அத்தியாயம் -22

 

வஜ்ரவேலிடம் கூட தான்  திருமணம் செய்து கொள்ளப் போவதை மிருகேன் தெரிவித்திருக்கவில்லை. 

ஒரு வருடம் கழித்து ருத்ரனிடம் முறைப்படி பேசி  ஊரறிய திருமணம் செய்து கொள்ளும் போது வஜ்ரவேலிடம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

மிருகேனுடய நெருங்கிய நண்பர்கள் ஒரிருவரும் கீதாஞ்சலியின் கல்லூரித் தோழிகள் இருவர் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தனர்.

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தவனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் கீதாஞ்சலி.

நண்பனிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டே முன்னுச்சியில் வந்து விழுந்த அடங்காத முடிக்கற்றையை  ஸ்டைலாக கோதி விட்டுக் கொண்டவனை அப்பொழுதே அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளது கரங்கள் பரபரத்தது. 

இருக்கும் இடம் கருதி முயன்று‌ தனது மன உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“ கீது…உள்ள வா சாமி கும்பிட்டுட்டு கிளம்பலாம்.” என்றான் மிருகேன்.

“ம்ம்ச்…எனக்குப் பெருசா நம்பிக்கை இல்லை மிரு…நீங்க போய் கும்பிட்டுட்டு வாங்க. நான் இங்கேயே நிக்குறேன்..” என்றாள்.

“ ம்ம்ச்…கீது …இதென்ன பழக்கம்? அய்யராத்து பொண்ணா இருந்துட்டு சாமி கும்பிடறதுக்கு நம்பிக்கை இல்லைன் னு சொல்லிட்டு இருக்க…ஜஸ்ட் மாலை மாத்திட்டு தீபாராதனையை பாத்துட்டு வந்துடலாம்…வா…” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருந்த இறைவனை மிருகேந்திரன் மனமுருக வேண்டிக் கொண்டிருந்தான். 

கீதாஞ்சலி வழக்கம் போல அருகிலிருந்த கற் சுவற்றில் எழுதியிருந்த கல்வெட்டை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டாள்..

அய்யர் இறைவனுக்கு சாற்றிய மலர் மாலையை இருவரிடமும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னார். இருவரும் மாலையை மாற்றிக் கொண்டு ஜோடியாக வெளியே வந்தனர்.

அவனுடன் இணைந்து நடந்து கொண்டே, “மேரேஜை ரிஜிஸ்டர் மட்டும் பண்ணிக்கலாம்…” என்றாள் கீதாஞ்சலி.

“ ரிஜிஸ்டரார் இந்த வாரம் ஊர்ல இல்லையாம். அதனால அடுத்த வாரத்துல ஒரு நாள் போய் மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துடலாம்…”

“ சரி அப்ப வீட்டுக்கு கிளம்பலாமா?”

“ ம்ம்..” என்றவன் மிதமான அலங்காரத்த்தில் அழகு பெட்டகமாக நின்றிருந்தவளை ஒரு கணம் ஊன்றிப் பார்த்தான்.

“ என்ன அப்படி பாக்குறீங்க?”என்றாள்.

“இல்ல என்ன திடீர்னு மரியாதை?” என்றான் பதிலுக்கு.

பக்கென்று சிரித்தவள், “தெரியலை..ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு. நீ…ம்ம்கூம்…நீங்க ஏதாவது சேட்டை பண்ணினா…மரியாதையெல்லாம் ஏரோப்ளேன் ஏறி போயிடும்…ஜாக்கிரதை..!” என்று செல்லமாக மிரட்டினாள்.

தனது காரை எடுத்து வந்து அவள் முன்பு நிறுத்தி விட்டு முன் கதவை திறந்து விட்டான்.

தனக்கென்று பார்த்துப் பார்த்து செய்யும் ஆடவனுக்கு என்றுமே தான் ஒரு ராஜகுமாரியாக இருக்கவே விரும்பினாள்.

அவன் அவளுக்காக கதவைத் திறந்து விட்டதைக் கண்டு இன்னும் கொஞ்சம் கர்வமாகி தான் போனது கீதாஞ்சலிக்கு..

நெஞ்சம் காதலில் விம்மியது . 

