அத்தியாயம் -23

நாட்கள் உருண்டோடியது…

செல்லச் சண்டைகளும் கொஞ்சல்களும், கெஞ்சல்களுமாக மிருகேன் மற்றும் கீதாஞ்சலியின் வாழ்க்கை சென்றது.

கீதாஞ்சலி இன்னும் இரு தினங்களில் பயிற்சி மையத்தில் சேர வேண்டும்.

அன்று மாலை அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர இருவரும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று விட்டு அவளது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திடீரென்று கரு மேகங்கள் திரண்டு மழையை பொழிய ஆரம்பித்து விட்டது.

“மிரு…சீக்கிரம் போங்க…அச்சோ…! எவ்வளவு மழை?”என்றபடி வாங்கிய பொருட்களை இறுகப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆனால் மிருகேந்திரனோ வாகனத்தை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தான்.

“ ம்ம்ச்…மிரு…சீக்கிரம் போங்க…ஏன் இப்படி உருட்டிட்டு போறீங்க?” என்று முகத்தில் வழிந்து நீரைத் துடைத்துக் கொண்டே சலித்துக் கொண்டாள்.

“கீது…உன் கூட இப்படி மழையில நினைஞ்கிட்டே ரைட் போறது நல்லா இருக்குது. அப்படியே என்னைய இறுக்கி கட்டிப் பிடிச்சிக்கோயேன்…” என்றான் பின்னால் சற்று சாய்ந்தபடி.

“அடக்கடவுளே….! உங்களுக்கு இப்ப தான் ரொமேன்ஸ் பண்ண மூட் வருமா?” என்றவள் மீண்டும் முகத்தில் வழிந்து கொண்டிருந்த நீரை துடைத்தபடி அவனது தோளைத் தட்டினாள்.

“கை நிறைய பொருள் இருக்கு மிருகேன்.ப்ளீஸ்…! சீக்கிரம் போங்க .” என்றாள் .

“இயற்கையை ரசிக்கணும் கீது…”என்றவன் அவள் பேச்சை மீற முடியாமல் வாகனத்தின் வேகத்தை கூட்டினான்.

இருவரும் தொப்பலாக நனைந்தபடியே கீதாஞ்சலி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

“கீயை பிடிங்க மிருகேன்..பை ரொம்பவே வெயிட்டா இருக்கு…நீங்களே கதவைத் திறங்க…இந்த காத்து வேற…ச்சை‌.” என்றவள் கனமான‌ நெகிழிப்பையை கை மாற்றி வைத்துக் கொண்டாள்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவர்களை இருண்ட வீடே வரவேற்றது.

“கரண்ட் இல்ல போல கீது..”

“அச்சச்சோ‌…! கரண்ட் இல்லையா…சுத்தம்..கொஞ்சம் இருங்க பக்கத்துல தான் டார்ச் லைட் இருக்கும்…இருங்க நான் எடுத்துட்டு வர்றேன்…” என்றவள் தடுமாறிவாறே அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

உடை வேறு ஈரமாக இருந்தது.

“முதல்ல ட்ரெஸை மாத்தணும்..” என்றவள் தட்டுத்தடுமாறி டார்ச் லைட்டை எடுத்தாள்.

அவள் எடுக்கவும் மிருகேன் அவளது அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது..

“ லைட்டை எடுத்திட்டியா? அதைக் குடு முதல்ல. டவல் வேணும் கீது..ட்ரெஸ் வேற ஈரமா இருக்கு…”என்றபடி அவளருகில் வந்து நின்றான்.

டார்ச்சின் வெளிச்சத்தில் பூந்துவாலையை தேடிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.

“ ம்ம்ச்…எங்க இங்கிருந்த டவல்? குளிருது வேற…” என்றவளை விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மிருகேன்.

அவனது அடரந்த கேசத்திலிருந்து சொட்டு சொட்டாக நீர் வழிந்து கொண்டிருக்க ,அதனை துடைத்துக் கொண்டே அவளது வரி வடிவத்தை ரசித்தான்.

உடலோடு ஒட்டிய உடை அவளது அங்க வளைவுகளின் அழகை எடுத்துக் காட்டியது. 

அவன் அணிவித்த பொன் மஞ்சள் தாலி வேற அவளது மார்போடு ஒட்டி உறவாட தன்னையறியாமல் அவளை நெருங்கியவன் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

கட்டிலிக்கருகே குனிந்து ஏதோ எடுத்துக் கொண்டிருந்தவளின் கரங்கள் ஒரு கணம் அசைவற்று நின்றது.

