ஒரு வாரமாக உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள் திவ்யா.
இருண்டு மூன்று முறை அவளை சமாதானப்படுத்த முயன்று வெற்றிகரமாக தோல்வியை தழுவினான் வாசு.
அன்று இரவு பன்னிரெண்டு மணி அளவில் அவளது அறையை சத்தமில்லாமல் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் வாசு.
தாயினருகே உறங்கிக் கொண்டிருந்தவளின் கையை விலக்கி வைத்து விட்டு அதில் ஆளுயர இளஞ்சிவப்பு நிற கரடி பொம்மையை வைத்தான்.
எப்போதும் தலையணையை கட்டிக்கொண்டு உறங்கும் பழக்கமுடைய திவ்யா கட்டி பொம்மையை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளருகே பெரிய அளவு டைரி மில்க் சாக்லேட்டையும் , நீண்ட நாட்களாக அவள் கேட்டுக்கொண்டிருந்த புதிய அலைப்பேசியை வைத்து விட்டு அவளது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துவிட்டு “ ஹேப்பி பர்த்டே மை டியர் ஆங்கிரி பேர்ட்..” என்று கூறி விட்டு வெளியே சென்றான்.
தன்னுடைய தேவையை குறைத்துக் கொண்டு தான் சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணத்தில் அவளின் பிறந்தநாளிற்கு வாங்கி வைத்திருந்த பொருட்களை அவளருகே வைத்து விட்டு நகர்ந்தான் அந்த பாசமிகு அண்ணன்.
காலையில் எழுந்தவள் தன்னருகே ஏதோ பொசுபொசுவென்று இருக்க , “என்னதிது அம்மா திடீர்ன்னு இவ்வளவு சாஃப்டா பொம்மை மாதிரி இருக்காங்க” என முணுமுணுத்துக் கொண்டே எழுந்தாள்.
கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு பார்க்க ஆளுயர கரடி பொம்மை அவளருகே அழகாக வீற்றிருந்தது.
“ ஹ்ய்ய்……டெடி…சோ…ப்யூட்டிஃபுல்.” என்று கூறி விட்டு இறுக அணைத்து கொண்டாள்.
அருகில் அவளுக்கு பிடித்த பெரிய டைரி மில்க் சாக்லேட்டும், கிஃப்ட் ராஃப்பில் சுற்றப்பட்ட பரிசுப்பொருளும் இருந்தது.
“ஹய்…என்னது டா இது? “ என்று கூறியபடி கிஃப்ட் ராப்பரை வேக வேகமாக கிழித்தெடுத்தாள்.
வாசலில் கைகளை கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றிருந்த வாசு அவளது முகப்பாவத்தை பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
“பொறுமையே இல்ல.. இவளுக்கு. கொஞ்சம் மெதுவா தான் ஓபன் பண்ணுனா என்ன. எல்லாத்துலயும் அவசரம்” என முணுமுணுத்தான்.
“ வாவ்…! ஃபோன்…”என கத்தியவள் அதை ஒரு கையில் வைத்துக் கொண்டு மறுகையால் அருகிலிருந்த டைரி மில்க் சாக்லேட்டையும் வேக வேகமாக பிரித்து வாயில் போட்டுக் கொள்ள போனாள், சட்டென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்ட வாசு,” போய் ஃப்ரெஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடு” என்றான்.
அவனை முறைத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து பல் தேய்த்து முகத்தை நன்றாக கழுவி விட்டு வெளியே வந்தாள்.
அவளது தாய் தேநீர் கோப்பையை அவள் முன்பு நீட்ட “ எனக்கு டீ வேணாம். நான் இப்ப டைரிமில்க் சாப்பிட போறேன்.”என்றாள்.
“ ஏன் டி காலையிலேவா?” என தலையில் அடித்துக் கொண்டு சென்றார்.
அவர் சென்ற பிறகு நிதானமாக சாக்லேட்டை பிரித்தவள் தங்க நிற காகிதத்தை பிரித்து தனியாக எடுத்து வைத்து விட்டு சிறு துண்டை பிய்த்து தன் வாயருகே கொண்டு செல்ல முயன்றவள் சட்டென்று வாசுவின் வாயில் திணித்து விட்டு,”தாங்க யூ சோ மச் டா பித்துக்குளி அண்ணா” என்றாள்.
சின்னச் சிரிப்புடன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவி. நீ ஆசைப்பட்டது எப்போதும் உனக்கு கிடைக்கணும்னு வேண்டிக்குறேன்” என்று கூறி விட்டு மற்றோரு சாக்லேட் துண்டினைப் பிய்த்து அவளுக்கு ஊட்டினான்.
