அத்தியாயம் 7
பெண்ணவளோ அவன் கூற்றில் அதிர்ந்து போய் விழித்தாள்.
அவன் இவ்வளவு கீழ் தனமாக இருப்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லையே!
ஆனால் உண்மையில், அவன் அப்படி பட்டவனே இல்லை.
இப்படி ஒரு புகைப்படத்தை வைத்து கொண்டு ஒரு பெண்ணை மிரட்டும் அளவுக்கு அவன் மோசமானவனும் அல்ல, அதற்கான அவசியமும் அவனுக்கில்லை.
இது வரையில் எத்தனையோ பெண்களை அவன் சந்தித்து இருக்கிறான் தான்.
அதுவும் அவர்களே விருப்பப்பட்டு அவனைத் தேடி வந்திருக்கிறார்களே தவிர, யாரையும் அவன் தேடிப் போனதில்லை.
அவனின் திமிரும், கர்வமும் அவனை அத்தனை சீக்கிரம் யாரையும் அண்டவிடாது.
ஆனால் முதன் முறை ஒரு பெண்ணிடன் அவனே நெருங்க நினைக்கிறான்.
அதுவும் இப்படி மிரட்டி.
இதுவே இந்த இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்திருந்தாலும் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் தூக்கி போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருப்பான்.
ஆனால் இவளை மட்டும் அப்படி விட அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை.
அது ஏனென்று அவனுக்கே தெரியவில்லை.
பெண்களை வெறும் உடல் தேவைக்காக மட்டுமே நாடுபவனுக்கு, அவள் விடயத்தில் மட்டும் அதையும் தாண்டி வேறு ஏதோ அவனுக்கு தேவைப் பட்டது என்றே சொல்லலாம்.
அவளோ “நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா? நான் உங்களை எவ்ளோ நல்லவருன்னு நெனச்சேன். ஆனா இவ்ளோ அசிங்கமா நடந்துக்குறீங்க!” என்று ஆதங்கமாக சொல்ல,
அவனோ புன்னகைத்த படியே, அவளது இடையை சுற்றி இருந்த பட்டியை பற்றி அவளை மேலும் தன்னிடம் இழுத்தவன், “பட் இதெல்லாம் நீ தானே ஸ்டார்ட் பண்ண. நானா உன் கிட்ட போட்டோ கேட்டேன்” என்றான் நக்கலாக.
அவளுக்கோ அவனின் தொடுகையிலும், அந்த வார்த்தைகளிலும் மேனி மொத்தமும் கூசியது.
அவனின் நெருக்கத்தில் அவள் இதயமோ படு வேகமாக அடித்துக் கொள்ள, அவனை விலக முயன்றாள்.
ஆனாலும் அவன் பிடியில் இருந்து அவளால் நகர கூட முடியவில்லை.
அவனை பாவமாக பார்த்தவள், “ஆனா சார் அந்த போட்டோவை நான் ஒன்னும் வேணும்னு உங்களுக்கு அனுப்பலையே! அது தெரியாம நடந்த விஷயம்” என்று அழுகையோடு சொன்னாள்.
அவனுக்கோ அவள் அழுகை எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை போலும்.
“எனக்கு அத பத்தி எல்லாம் எந்த கவலையும் கிடையாது. உன்னோட பிரைவேட் போட்டோ என் கிட்ட இருக்கு. இத டெலிட் பண்ணணும்னா நான் என்ன சொன்னாலும் பண்ணனும்” என்று மிரட்டுவது போல சொல்லி விட,
அவளுக்கோ பயத்தில் இதயம் தாறு மாறாக அடித்துக் கொண்டது.
அவன் சொல்லுவதை செய்யவில்லை என்றால் அந்த புகைப்படத்தை வெளியிட்டு அவள் மானத்தையே வாங்கி விடுவான்.
இதனால் அவள் குடும்ப மனமும் சேர்ந்து போய் விடுமே!
