கனவில் வந்தவளே நிஜத்தில் வருவாயா??
கனவே சேராயோ?? 12
அவன் தன்னிடம், ‘தன் தமக்கையை திருமணம் செய்து கொள்வாயா’? என்று கேட்கப் போகிறான். அப்படித்தான் நினைத்தான் தேஜா. ஆனால் அவன் கேட்டதோ வேறு.
“சார், எங்க அக்காவை வேலையிலிருந்து நீக்க போறீங்களா சார்?? இந்த ரெண்டு வருஷமா அவள் உங்களுக்கு உண்மையா உழைக்கலையா?? இப்பதான் சார் மனசு வந்து எனக்கு வண்டி வாங்கி கொடுக்கிறேன்னு சொன்னாள். அதுக்காக பைவ் லேக்ஸ் சேர்த்து வச்சுட்டாள். இன்னும் பைவ் லாக்ஸ் இருக்கு. அதுக்குள்ள வேலையை விட்டு தூக்கிட்டீங்கனா?? அவள் எப்படி சார் எனக்கு வண்டி வாங்கி கொடுப்பாள்”? என்று கேட்டானே பார்க்கலாம்?
“டென் லாக்ஸ்க்கு வண்டியா?? அப்படி என்ன வண்டி இருக்கு”? என்று தேஜா கேட்டிருக்க.
“டூவீலர்னு நினைச்சீங்களா சார்?? இனிமே பைக் வாங்கி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க சார். அதான் காரு கேட்டேன். நான் கேட்டதென்னமோ பென்ஸ் ( Benz) தான். ஆனா அதுக்கெல்லாம் வசதி வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்றான் நிர்மல்.
“வாட் பென்ஸா”? என்று புருவங்களை ஏற்றி இறக்கி அதிர்ச்சியாக கேட்டான் தேஜா. அதன் விலை ஒரு கோடிக்கு மேல். ‘இவன் விளையாடுகிறானா? அல்லது உண்மையாகவே கேட்டிருப்பானா’? என்ற சந்தேகம் எழுந்தது தேஜாவிற்கு.
“சும்மா உலளாயிக்கு சார்” என்று நாக்கை உருட்டினான் நிர்மல்.
மீண்டும் தேஜாவின் முகத்தில் புன்னகை கோடுகள்.
“எங்க அப்பா வாங்கி கொடுக்க மாட்டேன்னு பெரிய கும்பிடா போட்டுட்டாரு சார். மூச்சு விடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. எங்க அக்கா தான் பாவம் பார்த்து வாங்கி கொடுக்கிறேனு ஒத்துக்கிட்டாள். அவங்க சம்பள பணத்திலிருந்து ஒரு தொகையை காருக்காகவே எடுத்து வச்சுடுவாங்க. கொஞ்சம் கொஞ்சமா இந்த ரெண்டு வருஷத்துல அஞ்சு லட்ச ரூபா சேர்த்து வச்சிருக்காங்க. அதுவும் எனக்காக. அப்பயும் எங்க அம்மா இருக்காங்களே? சரியான வில்லி சார் அவங்க. அவனுக்கு வாங்கி கொடுக்காத நீ வாங்கிக்கோன்னு சொல்லிட்டாங்க” என்று அவன் கூறிய நொடி, மீண்டும் தேஜாவின் முறைப்பிற்கு ஆளானான் நிர்மல்.
“சாமி சரணம், அப்படி அம்மாவை சொல்லக்கூடாதுல்ல?? நீங்க பேசறத வச்சு பார்த்தா? அம்மானா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போலையே சார்”? என்று கேட்டான் நிர்மல்.
“அம்மா அப்பாவை பிடிக்காதவங்க இந்த உலகத்துல யாரும் இருக்க மாட்டாங்க”? என்றான் தேஜா.
“அதென்னமோ உண்மைதான் சார்” என்றான்.
“ஆமா, பத்து லட்ச ரூபாய்க்கு காரா?? அது ஒன்னும் அவ்வளவு வர்தா இருக்காதே”? என்றான் தேஜா.
