14-கனவே சேராயோ???

உன்னை உனக்காகவே நேசிக்கிறேன் பெண்ணே, என்னிடம் வந்து சேர்ந்து விடு. உன்னை பொக்கிஷமாக காத்துக் கொள்வேன்.

கனவே சேராயோ???  14

“ஒரே நாளில் எத்தனை ஆச்சரியங்களை தனக்கு கடவுள் கொடுக்க இருக்கிறார்?? தன் தமக்கையின் கணவன் என்று ஒருவனை கனவில் காண்கிறேன். அவனை நிஜத்தில் கண்டு பேசிவிட்டு வருகிறேன். தான் செய்து வைத்த சொதப்பலை கூட கண்டு கொள்ளாமல், தன்னிடம் அவன் நன்றாக பேசுகிறான். இப்பொழுதோ, ஒரு மாதத்திற்கு முன்னால் அவன் கனவில் கண்ட பெண்ணை நேரில் பார்க்கிறான்?? இதை என்னவென்று சொல்வது??

அவன் அப்படி ஸ்டக்காகி போக. தம்பியை  பார்த்துவிட்டு புருவம் இடுக்கியவள். 

“ரெண்டு மட்டன் பிரியாணி. அப்புறம் சிக்கன் ப்ரை. போதும்தானேடா?? இல்ல வேற ஏதாவது வேணுமா”? என்று தன் தம்பியை பார்த்தாள் மானசா. 

அவன் இன்னும் அதே நிலையில் தான் இருந்தான்.  ‘இன்னைக்கு முழுக்க மானத்தை வாங்குறதுன்னு  முடிவெடுத்துட்டான் போல’? என்று மனதிற்குள் நொந்து கொண்டவள். புன்னகையோடு அந்தப் பெண்ணின் புறம் திரும்பி.

  

“இப்போதைக்கு இது போதும். அப்புறம் நான் சொல்றேன்”  என்றாள். 

 “எஸ் மேம்” என்று  கூறிவிட்டு நகர்ந்தவளின்  கையை எக்கிப் பிடிக்கப் போனான் நிர்மல். தம்பியையே அவதானித்துக் கொண்டிருந்தவள், அவன் காலை மிதித்தாள்.

 “அக்கா” என்று அலறியபடி தன் உணர்வுக்கு மீண்டவன்.

 அவள் திரும்பிப் பார்க்க. “அக்கா  அக்கா” என்று தந்தி அடித்தான்.

 “எதுக்குடா என்னை ஏலம் விட்டுட்டிருக்க?? என்ன விஷயம்னு சொல்லி தொலை”? என்றாள் மானசா.

 

“அ.. அக்கா, அந்த பொண்ணு”? என்று வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தினான்  நிர்மல்.  

“நல்லா இருக்கால்ல?? அதுக்காக அநியாயத்துக்கு ஜொள்ளு விடாதடா? அதுவும் அக்காவை பக்கத்துல வச்சுட்டு”? என்ற அவள் சிரித்து வைக்க 

“ஐயோ அக்கா! நான் அதை சொல்லல?  நான் கனவுல கண்ட  பொண்ணு தான் இந்த பொண்ணு” என்றானே பார்க்கலாம்??

 “நீ இன்னைக்கு கண்டிப்பா என்கிட்ட அடி வாங்க போற?? ஆபீஸ்க்கு வந்து என் பாஸை கனவுல பார்த்தேன்னு சொன்ன?? சும்மா பார்த்திருந்தா கூட பரவால்ல? என் கூட கல்யாணம் நடக்கிற மாதிரி பார்த்து தொலைச்சு என் உயிரை வாங்கின?? இப்போ ரெஸ்டாரண்ட்ல இருக்கிற இந்த பொண்ண பார்த்து சொல்ற?? ஐ திங்க் உனக்கு உண்மையிலேயே மரம் கழண்டுடுச்சு” என்று காட்டமாகவே கூறினாள். 

“மதர் ப்ராமிஸ், ச்சே இல்லல்ல.  அக்கா ப்ராமிஸ். நான் கனவில் கண்ட அதே பொண்ணு இவள் தான்” என்று அவன் கண்கள் மிளிரக் கூறினான்.

 அவள் இப்போது  கண்களை அகல விரிக்கும் நிலையானது.

