அத்தியாயம் 36
இவ்வாறு ஒரு வாரம் கழிந்திருக்க, குணசேகரின் உடல் நிலையும் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது.
தலையில் ஏற்பட்டிருந்த காயமும் மெல்ல குணமாகி வந்ததால், வைத்தியர்களும் இன்னும் இரண்டு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பலாம் என்று கூறியிருந்தனர்.
அந்த செய்தி குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் நிம்மதியை கொடுத்தது.
குணசேகரோ கட்டிலில் சாய்ந்த படி ஜன்னலின் ஊடாக வெளியே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
உடல் மெதுவாக குணமடைந்தாலும், மனம் மட்டும் அமைதியாக இல்லை.
அன்று திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவோடு வீட்டை விட்டு கிளம்பினார்…
ஆனால் விதி வேறு ஒன்றை அல்லவா எழுதி வைத்திருந்தது.
அவர் பக்கத்தில் இருந்த கீதாவோ, “என்னங்க இதை குடிங்க” என்று கிண்ணத்தில் இருந்த சூப்பை அவரிடம் நீட்ட,
குணசேகரும் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டார்.
அவரது முகத்தில் இருந்த யோசனையை பார்த்த கீதா,
“என்னாச்சுங்க? எதுக்கு ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று கேட்க,
“ஒன்னும் இல்லை கீதா” என்று அவர் கூறவும், அந்த அறை கதவை தட்டிய படி விஷ்வேந்திரன் உள்ளே நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
*****
மதிய நேரம் என்பதால் மருத்துவமனையின் கேன்டினில் வழக்கத்தை விட சற்று கூட்டமாக இருந்தது.
அந்த கூட்டத்திற்கு நடுவே, ஒரு ஓரமாக இருந்த மேசையில் அமைதியாக அமர்ந்திருந்தாள் பிருந்தா.
அவள் முன் இருந்த உணவுத் தட்டில் பாதிக்கும் மேல் உணவு அப்படியே இருந்தது.
உணவை பிசைந்த படி அவள் இருக்க, “சாப்பிடாம என்னடி பிளேட்ல கோலம் போட்டுட்டு இருக்க?” என்ற ஜானவியின் குரல் அவளது சிந்தனையைக் கலைத்தது.
நிமிர்ந்து பார்த்த பிருந்தா, எதிரே தட்டுடன் வந்து அமர்ந்த ஜானவியைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை மட்டும் சிந்தினாள்.
“எனக்கு பசியே இல்ல ஜானு…”
என்று சோர்வாகக் கூற,
“பசி இல்லன்னா? ஏற்கனவே ஒரு வாரமா நீ ஒழுங்கா சாப்பிடாம எலும்பும் தோலுமா இருக்க… அதுவும் இல்லாம…” என்று நிறுத்தியவள்,
கரண்டியை வாயில் வைத்து குறும்பாக சிரித்த படி, “இன்னும் ஒரு வாரத்துல…. மேடம்கு கல்யாணம் வேற ஆக போகுது… சோ…. பஸ்ட் நைட்ல புருஷன் காட்டுற வேகத்தை எப்படி தாங்கிக்க முடியும்? அதுனால இப்போவே நல்லா சாப்பிட்டு…” என்று ஜானவி கண்களைச் சிமிட்டியபடி தன் பேச்சை முடிக்கும் முன்பே, அவளுக்குப் பின்னாலிருந்து யாரோ குரலை செருமிய சத்தம் கேட்டது.
அதில் இருவரும் திடுக்கிட்டு போய் அந்த திசையைப் பார்க்க, அங்கே சிம்மன் தான் கையில் காபி கப்புடன் புருவத்தை உயர்த்தி அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவனை பார்த்த ஜானவியோ ‘ஐயோ! சாரா!’ என்று விழித்தவள், மெல்ல தன் உணவை எடுத்து கொண்டு, “நான் அங்க போய் சாப்பிடுறேன்டி” என்று கூறி விட்டு அங்கிருந்து நழுவி விட,
சிம்மனும் பிருந்தாவை பார்த்த படியே, இருக்கையை இழுத்து போட்டு அதில் அமர்ந்தான்.
