பிழை -31

நெற்றியில் கை வைத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் வாசு.

தந்தையின் நெஞ்சினில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள் அனு. அவனது ஒரு கை அனுவை அணைத்துக் கொண்டிருந்தது.

நாளை காலை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் .தூக்கம் வருவேனா என்றது.

எதையோ நினைத்து குழம்பித் தவித்துக் கொண்டிருந்தது அவனது மனம்.


ஹாலில் பியானோ வாசிக்கும் ஒலி கேட்டது. மெல்ல எழுந்தவன் அறையை திறந்து கொண்டு  வெளியே வந்தான்.

ஆருத்ரா தான் பியோனாவை வாசித்துக் கொண்டே பாடினாள்.

வரவின்றி செலவானால் தவறில்லையே…

வாழ்நாட்கள் செலவானால் வரவில்லையே…

நேற்றோடும் இன்றோடும் நீயில்லையே…

நாளை உன் கையோடு உனக்கில்லையே..

யாரிடம் தவறில்லை…

யாரிடம் குறையில்லை…

தூக்கமே நிம்மதிதூங்கிடு நண்பனே…

நீ கடந்த காலங்களை கலைந்து எறிந்துவிடு

விழி மூடும்….

எந்தன் குரல் கேட்டு உனைத் தூக்கம் தழுவாதா…

பந்தம் நானில்லை…பரிதாபம் கூடாதா…

நண்பனே…நண்பனே…நண்பனே…” என்று பாடி முடித்ததும் மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

கதவினோரம் நின்று கைகளை கட்டிக்கொண்டு அவளை தான் பார்த்திருந்தான்‌ வாசு…

மெல்ல எழுந்து  அவனருகே வந்தவள் அவனை ஆழந்துப் பார்த்தாள்.

அவனும் விழியகற்றாமல் அவளை தான் பார்த்திருந்தான்.

“ குட்‌ நைட் வாசு…போய்த் தூங்குங்க…” என்று கூறி விட்டு நகர முயன்றவளை சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டான் வாசு.

அவனது செயலை சிறிதும் எதிர்பாராதவள்  அதிர்ந்து தான் போனாள்.

அவனது அணைப்பு அவ்வளவு இறுக்கமாக இருந்தது. எலும்புகள் நொறுங்கி விடும் அளவிற்கு வலித்தது.

“ வாசு….தேவ்…” என மெல்லிய குரலில் அவனது பெயரை தடுமாறிய படி கூறினாள்

அவனை அணைத்துக் கொள்ள துடித்த கரங்களை முயன்று கீழே இறக்கி விட்டாள் .

“ப்ளீஸ்….! ருத்ரா….கொஞ்ச நேரம் அப்படியே இரு… தப்பா உன்னை ஹக் பண்ணிக்கல…. கொஞ்சம் ஆறுதலா இருக்கு…. ப்ளீஸ்…!” என்றவன் உணர்வுகளை அனைத்தையும் கைகளில் கொண்டு வந்து அணைப்பில் அழுத்தத்தை கூட்டினான்.

சில கணங்கள் அவனது அணைப்பில் நின்றிருந்தாள்.

மெல்லிய உடல்வாகு கொண்டவள் மூச்சடுக்க சிரமப்பட மெல்ல அவளை விட்டு விலகி நின்றான்..

அவளது முகத்தை கையில் தாங்கி… “தேங்க் யூ ஃபார் எவிரிதிங்க்…* என்றபடி அவளது விழிகளை ஊடுருவினான்.

எப்போதும் போல அவளது விழிகள் நேராக அவனது விழிகளை சந்தித்தது.

தன்னை மறந்து அவளது கன்னத்தை தட்டி, “ பை…குட்நைட்…போய் தூங்கு…” என்று கூறி விட்டு அறைக்குள் நுழைந்தான்.

தன் கன்னத்தை தொட்டுப்‌ பார்த்தவளுக்கு அவனது உள்ளங்கையின் வெப்பம் தனது கன்னத்தில் இன்னும் மிச்சமிருப்பது போல தோன்றியது. அதில் சிலிர்த்துப் போனவள் மெல்லிய சிரிப்புடன் அறைக்குள் நுழைந்து கொண்டு கதவின் மேல் சாய்ந்து நின்றாள்.

