Ep 9

அத்தியாயம் 9

“சார்… இந்த ஃபைல்ல ஒரு டவுட்…” என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் பிருந்தா.

ஆனால் அங்கே சிம்மனின் இருக்கை காலியாக இருக்க, 

அவளோ ‘எங்க போனாரு இவரு!’ என்ற படி அறையை சுற்றி முற்றி பார்த்தாள்.

ஒருவேளை அவசரமாக ஓ.டி பக்கம் சென்றிருப்பானோ என்று எண்ணியவள், அங்கிருந்து போகப் பார்க்க, அப்போது தான் அவனது தொலைபேசி மேசையில் இருந்தது அவள் கண்களில் பட்டது. 

அதை பார்த்தவளின் கால்கள் அதே இடத்தில் நின்று விட, ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்று நடுக்கத்துடன் அந்த போனை கையில் எடுத்தாள். 

ஒருவேளை அன்லாக் ஆகி இருந்தால், எப்படியாவது அந்தப் புகைப்படத்தைத் தேடி அழித்துவிடலாம் என்ற நப்பாசை அவளுக்குள் எழுந்தது. 

அதை வைத்து தானே அவளை படாத பாடு படுத்தி கொண்டு இருக்கிறான். 

எச்சிலை கூட்டி விழுங்கிய படி, திரையைத் தட்டிப் பார்த்தவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது. 

அவனது போன் வால்பேப்பரில் அவளது அந்தப் புகைப்படம் தான் அப்பட்டமாக மின்னிக் கொண்டிருந்தது.

‘அடப்பாவி… எவ்வளவு வக்கிரம் பிடிச்சவன் இவன்! என் போட்டோவை வால்பேப்பரா வச்சு இருக்கான். சீ…” என்று முகம் சுளித்தவளோ,

எப்படியாவது இப்போதே இதை அழித்துவிட வேண்டும் என்று லாக்கை திறக்க முயற்சி செய்தாள். 

ஆனால், அவளது கைரேகையோ, பாஸ்வேர்டோ இல்லாததால் அவளால் அந்தப் பூட்டைத் திறக்க முடியவில்லை. 

“ஓஹ் காட்… எப்படி இதை டெலீட் பண்றது?” என்று பதற்றத்தில் இருந்தவளுக்கு சிம்மன் வந்து விடுவானோ என்ற பயம் வேறு.

ஆனால், அந்த திரையில் மின்னும் தன் உருவத்தைப் பார்க்கும் போது ஆத்திரமும், அழுகையும் சேர்ந்தே வந்தது. 

அப்போது அவள் மூளைக்குள் ஏதோ எண்ணம் தோன்ற, 

‘போன் இருந்தா தானே இந்த போட்டோவும் இருக்கும்!’ என்று யோசித்தவள், 

கடுப்பாக அதை தூக்கி எறியப் போக, சட்டென ஒரு வலிய கரம் அவள் கையை பற்றி இருந்தது. 

பெண்ணவளோ அதிர்ந்து போனவளாய் மெல்ல தன் கரங்களை பார்த்தவளுக்கு அது சிம்மன் தானென்று அவன் முகத்தை பார்க்காமலேயே புரிந்து போக, 

‘இவன் எப்போ வந்தான்!’ என்று யோசித்தவளுக்கு பயத்தில் இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது.

அவனோ அவளை நெருங்கி வந்தவன், சட்டென அவளது இடையைச் சுற்றி வளைத்து அவளை பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொள்ள,

அவனின் இந்த எதிர்பாராத செயலில் பெண்ணவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது. 

அவளின் சிறிய கரங்களோ அவன் கரங்களுக்குள் சிக்கி விட, அவளால் பாவம் அசைய கூட முடியவில்லை. 

பிருந்தாவோ “என்ன பண்ணுறீங்க? ப்ளீஸ்  என் கையை விடுங்க” என்று அவனிடம் இருந்து விலக திமிர, 

“என் போனை வச்சி என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவள் காதருகில் குனிந்து கிசு கிசுப்பான குரலில் கேட்க, 

அவளுக்கோ அவன் நெருக்கம் மூச்சடைக்க வைத்தது.

பயத்தில் என்ன கூறுவது என்று கூட தெரியவில்லை அவளுக்கு.

அதுவும் அவன் இப்படி கட்டியணைத்து இருக்க, அவளால் எப்படி தான் பேச முடியும்?

இவனிடம் வந்து இப்படி மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டவள், 

“ப்ளீஸ் சார் என் கையை விடுங்க. ரொம்ப வலிக்கிது” என்று தழு தழுத்த குரலில் சொல்ல, 

சிம்மனோ “நான் கேட்டதுக்கு பதில் வரலையே! என்னோட போனை வச்சி என்னடி பண்ணிட்டு இருந்த?” என்று அவளை மேலும் தன்னோடு அணைக்க, 

அவளுக்கோ வலியில் கண்கள் இரண்டும் கலங்கிப் போனது.

“அது… வந்து… ஒரு ஃபைல் விஷயமா டவுட் கேட்க வந்தேன். நீங்க இல்ல… அதான்…” என்று அவள் தடுமாற,

“சோ…. நான் இல்லாததை யூஸ் பண்ணி என் போனை உடைக்கலாம்னு பிளான் போட்டிருக்க?” என்று நக்கலாகக் கேட்க, 

பெண்ணவளோ உடல் வெடவெடக்க நலிந்த குரலில், “சாரி சார்… எ… என்னை விட்டுடுங்க… தப்புதான், இனிமே உங்க போனைத் தொட மாட்டேன், ப்ளீஸ்” என்று கெஞ்ச, 

அவனுக்கு அவளை விட்டு விலக மனமிருந்தால் தானே!