மெல்ல அவள் நிமிர்வதற்கும் மிருகேன் அவளது கழுத்தில் முகத்தை புதைத்துக் கொள்வதற்கும்  சரியாக இருந்தது.

அவளது கையிலிருந்து ஆடை நழுவி தரையில் விழுந்தது.

“எ…என்ன மிருகேன்…”? என்றாள் மெல்லிய குரலில். 

குரலே எழும்பவில்லை கீதாஞ்சலிக்கு.

“ ம்ம்ச்…ஒண்ணுமில்லை…சும்மா…தான்…”என்றவனின் குரலும் குழைந்து கரகரத்து ஒலித்தது.

அவனது கரங்கள் பின்னாலிருந்து அவளைத்  தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டது.

அவனது உள்ளங்கையின் வெப்பத்தை குனிரையும் மீறி அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

உஷ்ணப் பெருமூச்சுடன் அவளது வளைவில் முத்தமிட . அவனது மீசையின் குறுகுறுப்பில் சிலிர்த்து அடங்கியது அவளுடல். கழுத்து வளைவிலிருந்த பூனை முடிகள் கூட சிலிர்த்தெழுந்து நின்றது. 

அவளை தன்னுடன் இன்னும் இறுக்கிக் கொண்டான். 

அவனது அணைப்பினில் அவளது உடல் நெகிழ்ந்து குழைய ஆரம்பித்தது.

“மிரு…மிரு…என்ன…ஆச்சு?” என்றவள் அவனது அணைப்பில் கண் மூடி நின்றிருந்தாள்.

அவளை மெல்ல தன் புறமாக திருப்பினான்.. இருட்டில் அவளது வரி வடிவம் கூட சரியாக புலப்படவில்லை.

கண்ணாடி தடுப்பை மீறி வந்த மின்னல் வெளிச்சத்தில் அவளது முகத்தை கையில் ஏந்தினாான். 

இருட்டில் அவளது அழகிய வனத்தை காண முடியாமல் போகவே மங்கியிருந்த டார்ச் லைட்டின் வெளிச்சதை அதிகப்படுத்தினான்.

வெளிச்சத்தில் அவளது அழகிய வதனத்தை தலை சரித்து பார்ததான்.

மழை நீர்த்துளிகள் அவளது முகத்தில் முத்து முத்தாக பூத்திருக்க, மோகம் மெது மெதுவாக தலைத்தூக்கியது அவனுள். நீர்த்துளிகளை தனது இதழ் கொண்டு ஒற்றியெடுத்தான் மிருகேன்.

அவனது இதழ் கொடுத்த மயக்கத்தில் கண் மூடி லயித்திருந்தாள் கீதாஞ்சலி. அவனது இதழ்கள் அவளது விழிகள், நாசி, கன்னம் செவி மடல் என்று பயணித்து இறுதியில் இதழருகே சில நொடிகள் தயங்கி நின்றது.

அவளது இதழ்களில் படிந்திருந்த நீர்த்துளிகள் தன்னை அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள் என்று அழைப்பதை போல தோன்றியது.

உதடுகள் நடுங்க நின்றிருந்தவளின் இதழ் தீண்டப்படாமல் இருக்கவே மெல்ல விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள்.

அவள் அதுவரை கண்டிராத காதலும் மோகமும் அவனது விழிகளில் கொட்டிக் கிடந்தது.

மனம் லேசாக துணுக்குற்றாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் தனது கரங்களை மாலையாக அவனது கழுத்தைச் சுற்றி போட்டு வளைத்துக் கொணடவள், “எல்லா இடத்துலயும் கிஸ பண்ணுனீங்களே அந்த உதடு மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு? என்ன பயமா இருக்கா?”என்றாள் அவனை நேராக பார்த்தபடியே .

அவளை தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டவன், “பயமெல்லாம் இல்ல…அப்பறம் உனக்குத்தான் ரொம்ப கஷ்டம்…” என்றபடி பெருவிரலால் அவளது செய்பவள உதடுகளை ஆசையாக பார்த்துக் கொண்டே வருடினான்.

ஏதோ தோன்ற சட்டென்று விலகிச் செல்ல முற்பட்டவனின் சட்டைக் காலரை இறுகப் பற்றியவள் கள்வெறி கொண்டு நிற்கும் அவனது காந்த விழிகளை ஆழ்த்துப் பார்த்தாள்.

“என்ன வேணும் மிருகேன்.? எதுக்கு இவ்வளவு தயக்கம்? நான் மொத்தமா உங்களுக்குத் தானே? எதுக்காக தள்ளித் தள்ளிப் போறீங்க?”என்றாள் அலைப்புறும் விழிகளோடு.

