அத்தியாயம் 22
அன்று பிருந்தாவோ சிட்டியில் இருந்த அந்தப் பெரிய ஷாப்பிங் மாலுக்கு தான் வந்திருந்தாள்.
எப்போதும் வெளியில் போகும் போது தங்கையுடன் செல்லுவது தான் வழக்கம். ஆனால் இன்று மிருதுளாவுக்கு கல்லூரியில் ஏதோ விஷேட கிளாஸ் இருப்பதால் அவளால் வர முடியாமல் போய் விட, வேறு வழியின்றி பிருந்தா மட்டும் தான் தனியாக வந்திருந்தாள்.
அவளோ தனக்கு தேவையான சில பொருட்களை தேடிப் பார்த்து எடுத்துக் கொண்டிருக்க, அதே சமயம் அவள் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் அந்த நான்கு பேர்.
அவர்களை பார்த்தால் பொருட்களை வாங்க வந்தது போல தெரியவில்லை. மாறாக, பெண்களை கேலி பேசுவதும், அவர்களை உரசுவதுமாகவே திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களோ அங்கிருந்த இரண்டு பெண்களை பார்த்து ஆபாசமாக கமெண்ட் அடித்துக் கொண்டு வர, இது பிருந்தாவின் செவிகளையுமே எட்டியது.
அவளோ சட்டென திரும்பிப் பார்த்தாள்.
அந்த பெண்களோ பயத்தில் அங்கிருந்து அவசரமாக ஓடி விட, இப்போது அந்த நால்வரின் பார்வையும் கையில் சில பொருட்களை வைத்து கொண்டு தனியாக நின்றிருந்த பிருந்தாவின் மீது தான் படிந்தது.
அவளோ ஒரு அழகிய பட்டர் நிறப் புடவை அணிந்திருக்க, அவளின் அங்க லட்சணங்கள் அனைத்தும் அந்த புடவையின் வழியாக மேலும் எடுப்பாக வெளியில் தெரிய, அந்த கயவர்களின் விழிகளோ அத்துமீறலாக அவள் மேனியில் படர்ந்தது.
பிருந்தாவுக்கோ அவர்கள் பார்வையில் உடல் மொத்தமும் கூசிப் போக, ‘சரியான பொம்பளை பொறுக்கிங்க!’ என்று வாய்க்குள்ளயே முணு முணுத்துக் கொண்டவள், கையில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விறு விறுவென முன்னால் நடந்தாள்.
அவர்களோ அப்போதும் விடாமல் கண்ணை காட்டிய படி அவளை பின் தொடர்ந்து சென்றார்கள்.
அவளுக்கோ பயத்தில் வியர்த்து வழிய, சற்று பதறி தான் போனாள்.
ஆனாலும் இது பொது இடம் என்பதால் அவர்களால் எதுவும் பிரச்சனை செய்ய முடியாது என்ற தைரியம் அவளை சற்று நிதானதுக்கு கொண்டு வந்தது.
அவளோ நடையும், ஓட்டமுமாக முன்னால் செல்ல,
அவர்களில் ஒருவனோ அவளின் வளைந்த இடையைப் பார்த்து, “டேய் மச்சி அங்க பாருங்கடா! என்னா ஹிப்பு… ஒரு வாட்டி அதை தொட்டு பார்க்கணும்டா!” என்று வக்கிரமாக சொல்ல,
மற்றவனோ, “புடையில சும்மா கும்முனு இருக்காளே! இவளை மாதிரி சூப்பர் பிகருங்க எல்லாம் எங்கடா இருக்காளுங்க?” என்று அவளை பார்வையாலேயே பருகியபடி சொன்னான்.
பெண்ணவளுக்கோ அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு ச்சீ என்றிருந்தது.
பெண்களை எப்போதுமே இப்படி காமக் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்கும் ஆண்களை நினைத்தாலே அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
எங்கே போனாலும் இப்படிப்பட்ட ஒரு கேவலமான கூட்டம் இருக்க தானே செய்யும்.
‘இவனுங்க எல்லாம் அக்கா, தங்கச்சிங்க கூட பொறந்திருக்க மாட்டாங்களா? எப்படி ஒரு பொண்ண பார்த்து இவ்ளோ கேவலமா பேச முடிது!’ என மனதுக்குள் வசை படிய படியே, அவசரமாக தனது புடவையை இழுத்து தன்னை மறைத்தவள், அவர்களை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
அங்கிருந்து எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் அவளுள்.
வேக வேகமாக சென்றவள், தான் கொண்டு வந்த பொருட்களுக்கு பில் போட்ட படியே மெல்ல அவர்கள் இருக்கிறார்களா என்று நோட்டம் விட, நல்ல நேரத்துக்கு அவர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை.
அவர்கள் சென்று விட்டார்கள் என்று தெரிந்ததும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
பொருட்களை வாங்கிக் கொண்டவள், நேராக அவளின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்க்கிங்கிற்கு தான் வந்தாள்.
அந்த இடமோ பெரிதாக ஆள் நடமாட்டமின்றி இருக்க, ஏனோ உள்ளுக்குள் சற்று பயமாக தான் இருந்தது.
