உறவாய் வந்தவளே உயிராய் வந்துவிடு..
கனவே சேராயோ??? 30
“சார் சார் அப்படியெல்லாம் இல்ல. நீங்க தப்பா எடுத்துக்கிட்டீங்க சார். அக்கா – தங்கச்சி, அண்ணன்- தம்பி, அக்கா- தம்பின்னு இருந்தா இதெல்லாம் சகஜம் சார். எல்லார் வீட்டுலயும் இதெல்லாம் நடக்கும் சார். உங்களுக்கு கூட பிறந்தவங்க இருந்தா? உங்களுக்கும் இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.”
“சில பேர் வீட்ல, பேரன்ட்ஸ் கிட்ட மாட்டி விட்டுடுவாங்க. ஐ மீன் கோல் மூட்டி விட்டுடுவாங்க. சில பேரு தங்களுக்குள்ள ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டு மறைச்சிடுவாங்க. கல்பிரிட் எல்லாம் கிடையாது சார். நாங்க சின்ன சின்ன விஷயங்களை தான் எங்களுக்குள்ள மறைச்சிக்குவோம். அதுவும் அப்பா அம்மா ஃபீல் பண்ண கூடாது, மனசு வருத்தப்பட கூடாதுன்னு” என்று முடித்தான் நிர்மல்.
“அவங்க வருத்தப்படும்படியாய் ஏன் நடந்துக்கிறீங்க”? என்று தோள்களை குலுக்கினான் தேஜா.
“ரொம்ப சின்ன சின்ன விஷயங்கள் சார். ஒருவேளை பெரிய தப்பா இருந்தா?? அக்காவே கண்டிப்பாங்க. சம் டைம் திட்டுவாங்க, அடிப்பாங்க, கிள்ளுவாங்க. ஆனா என்ன?? எனக்கு வலிக்காத மாதிரி செய்வாங்க. அவங்க அப்படி சொல்லும்போது அதை மாத்தி செய்யுற தைரியம் எனக்கும் வராது. அதுக்கு மேல அந்த தப்பையும் பண்ண மாட்டேன். அதனால அதை எங்களுக்குள்ள மறச்சிடுவோம் சார்” என்று முடித்தான்.
“அப்போ நிறைய திருட்டுத்தனம் பண்ணுவீங்களோ”? அவன் என்னவோ புன்னகையோடு தான் கேட்டான்.
இவன்தான் பதறி விட்டான்.
“ஐயோ!, அப்படி எல்லாம் இல்ல சார். நீங்க எங்கள தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க. நாங்க கொஞ்சமே கொஞ்சம் நல்லவங்க தான் சார். அவ்வளவு மோசமானவங்க இல்ல.” என்று நிர்மல் கூறியதும். தேஜா புன்னகை பூத்தான்.
“ஆமா, நான் இங்க இருக்கிறது. அதுவும் இப்படி வேலை செஞ்சுட்டிருக்கறது உங்களுக்கு எப்படி தெரியும் சார்?? நீங்க எங்களை கண்காணிக்கிறீங்களா?? இல்ல எங்களை ஆராய்ச்சி பண்றதுக்கு டிடெக்டிவ் ஏதாவது வச்சிருக்கீங்களா? இன்னுமே உங்களுக்கு என் மேல சந்தேகம் போகலையா”? என்று கேட்டான்.
“உங்களை ஆராய்ச்சி பண்றதுக்கு இல்ல. உங்களை பத்தி தெரிஞ்சுக்கறதுக்காக வச்சிருந்தேன்” மறைக்காமல் ஒத்துக் கொண்டான் தேஜா.
“அப்ப எங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டிங்களா”? ஆர்வமாக கேட்டான் நிர்மல். நியாயமாக இதற்கு கோபப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களாக இருந்தால் அப்படித்தான் செயலாற்றி இருப்பார்கள். ஆனால் அவன் நிர்மல் ஆயிற்றே?? அதில் கூட அவன் வித்தியாசமாக தான் இருந்தான். அதை வெகுவாக ரசித்தான் தேஜா.
“ம்ம்ம், தெரிஞ்சுகிட்டது மட்டும் இல்லை, புரிஞ்சிகிட்டேன். ஆத்மார்த்தமா உன்னை பத்தி தெளிவா புரிஞ்சுகிட்டேன்” என்று கூறினான். அதில் அவன் மானசாவை சேர்த்துக் கொள்ளவில்லை.