“அது போதும் சார் எனக்கு. நான் பண்ணி வச்ச வேலைக்கு அதுவே அதிகம். கொஞ்ச நாளைக்கு தான் சார். எனக்கு பர்மிஷன் கிடைச்சவுடனே வேலைக்கு போய், நல்லா சம்பாதிச்சு என் உழைப்புல என் அக்காவுக்கு பெரிய கார் வாங்கி கொடுப்பேன் சார். அதுக்கப்புறம் அடுத்தடுத்த உழைப்புல எனக்கு இன்னொரு காரை வாங்கிப்பேன்” என்று கூறியவனின் அன்பில் நனைந்து போனான் தேஜா.
அவனுக்காக அப்படி பேச ஒரு சகோதரன் இல்லை என்ற ஏக்கம் எழுந்தது முதல் முறையாக.
“அக்கா மேல ரொம்ப பாசமோ”? என்று கேட்டான் தேஜா.
“பின்ன இல்லாமலா?? அம்மா அப்பா மட்டும் இல்ல சார், அக்கா மேலையும் பாசம் அதிகமா தான் இருக்கும். ஏன் உங்களுக்கு உங்க அக்கா மேல இருக்காதா”? என்று கேட்டுவிட்டு. சற்றென்று தன் முகத்தை மாற்றிக் கொண்டவன். “உங்களுக்கு அக்கா இருக்காங்களா சார்”? என்று கேட்டான்.
“இல்லை” என்றான் தேஜா.
“அப்போ தங்கச்சி”? என்று ஆர்வமான மென்னகையுடன் கேட்டான் நிர்மல்.
டேபிளின் மேலிருந்த டிஷ்யூவை எடுத்து அவனிடம் நீட்டியவன். “தொடச்சுக்கோ, எனக்கு அப்படி யாரும் இல்லை. நான் ஒரே பையன்” என்று கூறினான்.
“ம்ப்ச், அது ரொம்ப போர் சார். தனியாவே இருக்கிறது ரொம்ப லோன்லியா இருக்கும். செம காண்டா இருக்கும். இப்ப வீட்ல தனியா இருக்கும்போது எனக்கு அப்படித்தான் இருக்கு” என்று கூறிய நொடி தேஜாவின் முகம் மாறியது.
அதை கவனித்து விட்டான் நிர்மல்.
“டாபிக்கை மாத்தலாம் சார். இது உங்களுக்கு பிடிக்கல” என்றான் நிர்மல்.
அதற்குள் கதவு தட்டும் ஓசை கேட்டது.
தேஜா தொண்டையை செருமிக் கொண்டே “கம்மின்” என்று சத்தமாக குரல் கொடுத்தான்.
அடித்து பிடித்து உள்ளே வந்து நின்றாள் மானசா.
கையில் ஒரு சோல்டர் பேக் இருந்தது. “பைல் எடுத்துட்டு வரலையா”? என்று கேட்டான் தேஜா.
“இதோ சார்” என்று சோல்டர் பேகை கீழே இறக்கி வைத்தவள். மடங்கி அமர்ந்தவாக்கில் உள்ளே இருந்த பைல்களை எடுத்து அவன் முன்பிருந்த டேபிளில் தேதி வாரியாக அடுக்கி வைத்தாள்.
“இதென்ன இத்தனை பைல்ஸ்?? ஆஃபீஸ் டாக்குமெண்ட் மாதிரி இருக்கு?? நிறைய கொண்டு வந்தா நான் செக் பண்ண மாட்டேன்னு, இஷ்டத்துக்கும் கொண்டு வந்துட்டியா”? என்று அதட்டலாகவே கேட்டான் தேஜா.
“ஐயோ சார்! அவனுக்கு பார்த்த ட்ரீட்மெண்ட் பைல் தான் சார் இதெல்லாம். கிட்டத்தட்ட மூணு வருஷமா, வேற வேற ஹாஸ்பிடல்ல வேற வேற டாக்டர்ஸ் கிட்ட பார்த்துட்டிருக்கோம். வெளிநாட்டு டாக்டர் எல்லாம் கூட வந்து செக் பண்ணி இருக்காங்க. அதெல்லாம் கூட இந்த பைலை இருக்கு” என்றாள் மானசா.
“இத்தனை பைலை என்னால தேட முடியாது. நீயே தேடி அவனுக்கு ஆக்சிடென்ட் ஆனபோது ட்ரீட்மெண்ட் பார்த்த அந்த பைலை மட்டும் எடுத்து குடு. மத்த பைல்ஸ் எல்லாம் இங்க வச்சிட்டு போ. நாளைக்கு வந்து வாங்கிக்கோ” என்றான்.
