காதல் கனவே கண் முன்னால் வாராயோ???
கனவே சேராயோ?? 10
“என்னங்க சொல்றீங்க??? நீங்க சொல்றத பார்த்தா எனக்கு பயமா இருக்கு?? நீங்க சொல்றதுக்கு வேற அர்த்தம் வருது”? என்றார் காவியா.
“ச்சே, ச்சே அப்படி இல்லம்மா. அதுபோல ஏதும் இருக்கிறதா எனக்கு தோணல”? என்றார் வெங்கடேசன்.
“ஒருவேளை அப்படி இருந்தால் என்ன பண்றதுங்க”? பரிதவிப்புடன் கேட்டார் காவியா.
“இல்லம்மா, அப்படி இருக்காது. கடவுள் மேல நம்பிக்கை வை. ஆனா, உன் பையன் ஏன் இந்த விஷயத்துல இவ்வளவு இன்ட்ரஸ்ட் காட்டுறான்னு தான் தெரியல”? என்றார் வெங்கடேசன்.
“சரி, பிரமோஷன் கிடைச்சதுக்கப்புறம் இந்த ரெண்டு மாசமா அந்த பொண்ணு கிட்ட ஏதாவது மாற்றம் தெரிஞ்சுதா?? அப்பயெல்லாம் அந்த பொண்ணோட செயல் எப்படி இருந்தது”?
“எனக்குத் தெரிஞ்சு, எதுவும் பெருசா வித்தியாசம் தெரியல?? நான் கவனிக்கவும் இல்லை. முதல்ல இன்ஜினியர்ஸ் டீம்ல தான் இருந்தாள். நம்மளோட சீனியர் இன்ஜினியர் காசுக்காக விலை போயிட்டதுக்கப்புறமா, ஜூனியரா இருந்தவருக்கு, சீனியர் இன்ஜினியரிங் போஸ்டிங் கொடுத்துட்டு. இவளோட புத்திசாலித்தனத்தை பார்த்து நான் தான் இந்தப் பொண்ணை அசிஸ்டன்ட் சீஃப் இன்ஜினியர் ஆக்குனேன். எப்படி பார்த்தாலும் சீஃப் இன்ஜினியரோட ரூல்ஸை தான் இவள் ஃபாலோ பண்ணனும். இன்னைக்கு கூட மீட்டிங் ஹால்ல நோட்ஸ் எடுப்பதற்காக தான் நின்னுட்டிருந்தாள்.”
“ஏன் அவ்வளவு பெரிய மீட்டிங் ஹாலில் உட்கார வைக்கிறதுக்கு இடம் இல்லையா”? என்று இடை புகுந்தார் காவியா.
“இன்னைக்கு ஷேர் ஹோல்டர், இன்வெஸ்டர்ஸுன்னு எல்லாரும் வந்திருந்தாங்கம்மா. இவள் கூட சேர்ந்து மேனேஜர் செகரட்டரின்னு எல்லாருமே நின்னுட்டு தான் இருந்தாங்க. ஆனா, அந்தப் பையன் எப்படி கரெக்டா இவளை பாத்து வந்தான்னு தான் தெரியல?? நாங்க இத்தனை பேர் இருக்கிறது அவன் கண்ணுக்கு தெரியலையா?? கிட்டத்தட்ட முப்பது பேர் உட்கார்ந்துட்டு இருந்தோம். அஞ்சு பேர் நின்னுட்டு இருந்தாங்க. பாடிகார்ட்ஸோட சேர்த்து மொத்தம் முப்பத்தியேழு பேர். அத்தனை பேரையும் தாண்டி அவன் கண்ணுக்கு அவங்க அக்கா மட்டும் தெரிஞ்சானா?? நம்புற மாதிரியா இருக்கு”? என்று கேட்டார் வெங்கடேசன்.
“அப்படி இல்லைங்க. நாம விரும்புறவங்க எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும், நமக்கு அவங்க மட்டும் தான் கண்ணுக்கு தெரிவாங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? ஒருவாட்டி கடைவீதியில் ஒரு தெருவுல நான் காணாம போயிட்டேன். இத்தனைக்கும் நான் ரொம்ப குள்ளம் வேற. ஆனா எங்கிருந்தோ என்னை தேடி கண்டுபிடிச்சீங்கல்ல?? அது போல தான் இதுவும்.”
“எத்தனை பேர் இருந்தாலும் நமக்கு அன்புக்குரியவங்க தான் நம்ம கண்ணுக்கு முதல்ல தெரிவாங்க. அக்கா தம்பி குள்ள பாசம் அதிகம் போல?? அதான் கொக்குக்கு மீன் ஒன்றே பிரதானம் போல? அவங்க அக்கா மட்டும் அவன் கண்ணுக்கு தெரிஞ்சிருக்காள் . ஆனா, நீங்க சொல்றத பார்த்தா, உங்க பையனோட நடத்தையே வித்தியாசமா தான் தோணுது. அதை பத்தி யோசிச்சீங்களா”? என்று கேட்டார் காவியா.