உடல் முழுவதும் அவனது வாசனை நிறைந்திருக்க கைளை தனது மார்புக்கு குறுக்கே அணைத்துக் கொண்டு மெத்தையில் விழுந்தாள்.

நிம்மதியான உறக்கம் இருவரையும் தழுவியது.

மறநாள் காலயில்  எழுந்த வாசு ஆருத்ராவிடம் வந்து , “இன்னைக்கு அனுவை நீ ட்ராப் பண்ணிடு‌‌….நான் கோர்ட்டுக்கு போறேன்…உனக்கு எதுவும் சிரமம் இல்லயே?” என்றான்.

அவனையறியாமலேயே உரிமையுடன் ஒருமைக்கு தாவியிருந்தது அவனது பேச்சு…அதையும் குறித்துக் கொண்டாள் ஆருத்ரா.

பதிலேதும் அவளிடமிருந்து வராததால் நிமிர்ந்து அவனைப் பார்த்தவன் அவள் முன்பு கையை ஆட்டி, “ ஹலோ…! உன் கிட்ட தான் கேக்குறேன்…ருத்ரா. அனுவை ஸ்கூல்ல விட்டுடுறியா?” என்றான்.

“ ஹா…ஹான்…சரி..நான் விட்டுடுறேன்..” என்றாள்.

“ பை…” என்றவன் அனுவின் புறம் திரும்பி, “ அனு பை..குட்டி…” என்றான்..

“ பை அப்பா…” என்றாள் அனு உற்சாகமாக.

அவளது புன்னகையை பார்த்தபடி ருத்ராவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.

தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அப்போது அவனது அலைப்பேசிக்கு அழைப்பு வர  எடுத்துப் பார்த்தான். சுந்தரி அக்கா தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க கா.. எப்படியிருக்கீங்க…?”

அவனது குரலில் வழக்கத்திற்கு மாறாக அதிக உற்சாகம்.

“ வாசு…உனக்கு நிறைய தபால் வந்திருக்கு ப்பா..வந்து வாங்கிட்டு போறீயா? நான் மதியம் ஊருக்கு கிளம்புறேன்…போனா ஊர் திரும்ப ரெண்டு மாசம் ஆகும். இப்பவே வந்து வாங்கிட்டு போயிடேன்…” என்றார்.

நேரத்தை பார்த்தான். இன்னும் அரை மணிநேரம் இருந்தது.

“ சரிக்கா…இப்பவே வந்து வாங்கிட்டு போறேன்…” என்றவன் நேராக தனது பழைய வீட்டிற்கு வாகனத்தை செலுத்தினான்.

அனுவின் நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டு ஒரு வழியாக்கி விட்டனர் .

அவர்களிடம் தப்பி சுந்தரி அக்காவின் வீட்டிற்குள் சின்ன சிரிப்புடன் நுழைந்தான்.

அவனை வரவேற்று அமர வைத்தார் சுந்தரி.

பல வருடங்களுக்கு பிறகு வாசுவின் முகம் மலர்ந்து விகசித்ததை கவனித்தவர் அவனை நெட்டி முறித்து, “ இதே மாதிரி சிரிச்சு முகமா நீ எப்பவும் இருக்கணும் வாசு…இந்தா இதெல்லாம் உனக்கு வந்த தபால்..” என அவனிடம் நீட்டினார். 

சிறு வெட்கத்துடன் அதனை வாங்கிக் கொண்டவன் , “ சரிக்கா…நான் கிளம்புறேன்…இன்னைக்கு முதல் ஹியரிங் .. கோர்ட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்..” என்று கூறி பெருமூச்சு விட்டான்.