 “என்னடா உளறுற”? என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“அக்கா நான் உளறுல? உண்மையா தான் சொல்றேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி நான் கனவுல பார்த்த பொண்ணு இவள் தான். நம்பலனா என்னோட ரூம்ல என்னோட டைரியில நான் வரைஞ்சு வச்சிருக்கேன் பாரு” என்றான் நிர்மல்.

 “உண்மையா தான் சொல்றியா??  இந்த பொண்ணையா நீ ஒரு மாசத்துக்கு முன்னாடி கனவுல பார்த்த”? 

 “ஆமா இந்த பொண்ணு பின்னாடி  போய் தான் ஐ லவ் யூன்னு சொன்னேன்”  என்று கூறியதும் அவள் வாயில் கையை வைத்துக் கொண்டாள். 

சிறிது நேரத்தில் அவர்களை நெருங்கி  வந்து அமர்ந்தவர்களிடம் அந்தப் பெண் ஆர்டர் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அக்கா அந்த பொண்ணு பேரு என்னன்னு கேட்கலாமா”? என்று கேட்டான்.

 “எப்படிடா கேப்ப?? இப்பதான் என் பாஸ் கிட்ட சொதப்பிட்டு வந்த?? இப்ப இந்த பொண்ணு கிட்ட கேட்டா பிரியாணி மிஞ்சாதுடா”?  என்றாள் மானசா.

 “ஆமால்ல?? சோறு ரொம்ப முக்கியம். அதுவும் உன் தம்பி பசியை தாங்க மாட்டான். பேசாம, சாப்பிட்டதுக்கப்புறம் கேட்கலாமா”? என்றானே பார்க்கலாம். 

‘அட பாவி பயலே? இவனுக்கு காதல் ஒரு கேடு’? என்று மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டாள் மானசா.

 “இரு இரு, திருப்பியும் ஏதாவது ஆர்டர் பண்ணா, அப்போ அந்த பொண்ணு கிட்ட வந்து நிப்பாள்ல?? அப்ப பேட்ஜ்ல  இருக்க நேமை   பார்க்கலாம்” என்றாள் மானசா.

தமக்கையின் ஐடியா சரி என்று பட.  அவனும் நன்றாக தலையை ஆட்டினான்.

“முட்டை  சொல்லலாமா”? என்றவன் கேட்க.

 “அந்த பொண்ணை கூப்பிட்டு, இவ்வளவு சின்னதாவா  கேட்ப? பிரெஸ்டிஜ் என்ன ஆகிறது?? நல்லா பெருசா கேளு”??  என்றாள்.

 “இல்ல,  வேலை வேற போகப்போகுது?? ஏற்கனவே பிரியாணி பச்சா வச்சுட்டேன். இதுல பெருசா பட்ஜெட் வந்துருச்சுன்னா?? துண்டு விழுந்துறாதா”?

“விழுந்தா பரவால்ல. மேனேஜ் பண்ணிக்கலாம். அந்த அஞ்சு லட்ச அக்கவுண்ட்ல இருந்து கழிச்சிக்கலாம்” என்றாள்.

“அதெல்லாம் முடியாது எனக்கு அஞ்சு லட்சத்துல செகனண்ட் காராவது நீ வாங்கி தர. அதுல உன்னை  தான் நான் முதல்ல ஏத்திட்டு ரவுண்ட்ஸ் போவேன்” என்றான்.

 “என்னை பாடை ஏத்தாம நீ விடமாட்டேன்னு நினைக்கிறேன். ஐயோ சாமி! உன் கூட நான் வரலப்பா. நீ கேட்ட வண்டியை வாங்கி கொடுத்துடறேன். ஆனா ஸ்லோவா போகனும். என் மேல சத்தியம் பண்ணு” என்றாள்.

“இந்த சத்தியத்தை நீ எத்தனை வாட்டி கேப்ப?? முதல்ல என்னை பிரியாணி சாப்பிட விடு” என்று கூறிவிட்டு பிரியாணி மட்டுமல்லாமல்,  எதிரில் நின்றிருந்த அந்த பெண்ணையும் சேர்ந்து சாப்பிட்டான் நிர்மல்.

“டேய் பிரான் கிரேவி கேட்கலாமா”? என்று கேட்டாள் மானசா.