அவளது ஈரக்கூந்தலிலிருந்த கிளிப் பை எடுத்து விட்டு தலைமுடியை குடையாக விரித்துவிட்டவன், “ இல்ல கீது…ரெண்டு நாள்ல ட்ரெனிங்குக்கு கிளம்புற.. இதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாம்…நீ உன்னோட கேரியரை முதல்ல பாரு…அதுக்கப்புறம் மத்த விஷயங்களை பாத்துக்கலாம்..” என்றவனை தீயென முறைத்தவள் பின்னர் ஒரு அலட்சிய பார்வையோடு,  “சரி மிரு…உங்க வழிக்கே நான் வர்றேன்…இந்த விஷயத்தை யெல்லாம்  கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு‌ சின்ன டெஸ்ட். அதுல நீங்க ஜெயிச்சிட்டா உங்க டீசலுக்கு நான் ஒத்துக்குறேன். ஆனா நீங்க தோத்துப் போயிட்டா…நான் என்னென்ன சொல்றேனோ அதெல்லாம் நீங்க பண்ணனும் . “ என்றாள் ஒரு‌ மாதிரியான குரலில்.

“கீது….” என்றவனை இடைமறித்து ,  “டீலா இல்லையான்னு தான் கேட்டேன்..” என்றாள் அழுத்தமாக .

“அதில்ல..” என்று ஆரம்பித்தவனை, “அப்ப உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே?” என்றாள் சின்னச் சிரிப்புடன் .

“ஓகே டீல்..”என்று கூறியவன் ஈரமாகயிருந்த தனது சட்டையை கழற்றிக் கொண்டே ஹாலிற்கு வந்தான் .

வெற்று மார்புடன் அணிந்து கொள்ள வேறு சட்டையை டார்ச்சின் வெளிச்சத்தில் தேடிக் கொண்டிருந்தவனின் முன்னால் சட்டையை நீட்டினாள் கீதாஞ்சலி.

அதனை அவளிடமிருந்து வாங்க முற்பட்டவனை ஏமாற்றி விட்டு சட்டையை தனக்குப் பின்னால் ஒளிந்து வைத்தாள்.

“கீது சட்டையை குடு…ரொம்ப குளிருது. நீயும் போய் ட்ரெஸை மாத்திக்கோ.” என்றவன் அவளது கையிலிருந்து சட்டையை பறிக்க முயன்றான்.

அவளோ அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

மேல் சட்டையின்றி நின்றிருந்தவனுக்கு குளிர ஆரம்பித்தது.

அவளிடமிருந்து மேல் சட்டையை வாங்க முயன்று வேகமாக அவளது கரங்களை பற்றிக் கொண்டு அருகிலிருந்த சோஃபாவில் அவளுடன் சரிந்தான் மிருகேன்‌.

அவன் மீது அவள் விழுந்திருக்க அவளது கரமோ சட்டையை தூக்கிப் பிடித்திருந்தது.

பெண்ணவளின் நெருக்கம் அவனைத் தடுமாற வைத்தது.

“மிரு…கன்ட்ரோல் டா…”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது திண்ணிய மார்பில் ஏதோ ஊறுவது போலிருக்க நிமிர்ந்து பார்த்தான்.

கீதாஞ்சலி தான் ஒற்றை விரலால் அவனது வெற்று மார்பில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“இப்ப நான் என்ன பண்ணுனாலும் நீங்க ரியாக்ட் பண்ணக்கூடாது. அது தான் போட்டியே…” என்றவளின் கரங்கள் அவனது மார்பில் விளையாடியது.

நிமிடத்திற்கு நிமிடம் அவனை சோதித்துக் கொண்டிருந்தாள் பெண்ணரசி.

அவனோ கிளர்ந்தெழும் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர விழிகளை மூட முயன்றான்.

அவன் மீது நன்றாகவே சாய்ந்து கொண்டு செவி மடல் அருகே, “டோண்ட் க்ளோஸ் யுவர் ஐஸ் மிரு…லுக் அட் மீ…”என்றாள் கிளர்ச்சியான குரலில்.

அவளது மெல்லிய உதடுகள் அவனது செவி மடலை உரசி மோகத்தீயை பற்ற வைத்தது.

அவளது விரல்கள் ஒரு புறம் இதழ்கள் மறுபுறம் மாயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க மெல்லிய வெளிச்சத்தில் ஈர உடையினூடே தெரிந்த அவளது பெண்மையின் அழகு அவனை மொத்தமாகவே சாய்த்து விட்டது.