பெண்களைப் பற்றி உபயோகிக்கும் வார்த்தை என்பது தவறாக போய்விட வாய்ப்பிருக்கிறது. அதில் அவன் மிக கவனமாகத்தான் இருந்தான். அவன் பீடிகை போடுவது போல தான் தோன்றியது நிர்மலுக்கு.
“அப்படி என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க சார்?? நான் இங்க வேலை செய்யறது எதுக்காகன்னு கூட தெரிஞ்சிக்கிட்டிங்களா”?? என்றான் நிர்மல்.
“இதுதான்னு, சுயரா தெரியல? இப்ப இங்க வந்து தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீ படிச்ச படிப்புக்கும். நீ செய்யுற வேலைக்கும் சம்மந்தம் இல்ல. சோ, நீ இங்க ஏதோ காரணமா தான் வந்து இருக்கேன்னு தோணுச்சு. காதல்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஆச்சரியம் தான். காதலுக்காக இந்த அளவு இறங்கி போவாங்களான்னு யோசிச்சேன்” என்று கூறிவிட்டு. மந்தகாசமாக புன்னகைத்தான்.
நிர்மல் வெட்கப்பட்டான். அது இன்னும் அவனை வசிகரமாக காட்டியது.
“சரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேற ஏதோ கூப்பிட்ட?? இப்ப என்னனா?? திரும்ப சாரு மோருன்ற?? ஒவ்வொரு வாட்டி பார்க்கும் போதும், வேற வேற மாதிரி கூப்பிடுற” என்று கேட்டு வைத்தான் தேஜா.
“அது. அன்னைக்கு கனவுல கல்யாணம் பண்ற மாதிரி வந்ததுனால மாமான்னு கூப்பிட்டேன். அப்புறம் நேத்து அக்கா கிட்ட பேசும்போது பாவான்னு சொல்லி பேசிக்கிட்டு இருந்தேன்.. அது கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருக்க மாதிரி தோணுச்சு. அதுதான் உங்கள இன்னைக்கு பார்த்தவுடனே, என்னையும் அறியாமல் வந்துடுச்சு. சாரி” என்று அவன் கெஞ்சுதலாக முகத்தை சுருக்கி கூறும்போது.
தேஜா புருவத்தை ஏற்றி இறக்கினான்.
“சாரி சார். ட்டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு” என்றான்.
“இதுக்கு எதுக்கு சாரி?? நல்லா தான் இருக்கு. இனிமே அப்படியே கூப்பிடு. எனக்கும் பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் என்னை யாரும் இப்படி கூப்பிட்டதில்ல?? நீ சொன்னது போல தான். தனியா வளந்துட்டதனால என் கூட பேசி, பழகி, விளையாடி, சண்டை போடுறதுக்குனு யாருமே இல்ல. முதல் முறையா நீ உரிமையா மாமான்னு கூப்பிடும் போது ஏதோ ஒரு பீல் தோனுச்சு. இப்போ இன்னைக்கு நீ பாவான்னு கூப்பிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உறவுகள்ள கூட யாரும் என்ன இப்படி கூப்பிட்டு பழகினது இல்ல” என்று கூறினார்.
“உண்மையாவா சார்? என்று சற்று முன் நோக்கி வந்தவன்.
“ஆனா, எங்க அக்காவுக்கு பிடிக்கலையே”? என்று நிறுத்தினான்.
“கூப்பிடுறது நீ, அதுவும் என்னை கூப்பிட போற. நம்ப ரெண்டு பேருக்கு பிடிச்சா போதும். இதுல உங்க அக்கா எங்க நடுவுல வந்தா”? என்று கேட்டான்.
“ஆமால்ல?? நியாயம் தான். ஆனா பாவான்னா? உங்க லாங்குவேஜ்ல மாமான்னு அர்த்தம் ஆகுமில்ல”? என்றவன் கேட்டு வைக்க.
“ஓ! என்னோட மதர் டங்க் கூட உனக்கு தெரியுமா”? என்று கேட்டான் தேஜா..
“முதல்ல தெரியாது சார். இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். நீங்க வீட்டுக்கு ஒரே பையன். அதுவும் ராசியான பையன். நீங்க பிறந்ததுக்கு அப்புறம், உங்க அப்பாவோட பிசினஸ் ஓஹோன்னு போயிடுச்சு. உங்க அப்பா அம்மா, உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க” என்று நிர்மல் கூறிக் கொண்டிருக்க.