“நானும் அதை பத்தி தான் யோசிச்சிட்டிருக்கேன். இதுவரைக்கும் அவன் கிட்ட எந்த வித்தியாசமும் தெரியல. எங்களோட டீலிங் எல்லாமே சீஃப் இன்ஜினியரோட முடிஞ்சிடும். அந்த மாதிரி நேரங்கள்ள அவளும் கூட இருப்பாள். அவ்வளவுதான். அதுவும் இந்த ரெண்டு மாசமா தான். அவள் கிட்ட தனிப்பட்ட முறையில் நம்ம பையன் பேசினதே கிடையாது. ஏன் ஆர்வமா பார்த்தது போல கூட தெரியல?? எவ்வளவு யோசிச்சு பார்த்தாலும், தேஜா அவளை கவனிச்சதா தோணல. ஆனா இன்னைக்கு அவன் கண்ணுல ஒரு ஆர்வம் தெரியுது. மீட்டிங்கையே போஸ்ட் போன்ட் பண்ணிட்டு அந்த சின்ன பையன் சொல்றதை கேட்டுட்டிருக்கான். எனக்கென்னவோ, அந்த பையன் கிட்ட அவன் அக்கறையா பேசுற மாதிரி தோணுது. அதான் ஏன்னு புரியல”? என்றார் வெங்கடேசன்.
“அந்த பொண்ணு தன் தம்பிக்காக கெஞ்சினாள். வேலையை விட்டு போறேன்னு சொன்னால்ல”? என்று அவர் மனைவி கேட்க.
“சொன்னாள் தான். வாயில சொல்றதுல என்ன இருக்கு?? எல்லாமே ஒரு நாடகம் மாதிரி தான் எனக்கு தோணுது” என்றார்.
“சரி நாம ஒன்னும் பண்ண வேண்டாம். பண்றதா இருந்தாலும் அதை தேஜாவே பண்ணட்டும்” என்றார் காவியா.
“ஏன் நாம ஒன்னும் பண்ண கூடாது? அவன் தான் இவங்க விஷயத்துல வித்தியாசமா நடந்துக்குறான்னு சொல்றேனே?? நாமளும் சும்மா இருந்தா சரி இருக்காது காவியா”? என்றார்.
“என்ன பண்ணலாம்னு சொல்ல வரீங்க? அப்படி பண்ணா உங்க பையனுக்கு அது பிடிக்குமா? ஆபீஸ்லயே இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்னு அவன் உங்க கிட்ட சொன்னான் தானே? மீறியும் செஞ்சா அவன் கோபப்படுவாங்க”? என்ற மனைவியை பார்த்தார் வெங்கடேசன்.
“அதுக்காக கண்ணு முன்னாடி நடக்கிறதை பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா”? என்றார் வெங்கடேசன்.
“நம்ம பையனுக்கு ரெண்டு வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு நாம பார்த்த ஜோசியக்காரர் சொன்னார் தானே?? ஆனா உங்க பையன் தான் பிடி கொடுக்காம இருந்தான். இப்ப அவனை இறங்கி வராமல் நாம ஏன் அதுக்கு தடையா இருக்கணும்?? ஏற்கனவே அதுல ஒரு வருஷம் போயிடுச்சு. திருப்பியும் அவன் ஜாதகத்தை எடுத்துட்டு போய் அவர்கிட்ட காட்டுனா, என்ன ஏதுன்னு ஆராய்ந்து சொல்லிட மாட்டாரா”? என்றார் காவியா.
“நீ என்ன சொல்ல வர? அப்ப அந்த பொண்ணே உனக்கு ஓகேவா”?
“ஏன் உங்களுக்கு ஓகே இல்லையா? ஸ்டேட்டஸ் பாக்கறீங்களா”? என்று காவியா கேட்க
“அப்படி இல்லம்மா. அவங்க நல்லவங்களானு நமக்கு தெரியலையே?? எனக்கு இதெல்லாம் டிராமா போல தோணுது? பணக்கார வீட்டு பசங்கள இப்படித்தான் வளச்சி போட பாப்பாளுங்க.”
“ஒருவேளை நீங்க நினைக்கிற மாதிரி இல்லாம, அந்த பொண்ணு நல்ல பொண்ணா இருந்தா??? அந்த பொண்ண பத்தி ஜோசியக்காரன் கிட்ட கேட்டுடலாம்” என்றார்.
