கனவே சேராயோ??? 11

காதலுடன் உன்னை காண்பதற்கு,

கண்கள் இரண்டு போதவில்லையடி பெண்ணே!!!

கனவே சேராயோ?? 11

 

 வீட்டிற்கு சென்ற மானசா, பூட்டியிருந்த வீட்டை தன் சாவிக்கொண்டு திறந்தவள். 

தம்பியின் அறைக்குச் சென்று, அவனுடைய ஃபயில்களை எடுத்தாள். ஆழ்ந்த பெருமூச்சோடு மீண்டும் தன் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

…… 

“டேய் நான் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டேன். வீட்டை பூட்டிட்டு  கிளம்புறேன். தயவு செஞ்சு நான் வர வரைக்கும் வாயை திறக்காத. ப்ளீஸ் டா. இன்னைக்கு  நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்ட. நாம என்னமோ சீப்பா பிஹேவ் பண்ற மாதிரி அவங்க நினைச்சுட்டாங்க. நான் அங்க இருந்து ஜென்டிலா   ரிலீவ் ஆயிடுறேன். நீ தேவை இல்லாம என்னை கம்பி எண்ண வைக்காத.  ப்ளீஸ் உன்னை கை எடுத்துக் கும்பிட்டுக்குறேன்” என்று கெஞ்சினாள்.

 “நீ எதுக்கு தேவை இல்லாம பயப்படுற?? உன் தம்பியை பத்தி உனக்கு தெரியாதா”? என்றான் நிர்மல்.

 “தெரிஞ்சது தான்டா பிரச்சனையே?? உன் வாயை யாராலும் மூடவே முடியாது”? என்றாள் மானசா.

“பார்த்தியா அக்கா?? எப்படி டேமேஜ் பண்றன்னு?? நான் பாவம் இல்லையா?? உன்னோட ஒரே தம்பி இல்லையா”? என்று கொஞ்சினான்.

“அதுக்கு தாண்டா, நீ பண்ற எல்லாத்தையும் பொறுத்துட்டிருக்கேன். எனக்கு என் வேலையை விட நீ முக்கியம். ஆனா ஜெயில்ல களி சோறு  தின்ன  முடியாதுடா?? உனக்கே தெரியும், எனக்கு அது பிடிக்காதுன்னு. ப்ளீஸ் வாய மூடிட்டு இரு” என்றாள்.

“அட,  நான் இப்ப சும்மா வாயை மூடிட்டு தான் இருக்கேன். சார் கிட்ட ஜூஸ் கேட்டிருக்கேன். வந்தவுடனே அது குடிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கும். ரொம்ப பசிக்குது அக்கா. நீ வரும்போது ஏதாவது ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வரியா”? என்று கேட்டான்.

“அடி செருப்பால. இவ்வளவு  பிரச்சனையை பண்ணிட்டு?? உனக்கு ஸ்னாக்ஸ் கேக்குதா”? என்று கத்தினாள் மானசா. 

“அக்கா அவ்வளவுதானா??  உன் தம்பி பசின்னு கேட்கிறேன். ஒரு ஸ்னாக்ஸ் வாங்கி தர முடியாதா”? என்று அவன் கேட்க.

 “டேய் இந்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் பாஸ் கிட்ட காட்டிட்டு.  அங்கிருந்து உன்னை கூட்டிட்டு முதல்ல வெளியே வரேன். அப்புறம் உனக்கு பிரியாணியே வாங்கி தரேன் டா.  ஆனா  நீ அமைதியா வாய மூடிட்டு இருக்கணும். சரியா”? என்று சிறு பிள்ளையிடம் கேட்பது போல கேட்டாள்.

 “அக்கா நீ போனதுல இருந்து நான் வாயை மூடிட்டு தான் இருக்கேன். சார் கேட்கிற கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்றேன். மத்தபடி நானா எதையும் சொல்லல”? என்று அவன் பேச.

 தேஜாவின்   இதழ்கள் பெரிதாகவே விரிந்து கொண்டது.

 “சரி வெச்சிடுறேன். சீக்கிரமா வா. முடிஞ்சா ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வா. இல்லனா போகும்போது பிரியாணி வாங்கி கொடு. அப்புறம் வண்டி வாங்கித் தரேன்னு சொன்னதை மறந்துடாத. இந்த கம்பெனில இருந்து வேற கம்பெனி போனா கூட, உன்னோட சம்பளத்தை சேர்த்து வச்சு வாங்கி  தரணும். ஓகேவா”? என்று கேட்டான்.