ஆனால் அதற்கு பயந்து இந்த ராட்சசனிடம் சென்று மாட்டி கொள்ளுவதா?
நினைக்கும் போதே தலை சுற்றியது.
இதில் எதை தேர்ந்தெடுத்தாலும் பாதிப்பு அவளுக்கு தானே!
இருந்தாலும் இப்போது அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை.
தன் மானத்தை காத்துக் கொள்ள அவன் நிபந்தனையை ஏற்றுக் கொண்டாள் பாவை.
வேறு என்ன தான் செய்ய முடியும்?
அவளின் அந்த புகைப்படம் மட்டும் வெளியாகி விட்டால் அவளை அனைவரும் எப்படி எல்லாம் கேவலமாக பார்ப்பர்கள், எவ்வளவு அசிங்கமாக பேசுவார்கள்.
அதை தாங்கி கொள்ள அவளுக்கு கொஞ்சமும் துணிவில்லை.
அதுவும் இன்னும் சில மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
இந்த விடயம் மட்டும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தால் என்ன நடக்கும்.
அவள் மேல் தவறு இல்லை என்றாலும் ஊர் பேசுவதை தானே அவர்களும் பேசுவார்கள்.
இதனால் தன் பெற்றோருக்கும் சேர்த்து அவமானம் நேர்ந்து விடுமே!
தன்னால் அவர்கள் தலை குனிவதை எப்படி அவள் தாங்கி கொள்ளுவாள்.
இதற்கெல்லாம் பயந்து தான் இதற்கு ஒப்புக்கொள்ளவே செய்தாள்.
கண்களை துடைத்த படியே, கேபினை திறந்து கொண்டு வெளியே வந்தவளுக்கு இனி அவன் தன்னை என்னவெல்லம் செய்ய காத்திருக்கிறானோ என்று நினைக்கும் போதே உடல் எல்லாம் நடுங்கியது.
****
இரவு…
“சாப்பாடு ரெடியா?” என்று கேட்ட படி, சாப்பிட வந்து அமர்ந்தார் குண சேகர்.
அவரின் மனைவி கீதாவும் அவருக்கு உணவை பரிமாற,
“ம்மா எனக்கும் ரொம்ப பசிக்கிது. உங்க புருஷனுக்கு சேவை செஞ்சது போதும். இங்கையும் கொஞ்சம் கவனிங்க” என்று தட்டை நீட்டிய படி, நக்கலாக சொல்லிக் கொண்டிருந்தாள் மிருதுளா.
கீதாவோ “இருடி வரேன்” என்ற படி அவளுக்கும் உணவை பரிமாற,
குணசேகரோ உணவை சாப்பிட்ட படியே, “கீதா பிருந்தா சாப்பிட்டாளா?” என்று கேட்க,
அவரோ “இன்னும் சாப்பிடலங்க. வீட்டுக்கு வந்ததுல இருந்தே தலை வலின்னு சொல்லி ரூம்ல தான் இருக்கா” என்று சொல்ல,
அவரோ “மாத்திரைய போட்டுட்டு வந்து சாப்பிட சொல்ல வேண்டியது தானே! ராத்திரில வெறும் வயித்துல தூங்குறது நல்லதில்லடி” என்க,
கீதாவும் அவரை சற்று முறைத்த படி, “நானும் சொன்னேன் தான். உங்க பொண்ணு எங்க என் பேச்ச கேட்டு இருக்கா. அவளுக்கு என்ன தோணுதோ அத தானே செய்வா” என்றார் சிடு சிடுவென.
“அதுக்காக புள்ளைய பட்டினில படுக்க விட்டுடுவியா? சாப்பாட போடு நானே அவளுக்கு போய் கொடுக்குறேன்” என்றார்.
அதே வேளை இங்கே கட்டிலில் படுத்த படி விட்டத்தை வெறித்து கொண்டிருந்தாள் பிருந்தா.
