கனவே சேராயோ??? 28

 கண்ணே கண்மணியே  காணலாய்  போவதென்ன??   

 

கனவே சேராயோ??? 28

“என்ன உண்மை கிடையாது?? பிச்சிடுவேன். உனக்கு ஆக்சிடென்ட்டாகி நீ எந்த நிலைமையில் இருந்தேன்னு எங்களுக்குத்தான்  தெரியும்.  அதுக்கப்புறம் எத்தனை கோயில், குளம், பரிகாரம்னு செஞ்சாங்க தெரியுமா?? ஏன்னா முன்னவே உன் ஜாதகத்துல  ஒரு கண்டம் இருந்திருக்கு. அது தான் இப்படியாகி நம்மை ஆட்டி படைச்சிருக்கு. அதுக்கப்புறம்  ஜாதகம் ஜோசியம்னு நம்ம வீட்ல நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. உனக்கு இன்னொரு பெரிய கண்டம் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. அதனால தான் அப்பா வீட்டை விட்டு வெளியே அனுப்பாம இருக்காரு. அதை புரிஞ்சுக்காம நீ விளையாட்டுத்தனம் பண்ணிட்டிருக்க”? என்று கலக்கமாக முடித்தவள்.

“ஒன்னு பண்றேன். நானே வந்து சாயங்காலம் உன்னை வெளியே கூட்டிட்டு போறேன். ஓகேவா”? என்று கேட்டாள்.

வெறும் பிரியாணி சாப்பிடுவதென்றால்  அவனும் ஒத்துக்கொள்வானே? ஆனால் அந்த சொற்ப நிமிடம் அவளிடம் பழகுவதற்கு எப்படி போதுமானதாக இருக்கும்?? பொய் சொல்லி சேர்ந்து விட்டான்.  இன்று வேலை நியமனத்தை பற்றி கேட்க இருந்தான்.  ஆனால் அதற்குள் தமக்கையின் அழைப்பு வந்து கெடுத்துவிட்டது. நாளை சென்று பேசி பேசி வேலையை. நிரந்தரம் செய்ய வேண்டும்.’ என்று அவன் மனதினுள் கணக்குகள் போட்டுக் கொண்டிருந்தான்.

“என்னடா நான் பேசிட்டே இருக்கேன்?? நீ என்ன பண்ணிட்டிருக்க”? என்று தம்பியை உலுக்கினாள்.

“அவளை பத்தி தான் அக்கா யோசிச்சுட்டிருக்கேன்.   சரி அதை விடுங்க. மாமா கிட்ட ஏதாவது மாற்றம் தெரியுதா”? என்று கேட்டுவிட்டு அவள் முறைப்பை பெற்றுக் கொண்டான் நிர்மல்.

 “இல்ல, உங்க பாஸ் கிட்ட ஏதாவது வித்தியாசம் தெரிஞ்சு தான்னு கேட்டேன்”? அசட்டுத்தனமாக இளித்து வைத்தான்.

அவளுக்குத் தெரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ள  முடியுமா?? அவன் தந்தை பேசிய பேச்சுக்கள் என்ன? இன்று வரை அவர் முறைத்துக் கொண்டு நிற்பது என்ன?? 

‘அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல’? தனக்கு தான் அப்படி தோன்றுகிறதோ?? என்ற எண்ணம் கூட அவளுக்கு அவ்வப்போது ஏற்பட்டிருக்கிறது. 

இன்று கூட இலக்கமாகத்தான் பேசினார். மிக நெருக்கத்தில் வேண்டுமென்றே நின்றது போல தான் தோன்றியது. அவன் அலைபேசியை தன்னிடம் உரிமையாக கொடுத்தானே’?? என்று இன்னும் ஏதேதோ சிந்தனைகள் அவளை ஆட்கொண்டது.