“நீ பண்ணி வச்ச வேலைக்கு, அது ஒன்னு தான் இப்ப கேடு?? உனக்கு வண்டி வாங்கி தரேன்னு சொன்னேன்? என்னோட வேலையையே போக வச்சுட்ட.  இனி நான் வேலையை தேடி, அதுக்கப்புறம் கிடைச்சு, அந்த சம்பளத்தை சேர்த்து வச்சு, உனக்கு வண்டி வாங்கறதுக்குள்ள??  என் காலம் முடிஞ்சிடும். நேத்து வந்தானே?? அந்த மாங்கா மடையன் தலையில என்னை கட்டி வச்சிருவாங்க அம்மா”? என்றாள் மானசா.

 “தம்பி இருக்க, நீ எதுக்கு பயப்படுற?? தம்பியுடையான், படைக்கு அஞ்சான். நான் கண்ட அதே கனவை கண்டிப்பா அம்மா கிட்ட சொல்றேன். அந்த ஆள் மாப்பிள்ளை இல்லைன்னு சொன்னாலே!! அம்மா கல்யாணத்தை நிறுத்திடுவாங்க.”

 “கிழிப்பாங்க. நீ மூடிட்டு இரு. நான் வண்டியை எடுத்துட்டேன்” என்றவள். அலைபேசியை துண்டித்து விட்டு புறப்பட்டாள்.

“ஏன் தேவையில்லாம உன் அக்கா கிட்ட   பொய் சொல்ற”? என்று  கேட்டான் தேஜா.

 “நான் பொய் சொல்லலையே?? உண்மையைதான்  சொன்னேன்? நானா ஏதாவது உங்ககிட்ட சொன்னேனா?? நீங்க கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்”?? என்றான்.

 தேஜா  கன்னக் கதுப்பில்  நாக்கை உருட்டிக்கொண்டு அவனை ஏளனமாக பார்த்தான். 

“என்ன நடந்ததுன்னு விலாவரியா சொல்ல சொன்னீங்க?? அதை தானே சொன்னேன்?? நானா எதையும் உளறல? ம்ப்ச், அதுக்குள்ள தொண்டை தண்ணி வேற வந்துடுச்சு” என்றான் நிர்மல்.

 அதற்குள் ஜூஸ் வந்துவிட.  அவன் பொறுமையாக ஜூசை குடித்துக் கொண்டிருந்தான். தேஜாவிற்கென்று  ஸ்பெஷலாக   கண்ணாடி டம்ளரில் ஜூஸ் எடுத்து வரப்பட்டது.

 அவனும் அதை எடுத்து பருக ஆரம்பித்தான். 

 

“என்ன சார், பேசுனது நானு. கேட்டது நீங்க. உங்களுக்கே டயர்டா இருக்குனா??  பேசின எனக்கு எவ்வளவு டயர்டா இருக்கும்”? என்று கேட்டு வைத்தான் நிர்மல்.

 “ஆமா ரொம்ப டயர்டா தான் இருக்கும். காலைல ஓடி வேற வந்திருக்கல்ல”?? என்றான் தேஜா.

அவன் குடிப்பதற்குள். சி. சி. டிவி ஃபுட்டேஜ் எடுத்து  நேரத்தை குறிப்பிட்டு கண்காணித்து விட்டான் தேஜா. நிர்மல்  சொன்னது போல வெளியில் ஒரு பெண்ணிடம் நின்று பேசுபவன். அத்தோடு அந்த அறையை நோக்கி ஓடி வர ஆரம்பித்து விட்டான்.  

அறையினுள் நுழைந்ததும் நேர் எதிராக நின்றிருந்தவளை நோக்கி ஓடி சென்றவனின் பார்வை இப்படியும் அப்படியும் திரும்பாததை    அவதாணித்தான்  தேஜா. 

அறையுல் நுழைந்ததும் இடது பக்கமாக தான் அந்த பெரிய ஹால் இருந்தது. நேராகவே அவன் தமக்கையை பார்த்ததும், அப்படியே சென்று விட்டிருக்கிறான். இடப்பக்கமாக இருந்தவர்களை கவனிக்கவில்லை என்பது அவனுடைய உடல் மொழியில் தெரிந்தது. 

 அது மட்டுமல்லாமல்,  நிர்மலின்  கண்களில் பொலிவு தெரிந்தது.  உடல் மொழியில் துள்ளலும் தெரிந்தது. அவன் கூறிக்கொண்டிருப்பதே நிஜமாக தன் தமக்கையிடம் சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் ஆவலும்  அவனிடத்தில் இருந்தது.

