அத்தியாயம் 29
அலைபேசியில் வந்த அவனின் பெயரைக் கண்டதும் பெண்ணவளின் முகமோ இறுகிப் போனது.
இரு நாட்களுக்குப் பிறகு இன்று தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள்.
இல்லை இல்லை வீட்டினர் முன்னிலையில் அப்படி நடித்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அதற்குள் மீண்டும் அழைத்து அவள் நிம்மதியை கெடுக்க ஆரம்பித்து விட்டானே!
அழைப்பு தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்க, அவளின் அன்னை கீதாவோ,
“யாரும்மா? ஏன் போனை எடுக்காம இருக்க?” என்று சலிப்பாக திரும்பி அவளிடம் கேட்டார்.
பிருந்தாவோ “அது… வந்து…. எ.. என் பிரண்டுமா… ” என்று அவசரமாக சமாளித்தவள், அலைபேசியை எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியே செல்ல, அவரும் புரியாமல் மகளை பார்த்தார்.
பிருந்தாவோ சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றவள், “ஹலோ” என்றாள்.
மறு முனையில் இருந்தவனோ, “பரவால்லயே! இன்னக்கி உடனே கால ஆன்சர் பண்ணிட்ட!” என்றவன் குரலில் ஏகத்துக்கும் நக்கல் நிறைந்திருந்தது.
அவளோ, ‘இவனுக்கு வேற வேலையே இல்ல’ என உள்ளுக்குள் புலம்பியவள்,
“இப்போ எதுக்கு போன் பண்ணீங்க?” என்று நேரடியாக விடயத்தை கேட்க,
சிம்மனோ, “நான் உன்ன மீட் பண்ணனும்” என்றான்.
அவளோ “எதுக்கு?” என்று கேட்க, “நான் உன்ன மீட் பண்ணனும்னு சொன்னேன்” என்றான் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்த படி,
அவன் குரலில் இருந்த அந்த மிரட்டலான தொனியில் அவள் உடலோ சற்று உதறியது.
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவள், “என்னால முடியாது.” என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
அவனோ நெற்றியை நீவிய படியே, “ஐ அம் நாட் ஆஸ்கிங் யுவர் பர்மிஷன் பேபி. ஐ அம் ஜஸ்ட் இன்ஃபார்மிங் யூ!” என்றான் சற்றும் அலட்டிக்கொள்ளாமல்.
அவனுடைய அந்தத் திமிரான பேச்சில் அவளுக்கு ஆத்திரம் பொங்கியது.
“நீங்க கூப்பிடும் போதெல்லாம் நான் வரணுமா? சாரி சிம்மா, எனக்கு உங்களை பார்க்க சுத்தமா இஷ்டம் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட,
அவனோ எந்த ஆரவாரமும் இல்லாமல், “ஓகே பேபி. அப்போ நானே உள்ள வரேன்” என்றான் தோள்களை குலுக்கிய படியே,
அவளோ “வாட்?” என்று புரியாமல் வினவ,
சிம்மனோ, “நான் உன் வீட்டுக்கு வெளியில தான் வைட் பண்ணுறேன். நீ இங்க வரலன்னா நான் உள்ள வந்துடுவேன்” என்றான் தனது காரில் சாய்ந்து சிகரெட்டை புகைத்த படியே,
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“எ… என்ன… நீங்க எ.. என் வீட்டுக்கு வெளியில இருக்கீங்களா?” என்று தட்டு தடுமாறிய படி வந்தது அவளது வார்த்தைகள்.
அவனோ அவளின் வீட்டை பார்த்த படியே, “எனக்கு ஒரே விஷயத்தை ரெண்டு வாட்டி சொல்ல பிடிக்காது பேபி. உனக்கு டூ மினிட்ஸ் தான் டைம். அதுக்குள்ள நீ வரலன்னா நான் உள்ள வந்துடுவேன். சாய்ஸ் ஈஸ் யோர்ஸ்” என்றவன் அவள் பதிலை கூட எதிர் பாராது அலைபேசியை துண்டித்து விட,
அவளுக்கு தான் நெஞ்சம் பட படவென அடித்துக் கொண்டது.
இப்படி வீடு வரைக்கும் வந்திருப்பான் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லையே!
இப்போது செல்லவில்லை என்றால் நிச்சயம் அவன் சொன்னதை செய்து விடுவானே!
அவனை பற்றி தான் அவளுக்கு நன்றாக தெரியுமே!
