Ep 6

அத்தியாயம் 6 

பிருந்தாவோ வார்டில் உள்ள நோயாளிகளுக்கான மருந்துகளைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள். 

அதே சமயம் சற்று பதட்டமாக அங்கு வந்தாள் கார்த்திகா. 

“பிருந்தா, ஒரு சின்ன ஹெல்ப்! சார் நேத்து நடந்த அந்த மெடிக்கல் கான்பரன்ஸோட முக்கியமான சில போட்டோஸையும், டேட்டா ஷீட்டையும் இப்போவே அனுப்பச் சொல்லி மெசேஜ் பண்றாரு. ஆனா என் போன்ல சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சு.” என்று சொன்னவள், 

“இந்த பென்டிரைவ்ல அந்த டீடெயில்ஸ் இருக்கு. உன் போன்ல கனெக்ட் பண்ணி அதை அவருக்கு அனுப்பிடுறியா? ப்ளீஸ்” என்று கேட்க, 

அவளுக்கே பல வேலைகள் இருந்தது. 

ஆனாலும் யாராவது உதவி கேட்டு வந்தால் அதை தட்டிக் கழிக்க மாட்டாள். 

அதனாலேயே “சரி சிஸ்டர் கொடுங்க” என்று அதை வாங்கி கொண்டவள், அந்த புகைப்படங்களை தனது தொலைபேசியில் ஏற்றி அவனுக்கு அவசரமாக அனுப்பிக் கொண்டிருந்தாள். 

அப்போது அங்கே வந்த ரம்யாவோ, “பிருந்தா! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? அந்தப் பக்கம் எமர்ஜென்சி வார்டுல பேஷன்ட் வந்திருக்காங்க. இங்கே நின்னுகிட்டு போனை நோண்டிட்டு இருக்கியா? முதல்ல அங்கே போ!” என்று  சத்தம் போட, 

பிருந்தாவும் “இதோ வரேன் சிஸ்டர்” என்று பதறிய படி, புகைப்படங்களை அவசரமாக அனுப்பி விட்டு, அங்கிருந்து ஓடினாள். 

அடுத்த இரண்டு மணி நேரம் அவளுக்கு மூச்சு விடக் கூட நேரமில்லை. எமர்ஜென்சி வார்டில் வந்திருந்த நோயாளிகளுக்கு ஊசி போடுவது, டிரிப்ஸ் மாற்றுவது என வேலையில் மொத்தமாக மூழ்கி போயிருந்தாள்.

ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிய, மதிய உணவுக்கான இடைவேளையும் வந்தது. 

பிருந்தாவும் அவளுக்கென கிடைத்த ஒரே தோழியான ஜானவியும் ஒன்றாக தான் மருத்துவமனையில் உள்ள கேண்டீனிற்குச் சாப்பிட சென்றனர்.

அங்கே கூட்டம் அதிகமாக இருக்க, ஒரு மூலையில் இருந்த மேசையில் இருவரும் அமர்ந்தனர்.

ஜானவியோ தட்டில் இருந்த உணவை ருசித்து சாப்பிட்டபடி, “பிருந்தா… இன்னைக்கு சாப்பாடு பரவாயில்லை இல்ல? ஆனா அந்த ரம்யா பிசாசு மட்டும் இல்லைன்னா இன்னும் நிம்மதியா சாப்பிட்டு இருக்கலாம்” என்று புலம்ப, 

அவளோ சிரித்த படி, “உனக்கு ஏன் அவங்க மேல அவ்ளோ காண்டு?” என்று கேட்டாள். 

“உனக்கு தெரியாது பிருந்தா. அவ என்னை நர்ஸ் வேலையைத் தவிர எல்லாத்தையும் செய்யச் சொல்றா. எமர்ஜென்சி வார்டுல ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகிடுச்சுன்னு சொல்லி, என்னைப் போய் அந்த வார்டு பாய் கூட சேர்ந்து அதை அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லிட்டா. அவன் சரியான பொம்பளை பொறுக்கி தெரியுமா! சிலிண்டரை புடிக்காம என் கையை புடிக்கிறான் பொறம்போக்கு” என்று கடுப்பாக சொல்ல, 

பிருந்தாவோ புன்னகைத்துக் கொண்டாள். 

இவ்வாறு அவர்கள் இருவரும் ஏதேதோ கதை அளந்த படி சாப்பிட்டு முடித்தார்கள். 

பிருந்தாவும் தண்ணீரை எடுத்து அருந்திய படி, ஏதேர்ச்சியாக தனது போனை எடுத்து பார்த்தாள்.

அதில் சிம்மனிடம் இருந்து ஏதோ குறுஞ் செய்தி வந்திருக்க, ‘இவர் என்ன நம்மளுக்கு மெசேஜ் பண்ணி இருக்காரு’ என யோசித்த படி ,

அதை படித்து பார்த்தவள் விழிகளோ அப்படியே வெளியே குதித்து விடும் அளவுக்கு விரிந்து போக, வாயில் இருந்த தண்ணீரை அப்படியே ஜானவியின் முகத்திலேயே துப்பிவிட்டாள்.

அவளோ பதறிய படி, “ஹேய் என்ன காரியம்டி பண்ணிட்ட?” என்று கத்திய படி எழ, 

பிருந்தாவுக்கோ அவள் பேசிய எதுவுமே காதில் ஏறவில்லை. 

அவள் விழிகளோ சிம்மன் அவளுக்கு அனுப்பி இருந்த அந்த செய்தியை தான் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது. 