“எதுக்கு டா அண்ணா இவ்வளவு செலவு பண்ணி எல்லாம் வாங்கிட்டு வந்துருக்க? பழைய ஃபோனையே வச்சிருந்திருப்பேனே..!” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.
“அதுல எங்க இடம் இருக்கு. ஃபுல்லா டேப் போட்டு ஒட்டி வச்சிருக்க. பரவாயில்ல டா இருக்கட்டும் வச்சிக்க. “ என்றவன் மேலும் சில ரூபாய் நோட்டுகளை அவளது கையில் திணித்து விட்டு ப்ரெண்ட்ஸ் கூட வெளியே லன்ச்க்கு போ. சாய்ந்திரம் அம்மாவோட கோவிலுக்கு போயிட்டு வா.” என்று கூறி விட்டு வெளியே சென்றான்.
எப்போதும் போல சுயநலமில்லாத அவனது அன்பு அவளை கண்கலங்க வைத்தது.
அவளது அலைப்பேசியில் பிரத்யேக ஒலி வர , எடுத்துப் பார்த்தாள்.
“ஹேப்பி பர்த்டே மை டியர் க்யூட் ஏன்ஜல்” என்ற குறுஞ்செய்தி ப்ராகாஷிடமிருந்து வந்திருந்தது.
அதனைப் பார்த்தவளின் உதடுகள் சற்று தாராளமாக விரிந்து கொண்டது.
குறுஞ்செய்திகளை உடனே அழித்து விட்டு அலைப்பேசியை சார்ஜில் போட்டு விட்டு குளிக்கப் சென்றாள்..
நாட்கள் அதன் போக்கில் சென்றது.
அன்று அந்த பிரம்மாண்டமான கலையரங்கம் முழுவதும் மாணவ மாணவிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன.
ஆட்டம் பாட்டம் என அதகளம் படுத்திக் கொண்டிருந்தனர் மாணவ மாணவிகள்.
“வாசு என்ன பாட்டுன்னு டிசைட் பண்ணிட்டியா? உங்கூட பாடப் போற ப்ரியா நல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டாளா?அடுத்து உங்க பாட்டு தான் டா. சீக்கிரம் போடா…ஸ்டேஜ்ல அவுன்ஸ் பண்ணிட்டாங்க. ஏ..ப்ரியா ஏன் திரு திருன்னு முழிச்சிட்டு நிக்குற? போ..போ..” என இருவரையும் விரட்டினான் வாசுவின் தோழன் அகிலன்.
இருவரும் மேடையில் நின்றிருந்தனர்.
“ ஏய் ஆரு…! அங்கப் பாரு டி. ஆர்டஸ் காலேஜ் கல்சுரல்ஸ் நடக்குது போல. ம்ம்…நமக்கு க்ளாஸ் இல்லைன்னா போய் பாத்துட்டு வரலாம். “ என்று கூறி கொண்டிருந்த மாதங்கியை இழுத்துக் கொண்டு அந்த கலையரங்கத்தின்னுள்ளே நுழைந்தாள் ஆருத்ரா.
மேடையில் சற்று பதட்டத்துடன் நின்றிருந்தான் வாசு.
ப்ரியா மேடையின் ஓரமாக நின்று ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தாள் .
“ தேவ்?” என முணுமுணுத்தவள் மாதங்கியை அம்போவென விட்டு விட்டு மேடையினருகே ஓடினாள்.
வேகமாக ப்ரியாவின் அருகில் வந்தவள்,” என்னாச்சு?” என்றாள்.
அதற்கு அவள் பதிலளிக்கும் முன்பே அகிலன்,” மேடம் இப்ப வந்து தொண்டை கட்டியிருக்குன்னு சொல்றாங்க. பாட்டும் ப்ராக்டீஸ் பண்ணியாச்சு வேற சாங் மாத்த முடியாது. மேடைக்கு வந்துட்டு இப்படி சொன்னா என்னப் பண்றது? இப்ப வாசுவோட யார் பாடுறது?” என கடுகடுத்தான் அவளை முறைத்துக் கொண்டே.
ப்ரியாவிற்கு நன்றாகவே தொண்டை கட்டியிருந்ததால் அவனுக்கு பதில் கூற முடியாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
“ சரி என்ன பாட்டு? சொல்லுங்க நான் அவரோட சோர்ந்து பாடுறேன்.” என்றாள்.
“ப்ராக்டீஸ் பண்ணாம எப்படி?” என்று இழுத்தவனை முறைத்தவள்.
“என்ன பாட்டுன்னேன்.?” என்றாள் அழுத்தமாக.