“ஐயோ! சார் வீட்ல பையில் இல்லன்னு தெரிஞ்சதுனா?? பிரச்சனையாகிடும். எதையும் வீட்ல சொல்ல முடியாது சார்” என்றாள் மானசா.
“ஒரு நாள்ல ஒன்னும் ஆயிடாது. அதான் நாளைக்கு கொடுக்கிறேன்னு சொல்றேன்ல”? என்றான் தேஜா அழுத்தமாக.
“பத்திரமா பாத்துக்கோங்க சார். அவன் வாழ்க்கை பிரச்சனை. நான் இதுல எதையுமே காப்பி எடுத்து வைக்கல. அப்படியே அள்ளிப்போட்டு கொண்டு வந்துட்டேன்” என்றாள்.
“எப்படி கொண்டுவந்த”? என்றவன் கேட்க.
“அள்….அள்ளிப்போட்டுக் கொண்டு வந்தேன்” என்று இழுத்து இழுத்து கூறி முடித்தாள்.
ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி கூறுவது போல் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவனுக்கு எந்த படம் என்று பிடிப்படவில்லை. ஆனால் அவன் அப்படி கேட்கும் போது அவளுக்கு அந்த படம் ஞாபகம் வந்தது.
‘அய்யய்யோ நேத்து ‘நானும் ரவுடி தான்’ படம் பார்த்ததோட இம்பேக்ட் இப்படி வந்துருச்சு’ என்று மானசீகமாக நொந்து கொண்டவள். தலையில் தன்னைத்தானே கொட்டிக் கொண்டாள். அவன் அவளைப் பார்த்து புருவத்தை இடிக்கினான்.
“சாரி சார், நேத்து ஒரு படம் பார்த்தோமா?? அதனால அந்த ஃப்ளோல அப்படியே சொல்லிட்டேன்” என்றாள்.
“அப்ப நேத்து உன்னை பொண்ணு பாக்க வரலையா”? என்று அவன் கேட்க.
“ஐயோ சார், அந்த ட்ராஜடியை மறக்கத்தான், இந்த காமெடி படத்தை பார்த்தோம். மனசு விட்டு சிரிச்சிட்டு நிம்மதியா படுத்ததோட இம்பாக்ட் தான் அக்கா அள்ளி போட்டு கொண்டு வந்துட்டாள்” என்று நக்கலாக கூறி சிரித்தான்.
அவள் எடுத்துக் கொடுத்த பைலை அவன் பார்வையிட ஆரம்பித்தான். அவளோ தம்பியிடம் சிறு குரலில் “என்னடா இத்தனை ஜூஸ் பாட்டில்?? எல்லாத்தையும் நீ தான் குடிச்சியா? அமைதியா இருக்க தானே சொன்னேன்?? கடோர்கஜா” என்று முணுமுணுத்தாள்.
அது அவன் காதில் கேட்டாலும் கண்டுகொள்ளவில்லை. “என்ன என் பேரை சொல்லி கூப்பிட்டியா”? என்று வேண்டுமென்றே கேட்டான் தேஜா.
“ஐயோ! என்ன சார்?? நான் எப்படி உங்க பேரை சொல்லி”?? என்று மீண்டும் தலையில் தட்டிக் கொண்டவள்.
‘கடோர்கஜான்னு சொன்னது தேஜானு விழுந்துருச்சோ’?? என்று நினைத்தவள்.
“இவனை திட்டுனேன் சார்” என்றாள்.
அவன் மீண்டும் தன் புன்னகையை மறைத்துக் கொண்டு ஃபைலில் கவனம் செலுத்தினான். “எரும மாடு என்னடா பண்ணி வச்சிருக்க”? என்று சத்தம் வராமல் முணுமுணுத்தாள்.
“மூணு தான் நான் குடிச்சேன். ஒன்னு அவர் தான் குடிச்சாரு” என்றவன் சத்தமாக கூறி விட. அவள் மீண்டும் தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
நல்லவேளையாக அவன் திரும்பி பார்க்கவில்லை. ‘கவனிக்கவில்லை போல’? என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
பைலில் கவனம் இருந்தாலும், சுற்றியும் தன் கவனத்தை செலுத்துவதில் அவன் எப்போதும் கவனமாக தான் இருப்பான். அவர்கள் சொன்னது உண்மைதான் என்று தோன்றியது. அந்த பைலில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அப்படி கனவு எதனால் வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அவன் சொன்னது போல நடந்திருக்கிறது. மூன்று பேர் இறந்திருக்கிறார்கள். ஒரு சிறு பெண் காப்பாற்றப்பட்டிருக்கிறாள். சி.சி.டிவி கேமராக்களின் ஆய்வுகள் கூட அதிலிருந்தது.