அவளோ எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்க, அவளருகில் தான் கொண்டு வந்த காபியை நீட்டியவன், “குடி” என்றான்.
அந்த காபியை பார்த்தவளுக்கோ அடுத்த கணம், அன்று அவன் பனிஷ்மென்ட் என்ற பெயரில் இதே போல ஒரு காபியில் உணர்ச்சி மருந்தை கலந்து கொடுத்து, அவளை படாய் படுத்தி எடுத்தது நினைவுக்கு வர, புரையேறி விட்டது அவளுக்கு…
“எ… எனக்கு இது…. வேணாம்” என அவசரமாக அந்த கோப்பையை அவனிடமே மீண்டும் தள்ளி விட,
அவளை புருவம் சுருக்கி பார்த்த சிம்மனோ, “வை பேபி? இந்த காபியிலயும் எனர்ஜி சர்ஜ் கலந்து இருப்பனோன்னு பயமா இருக்கோ!” என்று நக்கலாக கேட்க,
பெண்ணவளோ அவனை முறைத்துப் பார்த்தவள், “உங்களை நம்புற அளவுக்கு நான் இன்னும் மெமரி லாஸ்ட் பேஷண்ட் ஆகல” என்றாள் உதட்டை சுளித்த படி.
அதில் இதழோரம் குறும்பு புன்னகை மலர, “அது அப்போ பேபி… இப்போ தான் சிச்சுவேஷன் மாறிடுச்சே” என்றவன்,
மேசையின் மீது இரு கரங்களையும் ஊன்றி அவளை நெருங்கி, “இப்போ உன்ன மயக்க நான் மட்டுமே போதும்” என்று காந்த குரலில் சொல்ல,
அவனின் விழிகளை இத்தனை நெருக்கத்தில் பார்த்த பெண்ணவளுக்கோ இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது.
“அ… அப்படி எல்லாம் ஒ… ஒன்னும் இல்லை” என்று சங்கடத்துடனே அவள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள,
“இஸ் இட்?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவன், அவளின் முக மாற்றத்தை உணர்ந்து கேலியாக புன்னகைத்துக் கொண்டான்.
அதே நேரம், அவ்வழியாக வந்த கேன்டீன் ஊழியர் ஒருவன் கால் இடறி விழப் பார்க்க, அவனது கையில் இருந்த பழச்சாரு குவளை நழுவி அங்கே அமர்ந்திருந்த பிருந்தாவின் மீதே மொத்தமாகக் கொட்டியது.
“அச்சோ!” என்று பதறிப் போய் அவள் எழுந்து விட, அந்த ஊழியனோ, “ஐயோ! சாரி மேடம்… ரொம்ப சாரி…” என்று அவசரமாக மன்னிப்பு கேட்க,
சிம்மனோ “பார்த்து வர மாட்ட?” என்று கோபமாக சத்தம் போட்டான்.
பிருந்தாவோ, “சிம்மா… ப்ளீஸ்…. தெரியாம தானே!…. விடுங்க” என்றவள், “பரவால்லண்ணா” என்று கூற, அவனும் “சாரி மேடம்” என மீண்டும் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
பழச்சாரு கொட்டியதால் அவளின் சுடிதாரின் முன் பகுதி நனைந்து, அவள் மேனியோடு ஒட்டிக் கொள்ள, உடலின் வளைவு, நெளிவுகள் சற்று வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது.
சுற்றிலும் இருந்தவர்களின் பார்வை அவள் மீது படிய, அவளுக்கோ மிகவும் அவமானமாக இருந்தது.
தன் துப்பட்டாவை இழுத்து முன்புறமாகப் போர்த்தி, இயன்றவரை தன்னை மறைக்க முயன்றாள்.
அவளின் தடுமாற்றத்தை உணர்ந்த சிம்மனோ, “என் கூட வா” என்று அவள் கரங்களை பற்றி விறு விறுவென அழைத்து கொண்டு அங்கிருந்து செல்ல, பிருந்தாவும் தலையை குனிந்த படி அவனோடு நடந்தாள்.
