உன்னைத் தொலைத்த நாளிலிருந்து
என் நெஞ்சம் மட்டும்
உன்னைத் தேடிக்கொண்டே இருக்கிறது…
கனவே சேராயோ?? 9
“உங்களுக்கு ஒன்னு சொல்லட்டுமா?? என் அக்கா அழகுக்கு உங்கள மாதிரி, இல்லல்ல?? உங்க அளவுக்கு இல்லனாலும், அவள் அளவுக்கு சூப்பரா…” என்றவன் கூறியதும்.
தேஜா ஒற்றைப் புருவத்தை ஏற்றினான். கண்ண கதுப்பில் நாக்கை வைத்து உருட்டினான். அதை கவனித்த நிர்மல்.
“இல்ல சுமாராவாவது இருக்கணுல்ல?? பணம் இருந்தா போதுமா சார்?? எங்க அக்கா அளவுக்கு படிப்பும், அழகும் இருக்கணுமில்ல”? வரனை வேணாம்னு சொன்னதுல, எங்க அம்மா செம காண்டாயிட்டாங்க. அப்பாவும் நானும் அம்மாவை சமாதானப்படுத்தினோம். அக்காவுக்கு துணையா இருந்தோம். அதே டென்ஷனோட தூங்கினதுல கல்யாண கனவு வந்துடுச்சு. மாப்பிள்ளை அந்த ஆள் இல்ல. அது மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்துச்சு.”
“அதனால் தான் அந்த சந்தோஷமான விஷயத்தை என் அக்கா கிட்ட சொல்லலாம்னு ஓடோடி வந்தேன். உங்கள பாக்குற வரைக்கும், எங்க அக்காவுக்கு வரப்போற புருஷன், எந்த பாஸுன்னு யோசிச்சேன். ஆனா உங்கள பார்த்ததுக்கு அப்புறம்” என்று அவன் சிரித்தான்.
அவனுடைய மேனரிசமே வித்தியாசமாக தான் இருந்தது. கைகளை ஆட்டி ஆட்டி பேசினான். அவன் அக்காவுக்கு மேல் முகத்தில் அபிநயம் பிடித்தான். அவனைப் பேச விட்டு விட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது தேஜாவிற்கு.
அவனிடம் பேசும் போது, இதுவரை அவனுக்கு இருந்து அழுத்தங்கள் எல்லாம் குறைவது போல தோன்றியது. இதுவரை யாரும் அவனிடம் நிர்மல் அளவிற்கு பேசியதில்லை. கொஞ்சம் கூட பயமில்லாமல் பேசிக் கொண்டிருந்தவனை இமைக்காமல் பார்த்திருந்தான் தேஜா.
முக்கியமாக அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பேச்சை மாற்றிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தும், கோவம் வராமல் புன்னகை தான் வந்தது. நார்மலாக இப்படி ஒருவன் பேசினால் ஆத்திரத்தில் கத்தி விட்டிருப்பான். ஆனால் இவனிடம் கத்தத் தோன்றவில்லை.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, நீ பேச்சை மாத்திட்டிருக்க. இந்த மாதிரி சீப் டைவர்ஷனுக்கு எல்லாம் மடியுற ஆள் நானில்ல. அப்புறம் நீ சொன்னது உண்மை இல்லை. ஏன்னா நீ கண்ட கனவு எல்லாத்தையுமே நீ சொல்லி இருக்க. ஹாஸ்பிடல்லையும் சரி வீட்டுலயும் சரி, நீ சொன்ன பிறகும் மத்த விஷயங்கள் நடந்து தான் இருக்கு. சோ நீ உன் அக்காவ சமாதானப்படுத்துவதற்காக எதையோ சொல்லி இருக்க. எம் ஐ ரைட்”? என்று சரியாகவே கணித்து கேட்டான் தேஜா.
அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆம் என்றான்.
“அப்ப உன்னோட கூற்றுப்படி எனக்கும் உன் அக்காவுக்கும் கல்யாணம் நடக்கும் அப்படித்தானே”? என்று கேட்டான்.
