அத்தியாயம் 10
கையில் இருந்த மதுக் குவளையை சுழற்றிய படி, அந்த பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான் சிம்மன்.
அந்த இடத்தையே அதிர வைக்கும் படி ஒலித்த இசையோ, மனிதர்களின் இரைச்சலோ அவனது செவிகளை கொஞ்சமும் எட்டவில்லை.
மனம் முழுக்க அவள் எண்ணம் மட்டும் தான் அவனை பாடாய்ப் படுத்தி எடுத்தது.
அதுவும் கடந்த இரண்டு நாட்களாக.…
பிருந்தாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவள் வைத்தியசாலைக்கு வரவில்லை.
அப்போதிருந்து தான் அவன் நிம்மதியும் போயிருந்தது.
இரு நாட்கள் அவள் முகத்தை பார்க்காமல் அவனுக்கு பைத்தியமே பிடித்து விட்டது என்றே சொல்லலாம்.
எப்போதும் வேலை வேலை என்று மட்டும் இருப்பவன் முதல் முறை ஒரு பெண்ணால் இப்படி தவித்துப் போயிருக்கிறான்.
அவனிடம் இருந்த அவளது அந்த புகைப்படத்தை எத்தனை முறை பார்த்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது.
அவளுக்கு போன் பண்ணி பார்த்தாலும் சுவிச் ஆப் என்று வர, எப்படியும் தன்னிடம் பேச கூடாது என்பதற்காக தான் ஆப் செய்திருப்பாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
அது அவனுக்கு கோபத்தை கொடுத்தாலும், உடம்பு சரியில்லாமல் இருக்கிறாள் குணமாகி வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டான் போலும்.
‘படுத்தி எடுக்கிறாளே!’ என்று பற்களைக் கடித்தபடி இருந்தவன் இரு நாட்களாக தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த எவ்வளவு போராடினான் என்று அவனுக்கே தெரியாது.
ஆனால் இன்று அவனது கட்டுப்பாடு உடைந்துவிட்டது. எவ்வளவு தான் சமாளிப்பான்.
அவள் நினைவில் இருந்து தப்பிக்க ஒரு வடிகால் தேவைப்பட்டது.
எரிச்சலாக தனது போனை எடுத்து கார்த்திகாவிற்கு மெசேஜ் செய்தான்.
‘இப்போவே ஹோட்டலுக்கு வா’ என்று அனுப்பி விட, அரை மணி நேரத்தில் கார்த்திகாவும் அங்கே வந்திருந்தாள்.
அன்று இருவரும் நெருக்கமாக இருந்த தருணம் அது.
இருவரும் உணர்ச்சிகளின் உச்சத்தில் திளைத்திருந்த அந்த நொடி, சிம்மனின் இதழ்களோ “பிருந்தா” என்ற பெயரை உச்சரிக்க,
அந்த வார்த்தையோ கார்த்திகாவின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
அவள் முனகல்களோ அப்படியே அடங்கிப் போக, இவ்வளவு நேரமும் இருட்டில் அவனது ஒவ்வொரு தீண்டலையும் ரசித்து கொண்டிருந்தவளுக்கு இப்போது அது நெருப்பாக சுட்டது.
இருக்காதா பின்னர்?
இது வரையில் அவளோடு எத்தனை முறை புணர்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறான். ஆனால் ஒரு தடவை கூட அவன் வாயில் இருந்து அவள் பெயர் வெளி வந்தது இல்லையே!
அப்படிப்பட்டவன், இன்று அவள் பெயரைச் சொல்லித் தன்னை அணைப்பதா?
தான் காதலிப்பவன், அதுவும் தன்னோடு இந்த நிலையில் இருக்கும் போது வேறு ஒருத்தியின் பெயரை உச்சரித்தால் அதை எந்த பெண் தான் ஏற்றுக் கொள்ளுவாள்.
ஆனால் அவன் மனம் முழுக்க, அவளின் எண்ணம் மட்டும் தானே பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது.
அவனது கைகள் கார்த்திகாவை அணைத்திருந்தாலும், அவனது இதழ்கள் மட்டும் மீண்டும் மீண்டும் ‘பிருந்தா’ என்ற பெயரை தான் முணுமுணுத்தது.
கார்த்திகாவின் கண்கள் இரண்டுமே கலங்கிப் போக, அதற்கு மேல் பொருக்க முடியாமல், “சார்…. நான் பிருந்தா இல்லை. கார்த்திகா..” என்று உடைந்து போய் வெளி வந்தது அவள் குரல்.