“அக்கா அக்கா.. என்ன இமேஜினேஷனுக்கு போயிட்டீங்க?? மாமா கூட டூயட்டா?? அப்படின்னா  ஏதோ இருக்கு போலயே”?  என்று கேட்டு வைத்தான்.

“மண்ணாங்கட்டி, ஒன்னுமில்ல. அவங்க அப்பா வரும்போது போகும்போதெல்லாம்   முறைச்சிட்டே இருக்காரு. விட்டா அவர் கண்களையே என்னை எரிச்சிடுவாரு போல?? வேலையை விட்டு தூக்காம இருக்கிறதே பெரிய விஷயம். அவங்க பையன். அவர் மட்டும் என்ன?? கண்ணை உருட்டிட்டு தான் இருக்காரு. எப்ப வேலை போகும்மோனு  நானே பயந்துட்டிருக்கேன். இதுல நீ கேட்கிற  கேள்விக்கு நான் பதில் வேற சொல்லனுமா?? முதல்ல நான் கேட்டதுக்கு  பதில் சொல்லு”? என்று கேட்டாள் மானசா.

“நீங்க ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்ததை பார்த்து, நான் கூட மாமா காதலை சொல்லிட்டாரு போலன்னு நினைச்சேன்?? அப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கலையா”?

“மாமா கீமான்னு சொன்னேனா? செருப்பு பிஞ்சிடும். நீ வேணும்னா   பாரு, இந்த கனவு மட்டும் நடக்கவே போறதில்ல. அப்போ உன்னுடைய இந்த பிரச்சனைகளும் சரியாயிடும்” என்று அவனிடம் திடமாக உரியவளாள் . மனதளவில் திடமாக இருக்க முடியவில்லை. தேஜாவின் பார்வை மாற்றம் அவளையும் குழப்பி அடித்துக் கொண்டுதான் இருந்தது.

“சரி விடுங்க. நமக்கு கல்யாணமா முக்கியம்? ஸ்வீட்  தானே முக்கியம்”? என்று எக்கி டேபிளின் மீதிருந்த ஸ்வீட்டை எடுத்தவன்.

“எனக்கு பிடிச்சதை எனக்காக தான் வாங்கிட்டு வந்திருப்பீங்க?? சரி சொல்லுங்க, என்ன நல்ல விஷயம்”? என்று கேட்டான்.

“அது வந்து ஒரு ப்ராஜெக்ட் எனக்கு கிடைச்சு இருக்குன்னு சொன்னேன்ல?? அதை இன்னைக்கு சப்மிட் பண்ணிட்டேன். சைட் விசிட் முடிஞ்சிடுச்சு. என்னோட பிளானும்  பாசுக்கு பிடிச்சிருக்கு. இதை  மட்டும் நான் நல்லா செஞ்சி முடிச்சு கொடுத்துட்டேனா?? உன் அக்காவுக்கு  கண்டிப்பா ப்ரமோஷன் கிடைச்சாலும் கிடைக்கும். அட்லீஸ்ட் இன்கிரிமெண்ட்டாவது கிடைக்கும்” என்று கூறினாள். 

“அப்ப எனக்கு கார் சீக்கிரமா கிடைக்கும்னு சொல்லுங்க”? என்று கேட்டுவிட்டு. மீண்டும் அவள் முறைப்பை பெற்றுக் கொண்டான்.

“அக்கா ஒருவேளை உங்க அறிவு திறனையும், உங்களுடைய செயல் திறனையும் பார்த்துட்டு மாமாவுக்கு  உங்க மேல லவ் வந்தா”? என்று அவன் கேட்டு வைக்க.

“நீ முதல்ல மாமான்னு கூப்பிடுறதை நிறுத்து”  என்றாள்.

“அப்ப, பாவான்னு கூப்பிடவா? தெலுங்குல மாமாவை, அப்படித்தான் கூப்பிடுவாங்க. அவங்களும் தெலுங்கு காரர்களாமே”?  என்று அவன் மலர்ந்த முகமாக கேட்டுவிட்டு,  

அவள் கையில் கொட்டை வாங்கிக் கொண்டான்.

