Ep 37

 

அத்தியாயம் 37

காரில் சென்று கொண்டு இருந்த விஷ்வேந்திரனின் சிந்தனை முழுக்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நடந்த சம்பவத்தில் தான் நிலைத்து இருந்தது.

அறையை திறந்து கொண்டு விஷ்வேந்திரன் உள்ளே நுழைய, அவரை கண்ட குணசேகரோ சற்று திகைத்தவர், அடுத்த கணம் தன்னை சமாளித்து கொண்டே, “வாங்க சம்பந்தி” என்றார்.

புன்னகைத்த படி வந்த விஷ்வேந்திரனும், “இப்போ ஹெல்த் எப்படி இருக்கு சம்பந்தி?” என்று அவரின் உடல் நிலையை பற்றி விசாரிக்க, குணசேகரும் சகஜமாக பேசினார்.

சிறிது நேர உரையாடலுக்கு பிறகு, குணசேகரோ சற்று தடுமாறிய படி, “சம்பந்தி நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்” என்று சொல்ல,

விஷ்வேந்திரனும் அவரின் தடுமாற்றத்தை கவனித்த படி, “என்ன விஷயம் சம்பந்தி?” என்றார்.

குணசேகரோ, “அது.. வந்து… இந்த கல்யாணத்தை பத்தி தான்…” என்று இழுக்க,

கீதாவோ அவரையே பார்த்து கொண்டு நின்றிருந்தார்.

விஷ்வேந்திரனோ, “கல்யாணத்தை பத்தியா? என்னாச்சு சம்பந்தி ஏதாவது பிரச்சனையா?” என்று பதற்றத்துடன் இருவரிடமும் கேட்க,

குணசேகரோ கண்களை ஒரு நொடி மூடித் திறந்தவர் “சம்பந்தி… நான் இப்போ சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… ஆனா இதுக்கு மேலயும் இந்த விஷயத்தை பத்தி பேசாம இருக்க முடியாது” என்றவர் நிறுத்தி,

ஒரு கணம் ஆழ்ந்த மூச்சை வெளி விட்ட படி, “நம்ம ஏற்பாடு பண்ணி இருக்க  இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று சொல்ல,

அதை கேட்ட விஷ்வேந்திரனோ அதிர்ந்து போனார்.

இப்படி ஒரு விடயத்தை கூறுவார் என்று அவர் துளியும் எதிர்பார்க்கவில்லையே!

அவரோ சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவர், முகத்தில் இருந்த அதிர்ச்சி மாறாமல், “சம்பந்தி நீங்க என்ன பேசுறீங்க? நம்ம கல்யாணத்தை நிறுத்திடலாமா!” என வினவ, 

குணசேகரோ அவரிடம் கை கூப்பிய படி, “தயவு செஞ்சு எங்களை மன்னிச்சுடுங்க சம்பந்தி… இதுக்கு மேலயும் இந்த கல்யாணத்தை எங்களால நடத்த முடியாது” என்று வருத்தத்துடன் கூற,

விஷ்வேந்திரனோ, “ஆனா… எதுக்காக இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க குணசேகர்? என்ன பிரச்சனை? இப்படி திடீர்னு கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று சற்று கோபம் கலந்த குரலில் கேட்டவர்,

கீதாவிடம் திரும்பி, “சம்பந்தியம்மா நீங்களாவது சொல்லுங்க? என்ன ப்ராப்ளம்? கல்யாணத்தை நிறுத்துற அளவுக்கு என்னாச்சு?” என்று வினவ,

அவரோ கண்கள் கலங்கிப் போய் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தார்.

குணசேகரோ, “சம்பந்தி எங்களை தப்பா எடுத்துக்காதீங்க! இத…” என்று ஏதோ பேச முன்னரே, கை நீட்டி அவரை தடுத்த விஷ்வேந்திரன், “ப்ளீஸ் இப்படி சுத்தி வளைக்காம என்ன காரணம்னு சொல்லுங்க?…. நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா? இல்லை என் பையனுக்கு உங்க பொண்ண கட்டி கொடுக்க விருப்பம் இல்லையா?” என நேரடியாக கேட்டார்.

