Ep 17

அத்தியாயம் 17

அடுத்த நாள் வேலைக்கு வந்த பிருந்தாவுக்கோ உள்ளுக்குள் சற்று நடுக்கமாக இருந்தது. 

எங்கே சிம்மனை பார்த்து விடுமோ என்ற பயத்தில் அவன் கண்களுக்கு படாமல் தப்பித்து கொண்டிருந்தாள். 

நினைக்கும் போதே அவமானம் வேறு.

எந்த தவறுமே செய்யாமல் அவனுக்கு  இப்படி பயந்து நடுங்க வேண்டியிருக்கிறதே! 

உண்மையை சொன்னால் மட்டும் விட்டு விடுவானா?

எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று நினைக்கவே பயமாக இருந்தது.

அவனை எதிர்த்து பேசவும் தைரியம் இல்லை. 

எத்தனை நாளைக்கு தான் இவனிடம் இப்படி மாட்டித் தவிப்பது? 

அவளுக்கே தெரியவில்லை. 

வார்டில் இருந்த நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து கொண்டிருந்தவள், அங்கே ரவுண்ட்ஸ் வந்த சிம்மனை கண்டு அதிர்ந்து போய் விட்டாள். 

அவனோ மருத்துவர்களுடன் ஏதோ பேசிய படி வந்தவன், அவளை கவனிக்கவில்லை.

‘ஐயோ! என்னை புடிச்ச சனி இங்கயும் வந்துடுச்சா?’ என்று வாய்க்குள் முணு முணுத்தவள், அவன் கண்களுக்கு பட்டு விடாமல் அவசரமாக அந்த நோயாளிக்கு மருந்தை கொடுத்து விட்டு அங்கிருந்து போகப் பார்க்க, 

“பிருந்தா…. இந்த பேஷண்டை கவனி” என்று சீனியர் நர்ஸ் ஒருத்தி கத்த, 

அதில் அவன் விழிகளோ அங்கே ஓரமாக நின்ற பிருந்தாவில் படிய, அவளோ ஆடவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையை குனிந்த படி அந்த பக்கம் ஓடினாள். 

அவள் பதற்றத்தை கவனித்தவனுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு தான் வந்தது.

அவனும் வந்ததில் இருந்து அவளின் பயத்தை கவனிக்க தானே செய்கிறான்.

எங்கே தன்னை பார்த்து விடுவோமோ என்று அவள் பதுங்கி பதுங்கி செல்லுவதை, அவள் அறியாமலே கண் காணித்து கொண்டு தான் இருந்தான்.

ஆனாலும் தன்னிடம் பொய் சொன்னதற்காக அனுபவிக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான். 

முடிந்த அளவுக்கு அவன் கண்களுக்கு படாமல் தப்பித்து கொண்டிருந்தவளுக்கு இப்போது அவனை பார்த்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எற்பட்டது. 

இந்த வேலையை பொறுத்த வரை சீனியர் வைத்தியர்களை அடிக்கடி சந்திக்க நேரிடும் அல்லவா. 

இப்போது கூட அப்படித்தான் அவனைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.

ஒரு நோயாளியின் பரிசோதனை அறிக்கையை கையில் வைத்து கொண்டு முழித்த படி நின்றிருந்தாள்.

அதை அவனிடம் கொடுத்தால் தான் அவனால் அடுத்த கட்ட சிகிச்சையைத் தீர்மானிக்கவே முடியும். 

‘வேற யாராவது நர்ஸ் கிட்ட கொடுத்து விடலாமா?’ என்று அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். 

ஆனால் அங்கிருந்த மற்ற நர்ஸ்கள் அனைவரும் வேலையில் இருக்க, ‘ஒரு பைல் தானே கொடுத்துட்டு வரலாம். அப்படி என்ன பண்ணிட போறான்!’ என கையில் இருந்த கோப்புகளை நெஞ்சோடு அணைத்தபடி, தயங்கித் தயங்கி அவனது கேபினுக்கு சென்றாள்.