சற்று குனிந்து அவள் கழுத்தில் தன் இதழ் கொண்டு லேசாக வருடிய படி, 

“தப்பு பண்ணிட்டு சாரி கேட்டா எல்லாம் சரியாயிடுமா?” அவன் குரல் மென்மையாக ஒலிக்க, 

அவனின் ஸ்பரிசத்தில் பெண்ணவளின் மேனி மொத்தமும் கூசியது.

“ப்ளீஸ் நான் போகணும்… வி… விடுங்க” என்று அவள் தத்தளிக்க, 

சிம்மனோ அவளது பதற்றத்தை ரசித்துக்கொண்டே அவளது கழுத்தோரம் தன் முகத்தை இன்னும் ஆழமாகப் புதைத்தான்.

“அதெப்படி விடுறது?…. பண்ண தப்புக்கு ட்ரீட்மென்ட் பண்ணா தானே அடுத்த வாட்டி இந்த தப்ப பண்ண மாட்ட” என்று சொன்னவனோ அவளின் கழுத்தில்  முத்தம் பதிக்க, 

அவளுக்கோ உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. 

“ப்ளீஸ்….  லீவ் மீ. எனக்கு நீங்க டச் பண்ணுறது கொஞ்சம் கூட புடிக்கல” என்று அவள் இதழ்கள் சொன்னாலும், அவன் நெருக்கத்தை மொத்தமாக அவளால் வெறுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. 

“ஆஹான்?” என்று நக்கலாக கேட்டவன், 

அவளை தன் புறம் திருப்பி, அவளின் கலங்கிய விழிகளை பார்த்து,

“பட் பார்த்தா அப்படி தெரிலயே!” என்று கிண்டலாக சொல்ல, 

அவளுக்கோ அவனது கூற்றில் ஆத்திரம் வந்தாலும், அவளை மீறி அவன் தீண்டலை தன் உடல் ரசித்தத்தை அவளும் உணர்ந்தாள் தானே! 

அதை எண்ணும் போது அவளுக்கே அவள் மீது கோபம் தான் வந்தது. 

தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்ளுகிறோம் என அவளுக்கே புரியாத நிலை.

அவள் கண்களோ கலங்கிப் போக, “நான் இங்கிருந்து போகணும். ப்ளீஸ் என்னை போக விடுங்க” என்றாள் அழும் குரலில். 

சிம்மனோ அவளை நடுவில் வைத்து மேசையில் இரு பக்கமும் கையை ஊன்றிய படி, “என் கிட்ட  இப்படி அழுது ட்ராமா எல்லாம் பண்ணாத.” என்று கறாராக அவன் குரல் ஒலிக்க, 

அவளோ திடுக்கிட்டுப் போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் குரலில் இருந்த அழுத்தத்துக்கும் முகத்தில் தெரிந்த மோகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. 

“கிவ் மீ மை போன்” என்று அவன் கரங்களை நீட்ட, அவளும் நடுக்கத்துடனே அதை அவனிடம் கொடுத்தாள். 

அதை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்ட படியே, 

“இந்த போனை ஒடச்சிட்டா உன் போட்டோவும் போயிடும்ன்னு நினைச்சியா? அப்போ என் கிட்ட இருக்க இதோட மத்த காப்பி எல்லாம் எப்படி எரேஸ் பண்ணுவ?” என்று புருவம் உயர்த்தி நக்கலாகக் கேட்க, 

அவளுக்கோ இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. 

கோபத்தில் இருந்தவளுக்கு அதை பற்றி எல்லாம் எங்கே யோசிக்க நேரம் இருந்தது? 

அந்த புகைப்படத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தானே இருந்தது. 

அவள் கண்களில் இருந்து கண்ணீர் தன்னையும் மீறி வழிய, 

அவளை மூச்சுக் காற்று படும் அளவுக்கு நெருங்கி வந்தவன்,

“அடுத்த வாட்டி இதே மாதிரி ஏதாவது சில்லியா வேலை பார்த்து என் கிட்ட மாட்டிக்கிட்ட…. இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்.” என்று நிறுத்தியவன், 

அவள் காதருகில் குனிந்து “மொத்த ட்ரெஸ்ஸயும் உருவிட்டு இதே இடத்துல உன்ன நிக்க வச்சிருவேன்.” என்றானே பார்க்கலாம், அவளோ விழி விரித்துப் போய் அவனை பார்த்தாள். 

அதுவும் சரி தான் இவனிடம் இருந்து வேறு எதை தான் எதிர் பார்க்க முடியும். 

அவன் மனதில் உள்ளதை தானே வார்த்தைகளால் சொல்லி இருந்தான். 

“நவ் கெட் அவுட்” என்று சொல்லி விட்டு, அவன் நேராக சென்று தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, 

அவனை முறைத்து பார்த்தவளுக்கோ ஒரு கல்லை தூக்கி அவன் தலையிலேயே போட்டு விடலாமா என்ற எண்ணமே தோன்றியது.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top