குணசேகரோ சட்டென அவரை நிமிர்ந்து பார்த்தவர், “ஐயோ! உங்க மேல எந்த தப்புமே இல்லை சம்பந்தி. தப்பெல்லாம் எங்க மேல் தான். எங்க… பொண்ணுக்கு தான்….” என வலி நிறைந்த குரலில் சொல்லியவரால் அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது.

விஷ்வேந்திரனோ பொறுமையை இழுத்து பிடித்த படி, “சோ.. உங்க பொண்ணுக்கு என் பையனை கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டம் இல்லை… ரைட்?” என கேட்டார்.

குணசேகரோ எந்த பதிலும் பேச முடியாமல் அமைதியாக இருக்க,

அவரின் மெளனமே விஷ்வேந்திரனுக்கு எல்லா பதிலையும் சொல்லிவிட்டது.

அதற்கு மேலும் எதையும் தூண்டி துலாவ விரும்பாத விஷ்வேந்திரனும், “என் பையனை விருப்பம் இல்லாத ஒரு பொண்ணுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் எங்களுக்கும் இல்லை. ஒரு வாழ்க்கை நல்லபடியா ஆரம்பிக்கணும்னா, ரெண்டு பேரோட சம்மதமும் முக்கியம். அதுல ஒருத்தருக்கே விருப்பம் இல்லன்னா, அந்த கல்யாணத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை.” என்றவர்,

உஷ்ண பெரு மூச்சு ஒன்றை வெளி விட்ட படி, “நான் கிளம்புறேன் குணசேகர். உடம்ப பார்த்துக்கோங்க” என இறுகிய குரலில் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

நடந்த அனைத்தையும் யோசித்தவரின் முகமோ மேலும் இறுகிப் போனது.

இந்த விடயத்தை எப்படி வீட்டினரிடம் கூறுவது?

அதுவும் தன் மகனுக்கு இது தெரிந்தால் அவன் நிலை என்னவாகும்?

அதுவே அவருக்கு மேலும் வருத்தத்தை அளித்தது.

அன்று இரவு ஆபிஸ் முடிந்து விஷ்வஜித் மற்றும் அஸ்வந்த் வீட்டுக்கு வர, ஹாலில் பெற்றோர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

விஷ்வாவை கண்டவர்கள் சட்டென அமைதியாகி விட, அது அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை.

அவர்கள் மாடிக்கு செல்லுவதையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவின் அன்னை மீனாட்சி, “என்னங்க விஷ்வா கிட்ட எப்படி இந்த விஷயத்தை சொல்லுறது? அந்த பொண்ணு மேல அவன் எவ்ளோ ஆசை வச்சிருக்கான். இப்போ இதை பத்தி சொன்னா அவன் உடைஞ்சி போயிடுவானோன்னு பயமா இருக்கு” என்று கண்கள் கலங்கி போய் சொல்ல,

அவருக்கும் அதே எண்ணம் தான்.

“இதுக்கு மேல நம்மளால என்ன பண்ண முடியும் மீனா? அந்த கடவுள் என்ன எழுதி வச்சிருக்கானோ அதானே நடக்கும்! நம்ம பையனுக்கு இது பெரிய ஏமாற்றம் தான். ஆனா, விருப்பம் இல்லாத ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறதை விட, இப்போவே இந்த கல்யாணம் நின்னது நல்லதுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்…” என்றார்.

