மறுநாள் காலை அழகாக விடிந்தது.
முந்தைய நாள் இரவின் மிச்சம் தூவானமாக வானம் மெல்லிய மழைத் தூறலை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.
பூக்களின் இதழ்களிலிருந்தும் இலைகளிலிருந்தும் நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தது.
மிருகேனின் வெற்று மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த கீதாஞ்சலிக்கு விழிப்பு வந்துவிட, மெல்லத் தலையை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
அவனது நாசியிலிருந்து சீராக சுவாசம் வந்து கொண்டிருந்தது
பூனை போல மெதுவாக எம்பி அவனிதழில் முத்தமிட்டு எழுந்தாள். ஒற்றைப் போர்வை மட்டுமே இருவருக்கும் ஆடையாக மாறியிருக்க சுற்றிலும் பார்வையை சுழல் விட்டாள்.
டார்ச் லைட்டின் வெளிச்சம் ஓயந்து போயிருந்தது.
மூலைக்கொன்றாக சிதறியிருந்த ஈர உடைகள் , இரவில் நடந்த காதல் போரின் சாட்சியமாகஆங்காங்கே சிதறியிருந்த பொருட்கள் சொல்லாமல் சொல்லியது இருவரது மோகத்தின் அளவை.
முந்தைய நாள் இரவில் மிருகேன் எடுத்து வந்திருந்த மாற்று சட்டை மட்டுமே கைக்கெட்டும் தூரத்தில் இருக்க ,அதை கை நீட்டி எடுத்தவள் அதை நுகர்ந்துப் பார்த்தாள்.
அதில் தன்னவனின் வாசமே நிறைந்திருக்க மூச்சினை உள்ளிழுத்து அதனை சுவாசப்பையில் நிரப்பிக் கொண்டாள்.
இரவில் அவன் நடத்திய கட்டில் பாடங்கள் நினைவுக்கு வந்து அவளது முகத்தை செம்மையுறச் செய்தது.
சின்னச் சிரிப்புடன் அவனது சட்டையை அணிந்து கொண்டவள் கட்டிலிலிருந்து இறங்கி குளியலறைக்குள் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்தாள்.
இன்னுமே மிருகேன் எழுந்திருந்திருக்கவில்லை.
‘கொட்டை வடிநீரை தயாரித்து போட்டு எடுத்து வரலாம்…’ என்று நினைத்தவள் சமையலறைக்குள் சென்று தனக்கு மட்டும் கொட்டை வடிநீரை தயாரித்து கோப்பையில் ஊற்றி எடுத்து வந்தாள்.
அங்கிருந்த கண்ணாடி சன்னலருகே நின்றாள்.
இதமான மழைத் தூறலோடு காலைவேளையை ரசித்துக் கொண்டே கொட்டை வடிநீரை அருந்தினாள்.
தீரைச்சீலையை விலக்கியதில் வந்த மெல்லிய வெளிச்சத்தில் கண்களை திறந்த மிருகேன், சன்னலருகே புத்தம் புதிய ஓவியமாக நின்றிருந்த கீதாஞ்சலியைப் பார்த்தான்.
அவனது கருப்பு நிற சட்டை அவளது தொடை வரை மட்டுமே இருந்தது.
வாழைத் தண்டை ஒத்த கால்கள் அத்தனை கவர்ச்சிகரமாக இருந்தது.
ஒற்றைக் கையை தலைக்கு வைத்துக் கொண்டு அவளை பார்த்திருந்தான்.. அவனது பார்வை அவளது வெண்ணிற பாதங்கள் தொடங்கி மெல்ல மேலேறி அவளை அளந்தது.
அவள் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தால் பசி தாகம் எதுவும் தோன்றாது என்று தோன்றியது.
சில கணங்கள் அவளது அழகை விழிகளால் அள்ளிப் பருகியவன் “கீது…”என்றழைத்தான்.
அவனது குரல் கேட்டதும் தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள்.
கோப்பையை காட்டி, “ காஃபி சாப்பிடுறீங்களா?” என்றாள்.
அவனோ “ம்ம்…ஆனா எனக்கு அந்த காஃபி தான் வேணும்….அதுக்கு முன்னாடி என்னோட ஷேர்ட்டை கழட்டி குடு..”என்றான்.
