அத்தியாயம் 1

அத்யாயம்1:

முக்கனிகளின் சிறந்த ஊரான சேலம் மாநகரின் ஒரு பகுதியில் உள்ள நந்தவனம் எனும் இல்லத்தை சுற்றியுள்ள மரத்திலிருந்தவாறு… ஒரு குயில் கூவிக் கொண்டு இருந்தது.

அதற்கு போட்டி போடும் விதமாக,அந்த வீட்டின் முற்றத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.குரல் வந்த திசையில் “ஶ்ரீநிதி…உனக்கு அறிவே இல்லையா…?எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்க…?நான் என்ன சொன்னேன்… நீ என்ன பண்ணிட்டு இருக்கே?…நான் சொல்லுறதை கேட்க கூடாதனு முடிவுல இருக்கியா…?ஒழுங்கா போய் நாளைக்கு பண்ண வேண்டிய பிராஜக்ட்டை பாரு” என்ற குரல் கேட்டது.

இதையெல்லாம் பேசி கொண்டிருந்தவள் ஶ்ரீநிதி…ஶ்ரீநிதி அவளை அவளே திட்டிக்கொண்டு இருந்தாள்.அதைக் கேட்டு அந்த இடத்தில் உள்ள அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர்.

உடனே ஶ்ரீநிதி சுற்றி இருக்கும் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து முறைத்தவாறே “எதுக்கு இப்போ எல்லாரும் சிரிக்கிறீங்க…?? என்று கோபமாக கேட்டுவிட்டு 

முகத்தை சுருக்கி “எப்பப் பார்த்தாலும் இந்த ஹிட்லர்…இப்படித்தான் வீட்டுக்குள்ள வரும்பொழுது திட்டறாங்க…நான் மட்டும் என்ன பண்ணினேன்…??” என்று கேட்டவள் தொடர்ந்து,

“நீங்க யாருமே இதை கேட்கமாட்டிகிறீங்க…என் கூடப் பிறந்த இரண்டு பேர் இருக்காங்க…ஆனால் அவங்க எல்லாரையும் விட்டு என்னை மட்டும் தான் இந்த அத்தான் திட்டறது…ரிஷியையும் தான்” என சோகமாகக் கூறி முடித்தாள்.

அதற்குள் அவள் அம்மம்மா யசோதா அவளிடம் வந்து “கவலைப்படாதே ஶ்ரீ… அவன் உன்மேலே ரொம்ப அன்பு வச்சிருக்கான்,அதுதான் உன்கிட்ட மட்டும் உரிமை எடுத்துத் திட்டறான்.ரிஷியையும் அதுபோலதாம்மா” என்று அவளுக்கு புரியும்படி கூறிவிட்டு தலையைத் தடவி சமாதானம் செய்தார்.

எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது…எப்போதும் சிரித்துகொண்டிருக்கும் பொண்ணு…இப்படி சோகமாக இருந்ததால்…அவள் சோகத்தைப் பார்த்து வருத்தப்பட்டு…என்ன செய்வது என்று தெரியாமல் தலைக்குனிந்திருந்த நிலையில்,

தீடிரென்று ஶ்ரீ கலகலவெனச் சிரித்தாள்.எல்லாரும் நிமிர்ந்து இவள் என்ன லூசா என்பது போல் விசித்திரமாகப் பார்த்தனர்.அதற்குள் அவள் “எல்லாரும் பயந்திட்டீங்களா?” எனக் கேட்டு கொண்டே பலமாக சிரித்தாள்.

உடனே ஶ்ரீநிதி சிரித்தவாறே “அத்தான்…ஒரு தடவை சொன்னால் வருத்தப்படலாம்…ஆனால் தினமும் சொன்னால்…யார் வருத்தப்படுவா… என்று கூறி தோளைக் குலுக்கிவிட்டு…

“அதற்குதான் நான்…அவருக்கு ஹிட்லர்னு பேர் வச்சிருக்கேன்” எனக் கூறி கண்ணடித்து சிரித்தாள்.