அவன் எப்படி தலையாட்டுவது என்று தெரியாமல் விழித்தான். அதற்குள் வெங்கடேசன் ‘என்ன இது’? என்று தேஜாவை அதட்டினார்.
“இருங்கப்பா இன்னும் விஷயம் முடியல. ரிப்போர்ட் உண்மையானு பார்க்கணும். இவனையும் அனலைஸ் பண்ணனும். இன்னைக்கே இப்பவே இவன் சொன்னதெல்லாம் சரியானு தெரிஞ்சுக்கணும். முடிஞ்சா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணனும்” என்றான் தேஜா.
“நீ எதுக்குடா இவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற”? என்று அதற்கும் வெங்கடேசன் காட்டமாக கத்தினார்.
“ஐயோ! சார், சாமி கும்பிடு. எனக்கு நீங்க யாருன்னே தெரியாது. எங்க அக்கா உங்க கிட்ட வேலையே செய்யல. நீங்க எங்க அக்காவுக்கு பாஸும் கிடையாது. நான் தூங்கவும் இல்ல கனவும் காணல. ஆள விடுங்க சாமி” என்று தலைக்கு மேல் கும்பிடு போட்டபடி எழுந்து நின்றான் நிர்மல்.
தோரணையாக சாய்ந்து அமர்ந்த தேஜா கால் மேல் காலை போட்டுக்கொண்டு அவனைப் பார்த்தவன். சொடக்கிட்டு கைகளாலேயே அவனை சேரில் அமர சொன்னான்.
“சார் ஏற்கனவே மூணு வருஷமா ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் எடுத்ததுல ரொம்ப கடுப்பா இருக்கு சார். எனக்கு ட்ரீட்மென்ட் என்னமோ ஒரு மாசம் தான். ஆனா நான் இந்த கனவை பத்தி சொன்னதுனாலயே மூணு மாசம் வெச்சு செஞ்சாங்க. ஒரு வாட்டி எம்.ஆர். ஐ ஸ்கேன் செஞ்சாலே ஆயுள ஒரு வருஷம் போயிடும. எனக்கு எத்தனை எம்.ஆர். ஐ எடுத்தாங்க தெரியுமா?? அது மட்டுமா எத்தனை எக்ஸ் ரே? எத்தனை சிடி ஸ்கேன்? எத்தனை லொட்டு லொசுக்குன்னு என்ன ஒரு வழி பண்ணிட்டாங்க.”
“அது மட்டுமா?? தலையில என்னத்தையோ பொருத்தி ஏதேதோ பண்ணாங்க. என் தலைக்கு மட்டும் வாய் இருந்தா அது தனியா அழுதிருக்கும். அதுக்கெல்லாம் வேறு என்னென்ன கூட எனக்கு ஞாபகம் இல்ல” என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்.
“சரி வேற என்ன எல்லாம் கனவு கண்டு அது பலிச்சிருக்குன்னு சொல்லு? உன் அக்கா வர வரைக்கும் டைம் பாஸ் ஆகனுமில்ல”? என்று கேட்டான் தேஜா.
“இன்னைக்கு உனக்கு எத்தனை மீட்டிங் இருக்கு தேஜா?? எவ்வளவு வேலை இருக்கு?? அதெல்லாம் விட்டுட்டு இந்த வெட்டி பையன் கிட்ட உட்கார்ந்து கதை பேசிகிட்டிருக்க?? போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டா அவங்க இதெல்லாம் அலசி ஆராய போறாங்க?? நீ எதுக்கு தேவையில்லாமல் மெனக்கெட்டு கிட்டு இருக்க”? என்று வெங்கடேசன் கேட்டார்.
“என்னப்பா உளறீங்க?? போலீஸ்ல புடிச்சு கொடுக்குற அளவுக்கு இவங்க என்ன தப்பு பண்ணாங்க?? நம்ம மீட்டிங் ஹால்ல அத்துமீறி நுழைஞ்சிட்டாங்க?? இதை சொல்லி போலீஸ்ல மாட்டி விட சொல்றீங்களா”?