“அதுக்கு அந்த பொண்ணு ஜாதகம் வேணுல்ல”? என்று கேட்டார் வெங்கடேசன்.
“நான் அப்படி சொல்லலங்க. நம்ம பையனுக்கு காதல் கல்யாணம் நடக்குமா? இல்ல நாம பார்த்து வெச்ச பொண்ணை கல்யாணம் பண்ணுவானான்னு கேட்டுக்கலாம். அப்படியே இன்னும் எத்தனை நாள்ல கல்யாணம் நடக்கும்னு கொஞ்சம் நல்லா பாத்து சொல்ல சொல்லலாம்” என்றார்.
“ஒருவேளை அவங்க பொய்யானவங்களா இருந்தா”? என்று வெங்கடேசன் கேட்க.
“அது சாயங்காலத்துக்குள்ள தெரிஞ்சிரும்ல?? உங்க பையன் ஒன்னு சும்மா விடமாட்டான். எல்லாத்தையும் இன்னைக்குள்ள அலசி ஆராய்ஞ்சிட்டு தான் விடுவான். அவனுக்கு எதையும் ஆரப் போடுறது பிடிக்காது. அதான் இறங்கிட்டான்.”
“நீங்க உங்க பங்குக்கு அந்த பொண்ணோட பேக்ரவுண்ட் எடுத்து பாருங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பமா? இல்ல அந்த பொண்ணு சொன்ன மாதிரி அவங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க? ஏதுன்னு தெரிஞ்சாலே நமக்கு போதும் இல்லையா?? ஊர்ல இருக்க சொத்தைப்பத்தி எல்லாம் நமக்கு அக்கறை இல்லை” என்று கூறினார்.
அவரும் சரி என்று தலையாட்டினார்.
கம்பெனிக்கு வேலை செய்து, அந்தப் பெண்ணின் போன் நம்பரையும், அட்ரஸையும் வாங்கினார். தங்களுடைய கன்ஸ்டிரக்ஷன் கம்பெனிக்காக சில பல வேலைகளை செய்ய வைத்திருக்கும் ஆட்களை ஏவி அந்தப் பெண்ணின் முகவரியையும் அவர்கள் பின்புலத்தையும் ஆராய சொன்னார்.
………
கைகளை கட்டிக்கொண்டு அவன் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தான் தேஜா. எல்லாவற்றையும் விட அவன் சொல்லும் போது அவன் பார்வையை தான் அவதானித்துக் கொண்டிருந்தான். அதில் பொய் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை.
“நான் பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னேன்ல?? அந்த பொண்ணு ஓடிப்போக போறதா கனவு கண்டேன்னு?? நான் அதை எங்க அம்மாகிட்ட சொன்னேன். அவங்க அந்த ஆன்ட்டி கிட்ட சொன்னாங்க. ஆனா அவங்க வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு எங்க வீட்டோட சண்டை போட்டுட்டாங்க. தேவையில்லாம அவங்க வீட்டு நாயை எங்க வீட்டு காம்பவுண்டுக்குள்ள விட்டு நிறைய பிரச்சனை நடந்தது. ஆனா அவங்க எங்க மேல கான்சன்ட்ரேஷன் பண்ணாங்களே தவிர அவங்க பொண்ணு மேல கான்சன்ட்ரேஷன் பண்ணாம விட்டுட்டாங்க. கடைசில என்ன ஆச்சு?? அந்த பொண்ணு உண்மையிலேயே அடுத்த ஒரு வாரத்துல ஓடிப் போயிடுச்சு. அதுவும் நான் சொன்ன, அந்த சிவப்பு கலர் சுடிதார் போட்டுட்டு தான் ஓடிச்சாம்” கைகளை தட்டி சிரித்தான்.
தேஜா அவனை கேவலமாக பார்த்தான். “ஈஈஈ, உங்களுக்கு சிரிப்பு வரலையா”? என்று இளித்து வைத்தான்.
“அடுத்தவங்க வீட்டு விஷயம்னா தான் நமக்கு சிரிப்பு வரும். அதுவே நம்ம வீட்ல நடந்தா சிரிப்பு வராது. கஷ்டப்பட்டு வளர்த்தவங்களை விட்டுட்டு போற பொண்ண நினைச்சு உனக்கு சிரிப்பு வருது?? ஆனா அந்த பெத்தவங்கள நினைச்சு எனக்கு வருத்தமா இருக்கு. யாரா இருந்தாலும்?? தன் பொண்ண பத்தி சொல்லும்போது கோபப்படுவாங்க தான்” என்று அழுத்தமாக கூறினான் தேஜா.
“கரெக்ட், இதே மாதிரி தான் எங்க அக்காவும் சொன்னாங்க. சரி விடுங்க. பேசி பேசி ரொம்ப நாக்கெல்லாம் வலிக்குது. தொண்டை எல்லாம் வறண்டுடுச்சு” என்றவன் கூற.