சீக்கிரமாக வீட்டுக்கு புறப்பட வேண்டும் என்று எண்ணிய படியே, தனது கார் இருந்த இடத்துக்கு வந்தவள், கைப்பையை திறந்து காரின் கீயை எடுக்க போன சமயம் தான்,
“என்ன மேடம்… எங்களை இப்படி தவிக்க விட்டுட்டு நீங்க இவ்ளோ சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பினா எப்படி?” என்ற குரல் பின்னாலிருந்து ஒலிக்க, பெண்ணவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
ஆம்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அவளை பின் தொடர்ந்த அந்த கயவர்களே தான்.
அவளுக்கோ இதயத் துடிப்பு எகிற, மெல்ல பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
அவர்கள் நால்வருமே அவளை சுற்றி நின்றிருக்க, அங்கிருந்து நகரக் கூட முடியாத படி, அவர்களிடம் மாட்டியிருந்தாள் பாவை.
தன் பயத்தை முடிந்த வரை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “மரியாதையா வழிய விடுங்க” என்று கோபமாக சொன்னவள், எப்படியாவது தனது காரில் ஏறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரமாக காரின் கதவை திறக்க முயல,
அதற்குள் அவளை நெருங்கி வந்த ஒருவனோ, அவளின் மெல்லிய கரங்களை பற்றி இருந்தான்.
“எதுக்கு தனியா போக போற? எங்க கிட்ட கார் இருக்கு. வந்தன்னா உன்னை பத்திரமா வீட்டுல விட்டுர்றோம்” என்று சொல்லிக் கொண்டே அவளை இழுக்க,
பெண்ணவளின் கையில் இருந்த பைகளோ கீழே விழ, பயத்தில் அவள் உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.
“ஹேய் என் கையை விடுடா” என்று தன் கரத்தை விடுவிக்க அவள் போராட, அவனோ, “சத்தம் போடாம எங்க கூட வந்தன்னா உனக்கு நல்லது. இல்லன்னா தொலைச்சிடுவேன்” என்று மிரட்டலாக சொல்லிக் கொண்டே அவளை சடால் என்று தன் பக்கம் இழுக்க, அந்த இழுப்பில் பிருந்தாவின் கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் நொறுங்கி சிதறியது.
“ஆஹ்…” என்று வலியில் அலறியவளின் மணிக்கட்டில் இருந்து வளையல்கள் கிழித்து ரத்தம் கசிய ஆரம்பித்தது.
அவளுக்கோ வலியில் உயிர் போக, கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது.
“ப்ளீஸ் தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க” என்று அவள் கெஞ்ச,
அவர்களோ அவளை பார்த்து சத்தமாக சிரித்தார்கள்.
அவள் கரத்தை பற்றி இருந்தவனோ, “இப்படி லட்டு மாதிரி இருந்தா எப்படிடி உன்ன விட மனசு வரும்?” என்று அவளை பார்வையாலேயே பருகியபடி சொல்ல,
மற்றவனோ, “ஒரு டைமாவது உன்ன மொத்தமா அனுபவிக்கனும்டி. அதுக்கப்புறம் நாங்களே உன்ன விட்டுடுறோம் செல்லம்… சாத்தியமா..” என்று தலையில் கை வைத்து சொல்ல, மற்றவர்கள் நக்கலாக சிரித்தனர்.
அவளுக்கோ மேனி எல்லாம் கூசிப் போனது.
இவ்வளவு கீழ் தரமாக பேசுகிறார்கள்.
அந் நொடியே தன் உயிர் உடலை விட்டு போனாலும் பரவாயில்லை போலும். ஆனால் இவர்கள் கையில் மட்டும் சிக்கக் கூடாது என்று தான் பெண்ணவளுக்குத் தோன்றியது.
பயம்… அவமானம்… அருவருப்பு…
எல்லாம் சேர்ந்து அவளை மொத்தமாக உடைக்க, கத்த கூட தெம்பில்லாமல் நின்றிருந்தவளை, கொஞ்சமும் ஈவு, இரக்கம் இல்லாமல் பார்த்தார்கள் அந்த நால்வரும்.
அவளோ “என்னை விடுங்க ப்ளீஸ்….” என்று அழுத படியே திமிர, மற்றவனோ அவளை நெருங்க போன அடுத்த நொடி,
“டேய் அவ கையை விடுங்கடா” என்ற கர்ஜனை கலந்த குரல் அந்த பார்க்கிங் ஏரியாவையே அதிர வைத்தது.
அந்த சத்தத்தில் நால்வரும் அதிர்ந்து போய் திரும்பிப் பார்க்க, அங்கே கண்களில் கொலைவெறி தாண்டவமாட, கை நரம்புகள் அனைத்தும் புடைக்க, கோபத்தின் உச்சத்தில் நின்றிருந்தது வேறு யாரும் அல்ல சிம்ம விஷ்ணு தான்.
ஆம்.
தனது காரில் ஏறப் போனவனுக்கு யாரோ ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க, அவசரமாக வந்தவன், அங்கே தன்னுடைய பிருந்தா கைகளில் ரத்தத்துடன் கதறிய படி இருந்ததை கண்டதும் அதிர்ந்து தான் போனான்.