“டேய் உனக்கும், அந்த பொண்ணுக்கும் கல்யாணம்னு கனவு கண்டதா இவன் பொய் சொன்னானே?? அதுவும் அத்தனை ஷேர் ஹோல்டர்ஸ்க்கு முன்னாடி சொல்லி இருக்கான். நம்ம ஆபீஸ் ஸ்டாப்சும் கூட இருக்காங்க. எல்லார் எதிர்கையும் எவ்வளவு அவமானம்? நம்ம நேரத்தை விரயம் ஆக்கினவங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா?? அட்லீஸ்ட் ரெண்டு நாளாவது ரிமேண்டுல வைக்க வேண்டாமா”? என்றார்.
“அப்பா, சின்ன பையன் ஏதோ தெரியாம பண்ணி இருக்கான். அவங்க அக்கா ரிப்போர்ட் எடுத்துட்டு வந்தா, அது உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுட போகுது?? நாமலே ஹேண்டில் பண்ண போற விஷயத்துக்கு, தேவை இல்லாம போலீசை இழுக்க வேண்டாம்” என்றான்.
“என்னால இப்படியே உக்காந்து இவன் சொல்ற பொய்யை கேட்டுட்டிருக்க முடியாது” என்று அவர் எழுந்து நிற்க.
“நான் பார்த்துக்கிறேன்னு முதல்லையே சொன்னேனே அப்பா. டென்ஷன் ஆகாதீங்க. நீங்க கிளம்புங்க. நான் பாத்துக்குறேன். அந்த இன்வெஸ்ட்டர் ரெட்டி கிட்ட பேசுங்க. மீட்டிங்கை இன்னொரு நாள் போஸ்ட்போன்ட் பண்ணுங்க” என்றான்.
“அவங்க எல்லாம் பெரிய பெரிய ஷேர் ஹோல்டர்ஸ். இவனுக்காக அவங்கள அனுப்ப சொல்ற?? இவனை அனுப்பிட்டு முதல்ல மீட்டிங்கை முடி தேஜா. அதுக்கு அப்புறம் மத்ததை பாத்துக்கலாம்” என்றார் வெங்கடேசன்.
“இன்னைக்கு எனக்கு மீட்டிங் நடத்துற மூடு போயிடுச்சுப்பா. இதுக்கு மேல என்னால எதையும் பண்ண முடியாது. இந்த விஷயத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்னு தான் இன்ட்ரஸ்ட் இருக்கு. உங்களுக்கு இல்லன்னு எனக்கு தெரியுது. அதனால நீங்க போய் மத்த வேலைகளை பாருங்க. அவங்களுக்கு இன்னொரு நாள் டைம் செட்யூல் பண்ணி குடுங்க. இவங்கள என்ன ஏதுன்னு நான் பாத்துட்டு வரேன்” என்று கூறினான்.
‘நல்லா தான் பேசுறாரு? ஆனால் லாஸ்ட்ல வில்லன் மாதிரி முடிக்கிறாரு?? இவரு நல்லவரா கெட்டவரா’? இன்று நிர்மலின் மூளை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.
யாரோ ஒரு சிறுவனின் முன்னால் தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்தவர். முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.
அவர்கள் இருவரும் பேசும் போது வாயை பிளந்தபடி இருவரையும் பார்த்தவன். அவர் போவதை பார்த்துவிட்டு தேஜாவை பார்த்தான்.
“ஏன் சார் பெரியவங்க கிட்ட எப்படி கோவப்படுறீங்க?? தப்பு என்னுடையதுதான். அக்கா கிட்ட இதை சொல்லணும்னு ஆர்வக்கோளாறுல ரூம்குள்ள வந்துட்டேன். எத்தனை பேர் இங்க இருக்கிறதை கவனிக்கவே இல்ல. என் கண்ணுக்கு அவள் மட்டும் தான் தெரிஞ்சாள். எல்லாமே என்னோட தப்பு தானே”?? தலையை சொரிந்து கொண்டே கூறினான்.