எல்லாரையும் ஒரு நிமிடத்தில் பயம் காட்டிவிட்டு சிரிப்பதை பார் என்று நினைத்து ராதை அவளை நெருங்கி “போடி…கூறு கெட்டவளே…!கொஞ்சம் நேரத்தில் எல்லாரையும் பயப்பட வச்சிட்ட சிறுக்கி…” என்று அவள் கொள்ளு பாட்டி அவளின் மோவாயில் இடித்தார்.

 

ஶ்ரீநிதி ஆஆஆ… என்று வலியில் கத்துவது போல் நடித்தாள்.ஆனால் அவர் லேசாக தான் அடித்தார்.ஆனால் இவள் கத்துவதைப் பார்த்து உண்மையாகவே வலித்திருக்குமோ என்று நினைத்த பாட்டி “சிரி என்னம்மா…?ரொம்ப வலிக்கிறதா…?”என்று பதட்டத்துடன் வினவினார்.அவருக்கு ஶ்ரீ என்ற வார்த்தை வாயில் நுழையவில்லை.

ஆனால் அங்கு இருக்கும் எல்லாருக்கும் தெரிந்தது.இவள் நடிக்கிறாள் என்று.இருந்தாலும் ஶ்ரீ நடத்தும் நாடகத்தை ரசித்தவாறு பார்த்து கொண்டிருந்தனர்.

ஶ்ரீ “ஆமா பாட்டி…!!” என்று முகத்தைச் சுருக்கி வலிப்பதுபோல் நடித்தாள்.

பாட்டியும் “சாரி கண்ணு” என்றார் வருத்தத்துடன்.

அதற்கு மேல் பொறுக்காமல் “ராது…!!அவள்தான் இப்படி நடிக்கிறாள் என்றால்…அதையும் நீ நம்பிக்கிட்டு வந்து வலிக்குதானு…கேட்டுட்டு இருக்கே…” என்றாள் ஶ்ரீயின் தங்கை வாணி.

அதன்பிறகு தான் பாட்டி நிமிர்ந்து அவளின் முகத்தைப் பார்த்து…அவள் நடிப்பைப் புரிந்து கொண்டு முறைத்தார்.

உடனே அவர் வாய் திறந்து திட்டுவதற்குள் அவசரமாக ஶ்ரீ அவர் கன்னத்தில் முத்தமிட்டு குறும்புடன் “ஐ லவ் யூ ராது…!!” என்றாள் சிரிப்புடன்.ச்சு என்று கன்னத்தை துடைத்துவிட்டாலும் அதில் அவர் கோபம் குறைந்தது.

ஶ்ரீநிதியின் தங்கை வாணி…ஶ்ரீநிதியை பொய்யாக முறைத்து கொண்டே “எவ்வளவு தைரியம் இருந்தால்…நீ கிருஷ் அத்தானை ஹிட்லர்னு சொல்லுவே…இரு…அத்தான் வந்த உடனே…உன்னை மாட்டி விடுறேனா இல்லையானு பாரு…” என்று மிரட்டினாள். 

உடனே ஶ்ரீநிதி பயப்படுவது போல் முகத்தை வைத்து “ஏய் பிளீஸ்டி… மாட்டிவிடாதடி…என் செல்ல தங்கச்சி இல்லை” என்று தங்கையின் தாடையைப் பிடித்து கெஞ்சி கொஞ்சினாள்.

உடனே வாணி “அது அந்த பயம் இருக்கட்டும்… இனிமே இதுமாதிரி பண்ணே…உன்னை கண்டிப்பாக  மாட்டி விட்டுவிடுவேன்”என்றாள்.

அவள் மிரட்டிய பிறகு ஶ்ரீநிதி ‘போடி ரொம்பதான்…எனக்கும் ஒரு காலம் வரும்…அப்போ நான் உன்னை பார்த்துகிறேன்’ என்று மனதிற்குள் நொடித்தாள்.

தங்கையை மனதிற்குள் திட்டிய பிறகு கப் சிப்பென்று வாயை இருக்க மூடிவிட்டு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் ஶ்ரீநிதி.அப்போது வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது.

