கனவே சேராயோ??? 29

பார்வையிலே எனை வதைத்தாய்,  பேதை எனை சிறைபிடித்தாய்.

கனவே சேராயோ?? 29

 மறுநாள் காலை, பெற்றவர்களும் தமக்கையும் வேலைக்கு சென்ற பிறகு,  இவனும் ரெஸ்டாரண்டுக்கு வந்து சேர்ந்தான்.

“உங்க அக்கா இப்போ ஓகேவா”? என்றவன் நுழைந்ததும் நுழையாததுமாக கேட்டாள் நேஹா.

கட்டை விரலை மட்டும் உயர்த்தி காட்டியவன். “அதெல்லாம் ஓகே ஆயிட்டாங்க. என் முகத்தை பார்த்தாலே ஓகே ஆயிடுவாங்க. நான் பேசுனா இன்னும் ஓகே ஆயிடுவாங்க”  என்று காலரை தூக்கி விட்டபடி கூறிக்கொண்டே நுழைந்தான்.

 “ஒரு வார்த்தை கேள்வி கேட்டா?  ஒரே வார்த்தையில் பதில் சொல்ல தெரியாதா”? என்று அவள் கேட்டு வைக்க.

“தெரியாது மேடம். சின்ன வயசுல இருந்து இப்படியே பழகிட்டேன்” என்று அவனும் சளைக்காமல் பதில் கூறினான்.

அவள் முறைத்து பார்க்க. அவன் இளித்து வைத்தான்.

 

“மேடம் ஒரு வாரம் ஆயிடுச்சு. நீங்க வேலை நியமனம் பண்றேன்னு சொன்னீங்க”? என்று கேட்டான்.

 “வேலைனா சண்டேயிலும் வரணும். நீங்க சண்டே லீவு எடுத்துக்கிட்டிங்க. என்றாள்.

“நேஹா மேடம், என் வேலையை பாத்துட்டு தான், நீங்க வேலை நியமனம் பண்றேன்னு சொன்னீங்க? லீவு எடுக்கறதுக்கு எல்லாம் கிடையாது. வீக்லி ஒன் டே ஆப் தானே?? அது எனக்கு சண்டேல தான் வேணும்” என்றான்.

‘இங்க நான் முதலாளியா, இல்ல இவன் முதலாளியா’? என்று  மனதினுள் நினைத்தவள்.

“உங்க இஷ்டத்துக்கு நீங்க பேசக்கூடாது. நான்தான் இங்க முதலாளி. நான் தான் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் போடுவேன். ஆனா உங்க விஷயத்துல எல்லாம் உல்டாவா  நடக்குது” என்று காட்டமாக கூறினாள்.

 “ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாம் இல்ல மேடம். என்னோட சிட்டுவேஷனுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண சொல்றேன். அவ்வளவுதான்” என்று சாதாரணமாக கூறினான்..

‘இவனிடம் பேசினால் வேலை தான் கெடும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் நேஹா.

“ஒரு ரெண்டு நாள் போகட்டும். அப்புறம் சொல்றேன்” என்றாள்.

 “நீங்க   ரொம்ப  மோசம் மேடம். அநியாயம் பண்றீங்க.   மனுஷனுக்கு வாக்கு சுத்தம் வேணும் மேடம். சொன்னா சொன்னபடி நடந்துக்கணும். இப்படி மாத்தி மாத்தி பேசக்கூடாது” என்றவன் புலம்பிக்கொண்டே உள்ளே சென்றவன். மீண்டும் அப்படியே ரிவர்ஸ் அடித்து வந்து அவள் முன்னால் நின்றாள்.

 ‘ஒரே அர்த்தத்தில் உள்ள வெவ்வேறு வார்த்தைகளை சொல்லிவிட்டு செல்கிறான்’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க. சடாரென்று  அவன் வந்து நின்றதும் அதிர்ந்து விட்டாள் பாவையவள்.

“அப்புறம், உங்க வயசு என்னன்னு சொல்லவே இல்லையே”? என்று கேட்டான்.

 “விட்டா என் ஜாதகத்தையே கேப்பிங்க போல”??  என்றாள்.

“கொடுத்தா நல்லா தான் இருக்கும். வேணாம்னு சொல்ல மாட்டேன்” என்றான்.