“நீங்க முதல்ல எழுந்து வாங்க….” என்றாள் நக்கலாக.
“ ஹலோ..மேடம்… என்னோட சட்டையை நீங்க தான் போட்ருக்கீங்க..அதை குடுங்க . எனக்கு அந்த சட்டை தான் வேணும்..”என்றான் விடாப்பிடியாக.
கோப்பையை மேசை மீது வைத்தவள், “உங்களுக்கு வேணும்னா நீங்க தான் எழுந்து வந்து வாங்கிக்கணும்…” என்றவள் சன்னலின் திண்டில் ஏறி அமர்ந்தாள்.
அவனிருக்கும் நிலையில் நிச்சயமாக எழுந்து வர மாட்டான் என்ற தைரியத்தில் அலட்சியமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு மையலாக அவனை பார்த்தாள்.
அவளது எண்ணம் அவனுக்கு புரிந்தது. கட்டிலை சுற்றி பார்வையை சுழல விட்டவன், “ குட்…எனக்குத் தேவையானதை நானே வந்து எடுத்துக்குறேன்….உனக்கே கூச்சமில்லாத போது எனக்கு எதுக்கு கூச்சம்” என்றவன் போர்வையை விலக்கி விட்டு எழுந்தான்.
“அய்யோ…! வேணாம்…”என்று அலறியவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“நீதானே வந்து எடுத்துக்கங்க சொன்ன…அதான்…நானே…வந்துட்டேன். கண்ணைத் திறந்துப் பாரு…டி”
“ம்மகூம்…முடியாது…. இப்படியெல்லாம் வந்து பயமுறுத்தாதீங்க.…கூச்சமா இருக்கு…உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமா இல்லையா? ப்ளீஸ்…! டவலையாவது கட்டிக்கோங்க…”
“ ஹலோ…! நைட் ஒண்ணும் அப்படி கூச்சப்பட்ட மாதிரி தெரியலையே…. பரவாயில்லை கண்ணைத் திறந்து பாரு “என்று கூறி அவளது கரங்களை பிடித்து தன்னுடைய மார்பில் வைத்தாள்.
அவள் செவி மடல் அருகே குனிந்து ஏதோ கூற ,பட்டென்று விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள்.
இடையில் பூந்துவாலையோடு தான் நின்றிருந்தான்.
“ யூ சீட்…”என்று அவனது மார்பில் செல்லமாக அடித்தவள், “ ரொம்பவே தப்புத் தப்பா பேசுறீங்க மிருகேன்.”என்றாள் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டே.
அவளை இடையோடு தூக்கிக் கொண்டவன் , “இப்படியெல்லாம் நீ பக்கத்துல வந்து டெம்ப்ட் பண்ணினா எல்லாம் தப்பு தப்பா தான் பேசத் தோணும்…தப்பு பண்ணவும் தோணும்…” என்றவன் , “ நீ சென்னா மாதிரி நான் எழுந்து வந்துட்டேன்…என்னோட ஷேர்ட்டை நானே எடுத்துக்கிறேன்…”என்றவன் அவள் மறுக்க மறுக்க இதழை முற்றுகையிட்டுப் கொண்டே சன்னல் திரைச்சீலை மூடினான்.
அவளை தனது இடையோடு தூக்கிக் கொண்டவன் இதழ்களை முற்றுகையிட்டுப் கொண்டே அவளது மேனியிலிருந்த அவனது ஆடைக்கு விடுதலை கொடுத்தான்.
அவனது கருப்புநிற சட்டை நிராதரவாக தரையில் விழ , அதன் மீது அவன் அணிந்திருந்த பூந்துவாலையும் விழுந்தது.
அவளை தூக்கிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தவனுக்கு அவள் மீது காதலும் மோகமும் பல்கி பெருகியது.
விழிகளை மூடி அவனது ஆலிங்கனத்தை ரசித்தவள் மொத்தமாக அவனுள் கரைந்து காணாமல் போனாள்.
உச்சி முதல் பாதம் வரை முத்தங்களால் ஊர்வலம் நடத்தினான். தன்னை நொடிக்கு நொடி கொண்டாடித் தீர்க்கும் அவனது காதலைக் கண்டு கர்வம் வந்தது கீதாஞ்சலிக்கு.
