13- கனவே சேராயோ??

காத்தாடி  போல பறக்கும் என் காதலே, கை வந்து சேர்வாயோ?

கனவே சேராயோ?? 13

 “அக்கா போகும்போது பிரியாணி வாங்கி கொடுக்கிறேன்னு சொன்னியே”? என்றான் நிர்மல்.

 “நீ பண்ண வேலைக்கு பிரியாணி ஒன்னு தான் கேடு. மரியாதையா என் பாஸ்கிட்ட என்ன சொன்னேன்னு சொல்லு”? என்று வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவள் கிட்டத்தட்ட மிரட்டினாள். 

“அக்கா சத்தியமா நான் எதையும் உளறல  எனக்கு கனவுல என்னெல்லாம் வந்துச்சுன்னு கேட்டாரு? நானும் அதெல்லாத்தையும்  விலாவரியா சொல்லிட்டிருந்தேன்” என்று கைகளை விரித்து காட்டினான்.. 

அதில் வாகனம் ஓட்டி கொண்டிருந்தவளுக்கு சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. 

 “எரும மாடு ஒழுங்கா  உக்காந்துட்டு வந்து தொலை.” என்றாள்.

“அக்கா இன்னைக்கு நீ என்னை ரொம்ப தான் திட்டுற”? என்று சலுகையாக கோபித்துக் கொண்டான்  நிர்மல். 

“திட்டாம என்ன பண்ண சொல்ற?? யாராவது இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ணுவாங்களா? நீ படிச்சவன் தானே?? பைத்தியம் போல பண்ணி வச்சிருக்க?? இதுல என் வேலை கேள்விக்குறியா இருக்குறது கூட பெரிய விஷயம் இல்லை?? ஒன்னு இல்லனா இன்னொன்னு தேடிக்கலாம். ஆனா பிளாக் மார்க் வந்துருச்சுனா? என்ன பண்ண முடியும்”?? என்றாள் மானசா.

 

“அங்க மத்தவங்க எல்லாம் இருப்பாங்கன்னு நான் என்ன கண்டேன்?? கதவை திறந்த உடனேயே நீ நின்னுட்டிருந்த. அதனால கனவுல கண்டதை உன் கிட்ட சொல்லிட்டேன். அங்க அத்தனை பேர் இருக்கறதை நான் கவனிக்கல அக்கா. இந்த ஒரு வாட்டி மன்னிச்சுடு அக்கா ப்ளீஸ்” என்றான். 

“அவங்க அப்பாவ பார்த்தல்ல, எவ்வளவு கேவலமா நினைச்சு பேசினாருன்னு?? நம்மள கோல்ட்  டிக்கர் போல நினைச்சுட்டாரு? எனக்கு அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு”?? என்றாள்.

“ஆனா உங்க பாஸ் ரொம்ப ஸ்வீட். அவர் நம்மள தப்பா நினைக்கல நம்ம கிட்ட நல்லா தான் பேசினாரு” என்றான் நிர்மல். 

“கிழிச்சாரு, அந்த மனுஷன் சரியான கடுவன் பூனை. இன்னைக்கு உன்கிட்ட அமைதியா பேசினதே எனக்கு ஷாக்கிங்   தான். என்னமோ?? நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியல? வீட்டுல இதை சொல்றதா, சொல்ல வேணாமான்னு புரியல”? என்றாள் விரக்தியாக. 

“நாளைக்கு விடியட்டும் அதுக்கப்புறம் சொல்லிக்கலாம். இதுக்குள்ள சொல்லி, என்னை திட்டு வாங்க வைக்காதே அக்கா. மீ பாவம். காலையில் இருந்து ரொம்ப பசிக்குது எதுவுமே சாப்பிடல. குடிச்ச ஜூஸ் எல்லாம் எரிமலையில ஊத்துன மாதிரி புசுன்னு ஸ்வாஹா ஆயிடுச்சு” அவன் பாவமாக  முகத்தை வைத்துக்கொண்டு கெஞ்சினான்.

என்னதான் அவன் தவறே செய்திருந்த போதும்? தம்பி என்றாகிவிட்டது. பசி என்று சொல்லும்போது? அவளுக்கு  மனம் கேட்கவில்லை.  இளகிய  மனம் படைத்தவள். பெரிய அசைவ ஹோட்டலின் முன்பாக நிறுத்தினாள்.