“நீ ஸ்பை வச்சிருக்கியா”? என்று கேட்டான் தேஜா.
“ச்சே, ச்சே, உங்களோட பயோ பார்த்தேன். உங்க அப்பாவோட இன்டர்வியூயையும் தேடி பார்த்தேன். அதுல அவர் பேசுனதுல தெரிஞ்சுது. நாங்க ஸ்பை வைக்கிற அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்ல சார்” என்றான்.
“சார்னு கூப்பிடாதன்னு சொன்னேன்.”
“ஆனா எப்படி சார் பாவான்னு கூப்பிட முடியும்”?
“மாமா மச்சானு கூப்பிட மாட்டாங்களா?? அந்த மாதிரி நினைச்சுக்கோ” என்றான் தேஜா.
“அப்ப சரி, கூப்பிட்டா போச்சு?? அப்ப நாம பிரெண்ட்ஸ்னு சொல்ல வரீங்களா”?? என்று கைகுலுக்குவதற்காக கைகளை நீட்டி விட்டான்.
பிறகு தன் செயலை புரிந்து கொண்டு, அவன் கைகளை மடக்க. எழுந்து அதை வேகமாக பற்றினான் தேஜா.
“நம்ம மாமா மச்சான் ஆகுரமோ இல்லையோ?? ஆனா கண்டிப்பா ஃபிரண்ட்ஸா லைப் லாங் இருக்கலாம். அதுக்கு ஏஜ் லிமிட் தேவையில்லை. ஏன்னா? முன்னாடி சொன்னதுக்கு, உன் அக்கா, உன் ஃபேமிலில இருக்கவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் எல்லாம் சம்மதிக்கனும். அதுக்கு நேரம் பிடிக்கும். ஆனா பிரண்ட்ஸாகறதுக்கு நேரம், காலம், வயசு இதெல்லாம் எதுவுமே தேவை இல்லை. இப்போ. இந்த நிமிஷம் ஆயிடலாம்” என்று தேஜா கூற.
“எனக்கு பிரண்ட்ஸ் ரொம்ப கம்மி தான். இந்த ஆக்சிடென்ட்டுக்கப்புறம், அதுவும் குறைஞ்சிடுச்சு. வேலை வெட்டின்னு இல்லாம, வீட்ல இருக்கறதுனால? பிரண்ட்ஸோட சர்க்கிள் குறைஞ்சிருச்சு. இப்போதைக்கு வீடியோ கேம் பிரண்ட்ஸ் மட்டும் தான் இருக்காங்க. ஆனா, என்னதான் இருந்தாலும்? நேர்ல பார்த்து பேசி பழகுற மாதிரி வராது இல்லையா? நானுமே பிரண்ட்ஷிப்காக ரொம்ப ஏங்கிப் போய் இருந்தேன் சார். இப்ப நீங்க இப்படி சொல்லும்போது? அவ்வளவு சந்தோஷமா இருக்கு” என்றவன் கூறும் போதே, முறைத்தான் தேஜா.
“ஓ! சாரி, சாருன்னு சொல்லிட்டேனா”?
பாவானு மட்டும் தான் கூப்பிடலாமா?? இல்ல பேர் சொல்லி கூப்பிடலாமா”? என்று முன்னோக்கி வந்து கேட்டு வைத்தான் நிர்மல்.
“எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா என் பேரன்ட்ஸுக்கு இருக்க வாய்ப்பு இருக்கு. இப்போதைக்கு பாவான்னு மட்டும் கூப்பிடு. பிரச்சனை இல்ல. ஆனா உன்னை விட வயசுல பெரியவனுன்றதால? உன் வீட்லையும் அலோ பண்ண மாட்டாங்க. என் வீட்டுலயும் அலோ பண்ண மாட்டாங்க. ஒருவேளை நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா எங்க மீட் பண்ணாலும், நீ தாராளமா என்னை பேர் சொல்லி கூப்பிடலாம்” என்று கூறினான் தேஜா.
அதிர்ச்சியாக வாயை பிளந்து பார்த்தான் நிர்மல்.
முதல் முதலில் அவனைப் பார்க்கும்போது, அவன் கொடுத்த பாவனை என்ன?? கர்ஜித்த கர்ஜனை என்ன?? இன்று அவன் பேசிக் கொண்டிருப்பதென்ன??