அவளின் மென்பாதங்களை முத்தமிட்டு கொண்டிருந்தவனை தன்னுடைய அழகிலும் காதலிலும் கட்டுண்டு கிடப்பான் . தன்னைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டான் என்று ஆணித்தரமாக நம்பினாள்.
எவ்விதத்திலும் தன்னை காயப்படுத்தி விட மாட்டான் என்ற அலட்சியமும் சற்று திமிரும் அவளுள் நுழைந்தது.
அவளது பாதங்களை முத்தமிட்டு கொண்டிருந்தவனின் முகத்தை தனது மென்பாதங்களால் நிமிர்த்தியவள், “லவ் யூ சொல்ல மாட்டீங்களா மிருகேன்.?* என்றாள்.
அவளது பாதங்களை தன்புறமாக பிடித்திழுத்தவன், “இதுக்கு மேலேயும் என்னோட லவ்வை உனக்கும் ஃப்ரூவ் பண்ணனுமா கீது?” என்றான் அவளது மேனியில் கரங்களை படர் விட்டபடி .
அவனது கரங்களும் இதழ்களும் செய்த சில்மிஷங்களில் “ஸ்ஸ்..ஆஆ…* என்று முனகியவள் அவனது முகத்தை தன் புறமாக திருப்பி, “ ம்ம்கூம். எனக்கு உங்க வாய்ல இருந்து அந்த வார்த்தையை கேக்கணும் போல இருக்கு.ம்ம்..சொல்லுங்க….” என்றாள் அவனது விழிகளை ஆழ்ந்து பார்த்தபடியே.
” ஐ லவ் யூ….இந்த மூணு வார்த்தையில் பெருசா எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா என்னோட மொத்த காதலும் நீ மட்டுந்தான். தேன் தடவுன மாதிரி வார்த்தைகளை என்னால ரொமான்டிக்கா பேச தெரியாது. ஆனா உன்னோட இருக்குற ஒவ்வொரு நிமிஷத்துலயும் என்னோட காதலை உணர வைக்க முடியும். அதுக்கு நீ முதல்ல என்னை சரியா புரிஞ்சிக்கணும் . “ என்றவன் அதற்கு மேல் அவளை பேச விடாமல் அவளோடு தரையில் சரிந்தான்.
இருவரும் ஒருவரோடு ஒருவர் ஒட்டி உரசிக் கொண்டே காலை சமையலை முடித்தனர்.
உணவு மேசையில் அமர்ந்து கொண்டு இருவரும் உண்டு கொண்டிருந்தனர்.
கீதாஞ்சலி கங்கு திடீரென புரையேறி இருமல் வந்து விட, “மி..மிரு..தண்..தண்ணி எடு…எடுங்க..” என்று கூறி இருமினாள்
தண்ணீர் குடித்தும் பயனில்லாமல் போகவே , இருக்கையில் இருந்து எழுந்தவன் அவள் முகத்தருகே குனிந்து , “ இருமலை இப்ப நிறுத்தவா?” என்றவனை புரியாமல் பார்த்தாள்.
“என்ன அப்படி பாக்குற?” என்றவன் அவளது முகத்தை கையில் தாங்கி அவளிழதள்களை சிறையிட்டான்.
மெல்ல மெல்ல அவளது இருமல் அடங்கியது.
அவள் பயிற்சிக்கு கிளம்புவதற்கு முன்பு இருநாட்களும் அவளுடன் ஈருடல் ஒருருயிராக கலந்து தனது அடையாளத்தை அவளது ஒவ்வொரு அங்கத்திலும் பதிய வைத்தான்.
அவள் பயிற்சி மையத்திற்கு கிளம்புவதற்கு தயாராகி நின்றிருந்தாள்.
மிருகேனுடைய அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள் கீதாஞ்சலி.
அந்த புகழ்பெற்ற மருத்துவமனை வளாகத்தில் அவசர பிரிவிற்கு வெளியே நின்றிருந்தான் மிருகேந்திரன்..
கண்ணாடித் தடுப்பின் வழியாகப் பார்த்தான்.
மருத்துவ உபகரணங்களுக்கு நடுவே கட்டிலில் கண்மூடி படுத்திருந்தார் வஜ்ரவேல்.
வஜ்ரவேலின் ஆட்கள் பதட்டத்துடன் மிருகேனைப் பார்த்து நின்றிருந்தனர்.
