காதல் கொண்டேன் கனவில் வந்தாய்.
கண்மணி என்றேன். கண்ணீரில் கரைந்தாய்.
கனவே சேராயோ?? 27
“டேய் மண்டைய ஒடச்சிடுவேன். எங்க இருக்கேன்னு ஒழுங்கா சொல்லிடு. மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க.
பதட்டமானவன், திட்டு வாங்கினாலும் பரவாயில்லை, மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை என்று அழைப்பை எடுத்து விட்டான்.
ஆட்டோவில் வரும் சத்தம் அவளுக்கு தெளிவாகவே கேட்டது.
“அக்கா கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கலாம்னு, இல்லல்ல, பிரியாணி சாப்பிடலாம்னு, இல்ல தலைவலிக்குது மெடிக்கல் ஷாப் போனேன். இதோ மாத்திரை வாங்கிட்டு இப்ப ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு தான் வந்துட்டே இருக்கேன். அம்மாக்கு போன் பண்ணிடாத. அஞ்சு நிமிஷத்துல வந்துருவேன். அதுக்கப்புறம் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன். ப்ளீஸ் கா” என்று கெஞ்சினான்.
அவன் பிரியாணி என்றதும் அவளுக்கு ஏதோ பொறி தட்டியது. “நீ ஏதோ சொதப்பி வச்சிருக்க. நீ மாத்தி மாத்தி சொல்றது எனக்கு நல்லா புரியுது” என்று கேட்டாள்.
“அக்கா, அவளை பாக்கணும் போல இருந்தது. அது.. அதான் அந்த ரெஸ்டாரண்டுக்கு போய் பிரியாணி சாப்பிட்டு, அவளை பாத்துட்டு வந்தேன்” என்று பொய்யுரைத்தான்.
“நம்புற மாதிரி இல்லையே?? வீடு பூட்டி தான் இருக்கு. எப்படி போன”? என்று சந்தேகம் கேட்டாள்.
“காதலியை பாக்குறதுக்கு சுவர் ஏறி குதிச்சு தானே போகணும்”? என்றான்.
“காதலை கனவுல தானே பார்த்த?? அதுக்குள்ள காதல் வந்திருச்சா”?? என்று கேட்டாள்.
“அதான் ஒரு வாட்டி நேர்ல பாத்துட்டேனே அக்கா”? என்றான்.
“ஒரே வாட்டி பார்த்ததுல காதல் வந்திருச்சா”? என்று கேட்டாள்.
“அக்கா நான் வீட்டுக்கு வந்ததும் எல்லாத்தையும் விலாவாரியா சொல்றேன். ப்ளீஸ்கா. அதுக்குள்ள வீட்ல மாட்டி கொடுத்துடாத” என்று கேட்டான்.
“அங்கு இருந்து இங்க அஞ்சு நிமிஷத்துல உன்னால எப்படி வர முடியும்? வேகமா ஓட்ட சொல்லாத. பொறுமையா வா. நான் அப்பா அம்மா கிட்ட சொல்லல. உன் கிட்ட பேசிட்டு தான் நான் சொல்லனுமா வேணாமான்னு முடிவு பண்ணுவேன். அதனால பதறாம முதல்ல வீட்டுக்கு வந்து சேரு” என்று கூறினாள்.
மீண்டும் அவனுக்கு ஆபத்து என்றால்?? அவளால் தாங்க முடியாது.
தனக்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவனுக்கு புரிய வைக்க நினைத்தாள்.. இருவரும் சேர்ந்து இதுபோல நிறைய விஷயங்களை பெற்றவர்களிடமிருந்து மறைத்திருக்கிறார்கள். ஆனால் தவறு என்றால்? அவளே அவனுக்கு போதும் போதும் என்று காது தேயும் அளவிற்கு அட்வைஸ் செய்து விடுவாள்.
அதை மீறி நடக்கும் எண்ணம் அவனுக்கும் இல்லாததால், அதன் பிறகு அதை செய்யவே மாட்டாள். தாய் தந்தைக்கு மட்டும் அல்லாமல் தமக்கைக்கும், தான் எவ்வளவு முக்கியம் என்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான்.