“அக்கா, மண்டையில தான் பிரச்சனையே?? மண்டையிலேயே கொற்றின்களே”??

“கொட்டினாளாவது உன் மூளை மங்கி, இப்படி கனவு காணுறது மறைஞ்சிடாதான்னு  பாக்குறேன்”? என்று கூறினாள் மானசா.

 “நீங்க கொட்டுறதுக்கெல்லாம் முடி கூட மறையாது” என்று அவனும் கிண்டல் செய்தான்.

 கையை வேகமாக ஓங்கி விடுவாள். ஆனால் தலையில் அழுத்தம் மட்டுமே கொடுப்பாள். மடக்கி கை இருப்பது  கொட்டுவதை போலத்தான் இருக்கும்.  ஆனால் அதில் அவனுக்கு உணர்வு கூட ஏற்படாது. அந்த அளவுக்கு மெல்லியதாக கொட்டுவாள். அதை தான் அவனும் கிண்டல் செய்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

“நீ ரொம்ப அதிகப்படியா பேசுற?? அப்பா அம்மா காதுல விழுந்தா பிரச்சனையாகிடும்.” என்றாள்.

“இதுவரைக்கும் எல்லாத்தையும் நாமதான் சீக்ரெட்டா மெய்டன் பண்ணிட்டிருக்கோம்.

 அதே போல இதையும் சீக்ரெட்டா மெயின்டன் பண்ணலாம்”.

“எதை”? என்று அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

“அது தான் அக்கா நேஹா  விஷயத்தை. என் காதல் விஷயத்தை” என்றான்.

“அடப்பாவி! அப்ப நீ விளையாட்டுக்கு சொல்லலையா?? உண்மையாவே அவளை லவ் பண்றியா?? நல்ல பொண்ணா அழகாத்தான் இருக்காள். ஆனா”?

“இந்த ‘ஆ’ ணா ஆவன்னா எல்லாம் வேண்டாம் அக்கா. ரொம்ப நல்ல பொண்ணு. அழகு மட்டும் அல்ல, குணமும் சூப்பர்’ என்றான் நிர்மல்.

“ஒருவேளை அவளுக்கு யாராவது லவ்வர் இருந்திருந்தால்”? என்று மானசா கேள்வி கேட்க. 

“அப்படி யாராவது இருந்திருந்தால்,  நான்  இந்த ஒரு வாரத்துல   பார்த்திருப்பேன்ல”? என்று புருவம் சுருக்கி கேட்டான். 

“நீ பிரியாணி சாப்பிடற நேரத்துல தான் அவங்க வரணும்னு அவசியம் இல்ல. கடையை சாத்திட்டு கூட போய் மீட் பண்ணுவாங்க.  பிரேக் அப்  கூட ஆகியிருக்கலாம். பிறகு பேச்சப்பும் ஆவதற்கு வாய்ப்பு இருக்குல்ல”?

 

“அதெல்லாம் இல்லக்கா. நான் பாத்துட்டேன் சிங்கிள் தான். இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா வயசு தான் தெரியல?? பார்க்க சின்ன பொண்ணா இருந்தாலும். என்னைவிட பெருசா இருப்பாளோன்னு  கொஞ்சம் பயமா இருக்கு.  ஏன்னா?? உங்கள பார்த்தாலும் என்னை விட சின்ன பொண்ணு மாதிரி தானே தெரியும்”? என்று அவன் கூறி வைக்க.

மீண்டும் அவள் முறைத்தாள்.

“சரி சரி விடுங்க. நீங்க சின்ன வயசுல எல்லாம் சொல்லுவீங்களே?? எனக்கு ஏன்டா தம்பியா பொறந்த?? அண்ணனா பிறந்திருக்கலால்லன்னு?? அதனால கேட்டேன். நீங்க அம்மா மாதிரி குள்ளம். நான் அப்பா மாதிரி ஹெயிட்டு. அதனால கொஞ்சம் பாக்குறதுக்கு ஹயிட்டா பெரியவனாட்டம்  தெரிவேன்.”

