உயிர்க்குழலில் கசியும் மெல்லிசை நீ..!
மாதர் குலம் அனைவரும் ஆடவரின் அடிமை,அடுப்பூதுவதற்கு மட்டுமே பெண்கள் படைக்கப்பட்டார்கள் என்ற பழமையில் ஊறிப்போன பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஆணவமும் செருக்கும் கொண்ட நாயகன்…!!
ஆண் பெண் இருபாலரும் சமம் என்ற கொள்கையுடைய,தன் இலட்சியத்தையே வாழ்க்கையாக கொண்ட நவநாகரீக யுகத்தில் வாழும் குறும்புக்கார நாயகி…!!
எதிரெதிர் குணங்கள் கொண்ட இவ்விருவரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திருமண பந்தத்தில் ஒன்றாக இணைகிறார்கள்…!!
வாழ்வின் இலட்சியத்திற்காக திருமண பந்தத்தில் இணையும் இந்நாயகி,அது விதையிலே சருகாகி,தன் ஆடவனின் வஞ்சத்திற்கு ஆட்பட்டு வாழ்க்கையே சீரழியப்போகும் சூட்சுமம் அறியாமலும்,இல்லற வாழ்வில் நேரவிருக்கும் இன்னல்களும் நம்பிக்கைக்குரியவர்களே அவளுக்கு இழைக்கவிருக்கும் துரோகத்தினால் விளையப்போகும் விபரீதத்தையும் அறியாமல், அப்பூஞ்சை மனம் கொண்டவள் எதிர்க்கொள்ள காத்திருக்கும் தருணங்களை காட்சிகளாக கொண்டதே இந்த கதை.
பெண்ணவளை ஒரு துரும்பாக கூட மதியாதவனின் உயிர்க்குழலில் கசியும் இன்னிசையாய் பூவையவள் மாறும் நெறிமுறையே இந்நாவல்.