அப்போதுதான்  அவன் முகம் மலர்வடைந்தது.

“ரொம்ப சந்தோஷப்படாதே, எனக்கு வேலை போயிருச்சுல்ல?? அதனால உனக்கு கார் கட். போனா போகுதுன்னு இருக்கிற அஞ்சு லட்சத்துல உனக்கு செகணட் கார்   வாங்கி தரேன்” என்றாள். 

“அக்கா அவர் வேலை போச்சுன்னு சொல்லவே இல்ல?? நீயே ஏன் முடிவு பண்ற”? 

 “நீ பண்ண வேலைக்கு நம்ம ரெண்டு பேரையும் அங்கிருந்து உயிரோட விட்டதே பெரிய விஷயம்”?? என்றாள்.

“அப்ப கண்டிப்பா வேலை கிடைக்காதா?? ஆனா அவரை பார்த்தா நல்லவர் மாதிரி தோணுது அக்கா”? என்றான்.

“எப்படி அவர் நெத்தியில நல்லவருன்னு  எழுதி ஒட்டி இருக்கா”? அவள் நக்கலாக கேட்டாள். 

“இல்ல,  ஆனா என்கிட்ட அவர் நல்லா தான் பேசுனாரு. நீ அவரோட எம்பிளாயில? அதனால உன்கிட்ட கோவமா பேசி இருக்கலாம்”? என்று தோள்களை குலுக்கினான்.

“மே பீ இருக்கலாம்? ஆனா அதுக்காக நல்லவர் பட்டம் கொடுக்கிற?? நீ அவரை இதுதான் முதல் முறை பார்க்குற”? என்று அவள் உதட்டை பிதுக்கினாள். 

 “உனக்கு ரெண்டே வருஷத்திலேயே அசிஸ்டன்ட் சீப் இன்ஜினியர் வேலை கிடைச்சு இருக்குல்ல?? அப்ப அவர் நல்லவரா தானே இருப்பாரு”?

 “போடா முட்டாள். அந்த போஸ்டிங் எனக்கு கிடைச்சதுனால எத்தனை பேர் காண்டுல இருக்காங்க தெரியுமா? என்னை விட சீனியர்ஸ் எல்லாம் இருக்காங்க. என்னுடைய வேலையோட திறனை பார்த்து தான் எனக்கு அந்த பொசிஷன் கிடைச்சது.  அதுவும் அவங்க அப்பா கொடுத்தாரு.  ஆனா அதுல எத்தனை பேரோட கண்ணு இருக்குன்னு எனக்கு தான் தெரியும்.  கஷ்டப்பட்டு உழைப்பில சம்பாதிச்சது. ஒரு நொடியில் தகர்த்து எறிஞ்சிட்ட.  இப்ப வேற ஆஃபீஸ்க்கு போனா நான் சாதாரண எம்ப்ளாயியா வேலை செய்யணும்”? என்றாள்.

“சாரிக்கா” முகத்தை தொங்க வைத்துக் கொண்டு பரிதாபமாக கூறினான். 

 “சரி விடு, என் தலையில என்ன எழுதி இருக்கோ?? அதுதான் நடக்கும். ஆமா, நீ காலையில சொன்னியே?? அது உண்மையா?? நீ அப்படித்தான் கனவு கண்டியா”? ஆராய்ச்சியாக தம்பியின் முகத்தை பார்த்துக் கொண்டே கேட்டாள். 

 

“அட ஆமாக்கா நான் சொன்னதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேற எதுவும் இல்லை. அப்படியே தத்ரூபமா வந்தது. நடந்தா நல்லா இருக்கும் இல்ல”? என்றவன் புன்னகை முகமாக கேட்டான்.

 “அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல?? அதுவும் அந்த சிடு மூஞ்சியா? எனக்கு தேவை இல்லப்பா. நீ கனவு காணாத” என்று அவன் முன்னந்தலையில் தட்டினாள். 

 “நான் கண்ட கனவுக்கு தான் நீ இந்த நிலைமையில இருக்குற?? திரும்பவும் ஏதாவது ஏடாகூடமாக கனவு வந்தால் என்ன பண்றது??  இனிமே நான் தூங்கவே போறதில்லை” என்றான் நிர்மல்.