நேராக அவளை தனது கேபினுக்கு அழைத்து வந்தவன், “உள்ள போய் வாஷ் பண்ணிக்கோ” என்று கூற,
அவளும் அவசரமாக அங்கிருந்த கழிவறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சிம்மனோ தனது பாக்கேட்டில் இருந்த சிகரட்டை எடுத்து பற்ற வைத்து புகைக்க ஆரம்பித்து விட, சில நிமிடங்கள் கழித்து மெதுவாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் பிருந்தா.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அங்கே கைகளை பிசைந்த படி சங்கடத்துடன் நின்றிருந்தாள் அவள்.
தண்ணீர் பட்டு அவளின் சுடிதார் மேலும் நனைந்து விட, அதன் மூலம் பெண்ணவளின் அங்க நெளிவுகள் அப்பட்டமாக வெளியில் புலப்பட்டது.
அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு கணம் ரசனையாக பார்த்தவன், சிகரட்டை கீழே போட்டு மிதித்து விட்டு பெண்ணவளை நெருங்கி வந்தான்.
பிருந்தாவோ அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் தலையை தாழ்த்திய படி மெல்ல பின்னால் நகர, அவனும் இதழ்களை நாவால் வருடிய படியே முன்னேறி வந்தான்.
அவளோ ஒரு கட்டத்தில் பின்னால் இருந்த மேசையில் இடித்துக் கொண்டு நிற்க, அதற்கு மேல் பின்வாங்க வழியின்றித் தவித்தாள்.
அவளை நெருங்கி வந்தவன், தன் இரு கரங்களையும் அவள் நின்றிருந்த மேசையின் விளிம்பில் ஊன்றி, அவளை முழுமையாகத் தன்னுள் சிறைபிடித்திருக்க, அவனின் இந்த நெருக்கத்தில் பெண்ணவளுக்கோ மூச்சு முட்டியது.
“சி… சிம்மா…. ந… நான்…. போகணும்…. அம்மா தெ… தேடுவாங்க” என்று தட்டு தடுமாறிய படி சொல்ல,
அவள் முகத்துக்கு நேராக குனிந்தவன், “இப்படியே வெளியில போகப் போறியா?” என்று புருவத்தை உயர்த்தி சற்று நக்கலாகக் கேட்டான்.
அவளும் ஒரு கணம் தான் இருக்கும் நிலையை குனிந்து பார்த்து விட்டு, எச்சிலை கூட்டி விழுங்கிய படி, “அ… அது… நான்… வந்து…” என்று பதில் பேச முடியாமல் தடுமாற, ஆடவனின் பார்வையோ அவளின் அங்குமிங்கும் அலைப்பாயும் விழிகளில் இருந்து மெல்ல கீழிறங்கி, அவளது கழுத்தோரமாக வழிந்தோடிய சிறு நீர்த்துளிகளின் மீது பதிந்தது.
அதைக் கண்டவனின் புருவங்கள் உயர, இதழ்களை வளைத்த படி, அங்கே மேசையிலிருந்த ஒரு டிஸ்யூ பேப்பரை எடுத்தான்.
பெண்ணவளும் அவனை புரியாமல் பார்க்க, அதை வைத்து அவளைத் துடைப்பதற்காகப் போனவன், ஒரு கணம் நிறுத்தி இதழ்களை கடித்த படி, “எதுக்கு டிஸுவை வேஸ்ட் பண்ணிக்கிட்டு” என அந்த டிஸ்யூவை அப்படியே அலட்சியமாகக் கீழே போட்டு விட,
பிருந்தாவோ குழப்பத்துடன், “சிம்மா… என்ன… ப…” என்று ஏதோ கேட்கும் முன்பே, சட்டென அவளது மென்மையான கழுத்து வளைவில் வழிந்தோடிய அந்த நீர்த்துளியின் மீது அவனது ஈரமான இதழ்களை பதித்திருந்தான்.