மீனாட்சியோ கண்களை துடைத்த படி, “எனக்கு அந்த பொண்ணு மேல தான் ஆத்திரமா வருது. புடிக்கலன்னா முதல்லே சொல்லி இருக்க வேண்டியது தானே! இவ்வளவு நாள் ஒரு வார்த்தை கூட பேசாம அமைதியா இருந்துட்டு, இப்போ கடைசி நேரத்துல இப்படி பண்ணிட்டாளே! நம்ம பையன பத்தி கொஞ்சமாவது யோசிச்சாளா!…” என்று ஆதங்கத்துடன் கூற,

“விடு மீனா… யார் மேலயும் கோபப்பட்டு எந்த பயனும் இல்லை. நடக்கக் கூடாதது நடந்துடுச்சு. இனிமே இதை விஷ்வா எப்படி எடுத்துக்கப் போறான்னு தான் எனக்கு கவலையா இருக்கு…” என்று கூறிக் கொண்டார்.

இரவு அனைவரும் சாப்பிட வந்து அமர, மீனாட்சியும் அனைவருக்கும் உணவை பரிமாறினார்.

விஷ்வாவோ கைகளை கழுவி விட்டு வந்து இருக்கையில் அமர்ந்தவன், “அப்பா.. மாமாவை போய் பார்த்தீங்களே இப்போ எப்படி இருக்காரு? எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுறாங்களாம்?” என கேட்க,

அவரோ சற்று தடுமாறிய படி, “அது… இப்போ நல்லா இருக்கார். டூ டேய்ஸ் ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கலாம்..” என்று கூறிவிட்டு, அமைதியாக சாப்பிட ஆரம்பித்தார்.

“ஓஹ்…” என்ற விஷ்வா அப்போது தான் 

தந்தையின் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை கவனித்தான்.

எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டே சாப்பிடுபவர் இன்று அமைதியாக தட்டையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் புருவங்கள் சற்று இடுங்கியது.

“அப்பா…. என்னாச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என கேட்க,

உணவை பரிமாறிக் கொண்டிருந்த மீனாட்சியோ சட்டென கையில் இருந்த கரண்டியை கீழே போட்டு விட்டார்.

அந்த சத்தத்தில் விஷ்வாவும், அஸ்வந்த்தும் மீனாட்சியை திரும்பிப் பார்த்தனர்.

மீனாட்சியோ பதற்றத்தை மறைக்க முயன்றபடி, “ஒண்ணுமில்லப்பா… கைல இருந்து தவறி விழுந்துடுச்சு…” என்று சொல்லி கீழே விழுந்த கரண்டியை எடுக்க குனிந்தார்.

ஆனால் விஷ்வாவின் பார்வையோ பெற்றோர்கள் இருவரின் மீதும் அழுத்தமாகப் பதிந்தது.

அவர்கள் தன்னிடம் ஏதோ மறைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவன்,

“அப்பா என்னாச்சு? என் கிட்ட ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு?” என்று வெளிப்படையாக கேட்க,

அவரோ அவசரமாக “அதெல்லாம் ஒன்னும் இல்லை விஷ்வா… நீ… முதல்ல சாப்பிடு. மீனாட்சி அவனுக்கு…” என்று ஏதோ சொல்ல முன்னரே, 

பொறுமை இழந்த விஷ்வா, “அப்பா… போதும். இப்படி பேச்சை மாத்தாம என்ன ஆச்சுன்னு சொல்லுறீங்களா?” என்று பெருங் குரலில் கூற,

அஸ்வந்தும் அவர்களையே பார்த்து கொண்டிருந்தான்.

விஷ்வேந்திரனோ அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாதவர், “அது… வந்துப்பா… இன்னக்கி குணசேகரை நான் ஹாஸ்பிடல்க்கு பார்க்க போயிருந்தேல்ல…” என இழுக்க,

விஷ்வாவின் முகமோ சட்டென மாறியது. 