ஒய்யாரமாக புடவையை சற்று கணுக்காலுக்கு மேலே தூக்கி காரினுள்ளே அமர்ந்தாள்.

 உயர் தர உணவகத்தில் உணவை முடித்துக் கொண்டு சற்று தொலை தூர பயணம் செய்தனர்.  

மாலை மங்கும் நேரத்தில் கீதாஞ்சலி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர் மிருகேனும் கீதாஞ்சலியும்.

முதலில் மிருகேன் உள்ளே நுழைய, அவனை பின் தொடர்ந்து வந்தவள் கதவை தாழ் போட்டு அதன் மீதே சாய்ந்து நின்றாள்.

சோஃபாவில் அமர்ந்தவன் அவள் கதவில் சாய்ந்து நிற்பதைக் கண்டு புருவத்தை உயர்த்தினான்.

சின்னச் சிரிப்புடன் இரு கை நீட்டி அழைத்தாள் அவனை.

அவளது செய்கையை பார்த்து கொண்டே சோஃபாவிலிருந்து கையூன்றி எழுந்தவன் மெதுவாக அவளருகே சென்று நின்றான்.

உடனேயே அவளை அணைத்துக் கொள்ளாமல் ஒற்றைக் கையை கதவில் வைத்து அவளை நெருங்கி நின்றான். 

கீதாஞ்சலியின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. நீட்டிய கரங்களை கீழிறக்கிக் கொள்ள முயல அதனை இறுகப் பிடித்துக் கொண்டே   ஒற்றை விரலால் அவளது அழகிய மதி வதனத்தை வருடினான்.

“ என்ன கீது… வரவேற்பெல்லாம் பலமா இருக்கு? என்ன விஷயம்?”என்றான் ஒரு மாதிரியாக.

முகத்தில் இருந்து கீழிறங்கிய அவனது விரலைப் பிடித்துக் கொண்டவள், “ அது…எதுக்குன்னு உங்களுக்கே தெரியும் மிஸ்டர் ஹஸ்பண்ட்…”என்றவளின் விரல்கள் ஆடவனின் விரலோடு விளையாடியது.

“சரிங்க பொண்டாட்டி…உனக்கு இப்ப என்ன  வேணும்…” என்றான் அவளது நெற்றியை முட்டி.

“எல்லாமே தான் வேணும்…கிடைக்குமா?” என்றாள் ஒற்றைக் கண்ணடித்து.

“செம்ம ஃபார்ம்ல இருக்க போலவே…”.என்றவன் பேசிக் கொண்டே அவளது இடையைப் பிடித்திழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“ ம்ம்…எப்பவும் என்னை மட்டும் தான் நீங்க நினைச்சுகிட்டு இருக்கணும் மிஸ்டர் ஹஸ்பண்ட். நான் உங்களை பார்க்கணும்னு நினைக்கறப்ப எல்லாம் எங்கயிருந்தாலும் ஓடோடி வந்துடணும்…என்ன புரியுதா உங்களுக்கு? “ என்றாள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டே…

தோளை அணைத்துக் கொண்டிருந்த அவனது கரங்கள் மெல்ல இறங்கி அவளது வெண்ணிற இடையை ஆசையுடன் வருடியது.

வெண்ணையில் குழைத்தெடுத்தது போல அத்தனை மென்மை அவளது இடை. 

ஆடவனின் கரங்கள் அவளது மெல்லிடை மீது மோகம் கொண்டு பித்தானது.

பெண்ணவள் மனம் அவனது ஒற்றை தொடுகையில் மெழுகாக கரைந்தது. விழிகள் தாமாகவே மூடிக் கொண்டது.

ஆடவனின் கரங்கள் அவளது இடையிலேயே குடி கொண்டு வருடலைத் தொடர்ந்தது.

“ மிரு..மிரு…” என்று கண் மூடி காதலில் பிதற்றினாள் பெண்ணவள். 

தன்னவனின் தொடுகை தேகமெங்கும் தீயைப் பற்ற வைக்கத் தொடங்கியது.

“ ம்ம்…சொல்லு டா..” என்றவன் அவளது உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டேன்.