பற்களை நரநரத்தவள். “பிளட் குரூப் கூட எழுதிக் கொடுக்கவா”? என்று நக்கலாக  கேட்டாள்.

“ம்ம்ம்ம், என்று அசடு வழிந்தான்.

“வேலைக்கு தானே வந்தீங்க?? அதை மட்டும் பாருங்க. ரொம்ப பேசுறீங்க”  என்று அவள் கூறி விட. 

முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் முகம் வாடியதும், அவள் மனமும் வாடியது. ஏதோ, அவன் முகத்தை மலர்வாக பார்த்துவிட்டு, சடுதியில் மாறிய முகத்தை பார்க்கும் போது சங்கடமாக உணர்ந்தாள். உடனே  சமாதான படுத்தலாம் என்று கூட தோன்றியது. ஆனால் அதன் பிறகு அவன் பேசும் பேச்சை யார் கேட்பது?? அதனால் அமைதி காத்தாள்.

அதற்கு மேல் நிற்க நேரம் இல்லாமல், ரெஸ்டாரன்ட் கலை கட்டியது. காலை பரபரப்பை தொற்றிக் கொண்டது. பிறகு சிறிது நேரம் ஓய்வு கிடைத்தது. அதன் பிறகு மதிய நேரம் நெருங்க. இன்னும் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.

……

 தேஜா காரில் இருந்து இறங்கினான். கோட்டை சரி செய்து கொண்டே, அந்த ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தான். 

குறிப்பிட்ட ஒரு டேபிளில்  சென்று அமர்ந்தவன் பார்வையை சுழற்றினான். அந்த டேபிளில் அமர்ந்ததும் சிட்டாக பறந்து வந்து நின்றான் நிர்மல்.

தேஜாவை பார்த்ததும் வாயை பிளந்தவன். “பாவா நீங்களா”? என்று கேட்டு விட்டான்.

 அவன் அழைப்பிலும் அக மலர்விலும், பாவணையிலும்  அசந்து போனான் தேஜா.

 அவன் திட்டுவான் என்று நிர்மல் வாயை மூடிக்கொள்ள. அவனோ  குறுகுறுப்பாக நிர்மலை பார்த்துக்கொண்டிருந்தான்.

 “சாரி. சாரி சார். உங்களுக்கு என்ன வேணும்”? என்று பவ்யமாக கேட்டான்.

‘நீ தான் வேண்டும்’ என்று தேஜா மனதிற்குள்ளாக கூறினான். ஆனால் அவனை அழுத்தமாக பார்த்து வைத்தான்.

 “சாரி.. சாரி சார். ஐ மீன் உங்களுக்கு சாப்பிடுறதுக்கு என்ன வேணும்”? நிர்மல் தன்னை திறுத்திக் கொண்டு கூறினான்.

“உட்காரு.  உன் கிட்ட பேசணும். அதுக்காக தான் வந்தேன்” என்று அவன்  நேரடியாக பேசிவிட. அசந்து போனான் நிர்மல்.

 “ஐயோ! அப்படி எல்லாம் உட்கார முடியாது சார். நான் இங்க வேலை செய்யுறேன்” என்றான்.

அவன் புருவம் ஏறி இறங்கியது.

 “உன்னோட பேக்ரவுண்ட்டை வெரிஃபை பண்ணிட்டேன். நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான். அப்படிப்பட்ட நீ ரெஸ்டாரண்டுக்கு சர்வர் வேலை பார்க்க வந்திருக்கேனா? என்ன லவ்வா”? என்று கேட்டு விட.

“சூப்பர் சார். எப்படி கண்டுபிடிச்சீங்க? ஆனா கண்டுபிடிக்க வேண்டியவங்க இன்னும் கண்டுபிடிக்கலையே”? என்று சலித்துக் கொண்டான்.

“உன் அப்பா அம்மாவுக்கு இது தெரிஞ்சா என்ன ஆகும்”? என்று அவன் புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க.

சேரை இழுத்து போட்டு அமர்ந்து விட்டான் நிர்மல்.

 “சார். ப்ளீஸ் சார். யாருகிட்டயும் சொல்லாதீங்க”? இறைஞ்சினான் நிர்மல்.