அவனின் அந்த செயலில் பெண்ணவளின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, அவளின் இதயமோ வெளியே குதித்து விடும் அளவுக்கு வேகமாகத் துடித்தது.
“சி.. சிம்…மா…” என்று மோகம் கலந்த குரலில் அவள் முணு முணுக்க, ஆடவனோ அவளின் கழுத்து வளைவில் இருந்த நீர்த் துளிகளை தன் இதழ்களாலேயே துடைக்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு முறையும் அவன் இதழ்களை பதித்து அந்த நீர்த் துளிகளை உறிஞ்ச, பெண்ணவளுக்கோ பெரும் இன்ப அவஸ்தையாகிப் போனது.
கூச்சத்தில் அவள் விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
அவனின் தொடுகையில் பாவையவளின் மேனி மொத்தமும் நடுங்க, “சிம்மா… ப்… ளீஸ்… ப்ளீஸ்…. லீவ் மீ…” என்று அவளின் உதடுகள் சொன்னாலும், அவனின் நெருக்கத்தை அவளால் துளியும் தடுக்க முடியவில்லை.
மாறாக, தன்னையும் அறியாமல் அவனின் பின்னந்தலையில் கைக் கோர்த்து மேலும் தனக்குள் அவனை நெறித்து கொள்ள, ஆடவனும் எந்த தடையுமின்றி அவளின் கழுத்து வளைவெங்கும் தன் சுவடுகளைப் பதித்தான்.
அந்த அறையெங்கும் பெண்ணவளின் வேகமான மூச்சுக் காற்றும், மெல்லிய முனகல்களுமே ஒலிக்க,
அவள் இடையை பற்றி தூக்கி அப்படியே மேசையில் அமர வைத்தவன், அவள் கழுத்தில் இருந்து மெல்ல தன் இதழ்களை பிரித்தெடுத்தான்.
பெண்ணவளும் மூச்சிரைத்த படியே, அவனின் சிகையை இறுக்கமாக பற்றி இருந்தவள், அவன் விலகியதும் மெல்ல தன் விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள்.
இன்னுமே அவளின் பொன் மேனி நடுங்கிக் கொண்டிருந்தது.
சிம்மனோ, “பேபி… ஆர் யூ ஓகே?” என்று கிசு கிசுப்பான குரலில் கேட்க,
பெண்ணவளின் முகமோ வெட்கத்தில் சிவந்து போனது.
கொஞ்ச நேரத்தில் அவளை மூச்சடைக்க வைத்து விட்டு, இப்போது எதுவுமே தெரியாதது போல இப்படி கேட்கிறானே!
அவனை முறைக்க நினைத்தாலும், வெட்கம் அவளை பிச்சித் தின்ன, வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக் குழிக்குள் சிக்கியவளாய் சட்டென தலையை குனிந்து கொண்டாள் பெண்ணவள்.
அவளின் தடுமாற்றத்தையும், திணறலையும் கண்டு உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டவன்,
பெண்ணவளின் நாடியை பற்றி மெல்ல நிமிர செய்து, தன் பெரு விரலால் அவளுடைய இதழ்களை மென்மையாக வருடிக் கொண்டே, “உனக்கு அது புடிக்கலையாடி?” என்று கிறக்கமாக கேட்க,
அவன் தொடுகையில் பெண்ணவளின் மேனி மொத்தமும் சிலிர்த்து அடங்கியது.
அவள் வதனமோ செவ்வானமாக சிவந்து போக, அதற்கு மேலும் அவனின் முகத்தை பார்க்க முடியாமல் சட்டென விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
அதில் சிம்மனின் இதழ்களோ தாராளமாக விரிந்து கொள்ள,
“ஹேய்… என்னை பாரு…” என்று மென் குரலில் சொன்னான்.
அவளோ தயங்கிய படியே, “ம்ஹும்” என்று இரு பக்கமும் மெல்ல தலையை அசைத்தாள்.