அனுமதி கேட்டுக் கொண்டு அவள் உள்ளே நுழைய, அங்கே சிம்மனைக் காணவில்லை.

‘அப்பாடா! இவன் உள்ள இல்ல போல… வேகமா ஃபைலை டேபிள்ல வச்சுட்டு எஸ்கேப் ஆகிடலாம்’ என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

ஆனால், அந்த அறையோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய ஓய்வறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்க, பெண்ணவளோ திடுக்கிட்டு நின்றாள்.

அங்கிருந்து முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்த ஆடவனைக் கண்டதும், பெண்ணவளோ அதிர்ந்து தான் போனாள்.

தனது ஷேர்ட்டின் முதல் நான்கு பொத்தான்கள் திறந்திருக்க, அவனது அகன்ற மார்பின் ஒரு பகுதி அப்பட்டமாக வெளியில் தெரிந்தது.

முகம் கழுவிய நீர் சொட்டுகள் அவன் கழுத்து வழியாக உருண்டு மார்பு வழியாக  சென்றடைய, தண்ணீர் பட்டு அவனின் வெள்ளை நிற ஷேர்ட்டோ பாதியளவு நனைந்திருந்தது.

அது அவனின் வெண் நிற தேகத்தோடு மொத்தமாக ஒட்டி அவனது கட்டுடலை பளிச்சேன்று காட்ட, 

நீரில் நனைந்த அவனது ஈரமான முடிக் கற்றைகள் அவனது நெற்றியில் விழுந்து அலைபாய, அதன் நடுவே மின்னிய அவனது கூர்மையான விழிகள் தன் முன்னால் நின்றிருந்த பெண்ணவளை புரியாமல் நோக்கியது.

அவனை இப்படி ஒரு கோலத்தில் கண்ட அவளின் இதயமோ படு வேகமாக அடித்துக் கொள்ள, ஒரு நொடி தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் மறந்து போனவளாய் அவன் அழகில் மொத்தமாக வசியப் பட்டு நின்றிருந்தாள் அந்த பாவை. 

அவளது பார்வை போன திசையை அறிந்து கேலியாக இதழ்களை வளைத்தவன், “ஹலோ மிஸ்” என்று கையை உயர்த்தி சொடக்கிட, 

அவ்வளவு நேரமும் அவனை பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தவள், அவன் குரலில் சட்டென சுய உணர்வு பெற்றிருந்தாள்.

தன்னை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கியவளுக்கோ, ஒரு நொடி இதயத் துடிப்பு தொண்டை வரை ஏறித் துடிக்க ஆரம்பித்தது. 

அப்போது தான் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதே அவளின் சிறிய மூளைக்கு உரைக்க, வெட்கம் அவளை பிடுங்கித் தின்ன, கையில் உள்ள பைலை மேலும் இறுக்கமாகப் பற்றியவள், சட்டென தன் பார்வையை தாழ்த்தி இருந்தாள். 

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வரை தன்னை வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்ததையும், இப்போது அதை உணர்ந்து அவள் பதற்ற படுவதையும் பார்த்தவனுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு தான் வந்தது. 

தனது கையில் இருந்த துணியால் முகத்தில் வழிந்த நீரை துடைத்த படியே,  தனது இருக்கையில் சென்று சாய்ந்து அமர்ந்தவன், 

“வாட்?” என்று கர கரப்பான குரலில் கேட்க, 

பெண்ணவளோ திடுக்கிட்ட படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ ஷேர்ட்டில் உள்ள பட்டன்களை போடாமல் அப்படியே விட்டிருக்க, அவள் விழிகளோ மீண்டும் அவன் படிக்கட்டு தேகத்திலேயே படிந்தது.