“அங்க ஏதாவது பிரச்சனையாப்பா?” என்று அவன் வினவ,

அவரோ, “விஷ்வா… பிருந்தாவோட அப்பா இந்த கல்யாணத்தை இதோட நிறுத்திடலாம்னு சொன்னாருப்பா.” என்று மனதை கல்லாக்கி கொண்டு உண்மையை சொல்லி விட,

“வாட்…?” என்று நம்ப முடியாமல் விஷ்வா கேட்க, இதை கேட்ட அஸ்வந்துக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

விஷ்வாவோ “என்னப்பா சொல்றீங்க?” என்று மீண்டும் கேட்க, மீனாட்சியோ அவன் தோளை பற்றிய படி, “டேய் அந்த பொண்ணுக்கு… இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாம்டா….” என்று கூற,

“அதுக்கு வாய்ப்பே இல்ல” என்று கத்திய படி இருக்கையில் இருந்து விருட்டென எழுந்து விட்டான் விஷ்வா.

அங்கிருந்தவர்கள் அவனை அதிர்ந்து போய் பார்க்க, 

“என் பிந்துவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா? இப்படி அவளே உங்க கிட்ட சொன்னாளா?” என கோபமாக தந்தையிடம் கேட்டான்.

அவரோ, “அந்த பொண்ணு சொல்லல விஷ்வா. ஆனா அவளோட அப்பா என் கிட்ட அதான் சொன்னாரு. அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாம். அதுனால தான் அதை நிறுத்துறதா சொன்னாரு” என்றவர்,

“இதோ பாருடா உனக்கு இந்த விஷயம் கஷ்டமா இருக்கும்னு எங்களுக்கும் தெரியும். ஆனா இப்படி விருப்பம் இல்லாத பொண்ண….” என அவர் வார்த்தையை முடிக்க முன்னரே,

சட்டென கை நீட்டி அவரை தடுத்தவன், “அப்போ இது அவளோட முடிவுன்னு எப்படி உங்களால சொல்ல முடியும்?” என்று கேட்க,

விஷ்வேந்திரனோ அவனை புரியாமல் பார்த்தார்.

ஏனோ விஷ்வாவுக்கு அவள் தான் இந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லியிருப்பாள் என்று சுத்தமாக நம்ப முடியவில்லை.

அவளுக்கு தன் மீது விருப்பம் இருக்கிறது என்று தானே அவன் இப்போது வரையில் நினைத்து கொண்டிருக்கிறான்.

“இதுல ஏதோ இருக்கு. பிந்து மனசார இந்த முடிவை எடுத்திருக்க மாட்டா. அவளை ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படிச் சொல்ல வச்சிருக்காங்க… நானே அவ கிட்ட போய் பேசுறேன்” என்றவன் அங்கிருந்து விறு விறுவென மாடிக்கு செல்ல,

“டேய் விஷ்வா நில்லுடா” என்று அவனின் அன்னை கத்தியது காற்றில் தான் கரைந்து போனது.

*****

குளியலறையில் இருந்து வெறும் பூந்துவாலையை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள் பிருந்தா.

தலையில் இருந்து நீர் சொட்ட அதை துவட்டிய படி வந்தவள், அங்கிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் வந்து நின்றாள்.

அப்போது தான் கண்ணாடியின் ஊடாக கட்டிலில் கிடந்த அவனின் வெள்ளை கோட் அவள் விழிகளில் தென்பட்டது.

அதை பார்த்தவள் இதழ்கள் தன்னையும் அறியாமல் விரிந்து கொள்ள, மெதுவாக அந்த கோட்டை கையில் எடுத்தாள்.

அதில் இருந்த அவனின் பெயரை  வருடியவள் உதடுகள், “சிம்மா” என்று மெல்ல முணுமுணுக்க, அடுத்த கணம் அவன் தீண்டிய இடமெல்லாம் அவள் நினைவில் வந்து போய், பாவையவளை வெட்கக் கடலில் மூழ்கச் செய்தது.

“பொறுக்கி இன்னக்கி என்னெல்லாம் என்னை பண்ணிட்ட!” என்று சொல்லிக் கொண்டே, அந்த கோட்டை மெல்ல தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அதில் இருந்து வந்த அவனின் ஆண்மை கலந்த வாசனை பெண்ணவளை மேலும் கிறங்கச் செய்தது.

