவர்கள் இருவரும் தன்னை நோக்கி திரும்புவதற்குள் இரண்டே எட்டில் அவர்களை அடைந்திருந்தான்.

எதிர்ப்பாராமல் வந்த ஆரூரனின் கணீர் குரல் கேட்டு தேகம் தூக்கிவாரிப்போட,இருவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்புவதற்கும் ஆரூரன் அவர்களை அடைவதற்கும் சரியாக இருந்தது.

அவன் குரல் ஏற்படுத்திய பயத்தில் வேகமாக திரும்பிய தாரா,தீடிரென்று தன் அருகில் மலைப்போல் வந்து நின்ற கணவனை கண்டு பதட்டத்தில் இரண்டடி பின் நகர,தன் வலிய கரம் கொண்டு அவளை தன்னோடு சேர்த்தணைத்த ஆரூரன் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் இரும்பு போல் இருக்க “அம்மா சாப்பாடு எடுத்து வைங்க…பசிக்குது” என,

வந்தது தன் மகன் என அறிந்த ஆரூரனின் தாய் தன்னை ஆசுவசப்படுத்திவிட்டு “ஆரூக்குட்டி நீயா…?(என்னது குட்டியா…? இவனையெல்லாம் ஆரூக்குட்டி இல்ல…டைனாசர் குட்டினு தான் கூப்பிடணும்) தீடிர்னு உன் குரல் கேட்டதுல பயந்துட்டேன்ப்பா…கை கால் முகம் கழுவிட்டு வாப்பா…சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என பாசம் நிறைந்த குரலில் கூறியவரின் முகம் தீடிரென்று கடுமையை பூசிக்கொள்ள மகனின் கைவளைவில் நெளிந்துக்கொண்டிருந்த மருமகளிடம் விழியினால் “நீயும் வா” என கட்டளையிட்டு உள்ளே சென்று மறைந்தார்.

‘உம் மவன் விட்டால் தானே பிரின்சீ உன் பின்னாடி வரதுக்கு…இவன் என்னமோ கொசுவை நசுக்கற மாதிரி…என்னை நசுக்கிட்டு இருக்கான்…டேய் தடிமாடு என்னை விடுடா’ என உள்ளுக்குள் வலியினால் அலறி அவனுடன் போராடிக்கொண்டிருந்தவள் அவனை ஏறெடுத்து பார்ப்பதை தவிர்த்தாள்.

உயரத்தில் அவனின் தோள்பட்டைக்கு கீழிருந்த தாராவின் தோள்பட்டையின் மீதிருந்த அவனின் கரங்களின் வழியாக அவனது மொத்த எடையும் இவளுக்கு திசைமாறியிருக்க,அதன்பாரம் தாங்க முடியாமல் தொய்ந்துப்போயிருந்தவளின் கரங்களை இறுக்கிப்பிடித்து தன்னோடு சேர்த்து நிற்க வைத்திருந்தான் ஆரூரன்.

அதன் வலி தாங்காமல் நெளிந்தவளின் தோளோரம் இருந்த கரத்திற்கு மட்டும் சிறிது பலம் கொடுத்து இறுக்க,நன்றாக வலித்த போதும் அவள் அவனை நிமிர்ந்துப்பார்க்கவில்லை.

அவள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காகவே கரத்தை மேலும் இறுக்க,உயிரை இறுக்குவது போல் இருந்த வலியில் விழிகள் இலேசாக கலங்க,வலிப்பொறுக்க முடியாமல் கழுத்தை வெட்டி அவன் உயரத்திற்கு  நிமிர்ந்துப்பார்க்க,அதுவரை அவளின் மீது கோபத்தில் இருந்த ஆரூரனுக்கு ஏனென்றே தெரியாமல் அவளின் கலங்கிய விழிகள் மனதை பிசைய,அவளை இறுக்கிய தனது கரத்தை மெல்ல தளர்த்தினான்.

அதில் ஆசுவாசுமடைந்தாலும் பொறுக்க முடியாத வலிகளாலும்,அவனை நிமிர்ந்துப்பார்த்ததினால் கழுத்து வேறு வலிக்க செய்ய,விட்டால் போதுமென அவனிடமிருந்து தப்பித்து ஓட,அவளை ஓரே எட்டில் சிறுத்தை போல் பாய்ந்து பிடித்த ஆரூரனுக்கு அவளது கலங்கிய விழிகளைக் கண்டு இறங்கிய கோபம் மீண்டும் தலைத்தூக்க, அவளின் வெற்றிடையைப் பிடித்து தன் உயரத்திற்கு நிகராக தூக்கியவன் “உன் மனசுல என்னடி நினைச்சிட்டு இருக்கே…உன்னோட தில்லாங்கடி வேலை எல்லாம் இந்த வீட்டுக்கு வெளியே வைச்சுக்கோ…இந்த வீட்டில் இருந்தால் பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்தேயாகணும்…அதை நீயே நினைச்சாலும் மாத்த முடியாது…அம்மா என்ன சொல்லறங்களோ அதை கேட்டு தான் நீ நடக்கணும்…அதைவிட்டுட்டு எங்க அம்மாக்கிட்ட ஏதாவது லொள்ளு தனம் பண்ணலாம்னு நினைச்சே உன் வாலை ஒட்ட நறுக்கிடுவேன்…திஸ் இஸ் தி பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்…இனிமே இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக்கோ…நடந்தது…நான் நானா இருக்கமாட்டேன்…ஜாக்கிரதை” கனல் வீச வார்த்தைகளை கடித்து துப்பிக்கொண்டிருக்க,அவளது மனைவியானவளோ ‘கணவன் ஏன் மீசை வளர்க்கவில்லை’ என்ற ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்தாள்.