காரிலிருந்து இறங்கி காரின் கதவை அறைந்து சாற்றிவிட்டு…கையில் பெட்டியுடன் அந்த வீட்டின் வாசலில் உள்ள படிக்கட்டின் வழியே கம்பீரமாக நடந்து வந்து கொண்டு இருந்தான் கிருஷ்நந்தன்.

அவன் ஆறு அடி உயரம்,மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிகமான நிறம்,நல்ல உடற்கட்டுடன் எல்லாரையும் வசிகரிக்கும் அழகு உடையவன்.அவன் சிரிக்கும் போது விழும் கன்னக்குழியில் அப்படியே அந்த கிருஷ்ணனே நேரில் வந்து சிரிப்பது போல் இருக்கும்.அவன் சிரிப்பிற்கு அந்த வீட்டிலே பல ரசிகர்கள் உள்ளனர்.(உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணுனா…ஹிந்தி ஹீரோ ஷாகித் கபூர் மாதிரி இருப்பான்)

அவன் காரிலிருந்து இறங்கி நேரே சென்ற இடம் ஶ்ரீநிதி குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருக்கும் இடம் தான்.கிருஷ் தன்னை நெருங்குவதைத் தெரிந்தும்…ஶ்ரீநிதி தன் முகத்தைத் திருப்பாமல் இருந்தாள்.

அவன் அவளிடம் சொன்னது வேற என்னவாக இருக்க முடியும்.சற்று முன்னாள் ஶ்ரீநிதி கிருஷ் திட்டுவானென்று சொன்ன அதே வார்த்தைகள்.அவளுடைய நம்பிக்கையைப் பொய்யாக்காமல் அதையே திருப்பி படித்தான் கிருஷ்.

“ஶ்ரீநிதி… உனக்கு அறிவே இல்லையா…?எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்கே…?நான் என்ன சொன்னேன்…நீ என்ன பண்ணிட்டு இருக்கே…?நான் சொல்லுறதை கேட்க கூடாதனு முடிவுல இருக்கியா…?ஒழுங்கா போய் நாளைக்கு பண்ண வேண்டிய பிராஜக்ட்டை பாரு” என்று திட்டி விட்டு அங்கு இருக்கும் எல்லாரையும் பார்த்து ஒரு தலையசைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அதற்கு ஶ்ரீ அங்கு இருக்க எல்லாரையும் பார்த்து,எப்படி…?என்று கண்ணடித்தாள்.எல்லாரும் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

எல்லாரும் நமுட்டு சிரிப்பு சிரிப்பதை… ஓரக்கண்ணால் பார்த்த அவனும் சிரித்தான்…ஆனால் எல்லாம் உள்ளுக்குள் தான்.ஏனெனில் அவனுக்கு தெரியும்.கொஞ்சம் சிரிப்பை காட்டினாலும் உடனே அந்த வாண்டு இவன் பேச்சை கேட்காது என்று…இவள் நம்மை பற்றி ஏதோ தப்பாக கூறி இருக்கிறாள்…அதனால் தான் எல்லாரும் சிரிக்கின்றனர் என்று அவனுக்கும் தெரியும் இருந்தும்,

வெளியே அதை மறைத்து “ஶ்ரீ…நீ இன்னும் ரூமுக்கு போகலையா…?” என்றான் கோபமாக இருப்பதைப் போல்

“இதோ…அத்தான் போயிட்டேன்” என்று கத்தி கூறிவிட்டு,அவள் அம்மம்மா யசோதா அருகே சென்று “அம்மம்மா ஹிட்லர் கூப்பிடுது…நான் போய் படிக்கிறேன்…இல்லையென்றால் அடுத்த பஞ்சாயத்து கூட்டிடுவார்” என்றாள் சிரித்து கொண்டு.

யசோதாவும் அவள் குறும்பைப் புரிந்து கொண்டு “யேய் வாலு…இரு கிருஷ் கிட்டே சொல்லுறேன்” என்றார். 

