அத்தியாயம் 18
அவன் பார்வை தன் மேனியில் படிந்திருந்ததை உணர்ந்தவளோ, சட்டென தன்னை குனிந்து பார்க்க, அவள் ஆடையோ சற்று விலகி அவள் எழில் வளைவுகளை அவளுக்கே காட்ட,
நெஞ்சே அடைத்து விட்டது போல இருந்தது அவளுக்கு.
கையில் இருந்த மருந்துகளை கீழே போட்டவள், இரு கரங்களாலும் தன்னை மறைத்த படி சட்டென எழுந்து கொண்டாள்.
சிம்மனோ அவளது பதட்டத்தை கண்டு, “என்னாச்சு பேபி? நீ அன் கம்ஃபோர்ட்டபிளா பீல் பண்ணுறியோ! நான் வேணா என் கோர்ட்ட தரட்டா?” என்று ஏகத்துக்கும் நக்கலாக கேட்டானே பார்க்கலாம், அவள் முகமோ அஷ்டகோணலாக மாறியது.
பார்ப்பதெல்லாம் பார்த்து விட்டு இப்போது இப்படி கேட்கிறானே!
ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
“நீங்க ஒரு டாக்டர்ன்னு சொல்லிக்கவே உங்களுக்கு அசிங்கமா இல்லை?” என்று வெடுக்கென அவள் கேட்க, அவன் இதழ்களோ கேலியாக வளைந்தது.
“வை பேபி? டாக்டர்ன்னா பீலிங்ன்ஸ் எதுவும் இல்லாத ஜடமா ? இல்லை…. நீ எப்படி நின்னாலும்…. கண்ணை மூடிட்டு போறதுக்கு நான் என்ன புத்தரா?” என்று புருவம் உயர்த்தி அவன் பதிலுக்கு வினவ,
அவனது திமிரான பேச்சில் அவளுக்குக் கோபம் தான் வந்தது.
ஆனாலும் அவனிடம் இப்போது வீண் தர்க்கம் செய்ய அவளுக்கு துளியும் விருப்பமில்லை.
அவனிடம் பேசி அவளால் தப்ப முடியுமா?
எது பேசினாலும் அது தனக்கு தான் பிரச்சனை ஆகும் என்று உணர்ந்தவள்,
அங்கிருந்து வெளியேற அவசரமாக கதவை நோக்கி ஓடினாள்.
ஆனால் என்ன ஒரு துரதிஷ்டம், அந்த கதவின் தாழ்பாள் அவளுக்கு கொஞ்சமும் எட்டாத உயரத்தில் இருக்க, அதை அண்ணாந்து பார்த்தவளுக்கு தலையே சுற்றியது
அவன் இருக்கும் ஆறடி உயர்த்துக்கு அதை சட்டென மூடி விட்டான். ஆனால் அவளோ ஐந்தடி பாவை. எப்படி எட்டப் போகிறது?
பெரு விரல் எம்பி அந்த லாக்கை திறக்கப் பார்த்தாள். ஆனால் முடியவில்லை.
வேறு வழி இல்லாமல் எகிறி குதித்து அதைத் திறக்கப் போராடினாள்.
ஆனால், அவளால் அந்த உயரத்தைத் தொடவே முடியவில்லை.
‘நாசமா போற லாக்கு வேற எட்ட மாட்டேங்குதே!’ என்று அதை வைது கொண்டே, மீண்டும் மீண்டும் எட்டி அதை திறக்க முயல,
கைகளைக் கட்டிக்கொண்டு இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சிம்மன். அவனுக்கு அவளின் பதட்டம் சுவாரஸ்யமாக இருந்தது போலும்.
இல்லாமல் இருக்குமா?
அவன் விழிகள் என்ன அவளின் பதட்டமான முகத்தையா பார்த்தது?
இல்லவே இல்லை.
அவள் குதிக்கும் ஒவ்வொரு முறையும், அவளது மேனியின் எழில் வளைவுகளையும், நெளிவுகளையும் அல்லவா அவன் விழிகள் அணு அணுவாக அளவெடுத்துக் கொண்டிருந்தன.
அதுவும், முழங்கால் வரை இருந்த அந்த நர்ஸ் உடை காற்றில் அலைபாய்ந்து மேலே உயர, அவள் எம்பும் வேகத்தில், பாவையின் தொடை வரை தாண்டி சென்று அவளின் தேன் நிற தாள்கள் அவனுக்குத் தாராளமாகத் தரிசனம் கொடுத்தன.
இப்படி இருக்க அவன் விழிகள் எப்படி அவளின் முகத்தை கவனிக்கும்?
இதழ்களில் ஒரு கள்ளப் புன்னகையுடன் அவளது அங்க லட்சணங்களை இமை மூடாமல் பருகிக் கொண்டிருந்தான்.
ஆனால் பெண்ணவளுக்கோ அது எல்லாம் எங்கிருந்து தெரிய?
அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலை அவளுக்குள்.