இருவரின் முகமும் அருகருகே இருக்க,தாரா அவனது மீசையைப் பற்றி ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்க,ஆரூரன் அவளை எச்சரித்துவிட்டு கீழே விட நினைக்கையில்,மனைவியின் கவனம் இங்கின்றி வேறு எங்கோ இருக்கிறது என்பதை அறிய நேர்ந்த நொடியில்,ஆத்திரம் மிக அவளின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்பும் பொருட்டு சாயம் பூசாமலே சிவந்திருந்த அவளின் கீழுதட்டை தன் வலிய பற்களால் சிறைப்பிடித்தான்.

அவன் நினைத்தது போல் இதழில் ஏற்பட்ட வலியில் தன் கவனம் கலைந்த தாராவின் விழிகள் இரண்டும் சாசர் போல் விரிய,வலிப்பொறுக்க முடியாமல் அவன் கைவளைவில் இருந்து துள்ளினாள்.

அதில் அவனது பிடி மேலும் இறுக,அவனது விழிகளோ முதன்முறையாக அவளது மை பூசிய கருவிழிகளின் அழகில் சிக்கொண்டது.அத்தோடு பூவை விட மென்மையாக இருந்த அவளது பூவிதழின் மென்மையில் தாம் கொடுக்கவேண்டும் என நினைத்த தண்டனை மாயமாய் மறைந்துப்போக செய்திருக்க,அது தந்த மயக்கத்தில் இருவரின் விழிகளையும் ஒன்றோடு ஒன்று கலக்கவிட்ட ஆரூரன்,அவளை மீளமுடியா நித்திரைக்குள் தள்ளிவிட்டு அவளை தன் வசப்படுத்த முயன்றான்.

தாராவும் முதன்முறையாக கணவனின் விழிகளில் தெரிந்த ஒளியின் பிரகாசத்தில்,தன் துள்ளலை நிறுத்தி,அவனது விழியின் பிரகாசம் கண்களை கூச செய்ய,அதன் வீச்சு தாங்கமுடியாமல் இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.அவளது சிறிய நெஞ்சம் படபடவென பட்டாம் பூச்சியாய் அடித்துக்கொள்ள,புதிதான ஒரு உணர்வில் சிக்கிக்கொண்டவளின் தேகம் முழுவதும் பரவசமடைந்தது.

ஆரம்பத்தில் அவளை வலிக்க செய்த பற்கள்,இப்போது அவ்விதழின் மென்மையை உணர்ந்து,தன்னையும் அறியாமல் வலிக்க செய்த இடத்தை மயிலிறகால் தடவியது போல் மென்மையான இதழொற்றலின் மூலம் மருந்திட செய்தது.  

ஆனால் அந்நித்திரையில் முழுவதுமாக மூழ்குவதற்கு முன்னால், திருமணம் முடிந்து வந்த முதலிரவில் கணவன் கூறிய வார்த்தைகள் யாவும் அவளது செவிப்பறையில் வந்து அறைய,ஒரு நொடி கணவனிடம் வெட்கமின்றி இணைந்த தன்னை கேவலமான பிறவியாக எண்ணியவளின் தேகம் மரக்கட்டையைப் போன்று விறைத்தது.

கணவன் இரவில் தன்னை நாடும் போது ஒரு மரக்கட்டையைப் போன்று எந்த வித உணர்ச்சியுமின்றி படுத்திருப்பவள்,இப்போது ஓரே ஒரு நொடி அவனிடம் தடுமாறியதை எண்ணி வெட்கத்தில் முகம் கன்றி சிவக்க,இதழ்கள் துடிக்க,உடனே அவனது இதழிலிருந்து தன் இதழை பிரித்தெடுத்து,அவன் சுதாரிக்கும் முன் அவ்விடம் விட்டு நீங்கினாள்.

முதன்முறையாக தன் மனைவியிடமிருந்து தனக்கு கிடைத்த ஒத்துழைப்பில் பரவசமடைந்த ஆரூரன்,தாம்பாத்யத்தில் புதிதாக ஒரு புத்துணர்ச்சியான உணர்வு தன்னுள் ஏற்பட்டதை முழுமையாக அனுபவிப்பதற்கு முன் அவள் தன்னை விட்டு பிரித்துச்சென்றதில் எரிச்சல் உண்டானாலும் ‘எங்க போயிட போறா…எப்படியும் நைட் ரூமுக்கு தானே வரணும்’ என்று சாதாரணமாக எண்ணி உணவருந்த சென்றான்.

அவள் மனதில் என்ன இருக்கிறது என்று யோசிக்க கூட தோன்றவில்லை ஆரூரனுக்கு…!!

எந்தவொரு பொருளும் சுலபமாக தன் கைக்கு கிடைத்தால் அதன் மதிப்பு குறைவதோடு நீடித்து நிலைக்காது.அதுப்போல் தாரா என்னும் பொக்கிஷம்,அவனது கரங்களுக்கு எளிதாக கிடைத்ததினால்,அதன் அருமை ஆரூரனுக்கு தெரியவில்லை.

அத்தோடு காதல் என்னும் அஸ்திவாரமின்றி தாம்பாத்யம் என்னும் கட்டிடத்தை எழுப்பினால்,ஒரு நாள் எதிர்பாராமல் வரும் பயங்கர புயல் மழையால்,கட்டிடம் இடிந்து மண்ணோடு மண்ணாய் தரைமட்டமாகிவிடும், அதை ஆரூரன் உணர வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Select your currency
INR Indian rupee
Scroll to Top