ஆனால் காதல் என்று ஒன்று குடிவந்து விட்ட பிறகு. பெற்றவர்களும் தமக்கையும் பின்னால் அனுப்பவில்லை.. அவர்களை அருகில் வைத்துக்கொண்டு. காதலிக்கும் அந்த இடத்தில் ஒரு இடத்தை கொடுத்திருந்தான்.
பொய்யை அலைபேசியில் சொல்லிவிட்டான். ஆனால் நேரில் தமக்கையிடம் சொல்ல முடியுமா?? முடியவே முடியாது என்று தோன்றியது.
தமக்கை கண்களை உருட்டும் போது. தானாக உண்மை வந்துவிடும். அதன் பிறகு அவள் காலில் விழுந்து கெஞ்சி கேட்டு, பெற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டும்.
பிறகு அவள் கொடுக்கும் லெக்சரை காதில் இரத்தம் வரும் வரை கேட்க வேண்டும். பரவாயில்லை. இரத்தமே வந்தாலும் பரவாயில்லை. சீல் வந்தால் கூட பரவாயில்லை. கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவை எடுத்து விட்டான்.
காம்பவுண்ட் பக்கம் செல்லவில்லை. கேட் பக்கம் வந்தவன். அவசரமாக வீட்டின் உள்ளே நுழைந்தான். வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
வாகன சத்தத்தில் அவன்தான் வருகிறான் என்று தெரிந்துவிட்டது.
இடுப்பில் கையை வைத்துக்கொண்டு எழுந்து நின்றவள்.
“கேட்டும் பூட்டியிருக்கு. வீடும் பூட்டியிருக்கு. நீ எப்படி வெளியே போன”? என்று கேட்டாள்.
“அது.. அது வந்து” என்று அவன் தயங்கினான்.
“நான் சி.சி.டிவியை செக் பண்ணிட்டேன். நீ கேட்டு வழியா போகல” என்றாள்.
“ஐயோ அதை மறந்துட்டேனே?? இந்த பைவ் மினிட்ஸ் நான் உள்ள வந்ததை மட்டும் அழிச்சிடலாம் அக்கா ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.
“முதல்ல நீ எங்க போனேன்னு சொல்லு?? அதுக்கப்புறம் நான் முடிவு பண்றேன்” என்று அதே நிமிர்வுடன் கேட்டாள்.
தலையை தொங்க போட்டுக்கொண்டு. தமக்கையின் அருகில் வந்தவன். “இங்கேயும் சி.சி.டிவி இருக்கு அக்கா. ரூமுக்கு போய் பேசலாம் வாங்க” என்றான்.
அவளும் அவனோடு சேர்ந்து மாடி ஏற போக. வெளி கதவை சாத்திவிட்டு வந்தவன். அறையில் உள்ளே நுழைந்ததும். சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்து விட்டான்.
“என்னடா சொதப்பல் பண்ணி வச்சிருக்க?? இன்னைக்கு மட்டும் தான் பண்ணியா?? இல்ல தினமும் பண்றியா?? அவள் செயலிலேயே கண்டுபிடித்து விட்டாள் அவனுடைய தமக்கை.
அப்படியே சமணமிட்டு அமர்ந்தவன். நிமிர்ந்து அவன் தமக்கையை பார்த்தான். அவளை பார்த்து பேசி பழகணும்னு. தினமும் அங்க போயிட்டு வந்தேன். அதுல அவன் என் மனசுல இடம் பிடிச்சிட்டாள். ஐ லவ் ஹேர் அக்கா. ரொம்ப நல்ல பொண்ணுக்கா. அழகு மட்டும் இல்ல. ரொம்ப ஸ்வீட். இப்ப கூட நான் கேட்டவுடன்னு”? என்று கூற வந்தவன். வாயை மூடினான்.
“கேட்டவுடனேன்னா?? அப்படின்னா?? அவள் கிட்ட பேசுனியா?? அவளும் லவ் பண்றாளா”?? என்று கேட்டாள் மானசா.
‘ஐயோ உளறிட்டியேடா கோபாலு’? என்று மானசிகமாக தலையில் தட்டிக் கொண்டவன்.