“ஐ லவ் யூ….லவ் யூ சோ மச்… நீங்க இப்படியே தான் என் கிட்ட இருக்கணும்…ஐ யம் ஹேப்பி….லவ் யூ சோ மச்…” என்றவள் மெல்ல நிமிர்ந்து அவனது முகத்தை தாங்கி இதழில் மென்மையான முத்தம் பதித்தாள்.

“ லவ் யூ கீது…” என்றவன் அதற்கு மேல் அவளைத் தவிக்க விடாமல் இடையோடு அவளை தன் உயரத்திற்கு தூக்கியவன் அவளது இதழ்களை அழுத்தமாக சிறைப்பிடித்தான். 

முரட்டு இதழ்களின் மாயத்தையும் வேகத்தையும் அவளின் மென் இதழ்கள் வேண்டி நின்றனவோ…? என்னவோ? 

ஆண் சிங்கத்திற்கு இணையாக பெண் மானும் முத்தப் போட்டி நடத்தியது.

வன்மையும் மென்மையும் மாறி நிகழ்ந்ததில் பெண்ணவள் புடவை முந்தானை தோளிலிருந்து இறங்கி தரையை தொட்டிருந்தது.

ஆடவனின் கைகள்  எதிர்த்தமாக அவளது பெண்மையின் மென்மையை உணர , ஆயிரம் மின்சாரங்கள் உள்ளே பாய்ந்து அவனை நிலைகுலைய வைத்தது.  

ஆடவனின் கைகளோ அவனது மென்மையை உணர்ந்து கொள்ள துடித்து கரங்களை உயர்த்த, மனமோ விலகி விட கட்டளையிட்டது. 

ஆடவனின் நிலையே இப்படியென்றால் அவன் மீது பித்தாகி மயங்கி கிறங்கி நின்றவளின் நிலையை கேட்கவே வேண்டாம். 

ஆடை நெகிழ்ந்ததை கூட உணர முடியாத நிலையில் உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்திருந்தாள் கீதாஞ்சலி.

இருவரின் தேகமும் நெருங்கி பிணைந்து புதிய அத்தியாயத்தை எழுத தயார் நிலையில் இருக்க, ஆடவனின் மனம் சற்று நிதானித்து அவளிடமிருந்து விலகி நிற்க வைத்தது.

அவளது கூந்தல் கலைந்து அவனிட்ட குங்குமம் நெற்றி வியர்வையில் சற்றே கரைந்து  இருந்தது. 

கண்மூடி நின்றவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை மிருகேனுக்கு. அதே சமயம் அவசரப்பட்டு உடனே அடுத்த கட்டத்திற்கு செல்ல முயலவில்லை அவன்.

அவளை மெல்ல தன்னிடமிருந்து விலக்கி வைத்தவன் அவளது மார்பிலிருந்து விலகி தரையில் கிடந்த புடவை முந்தானையை எடுத்து தோளைப் சுற்றி போர்த்தினான்.

அவளோ விடாமல் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, “ அவ்வளவு நல்லவனா நீ?” என்றாள் அளவில்லா காதலுடன்.

மீண்டும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன் அவளது கூரிய நாசியோடு தனது நாசியை உரசியவன்,.” கண்டிப்பா இல்லம்மா…” என்றான்.

“ அப்ப ஏன்…விலகிட்டீங்க?”

“ இப்ப இதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நாளாகட்டும் கீது…. அதுக்கப்பறம் தெரியும் நான் நல்லவனா ? இல்ல கெட்டவனான்னு …” என்று கூறி விட்டு சமையலறைக்குள் சென்றான்.

அவனின் பின்னோடு வந்தவள்,  “ஹலோ..! மிஸ்டர் ஹஸ்பண்ட்…இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு.  ஃபர்ஸ்ட் நைட் வேற நடக்கணும் .உங்களுக்கு அது நியாபகம் இருக்கா?” என்றாள் சற்றே கோபமாக.

அவளது  தோளைப் பிடித்துக் கொண்டே உள்ளறைக்குச் சென்று விட்டவன் , “ டூ மினிட்ஸ். போ…போய் ட்ரெஸ் மாத்திட்டு வா…டின்னர் ஏதாவது ரெடி பண்ணிடுறேன்..” என்று பேச்ை மாற்றிவிட்டு  அவளது கன்னத்தில் முத்தமிட்டு  கதவை சாற்றினான்.