அவனை கண்டவள் முகமோ அடுத்த நொடி மலர்ந்து தான் போனது.
தன்னை காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று ஏக்கத்துடன் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, அங்கே அவளின் சிம்மனே வந்து விட்டான் என்றதும் அவ்வளவு நேரமும் இருந்த பயமும், நடுக்கமும் காணாமலேயே போய் விட்டது.
“சி…. சிம்மா…. ” என்று அவள் இதழ்கள் பயத்தில் நடுங்க, கண்களில் இருந்து நீர் மல்கியது.
அவளை அந்த நிலையில் பார்த்தவனோ உள்ளுக்குள் உடைந்து தான் போனான்.
அவளின் கரங்களை பற்றி இருந்தவனை அனல் தெறிக்கும் பார்வையுடன் பார்த்தவன், “அவ கையை மரியாதையா விட்டுடு. இல்ல… ” என்று அவன் கர்ஜிக்க,
அங்குள்ளவர்களோ அவனை கண்டு சத்தமாக சிரித்தார்கள்.
“டேய் யாருடா நீ? பெரிய ஹீரோ மாதிரி இவளை காப்பாத்த வந்திருக்க? இவ கையை விடலன்னா என்ன பண்ணுவ?” என்று கேலியாக கேட்டுக் கொண்டே அவளின் கையை விட்டவன், பெண்ணவளின் முடியை கொத்தாக பிடித்து பின்னால் இழுக்க, அவளோ “ஆஹ்” என்று அலறிய படி பின்னால் சென்றாள்.
சிம்மனோ, “டேய்….” என்று கத்திய படி முன்னால் நகர, அதற்குள் அங்கிருந்த மற்றவனோ, “டேய் ஹீரோ அவளை தொட்டா உனக்கு என்னடா இவ்ளோ வலிக்கிது?” என்று எகிறிய படி அவனை அடிக்க நெருங்கியது தான் தெரியும், அடுத்த நொடி அவன் முகம் திரும்பும் அளவுக்கு சிம்ம விஷ்ணுவின் கரங்கள் பதிந்தது.
“ஆஹ்” என்று அலறியபடி அவன் தடுமாறி கீழே விழ, அவன் மூக்கில் இருந்து பொல பொல ரத்தம் வழிந்தது.
மற்ற மூவரும் அதிர்ச்சியில் “டேய் மச்சான்!” என்று பதறி போய் கத்த,
சிம்மனின் விழிகளோ கோபத்தில் சிவந்து போய் பார்க்கவே ஆக்ரோஷமாக இருந்தான்.
பிருந்தாவோ அவனை சற்று அதிர்ந்து போய் பார்க்க, அவன் விழிகளுமே அவளை மட்டும் தான் நோக்கியது.
கீழே விழுந்தவனோ, “டேய் இவனை முதல்ல அடிச்சி கொல்லுங்கடா” என்று வலியில் கத்த, மற்ற இருவரும் பாய்ந்து அவனை நோக்கி ஓடி வர, சிம்மனோ அவனை நோக்கி ஓடி வந்த ஒருவனின் கையை அப்படியே பிடித்து முறுக்கியவன், அவன் வயிற்றில் ஓங்கி ஓங்கி குத்தி இருந்தான்.
“அம்மா!” என்று வலியில் அவன் சுருண்டு கீழே விழ,
மற்றவனோ பின்னால் இருந்து சிம்மனை அடிக்க வர, அவனோ மின்னல் வேகத்தில் திரும்பி அவன் சட்டையை கொத்தாகப் பிடித்தவன், அப்படியே இழுத்துச் சென்று அருகில் இருந்த தூணில் சடாரென்று மோத விட்டான்.
“ஆஹ்ஹ்!” என்று அலறியபடி அவன் தலையை பிடித்துக் கொண்டு கீழே சரிய, அவன் மண்டை வெடித்து நெற்றியில் இருந்து தாரை தாரையாக இரத்தம் வழிந்தது.
அவன் அடித்த மூவருமே தரையில் சுருண்டு ரத்த வெள்ளத்தில் கிடக்க,
அப்போது “சிம்மா” என்று பிருந்தாவின் அலறல் சத்தம் சிம்மனின் செவிகளை எட்ட, அவனோ சட்டென திரும்பிப் பார்த்தான்.
அங்கே பிருந்தாவை பிடித்து இருந்தவனோ, அவளின் கழுத்தில் ஒரு சிறிய கத்தியை அழுத்தமாக வைத்திருக்க, அந்த காட்சியை கண்டவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து போயின.
அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, சிம்மனுக்கோ அவ்வளவு நேரமும் இருந்த கோபம் அப்படியே உயிர் பயமாக மாறி இருந்தது.
“பே…. பேபி…” என்று பதறிய படி அழைத்தவன், “டேய்…. அ.. அவளை எதுவும் பண்ணிடாத!” என்றவன் குரல் முதன் முறை சற்று நடுக்கத்துடன் ஒலித்தது.