“ வாசு…சொல்றேன்னு தப்பா நினைக்காத…பொருத்தமில்லாத திருமண பந்தம் எப்பவுமே நிலைக்காது. எதையும் இழுத்துப் பிடிச்சி தக்க வைச்சுக்க நினைக்காத…விட்டுடு…உனக்கு இன்னும் வயசு இருக்கு. நல்ல வாழ்க்கை துணையை அமைச்சிக்க. பெண் குழந்தை வச்சிருக்க.. எந்நேரமும் அவளை கவனிச்சிட்டே இருக்க முடியாது. யோசிச்சு முடிவு எடு…” என்றார்.

“ ம்ம்…பாக்குறேன் க்கா..”

“ அப்பறம் இன்னொரு விஷயம்…நீ இங்க வந்து குடியேறுன கொஞ்ச நாள்ல ஆருத்ரா இங்க வந்திருந்தாங்க. ‘வாசு எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் ….அவருக்கு எதாவது பிரச்சனைன்னா எனக்கு உடனே இன்ஃபார்ம் பண்ணுங்க…அவங்க வீட்டுல எது வித்தியாசமா நடந்தாலும் உடனே சொல்லுங்க. அவருக்கு உதவி பணணுறதுக்கு எப்பவும் நான் தயாரா இருக்கேன்’ னு சொல்லி அவங்க ஃபோன் நம்பரும் கொடுத்துட்டு போனாங்க.ப்பா… வீட்டுத் தவணை நீ கட்ட முடியாம நின்னப்ப அவங்க தான் சரியா நேரத்துல வந்து உதவி செஞ்சாங்க. ரொம்ப நல்லப் பொண்ணா தெரியுறாங்க…” என்றார் அப்பாவியாக.

அதைக் கேட்டவனின் மனம் துணுக்குற்றது. யோசனையுடன் வெளியே வந்தவன் நீதிமன்றத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.

சந்தியா மாதேஷூடன் நின்றிருந்தாள்.

அவளைப்  பார்த்தவனுக்கு சுர்ரென்று ஏறியது

முயன்று அடக்கிக் கொண்டவன் நீதிமன்ற வளாகத்தினுள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டது. அவள் தரப்பு வாதம் மிகவும் பலகீனமாக இருந்தது.

அவளிடம் விசாரித்ததற்கு, “ எனக்கு அவர் கூட வாழ கொஞ்சம் கூட விருப்பமில்லை. அந்த வீட்டுல கொஞ்சம் கூட எனக்கு  சுதந்திரமே இல்லை. எதுக்கெடுத்தாலும் கை நீட்டி அடிக்குறாரு.. அவருக்கும் அவங்க ஆஃபிஸ் மேனேஜருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கு. அதை தட்டி கேட்டதுக்கு என்னை அடிச்சிட்டாரு…ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நேரத்துல தான் மாதேஷ் எனக்கு பழக்கமானாரு..அவர் ரொம்பவே நல்லவரு. என்னை நல்லா கவனிச்சுக்குறாரு. எனக்கு இந்த மாதிரி ஒரு ஆள் கூட வாழப் பிடிக்கலை…மாதேஷ் கூட வாழ தான் பிடிச்சிருக்கு. ப்ளீஸ்…எப்படியாவது எனக்கு டிவேர்ஸ் குடுத்திடுங்க…”என மிக அழகாக காரணங்களை அடுக்கி தன்பக்கம் அதிக  நியாயம் இருப்பதை போல காட்டிக் கொண்டாள்.

வாசுவின் முகம் இறுகிப் போயிருந்தது. எத்தனை பொய்கள்? மனம் வெறுத்துப் போனது அவனுக்கு. இவளுக்காகவா ஓடியோடி உழைத்தோம்? அத்தனை நம்பிக்கையும் அன்பும் பொய்த்துப் போய் முட்டாளாகி நிற்பது போல் தோன்றியது.

அவன் தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டது.

 சந்தியாவின் தாய் மற்றும் தமையன் ஊரில்  இல்லை .  அடுத்த மாதத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது .

கோபம் கொப்பளிக்க வெளியே வந்தவன் மாதேஷூடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த சந்தியாவைப் பார்த்தான்.