 “இல்லடா, நான் என்ன கேட்க வரேன்னா”?? என்று அவள்  எதையோ கேட்கவிலைய, அவன் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை.

“லவ் பண்றது என்ன  ஃபாஸ்ட் ஃபுட்டா?? உடனே தெரிகிறதுக்கு?. ஒரு வாரத்துல எல்லாம் எதுவும் தெரியாது” என்றான் அவசரமாக.

“மடையா, சொல்ல வரத முழுசா கேளு? ஒருவேளை லவ் பண்ணாங்கன்னா? அவங்க எங்க, எப்போ மீட் பண்ணுவாங்கன்னு நமக்கு புரியாது?? நீ பாட்டுக்கு லவ் பண்ணிட்டு. நாளைக்கு அவளோட காதல் வேற யார் கிட்டயாவது இருந்ததுனா?? அது பிரச்சினையாகும்டா”.

 “உன்னால அதை தாங்கிக்க முடியாது. நீ சோகமா இருந்தாலே என்னை பாதிக்கும். நம்ம ரெண்டு பேரோட சோகம் நம்ம பேரன்ட்ஸை  பாதிக்கும். முதல்ல இதை கேட்டு   கிளியர் பண்ணிக்கலாம். இல்லன்னா ஒன்னு பண்ணலாம். டிடெக்டிவ் ஏஜென்சி மூலமாக அவளுக்கு காதல் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்”? என்று கண்கள் மிளிர கூறினாள்.

“அக்கா! நீங்க சூப்பர் அக்கா”? என்று முகத்தில் புன்னகையோடு மீண்டும் அவள் கன்னம் பிடித்து கொஞ்சியவன்.  உடனே முகத்தை சுருக்கினான்.

 “அது சரி வராது அக்கா.  நாளைக்கு அவள் என்னோட மனைவி ஆயிட்ட பிறகு, நான் இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்ணேன்னு தெரிஞ்சா?? அவள் ஹர்ட் ஆவால்  அக்கா”  என்று கூறினான்.

 அவளுக்கும், அவன் கூறுவது  சரி என்று தான் பட்டது. 

“நீ பண்ணாத. நான் பண்றேன்.  அவளுக்கு தெரியாம பாத்துக்கலாம். நாம ஒன்னும் அவள் கேரக்டரை அனலைஸ் பண்ண போறது கிடையாது.  அவளுக்கு லவ் இருக்கா இல்லையான்னு  மட்டும் தான் பார்க்க போறோம்.”

“நான்தான் சொல்றேனே அக்கா?? அவளுக்கு அப்படியெல்லாம் எதுவுமே இல்ல. ஒரு வாரமா பாத்துட்டிருக்கேனே”? என்றான்.

“சொந்தத்தில் கூட இருக்கலாம்” என்று தோள்களை குலுக்கினாள். 

 அவனும் யோசனையில் ஆழ்ந்தான்.

“சரி விடுடா பாத்துக்கலாம். முதல்ல இந்த ரசகுல்லாவை சாப்பிடு” என்று எடுத்து அந்த டின்னை பிரிக்க ஆரம்பித்தாள்.

“ஒரு ரசகுல்லாவே எனக்கு ரசகுல்லா வாங்கிட்டு வந்திருக்கு”? ஆச்சரிய குறி”! என்று மீண்டும் அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினான்.

“ஐஸ் வைக்கிறதுல உன்னை மிஞ்ச முடியாதுடா”??

“டிடெக்டிவ் எல்லாம் வேண்டாம் அக்கா. நானே தெரிஞ்சிக்கிறேன். ஒருவேளை இருந்ததுனா? ஒதுங்கிக்கிறேன். என் மனசையும் மாத்திக்கிறேன். ஆனா என் கனவு பலிக்குமே அப்ப என்ன பண்றது”??