“யேய் ஶ்ரீ…இது உனக்கு தேவையா…?இல்ல இது உனக்கு தேவையானு கேட்கிறேன்…?தேவையில்லாமல் உனக்கு நீயே செல்ப் ஆப்பு வச்சிக்கிறே” என்று ஒரு ஆள்காட்டி விரலை தன் முகத்தின் முன்னால் நீட்டி,தன்னை தானே கேட்டு கொண்டாள்.

அதைக்கேட்ட எல்லாரும் கலகலவெனச் சிரித்தனர்.இதை எல்லாம் ஊஞ்சலில் அமர்ந்து ஒரு சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்த அவளுடைய கொள்ளுதாத்தா நந்தன் பேத்தியை அழைத்து “நீ நல்லா இருக்கணும்மா…இதுபோல எப்போதும்…என்று கூறி சுற்றி இருக்கும் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

நம்முடைய குடும்பமும் அதேபோல் சிரித்துக்கொண்டே இருக்கணும்… அதுதான் எனக்கு வேணும்” என்று அவள் தலையை வாஞ்சயாகத் தடவினார். 

உடனே ஶ்ரீ குறும்புடன் “அப்போ உங்களுக்கு பாட்டி வேணாமா?ஓகே…ஓகே…ரொம்ப தேங்கஸ் தாத்தா.எனக்கும் இந்த பாட்டியை பிடிக்கலை…சோ வேற பாட்டியை பார்த்து…உங்களுக்கு கல்யாணம் பண்ணலாம்” என்றாள். 

“ஏய் வாலு…உன்னை” என்றார் அடிக்க கை ஓங்கி கொண்டு.

 

நந்தன் இந்த குடும்பத்தின் ஆணிவேர்.அவரைப் பார்க்கும் எல்லாருக்கும் ஒரு மரியாதை ஏற்படும்.அதேபோல் ராதையைப் பார்த்தால் ஒரு தெய்வீக கலை முகத்தில் தெரியும்.நந்தன் ராதை தம்பதியினருக்கு மூன்று மக்கள்.குந்தவை தான் பெரியவள்.அவருக்கு பிறகு ரகுநந்தன்,அடுத்து தனநந்தன்.

 

முதல் மகன் ரகுநந்தனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.மூத்தவள் ஜானகி,இரண்டாவது தயாநந்தன்.ஜானகிக்கு இரண்டு மகள்கள்.மூத்தவள் ஶ்ரீநிதி,இளையவள் ஶ்ரீவாணி.

தயாவுக்கு ஒரு மகள்,ஒரு மகன்.

 

நந்தன் தாத்தாவின் இரண்டாவது மகன் தனநந்தன் தேவகி தம்பதியினருக்கு இரு மகன்கள் மூத்தவன் கிருஷ்,மற்றும் இளையவன் ரிஷி.

கிருஷ் மற்றும் ரிஷிக்கு கல்யாணம் நடக்கவில்லை.கிருஷ் 28வயது,ரிஷிக்கு 24 வயது.

தாத்தா செல்லமாக ஶ்ரீநிதியை அடிக்க கை ஓங்கும் போது மாடிப்படி அருகே சத்தம் கேட்டது.உடனே ஶ்ரீநிதி “ஐய்யையோ…அத்தான் வரார்.நான் இன்னும் இங்க இருக்கிறதைப் பார்த்தால் அவ்வளவுதான் நான்”.என்ன ஶ்ரீ இன்னும் படிக்க போகலையானு கேட்பார் என்றாள்.

தாத்தாவும் தன் பேத்தியை அடிக்க வந்ததை மறந்து “நீ சமையல் கூடத்தில் போய் ஒளிஞ்சிக்கோம்மா…நான் அவன்கிட்ட பேச்சி கொடுக்கறேன்.நீ அப்போ மாடிப்படி ஏறி போயிடு” என்றார் அவளைக் கிருஷிடம் இருந்து காக்கும் பொருட்டு. 

ஆனால் அவள் “டாங்கஸுங்க”என்று அந்த நேரமும் தன் பாட்டி ராதாவைப் பார்த்து கிண்டல் பண்ணிவிட்டு சென்றாள்.