 “நீதானே பில் பே பண்ண போற?? எதுனாலும் கேளு” என்றான். 

 “எரும மாடு உனக்கு வேலை கிடைச்சதுனா உன் சம்பளத்துல எவ்வளவு கரைக்கிறேன்னு பாரு”? என்று சவாலிட்டாள்.

 “தாராளமா, எனிதிங் பார் யூ. முழு சம்பள காசை கூட உனக்காக கொடுத்திடுவேன்.”

“ஹா ஹா ஹா, இந்த டயலாக் எல்லாம் இப்பதான் விடுவீங்க. கல்யாணமாகி பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா?? அப்புறம் அக்காவ கண்டுக்க கூட மாட்டீங்க”? என்றாள் மானசா.

 “அப்படி எல்லாம் நினைக்காதே அக்கா. நான் கண்டிப்பா உன்னை கண்டுப்பேன்”  என்று கண் சிமிட்டினான். 

 அந்த பெண் மிகவும் பிஸியாக இருந்தாள். அவளை பார்க்க மட்டும் தான் முடிந்தது. அவளிடம் பேச முடியவில்லை. அவளை வரவைத்து ஆர்டர் செய்தார்கள். அந்தோ பரிதாபம் அவள் உடையில் பேட்ஜே இல்லை. அப்படியும் மானசா அவளிடம்  பெயரை கேட்டாள்..

“எதுக்கு மேடம் பெயர் எல்லாம் கேக்குறீங்க?? ரிப்போர்ட் பண்ண போறீங்களா”? என்று கேட்டாள். 

“ச்சே, ச்சே  உங்க சர்விங் நல்லா. இருந்துச்சு. அதான் ஒரு வாழ்த்து சொல்லலாமேன்னு”? என்று மானசா புன்னகைத்தாள்.

 “தேங்க்ஸ் மேடம். வேலை நேரத்துல என்னால இப்படி பேசிட்டிருக்க முடியாது. இன்னைக்கு சர்விஸ் பண்றவங்க வேலைக்கு லீவு. ஆட்கள் கம்மியா இருக்கோம், கூட்டம் அதிகமா இருக்கு. எக்ஸ்கியூஸ் மீ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 “ரொம்ப பிசியா இருக்காடா. என்னமோ இந்த ரெஸ்டாரன்ட்டே அவளால தான் இயங்குது போல பில்டப் கொடுக்கிறாள். உண்மையாவே இந்த பொண்ணு தான் உன் கனவுல வந்தாளா”? என்று கேட்டாள் மானசா.

“ஆமாக்கா, சத்தியமா இந்த பொண்ணுதான். அவள் கனவுல வந்தது என்னமோ, ஒருவாட்டி தான். ஆனா,  அவளை பத்தி நான் கனவு  கண்டுட்டு இருக்கிறது  முப்பது நாளா. அதனால எனக்கு அந்த பொண்ணு முகம் மறக்கவே இல்லை” என்று அவள்  தலை மீது சத்தியம் செய்ய வந்தான்.

 அவனை முறைத்துக் கொண்டே தன் தலையை  இரண்டடி பின்னால் இழுத்தாள்.. “நல்ல தொழிலாளி தான். ஆனா உனக்கு ஏத்த பெற்றமாக்ஸ் இவள் தானான்னு எனக்கு தெரியல?? நீ ரொம்ப ஜாலி டைப். அந்த பொண்ணு சரியான முசுடு மாதிரி இருக்காள்.. எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேருக்கும் வொர்க்கவுட் ஆகும்னு தோணல? எல்லாத்தையும் விட இந்த பொண்ண நம்ம அம்மா அக்சப்ட் பண்ணிப்பாங்களான்னு தெரியல”? பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள் மானசா.

 “அதெல்லாம் நான் பாத்துக்குறேன் அக்கா. நீங்க கவலைப்படாதீங்க. இந்த கனவையாவது   பலிக்க வைக்கணும்” என்று பம்பரமாக சுற்றி  வேலை செய்து கொண்டிருந்தவளை பார்த்தபடி  திடமாக கூறினான் நிர்மல்.

 “பொண்ணு அழகா இருக்கிறதுனால?  பிக்ஸ் ஆயிட்டியா”?