அந் நொடி அவள் மேனியோ சிலிர்த்து போக, அவனே தன்னை கட்டியணைத்து இருப்பது போன்ற உணர்வு அவளுள்.

அப்போது திடீரென அவளின் அலைபேசி அலற, அந்த சத்தத்தில் அவன் நினைவுகளிலிருந்து மீண்டவள்,  சற்று பதற்றத்துடன் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அதை பார்த்ததுமே அவளின் இதழ்களில் மீண்டும் வெட்கப் புன்னகை   மலர,

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “என்ன சார் இந்த டைம்ல கால் பண்ணி இருக்கீங்க?” என கேட்டாள்.

அவனோ கையில் இருந்த சிகரட்டை புகைத்த படி, “ம்ம்… என் கோட்ட வச்சி என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரிஞ்சிக்க தான்” என்றானே பார்க்கலாம் அவளுக்கோ புரையேறி விட்டது. 

“வாட்?” என்று அதிர்ந்து கேட்டவள், “அ… அத வச்சி நான் என்ன பண்ணிட்டு இருப்பேன்?” என்று மழுப்பிய படி சொன்னாள்.

அவனோ, “சோ நீ அதை கட்டி பிடிக்கல?” என்று நக்கலாகக் கேட்க,

அவளோ விழிகளை பெரிதாக்கி, ‘இவனுக்கு இதெல்லாம் எப்படி தெரிது?’ என மனதுக்குள் எண்ண, 

சிம்மனோ “என்னடி பதிலையே காணோம்? என்ன பொய் சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கியோ?” என சிரிப்பை அடக்கிய படி கேட்டான்.

அவளோ தொண்டையை செருமி தன்னை சமாளித்துக் கொண்டவள், “ஹலோ… ந… நான் எதுக்கு பொய் சொல்லணும்? உங்க கோட்ட நான் தொட கூட இல்ல. இப்போ நான் தூங்கிட்டு இருக்கேன்…” என்று வாய் கூசாமல் பொய் சொன்னாள்.

“ஓஹோ! அப்போ நீ என் கோட்ட டச் கூட பண்ணல?” என்று கர கரப்பான குரலில் கேட்க,

அவளோ அப்படியே கட்டிலின் மேல் விழுந்தவள், அவனின் கோட்டை மேலும் தன் மார்போடு அணைத்து கொண்டு, “இல்லையே!…. நான் அதை டச் பண்ணவே இல்ல” என்றாள்.

அவளின் அந்த சிறு பிள்ளைத்தனமான பொய்யை ரசித்து மெல்ல நகைத்தவன், “பேபி” என்று கிறக்கமாக அழைத்தான்.

அவனின் குரலில் இருந்த நக்கல் மறைந்து இப்போது ஒரு மார்க்கமாக ஒலிக்க, அதை உணர்ந்தவளின் இதயமோ படு வேகமாக அடித்துக் கொண்டது.

‘என்ன வாய்ஸ் மாறுது’ என தனக்குள்ளேயே கூறிக்கொண்டவள்,

“எ… என்ன?” என்று சிறு தடுமாற்றத்துடனேயே கேட்டாள்.

அவனோ தனது பின்னங்கழுத்தை வருடிய படி, “இன்னக்கி எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதுடி…. கண்ண மூடினாலே மைண்ட் முழுக்க அதான் வருது” என்று உஷ்ணப் பெரு மூச்சுடன் சொல்ல,

‘விளங்கிடும்!’ என்று மனதுக்குள் புலம்பியவளுக்கு அவன் எதை பற்றி கூறுகிறான் என்று புரியாமலா இருக்கும்?