பல்வேறு யோசனைளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன் அவர்களைப் பார்த்து, “சரக்கை எல்லாம் எடுத்து வச்சிடுங்க. நாளைக்கு கப்பல்ல… நானே பத்திரமா கொண்டு போறேன். என் கூட விஷயம் தெரிஞ்ச ரெண்டு பேர் மட்டும் வந்தா போதும்…போலீஸ் கெடுபிடி எப்படியிருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க. ஜாக்கிரதையா கை மாத்தி விடணும்”என்றான்.
வஜ்ரவேலின் அடியாள் ஒருவர், “ தம்பி உங்களுக்கு இதுலயெல்லாம் அனுபவம் பெருசா இல்லை. அவ்வளவு ஏன் வஜ்ரவேல் அய்யா என்ன பண்ணிட்டு இருந்தார்? எப்படி சாமர்த்தியமாக சரக்கை கை மாத்தி விடுவாருன்னு கூட உங்களுக்கு தெரியாது. தெரியாத விஷயத்துல கால வச்சு வஜ்ரவேல் அய்யாவோட சாம்ராஜ்யத்தை அழிச்சிடாதீங்க…இதை நான் பொறாமையிலயோ….இல்ல எனக்குத் தான் எல்லா விஷயமும் தொரியும்ங்கற திமிர்ல சொல்லல…உங்களுக்கு இந்த வாழ்க்கை வேணாம்னு தான் வஜ்ரவேல் அய்யா அவரோட கஷ்டத்தையெல்லாம் உங்க கிட்ட சொல்லாம இருந்தாரு…வேணாம் தம்பி உங்களுக்கு இந்த இருண்ட வாழ்க்கை. நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். உங்களுக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கோங்க. இந்த சரக்கையெல்லாம் வேற யாரையாவது வச்சு கை மாத்தி விட்டுக்கலாம்….” என்றார் பல வருடங்களாக வஜ்ரவேலிடம் பணிபுரியும் வயதில் பெரியவராக அம்மனிதர்.
சின்னச் சிரிப்புடன் அவரருகே வந்து நின்றவன் அவரது கரங்களை பிடித்துக் கொண்டு, “ எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதலே நீங்க வஜ்ரவேல் அய்யாவோட இருந்திருக்கீங்க..ஏன் அதுக்கு முன்னாடில இருந்து கூட அவர் கூட இருந்திருக்கலாம். நான் உங்க கிட்ட ஒரேயொரு விஷயம் கேக்குறேன். வஜ்ரவேல் அய்யா இந்த தொழிலுக்கு வரும் போது அவருக்கு என்னத் தெரியும்? எப்படி எல்லாத்தையும் கத்துக்கிட்டாரு?” என்றான்.
அப்பெரியவர் அவனை நிமிர்ந்து கேள்வியாக பார்த்தார்.
“அய்யா எனக்கு உங்க மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி . கவலைப்படாதீங்க எனக்கு எதுவும் ஆகாது. வஜ்ரவேல் அய்யா நல்ல குணமாகி வரணும் அது தான் எனக்கு இப்ப முக்கியம். வஜ்ரவேல் அய்யா கஷ்டப்பட்டு கட்டின இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை அவ்வளவு சீக்கிரம் சரிஞ்சு போக விட மாட்டேன். இது நான் அவருக்கு பண்ணுற நன்றிக்கடன் இல்ல. என்னோட கடமை. தயவு செஞ்சு என்னைய தடுக்காதீங்க. நான் சரக்கை ஜாக்கிரதையா கை மாத்தி விட்டுடு வேன். என்னை நம்புங்க..” என்று கூறினான்.
மிருகேனிடம் பேசி எந்த பலனும் இல்லை என்று உணர்ந்த அப்பெரியவர் பதிலேதும் கூறாமல் அமைதியாக சென்று அமர்ந்து விட்டார்.
தலைமை மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவின் கதவைத் திறந்து கொண்டு வர, அவரிடம் வஜ்ரவேலின் உடல்நிலை பற்றி விவாதிக்க ஆரம்பித்தான் மிருகேன்.
இங்கோ மிருகேனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் அவன் மீது கடுங்கோபத்துடன் பயிற்சி மையத்திற்கு கிளம்பிச் சென்றாள் கீதாஞ்சலி.