“அது மட்டும் இல்ல அக்கா. குணமும் இருக்கு. உழைப்பும் இருக்கு. பார்க்க நல்ல பொண்ணா தான் தெரியுறாள்.” என்றான்.

“அது எப்படி உனக்கு பார்த்தவுடனே தெரிஞ்சிருச்சு”?

“அது அப்படித்தான்” என்றான்.

“ஒருவேளை அந்த பொண்ணுக்கு முன்னாடியே யாராவது ஆள் இருந்தா”? என்று கேள்வி கேட்டாள். 

“இருந்தா என்ன பண்றது?? ரெண்டு பேருக்கும் உள்ள புகுந்து  சண்டையை மூட்டி விட்டு விட வேண்டியதுதான்”? என்று கண் சிமிட்டி கூறினான்.

 “டேய் மடையா. ஹீரோ மாதிரி பேசுடா?? வில்லன்  மாதிரி பேசாத? என் தம்பி ஹீரோ டா. அப்படி எல்லாம் பண்ண கூடாது” என்றாள்.

“ஹோ, அப்ப என்ன பண்றதாம்”?

 “அப்படி ஏதாவது இருந்தா, அமைதியா நம்ம வழிய பார்த்துட்டு போகணும். இப்பல்லாம் உன் கனவு ஃபெயிலியர் ஆகுதுன்னு நினைச்சிக்கணும்.”

 “போக்கா, அது வேலைக்கு ஆகாது. இது ஃபெயிலியர் ஆகாம பாத்துக்க என்னால முடியும். ஆனா உங்க விஷயத்துல தான் என்ன பண்றதுன்னு தெரியல?? ஏன்னா அது என் கையில இல்ல”? என்று கூறும் போதே பில் வந்து சேர்ந்தது. இம்முறை எடுத்து வந்தது அவள் இல்லை, வேறு ஒருவன்.

“சுதாரிச்சுக்கிட்டாள்  போல”? என்று அவன் கூற.

“நீ இப்படி கண்றாவியா பார்த்து வெச்சா? அவள் உன்னை கேவலமா தான் நினைப்பாள். அதான் பில்லை கூட வேற ஒருத்தர் கிட்ட கொடுத்து அனுப்பிட்டாள்” என்றாள் மானசா.

 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அக்கா. என் கனவுல வந்த பொண்ண நான் நேர்ல பார்க்காத வரைக்கும் தான் அது கனவு. நேர்ல பார்த்துடேன்ல?? இனிமே இந்த நிர்மலோட  விளையாட்டை பார்க்க போறாள்” என்று கூறினான்.

“எது பண்ணாலும் நியாயமா பண்ணனும். என்  விஷயத்துல சொதப்புனமாதிரி, உன் வாழ்க்கை விஷயத்துல சொதப்பாத” என்று கூறியபடி. அவள் தன் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

 அவனும் அவள் தோள்களைப் பற்றிய படி அவள் பின்னால் ஏறி அமர்ந்தான். ஆனால் பார்வை மட்டும் கண்ணாடியின் வழியாக அந்தப் பெண்ணை ஆராய்ந்து கொண்டிருந்தது.

 அப்போது மிகச் சரியாக அந்தப் பெண்ணின் பார்வையும் வெளியில் இருக்கும் அவர்களை பார்த்தது. நிர்மலின் முகத்தில் புன்னகை பூத்தது.

 உடனே அவள் சுதாரித்து திரும்பிக் கொண்டாள்.

‘இதெல்லாம் பொய்யா இருக்கும்னா? அப்ப எதுக்கு இதெல்லாம் கனவா வரணும்’?? இருவரின் மனதிலும் அதே சிந்தனை தான். யோசனையோடு தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள் இருவரும்.

 நிர்மலின் இந்த இரு கனவுகளும் நிஜமாகமா??

 தேஜாவின் மனதில் இருப்பது என்ன?? 

ரெஸ்டாரண்டில் பார்த்த இந்த பெண் யார்??? 

இவளுக்கு   முன்பே ஒரு காதல் இருக்குமா? அல்லது நம்ம நிர்மலை கரம் பிடிப்பாளா??

 பொறுத்திருந்து பார்க்கலாம்……..

………. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top