அவளது தயக்கத்தை ரசித்த படியே, “பாருன்னு சொல்லுறேன்ல” என்று அவளின் இடையை பற்றி மெல்ல கிள்ளி விட, அதில் பெண்ணவளோ துடித்த படி, “ஸ்ஸ்… வலிக்கிது சிம்மா…. ஏன்… இப்படி பண்ணுறீங்க?” என்று சிணுங்களாக கூறினாள்.
ஆடவனோ இதழ்களை கடித்து புன்னகையை அடக்கிய படி, “எங்க வலிக்கிது?” என்று கர கரப்பான குரலில் கேட்டுக் கொண்டே, “இங்கயா?… இல்லன்னா….. இங்கயா?” என்று தன் கரங்களை மெல்ல அவளின் சுடிதாருக்குள் நுழைக்க, அவனின் விரல்கள் அவளின் வெற்று இடையில் பட்டதும் பெண்ணவளுக்கோ உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு.
அந் நொடி அவளின் இதயத் துடிப்பு அவனுக்கே கேட்கும் படி வேகமாக துடிக்க, உடலெங்கும் வியர்த்து வழிந்தது.
“சி… ம்மா… இ… இதெல்லாம்… த…. தப்பு… எ… என்னை போக விடுங்க…. ப்ளீஸ்…” என்று தன் இதழ்களை பற்களால் கடித்த படி அவள் சொன்னாலும்,
பெண்ணவளின் கரங்களோ அவனின் ஷேர்டை பற்றி மேலும் தன்னிடம் இழுத்தது.
அதை உணர்ந்து நக்கலாக உதட்டை வளைத்தவன், “லிப்ஸ் தான் இப்படி சொல்லுது… பட் … பாடி வேற மாதிரி ரியாக்ட் பண்ணுதே!” என்று கூறிக் கொண்டே தன் விரல்களை மெல்ல மேலே நகர்த்த, இவளோ திணறிப் போய் விட்டாள்.
ஆனாலும் அவனை தடுக்கவும் முடியவில்லை.
காதல் கொண்ட அவள் மனம் எப்படி தன்னவனின் நெருக்கத்தை மறுக்கும்?
அவனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் பெண்ணவளின் மேனி மொத்தமும் கிறங்கி போய் அவனுக்கு தாராளமாக வளைந்து கொடுத்தது.
அவளை கொஞ்ச கொஞ்சமாக இன்ப அவஸ்தைக்கு உள்ளாக்கியவனோ, மெல்ல அவளின் இதழ்களை நோக்கி குனிய, பெண்ணவளும் இமைகள் சொருகிய படி, “ப்ளீஸ்… விடு… ங்க…. ய.. யாராவது வந்துடுவாங்க…” என்று காற்றுக்கும் கேட்காத குரலில் முணு முணுத்தாள்.
அவளின் முணு முணுப்பையும், தவிப்பையும் ரசித்து கொண்டே, மேலும் அவளின் இதழ்களை தன் இதழ் உரச நெருங்கியவன், “அப்போ கிஸ் பண்ண வேண்டாமா?” என ஹஸ்கி குரலில் கேட்க,
அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் பட்டு அவளுள் மேலும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.
இத்தனை நெருக்கத்தில் வந்தும் அவளை முத்தமிடாமல் அவன் வேண்டுமென்றே இப்படி சீண்டிக் கொண்டிருக்க, இவளுக்கு தான் அது பெரும் அவஸ்த்தையாகிப் போனது.
மூச்சு விட கூட சிரம பட்டவளாய், கடினப்பட்டு தன் இமைகளை விரித்தவள், “நி… நீங்க… ரொம்ப மோசம் சிம்மா….” என்று அடிக் குரலில் சொல்ல,
“ரியலி?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவன், அவளின் காதோரம் இதழ் உரசிய படி குனிந்து, “நான் எவ்ளோ மோசமானவன்னு உன்னால நினைச்சி கூட பார்க்க முடியாதுடி” என்று கூறிய அடுத்த கணம் அவளின் சுடிதாருக்குள் ஊர்ந்து கொண்டிருந்த அவனது விரல்கள் செய்த செயலில், பெண்ணவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, “ஆ ஆ…” என்று சத்தமாக அலறியே விட்டாள்.