‘கொஞ்சம் கூட இவனுக்கு வெட்கம் இல்லை. பொறுக்கி மாதிரி பண்ணுறான்’ என்று வாய்க்குள்ளயே அவனை திட்டியவளுக்கு தோன்றவில்லை கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் அவனை எப்படி எல்லாம் ரசித்தோம் என்பதை.

தலையை குனிந்த படியே “சார்…. இது அந்த பேஷண்ட் ராகவனோட டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்” என்று மெல்லிய குரலில் சொல்லி அதை நீட்ட, 

வெட்கத்தில் சிவந்து போன அவளின் வதனத்தை ரசித்த வண்ணமே,

தன் விரல்களை நீட்டி, அவளின் மெல்லிய கரங்களை மென்மையாக வருடிக் கொண்டே, அவள் கையில் உள்ள பைலை எடுத்துக் கொள்ள,

அவன் தீண்டலில் மோகமாக விழிகளை மூடித் திறந்தவள், சட்டென கரங்களை தன் பக்கம் இழுந்திருந்தாள். 

அதை கண்டு இதழ் கடித்து தன் புன்னகையை அடக்கியவன், “ஏன் வரதுக்கு இவ்ளோ லேட்?” என்று கறாராகக் கேட்க, 

அவளும் “இல்ல சார்… அது… லேப்ல இருந்து ரிப்போர்ட் வரதுக்கே கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்றாள் சற்று பதட்டமாய். 

“ம்ம்… ” என்றவனோ பைலை புரட்டிய படியே, “யூ மே லீவ் நவ்” என்று சொல்லி விட்டு, தன் வேலையில் மூழ்கி விட, அவளும் சற்று திகைப்புடன் அவனை பார்த்து விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தாள். 

வெளியே வந்தவளுக்கு சிம்மனின் இந்த அமைதி சற்று வித்தியாசமாக தான் தோன்றியது. 

நேற்று நடந்ததை பற்றி அவன் எதுவுமே அவளிடம் பேசவில்லையே!

தன்னிடம் கோபப்படுவான், கத்தித் தீர்ப்பான் என்று தானே அவள் பயந்து கொண்டிருந்தாள்.

அதனால் தானே இன்று அவன் முன்னால் வராமல் அவனை தவிர்க்கவே செய்தாள்.

ஆனால் அவன் அதை பற்றி எதுவுமே கேட்காமல் அமைதியாக இருந்தது அவளுக்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சற்று பயமாகவும் இருந்தது என்றே சொல்லலாம். 

இவன் இப்படி அமைதியாக இருக்க கூடியவன் அல்லவே!  

அன்று போனை எடுக்கவில்லை என்பதற்காக அவன் செய்த செயலை அவளால் இன்று கூட மறக்க முடியுமா என்ன?

அந்த பயம் தானே அவளை இன்று வரை அவனை கண்டாலே நடுங்க வைக்கிறது!

‘ஒரு வேளை இன்னக்கி அவன் நல்ல மூட்ல இருக்கானோ!… அதான் எதுவும் கேட்கல போல! நல்ல வேளை தப்பிச்சோம்’ என்று நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொண்டாள். 

****

அன்று வேலை முடிய, எப்படியோ இன்று அவனிடம் இருந்து தப்பித்தோம் என்ற நிம்மதியில் வீட்டுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தாள் பிருந்தா. 

தனது உடைகளை மாற்றிக்கொண்டு ஜானவியோடு புறப்பட்டாள்.

இருவரும் பேசிய படியே, பதிவேட்டில் கையெழுத்திட வேண்டி நர்ஸிங் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். 

ஜானவியோ முதலில் கையெழுத்து போட்டு விட்டு பிருந்தாவிடம் நீட்ட, அவளோ அதில் கையெழுத்து போட போனவள், தன் பெயருக்கு நேராக இருந்த அந்தச் சிவப்பு நிறக் குறிப்பைப் பார்த்து சற்று அதிர்ந்து போனாள். 