“வந்து பேசினேன். பேசிட்டு தான் இருக்கேன். ஆனா அவள் என்னை லவ் பண்ணல? பண்ண வைக்கிறதுக்காக ட்ரை பண்ணிட்டிருக்கேன்” என்றான்.
“சரி, ஆனா நீ எப்படி வீட்டை விட்டு போன”? என்று கேட்டாள்.
“பின்பக்கமா. கேமரா இல்லாத பக்கம் சுவர் ஏறி குதிச்சு” என்று கண் சிமிட்டி கூறினான்.
“சுத்தி சுத்தி வீடு முழுக்க பார்த்து பார்த்து கேமரா வச்சிருக்கோம். நீ ஏமாத்திட்டு போறதுக்கு பிளான் பண்ணிட்டிருக்க? உனக்கு அப்படி என்ன அவசியம் வந்திருக்கு”? என்று அவள் கேட்டு வைக்க.
“எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” என்றான்.
“என்னடா சொல்ற”? என்று கேட்டபடி அவன் அருகிலேயே சமனமிட்டு அமர்ந்தாள்.
“ஆமாக்கா. நான் அவளை ரொம்ப லவ் பண்றேன். எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு. தினமும் போய் பார்த்து பேசி பழகிட்டு தான் வரேன். ரொம்ப நல்ல பொண்ணுக்கா. ரொம்ப ஸ்வீட்” என்றான்.
“ஒரு வாரமா போறியா?? சுவர் ஏறி குதிக்கும் போது. உனக்கு அடிபட்டுச்சுனா என்ன பண்றது”? என்று பதறினாள்.
“கல்லை போட்டு வச்சிருக்கேன் அக்கா. நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது ஆனா, ஐ அம் நாட் கிட். வளந்துட்டேன். உன்னை விட ஹைட்டா இருக்கேன். சுவர் என்னை விட ஐந்தடி தான் அதிகம். அதுல குதிக்கிறதுனால ஒன்னும் அடி படாது அக்கா.”
“பிச்சுடுவேன். அடி பட்டுச்சுன்னா என்ன பண்ணுவ?? என்றவள் காதை பிடித்திருந்தாள்.
“லேசா தான் அக்கா படும். மண்டையில எல்லாம் படாது. கை கால் வேணா தேய வாய்ப்பிருக்கலாம். ஆனா உன் தம்பி ரொம்ப ஹைட். வீட்லையே எக்சர்சைஸ் பண்ணி பிஸிக்கா தானே இருக்கேன்?? அதனால பார்த்து பதமா, இதமாக தான் குதிப்பேன். வீட்லயும், மாட்டிக்க கூடாது இல்லையா?? அம்மா அப்பாவை கூட ஏமாத்திடலாம். ஆனா உன்னை ஏமாத்த முடியுமா”? என்று கேட்டு வைத்தான்.
“ஏன்டா இப்படி பண்ற?? அவள் இறங்கி கெஞ்சினாள். கொஞ்சினாள்.
“எனக்கு அவளை புடிச்சிருக்கு அக்கா” என்றான்.
அவள் எண்ணத்தில் தேஜாவின் இப்போதைய பார்வை மாற்றங்கள் வந்து சென்றது.
இவன் கனவு கண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. கனவில் வந்தவளையே நேரில் பார்க்கும் போது. அந்த பெண்ணை விரும்பவும் ஆரம்பித்து விட்டான். ஆனால் தேஜாவின் பார்வைக்கு என்ன அர்த்தம்??
அவன் பேசும் விதம், பார்க்கும் விதம், பழகும் விதம் எல்லாவற்றிலும் வித்தியாசம் தெரிந்தது அவளுக்கு. ஆனால் அந்த இலக்கம் அவளுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு இல்லை என்பது புரிந்தது.
அதற்காக அடிக்கடி வந்து பேசிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை.
பார்க்க நேரிடுகிறது. அந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே அவளை அவன் அப்படி ஆழ்ந்து பார்ப்பது. ஏதாவது தப்பிதங்கள் செய்து விட்டால், அதை கண்டிப்பதற்கு பதிலாக நமட்டு சிரிப்பை உதட்டுக்குள் தேக்கி வைத்து தன்னை பார்ப்பது.