 ‘இவன் என்ன உக்காந்துட்டான்? அதுவும் கோட் சூட் போட்டு கார்ல வந்து இறங்கியவருக்கு  முன்னாடி’? என்று பல்லை  கடித்துக் கொண்டே அவனை நெருங்கி வந்தவள்.

“என்ன பண்றீங்க”?  என்று கேட்டாள் நேஹா.

“தெரிஞ்சவங்க மேடம். கொஞ்சம் பேசிட்டு  போயிடுறேன்” என்று கூறினான்.

 “அதுக்காக உட்கார்ந்துடுவீங்களா?? நின்னுட்டு பேசுங்க”? என்றாள். அவன் உடனே எழுந்து நின்று விட்டான்.

“எக்ஸ்கியூஸ் மீ.. அவருக்கு  ஒன் ஹவர் பர்மிஷன் கொடுங்க. நானும், அவரும்  கொஞ்சம் பர்சனலா பேசணும். வேணும்னா  சேலரியிலிருந்து கட் பண்ணிக்கோங்க. இங்க ஃபேமிலி ரூம் இருக்கா”? என்று கேட்டான் தேஜா.

அவன் தோரணையில், அவள் தானாக கைகளை உயர்த்தி ஃபேமிலி ரூம்மை காட்டினாள்.

 அவன் பர்மிஷன்  கொடுங்கள் என்று கேட்கவில்லை. ஆர்டர் செய்தான். கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற கட்டளை இறந்தது அவன் குரலில்.. 

 எழுந்து நின்றவன். “அவனுக்கு பர்மிஷன்  கொடுக்குறீங்க தானே”? என்று  கோட்டை நீவிகொண்டே கேட்க.

 அவன் பாவனையிலேயே  அவள் தலை தானாக ஆடியது.

 “ஒன் ஹவருக்கு டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அதுக்கப்புறம் நாங்களே புட் வாங்கி  சாப்பிட்டுக்குறோம்” என்று கூறியவன். 

நிர்மலை பார்த்து, “வா போகலாம்” என்றான். தேஜாவை பார்த்து தலையாட்டியவன். நேஹாவின்  புறம் திரும்பி முகத்தை கெஞ்சுதலாக  வைத்துக் கொண்டு நிற்க.

 தேஜா அதைக் கண்டு கொள்ளாமல் அவன்   கையை பிடித்து இழுத்துச் செல்ல.  அவளைப் பார்த்துக் கொண்டே அவனோடு சென்றான் நிர்மல்.

 ‘இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன இருக்கு?? அவர் உரிமையா பேசி இழுத்துட்டு போறாரு?  இவனும் பொட்டிப் பாம்பு மாதிரி பின்னாடியே போறானே?? நம்ம கிட்ட என்ன பேச்சு பேசினான்? இவர்கிட்ட எப்படி  பம்முரான் பாரு’? என்று மனதிற்குள் நொந்துக் கொண்டு அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

 அவள் மட்டுமல்ல, அவனோடு வேலை செய்பவர்களின் மனதிலும், இதே கேள்வி தான் ஓடிக் கொண்டிருந்தது. போகும் இருவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

முதலில் ஒரு ரூமை திறந்தான்.  அது பேமிலி அறையாகத்தான் இருந்தது. ஆனால் நிறைய பேர் அமர்ந்து சாப்பிடும் விதமாக இருந்தது.

 “இங்க தனியா ஒரு பேமிலி மட்டும் சாப்பிடுற மாதிரி இடம் இல்லையா”? என்று கேட்டான்.

நிர்மல் அந்த இடத்தை சுட்டிக்காட்டினான்.

“வா அங்க  போகலாம்” என்று ஆவலோடு சென்றான்.

 உள்ளே நுழைந்ததும்  சேரை இழுத்து போட்டு அமர்ந்தான். நிர்மல் நின்று அவனையே  பார்த்துக் கொண்டிருந்தான். 

“எனக்கு அவ்வளவு மரியாதை எல்லாம் வேண்டாம். நீ சகஜமாயிருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. ஸோ உட்காரு. உன் கிட்ட  பேசணும்னு தான் வந்திருக்கேன்” என்றான் தேஜா.

நிர்மல் அமர்ந்தான்.