டேபிளின் மீது இருந்த தண்ணீர் பாட்டிலை காட்டினான் தேஜா..
“சார், நீங்க கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டிருக்கேன். வெறும் தண்ணி பத்துமா?? காலையில டிபன் கூட சாப்பிடாம, என் அக்கா கிட்ட சொல்ற ஜோர்ல ஓடி வந்துட்டேன். பசிக்குது சார். ஜூஸ் ஏதாவது சொல்லுங்களேன்”? என்று முகத்தை சுருக்கி கெஞ்சுதலாக கேட்டான்.
“நான் என்ன ஹோட்டல் ஓனரா?? இல்ல பேரரா”? என்று தேஜா கேட்டான்
“சார் பசின்னு கேட்கிறேன்?? இப்படி சொல்றீங்களே?? அதுக்காக பசிக்கும்போது, வீடா கேட்க முடியும்?? தவிச்ச வாய்க்கு ஜூஸ் கொடுக்கிறதா நினைச்சுக்கோங்க. பசின்னு கேட்ட பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுறதா நினைச்சுக்குங்களேன்”? என்று கூறினான்.
அதில் அவனுக்கு புன்னகை வந்துவிட்டது. இரு பக்கமும் தலையாட்டியவன். தன் அலைபேசியை எடுத்து குடிப்பதற்கு கொண்டு வரச் சொன்னான்.
எதிர்முனையில் என்ன கேட்கப்பட்டதோ??
“டீ’யா காபியா”? என்று கேட்டான் தேஜா.
“சார் நான் டீ டோட்லர்? அதெல்லாம் சாப்பிடுறதில்ல. ஒன்லி ஜூஸ். அதுவும் ப்ரூட் ஜூஸ். பழச்சாறு மட்டும்தான். இந்த பாட்டில்ல விக்கிறாங்களே?? அதெல்லாம் நான் குடிக்க மாட்டேன். அது அன் ஹெல்த்தி சார்” என்றான்.
அவனை மீண்டும் முறைத்தவன். எதிர் முனையில் இருந்தவரிடம் ‘ஃப்ரூட் ஜூஸ்’ என்று கூறிவிட்டு வைத்துவிட்டான்.
“சார், ரொம்ப பசிக்குது. ரெண்டு மூணு ஜூஸ் கொண்டுவரச் சொல்லுங்களேன்? அதுக்கு மேல இருந்தா கூட பிரச்சனை இல்லை” என்று இவன் முகத்தை சுருக்கி கூற.
தன் சிரிப்பை அடக்க சிரமப்பட்டவன். அதையே கூறிவிட்டு வைத்தான்.
அதற்குள் தண்ணீரை எடுத்துக் குடித்தவன். “டீ காபி சாப்பிடாதவங்க தான் டீ டோட்டலரா?? இவ்வளவு நாள் எனக்கு அது தெரியாம போச்சே”? என்று கேட்டான் தேஜா.
“அது மட்டும் இல்ல எல்லாத்துலையும் பர்ஃபெக்ட்டா இருக்குறவங்களும் தான்” என்றான் நிர்மல்.
“டீ காபி சாப்பிடாதவங்க டீ டோட்லர் இல்ல, இப்படித்தான் நிறைய பேர் தப்பா புரிஞ்சுக்கிறாங்க. ஆல்கஹால் எடுத்துக்காதவங்களை தான் அப்படி சொல்லுவாங்க. எந்த ஹாட் டிரிங்சூம், எந்த தப்பான கெட்ட பழக்கமும் இல்லாதவங்களை அப்படி சொல்லுவாங்க” என்று விளக்கம் கூறினான் தேஜா.
“அடக்கடவுளே!! அப்படியா?? இது எனக்கு தெரியாம போச்சே? நான் இவ்வளவு நாள் என்னை டீ டோட்டலர்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே”? என்றான்.
“அப்படின்னா நீ டீ டோட்டலர் இல்லையா”? என்று நக்கலாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் தேஜா.
ஈஈஈ, அதற்கு முப்பத்தி இரண்டு பல்லையும் இளித்து காட்டினான் நிர்மல். அந்த இளிப்பு தேஜாவிற்கு புரிய வைத்திருந்தது.
சரியாக அந்நேரம், நிர்மலின் அலைபேசி ஒலி எழுப்பியது.
“அக்கா தான் சார்” என்று அவனிடம் கூறியபடி, அழைப்பை எடுத்தான் நிர்மல்.
தேஜா ஸ்பீக்கரில் போட சொன்னான். அவனும் முகத்தை சுருக்கிக் கொண்டு போட்டான்.
……