அது அவன் செவிகளை எட்டியும் எந்த சலனமும் காட்டவில்லை.
அவனது கைகள் அவளைப் பிணைத்திருந்த வேகமோ, அந்த ஆக்ரோஷமோ எள்ளளவும் குறையவில்லை.
“தெரியும்… நீ கார்த்திகான்னு எனக்கு நல்லாவே தெரியும்!” அவனது குரல் கரகரப்பாக வெளிப்பட்டது.
அதை கேட்டவளுக்கோ இன்னுமே மனம் வலித்தது.
“அப்போ அவளை மனசுல நெனச்சுக்கிட்டு தான் என்னை தொடுறீங்களா?” என்று மொத்தமாக மனமுடைந்து போய் கேட்டே விட்டாள்.
சிம்மனோ “வாட் த ஹெல்?” என்று சீறிய படி, அவள் கண்களில் உள்ள கட்டை அவிழ்த்து வீசியவன்,
அவளின் கலங்கிய விழிகளை பார்த்தான்.
எதற்காக இப்போது அழுகிறாள் என்று அவனுக்கே புரியவில்லை.
“வாட்ஸ் யுவர் ப்ரோப்லம்? வை ஆர் யூ க்ரையிங் கார்த்திகா?” சற்று எரிச்சலாக கேட்டான் சிம்மன்.
பெண்ணவளோ அவன் விழிகளை பார்த்த படியே, “பிகாஸ் ஐ லவ் யூ சார்” என்றாள் விம்மலுடன்.
அவனுக்கோ இது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.
அவனுக்கும், கார்த்திகாவுக்கும் இடையிலான உறவு என்பது ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் போலத்தான்.
அவனுக்கு எப்போது எல்லாம் தேவைப்படுமோ அப்போது அவள் வருவாள்.
இதற்குள் காதலுக்கோ, உணர்வுகளுக்கோ அவன் எப்போதும் இடம் கொடுத்தது இல்லை.
தன்னை போல தான் அவளும் இருப்பாள் என்று எண்ணினான். ஆனால் அவளுக்கு தன் மீது இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.
கார்த்திகாவோ “என் லவ்வ உங்க கிட்ட எத்தனையோ தடவை சொல்லலாம்னு நானும் ட்ரை பண்ணேன் சார். ஆனா எங்க நீங்க என்னை விட்டுட்டு போயிருவீங்களோங்கிற பயத்துலதான் இவ்வளவு நாள் எதையும் சொல்லாம மறைச்சி வச்சிருந்தேன். பட் இப்படி ஒரு சிடுவேஷன்ல என் லவ்வ உங்க கிட்ட சொல்லுவேன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல” என்று அவள் அழ,
சிம்மனுக்கோ தலை வலி தான் வந்தது.
அவள் கையில் உள்ள கட்டை அவிழ்த்து விட்டவன்,
எழுந்து சென்று சிகரட்டை பற்ற வைத்து புகைக்க ஆரம்பித்து விட்டான்.
அவனோ கடுப்பாக சிகரட்டை ஊதித் தள்ளிய படி இருக்க,
கார்த்திகாவும் அவன் பக்கத்தில் வந்து நின்றவள்,
“சார்” என்று அழைக்க,
அவனோ எந்த உணர்வும் இல்லாமல் அவளை ஏறிட்டு பார்த்தவன், “லுக் கார்த்திகா எனக்கு இந்த லவ், மேரேஜ் இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது. அது உனக்கும் நல்லாவே தெரியும். நமக்குள்ள இருக்க இந்த ரிலேஷன் ஷிப் நீயா விருப்பப்பட்டு வந்தது. இதுல எந்த எமோஷன்ஸ்க்கும் இடம் கிடையாது.” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான்.
ஆனால் அவளுக்கு தான் அதை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவனை மனதார விரும்பி இருக்கிறாள்.
அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் இருந்தாலும், அவளுக்குள் அவன் ஆழமாக வேரூன்றி விட்டானே!
“பட் சார் நான் இது வரைக்கும் நீங்க சொன்ன மாதிரி எல்லாமே பண்ணி இருக்கேன். இதெல்லாமே நான் உங்கள லவ் பண்ற ஒரே காரணத்துக்காக தான் பண்ணேன். இதுக்கப்புறமும் நீங்க என்ன சொன்னாலும் அதை பண்ண நான் தயாரா இருக்கேன். ஆனா அதுல எனக்கான ஒரு இடமும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்! என்னோட காதலை ஏத்துக்கோங்க சார்” என்று விம்மலுடன் அவனது கைகளைப் பற்றினாள் கார்த்திகா.