வேறு வழி இல்லாமல் மெதுவாக அன்னையிடம் சென்றவள், “ம்மா…” என்று அழைக்க, அவரோ சமைத்து கொண்டிருந்தவர் “இவ்ளோ நேரம் என்னடி பண்ணிட்டு இருந்த? வந்து இந்த வெங்காயத்தை சீக்கிரம் கட் பண்ணு” என்று சொல்ல,
‘ஐயோ! இவங்க வேற என் அவசரம் புரியாம’ என்று மனதுக்குள் புலம்பியவள், திரும்பி வாசலையே பார்த்த படி, “அது.. வந்து… அம்மா என்னோட காலேஜ் பிரண்ட் மீனா இருக்கால்ல… அவ வெளியில வைட் பண்ணுறா நான் சீக்கிரம் பேசிட்டு வந்துடுறேன்” என்றவள் போகப் பார்க்க,
அவளின் அன்னையோ, “எதுக்கு வெளியில வைட் பண்ணுறா? உள்ள வர சொல்லுடி!” என்று தன் மகளையே ஒரு மாதிரியாக பார்த்த படி சொல்ல,
பிருந்தாவோ கைகளை பிசைந்த படி, “இ.. இல்லம்மா அவ அர்ஜென்ட்டா கிளம்பணுமாம். அதான் வெளியில வைட் பண்ணுறா… நான் சீக்கிரம் பேசிட்டு வந்துடுறேன்ம்மா” என்று சமாளித்தவள், எங்கே அதற்கு மேல் அங்கே நின்றால் அன்னை வேறு ஏதாவது கேள்வி கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள்.
சிம்மனோ தனது காரில் சாய்ந்த படியே, அவள் வருகைக்காக காத்து கொண்டிருக்க, பிருந்தாவும் வீட்டின் கேட்டை திறந்த படி வெளியே வந்தாள்.
அவளோ சாதாரணமாக ஒரு கருப்பு நிற சுடிதார் அணிந்து, கூந்தலை தூக்கி கொண்டை போட்டு இருக்க, அதில் பிடிபடாத சிறு கேசங்கள் அவள் முகத்தில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன.
வரும் அவசரத்தில் அவள் துப்பட்டாவை கூட போடாமல் அப்படியே வெளியில் வந்து விட, மறைக்க வேண்டிய அவளின் அங்க வளைவு, நெளிவுகள் அவன் பார்வைக்கு விருந்தாக மாற, அவனின் கூரிய விழிகளோ பாவையின் மேனியெங்கும் அத்து மீறி ஊடுருவியது.
அவன் பார்வை போன திசையை உணர்ந்து கொண்டவளுக்கோ கூச்சத்தில் முகமெங்கும் செவ்வானமாய் சிவந்து போக, சட்டென தன் கரங்களால் தன்னை மறைத்து கொண்டே, அவனை நெருங்கி வந்தவள், “என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு இப்படி வந்து டார்ச்சர் பண்ணுறீங்க? உங்களால வீட்டுல நான் அம்மா கிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்” என்று கோபமாக கத்தியவள், அடுத்து அவன் செய்த செயலில் விழி விரித்து தான் போனாள்.
ஆம்..
தன்னை நோக்கி கோபமாக வந்த பாவையின் மெல்லிடையை பற்றி சட்டென தன்னை நோக்கி இழுத்தவன், அடுத்த கணம் அவளின் துடிக்கும் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்திருந்தான்.
சற்றும் எதிர் பாராத அவனின் இந்த இதழணைப்பில் பெண்ணவளின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, சில கணம் தனக்கு என்ன நடந்தது என்பதை கூட அவளால் யூகிக்க முடியவில்லை.
ஒரு சில நொடிகள் கடந்த பின்னரே அவள் மூளை வேலை செய்ய ஆரம்பிக்க, அப்போதே அவன் செய்யும் செயல் அவளுக்கு உரைத்தது.
அவனுடைய முரட்டுத் தனமான முத்தத்தில் திணறிய படியே, தன்னுடைய பிஞ்சு கரங்களால் அவனின் மார்பை பிடித்து தள்ளினாள் அந்த பாவை.
ஆனால், பாவம் அவளால் அந்த இரும்பு போன்ற ஆடவனை அசைக்க கூட முடியவில்லை.