 “அப்படியெல்லாம் பண்ணாத. உனக்கு தூக்கம் ரொம்ப அவசியம். ஆழ்ந்த தூக்கத்துல தான் உனக்கு இது போல கனவு வருது. இதுவரைக்கும் எல்லா கனவுகளும் பளிச்சிருக்கு. எல்லாத்துக்கும் முதல்னு ஒன்னு இருக்கும் இல்லையா?? அது இந்த கனவா தான் இருக்க போகுது. உன்னோட பலிக்காத கனவுல இது ஃபர்ஸ்ட் லிஸ்ட்ல சேர போது” என்று கூறினாள். 

 

“ஏன்கா?? நடந்தா நல்லா தானே இருக்கும்?? அவரை பார்த்தா நல்லவரா தான் தோணுது?? எவ்வளவு ஹேண்ட்சம்மா  இருக்காரு??  இந்த சின்ன வயசுல பெரிய உயர் நிலையை அடைந்திருக்கிறாரு??  அவங்க அப்பா நடத்தும் போது இந்த கம்பெனி இவ்வளவு பிரபலம் ஆகலயாமே?? இவர் டேக் ஓவர் பண்ணதுக்கு அப்பறம் தான் புகழோடு உச்சிக்கு வந்ததாமே”??   என்றான்.

 “அவரை பார்த்ததே இல்லைன்னு சொன்ன?? அவரைப் பற்றி இவ்வளவு டீடைல் சொல்ற?? உண்மைய சொல்லு?? கனவு தான் கண்டியா? இல்ல என்னை  அந்த மனுசனோட கோர்த்து விட நினைக்கிறியா”? என்று கேட்டாள் மானசா.

 “உண்மையில  சத்தியமா கனவு கண்டேன் அக்கா” என்று அவள் தலை மீது அடித்து சொன்னவன். 

“பட் ஒன் இயர்க்கு முன்னாடி உங்க ஆபீஸோட நேம் போட்ட டாக்குமென்ட்ரி  நியூஸ் பேப்பர்ல பார்த்தேன். அப்ப படிச்சது. பேப்பர்ல அப்பா பையன் இரண்டு பேர் போட்டோவும் போட்டிருந்தாங்க. ஆனா, முகம் தான் தெளிவா தெரியல?? நீங்களே சொல்லுங்க??  பேப்பர்ல வர போட்டோ பாக்குற மாதிரி இருக்குமா”? என்றான் நிர்மல்.

 அவனை முறைத்து பார்த்தாள் மானசா.

 ஆனா இந்த கனவு பலிச்சா நல்லா இருக்கும்னு முதல் முறையாக ஆசைப்படுறேன். இதுவரைக்கும் எனக்கு வந்தது எல்லாம் கெட்ட கனவு தான். உன்னை பத்தியும் என்னை பத்தியும் மட்டும்தான் நல்ல கனவு வந்திருக்கு. இந்த நல்ல கனவும் நடந்தா நல்லா இருக்கும்.”

 “ஓ ஐயாவுக்கு ஒரு பொண்ணு கனவில் வந்தாளே?? அதை சொல்றியா?? அதுபோல யாராவது ஒரு பொண்ண பார்த்திருப்ப??  அதுவே அப்படியே  இமாஜினேஷன் பண்ணி இருப்ப.” 

 

“போக்கா, நீ வேற”? என்றவன் சொல்லிவிட்டு நிமிற. 

அவனை நோக்கி ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து, அவன் வாயைப் பிளந்து நின்று விட்டான்.

“டேய், மானத்தை வாங்காதே?? உட்காருடா” என்று அவன்  சட்டையை பிடித்து இழுத்தாள் மானசா.

 ஆனால் அவன் நிலையில் மாற்றமில்லை.

“சாரி சார், லேட் ஆயிடுச்சு. என்ன வேணும் சார்”? என்று புன்னகை மாறாமல் கேட்டாள் அந்த பெண்.

 அப்போதும் அவன் நிலையில் மாற்றமில்லை. அவனை யோசனையாக பார்த்துவிட்டு, மானசாவின் புறம் திரும்பியவள்.

“வாட் யூ வாண்ட் மேடம்”? என்றாள் அதே ஒட்ட வைத்த புன்னகையுடன்.

……..

தேஜா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து உணவிற்கு அமர்ந்தான். மகன் வந்ததும் அவன் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தார் காவியா. அதை அவன் உணர்ந்தான். ஆனால் கண்டுகொள்ளவில்லை.  