அதிலோ,

‘யூ லுக் செக்ஸி. பட் அந்த டவல் மட்டும் இல்லன்னா இன்னும் பெட்டரா இருந்து இருக்கும்’ என்று எழுதி இருக்க, அதை வாசிக்கும் போதே அவள் இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது. 

ஆம். கொஞ்ச நேரத்துக்கு முன்னர் அவள் சில புகைப்படங்களை சிம்மனுக்கு அனுப்பி இருந்தாளே!

அதில் நேற்று அவள் துண்டோடு எடுத்து கொண்ட அந்த புகைப்படமுமே தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 

நேற்று அவள் அந்த புகைப்படத்தை அழிக்க மறந்து விட்டாள். 

ஆனால் இன்று அதுவே அவள் அறியாமல் சிம்மனின் போனுக்குச் சென்று அவளை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நிறுத்தும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

“ஹேய்… என்னடி ஆச்சு உனக்கு? ஏன் பேய் அறைஞ்ச மாதிரி இருக்க?” என்று முகத்தைத் துடைத்தபடி ஜானவி கேட்க,

பிருந்தாவோ எந்த பதிலுமே சொல்லாமல் அங்கிருந்து அவசரமாக வெளியே ஓடினாள். 

பதட்டத்தில் அவளுக்குக் கை கால்கள் உதறின. 

மூச்சு கூட விட முடியவில்லை. 

என்ன காரியம் செய்து விட்டாள்.

‘அவசரத்துல அந்த போட்டோவ அவனுக்கு அனுப்பி வச்சிட்டேனே!’ என்று நொந்த படி, நேராக அவனது கேபினுக்கு போனாள்.

எப்படியாவது அந்த புகைப்படத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு. 

கதவை தட்டி அனுமதி கேட்கும் அளவுக்கு எல்லாம் அவளுக்கு துளியும் பொறுமை இல்லை. 

தடால் என்று கதவை திறந்து உள்ளே நுழைந்தவள், “அந்த போட்டோவை டெலிட் பண்ணிடுங்க சார்” என்றாள் அதே பட படப்புடன். 

அவனோ இருக்கையில் சாவகாசமாக அமர்ந்து தொலைபேசியில் அவளின் அந்த புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

பிருந்தாவின் பதற்றத்தை பார்த்து நக்கலாக புன்னகைத்தவன், 

“டோரை தட்டிட்டு வரனுங்குற மேனஸ் கூட இல்லை? போயி எக்ஸ்கியூஸ் கேட்டுட்டு உள்ள வா” என்றான் அதிகாரம் கலந்த குரலில்.

அவளுக்கோ கோபமும், ஆத்திரமும் சேர்ந்தே வந்தது. 

அவளே பதறிப் போய் வந்து இருக்கிறாள். ஆனால் அவனோ இந்த நேரத்தில் போய் ரூல்ஸ் பேசிக் கொண்டு இருக்கிறானே! 

“சார்… ப்ளீஸ்… அந்தப் போட்டோ…” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க,

சிம்மனோ அவள் சொல்வதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் “போய் பர்மிஷன் கேட்டு உள்ள வான்னு சொன்னேன்” என்று அழுத்தமாக சொல்ல, 

அவளும் தன் நிலையை எண்ணி நொந்த படி, வெளியே சென்றவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்.

அவனோ “எஸ் மிஸ் பிருந்தா என்ன ப்ரோப்லேம்?” என்று எதுவுமே தெரியாதது போல கேட்டான். 

அவளோ அவன் அருகில் நெருங்கி வந்தவள், “சார் காலையில அந்த போட்டோ எனக்கே தெரியாம உங்க போனுக்கு சென்ட் பண்ணி பட்டுடுச்சு. ப்ளீஸ் அத இப்போவே டெலிட் பண்ணிடுங்க.” என்று கண்களில் கண்ணீர் வழிய கெஞ்சினாள்.

ஆனால் சிம்மனோ அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் பார்த்தவன், நாற்காலியில் இன்னும் சௌகரியமாகச் சாய்ந்து அமர்ந்தான். 

அவளது கண்ணீரோ, நடுக்கமோ அவனைச் சற்றும் பாதித்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவளது அந்தப் பலவீனத்தை அவன் ரசிப்பது போலவே அவனது பார்வை இருந்தது.

“டெலீட் பண்ணிடலாமே… அதுல என்ன இருக்கு” என்று சொன்னவன், திரும்பி அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, 

“பட் அதுல ஒரு கண்டிஷன் இருக்கு” என்று   சொன்னானே பார்க்கலாம் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. 

“சார் நீங்க… நீங்க இதுக்கு போய் கண்டிஷன் போடுறீங்களா?” என்று சற்று கோபமாக கேட்டாள்.

எவ்வளவு தான் அவளும் பொறுமையாக இருப்பாள்.

“ப்ச்” என்று உதட்டைச் சுழித்தவன், “கண்டிஷன் இல்லாம எப்படி? ஒன்னு இந்த போட்டோவை நான் டெலீட் பண்ணனும்… இல்லன்னா….” என்று இழுத்தவன், 

அவள் பயம் கலந்த முகத்தை ரசித்த படியே, “இன்னைக்கு நைட்டுக்குள்ள ஹாஸ்பிடல் குரூப்ல இது வைரல் ஆகணும். எது வேணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ,” என்று அவள் தலையில் இடியையே இறக்கி இருந்தான்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top