ஜூசை குடித்து முடித்தான்.

“டீ காபி மட்டும் தான் சாப்பிட மாட்டியா??  இல்ல ஹாட்ரிங்க்ஸும் எடுத்துக்க மாட்டியா”? 

நிர்மலிடம் அப்படி பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அவன் ஏற்கனவே கூறிய பதில் அவனுக்கு புரிந்து இருந்த போதும், இந்தக் கேள்வியை கேட்டிருந்தான். 

 “மூச்’  எதுவுமே இல்ல. காலேஜ் படிக்கும் போது பிரண்ட்ஸுங்களோட சேர்ந்து சரக்கு அடிச்சிருக்கேன். தம் கூட அடிச்சிருக்கேன். ஊருக்கு போகும் போதெல்லாம் பாட்டி வீட்டுல டீ காபி குடிச்சிருக்கேன். ஃப்ரெண்ட்ஸோட போகும்போது காபி சாப்பிட்டிருக்கேன். ஆனா எல்லாமே அந்த ஒரு ஆக்சிடென்ட்ல மாறிடுச்சு” என்று சோகமாக முடித்தவனை, புருவம் இடுங்க பார்த்தான்  தேஜா.

“ரொம்ப ஆசையா வண்டி கேட்டேன் சார். அப்பயும்  என் அம்மா வேண்டானாங்க. அப்பா தான் ஆசைப்பட்டு கேக்குறான்?  தர்ட் இயர்   முடிக்க போறான். காலேஜ்ல எல்லாரும் வண்டி வச்சிருப்பாங்க. வாங்கி கொடுக்கலாம்னு சொல்லி,  ஆசையா வாங்கி கொடுத்தாரு.”

“அதுவும் ஒரு லட்ச ரூபா வண்டி வேணாம். இந்த வண்டிதான் வேணும்னு  KTM 390 டுயூக் (Duke) கேட்டேன். ஒரே மாசத்துல அதை டேமேஜ் பண்ணிட்டேன். மூணு  லட்ச ரூபாய் ஸ்வாகா. ஆனா அப்ப கூட என்னை யாரும் திட்டல. ஏன்னா  என் நிலைமை அதை விட மோசமா இருந்தது. பேரண்ட்ஸுக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் சார். பொருள் செலவு மட்டும் இல்ல, உடம்பளவில,  மனசலவுலன்னு  நிறைய  கொடுத்துட்டேன். என் புள்ளைய காப்பாத்தினா போதும்னு எங்க அம்மா அழுதது என் கண்ணு முன்னாடியே இருக்கு.” என்று சோகமாக முடித்தான்.

‘இவனுக்கு இப்படி கூட பேச வருமா’? என்று பார்த்துக் கொண்டிருந்தான் தேஜா.

 

“அப்போ ஒரு முடிவெடுத்தேன். இதெல்லாத்தையும் நிறுத்திடனும்.  இனி எதுவுமே பண்ண கூடாதுன்னு. ட்ரிங் பண்ணிட்டு வண்டி ஓட்டுனதுனால தான் சார் எனக்கு ஆக்சிடென்ட்டே ஆச்சு” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினான். அடுத்தடுத்த நிமிடங்களில் பல முக பாவனைகளை காட்டிக்கொண்டிருந்தான்  நிர்மல்.

 “சோ அதிலிருந்து எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டியா”? அவன் மனநிலையை மாற்ற முயன்றான் தேஜா. நிர்மலை அப்படி சோகமாக பார்ப்பதற்கு அவனுக்கு பிடிக்கவில்லை.

 “கொஞ்சமாச்சம், அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும் சார். என் அக்காவுக்கு நான்னா உயிர். தினமும் என் பக்கத்துல உக்காந்து என் கைய புடிச்சுகிட்டு என்கிட்ட பேசிக்கிட்டே இருப்பாள். இத்தனைக்கும் நான் அப்ப மயக்கத்துல தான் இருப்பேன். எனக்கு தெளிவில்லனாலும், அதெல்லாம் எங்கேயோ தூரமா கேக்குற மாதிரி இருந்துச்சு. எல்லாரும் என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கும் போது.  அவங்களுக்காக நான் எதையாவது விட்டுக்கொடுக்கணும் தானே சார்? அதான் இதை விட்டுடலாம்னு முடிவு பண்ணி டீ டோட்லரா மாறிட்டேன்”? என்று புன்னகை பூத்தான்.