 

ஏனெனில் பாட்டிக்கு தாங்கஸ் சொல்ல வராது…அதனால் தான்.அவளுக்கு பாட்டியை வம்புக்கு இழுக்காமல் இருக்கமுடியாது… அதே மாதிரி பாட்டியும் ஶ்ரீநிதியை வம்புக்கு இழுக்காமல் இருக்கமாட்டார்.இது இவர்களுக்குள் எப்போதும் நடக்கும் செல்ல சண்டை…ஆனால் ஶ்ரீக்கு ஒன்று என்றால் பாட்டியினால் அதனைத் தாங்கி கொள்ள முடியாது…அவள் சென்று சமையல் கூடத்தில் ஒளிவதற்கும்…கிருஷ் தாத்தாவிடம் செல்வதற்கும் சரியாக இருந்தது.அவன் தாத்தாவின் அருகில் ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும்போது அவள் மாடி ஏறிசென்றாள்.

அவள் சென்றவுடன் “என்ன தாத்தா அவள் மாடி ஏறி போயிட்டாளா…?”என்றான் கிருஷ் மெல்லிய முறுவலுடன். 

தாத்தா ஒரு புன்னகையோடு அவனிடம் திரும்பி “ஹும், போய்விட்டாள் கிருஷ்…என்று கூறி மனதில் …

உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா கண்ணா…அவள் மேலே போவதற்காக தான்…நீ என்னுடன் பேச வந்தாய் என்று அவனைப் பற்றி நினைத்து குறும்புடன் சிரித்துவிட்டு…தீடிரென்று ஒரு யோசனையுடன்

“ஏன் கிருஷ்…?அவள்மேல் இவ்வளவு அன்பு வைத்துக்கொண்டே… அவளிடம் மட்டும் கோபமாக இருப்பது போல் நடிக்கிறே”என்று கேட்டார் வருத்தத்துடன்.

 

கிருஷ் முகத்தில் சிறு முறுவலுடன் “எல்லாரும் அவள் மேலே பாசமாக இருந்தால் எப்படி…?வீட்டில் ஒருத்தர் மேலே அவளுக்கு பயம் இருக்கணும் தாத்தா… இல்லையானால் அது நிறைய தப்பிற்கு வலி வகுக்கும்…இப்போது என் மேலே அவளுக்கு கொஞ்சம் பயமிருக்கும்… நாம் தப்பு செய்தால்…அத்தான் நம்மை திட்டுவாங்கனு…அப்போதான் என் பேச்சுக்கு கொஞ்சம் பயப்படுவாள்” என்றான் உறுதியாக.

“ஆமா தாத்தா, கிருஷ் சொல்லறதும் கரெக்ட் தான் தாத்தா.எல்லாரும் செல்லம்தான் கொடுக்கிறோம்.வீட்டில் ஒருத்தர் கண்டிப்பு கட்டினால் பரவாயில்லை தாத்தா” என்று கூறினார் ஶ்ரீயின் தந்தை விசுநந்தன்.

விசுநந்தன் வேற யாரும் இல்லை…கிருஷ் உடைய அக்கா ஜானகியின் கணவன்…நந்தன் தாத்தாவின் மகள் குந்தவையின் மகன் இந்த விசுநந்தன்.ஜானகிக்கும் விசுக்கும் சின்ன வயதிலே கல்யாணம் நடந்துவிட்டது.அவங்களுக்கு ஶ்ரீநிதி ஜானகியின் பதினெட்டவது வயதில் பிறந்துவிட்டாள்.

 

நந்தன் குடும்பம் நிறைய தொழில்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் தொழிலை குடும்பத்தின் ஆண்கள்…ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலின் பொறுப்பை ஏற்று நிர்வகிக்கின்றனர்.கிருஷ் மட்டும் எல்லா தொழிலையும் மேற்பார்வை பார்ப்பது…எல்லா தொழிலைப் பற்றிய முழு விவரமும் கிருஷிற்கு மட்டுமே தெரியும்.

சொல்லப்போனால் எல்லா நிர்வாகமும் கிருஷ் இடத்தில்தான் உள்ளது.அவன் அந்த அளவிற்கு திறமைசாலி.நந்தன் குருப் ஆப் கம்பெனிஸ் என்றால் தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்கமாட்டார்கள்.