“சோ போலீஸ் கேஸ் ஆயிருக்கு”? என்று அவன் கேட்க.
“சார் கேஸ் ஆகல, கம்ப்ளைன்ட் பண்ணாங்க. அப்புறம் சி.சி.டிவி ஃபுட்டேஜ் பார்த்து அவங்களே அதை சரி பண்ணிக்கிட்டாங்க” என்றதும்.
அவன் பைலை டேபிளின் மீது வைத்துவிட்டு எழுந்து நின்றான்.
நின்று கொண்டிருந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க. நிர்மலும் எழுந்து நின்றான்.
“அப்ப நாங்க கிளம்பலாமா சார்”? என்று கேட்டாள் மானசா.
“ஓகே, நாளைக்கு காலையில வந்து இந்த பைல் எடுத்துக்கோ. இப்ப நீங்க கிளம்பலாம்” என்றான்.
“ஓகே சார்” தப்பித்தோம் பிழைத்தோ என்று அங்கிருந்து ஓடி சென்றனர் இருவரும்.
அவர்கள் செல்வதையே மொபைலில் கேமராக்கள் மூலமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் திட்டிக்கொண்டே செல்வதும். அவன் சினுங்கிக் கொண்டே செல்வதும், பதிவாகி இருந்தது.
லிப்டில் மட்டும் அவள் என்ன திட்டுகிறாள் என்பது தெளிவாகவே. கேட்டது. பிறகு இருசக்கர வாகனத்தில் அவள் தம்பியை ஏற்றிக்கொண்டு அவனுக்கும் ஹெல்மெட்டை மாட்டி விட்டுவிட்டு கிளம்புவது தெரிந்தது.
‘அவள் இரு சக்கர வாகனம் வைத்திருக்க. தம்பிக்கு கார் வாங்கி கொடுக்கிறேன் என்கிறாள்’ அவன் உதடுகள் மெச்சதளாக சுளித்தன.
அதில் அவன் மீது மானசா வைத்திருக்கும் பாசம் தான் தெரிந்தது தேஜாவிற்கு. ஏற்கனவே அவனுக்கு ஆக்சிடென்ட் நடந்திருப்பதால் இந்த ஜாக்கிரதை உணர்வு என்று புரிந்தது.
தன் காரியதரிசியையும், மேனேஜரையும் உள்ளே வர வைத்தான்.
“இது எல்லாத்தையுமே எடுத்து எனக்கு டாக்குமெட் அண்ட் பி.டி.எப் அனுப்புங்க” என்றான்.
“ஒரு பேப்பர் கூட மிஸ் ஆகக்கூடாது. டைப் பண்ணனும்னு அவசியம் இல்ல. போட்டோ எடுத்தா போதும். நைட்டுக்குள்ள அனுப்புங்க” என்று தன் பி. ஏ விடம் சொன்னவன். மேனேஜரின் புறம் திரும்பினான்.
“நீங்களே இந்த ஹாஸ்பிடலுக்கு போய் இவனை பத்தின டீடெயில்ஸ் கேளுங்க. இந்த பைலை காட்டியே கேளுங்க. ஃபைல் இங்கேயே இருக்கட்டும். நீங்க அதை போட்டோ எடுத்துட்டு போங்க.
சி. சி. டிவி கேமராவில் இருந்து அவனையும் போட்டோ எடுத்துக்கோங்க. கண்டிப்பா எத்தனை வருஷம் ஆனாலும் இந்த மாதிரி ரேர் கேஸை யாரும் மறக்க மாட்டாங்க” என்று கூறினான்.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சொன்னதை செய்வதுதான் அவர்களுடைய வேலை? அதனால் சிரம் தாழ்ந்து ஏற்றார்கள்.
எத்தனை மணிக்குள் தனக்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு. அவன் வீட்டை நோக்கி பிரயாண பட்டான்.