முடிந்த வரை அதை திறக்க போராடியவள், ஒரு கட்டத்தில் களைத்து தான் போனாள். அந்த தாழ்பாளை பாவமாக பார்த்தவள், ‘எல்லாமே எனக்கு சதி செய்யுது’ என்று எண்ணிக் கொள்ள, கண்களில் இருந்து கண்ணீரும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டது.
செய்வதரியாது தவித்து கொண்டிருந்தவளை நோக்கியவன், “எதுக்கு இவ்ளோ டயர்ட் ஆகுற பேபி? நான் வேணா உனக்கு ஹெல்ப் பண்ணட்டா?” என்று கேட்டு கொண்டே அவளை மெல்ல நெருங்கி வர,
பெண்ணவளின் இதயம் தாறு மாறாக துடித்தது.
“அ…தெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீ… நீங்க என் பக்கத்துல வராம இருந்தாலே போதும்” என்று திக்கி திணறிய படி சொன்னவள்,
மீண்டும் அந்த தாழ்பாளை திறக்கப் போக,
அதற்குள் அவளை மொத்தமாக நெருங்கி வந்து நின்றவன், அவள் மெல்லிய கரங்களை பற்றி இருந்தான்.
பெண்ணவளோ அதிர்ந்து போய் அவனைப் பார்த்து, “என் கையை விடுங்க…. நான் இங்கிருந்து போகணும்….” என்று அவனைத் தள்ளப் போக, மற்ற கரங்களால் அதை லாவகமாகப் பற்றியவன், அவளின் இரு கரங்களையும் உயர்த்தி ஒரே சேர சிறை பிடித்திருந்தான்.
அதில் மேலும் அவள் விழிகள் விரிந்து கொள்ள,
அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவன், “எதுக்கு இவ்ளோ டென்ஷன் பேபி? நான் ஜஸ்ட் உனக்கு ஹெல்ப் பண்ண தானே ட்ரை பண்ணுறேன்” என்று சொல்லிக் கொண்டே, அவளின் இடையை பற்றி தன்னிடம் இழுக்க,
பெண்ணவளோ அவன் மார்பில் மோதிய படி நின்றாள்.
அவன் சுவாசக் காற்று அவள் முகத்தில் பட்டு ஒரு வித சிலிர்ப்பை அவளுள் உண்டாக்க, “ந… நான் வெளியில போகணும். யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க…. ப்ளீஸ்… க… கதவை திறந்து விடுங்களேன்” என்று அவள் விம்மலோடு சொல்ல,
அவளது கலங்கிய விழிகளை பார்த்து கொண்டே, “யாரு பார்த்தாலும் எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்லை.” என்றான் அழுத்தமாக.
பிருந்தாவுக்கோ அவனது அலட்சியமான பதிலில் ஆத்திரமும், கோபமும் ஒரு சேர வந்தது.
“ஆமா… உங்களுக்கு எந்த கவலையும் இருக்காது சார். நீங்க தான் அடுத்தவங்களோட பீலிங்ஸ எப்பவுமே மதிச்சதில்லயே!” என்று ஆவேசப் பட்டுக் கத்தியவள்,
“எதுக்காக இப்படி என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க? அன்னக்கி உங்க கிட்ட பொய் சொன்னதுக்காகவா? ஆமா! நான் பொய் தான் சொன்னேன். உங்களால என் பர்சனல் லைஃப்லையும் ஏதாவது ப்ரோப்லம் வந்திடுமோன்னு பயத்துல தான் அந்த விஷ்வஜித்த என் அண்ணனு சொன்னேன். அதுக்கு இப்போ எ….” என்று முடிக்க முன்னரே,
அவள் இதழ்களை கவ்வி இருந்தான் ஆடவன்.
அவள் பேச வந்த வார்த்தைகள் அவன் இதழ்களுக்குள்ளேயே அடங்கிப் போய் விட, அவனின் இந்த அதிரடியில் பெண்ணவளின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து போனது.
ஒரு கணம் தனக்கு என்ன நடந்தது என்பதை சுதாகரிக்க முன்னரே, அவள் இதழ்களில் மொத்தமாக நுழைந்து அவளை மூச்சைடைக்க வைத்திருந்தான் ஆடவன்.
அவள் கண்களில் இருந்து நீர் வழிய, அவனிடம் இருந்து நகர கூட முடியாத அளவுக்கு மொத்தமாக சிறை பட்டு தவித்தாள் அந்தப் பேதை.
அன்று அவள் சுய நினைவில் இல்லாததனால் அவன் கொடுத்த முத்தம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் இன்று அப்படி அல்லவே! அவள் முழு சுய நினைவோடு இருக்கிறாள்.
அவள் மேல் உள்ள மொத்த மோகத்தையும் அந்த ஒரு முத்தத்தில் காட்டினான்.
அவளின் இதழ்களில் உள்ள தேனை முழுமையாக அவன் தனக்குள் எடுத்துக் கொள்ள, பெண்ணவளும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவனின் இதழணைப்பில் தன்னுடைய மொத்த கட்டுப்பாட்டையும் இழந்தவள், அவனின் நெருக்கத்தில் தன்னை தொலைத்து போனவளாய்,
அவன் இதழ்களோடு இணைந்து அவனை மாறி முத்தமிட, அதை உணர்ந்தவனோ அடுத்த நொடி அவள் இதழ்களில் இருந்து தன் இதழை பிரித்தெடுத்திருந்தான்.