ஶ்ரீநிதி அந்த வீட்டின் செல்ல குழந்தை…ரொம்ப அன்பாக நடந்துகொள்வாள். அதுமட்டுமல்லாமல் அவளுடைய பேச்சு திறமையினால் எல்லாரையும் கவர்ந்து இழுக்கும் வல்லமை உடையவள்.இயற்கையாகவே ஶ்ரீநிதி மிகவும் அழகு.அதுவும் எல்லாரையும் கவர்ந்து இழுக்கும்.அவள் மான் விழி கண்கள் எப்போதும்…ஒரு குறும்பு நிறைந்தாய் இருக்கும்.எப்போதும் துருதுருவென்று இருப்பாள்.(ஜெனிலியா மாதிரி)

கிருஷ் சிறிது நேரம் தாத்தாவுடன் பேசிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.அவன் சென்ற சில மணித்துளிகளில் ஶ்ரீநிதி கீழிறங்கி வந்தாள்.வரவேற்பறையில் உள்ள ரிஷியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.

ஶ்ரீ “என்ன ரிஷி…?எப்படி இருக்க தம்பி…!!காலேஜ் முடியபோகுது,நெக்ஸ்ட் என்ன பிளான்?” என்றாள் குறும்புடன்.

அதற்கு ரிஷி “அதென்ன எங்க அண்ணனை மட்டும் அத்தானு கூப்பிடறே…என்னை மட்டும் ரிஷினு சொல்லுறே…இதெல்லாம் நியாயமேயில்லை.நானும் உன்னை விட பெரியவன்தான்…சோ என்னையும் அத்தானு சொல்லு” என்று சின்ன பிள்ளையாய் பிடிவாதம் பிடித்தான்.

“அதெல்லாம் முடியாது போடா” என்றாள் அவளும் சின்ன பிள்ளையாய். 

“ஏய் இரு..இரு…டாவா?இரு உன்னை” என்று கோபமாக அவள் அருகில் நெருங்கியவுடன் அவள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

அவளைத் துரத்திக்கொண்டே போகும்போது வாணி மீது மோதிவிட்டான்.வாணி கீழே விழப்போகும் பொழுது அவள் கையைப் பிடித்து தூக்கிவிட்டான் ரிஷி.

வாணி அவனை முறைத்துப் பார்த்தாள். “சாரி வாணி…என்று கூறிவிட்டு திரும்பி ஶ்ரீயைக் காட்டி,

இதுக்கெல்லாம் காரணம் உன் அக்கா தான்” என்றான் பாவமாக.

“பரவாயில்லை விடு அத்தான்,நான் அதுகெல்லாம் உன்னை முறைக்கலை… எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்கியே…என்று இழுத்துவிட்டு…

உனக்கெல்லாம் ஏழு கழுதை வயசு ஆகியும்…உனக்கு அறிவே இல்லையானு தான் பார்த்தேன்” என்று கலகலவெனச் சிரித்தாள்.

“கரெக்டா சொன்ன வாணி” என்று ஶ்ரீ சொல்லி சிரித்துகொண்டே வாணியின் அருகில் வந்து ஹைய் பை கொடுத்தாள்.

“ஏன்…உங்க அக்காவுக்கு ஏழு கழுதை வயசாகலையா…?அவளும்தான் சின்ன பிள்ளைகள் கூட விளையாடுகிறாள்” என்றான் ரிஷி நக்கலாக.

“உங்களை விட கம்மியான வயசு தான்…சோ…அவ சின்ன பொண்ணுதான்” என்றாள் வாணியும் பதிலுக்கு கேலியாக.

“உங்க ரெண்டு பேருக்கும் என்னை கேலி பண்ணலானா…தூக்கமே வராதே…எனக்கு எல்லாம் மீரா தான் கரெக்ட்…அவள் எப்பவும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவா தெரியுமா…?இந்த நேரம் பார்த்து என் மீரா குட்டி வெளிய போயிட்டாளே…!!” என்று ஏக்கமாக கூறி பெரு மூச்சிவிட்டான்.