கண்ணில் ஒரு பொட்டு தூக்கம் இல்லை.
தலை வலி என்று கூட பொய் தான் சொல்லி இருந்தாள்.
இன்று நடந்ததை நினைக்க நினைக்க பயமாக இருந்தது.
தந்தையிடம் இது பற்றி சொல்லலாமா என்று நினைத்தாலும் அதற்கும் அவளுக்கு துணிவில்லை.
எப்படி இதை பற்றி அவள் கூறுவாள்?
தான் செய்த தவறுக்காக தன் தந்தை சிம்மனிடம் சென்று பேச வேண்டுமா?
இதனால் அவருக்கு எவ்வளவு பெரிய தலை குனிவு எற்படும்.
அதுவும் தனது மகளின் இப்படி பட்ட ஒரு புகைப்படம் ஒரு அந்நிய ஆணிடம் இருக்கிறது என்று தெரிந்தால் ஒரு தந்தையாக அவர் எப்படி அதை தாங்கி கொள்ளுவார்?
இத்தனை வருடம் கெளரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்த அவர் அந்த அயோக்கியனிடம் போய் தலை குனிந்து இதற்காக கெஞ்சுவதா?
நினைக்கும் போதே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தன்னால் எப்போதும் தன் தந்தை தலை குனிய கூடாது என்று நினைத்தவளோ எப்படியாவது இந்த பிரச்சனையை சமாளித்து இதிலிருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, திடுக்கிட்டுப் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
“பிருந்தா தூங்கிட்டியா?” என்று குணசேகரின் குரலே வெளியில் இருந்து ஒலிக்க,
கண்களைத் துடைத்துக்கொண்டு, “இல்லப்பா, உள்ள வாங்க” என்றாள்.
கையில் தட்டோடு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த குணசேகரோ, அவளின் அருகில் அமர்ந்தார்.
அவளது வாடிய முகத்தைப் பார்த்தவரோ, “என்னாச்சும்மா? வேலை விட்டு வந்ததுல இருந்து தலைவலின்னு அம்மா சொன்னா. இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்க,
அவளோ “மாத்திரை போட்டிருக்கேன்ப்பா. கொஞ்ச நேரத்துல சரியாயிடும்.” என்றாள் வலுக்கட்டாயமாக புன்னகைத்த படி,
அவரும் “சரி… கொஞ்சம் சாப்பிட்டு தூங்கு. ராத்திரியில சாப்பிடாம தூங்க கூடாதுல்ல” என்று உணவை அவளிடம் நீட்ட, அவளோ முதலில் மறுத்தாலும் அவரது பிடிவாதத்தால் வேறு வழி இல்லாமல் கொஞ்சம் சாப்பிட்டாள்.
இங்கே ஜிம் அறையில் உள்ள பாக்சிங் பையை மூச்சிரைத்த படி குத்திக் கொண்டிருந்தான் சிம்ம விஷ்ணு.
அவனுக்கு எதை பற்றியும் கவலை இருப்பதாக தெரியவில்லை.
ஒரு பெண்ணை இப்படி மிரட்டி அவள் நிம்மதியையே கெடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு சிறிதும் அவனுக்கில்லை.
வியர்வை வழிய மூச்சு வாங்கிய படி அதை குத்தி முடித்தவன், களைப்பாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தனது தொலைபேசியை எடுத்துப் பார்த்தான்.
திரையில் அவளின் புகைப்படம் தான் மின்னிக் கொண்டு இருந்தது.
அதை பார்த்து கேலியாக இதழ் வளைத்தவன், அவளின் தொலைபேசிக்கு அழைத்தான்.
இங்கே தூக்கம் வராமல் கட்டிலில் உருண்டு கொண்டிருந்த பிருந்தாவின் தொலைப்பேசி அலறியது.
ஆனால் அது சைலன்ட் மூடில் இருந்ததால் அவளுக்கு கொஞ்சமும் கேட்கவில்லை.