அதே கோபத்துடன் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்தவன் நேராக ஆருத்ராவின் வீட்டிற்கு முன்பு  வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்‌

ஏதோ தபால் வந்திருக்கு அதை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.  ஆருத்ரா வீட்டில் இல்லை.

அனுவைப் பள்ளியிலிருந்து அழைக்கச் சென்றிருந்தாள் ஆருத்ரா.

சோர்வுடன் அமர்ந்தவனின் விழிகள் ஆருத்ராவின் அறையை வட்டமிட்டது.

அவளுக்கு வந்த தபாலை எடுத்துக் கொண்டு அவளறைக்குச் சென்றவன் மெத்தையில் தபாலை வைத்து விட்டு நிமிர்ந்தான்.

அறையை சுற்றிலும்  பார்வையை  சுழல விட்டவன் மெத்தையிலிருந்த வாசுதேவன் என்ற பெயரைத் தாங்கிய கோப்பினை பார்த்தான்‌

வேகமாக அதனை எடுத்துப் புரட்டினான்.

அதில் அவனது பழைய வீட்டை ஆருத்ரா வாங்கியிருந்ததிற்கான ஆவணங்கள் இருந்தன.

வேகமாக அனைத்து ஆவணங்களையும்  சரி பார்த்தான் .

ஆம்…!அவனது பழைய வீட்டை அவள் தான் வாங்கியிருந்தாள்.

கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. “கடைசில நீ கூட என்னை ஏமாத்திட்ட ல ஆருத்ரா…” என்று கத்தியவன் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் . 

ஆருத்ரா வேண்டுமென்றே தனக்கு நெருக்கடியை கொடுத்து வீட்டில் இருந்து வெளியேற வைத்திருக்கின்றாள் என தவறாக நினைத்தான். அவள் மீது கொலைவெறி வந்தது. தன்னை நெருங்க இப்படியொரு கீழ்த்தரமான செயலை செய்துள்ளாள் என்று ஆணித்தரமாக நம்பினான்.

“ நாளைக்கு நாம ரெண்டு பேரும் பஞ்சு மிட்டாய் சாப்பிடலாமா? அப்பறம் நெக்ஸ்ட் வீக் பீச்சுக்கு போகலாம்…சரியா?” என்று அனுவுடன் பேசிக் கொண்டே வந்தவள் தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் வாசுவைப் பார்த்தாள் .

நிச்சயம் ஏதோ காயப்பட்டிருக்கின்றான் எனப் புரிந்தது. 

சந்தியாவை பார்த்த அழுத்தம் அவனுள் இருக்கும் என்று ஓரளவிற்கு அவனது மனநிலையை சரியாகவே கணித்தவள்  அனுவை சாப்பிட வைத்துவிட்டு  காவலாளி சங்கரனிடம் அனுவை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு அறையினுள் நுழைந்து கதவை தாழ் போட்டாள்.

“ என்னாச்சு வாசு..? என்ன சொன்னாங்க? சந்தியா  வந்தாங்களா? அடுத்து எப்ப வரச் சொல்லிருக்காங்க? கவலைப்படாதீங்க தேவ். எதையும் போட்டு மனசுல குழப்பிக்காதீங்க…” என்று அவனை நெரு்கி நின்றவளின் தலை முடியை கொத்தாக பிடித்துக் கொண்டான்.

“ என்னது இது? என்னோட வீட்டை நீ தான் வாங்கியிருக்கியா?” என்றான்.

அவனது செயலால் அதிர்ந்து போய் நின்றிருந்தாள்  ஆருத்ரா.

தனது கவனக்குறைவினால் அவனது வீடு சம்பந்தப்பட்ட கோப்பினை மெத்தையின்  மீதே வைத்து விட்டுச் சென்ற மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.

“ சொல்லு டி…இதெல்லாம் உன்னோட வேலை தான? என்றான் ஆத்திரமாக.

தலைமுடியை அவன் அழுத்தி பிடித்ததினால் வலி உயிர் போனது, 

விழிகளை சுருக்கிக் கொண்டு வலியைத் தாங்கி நின்றாள்.