இயலாமையால் அவளின் கண்களில் இருந்து சட்டென கண்ணீர் துளிகள் வெளியேற, அவனின் முத்தத்தின் வீரியத்தில் பெண்ணவளின் மேனி மொத்தமும் நடுங்கியது.
இப்படி நடு ரோட்டில் வைத்து அதுவும் பட்டப் பகலில் வெளிப்படையாக நின்று முத்தம் கொடுத்தால் அங்கு செல்பவர்கள் கண்களில் இது படாமலா இருக்கப் போகிறது?
அவ் வழியாக சென்றவர்களோ இக் காட்சியை கண்டு முகம் சுளித்த படி கடந்து செல்ல, ஒரு சிலர் அவர்களுக்கு கேட்கும் படியாகவே, “சீ கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம நடு ரோட்டுல நின்னு என்ன கூத்து பண்ணுதுங்க பாரு. பெத்தவங்க மானத்தை வாங்கவே வந்திருக்குதுங்க” என்று குத்தலாக பேசிய படி சென்றனர்.
அவர்கள் பேசுவது எல்லாம் பெண்ணவளின் செவிகளில் வந்து விழ, அவளுக்கோ அவமானத்தில் உயிர் போவது போல இருந்தது.
ஆனால், சிம்மனோ ஊராரின் பேச்சையோ, அவளது தவிப்பையோ சிறிதும் பொருட்படுத்தவில்லை.
பெண்ணவளின் இதழ்களின் மென்மையில் மொத்தமாக திளைத்து போனவன், ஒருவழியாக அவள் இதழ்களை விட்டு மெல்ல தன் இதழ்களை பிரித்தெடுக்க, பெண்ணவளோ மூச்சு விட கூட முடியாமல் திணறிப் போய் நின்றிருந்தாள்.
அவள் முகமோ அவமானத்திலும், வெட்கத்திலும் சிவந்து போயிருக்க, அவனை எரித்து விடுவது போல பார்த்தவள், “உங்களுக்கு கொஞ்சமும் அசிங்கமா இல்லையா? இப்படி நடு ரோட்டுல வச்சி கிஸ் பண்ணுறீங்க?” என்று கத்த,
சிம்மனோ அவள் இடையை பற்றி மேலும் தன்னிடம் நெருக்கிக் கொண்டவன், “இதுல என்னடி அசிங்கம் இருக்கு? நீ என்னோட வைப், உன்ன எங்க வேணாலும் வச்சி கிஸ் பண்ணுவேன். எனக்கு அதுக்கான எல்லா ரைட்ஸும் இருக்கு” என்று அழுத்தமாக சொல்ல,
அவளுக்கோ சீ என்றிருந்தது
“உங்க கிட்ட பேசுறதே வேஸ்டு. போன் பண்ணி என்னை இதுக்காக தான் கூப்பிட்டீங்களா? முதல்ல என்னை விடுங்க….” என்று அவனிடம் இருந்து விலக திமிறினாள்.
சிம்மனோ, “ஓவரா பண்ணாதடி. நான் ஒன்னும் இதுக்காக உன்ன வர சொல்லல” என்றவன் அவளை விட்டு விலகிய படியே, “இப்படி வந்து நின்னா என் கண்ட்ரோல் மிஸ் ஆக தானே செய்யும். வெறும் கிஸ்ஸோட விட்டேன்னு சந்தோஷப்படு” என்றவன் பார்வை மீண்டும் அவள் மேனியில் வலம் வர,
‘பொறுக்கி’ என்று வாய்க்குள்ளயே முணு முணுத்துக் கொண்டவள், “எதுக்கு என்னை வர சொன்னீங்க? முதல்ல அதை சொல்லுங்க” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்த படி.
அவனோ பாக்கேட்டில் கை போட்ட படியே, காரில் சாய்ந்து நின்றவன், “உனக்கு ஒரு விஷயத்தை நியாபகம் படுத்தலாம்னு வந்தேன்” என்றான் அழுத்தமான குரலில்.
அவளோ புரியாமல் அவனை ஏறிட்டு பார்த்தவள், “என்ன விஷயத்தை?” என்று கேட்க,
சட்டென அவள் கழுத்தில் மறைத்து வைத்திருந்த தாலியை இழுத்தவன், “இத பத்தி” என்றான் கர கரப்பான குரலில்.
அவன் இழுத்ததில் பெண்ணவளோ நிலை தடுமாறி அவன் மார்பில் மோதி விட, அதிர்ந்து போய் அவனை பார்த்தவள், “வலிக்கிது சிம்மா ப்ளீஸ் விடுங்க” என்றாள் அவனிடம் இருந்து விலக போராடிய படியே.