சட்டென அவன் விலகியதில், பெண்ணவளோ நிலைதடுமாறி கதவோடு சாய்ந்து கொள்ள, வேக மூச்சிகளை வெளிவிட்டவளுக்கோ அடுத்த கணம் தான் என்ன செய்தோம் என்று உரைத்தது.
உணர்ச்சிகளின் பிடியில் மூடியிருந்த விழிகளை சட்டென திறந்து அவனைப் பார்த்தாள்.
ஆடவனின் இதழ்களோ ஒரு ஏளனப் புன்னகையை சிந்த, அவளின் நாடியை பற்றி தன் புறம் இழுத்தவன், அவளின் ஈரமான இதழ்களில் தன் பெரு விரல்களை வைத்து லேசாக வருடிய படி,
“நீ எவனை வேணாலும் கட்டிக்கோ பேபி. ஐ டோன்ட் கேர்! பட் என் கிட்ட இப்படி வாய்ஸ ரைஸ் பண்ணி பேசுற வேலையை வச்சிக்காத. எனக்கு அது சுத்தமா புடிக்காது. புரிஞ்சிதா?” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன், அவளை சிறை படுத்தி இருந்த தன் கரங்களை விடுவித்து விட்டு,
கதவை திறந்து கொண்டு அவன் வெளியேறி விட, பெண்ணவளோ அதே இடத்தில் உறைந்து போய் நின்றிருந்தாள்.
அவனது அலட்சியமான பேச்சில் மனம் ஏனென்றே புரியாமல் ஒரு நொடி வலித்தது அவளுக்கு.
தான் யாரை திருமணம் செய்து கொண்டாலும் அவனுக்கு அதை பற்றி எந்த கவலையும் இல்லையா? அதை எண்ணும் போதே அவளை அறியாமலேயே அவள் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
ஆனால் அடுத்த நொடி தான் எதற்கு அதை நினைத்து வருத்தப்படுகிறோம் என்று அவள் உள் மனம் கேள்வி எழுப்பியது.
அவனுக்கு என்ன தன் மேல் காதலா உள்ளது? அவன் குணத்தை பற்றி தான் நன்றாக தெரியுமே! பல பெண்களை அவனது தேவைக்காக பயன் படுத்துபவனுக்கு தன் மீதும் அதே எண்ணம் தானே இருக்கும்.
அப்படி இருப்பவனுக்கு அந்த திருமணம் எந்த விதத்தில் பாதிப்பை எற்படுத்த போகிறது?
அது அவளுக்கு புரிந்தாலும் ஏனோ மனம் அதை ஏற்க மறுத்தது தான் உண்மை.
அப்படி என்றால் அவனிடம் இருந்து தான் என்ன தான் எதிர் பார்க்கிறோம்?
இது வரையில் அவன் நெருக்கத்தையே வெறுத்து கொண்டிருந்தவள், இன்று அவன் முத்தத்துக்கு மயங்கி பதில் முத்தம் கொடுத்து விட்டாள்.
ஏதோ தன்னை அறியாமலேயே அப்படி செய்து விட்டோம் என்று அவளே அவளை சமாதானம் செய்து கொண்டாலும், அவன் பேசிய வார்த்தைகளை எண்ணி எதற்காக மனம் வருந்துகிறோம்.
அதை தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் ஒரு வேளை அவனை தான் விரும்ப ஆரம்பித்து விட்டோமோ? அதனால் தான் அவனிடம் இருந்து இதை எல்லாம் எதிர் பார்க்கிறோமோ என்று அவள் ஆழ் மனம் ஒரு கேள்வியை கேட்க,
அதில் திடுக்கிட்டுப் போனவள், ‘இல்ல இல்ல அவனை போய் நான் லவ் பண்ணுறதா? ச்சி என்ன ஒரு கேவலமான டேஸ்டு!’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், குழம்பி போன மனதை கஷ்டப்பட்டு அடக்கிய படி, மருந்துகளை எடுத்து கொண்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் போகும் வரை அங்கே தூணுக்கு பின்னால் காத்திருந்த உருவமோ, ‘இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ பெருசா இருக்குது போலவே! இத பத்தி சார் கிட்ட சொல்லியே ஆகணும்’ என்று நினைத்துக் கொண்டவன், அலைபேசியை எடுத்து அழைத்தது வேறு யாருக்கும் அல்ல விஷ்வஜித்துக்கு தான்.
ஆம்.
விஷ்வா தான் பிருந்தாவை கண் காணிப்பதற்காக இங்கே வேலை செய்யும் ஒருவனை நேற்றே ஏற்பாடு செய்திருந்தான்.
சிம்மனை பற்றி நன்றாக தெரிந்தவனுக்கு அவனால் பிருந்தாவுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம் என்று முன் கூட்டியே ஊகித்தவன், அவளுக்கே தெரியாமல் இப்படி ஆள் வைத்திருந்தான்.