அது அந்த சிரிப்பு மட்டும் தான் அவளை ஏதோ செய்து கொண்டிருந்தது. மற்ற பார்வைகள் இருக்கும் அர்த்தம் புரிந்ததோ புரியவில்லையோ?? அந்தக் பார்வைக்கான அர்த்தத்தை தான் அவள் ஆராய்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த செயலிலும், பார்வையிலும் அவன் வசீகரிக்கும் விதமாக இருந்தான் என்பதை இவள் ஒற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.
இந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட். அவளுக்கு வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவளுக்கு கிடைத்ததும். அவ்வளவு சந்தோஷம். தேஜாவைப் பற்றிய எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தவளை.
“அக்கா அக்கா” என்று . உலுக்கினான் இளையவன்.
“என்னக்கா யோசிக்கிற?? ப்ளீஸ், அம்மா அப்பா கிட்ட சொல்லாத அக்கா. அவளும் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா?? நானே சொல்லிடுறேன்” என்று கூறினான்.
“நீ சுவரொறி குதிச்சு எப்படி போற”? என்று கேட்டாள்.
“ஆட்டோ பிடிச்சு தான் அக்கா போறேன். அதெல்லாம் சேஃப்பா தான் இருக்கேன்” என்றான்.
“அப்பா ஏன் உன்னை வேலைக்கு அனுப்பாம இருக்காருன்னு உனக்கு தெரியும் தானடா”? என்று கேட்டவளின் குரலில் கலக்கம் இருந்தது.
“அக்கா நான் ஒன்னும் வேலைக்கு போகல. ஜஸ்ட் கொஞ்ச நேரம் போய் அவள் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு. பிரியாணி சாப்பிட்டு வந்துடுவேன். அதுக்கு காசு இல்ல. உன்கிட்ட தான் வாங்கலாம்னு நினைச்சேன். கொடுத்தா நல்லா இருக்கும். ஏற்கனவே கொடுத்த பாக்கெட் மணி எல்லாம் காலியாயிடுச்சு. ஆமா உனக்கு தான் வேலை போகலல்ல?? ஒரு நான்காயிரம் ரூபாயை எனக்கு அனுப்ப முடியுமா”? என்று கேட்டான்.
அப்போதுதான் அவள் அதை நம்புவாள் என்றே கேட்டான்.
“ஆட்டோல போய்ட்டு ஆட்டோலயே வரியா?? ஆட்டோக்காரன் மட்டும் ஒழுங்கா வருவானா?? கூட இரண்டாயிரம் தரேன். கேப்ல போயிட்டு வா” என்று கூறிய தமக்கையை கட்டிப்பிடித்து கொஞ்சினான் இளையவன்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று அவன் தொடையை கிள்ளி விட்டாள்.
“அக்கா வலிக்குது” என்று அவன் நடித்தான்.
சிறுவயதிலாவது நறுக்கென்று அவன் தலையில் கொட்டியிருக்கிறாள்.
ஆனால் இப்போதெல்லாம் விளையாட்டாக தான் கிள்ளுவாள். கொட்டுவாள்.
அது இருவருக்குமே தெரியும். ஆனாலும் அவன் கொஞ்சுவான், கெஞ்சுவான். அதிகமாக நடித்து அலப்பறைகளை கூட்டுவான்.
அது அவனின் பாங்கு. அவன் குணாதிசயமே அப்படித்தான்.
அலப்பறைகளை கூட்டுபவனை, அறைக்குள் அடைத்தால் எப்படி அவன் அடங்குவான்?? இதுவரை அடங்கியதே பெரிய விஷயம் தான் என்று அவளுக்கும் தெரியும்.
“ஓவரா நடிக்காத. அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க. அதைவிட முக்கியமா உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா?? என்னையே என்னால மன்னிக்க முடியாது” என்று கூறினாள்.
“அக்கா எனக்கு வர கனவு உண்மையா இருக்கும். ஏன்னா அதெல்லாம் நடந்திருக்கு. இந்த ஜாதகம் ஜோசியம் இதெல்லாம் உண்மை கிடையாது. ஜஸ்ட் கோ ஆக்சிடென்ட்” என்றான் நிர்மல்.
அவனை முறைத்தாள் பெண்ணவள்.