 அவனுடைய புன்னகை தேஜாவையும் தொற்றிக் கொண்டது. வெகு சுலபமாக அவன் தன் சிந்தையை மாற்றிக் கொள்கிறான் என்பது புரிந்தது. சோகமாக இருந்தாலும் உடனே அதை மறந்து விட்டு மலர்வாகிவிடுகிறான். 

 “அது மட்டும் இல்லாம, இந்த பிரச்சனைல  என் மண்டை காஞ்சிருச்சு சார். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?? மெடிக்கல் கான்ஃபரன்ஸ், மெடிக்கல் கிளாஸ், ஃபாரின் டாக்டர்ஸ்னு,  என்னை பொது ஆராய்ச்சி கூடமா ரிசர்ச்  பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.” 

“என்னோட போட்டோ, என்னோட ரிப்போர்ட் சம்மரி, எல்லாத்தையும் பொது ப்ராஜெக்ட்டா வச்சிட்டாங்க. சில நேரங்கள்ல ஸ்டுடென்ட்ஸ்க்கு முன்னாடி என்னை கூப்பிட்டு உட்கார வச்சு.”

“ம்ப்ச், செம கடுப்பா இருக்கும் சார்.  சூப்பர் சூப்பரா பிகருங்க இருக்கும்.  ஆனா சைட் அடிக்க கூடாது. சைட் அடிக்கவும் முடியாது. என்னதான் நான் அழகா இருந்தாலும், என்னை ஆர்வமா பாத்துட்டு அப்புறம் ஒரு தீசசை பாக்குற மாதிரி பார்த்து வைப்பாளுங்க. மண்ட சூடாயிடும். செம  காண்டா இருக்கும்” என்று சோகமாக நிறுத்தினான்.

 

தன் சிரிப்பை அடக்கிக் கொள்ள, அவனிடமிருந்து மறைத்துக் கொள்ள, தன் மூக்கை லேசாக வருடினான் தேஜா.

அவன் மன வருத்தம் தேஜாவிற்கு புரிந்தது. அந்த வயதிற்குரிய பருவக் கோளாறுகள், அவனுக்கும் அந்த வயதில் துளிர்  விட்டது.  ஆனால் முன்னேற வேண்டும் என்ற ஊந்துதல்  அதை ஓரம் நிறுத்தி விட்டது. இப்போது தேஜா பக்குவம் அடைந்து விட்டான். அவனுடைய குறிக்கோள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் பெண்கள் அவனை ஆர்வமாக பார்க்கும் போது. அவனை அடைய நினைக்கும் போது. மனதிற்குள் ஒரு கர்வம் ஏற்படும். அதையும் அதே   மிடுக்குடன் கடந்து விடுவான். அவர்களை திரும்பி சட்டை செய்ய மாட்டான். ஆனால் இவன், எந்த கவலையும் எந்தக் குறிக்கோளும் இல்லாதவன்.   அந்த வயதிற்கே உரிய பருவக் கோளாறு நிர்மலுக்கு அதிகமாகவே இருப்பது தேஜாவிற்கு  தெளிவாக புரிந்தது.

 “அப்புறம்”? என்றவன் மீண்டும் கேட்க.

“நான் என்ன சார் கதையா சொல்லிட்டிருக்கேன்?? ம்ப்ச், எவ்வளவு சோகமா என்னோட வாழ்க்கையை பத்தி சொல்லிட்டிருக்கேன்??

உங்களுக்கு சிரிப்பா   இருக்கா?? அட்லீஸ்ட் எங்க அக்கா வாழ்க்கையிலாவது விளக்கேத்தி வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா அதுவும் முடியாது போல”? என்று சலிப்பாக கூறியவன். தன் சீட்டில் சற்று முன்நோக்கி வந்தான்.

 அவன் எதையோ ஏடாகூடமாக கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்தவன்.  சாய்ந்து  அமர்ந்திருந்த நிலையிலிருந்து சற்று முன்னோக்கி வந்தான் தேஜா.

 “எங்க அக்காவை” என்றவன் இழுக்க. 

‘இவன் என்ன கேட்கப் போகிறான்’? என்று  தேஜாவின் பார்வை கூர்மை பெற்றது.

 “உங்க மனசை தொட்டு சொல்லுங்க சார்.  எங்க அக்காவை” என்று மீண்டும் எச்சிலை உள்கூட்டி விழுங்கினான்.

‘சொல்லித் தொலையேண்டா’? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்.

தன்னை மானசிகமாக கட்டுப்படுத்திக் கொண்டான் தேஜா. 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top