“ நான் போகிறேன் மேலே…மேலே… பாட்டு” என்றான் அகிலன்.
அதற்குள் மாணவ மாணவிகள் கலாட்டா செய்ய ஆரம்பிக்கவே, சட்டென்று மேடையேறியவள் , “ஹாய் கைஸ்…கொஞ்சம் அமைதியா இருந்தா தான் பாடுறதை கேக்க முடியும். கொஞ்சம் டெக்னிக்கல் இஷ்யு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல பாட ஆரம்பிச்சுடுவோம்”என்றவள் நொடியும் தாமதிக்காமல் பாடல் எழுதியிருந்த காகிதத்தை ஒரு கணம் பார்த்து விட்டு மேடையேறினாள்.
அவனைப் பார்த்து அர்த்தமாக தலையசைத்து விட்டு பாட ஆரம்பித்தாள்.
பாடலின் இசை கரோக்கியில் ஒட ஆருத்ரா பாட ஆரம்பித்தாள்.
“ நான் போகிறேன் மேலே…மேலே…
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே..
பூவாளியின் நீரைப் போல
நீ சிந்தினாய் எந்தன் மேலே..
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே..
தடுமாறி போனேன் அன்றே
உன்னைப் பார்த்த நேரம்..
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்..
நெஞ்சின் ஓரம்..
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்..
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை
நேசிக்கும்…
நா நன்னானா நானா..நானா
நா நன்னானா..நானா நானா
நா நன்னானா நானா நானானா…
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்…
பூ மாலை செய்தேன் வாடுதே…
எண்ணத்தை தேடும்போர்வையாவும்
சோலையாகாதோ..
வாராதோ அந்நாளும் இன்றே…ஹோ..
நா நன்னானா நானா நானா
நா நன்னானா நானா நானா
நா நன்னான நானா நானானா…
நா போகிறேன் மேலே…மேலே…
என இருவரும் பாடி முடிக்க பலத்த கரகோஷம்.
அவளைப் பார்த்து அரத்தமுடன் புன்னகைத்தான் வாசு.
சின்னச் சிரிப்புடன் அவனருகே வந்து கை குலுக்கியவள் , “ செம்ம வாய்ஸ் உங்களுக்கு . நைஸ் சிங்கிங்.” என்றாள்.
வாசுவும்,” ரொம்ப நன்றிங்க. உங்க குரலும் அருமையா இருக்கு. நல்ல வேளை மானத்தை காப்பாத்துனீங்க.” என்றான்.
அவளோ,” தேங்க் யூ தேவ். அடுத்த தடவை சாங் செலக்ட் பண்ணும் போது இப்படி மெலோடியா செலக்ட் பண்ணாம நல்லா ஐட்டம் சாங்கா செலக்ட் பண்ணுங்க. “ என சிரியாமல் சொல்லிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினாள்.
“ என்னடி நீ பாட்டுக்கு திடுதிப்புன்னு ஆர்ட்ஸ் காலேஜ் கல்சுரல்ஸ் போய் பாடிட்டு வந்துட்ட.?” என்றாள் மாதங்கி.
“ சும்மா…தான் டி…” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“ ஏது….ஆர்ட்ஸ் காலேஜ் பக்கம் அடிக்கடி காத்து அடிக்குதே..! ம்ம்…இதெல்லாம் சரியேயில்லை” என்றவளை முறைத்து விட்டு,”வாயை கொஞ்சம் மூடிட்டு வர்றியா?”என்றாள் .
அவளது முறைப்பில் வாயை மூடி கொண்டாள் மாதங்கி.
மேடையிலிருந்து இறங்கியவன் தோழியுடன் அரட்டை அடித்துக் கொண்டு செல்லும் அவளைப் பார்த்து கொண்டே இருந்தான்.
“ என்னடா இன்ஜினியரிங் பொண்ணு வந்து உன் கூட பாட்டு பாடிட்டு போறா?ம்ம்..என்ன நடக்குது இங்க?” என கலாய்த்தான் அகிலன்.
“ஏய்..சீ..சும்மா இரு.” என அவனது தலையில் நங்கென்று கொட்டிவிட்டுச் சென்றான் வாசு.
கலையரங்கத்தை விட்டு வெளியேறியவளின் மனதிலும் அவனது காந்த குரல் ஏதோ மாயம் செய்தது.
அகிலனிடம் பேசிவிட்டு வந்தவரின் மனதிலும் ஆருத்ராவின் புதிய பரிமாணம் வியப்பை ஏற்படுத்தியது.
‘கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கா’ என நினைத்துக் கொண்டான்.