அவனோ தன் பிடியை சற்று தளர்த்த, சட்டென அவனிடம் இருந்து விலகி நின்றவள், “ஏன் இப்படி நடு ரோட்டுல நின்னு மிருகம் மாதிரி நடந்துகிறீங்க?” என்று சீற,
“ஆமாண்டி நான் மிருகம் தான். இந்த மிருகத்தை தான் நீ லவ் பண்ணுற!” என்றான் கர்ஜனையாக.
அவளோ, “ஆமா… அதான் நான் பண்ண பெரிய தப்பு” என்று வாய்க்குள் முணு முணுக்க, அவனோ “என்ன சொன்ன?” என்றான் மிரட்டலாக.
அவளோ திடுக்கிட்டு போய் அவனை பார்த்தவள், “ந… நான் ஒன்னும் சொல்ல…. ப்ளீஸ் இங்கிருந்து போயிடுங்களேன். என் அம்மா பார்த்தாங்கன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்… ப்ளீஸ்…” என்று கெஞ்சாத குறையாக சொல்ல,
அவனோ ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை வெளி விட்ட படி “ஓகே…. இப்போ கிளம்புறேன்…. பட்….” என்று நிறுத்தியவன்,
அவளை உறுத்து விழித்த படியே, “திரும்பவும் வருவேன் பேபி டூ டேய்ஸ் கழிச்சி. இங்க கிடையாது…. ஸ்ரைட்டா உன் வீட்டுக்கு… உன்ன என் கூட கூட்டிட்டு போறதுக்காக. ரெடியா இரு” என்று மிரட்டலாக சொன்னவன்,
அவளின் பதிலை கூட எதிர் பாராது வண்டியில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட, பிருந்தாவோ சிலை போல அதே இடத்தில் உறைந்து போய் நின்றிருந்தாள்.
சொன்னதை செய்து முடிக்கும் பிடிவாதக்காரன் அவன்.
இந்த அளவுக்கு உறுதியாக செல்லி விட்டு செல்லுகிறான் என்றால் நிச்சயம் தன்னை அழைத்து செல்ல அவன் வருவான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
ஒரு வேளை அவன் வீட்டுக்கு வந்தால் அனைத்து உண்மையும் தெரிந்து விடுமே!
நினைக்கும் போதே அவள் உள்ளம் பதறியது.
நடுங்கும் கரங்களால் தன்னுடைய கழுத்தில் கிடந்த தாலியை இறுக்கமாக பற்றிக் கொண்டவள், அடுத்து என்ன செய்வது என்றே அறியாது தவித்து போய் நின்றாள்.
வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவள், அன்னை தேடுவார் என்ற பயத்தில் விறு விறுவென வீட்டுக்குள் நுழைய, அவளின் அன்னையோ சோபாவில் அமர்ந்திருந்தார்.
எங்கே தன் முகத்தை கண்டால் ஏதாவது சந்தேகம் வந்து விடுமோ என்ற எண்ணத்தில் அவசரமாக மாடிக்கு செல்லப் பார்க்க,
“நில்லுடி” என்றார் அவளின் தாய்.
அவர் குரலில் பிருந்தாவின் கால்கள் அப்படியே நின்று விட, “எ…. என்னம்மா?” என்றாள் மெல்ல தன் பார்வையை அவர் புறம் திருப்பி.
“யாரை போய் பார்த்துட்டு வர?” என்றவரின் குரல் இப்போது சற்று அழுத்தமாக ஒலிக்க, பிருந்தாவோ, “அ… அது… நான் தான் சொன்னேனே… எ.. என்னோட பிரண்ட் மீனா வந்திருக்கான்னு… அவளை தான்…” என்று திக்கித் திணறிய படி சொல்ல,
அவரோ எழுந்து அவளை நோக்கி வந்தவர், “உனக்கு அப்படி ஒரு பிரண்ட் இருக்கான்னு நீ என் கிட்ட சொன்னதே இல்லையே!” என்று கூற,
இவளோ தடுமாறிய படி “அது… அவ… என்னோட காலேஜ் பிரண்ட்ம்மா…” என்று சொன்னது தான் தெரியும்,
அவளை நெருங்கி வந்தவர், “பொய் சொல்லாதடி” என்று கத்திய படி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.