அவன் முகத்தை அப்படி அவர் உன்னித்து பார்க்கும் போதெல்லாம், அவனுடைய மனநிலையை அவதானித்து விட்டு திருமண பேச்சை எடுப்பார். அதனாலயே அவன் அமைதியாக இருந்தான் எனலாம்.

“திரும்பவும் ஆபீஸ்க்கு போனுமாப்பா”?   என்று அப்பாவியாக  கேட்டார்.

 “ஆமாம்மா போக வேண்டியிருக்கு. ஆனா சைட்டுக்கு போயிட்ட பிறகு தான் போகணும். அப்பா எங்க இருக்காரு?? உங்க கிட்ட ஏதாவது  சொன்னாரா”? என்று கேட்டான்.

அவரும் ஆமாம் என்று தலை ஆட்டினார்.

 “நீங்க சாப்டீங்களா? அவர் சாப்பிட்டாரா”? என்று கேட்டான்.

“சாப்பிட்டுட்டாரு, அவரோட பிரண்டை பார்க்க போயிருக்காரு” என்றார் காவியா.  

“ம்ம், என்றவன். தாயிடம் என்ன ஏது? என்று தோண்டி துருவி  கேட்கவில்லை.

அதன் பிறகு அறைக்கு வந்தவன்.  தனக்கு தெரிந்த டிடெக்டிவ் மூலமாக அவர்களின் குடும்பத்தை பற்றி ஆராய சொன்னான். அவர் அதை செய்து கொண்டிருக்கும் போதே, அவனுடைய தந்தையும் அதையேதான்   செய்து கொண்டிருந்தார். 

ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தான். அந்த நேரம் முழுவதும் அவன் சிந்தனை அக்காள், தம்பி இருவரை பற்றியும் தான் இருந்தது.

அவளை அவன் முதல் முதலில் பார்க்கும் போதே, பழக்கமான ஒருத்தியை போல மனதிற்கு தோன்றியது. ஆனால் அந்த சிந்தனையை அவன் ஓரம் தள்ளி புறக்கணித்தான். அவ்வப்போது அவளைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளை தூரம் நிறுத்த பழகி இருந்தான். இதுவரை எந்த பெண்ணிடமும் ஏற்படாத வித்தியாசமான உணர்வுகள் அவளிடம் ஏற்படுவதை அவன் விரும்பவில்லை. அதை முற்றிலுமாக அவன் வெறுத்தான் என்றும் சொல்லலாம்.

ஆனால் இன்று நிர்மலை பார்த்த பிறகு. (அக்காள்- தம்பி) அவர்களுக்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று உணர்வுபூர்வமாக உணர்ந்தான் தேஜா. 

அவளை விடவும், அவனிடம் அதிகமான ஒட்டுதல் இருப்பது போல தோன்றியது தேஜாவிற்கு. யாரோ ஒரு அன்னியனாக அவனை நினைக்கவே முடியவில்லை. மிகவும் பழக்கமானவனாக தோன்றினான். நெருக்கமானவனாக உணர்ந்தான். அதற்கான அர்த்தத்தை தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். 

 சைட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் அலுவலகத்துக்கு வந்தவன். தங்கள் கம்பெனிக்கு மானசா எப்படி வந்து சேர்ந்தாள்? என்று மேனேஜர் மூலமாக தெரிந்து கொண்டவன். அந்த பைலோடு தன் அறையிலேயே அமர்ந்து  விட்டான்.

அது அவனுக்கு தேவையில்லாத வேலை  தான். எத்தனையோ வேலைகள் வரிசை கட்டி நிற்க. இவன் யாரோ ஒரு ஆண் மகனின் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து கொண்டிருக்கிறான். அதற்கான  காரணங்கள் அவன் மனம் மட்டுமே அறிந்த ஒன்று. 

அவள் கேம்பஸில் செலக்ட்டாகி தான் அந்த கம்பெனிக்கு வந்திருக்கிறாள். சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறாள்.  கட்டுமான பணியை தொழிலாகக் கொண்டிருந்த, தேஜா கன்ஸ்ட்ரக்சன் இண்டஸ்ட்ரியில் அவளுக்கு வேலை கிடைத்துவிட.  அவ்வளவு சந்தோஷப்பட்டாள்.  வளர்ச்சி அடைந்து விட்ட நிறுவனம். தன் திறமைக்கு சவாலாக இருக்கும் என்று நினைத்தாள்.    

…..

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top