இன்று அவளுக்கு நைட் ஷிப்ட் என்று அதில் போடப்படிருக்க, அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. 

ஜானவியோ “என்னடி சைன் பண்ணிட்டியா? கிளம்பலாமா?” என்று கேட்க, 

பிருந்தாவோ “இல்லடி… இதுல எனக்கு நைட் ஷிப்ட்னு போட்டு இருக்கு.” என்று திகைப்புடன் சொல்ல, 

ஜானவியும் எட்டிப் பார்த்து “ஆனா இன்னைக்கு எமர்ஜென்சி எதுவும் இல்லையே? அப்புறம் எதுக்கு உன்ன நைட் ஷிப்ட் போட்டிருக்காங்க?” என்று புரியாமல் கேட்டாள். 

பிருந்தாவோ “தெரில… ஒரு வேளை தப்பா போட்டு இருப்பாங்களோ!” என்று சொல்ல, 

அதே சமயம் அங்கே வந்தாள் இன்சார்ஜ் சுமதி.

பிருந்தா நேராக அவளிடம் வந்து, “மேம்… மார்னிங் ஷிப்ட் முடிஞ்சதும் நான் கிளம்புறதா தானே இருந்தது? இப்போ இதுல நைட் டியூட்டின்னு போட்டுருக்கே? ஆனா இன்னக்கி எனக்கு நைட் ஷிப்ட் கிடையாதே மேம்!” என்று பட படப்புடன் சொல்ல,

அவளோ “ஆமா பிருந்தா… இன்னைக்கு நைட் ஷிப்ட் வர வேண்டிய நர்ஸ் வரலையாம். அதான் உன் டியூட்டியை எக்ஸ்டெண்ட் பண்ணிட்டோம்,” என்றாள் சாதாரணமாக. 

“ஆனா மேம் நான் இன்னக்கி மார்னிங்ல இருந்தே வர்க் பண்ணுறேன். மறுபடியும் நைட் ஷிப்ட்ன்னா எப்படி? ஏதாவது எமெர்ஜென்சியா இருந்தா கூட பரவால்ல” என்று அவள் தரப்பு நியாயத்தை சொல்ல, 

சுமதியோ “நான் என்ன பண்ணுறது பிருந்தா? சிம்மன் சார் தான் உன்ன இருக்க சொல்லி சொன்னாரு. உனக்கு ஏதாவது ப்ரோப்லம்ன்னா அவர் கிட்ட போய் பேசிக்கோ” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட, 

பிருந்தாவுக்கோ சிம்மன் என்ற பெயரை கேட்டதும் முகம் அப்படியே வெளிரிப் போனது. 

அப்படி என்றால் இது அவன் வேலை தானா? 

வேண்டும் என்றே தன்னை இருக்க சொல்லி உத்தரவு போட்டிருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு. 

‘எல்லாம் அந்த சனியன் புடிச்ச டாக்டரோட வேலை தானா! என்னை வச்சி செய்யறதுல இவனுக்கு என்ன ஒரு ஆனந்தமோ!’ உள்ளுக்குள் கடிந்து கொண்டவள், 

“நீ கிளம்புடி” என்று ஜானவியிடம் சொல்லி விட்டு, விறு விறுவென சென்றிருந்தாள்.

*****

ஏற்கனவே காலையில் இருந்து வேலை பார்த்ததால் பெண்ணவளின் உடல் சோர்ந்து போயிருந்தது. 

ஆனாலும் அதை பொருட் படுத்தாமல் வீட்டுக்கு விடயத்தை தெரிவித்து விட்டு, நேராக கேன்டினுக்கு சென்றாள். 

எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. 

தூக்கம் வர கூடாது என்பதற்காக ஒரு காபியை வாங்கி குடித்து விட்டு, நேராக வார்டுக்குள் வந்தாள்.