அவனது முத்தத்தில் சற்றே முகிழ்ந்திருந்த அவளது கோபம் தணிந்தது. 

சின்னச் சிரிப்புடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.

 கசகசவென்று இருக்கவே குளித்து முடித்து இரவு உடைக்கு மாறி விட்டு, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

அதற்குள் இலகுவான இரவு உணவை தயார் செய்து வைத்திருந்தான் மிருகேன். 

நேரத்தை பார்த்தாள் கீதாஞ்சலி. ஏழு முப்பது தான் ஆகியிருந்தது .

“ மிரு.. இவ்வளவு சீக்கிரம் டின்னர் ரெடி பண்ணிட்டீங்க?”

“ பசிக்குது…கீது…வா.. டிவி பாத்துட்டே சாப்பிடலாம்…” என்றவன் ஒரே தட்டில் இருவருக்குமான இரவு உணவை எடுத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

ஏதேதோ காதல் பாடல்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்க, அவளுடன் பேசி்க் கொண்டே , அவளுக்கு உணவை ஊட்ட , சிரிப்புடன் அதனை வாங்கிக் கொண்டவள் பதிலுக்கு அவனுக்கும் ஊட்டினாள். 

கரங்களால் உணவைப் பறிமாறிக் கொண்டிருந்தவர்களின் இதழ்களும் கூட  இடையிடையே உணவையும் முத்தத்தையும் பறிமாறிக் கொண்டது.

மிருகேனின் மீசையில் ஒட்டியிருந்த உணவுத் துகளை எடுத்து விட்டவள்,  “என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் டின்னர் எடுத்துக்கிட்டீங்க?”என்றாள்.

“ம்ம்…இன்னைக்கு வஜ்ரவேல் அய்யாவுக்கு பிறந்தநாள். கொஞ்சம் சீக்கிரம் போகணும். அய்யா விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்காரு போகாம இருக்க முடியாது டா…நான் கிளம்பணும்…கீது…டைமாச்சு…நாளைக்கு முழுசா உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறேன்…பை…டா.” என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

வாசல் வரை சென்றவனை வழி மறித்து நின்றாள் கீதாஞ்சலி.

“ம்ம்ச்…என்ன கீது…?” என்றான் சிறிது சலிப்புடன்.

“ உனக்கு எப்படின்னு தெரியல மிருகேன். ஆனா என்னை பொறுத்த வரை இன்னைக்கு ஸ்பெஷல் டே. நீ என் கூடவே இருக்கணும்னு ஆசைப்படுறேன் மிரு…ப்ளீஸ்…இன்னைக்கு முழுசா என் கூடவே இரு…எங்கேயும் போகாதே..ப்ளீஸ்…” என அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டாள்.

அவளது கரங்களில் இருந்து தனது கைகளை விடுவித்துக் கொண்டவன் ,  “சாரி கீது….நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வஜ்ரவேல் அய்யாவும் எனக்கு ரொம்ப முக்கியம்…டா…” என்றவன் அவள் ஏதோ பேச வரும் முன் அவள் இதழ்களை தன் இதழ்களால் அடைத்து விட்டு, அவள் சுதாரித்துக் கொள்ளும் முன்பே அவளது கன்னத்தில் லேசாக தட்டி விட்டு வெளியேறினான்.

அவனது இதழ் முத்தம் முதன்முதலாக அவளுக்கு கசந்தது.

“ நா மட்டுந்தான் மிருகேன் உனக்கு முக்கியமான இருக்கணும்…எனக்கு மட்டுந்தான் நீ முக்கியத்துவம் கொடுக்கணும்….” என முணுமுணுத்தவள் அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு முன்னர் பார்த்தேயிராத வஜ்ரவேல் மீது முதன்முதலாக வெறுப்பு வந்தது.  

அவர் மீது முதல் அபிப்ராயமே வெறுப்பை உண்டு பண்ணியிருக்க, பின்னாளில் இதுவே இருவரது பிரிவிற்கு வித்திடப் போவது அறியாமல் தனது கருப்பு நிற ஸ்கார்பியோவை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் மிருகேந்திரன்

 

 

 

 

 

.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top