அவளது இந்தக் காதல் மன்றாடல் சிம்மனின் பொறுமையை மொத்தமாகச் சோதித்தது.
அவனுக்கு தான் இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்காதே!
அதுவும் இப்படி ஒரு நிலையில் அவள் தன்னிடம் காதல் பிச்சை கேட்பது அவனது எரிச்சலை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
சிகரெட்டை ஒருமுறை ஆழமாக இழுத்து புகையை வெளியேற்றியவன், சட்டென்று அவளைத் தன் பக்கம் இழுத்து, அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
அவனது முரட்டுத்தனமான அணைப்பில் அவளுக்கோ மூச்சு முட்டியது.
அவளது இரு கரங்களையும் அவளது முதுகிற்குப் பின்னால் கொண்டு வந்து தனது ஒற்றைக் கையால் முறுக்கிப் பிடித்தவன், மற்ற கையை அவள் கழுத்தில் சுற்றி வளைத்த படியே,
அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
“லிசன் கார்த்திகா… ஐ டோன்ட் ஹாவ் டைம் ஃபார் திஸ் நான்சென்ஸ்! இந்த லவ், எமோஷன்ஸ் இதெல்லாம் இரிடேட்டிங். அதுவும் நீயா விருப்பப் பட்டு என்கிட்ட வந்துட்டு இப்போ நீயே அந்த லிமிட்டை கிராஸ் பண்றது எனக்கு இன்னுமே இரிடேட் ஆகுது கார்த்திகா” என்று அவள் காதோரம் சொன்ன படியே,
தன் கையில் இருந்த சிகரட்டை அவள் தோள்பட்டையில் மிக நெருக்கமாகக் கொண்டு சென்றான்.
அதன் கனல் அவளது மென்மையான சருமத்தைத் தீண்டிய அந்த நொடி, கார்த்திகாவோ வலியில் துடித்தாள்.
“ஆஆஆ….. சார்… சுடுது சார்! ப்ளீஸ்… கையை எடுங்க… வலிக்கிது….” என்று அவள் அலறினாள்.
ஆனால் சிம்மன் அந்தப் பிடியை விடவில்லை. மாறாக, அவளை இன்னும் ஆக்ரோஷமாகத் தன்னோடு அழுத்தி அணைத்துக்கொண்டான்.
“வலிக்குதா கார்த்திகா?… இப்போ புரியுதா… நான் விரும்பாத ஒன்னை நீ என்கிட்ட வற்புறுத்திக் கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும்னு?” என்று கர கரப்பான குரலில் சொன்னவன்,
அவளை சட்டென விலகி விட,
பெண்ணவளோ அவன் சிகரெட்டால் ஏற்பட்ட அந்தச் சுருக் என்ற வலியில் தன் தோளைப் பிடித்தபடி அப்படியே கண்களில் கண்ணீர் வழிய நின்று இருந்தாள்.
அவன் வாழ்க்கையில் ஒன்றை வற்புறுத்தி திணிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்று அவளுக்கு இப்போது புரிந்தது.
அவள் கண்ணீரோ, வலியோ அவனை கொஞ்சமும் அசைத்து பார்த்தது போல தெரியவில்லை.
தன் உடைகளை எடுத்து அணிந்து கொண்டவன், நிலைகுலைந்து போய் நின்றிருந்த கார்த்திகாவின் அருகில் வந்தான்.
அவளது கண்கள் பயத்திலும், வலியிலும் கலங்கிப் போயிருக்க, அவளது தோளில் அந்தச் சிகரெட் தடம் ஒரு சிறிய சிவந்த தழும்பாக மாறி எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அதை பார்த்து விட்டு அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன், “இனிமே இந்த லவ் அது இதுன்னு என் கிட்ட பேசாதே… புரிஞ்சிதா?” என்று எச்சரிக்கை கலந்த குரலில் சொன்னவன்,
சட்டென அவளது இதழ்களை கவ்வி ஆழ்ந்த முத்தம் ஒன்றை கொடுக்க, அவளோ எந்த உணர்வும் இல்லாமல் கண்களில் கண்ணீரை சுரந்த படி அப்படியே நின்று இருந்தாள்.
அவளை விட்டு விலகியவன்,
“அந்த டிராயர்ல ஆயில்மென்ட் இருக்கு அதை எடுத்து அப்லை பண்ணிக்கோ. இல்லன்னா செப்டிக் ஆகிடும்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.