 

“ஆமா,  இந்த விஷயத்துல உன் ஆசையும் கனவும் பலிக்கணும்னு நானும் ஆசைப்படுறேன். அதனால இருக்காதுன்னே நினைக்கலாம்.  ஆனா அதை தெரிஞ்சுக்கலாம். நாளைக்கு நான் வேலையில் இருந்து வந்த பிறகு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம். நீ தனியா போக வேண்டாம். தினமும் கூட உன்னை கூட்டிட்டு போய் பிரியாணி வாங்கி கொடுக்கிறேன்..”

 

“தினமும் பிரியாணி சாப்பிட போனா?? நம்மளை சாப்பாட்டு  ராமன்னு நினைச்சிட்டா என்ன பண்றது”? என்று நிர்மல் கேட்க.

 “ஒத்துக்க வேண்டியது தான். ஏன் நாம நல்லா சாப்பிடுவோம் தானே?? அப்ப நாம  சாப்பாட்டு ராமி  இல்லையா”? என்று பாவனையாக கேட்க.

“ஆமால்ல?? நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு தானே முக்கியம்? சாப்பாடுன்னு வந்துட்டா ஒரு பிடி பிடிப்போம்ல?  அதுவும் ரெஸ்டாரன்ட் வச்சிருக்கிற  பொண்ண கட்டிக்கிட்டா?? இன்னும் ருசியான சாப்பாட்டை ப்ரீயா  சாப்பிடலாம்” என்று கூறி கண் சிமிட்டினான்.

“அப்ப போறோம், சாப்பிடுறோம், பேசுறோம் ஃபிரண்ட்டாகுறோம். உன்கிட்ட பேச தான் தயங்குவாள். ஆனா என்கிட்ட பேசுவாள்” என்று மானசா கூற.

“அன்னைக்கு உன் கிட்ட தான் முகம் திருப்பிட்டு போனான்” என்று அவன் ஞாபகப்படுத்தினான்.

“நான் பிரண்ட்லியா  பேச ட்ரை பண்றேன் டா. தம்பி பொண்டாட்டினா  ஈகோ பார்க்க கூடாது. இறங்கி போயிடனும்” என்றாள்.

“அவள் கூட ஸ்வீட்  அக்கா” என்று அவள் கன்னத்தை எச்சில் செய்தவன். 

“பொண்டாட்டினே  முடிவு பண்ணிட்டீங்களா”?? என்றவன் ரசகுல்லாவை வாயில் திணித்தபடியே கேட்டான்.

அதற்கு மேல் அவர்களின் நேரத்தை தமக்கை தம்பி என்று இருவரின் பாசம் எடுத்துக் கொண்டது.

மொத்தத்தில் அவர்கள் அந்த விஷயத்தை பெற்றவர்களிடம் கொண்டு செல்லவில்லை. திருட்டுத்தனமாக தில்லுமுல்லுக்களை மறைந்திருந்தனர்.

காதலுக்காக அவன் ஏதோ செய்கிறான் என்று தான் நினைத்தாள் மானசா.

 அவன் வேலை செய்கிறான் என்று தெரிந்தால?, அதற்கு அவள் உடன்பட மாட்டாள். அதுவும் சர்வர் வேலைக்கு.. 

அவளிடம் முதல் முறையாக ஒரு விஷயத்தை மறைத்திருந்தான் நிர்மல். 

நேஹா காதலை ஒத்துக்கொண்டால், அவனுக்கு அந்த வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்காது. பிரியாணி சாப்பிட போகும் போது கூட பார்த்து பேசிவிட்டு வரலாம், அல்லது அலைபேசியில் பேசிக்கொள்ளலாம்.

 அதுவரையில் இந்த விஷயத்தை மறைத்து  தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அவனால் மறைக்க முடியுமா???

 

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top