தான் அணிந்திருந்த வெள்ளை நிற டாக்டர் கோட்டை இறுக்கமாகப் பற்றிய படி, துடித்துப் பிடித்துக் கொண்டு அவன் அறையில் இருந்து வெளியே வந்தாள் பிருந்தா.
அவளின் இதயமோ படு வேகமாக அடித்துக் கொள்ள, மேனியோ இன்னுமும் அவனின் செயலில் நடுங்கிக் கொண்டு இருந்தது.
‘ஓஹ் காட்! இதுக்கப்புறம் தனியா இவன் கூட வந்துடவே கூடாது… பொறுக்கி என்ன காரியம் பண்ணிட்டான்’ என்று வாய்க்குள்ளே முணு முணுத்தவளுக்கு, அவன் செய்த ஒவ்வொரு செயலும் மீண்டும் அவள் மனக் கண்ணில் வந்து போக, பாவையவளின் கன்னங்களோ வெட்கத்தில் சிவந்து போனது.
அவனின் நெருக்கம் தன்னை இந்த அளவுக்கு பலவீனமாக்கும் என்று அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையே!
கொஞ்சமும் தடுக்காமல் அவன் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டி கொண்டல்லவா இருந்தாள்.
இந்த அளவுக்கு அவன் மீது பைத்தியம் ஆகி விட்டோமா?
அவளுக்கே தன்னை எண்ணி ஆச்சர்யமாக தான் இருந்தது.
கஷ்டப்பட்டு தன்னை சமாளித்துக் கொண்டவள், அங்கிருந்து விறு விறுவென நடக்க, அப்போது தான் தந்தையின் அறையில் இருந்து வெளியே வந்த விஷ்வேந்திரனை கண்டாள்.
அவரை கண்டவள் ‘மாமாவா?’ என எண்ண, விஷ்வேந்திரனின் முகமோ இறுகிப் போயிருந்தது.
இதை கவனித்த பிருந்தாவோ ‘ஏன் ஒரு மாதிரியா இருக்காரு?’ என யோசனை செய்ய, விஷ்வேந்திரனும் அங்கிருந்து வேகமாக நடந்து சென்று விட்டார்.
பிருந்தாவும் குழப்பதுடனே அறைக்கு வர, வாசலில் அலைபேசியை பார்த்து கொண்டிருந்த மிருதுளாவோ, “அக்கா இவ்ளோ நேரம் எங்க போயிருந்த?” என்று கேட்டவள், அவளை மேலிருந்து கீழ் பார்த்து, “ஆமா… என்னடி இது? இப்படி வந்திருக்க? யாரோட கோட் இது? இவ்ளோ பெருசா இருக்கு! நீ எதுக்கு இதை போட்டு இருக்க?” என கேள்விகளை அடுக்கினாள்.
பிருந்தாவும் “ஹாங்… அது… என் மேல ஜூஸ் கொட்டிடுச்சு” என்று கேன்டினில் நடந்ததை சொல்ல,
அதை கேட்ட மிருவோ, “ஓஹ்… ஆனா… இது யாரோட கோட்?” என்று புருவம் உயர்த்தி கேட்டவள், கோட்டின் இடது பக்கம் குத்தப்பட்டிருந்த சிறிய பெயர் பேட்ஜை கண்டாள்.
“டாக்டர் சிம்ம விஷ்ணு…” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த பெயரை மெதுவாக வாசித்தவள், பிருந்தாவிடம், “இப்போ தான் புரியிது… இது உன் பாய் பிரெண்டோட கோட்டா?” என புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க,
அதில் சற்று தடுமாறிய பிருந்தாவோ, “சரியான கழுகு கண்ணுடி உனக்கு” என செல்லமாக அவளை முறைத்தவள், “சரி… சரி… நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ண வீட்டுக்கு கிளம்புறேன். அம்மா கேட்டா சொல்லிடு” என கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.