ஆனாலும் வேண்டும் என்றே தெரியாதது போல, “தூக்கம் வரலன்னா புக்ஸ் ஏதாவது படிங்க சார்… இல்லன்னா ஸ்லீப்பிங் டோஸ் போட்டுக்கோங்க…. நல்லா தூக்கம் வரும்.” என்று கிண்டலாக சொல்ல,

அவனோ இதழ்களை வளைத்து, ‘ஓஹோ நர்ஸம்மா என் கிட்டயே விளையாடுறீங்களோ!’ என உள்ளுக்குள் எண்ணியவன்,

“பட் இந்த வியாதிக்கு எந்த ஸ்லீப்பிங் டோஸும் வேலை செய்யும்ன்னு எனக்கு தோணலயே!…” என்று மோகம் கலந்து ஒரு மார்க்கமாக சொல்ல, 

அவளோ முகம் சிவந்து போனவளாய், “சார்… இதெல்லாம் ரொம்ப டூ மச்!” என்றாள்.

சிம்மனோ தன் இதழ்களை ஈரமாக்கிய படி, “பேபி…. சத்தியமா என்னால கண்ட்ரோலே பண்ண முடிலடி…. யூ ஆர் மேக்கிங் மீ சோ டாம் ஹார்ட்” என்று வெளிப்படையாகவே சொல்ல,

பெண்ணவளுக்கோ ஒரு கணம் இதயத் துடிப்பு எகிறியது.

‘ஐயோ!…. படுத்துறானே!’ என வாய்க்குள்ளே புலம்பியவள்,

“இப்போ அதுக்கு நான் என்ன தான் சார் பண்ண முடியும்?” என பாவமான குரலில் கேட்டாள்.

அவனோ சிகரட்டை வாயில் வைத்து புகையை இழுத்து விட்டவன், “எனக்கு இப்போவே வீடியோ கால் பண்ணு” என்று மோகமும், அழுத்தமும் கலந்த குரலில் சொன்னான்.

அவளோ கண்களை உருட்டிய படி, “வாட்? வீடியோ கால் ஆ? எ… எதுக்கு? நம்ம தான் ஏற்கனவே போன்ல தானே பேசிட்டு இருக்கோம்?” என்று அவசரமாகக் கேட்க,

நெற்றியை நீவியவனோ, மெல்ல தன்னை ஒரு கணம் குனிந்து பார்த்து விட்டு, “ஹேய்… சொன்னா சொன்னதை மட்டும் பண்ணுடி. எனக்கு எதிர்த்து பேசினா சுத்தமா பிடிக்காது” என்று  கூற,

அவளோ இதழ்களை பிதுக்கி, “எ… என்னால முடியாது… எனக்கு… இப்போ தூக்கம் வருது. நான் தூங்க போறேன்… பாய்” என்று பட படவென கூறியவள், அவன் அடுத்த வார்த்தை பேச முன்னரே அலைபேசியை அவசரமாக துண்டித்து விட்டாள்.

போனை தூக்கி ஓரமாக போட்டவளுக்கோ அப்போது தான் நிம்மதியாக சுவாசிக்கவே முடிந்தது.

“ஹப்பாடி தப்பிச்சோம்….. எப்போ பாரு அதே நினைப்பு தான். சரியான இம்சை” என்று செல்லமாக திட்டிக் கொண்டவள், அங்கிருந்து எழப் போக,

மீண்டும் அவளின் அலைபேசி அலறியது.

“ஓ காட்! இவன் இன்னக்கி நம்மளை ஒரு வழி பண்ணாம விட மாட்டான் போலயே!” என்று தலையில் அடித்துக் கொண்டவளுக்கு தான் தெரியுமே, சிம்மன் அவ்வளவு எளிதில் எதையும் விட்டுக்கொடுக்கும் ரகம் இல்லை என்று.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், 

“சிம்மா இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்? எதுக்கு இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க? என்னால இப்போ வீடியோ கால் எல்லாம் பண்ண முடியாது… ப்ளீஸ் நம்ம நாளைக்கு பேசிக்கலாமே!” என்று கெஞ்சலாக கூற,

மறு முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

பிருந்தாவோ “ஹலோ… சிம்மா… லைன்ல இருக்கீங்களா?” என்று சந்தேகமாக கேட்க,

“நான் விஷ்வா பேசுறேன்” என்ற ஆடவனின் குரலில், அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top