இரவு நேரம் என்பதால் அவ்விடமே அமைதியாக இருந்தது. 

பகல் நேரத்தில் இருந்த பரபரப்பு இப்போது இல்லை. பல நோயாளிகள் உறங்கிவிட, அங்கே அவளும் இன்னோரு நர்ஸ் மட்டும் தான் கண்காணிப்புக்காக போடப்பட்டு இருந்தார்கள்.

பிருந்தாவோ ஒரு நோயாளியின் நாடித்துடிப்பைச் சரிபார்த்து அதை குறிப்பில் எழுதிக் கொண்டிருக்க, அந்தச் சமயம், அங்கே வார்டுக்குள் நுழைந்த ஒரு இளம் மருத்துவர் அவளிடம் வந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். 

இங்கு நடப்பதை ஒரு தூணுக்கு பின்னால் நின்று ஒரு உருவம் கண்காணித்து கொண்டிருந்தது. 

அந்த டாக்டரும் பேசி விட்டு அங்கிருந்து சென்று விட, அதை கவனித்த அந்த நபரோ பிருந்தாவை ஒரு கணம் பார்த்து விட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்து சென்றது. 

இது எதையுமே கவனிக்காத பிருந்தாவும் பைலை எடுத்து கொண்டு நர்ஸிங் ஸ்டேஷனுக்குள் வர, அங்கிருந்த சீனியர் நர்ஸோ அவள் வரும் வரை காத்திருந்தாற் போல, 

“பிருந்தா… மெடிசின் ரூம்க்கு போய் இன்னைக்கு நைட்டுக்கு தேவையான ஸ்டாக் எல்லாம் எடுத்துட்டு வந்துடு. லிஸ்ட் அங்க டேபள்ல இருக்கு” என்று தன் வேலையை பார்த்து கொண்டே சொல்ல,

அவளும் சரியென தலையாட்டி விட்டு அந்த லிஸ்டை எடுத்து கொண்டு  சென்றாள்.

அந்த அறை மருத்துவமனையின் ஒரு மூலையில் சற்றே ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது. 

இரவு நேரம் என்பதால் அந்தப் பகுதி ஆள் நடமாட்டமின்றி அமைதியாகவே காணப்பட்டது.

அவளோ அங்கே நடந்து செல்ல, அவள் பின்னால் மீண்டும் அந்த உருவம் பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தது. 

பிருந்தாவுக்கோ தன் பின்னால் யாரோ வருவது போலவே தோன்ற, சட்டென பின்னால் திரும்பிப் பார்த்தாள். 

ஆனால் அந்த உருவாமோ அதற்குள் அங்கிருந்த தூணுக்கு பின்னால் சென்று மறைந்து விட, 

அவ் விடத்தை சுற்றி முற்றி பார்த்தவள், 

யாரும் இல்லை என்று நினைத்து விட்டு, 

அந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

அவள் உள்ளே சென்றதை கவனித்து கொண்டிருந்த அந்த உருவமோ அங்கிருந்த தூணுக்கு பின்னால் சென்று மறைந்து கொள்ளப் பார்க்க, அதே சமயம், அந்த வராண்டாவின் மறுபுறத்தில் இருந்து யாரோ ஒருவரின் காலடி சத்தம் கேட்டது. 

அதில் திட்டுக்கிட்டு அந்த உருவம் திரும்பிப் பார்க்க, அங்கே சிகரட்டை புகைத்த படி நடந்து வந்து கொண்டிருந்தான் சிம்ம விஷ்ணு. 

அவனைக் கண்ட அந்த உருவமோ அதிர்ந்து போக, அவசரமாக அவன் கண்களுக்கு படாமல் அந்த இருட்டான பகுதியில் சென்று பதுங்கிக் கொண்டது. 