“ஐயோ! விளையாட்டுக்கு கேட்டேன். அதெல்லாம் வேண்டாம். நீங்க இவ்வளவு இறங்கி வந்து பிரண்ட்லியா பேசறதே போதும். எனக்கு பாவான்னு கூப்பிடறது ரொம்ப புடிச்சிருக்கு. எங்கப்பா அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க மாமானு ஒருத்தர எப்ப கூப்பிடுவேன்னு? நானும் ஆசையா காத்துட்டு இருந்தேன். அதுதான் கனவுல உங்கள பார்த்ததும் மாமான்னு என்னையும் அறியாமல் வந்துடுச்சு. அப்புறம் அன்னைக்கு நாங்க வேணும்டே எல்லாம் ஒன்னும் பண்ணல. அக்கா பைல் எல்லாம் கொண்டு வந்தாங்க. நீங்க எல்லாத்தையும் விசாரிச்சுட்டுதா சொன்னாங்க. என்னோட டாக்டர்கிட்டே கேட்டீங்களா”? என்று கேட்டான்.
“என்னோட டாக்டர் கிட்ட கேட்டேன்” என்று கூறினான் தேஜா.
“உங்களோட டாக்டரா?? உங்களுக்கும் இதுபோல ஏதாவது பிரச்சனை இருக்கா? இல்ல வேற ஏதாவது பிரச்சனை இருக்கா”? என்று நிர்மல் கேட்க.
“இருக்கு. ஆனா நான் அதை இப்ப சொல்ல மாட்டேன்” என்றான் தேஜா.
“ஐயோ! சார் பெரிய பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லல்ல?? இது எங்க அக்காவோட வாழ்க்கை பிரச்சனை.. எங்க அக்காவா நீங்களான்னு வந்தா?? நான் எங்க அக்காவ தான் தேர்ந்தெடுப்பேன்” என்று கூறிய நொடி.
தேஜாவின் முகம் கசங்கியது. அவன் தன்னை முதன்மை நிலையில் நிறுத்த வேண்டும் என்று தோன்றியது.
“பாசம் வேற, பிரண்ட்ஷிப் வேற தான். ஏனோ உங்கள பார்த்த பிறகு, எனக்கு அந்த நொடியே பிடிச்சிருச்சு. புதுசா பாக்குற மாதிரி தோணல. ஏதோ ரொம்ப வருஷமா பழகுன மாதிரி தோணுச்சு. கனவுல வரும்போதும் அப்படிதான் ஃபீல் பண்ணேன். நேர்ல பாக்கும்போதும் அப்படித்தான் தோணுச்சு. அதனாலதான் என்னை அறியாம நான் உங்களை மாமானு கூப்பிட்டுட்டேன்.”
“ஆனா அக்காவுக்கும் எனக்குமான பிணைப்பு, அது வேற சார். என் அப்பா அம்மாவா? இல்ல அக்காவானு வரும்போதும். நான் அவங்களை தான் தேர்ந்தெடுப்பேன். அந்த அளவுக்கு எனக்கும் அவளுக்கும் ஒரு பிணைப்பு இருக்கு” என்றவன். உருக்கமாக பேசிக் கொண்டிருந்தான்.
தேஜா தாடையை நீவியபடி சிந்தித்தான்.
“ஆனா, உங்க மேலையும் ஏதோ ஒரு பற்றுதல் வருது பாவா. எனக்கு எக்ஸ்பிளைன் பண்ண தெரியல? ஏதோ ஒரு பீல் தோணுது. பார்த்தவுடனே சந்தோஷம். நீங்க இப்ப என்னை மாமானு கூப்பிட சொல்லும்போது. ஒரு நெகிழ்வு . இதுபோல இன்னும் ஏதேதோ தோணுது”.
“அப்படியே நீங்க எனக்கு ரொம்ப நெருக்கமானவரா ஃபீல் பண்றேன். ஆனா, அதை எப்படி சொல்றதுன்னு தெரியல??.உங்க மேல என்னையும் அறியாம, ஒரு அன்பு ஏற்படத்தான் செய்யுது. அதை தராசில் வைத்து என் அக்கா கூட எடை போட முடியாது. நீங்க என்ன கேட்டாலும் கொடுப்பேன். எனக்கான எல்லாத்தையும் கேட்டாலும் கொடுத்துடுவேன்.. ஆனா என் அக்காவுக்காக என் உயிரைக் கேட்டாலும் கொடுப்பேன்”? என்றவன் கூறும்போது.
எக்கி அவன் வாயை பொத்தியிருந்தான் தேஜா.