 

நந்தன் தாத்தாவின் மூத்த பெண் குந்தவைக்கு இரண்டு மகன்கள்கள்.மூத்தவன் ராம்நந்தன்,இளையவன் விசுநந்தன். அவரது கணவர்… பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும்போதே இயற்கை எய்தினார்.அதன்பிறகு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு…இந்த வீட்டோடு வந்துவிட்டார்.

மூத்தவன் ராமிற்கு ஒரே மகள் பெயர் மீரா.அவளை தான் ரிஷி மீரா குட்டி என்று சொன்னான் இவர்களிடம்.

விசுநந்தன் இளையவர்.அவர் தான் ஶ்ரீநிதி மற்றும் ஶ்ரீவாணியின் தந்தை.

ரிஷி அப்படி கூறியவுடன் வாணியின் முகம் சுருங்கிவிட்டது.ஶ்ரீ அதை பார்த்து விட்டு “ஓகே ரிஷி…உன் கடைசி செமெஸ்டர் பிரப்பரேஷன் எப்படி போகுது” என்று பேச்சை மாற்றினாள்.

அவனும் “ஏதோ போகுது” என்று சலித்தவாறு கூறினான். 

உடனே ஶ்ரீ “பார்த்து ரிஷி…நீ மட்டும் ஒழுங்கா பிராஜக்ட் பண்ணலை… அவ்வளவு தான்…நம்ப ஹிட்லர்  ஒரு குத்துடேன்ஸ் ஆடிடும்” என்றாள்.ஆமா என்று ரிஷியும் ஒத்து ஊதினான்.

அதைக்கேட்ட வாணியின் பழைய குறும்பு தலைதூக்க ஆரம்பித்தது. “இரு உங்க ரெண்டு பேரையும் பெரிய அத்தான் கிட்ட சொல்லுறேன்” என்று மிரட்டினாள்.

 

அவசரமாக இருவரும் “அம்மா தாயே…! எங்களை மன்னிச்சிடு…!!அவர்கிட்ட மட்டும் சொல்லாதா பிளீஸ்…அவர்கிட்ட சொல்லி அவர் திட்டுவதை எங்களால் பார்க்க முடியாது”என்று இருவரும் ஒருசேரக் கூறி கையெடுத்து கும்பிட்டார்கள்.வாணி விரல் நீட்டி அது…அந்த பயம் இருக்கட்டும் என்றாள்.

பிறகு இருவரும் பிரிந்து அவர்வர் அறைக்கு சென்றனர்.பின்னே வாணி கடைகுட்டி என்பதால் அவள் கிருஷின் செல்லம்.அவள் மட்டுமே கிருஷிடம் தைரியமாக பேசுபவள்…அந்த வீட்டின் இளைய தலை முறைகளில்.அவள் ஏதாவது கிருஷிடம் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் அவர்கள் கதி,திட்டியே கொல்லுவான்.

அதை யார் வாங்குவது என்று அமைதியாக சென்று விட்டனர். 

கிருஷுடைய பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் குடும்பம் தொழிலில் இவ்வளவு முன்னேறி உள்ளனர்.அதனால் இந்த வீட்டில் கிருஷ் உடைய வார்தைக்கு நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்.

அவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாகவே இருக்கும்.எனவே அந்த வீட்டில் எடுக்கும் அனைத்து முடிவுகளுமே அவனிடம் கலந்து ஆலோசித்துதான் எடுக்கப்படும்,பெரியவர்கள் உட்பட.அதனால் அந்த வீட்டின் இளைய தலைமுறையினருக்கு அவனிடம் பயம் கலந்த மரியாதை உள்ளது.ஶ்ரீக்கும் ரிஷிக்கும் சொல்லவே தேவையில்லை அவ்வளவு பயம் கிருஷிடம்.(அப்பாஆ…இன்ட்ரோ கொடுக்கவே எனக்கு மூச்சிமுட்டுதே…இன்னும் இவங்க கதையைப் பத்தி சொல்லறதுகுள்ள… அப்பப்பப்பபா…ஓகே வாங்க நாம் கதைக்குள் போகலாம்)

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top