அறைக்குள் நுழைந்த பிருந்தாவோ அங்கிருந்த அலுமாரியை திறந்து அந்த பட்டியலில் உள்ள மருந்துகளை ஒவ்வொன்றாக பார்த்து எடுத்துக் கொண்டிருக்க, 

அதே வேளை அந்த அறைக்குள் நுழைந்த சிம்மனோ, அடுத்த நொடி அந்த அறையின் கதவை அடித்து சாற்றி உள்ளே இருந்த தாழ்ப்பாளைப் போட்டிருந்தான். 

பெண்ணவளோ அந்த சத்தத்தில் கையில் உள்ள மருந்துகளைக் கீழே விட்டவள், பதறிய படி திரும்பிப் பார்த்தாள். 

அங்கே சிம்மன் தான் கதவில் சாய்ந்த படி, கையில் சிகரட்டுடன் நின்றிருந்தான். 

அவனை கண்டவளுக்கோ இதயம் படு வேகமாக அடித்துக் கொள்ள, 

“இ.. இங்க என்ன பண்ணுறீங்க?” என்று அவள் பதட்டமாகி கேட்க, 

அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்தவன், 

“உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் பேபி” என்று மோகம் கலந்த குரலில் சொல்ல, 

அவன் எண்ணம் அவளுக்கா புரியாது. 

ஆனாலும் இப்போது அவனிடம் வம்பு வளர்க்க முடியாது என்று நினைத்தவள், பதில் ஏதும் பேசாமல், சற்று தடுமாற்றத்துடனே கீழே விழுந்து கிடந்த மருந்துகளை குனிந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தாள்.

எப்படியாவது இந்த இடத்தை விட்டு சீக்கிரம் சென்று விட வேண்டும் என்பதே இப்போது அவளது குறிக் கோளாக இருந்தது.

அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவன் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகையே தவழ்ந்தது. 

சிகரட்டை கீழே போட்டு காலால் நசுக்கி விட்டு, அவளை நெருங்கி வந்தவன், அங்கிருந்த மேசையில் சாய்ந்த படி நின்றான். 

பிருந்தாவும் எதையும் கவனிக்காதது போலவே கீழே அமர்ந்து, சிதறிய மருந்துகளை குனிந்து எடுத்து கொண்டிருக்க, 

அந் நொடி அவளது நர்ஸிங் உடையோ சற்றே விலகி அவளுக்குத் துரோகம் செய்ய, அவனின் கழுகுக் கண்கள் எதைத் தேடக் கூடாதோ அதைத்தான் வெறித்துப் பார்த்தன.

அவளது முன்னழகின் அந்த ஆழமான பிளவு அவனது பார்வைக்கு விருந்தாக மாறி இருந்தது.

அவளின் மூச்சுக் காற்றின் வேகத்தில் பெண்ணவளின் மேடு பள்ளங்களும் மேலும் கீழும் வேகமாக ஏறி இறங்க, எந்த ஒரு தடையுமின்றி அவன் விழிகள் ரசனையாக அவ்விடத்தை மேய்ந்து கொண்டிருந்தது. 

இதழ் கடித்து தன் உணர்வுகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவன், ஏனோ தன் பார்வையை அங்கிருந்து கொஞ்சமும் திருப்பவில்லை என்பது தான் உண்மை. 

இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்குபவனுக்கு இது ஒரு வரப்பிரசாதம் போல தானே! 

இதை விட அவனுக்கு மனம் இருக்குமா என்ன?

அவளை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தவன், “டேம்… சச் எ டெம்ப்டிங் வியூ!” என்று ரசனை கலந்து கிறக்கமாக சொல்ல, 

பிருந்தாவோ ‘என்ன உளறிட்டு இருக்கான்?’ என்று குழப்பத்துடனேயே, சட்டென தன் பார்வையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். 

அப்போதும் அவன் விழிகள் அந்த இடத்தை விட்டு கொஞ்சமும் அகலாமல் நிலைத்திருக்க, அவனது பார்வை அவள் மேனியில் அத்து மீறிக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top