“ப்ச்” என்று சளித்த கொண்டே மீண்டும் அவளுக்கு முயற்சி செய்தான்.
ஆனால் இது எதுவுமே தெரியாமல் படுத்திருந்தவளோ ‘அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது!’ என்று மனதுக்குள்ளேயே திட்டம் தீட்டி கொண்டிருந்தாள்.
இவ்வாறு சில நிமிடங்கள் கழிய, ஏதேர்ச்சியாக தனது தொலைபேசியை எடுத்து பார்த்த பிருந்தாவுக்கோ அடி வயிறு கலங்கிப் போனது.
சட்டென படுக்கையில் இருந்து துடித்து எழுந்தவள், ‘அடக் கடவுளே! இவன் நம்மளுக்கு இத்தனை வாட்டி போன் பண்ணி இருக்கான். ஆனா ஏன் கேட்கல?’ என்று பார்த்தவளுக்கு அப்போது தான் அலைபேசி சைலன்ட் மூடுக்கு மாறி இருந்தது தெரிந்தது.
‘ஐயோ போச்சு!’ என்று தலையில் அடித்த படி, அவனுக்கு அவசரமாக அழைத்தாள்.
இங்கே தொலைபேசியை பார்த்து கொண்டு சற்று கடுப்பாக அமர்ந்திருந்தான் சிம்மன்.
அவள் அழைப்பு வர, அதையே பார்த்து கொண்டு அமைதியாக இருந்தான்.
‘உன்னேல்லம் கொஞ்சம் பதற வச்சா தான் சரியா இருக்கும்’ என்று எண்ணியவனோ,
அழைப்பை எற்காமல் மீண்டும் சென்று பாக்ஸிங் பையை குத்த ஆரம்பித்து விட்டான்.
இங்கே பெண்ணவளுக்கோ இதயம் வெளியே குதித்து விடும் அளவுக்கு தாறுமாறாக துடிக்க ஆரம்பித்து விட்டது.
அவனை பற்றி தான் தெரியுமே!
தொலை பேசியை எடுக்கவில்லை என்ற கோபத்தில் ஏதாவது ஏடா கூடமாக செய்து விட்டாள் என்ன செய்வது?
பதட்டம் ஏறி கொண்டே போனது அவளுக்கு.
ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.
எத்தனையோ மிஸ்டு கால்கள், மெசேஜ்களுக்கு பிறகு எந்த ஆரவாரமும் இல்லாமல் தொலை பேசியை அட்டன் செய்து காதில் வைத்தான் சிம்மன்.
இங்கே அவளுக்கு தான் பாதி உயிர் போய் வந்து விட்டதே!
எடுத்த உடனேயே, “ஏன் சார் போனை எடுக்க இவ்ளோ நேரம்? நான் எவ்ளோ பதறிட்டேன் தெரியுமா!” என்று குரல் நடுங்கிய படியே சொல்ல,
அவனோ துவாலையை கொண்டு தன் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்த படி, “நான் போன் பண்ணும் போது நீ எங்கடி போயிருந்த?” என்றான் கர கரப்பான குரலில்.
அவளுக்கோ பக்கென்று இருந்தது.