“ சொல்லப் போறியா இல்லையா?” என கர்ஜித்தான்.

“ ஆமா…நான் தான் உங்க வீட்டை வாங்கியிருக்கிறேன்…ஆனா…ஏன்னா..” என்பதற்குள்  பளாரென்று அவளை அறைந்து மெத்தையில் தள்ளினான்.

“ எவ்வளவு கீழ்தரமான புத்தி உனக்கு. நான் வேணும்ங்கற வெறி.அதான் சுந்தரி அக்காவை என்னோட வீட்டை  
வேவு பார்க்க வச்சிருக்க. அதெப்படி நான் எல்லாத்தையும் இழந்து நிக்கறப்ப…கரெக்டா நீ அந்த நேரத்துக்கு அங்க வந்த சேர்ந்த? சுந்தரி அக்கா சொல்லி தான? சொல்லு டி…சுந்தரி அக்கா சொல்லி தான?என்றான்.

கலங்கிய கண்களுடன்,ஆமென்றாள்.

இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டவன்  , “ இப்ப என்ன உனக்கு நான் வேணும் அவ்வளவு தானே..? எவ்வளவு நேரம் உன் கூட சந்தோஷமா இருக்கணும் சொல்லு…நான் ரெடி…” என்றவன் படபடவென தனது சட்டையை கழட்டி தூர எறிந்தவன் அவள் மீது மொத்தமாக கவிழ்ந்தான்..

அவளது முகத்தை தாங்கி ஆக்ரோஷமாக முத்தமிட்டுக்கொண்டே அவளது ஆடையை களைந்தான். அவளது மறுப்பையெல்லாம் ஒரு கையால் அடக்கி மெல்லிய உதடுகளை சுவைக்க ஆரம்பித்தான்‌.

அவளது உதடுகள் அவன் வசம் சிக்கித் தவித்தது.. அவனைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றவளின்  கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கொண்டு பெண்ணுடல் எங்கும் ஆக்ரோஷமாக முத்த ஊர்வலம் நடத்தினான்.

அவனது பற்தடங்கள் அவளது கழுத்து, மார்பு என அனைத்து இடங்களிலும் பதிந்து வலியை கொடுத்தது.

“ வேணாம்…தேவ்…விடுங்க…ப்ளீஸ்…நீ கெட்டவனை மாறிப் போகதே…! தேவ்.. விடு தேவ்….” என்று கூறி கைகளை கொண்டு பெண்மையை மறைத்துக் கொண்டு தோய்ந்து அழுதாள். மிகுந்த மன அழுத்தமாகி மூச்சு வாங்க ஆரம்பித்திருந்தது ஆருத்ராவிற்கு

இத்தனை நாட்களாக அவனுள் இருந்த மென்மையான குணம் மாறி உள்ளுக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது.

அவளது கைகளை விலக்கிவிட்டு   கழுத்திற்கு கீழ் நோக்கிக் குனிய “அப்பா…..எங்கயிருக்கீங்க…? இங்க வாங்கப்பா…?” என்ற அனுவின் குரல் கேட்டு பதறியடித்து கொண்டு அவள் மீதிருந்து எழுந்தான் வாசு.

தான் செய்து கொண்டிருக்கும் காரியம் நொடியில் புரிய தலையில் அறைந்து கொண்டவன்  தொண்டையை சரி செய்து கொண்டே , “இ…இரு…டா..கு..குட்டிம்மா…அ…அப்பா…இ…இதோ…வந்து..வந்துடுறேன்…” என தடுமாறிக் கொண்டே ஆருத்ராவைப் பார்த்தான்.

போர்வை இழுத்து தன் மார்பு வரை போர்த்திக் கொண்டவள் மூச்சு விட சிரமப்பட்டாள்.

அவளது காதலானவனே காயங்களையும் கொடுத்து அவளை துடிக்க வைத்து விட்டான்.

அவனை பார்த்தபடியே இருந்தவளது விழி நீர் தலையணையை நனைத்தது.



















































 














     ‌





.



 ‌

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top