இறுதியில் அவளது வெண்டை விரல்கள் அவனது மீசையை பிடித்திழுத்து முரட்டு இதழ்களை அழுத்தி பிடிக்க , அதற்கு மேல் அவனால் தாள முடியாது அவளை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தான்.

தன்னை மோகத்தோடு பார்க்கும் அவனது புதிய பார்வை ஆழப் பதிந்து தான் போனது அவளது மனதில்.

அவளது ஈர உதடுகள் அவனை வாவென்றழைக்க, நொடியும் தாமதியாமல் அவளது இதழ்களை கவ்விக் கொண்டான்.

இதழ்களின் சுவை மேலும் அவனை பித்துக் கொள்ள வைக்க, கன்னம் , செவி மடல், முன் நெற்றி என் காணும் இடங்களிலெல்லாம் முத்த மழையை பொழிந்தான்.

அவளது மனமும் கூட அவனது இந்த அதிரடியை தான் அவள் வேண்டி நின்றது.

அவேசமாக தன்னை அவனுள் சுருட்டிக் கொள்ளும் மிருகேனை அவள் மிகவும் ரசித்தாள். 

காதல் ஒரு புறம் மோகம் ஒரு புறம் இருவரையும் ஆட்டிப்படைக்க ஈர உடைகள் மூலைக்கொன்றாக சிதறித்தான் போனது. 

இருவரின் தேகச்சூடு மழைக்கு இதமாக இருக்க அவளது முகத்தை இரு கரங்களால் தாங்கியவன்,” உன் கிட்ட தோத்து போயிட்டேன்…டி. முழுசா வேணும்…எடுத்துக்கவா?”என்றான் கிறக்கமாக.

அவனையும் தன்னையும் சுட்டிக் காட்டியவள், “இந்த நிலைமையில் வேணாம்னு சொன்னா உங்களுக்கு ஓகேவா?” என்றாள்.

“ சத்தியமா முடியாது….” என்றவன் முழு வேகத்துடன் அவளுள் மூழ்கி முத்தெடுக்க தயாரானான்.

சோஃபாவில் இடப்பற்றாக்குறை ஏற்பட அவளைக் கையில் அள்ளிக் கொண்டவன் , முத்தமிட்டுக் கொண்டே உள்ளறைக்குச் சென்று காலால் கதவை அடித்துச் சாற்றினான்.

வெளியே மழை வேகமெடுக்க, அறையினுள்ளே மோக மழையை பொழியும் ஆடவனின் வேகம் தாள முடியாமல் விழிகளை மூடிக் கொண்டாள் கீதாஞ்சலி.

அவன் அணிவித்த பொன் தாலி மட்டுமே அவளிடம். அதுவே அவனுக்கான முழு உரிமையை எடுத்துக் கொள்ளச் சொல்லி உந்தித் தள்ளியது.

கரங்களும் இதழ்களும் கட்டுப்பாடின்றி அவள் மேனியில் வலம் வர , மெல்லிய சிணுங்கலும் முனகலும் மட்டுமே இருட்டில் மெல்லிசையாக ஒலித்தது.

தேடலும் ஆராய்ச்சியும் ஏராளாம் அவனிடம். இரவு முழுவதும் காதல் பாடங்களை அவளுக்கு ஐயமின்றி கற்றுக் கொடுத்தான் மிருகேன். அவளும் ஆர்வத்துடன் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டாள்.

ஆண்மையின் இலக்கணமாக தன்னில்  கலந்தவனை தன்னுள்ளே வைத்துக் கொள்ள பேராவல் கொண்டாள் பெண்ணவள். 

அவளது உயிர் தொட்டு ஊன் வரை ஊடுருவியவன் கண்கள் சிவந்து, கேசம் கலைந்து மங்கலான வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்தான்.

அவனது இதழில் அழுந்த முத்தமிட்டவள் தலை சரித்து மந்தகாச புன்னகை சிந்தினாள்.

அவனது முகத்தை கையில் ஏந்தியவள், “லவ் யூ சோ மச்…மிரு…லவ் யூ…உங்க லவ் முழுசும் எனக்கு மட்டுந்தான் .‌என்னை மீறி யார் கிட்டயும் உங்க லவ் ஷேர் ஆகக்கூடாது. என்ன புரிஞ்சுதா?” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் அவனது அழகிய வதனத்தை தனது மார்போடு அணைத்துக் கொண்டாள்.

களைப்பு மிகுதியில் மிருகேன் அப்படியே உறங்கி விட்டான். அவனது இறுகிய அணைப்பில் அவளும் உறங்கிவிட்டாள்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top