அப்படி என்றால் வேண்டும் என்றே தன்னை பதற வைக்க தான் இப்படி செய்திருக்கிறான் என்று புரிந்து கொண்டவளோ, “அது… என் போன் சைலன்ட்ல இருந்தது. அதான் நீங்க போன் பண்ணது தெரில்ல” என்று பவ்யமாக சொல்ல,
“ஓஹ்” என்றவனோ, “இதுக்கப்புறம் கொஞ்சம் கேர் புல்லா இரு. மறுபடியும் என் போனை ஆன்சர் பண்ணாம போனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியும்ல. அப்புறம் என்னை தப்பு சொல்ல கூடாது” என்று மிரட்டும் தொனியில் சொல்ல,
அவளோ மனதுக்குள் ‘டேய் பொறுக்கி உனக்கெல்லாம் நல்ல சாவே வராது. என் மானத்தை வாங்குறதுல உனக்கென்னடா அவ்ளோ சந்தோஷம்’ என்று வாய்க்குள்ளயே அவனை கரித்து கொட்ட,
சிம்மனோ “என்னடி வாய்க்குள்ளேயே என்னை திட்டுறியா?” என்று அவள் எண்ணம் அறிந்தாற் போல கேட்க, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘நம்ம மனசுல நினைக்குறது இவனுக்கு எப்படி தெரிஞ்சிது’ என்று யோசித்தவளோ,
“ஹி ஹி நான் ஏன் சார் உங்களை திட்ட போறேன். அப்படி எல்லாம் எதுவும் இல்லையே!” என்று சமாளிக்க,
அவனோ “ஓஹோ… நீ அப்போ என்னை திட்டல?” என்று அழுத்தமாக கேட்க,
அவளோ “சத்தியமா இல்லை சார். நான் எதுக்கு உங்களை போய் திட்ட போறேன்!” என்று கூறியவள்,
அந்த பேச்சை மாற்றும் பொருட்டு, “ஆமா… உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ மூச்சு வாங்குது?” என்று கேட்டாள்.
அவள் ஏதோ சாதாரணமாக தான் கேட்டாள்.
ஆனால் அவனோ அவளை சற்று சீண்டி பார்க்க நினைத்தவன், “ஒன்னும் இல்லை. உன் போட்டோவை பார்த்துட்டு இருந்தேனா. ரொம்ப மூட் ஆயிடுச்சு. அதான் என்னை கண்ட்ரோல் பண்ண முடில்ல” என்றவனோ “செம்ம பீல் தெரியுமா!” என்று கிசு கிசுப்பான குரலில் சொன்னானே பார்க்கலாம் அவளுக்கோ அருவருப்பில் முகம் சுண்டிப் போனது.
எப்படி பட்ட ஒரு விடயத்தை இவ்வளவு சாதாரணமாக சொல்லுகிறான்.
அதுவும் அவளது அந்த புகைப்படத்தை வைத்தா!
நினைக்கும் போதே குமட்டிக் கொண்டு வந்தது.
“ஏன் சார் இவ்ளோ சீப்பா பிஹாவ் பண்ணுறீங்க? இது உங்களுக்கே அசிங்கமா இல்லை” என்று பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.
அவனோ இதழ் கடித்து புன்னகையை அடக்கிய படி, “இதுல என்னடி அசிங்கம் இருக்கு? நானும் ஆம்பளை தானே! இப்படி ஒரு போட்டோவை பார்த்தா வேற என்ன தோணும்?” என்று வேண்டுமென்றே அவளது கோபத்தைத் தூண்டினான்.
அவளுக்கோ அவன் பேச்சில் அருவருப்பும், கோபமும் சேர்ந்தே வந்தது.
போயும் போயும் இவனிடம் போய் எதற்கு அந்த கேள்வியை கேட்டோம் என்று தான் தோன்றியது.
அதற்கு மேல் அவனிடம் பேச அவளுக்கு சுத்தமாக இஷ்டம் இல்லை.
“நான் போனை வைக்கிறேன்” என்று சொன்னவளோ அவன் பதிலை எதிர் பார்க்காமலேயே தொலை பேசியை தூக்கி கட்டிலில் வீசினாள்.
இப்படி ஒருவனிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நினைக்கும் போது அவள் மேலே அவளுக்கே கோபம் தான் வந்தது.
ஆனால் சிம்மனுக்கு அதை பற்றி எந்த கவலையும் இல்லை.
‘இவளை மாதிரி ஒருத்தியை நான் பார்த்ததே இல்ல. என்ன சொன்னாலும் நம்பிடுறா’ என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டான்.