“அப்புறம்..  யாரை லவ் பண்ற?? இங்க வேலை செய்யுற பொண்ணையா?? இல்ல இப்ப மிரட்டிட்டு  போனாங்களே அந்த பொண்ணையா”??  என்று சகஜமாக கேட்டு வைத்தான் தேஜா.

“நீங்க ஜீனியஸ் சார். கண்டுபிடிச்சிட்டீங்க” என்றான் நிர்மல்.

“இதையும் கனவுல தான் கண்டியா”? என்று தேஜா கேட்க.

ஆடிப் போய்விட்டான் நிர்மல்.

 “சார்.. எப்படி சார் இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க?? நான் உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லவே இல்லையே? எப்படி தெரிஞ்சது? எங்க அக்கா கிட்டையே நேத்து சாயங்காலம் தான் சொன்னேன். ஒருவேளை அவங்க தான் உங்ககிட்ட சொன்னாங்களா? அப்ப நீங்களும் அக்காவை லவ் பண்றீங்களா சார்?” என்று ஆர்வமாக கேட்டான்.

 அதில் அவன் இதழ்கள் லேசாக விரிய துடித்தது.

 “உங்க அக்கா கிட்ட சொல்லிட்டியா?? அப்ப உங்க அப்பா  அம்மா கிட்டயும் சொல்லிட்டியா?? நீ இங்க வேலை செய்யுறது உங்களுக்கு தெரியுமா”? என்று கேட்டான்.

 “அய்யய்யோ! அதெல்லாம் இல்ல சார். அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.  என் படிப்புக்கு ஏத்த வேலைக்கு அனுப்பல. சர்வர் வேலைக்கு அனுப்புவாங்களா?? அவங்களுக்கு தெரியாது. ஆனா எங்க அக்கா  கண்டுபிடிச்சிட்டாங்க. அக்கா கிட்ட போன்ல பொய் சொன்ன மாதிரி. நேர்ல சொல்ல முடியல?? அதனால  உண்மையை சொல்லி, சாஷ்டாங்கமா விழுந்து மன்னிப்பு கேட்டுடலாம்னு நினைச்சேன்.”

“ஆனா, அவங்களுமே இந்த வேலை பாக்குறதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. பிரியாணி சாப்பிடுறதை சொன்னேனே தவிர?? எடுபிடி வேலை   செய்யுறதை சொல்லல.  ஏன்னா எங்க அக்காவுக்கு என் மேல பாசம் அதிகம். என் உயிரா என் காதலான்னு வரும்போது. அவங்க என் உயிரை தான் தேர்ந்தெடுப்பாங்க.  ஆனா நான் பிரியாணி மட்டும்தான் சாப்பிடறதா சொல்லி இருக்கேன். அதனால அவங்களும் எனக்கு கம்பெனி கொடுக்க ஒத்துக்கிட்டாங்க” என்று சோகமாக முடித்தான். 

 அதில் தேஜாவிற்கு அவர்கள் இருவரின் பாச பிணைப்பு தான் தெரிந்தது. அதை அவன் ஏற்கனவே கண்கூடாக பார்த்து விட்டான். கேட்டு அறிந்தும் கொண்டான். இவன் பேச்சில் அவன் தமக்கை இடம் பெற்றிருப்பது போல, அவள் பேச்சிலும் நிர்மல் இடம்பெற்றிருப்பான். அதையும் அவன் உணர்ந்தே இருந்தான்.

 “எதுல பிரியாணி சாப்பிடறதுலையா”? தேஜா நக்கலாக  கேட்டு வைத்தான். 

 “அதுல ஸ்டார்ட் பண்ணி, அப்படியே  கடலை போட்டு. இந்த பொண்ணு கிட்ட பேசி, ஐ மீன் என் காதலியிடம் பேசி, அவங்களோட பழகி” என்று அவன் தயக்கமாக நிறுத்தினான். 

“அப்ப, அக்காவும் தம்பியும் சரியான கல்ப்பிரிட். இரண்டு பேரும் சேர்ந்து நிறைய களவாணி தனம் பண்ணுவீங்க போல”? என்று கேட்டு வைத்தான் தேஜா.

 அவன் அன்று சொன்ன கனவையும் அப்படி நினைத்து விட்டானோ என்று பதறிவிட்டான் நிர்மல்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top