“நான் எங்க கோவமா பேசினேன்?? என்னுடைய பேச்சே அப்படித்தான் இருக்கும். என்னோட அப்பா என்கிட்ட கோபப்பட மாட்டாரு. அப்படியே கோபப்பட்டாலும் என்னால் அவருக்கு புரிய வைக்க முடியும் சோ நீ அதை பத்தி கவலைப்படாத. ம்ம், சரி மத்த விஷயங்கள சொல்லு”? என்று தேஜா சுவாரசியமாக கேட்டான்.
அவன் கண்ட கனவுகளை, அது நிஜமாக நடந்தவற்றை, அவன் கண்கூடாக பார்த்தவை, அதனால் நடந்த சம்பவங்கள் என்று ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தான்.
தேஜா சாய்ந்து அமர்ந்தான். சிறிது நேரம் முன்னாள் வந்தான். சில கேள்விகளை கேட்டான். அவர்கள் யார் என்பதை குறிப்பு எடுத்தான்.
“என்ன சார் நான் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யான்னு ஆராய்ச்சி பண்ண போறீங்களா? பண்ணுங்க பண்ணுங்க. வீட்டு அட்ரசொட போன் நம்பர் கூட கொடுக்கிறேன். சொந்தக்காரங்க வீட்டிலேயே நிறைய நடந்திருக்கு சார். பக்கத்து வீட்டு அட்ரஸ் எல்லாம் தெரியும்” என்று அவன் கேஷுவலாக கூறினான்.
……..
கோபமாக தான் அங்கிருந்து புறப்பட்டார் வெங்கடேசன். ஆனால் வாகனத்தில் போகும்போது சிறு சந்தேகம் இருந்தது அவருக்கு. அந்தப் பெண்ணின் மீது தன் மகனுக்கு ஏதாவது நாட்டம் இருக்குமா என்று.
ஆனால் இதுவரை, அவர் அவதானித்தவரையில் அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை?? புதிதாக முளைத்து விட்டதா என்ன?? இதை எப்படி தடுப்பது என்று சிந்தித்துக் கொண்டே வீட்டை அடைந்தவர். தன் மனைவியிடம் ஒன்று விடாமல் கூறினார்.
காவியா சுவாரசியமானார்.
“அப்படியாங்க?? பொண்ணு அழகா இருந்தாளா”? என்று கேட்டு கணவனின் முறைப்பை வாங்கி கட்டிக்கொண்டார்.
“எனக்கு அவங்களைப் பார்த்தாலே ஏதோ தப்பா தான் தோணுது”? என்றார் வெங்கடேசன்.
“உங்களுக்கு யாரை பார்த்தாலும் சந்தேகம் தான். சரி அந்த பொண்ணு எத்தனை வருஷமா நம்ம கிட்ட வேலை செய்யுறாள். அந்தப் பொண்ணு கிட்டயோ இல்ல உங்க பையன் கிட்டயோ ஏதாவது மாற்றத்தை கவனிச்சிங்களா?? நீங்களும் காதல் கல்யாணம் பண்ணவர்தானே?? உங்களுக்குத் தெரியாதது ஒன்னும் இல்லையே”? என்று கேட்டார் காவியா.
“அந்த பொண்ணு ரெண்டு வருஷமா வேலை செய்யுது. ஆனா ப்ரமோஷன் ரெண்டு மாசம் முன்னாடி தான் கிடைச்சுது. தேஜாக்கும் அந்த பொண்ணுக்கும் ரொம்ப கான்டெக்ட் இருக்காது. சோ அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பெருசா எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல. முக்கியமா எனக்கு என் பையனை சந்தேகப்பட தோணல?? அதுக்கு அவசியமும் இல்லன்னு தான் நினைக்கிறேன். ஆரம்பத்துல கோவமா பேசினவன். அதுக்கப்புறம் இன்ட்ரெஸ்ட்டா கேக்க ஆரம்பிச்சது தான் எனக்கு இப்ப குழப்பமா இருக்கு. எல்லாத்துக்கும் மேல அந்த பொண்ண விட, அந்தப் பையன் மேல அவன் இன்ட்ரஸ்ட் காட்டுற மாதிரி இருக்கு” என்றார் வெங்கடேசன்.
அதிர்ந்து விட்டார் காவியா.